வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)

compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,154

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜயந்தி , 6-மஹாளய அமாவாசை ,7- நவராத்ரி ஆரம்பம், 14-சரஸ்வதி பூஜை ,15- விஜய தசமி,தசரா ; 19-மிலாடி நபி.

அமாவசை -அக்.6, பவுர்ணமி- 20; ஏகாதசி – அக்.2, 16.

சுப முஹுர்த்த நாட்கள் – அக்.25,27

xxx

மகாதேவமாலை , அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அருளியது

xxx

அக்டோபர் 1 வெள்ளிக்கிழமை

36.ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே

தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.

xxx

அக்டோபர்  2 சனிக்கிழமை

40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யே வான்

ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே

xxx

அக்டோபர்  3 ஞாயிற்றுக் கிழமை

41.நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்

கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே

xxx

அக்டோபர்  4 திங்கட் கிழமை

43.பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்

திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

xxx

அக்டோபர்  5 செவ்வாய்க் கிழமை

44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்

விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே

xxx

அக்டோபர்  6 புதன் கிழமை

46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே

கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே

xxx

அக்டோபர்  7 வியாழக் கிழமை

49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே

xxx

அக்டோபர் 8 வெள்ளிக்கிழமை

50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்

நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே

xxx

அக்டோபர்  9 சனிக்கிழமை

52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு

பெற்றறியாப் பெரும்பதமே

xxxx

அக்டோபர்  10 ஞாயிற்றுக் கிழமை

53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்

பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே

xxx

அக்டோபர்  11 திங்கட் கிழமை

54.ஆண்பெண்

அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே

xxx

அக்டோபர்  12 செவ்வாய்க் கிழமை

55.ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை

ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

xxx

அக்டோபர்  13 புதன் கிழமை

56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து

xxx

அக்டோபர்  14 வியாழக் கிழமை

58. உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற

ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே

இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்

கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.

Xxx

அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை

61. உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்

மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்

கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று

வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.

xxx

அக்டோபர் 16 சனிக்கிழமை

64.அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்

ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று

சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே.

xxx

அக்டோபர் 17 ஞாயிற்றுக் கிழமை

69.அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்

நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீ

xxx

அக்டோபர் 18 திங்கட் கிழமை

71. ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்

தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மே

xxx

அக்டோபர் 19 செவ்வாய்க் கிழமை

73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே

xxx

அக்டோபர் 20 புதன் கிழமை

74.பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல

நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.

xxx

அக்டோபர் 21  வியாழக் கிழமை

75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு

பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்

Xxxx

அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை

76.பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்

துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

xxxx

அக்டோபர் 23 சனிக்கிழமை

77. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே

xxxx

அக்டோபர் 24 ஞாயிற்றுக் கிழமை

83. அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்

கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்

xxx

அக்டோபர் 25 திங்கட் கிழமை

85.கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே

உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன்

xxxx

அக்டோபர் 26 செவ்வாய்க் கிழமை

87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே

xxx

அக்டோபர் 27 புதன் கிழமை

89.பன்னெறியில் எனைஇ ழுத்தே

பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை

xxx

அக்டோபர் 28  வியாழக் கிழமை

90. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்

தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்

xxx

அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை

94.செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்

இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

Xxx

அக்டோபர் 30 சனிக்கிழமை

95. அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்

கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ

xxx

அக்டோபர் 31 ஞாயிற்றுக் கிழமை

97.உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்

பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.

Xxxx subham xxxxx

Tags-  வள்ளலார் , பொன்மொழிகள், மகாதேவ மாலை , அக்டோபர் 2021, காலண்டர்