அமாவாசைக்கு பெயர் வந்தது எப்படி? சூரிய-சந்திரன் கண்ணாமூச்சி! (10,424)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,424
Date uploaded in London – – 8 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தின் ஏழாவது காண்டத்தில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் சூரியன், சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய பாடல்களாகும்

1000 moon seeing festival at Puttapaarthi
Grand Yagna at Puttaparthi

சூக்தம் 394 அமாவாசை
‘அம்’ என்ற சொல்லுக்கு ஒன்றாகக் கூடியிருத்தல் என்று பொருள் . ‘வச’ என்றால் வசித்தல். இந்த ரிக் வேத கால ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை நாம் எல்லோரும் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்துகிறோம். தமிழில் ‘வசிக்கிறேன்’ என்றால் எல்லோருக்கும் புரியும். அதுமட்டுமல்ல ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் என்றால் லெட்சுமிக்கு மார்பில் நிரந்தர வசிப்பிடம் கொடுத்த பெருமாளைக் குறிக்கும். பல கட்டிடங்களிலும் ஹோட்டல்களிலும் ‘நிவாஸ்’ என்ற சொல்லையும் காணலாம் .

இன்னொரு முக்கிய விஷயம் இந்த துதி தேவி மீதான துதியாகும். இந்துக்கள் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் தேவியரைத் துதித்து யாக யக்ஞங்கள் செய்வர் ; பிற்காலத்தில் இது நின்றுபோய், வெறும் பூஜையாக மாறிவிட்டது இன்றும் முழுநிலவு நாளன்று தேவி பூஜை, அல்லது விளக்கு பூஜை நடக்கும்.
XXX
அனுமதி என்றால் என்ன?

தமிழர்களும் மற்ற மொழியினரும் அனுமதி (ADMISSION, PERMISSION) என்ற சொல்லை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். சம்மதம், பெர்மிஷன், அட்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். இது உண்மையில் நமக்கு எல்லாம் நன்மை செய்யும் தேவதையின் பெயர் ஆகும்; நமக்கு வேண்டியதை எல்லாம் அனுமதிப்பதால் அந்த தேவதையை நாம் அனுமதி என்கிறோம்.

பவுர்ணமி தேவதையை ‘அனுமதி’ என்றும் அமாவசை தேவதையை ‘குஹு’ என்றும் அழைப்பர். இது தவிர சுபகா, ராகா முதலிய தேவதைகளும் நமக்கு வேண்டியனவற்றைத் தரும் தேவதைகள் ஆவர்.

உலகில் இந்துக்கள் மட்டுமே எல்லா பவுர்ணமிகளிலும் விழாக் கொண்டாடுகின்றனர். எல்லா அமாவா களையும் நீத்தார் நினைவுக்காக ஒதுக்கிவிட்டனர்.

அவர்கள் ஆதி காலம் முதல் கிரங்களையும் சூரிய சந்திரனையும் வணங்கினர் ; கிரகணங்களை முன் அறிவித்தனர் ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும் நீத்தார் கடன் செலுத்தினர். கும்ப மேளா போன்ற விழாக்கள் வியாழன் கிரஹத்தின் சஞ்சாரத்தை ஒட்டி செய்யப்பட்டது. தீபாவளி போன்ற பண்டிகைகள் அமாவாசையை ஒட்டி அமைந்துள்ளன.
XXX


சூக்தம் 395 பவுர்ணமி பற்றியது.
இதில் சந்திரனை நீண்ட ஆயுளுடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இந்துக்கள் மட்டுமே சந்திரனை தாவர வளர்ச்சியுடனும் தொடர்பு படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதை விஞ்ஞானிகளும் உறுதி செய்கையில் இந்தியர்கள் பெருமை கொள்ளலாம்.
சத்ய சாய் பாபா போன்றோர் சஹஸ்ர சந்திர தரிசன நிகழ்ச்சியை உலகம் வியக்கும் வண்ணம் நடத்திக்காட்டியதால் ஆயிரம் பிறை காணுதல் எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது.
இது சந்திர தரிசனத்தின் பெருமையை உலகிற்கு அறிவிக்கத்தான் என்றால் மிகையாகாது.

இந்த துதியில் சந்திரனை ‘போர்த் தெய்வம்’ (GOD OF WAR) என்று சொன்னதற்கும் ‘பலம் வாய்ந்த காளை’ (MIGHTY BULL) என்று வருணித்ததற்கும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரன் மனதைப் பாதிப்பவன் என்ற ஒரு குறிப்பு ரிக்வேதத்தில் (10-90) உளது

மனு போன்றோரும் ஏனையோரும் அம்மாவாசை, முழுநிலவு நாட்களில் செய்யும் யக்ஞங்கள் ‘நினைத்தை எல்லாம் வாரி வழங்கும்’ என்று கூறுகின்றனர். அதனால்தான் முழு நிலவு தேவதைக்கே ‘அனுமதி’ என்று பெயர் கொடுத்துவிட்டனர்.
சூக்தம் 396 ‘சூரியனும் சந்திரனும்’ என்ற தலைப்பில் உளது . உலகில் நாமும் சூரியன் மறைவது உதிப்பது, நிலவு உதிப்பது மறைவது ஆகியவற்றைக் காண்கிறோம். ஆனால் இந்த வேத. காலப் புலவர் மட்டும் கற்பனைச் சிறகை தட்டிவிட்டார். சூரியனும் சந்திரனும் இரண்டு இளைஞர்கள் போல கடலில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடுகின்றனர் என்கிறார். அற்புதமான கற்பனை! கண்ணாமூச்சி விளையாடாத சிறுவர் இருக்கமுடியாது அந்த விளையாட்டை இருவரும் விளையாடுவது என்பது இயற்கையிலேயே நடைபெறும் உதயமும் அஸ்தமனமும் ஆகும்.

நிலவை தாவர வளர்ச்சசியுடனும் ஆயுளுடனும் தொடர்பு படுத்தும் இந்த துதிகளுக்கு இதுவரை வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆதரவு தரவில்லை. எதிர்காலக் கண்டுபிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை ருசுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை அதனால்தான் நாம் சஹஸ்ர சந்திர தரிசனத்த்தை ஒரு மைல் கல்லாக வைத்துக் கொண்டாடுகிறோம்.

நிலவை ஒரு தினத்தின் கொடி (Flag of the Day) என்றும் இந்த துதி வருணிக்கிறது. உலகில் கொடிகளைக் கண்டுபிடித்தவர்களும் நாம்தான்!
ராமாயண, மஹாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் கொடிகள் உள்ளன. சிந்து சமவெளியிலும் ஊர்வலத்தில் கொடி போன்ற ஒன்றை ஏந்திச் செல்லுகின்றனர். இன்றும்கூட தமிழ் நாட்டு கோவில் வீதி உலாக்களில் சுவாமிக்கு முன்னர் கொடிகள் , பாவட்டாக்கள் , சின்னங்களைத் தூக்கிச் செல்வதைக் காண்கிறோம்

அதர்வண வேதத்தில் உள்ள இந்த மூன்று துதிகளும் நமக்கு ஏராளமான விஷயங்களைத் தருகின்றன. ‘சாத்யர்கள்’ என்னும் வானுறை தெய்வங்களையும் ரிஷி குறிப்பிடுகிறார்.

கடலில் அலைகளை அதிகரிக்கும் பவுர்ணமி அமாவாசை தினங்களில் வேதம் கற்பிக்கும் பள்ளிகள் இன்றும் அடைக்கப்படுகின்றன. அதே போல அஷ்டமி நவமி அன்றும் வேதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை எல்லாம் சந்திரனின் நடமாட்டத்தை நன்கு அறிந்த ரிஷி முனிவர்கள் செய்த ஏற்பாடு.

KANCHI SHANKARACHARYA ATTENDED SAHSRA CHANDRA DARSANA FESTIVAL IN 2008  (AT PUTTAPARTHI)

(இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன்
–subham–
TAGS –அனுமதி குஹு , ராகா , பெளர்ணமி, அமாவாசை , கண்ணாமூச்சி , சூரியன், சந்திரன்