Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அப்பர் தேவாரத்தில் நவரத்தினங்களைக் கண்டோம் . இதோ மேலும் ஒரு கட்டுரை
நால்வர் என்று போற்றப்படும் அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் ,மாணிக்க வாசகர் ஆகியோரில் அதிகம் பயணம் செய்தவர் அப்பர் சுவாமிகள்தான். ஏனைய மூவரும் அந்தக் காலத் தமிழ் நாட்டுக்குள்ளேயே வலம் வந்தவர்கள் தான். சமண மதத்தைத் தழுவியதால் அப்பர், பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா (பாடலிபுத்திரம்) வரை சென்றிருக்கிறார். இதை அவரது பாடல்களில் காண முடிகிறது.
அடைவுத் திருத்தாண்டகம் என்ற அற்புதமான பாடலில் அப்பர் தரும் விஷயங்களை வைத்து மட்டுமே தனியான புஸ்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காகப் பாடுகிறார். சிவன் தொடர்பான ஊர்களே இவ்வளவு இருக்குமானால் சக்திக் கேந்திரங்கள் திருமால் திவ்ய க்ஷேத்ரங்கள் என்பன எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்
அப்பரின் புவியியல் அறிவுக்கு ஈடு இணை இல்லை! புவியியல் விஷயங்களை ,செய்திகளை மட்டும் காண்போம்
ஆறாம் திருமுறையை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பூகோள வர்ணனைகளைக் காண்போம்.
1
திருநாவுக்கரசர் தேவாரம்
பொது -அடைவுத் திருத்தாண்டகம் – திருத்தாண்டகம்
பள்ளி என்று முடியும் ஊர்ப் பெயர்களையும் , வீரட்டானத் தலங்களையும், குடி , ஊர் என்று முடியும் ஊர்ப் பெயர்களையும் தந்த பின்னர் காடுகளின் பெயர்களை பாடுகிறார் :
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;
மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.
துறை என்பது ஆற்றில் புனித நீராடும் கட்டங்களாகும்
***
5
இவ்வாறு ஒருவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூச்சில் பாட வேண்டும் என்றால் அவருக்கு அபார பூகோள அறிவு இருக்க வேண்டும் .
கேதார்நாத் முதல் இலங்கையிலுள்ள கேதீச்வரம் வரை பாடுவதால் அவர் மனக் கண்களுக்கு முன்னால் ஏக பாரதம்– அகண்ட பாரதம் –தெரிந்திருக்க வேண்டும் இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதை பறைசாற்ற இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்
ஆறாம் திருமுறை திருவீழிமிழலை பதிகம்
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்
கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே. 2
***
6
நாவலந்தீவு
நாவலந்தீவு பற்றி சங்க இலக்கியப்பாடல்களிலும் அதற்கு முன்னர் காளிதாசன் கவிதைகளிலும் குறிப்புகள் உள்ளான . இதுபற்றியம் அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.
அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார்.
***
7
கங்கை நதிக் குறிப்புகள்:–
இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–
திருப்பூவணம்
ஆறாம் திருமுறை , பாடல்
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் ;
மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;
இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் ;
கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்
புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே
***
8
பல்வகைத் திருத்தாண்டகத்திலும் இது போன்ற குறிப்பு வருகிறது
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு
நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு
பட அரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாம் திருத்தித் தம் மனத் தை ஒருக்காத் தொண்டர்
தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்
பொல் லால்புலால் துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909
***
9
கோதாவரி பற்றிய அப்பர் பாடல்
உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை
மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே
***
10
கங்கை — காவிரி
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)
ஏழ் கடலும் ஏழ் மழையும் என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்
கேதீச்வரம் முதல் கேதாரம் வரை உள்ளானை திருவீழிமலைப் பதிகத்தில் பாடுகிறார்
இங்கு கொடுத்தவை ஒரு சாம்பிள்தான் இது போல அப்பர் பாடிய மூன்று திருமுறைகளையும் நிறையா பாடல்கள் உள்ளன.
மனத்தின் வேகமுடையவர் ; காற்றுக்கு இணையாக வேகம் கொண்டவர் ; புலன்களை வென்றவர்;புத்திமான்களில் மிகச் சிறந்தவர்; வாயுவின் மகன்; வானர சேனைகளின் முக்கியத் தலைவன்; ஸ்ரீ ராம தூதனான அவனை தலையால் வணங்குகிறேன்.
ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தை விட வேகமாகச் செல்லக்கூ டியது மனம்; மனத்தின் சக்தியை அறியாத வெள்ளைக்காரர்களுக்கு இது புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் .நாரதர் போல பிரபஞ்சம் சுற்றும் பயணிகளை அவர்கள் அறியவில்லை!
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
இதன் பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
****
Vali- Sugriva fighting; Rama shooting with an arrow from behind the tree
யார் கொலோ சொல்லின் செல்வன் !!
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.
“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –
(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).
இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”
பொருள்:–
இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.
என்ன அழகான வருணனை!
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .
Vaanara Sena acceptedd Rama only after testing his strength; Rama was asked to pierce throuh seven strongest trees in Kishkinda (Now Hampi in Karnataka)
ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்
“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்.
இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..
உடனே அனுமன்,
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.
உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு வனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?
வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!
***
அனுமனின் சொல்லாற்றல்
அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.
இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.
இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!
இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!
ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம்.
***
பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்
இதோ ஒரு கதை :
ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில் லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :
ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?
விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?
என்று வினவினார் விபீஷணன் ..
ஜாம்பவான் பதில் சொல்கிறார் :
அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்
***
சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில் கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும் பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள், இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் , இன்னும் வியப்பாக இருக்கும்;
அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .
தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப் பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .
***
இன்னுமொரு கதை :
ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில் இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.
இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.
அனுமன் சிவனின் அவதாரம்
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே
பொருள்–
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து
கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தையின் வடிவத்தில் தோன்றி, குழந்தையை அங்கு கழுவியெடுத்து, சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு,
சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கரடி இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
ஹனுமான் சாலீசா
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
பொருள்
. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள் விளக்கியுள்ளனர்.
8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.
ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.
to be continued………………….
tags–Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7, Part Seven, அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி,கண்டெனன் கற்பினுக்கு அணியை, சொல்லின் செல்வன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LONDON SWAMINATHAN’S REQUEST TO MADRAS HIGH COURT AND SUPREME COURT TO TAKE SUO MOTU ACTION IN THE ISSUE OF TEMPLE GOLD JEWELS MELTING SCHEME OF THE TAMIL NADU GOVERNMENT. IT IS DONE BY WHO DOES NOT KNOW HISTORICAL VALUE OF ANTIQUES AND WHO DOES NOT BELIVE IN TEMPLE RITUALS. THE JEWELS ARE GIVEN BY INDIVIDUALS WITH A PURPOSE. THEY CANT VIOLATE THAT. IF WE DON’T USE THEM FOR THE PURPOSES MEANT BY THE DONORS, IT IS OUR FAULT. MOST OF THEM CARRY MORE ANTIQUE VALUE THAN FACE VALUE.
THANKS TO THE FRENCH INSTITUE OF PONDICHERY, WE RECOVERED LOT OF STOLEN ARTICLES WITH THEIR BLACK AND WHITE PICTURES OF OUR IDOLS. EVEN A COPPER COIN IN THE PADMANABHA SWAMI TEMPLE VAULT OF THIRU ANANTHA PURAM WILL BE NOUGHT FOR A BIG PRICE BY FOREIGN MUSEUMS.
I PAID MONEY TO SEE JEWELS OF BRITISH QUEEN IN LONDON, NAPOLEON’S SHOES IN VERSAILLE IN FRANCE AND CROWNS OF SWEEDISH KINGS IN STOCKHOLM. EVEN ANTI GOD COMMUNIST GOVERNMENTS ARE KEEPING ALL BUDDHA STATUES AND THE JEWELS IN MUSEUMS. COURTS MUST CONSULT GREAT HISTORIANS AND ARCHEOLOGISTS LIKE DR R NAGASWAMY IN THIS MATTER. ARCHAEOLOGY DEPARTMENT SHOULD PHOTOGRAPH ALL GEMS AND GOLDS BEFORE TAKING ANY DECISION. THE PICTURES MUST BE MADE PUBLIC.
QUEEN VICTORIA REQUESTED A GEM FROM MADURAI MEENAKSHI TEMPLE 200 YEARS AGO. THAT WAS SENT TO LONDON AND ‘RETURNED’. NOBODY KNEW WHETHER IT WAS THE ORIGINAL SHE SENT BACK . I DOUBT IT. IT IS IN MY ARTICLE WRITTEN 10 YEARS AGO ‘THE WONDER THAT IS MEENAKSHI TEMPLE’. COURTS MUST TAKE IMMEDIATE ACTION. HINDU ORGANISATIONS MUST TAKE ACTION IMMEDIATELY.
SEVERAL GEMS AND JEWELS OF TAMIL TEMPLES ARE ALREADY PLUNDERED AND FAKE GEMS ARE INSTALLED. THE BOOGOLAM AND KAGOLAM ORIGINAL MAPS IN CLOTH AT MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM WERE STOLEN AND TAKEN TO FOREIGN COUNTRY. SAVE OUR TEMPLES; SAVE OUR ANTIQUES.
29 Sept 2013 — Madurai Meenakshi Temple is an architectural wonder. When one climbs to the top of the South Tower to have a bird’s eye view of Madurai,
கோவில் தங்கத்தை உருக்குவோர் வரலாறு அறியாத முட்டாள்கள். சாபத்திற்கு உள்ளாகி அழியப்போகும் வஸ்துக்கள் . நாங்கள் இங்கு லண்டனில் 25 பவுன் கொடுத்து மஹாராணி நகைகளையும் மோதிரங்களையும் , கிரீடங்களையும் பார்க்கிறோம். பாரிசுக்கு வெளியே வெர்சாய் அரண் மனையில் நெப்போலியன் பயன்படுத்திய செருப்பு, மேஜை கூட காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து பார்த்தேன். சுவீடனில் ஸ்டாக்ஹோம் மியூசியத்தில் மன்னர் கிரீடங்களை காசு கொடுத்து பார்த்தேன். மீனாட்சி கோவில் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. அவற்றின் பழங் கலைப் பொக்கிஷ மதிப்பு- அதாவது ஆன்ட்டிக் வால்யூ ANTIQUE VALUE – கோடி மடங் அதிகம்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தில் உள்ள செப்புக்காசுக்கும் ஆன்ட்டிக் வால்யூ அதிகம். கோவில் நகைகளில் பல மிகப்பழமையானவை . அவைகளை உருக்கக்கூடாது. தொல்பொருட் ததுறையினர் மூலம் விலைமதிப்பிட வேண்டும்.. பல நகைகள் சுவாமி, அம்மன், பெருமாள் மீது போடுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது சாபங்கள் உள்ளன. இதை எல்லா தமிழக கல்வெட்டுகளின் கடைசி வரியில் காணலாம். ஆக அந்த சாபங்கள திராவிடர்களை அடியோடு அழித்துவிடும். மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் நாடுகள் கூட தங்க புத்த விக்கிரகங்களையும் நகைகளையும் அப்படியே வைத்திருக்கின்றன. மீனாட்சி அம்மனின் நீலக்கல் லண்டன் வந்து அதை விட்ட்டோரியா மஹாராணி திருடி வைத்துக் கொண்டு வேறு கல்லை அனுப்பிய செய்தியை 2011ல் எனது பிளாக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அதுபோல நகைகளில் உள்ள விலையுயர்ந்த ரத்தினங்களை திராவிடர்கள் கொள்ளையிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தயவு செய்து இதை கோர்ட்டாரே SUO MOTU வழக்காக எடுத்து மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் . புதுக் சேரியிலுள்ள பிரென்ச் இன்ஸ்டிட்யூட் பழைய கோவில் விக்ரகங்களை கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து வைத்திருந்ததால்தான் டாக்டர் நாக சாமி போன்ற அறிஞர்கள் அவைகளை வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து மீட்டார்கள் . ஆகையால் தொல்பொருட் துறை முதலில் எல்லாவற்றையும் வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து புகைப் படம் எடுக்கவேண்டும். அந்த நகைகளின் பழமை குறித்து மதிப்பிடவேண்டும்.
suo moto
(with reference to an action taken by a court) without any request by the parties involved.
“the court has, suo motu, decided to add the divisional commissioner as a respondent to the petition”
என் வேண்டுகோளை சுவோ மோட்டோ வழக்காக சென்னை ஹைகோர்ட்டும் சுப் ரீம் கோர்ட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உலகப் பேரறிஞர் , சிவபுரம் நடராஜர் சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா.நாகசாமி போன்றோர் கருத்தை முதலில் கேட்க வேண்டும்.
XXX SUBHAM XXX
tags –கோவில் நகை, தங்கம், உருக்கும் திட்டம், வரலாறு, திராவிடர் , வழக்கு, temple gold, melting, suo motu
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 29 September 2015
Post No: 2197
Time uploaded in London :– 8-09 am
(Thanks for the pictures)
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் யாழ்ப்பாணம் பற்றிய, 1915 ஆம் ஆண்டு வெளியான, நூல் ஒன்று கண்டேன். 156 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன. இத்தகைய நூல் இன்று இலங்கையில் கிடைக்காவிடில் இதை மீண்டும் அச்சிடுவது நல்லது. இதை எழுதியவர் முத்துத்தம்பிப் பிள்ளை. புத்தக முடிவில் அந்தக் கால வழக்கப்படி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்துக் கூறியிருப்பது அக்கால மனநிலையை உண்ர முடிகிறது. விக்டோரியா ராணியாரையும், மன்னரையும் வாழ்த்துவது அக்கால கட்டங்களில் வெளியான நூல்களில் காணமுடிகிறது.
யாழ்ப்பாண நில அமைப்பு, குடியேறிய ஜாதிகள் விவரம் முதலியனவும் புத்தகத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணர் படம் ஒன்றும் நூலில் இருக்கிறது.
மதுரை, பரமக்குடி, சேலம் முதலிய பல ஊர்களில் வசிக்கும் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் குஜராத்திலுள்ள சௌராஷ்ட்ரா பிரதேசத்திலிருந்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் பட்டு நூல், சேலை தயாரிக்கும் நெசவு வேலைகளில் ஈடுபட்டதாலும், அக்கலையில் கை தேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்களை பாமர ஜனக்கள் ‘பட்டுநூல் காரர்கள்’ என்று அழைப்பர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இவர்களில் ஒரு பிரிவினர் பிராமணர்கள் என்று உரிமை கொண்டாடியவுடன் ஒரு விவகாரம் தலை எடுத்தது. அதை ஸ்ரீரங்கம் பட்டாசார்யார்கள், எப்படி தீர்த்துவைத்தனர் எனபனவெல்லாம் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த கீழ்கண்ட பழைய புத்தகத்தில் உள்ளது. படித்து மகிழ்க.
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1416; தேதி 17 நவம்பர், 2014.
ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 1028 துதிப்பாடல்கள் இருக்கின்றன. அவைகளில் 10,552 மந்திரங்கள் உள.
பல அதிசயங்கள் நிறந்தது ரிக் வேதம். அது என்ன அதிசயம்?
உலகிலேயே முதல் முதலாகத் தொகுக்கப்பட்ட நூல் என்னும் பெருமையுடைத்து.
உலகிலேயே முதல் முதலாக ‘’இண்டெக்ஸ்’’ INDEX போட்ட நூல் இதுதான். அதாவது எல்லா ஆங்கில நூல்களிலும் கடைசி பக்கத்துக்குப் போனீர்களானால் அதிலுள்ள விஷயங்களை அகர வரிசையில் சொல் குறிப்பு அகராதி என்று கொடுத்திருப்பர். இதை ‘’அணுக்ரமணி’’ என்ற பெயரில் உலகிற்குச் சொல்லிக் கொடுத்தது நம்மவர்களே. எந்தெந்த ரிஷி எந்த மந்திரத்தைக் ‘’கண்டுபிடித்தார்’’, எந்தக் கடவுளின் பெயரில் பாடினார் என்றெல்லாம் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னர் எழுதவேண்டு மானால் அவர்களுடைய விசாலமான புத்தியை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா? ( ரிஷிகள் என்போர் மந்திர த்ருஷ்டா= மந்திரங்களைக் கண்டவர்கள்; எழுதியவர்கள் அல்ல)
400—க்கு மேற்பட்ட ரிஷிகளின் பெயர்களையும் அப்படியே நமக்குக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு அதிசயமும் உண்டு. உலகில் எந்த நூலையும் நாலு கூறு போட்டு நாலு மாணவர்களை அழைத்து இதை ‘’எழுதக்கூடாது. ஆனால் மனப்பாடமாகப் பரப்ப வேண்டும்’’ என்று யாரும் சொன்னதில்லை. வியாசர் என்னும் மாமுனிவன் மட்டும் இப்படி உத்தரவிட்டதும் அதை அவர்கள் சிரமேல் கொண்டு இன்று வரை நமக்குக் வாய் மொழியாகக் கொடுத்து வருவதும் உலகம் காணாத புதுமை. சுமேரியாவிலோ எகிப்திலோ களிமண்ணிலும் சுவற்றிலும் எழுதாவிடில் அனைத்தும் அழிந்திருக்கும் ஆனால் நம்மவர் மனப்பாடமாக இன்று வரை அதைக் காப்பாற்றி வந்தது நம் திறமைக்கு ஒரு சான்று.
இதில் வேறு பல ரகசியங்கள் இருப்பதாலும் எதையும் நேரடியாகச் சொல்லாமல் ரகசியமாகச் சொல்வதானாலும் சங்க காலத் தமிழர்கள் இதற்கு ‘’மறை’’ என்றும், ‘’எழுதாக் கிளவி’’ என்றும் பெயர் சூட்டி அகம் மகிழ்ந்தனர், உளம் குளிர்ந்தனர்.
இதில் உள்ள கணித ரகசியங்கள் பற்றியும் மிகப் பெரிய எண்கள் பற்றியும் தனியே கொடுத்து விட்டேன். இன்று 38 பெயர்களையும் ஏழு புதிர்களையும் உள்ளடக்கிய ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம்.
ரிக்வேதத்தில் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் என்னும் ரிஷியும் அவர் வழிவந்தவர்களும் பாடிய துதிப்பாடல்கள் இடம் பெறும். இதில் 18ஆவது துதியில் 25 மந்திரங்கள் உள. தமிழில் பரணர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்று செய்தியைத் தருவார் ( எனது பழைய கட்டுரையில் மேல் விவரம் காண்க: வரலாறு எழுதிய முதல் தமிழன்).
அது போல இப்பாடலில் 38 விஷயங்களை அள்ளிக் கொடுத்து விட்டார் வசிட்டன். இதில் உள்ள பல விஷயங்கள் புதிர்களாகவே உள்ளன. ரிஷி முனிவர்கள் பயன்படுத்தும் மறை பொருளான மரபுச் சொற்றொடர்களும், நமது அறியாமையுமே இதற்குக் காரணம் என்று இப்பகுதியை மொழிபெயர்த்த கிரிப்பித் என்ற அறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புதிர் 1
இந்தத் துதிப்பாடல் இந்திரன் மீது பாடப்பட்டது. 14ஆவது மந்திரத்தில் ஒரு எண் வருகிறது. அதைச் சில அறிஞர்கள் 66,606 என்றும் இன்னும் சிலர் 6666 என்றும் மொழி பெயர்க்கின்றனர். அதன் சம்ஸ்கிருத மொழி அமைப்பு அப்படி அமைந்துள்ளது. அது சரி! இப்படிப்பட்ட வினோத எண்ணுக்கு இந்த துதியில் அவசியமே இல்லையே! ரிஷிகள் ஏதேனும் மறை பொருளைச் சொல்ல விரும்புகின்றனரா அல்லது எதுகை, மோனை விஷயங்களுக்கா கத் தங்கள் புலமையைக் காட்டுகின்றனாரா? புதிரோ புதிர்!
புதிர் 2
தாசர்கள் என்றால் கறுப்பர்கள், அவர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆரியர்களால் விரட்டப்பட்டவர்கள் — என்று வெளிநாட்டார் எழுதி வைத்தனர். ஆனால் இந்தப் பாட்டு முழுதும் சு தாச என்னும் மன்னன் அடைந்த வெற்றியைப் பற்றியது. அவனுடைய அப்பா பெயர் திவோ தாச! அவன் குல குரு வசிஷ்ட மாமுனிவன். அவனுக்கு உதவியதோ இந்திரன்! புதிரோ புதிர்!
புதிர் 3
இதே பாடலில் யுத்யாமதி என்ற ஒரு பெயர் வருகிறது. அது ஒரு மன்னன் பெயராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுவர். ஆனால் அவரைப் பற்றிய எந்த விஷயமும் வேறு எங்கும் கிடைத்தில. ஒரு வேளை சிந்து சமவெளியை ஆண்ட ஒரு மன்னனோ!! ( மதி-பதி-வதி: சிந்து சமவெளி மன்னர் பெயர்கள் என்ற எனது கட்டுரையில் விவரம் காண்க). புதிரோ புதிர்!
புதிர் 4
இந்தப் பாடல் அடங்கிய ஏழாவது மண்டலம் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் ஒன்று என்று பல அறிஞர்களும் ஒப்புவர். அத்தைகயதோர் பாடலில் திடீரென யமுனை நதி பற்றி வருகிறது! ‘’கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் சிந்து நதி தீரத்தில் பாடிய துதிப்பாடலகள்’’– என்று கதைத்து வந்த வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ மீது குண்டு வீசியது போல இருக்கிறது இந்த யமுனைக் குறிப்பு! அவர்களுடைய ஆரிய—திராவிட வாதங்களை ஒரு சொல்லால் தவிடு பொடியாக்கி விடுகிறது இந்த வரி.
வேதம் பற்றியும் அதிலுள்ள வரலாறு பற்றியும் எழுதி வரும் ஸ்ரீகாந்த் தலகரி என்னும் அறிஞர், வேத கால இந்துக்கள் கிழக்கில் இருந்து மேற்கே ஈரான் வரை சென்றார்கள் என்று நிரூபித்ததை இது உறுதி செய்கிறது.
சங்கத் தமிழர்களுக்கு சிந்து நதியோ, அந்தப் பகுதியோ தெரியுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அவை பற்றி சங்கப் பாடல்களில் இல்லை. ஆனால் யமுனை (தொழுநை) நதியும் கங்கை நதியும் இமய மலையும் சங்கத் தமிழர்களுக்கு மிகவும் தெரிந்த இடங்கள்!
புதிர் 5
அஜஸ், சிக்ரூஸ், யக்ஷூஸ் என்பவர்கள் பேடா என்பவர் கீழ் இருந்தது போல என்று ஒரு வரி வருகிறது யார் இந்த பேடா? என்று தெரியவில்லை! புதிரோ புதிர்!
புதிர் 6
‘’பசியுள்ள மீன்கள் போல’’ — என்று இடையில் திடீரென்று ஒரு வரி வருகிறது. சிலர் இதை மீன் பற்றிய உவமை என்கின்றனர். இன்னும் சில வெளிநாட்டார் இது ‘’மத்ஸ்ய’’ இனத்தினர் என்பர். மத்ஸ்ய என்ற வட சொல்லுக்கு மீன் என்ற பொருள் உண்டு. மச்சாவதாரம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. ஆக இந்த வரியும் புதிரோ புதிர்!
புதிர் 7
ஆறாவது மந்திரத்தில் துர்வாச புரோதாச என்ற பெயர் உள்ளது. இது ஒரே பெயரா அல்லது இரண்டு பெயர்களா என்றும் அறிஞர்கள் மோதிக் கொள்வர். புதிரோ புதிர்!
இப்படி ஒரே பாடலில் பல அறிஞர்கள் பலவாறு பேசுவதை அறிந்தே, நம் அய்யன் வள்ளுவன், “எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”– என்று செப்பினான். குறிப்பாக, வேத மந்திரங்களுக்கு ஆரிய—திராவிட விஷப் புகை தூவி மந்திரம் போடும் வெளி நாட்டாரை நம்பாது இருப்பதே நலம்!
பாடலில் என்ன சொல்கிறார் வசிட்டர்?
இந்தப் பாடல் சுதாச என்னும் மன்னன், பத்து ராஜா யுத்தத்தில் அடைந்த மாபெரும் வெற்றியைப் பாடுகிறது. எப்படி கரிகால் சோழன் ஏழு பேரை வென்று வெற்றி வாகை சூடினானோ அது போல சுதாசன் பத்து பேரை வென்று வெற்றி வாகை சூடினான். அவனுடன் போனார் வசிட்டர். அவனுக்கு உதவியது இந்திரன்!
“ஆடு சிங்கத்தை வென்றது போல வென்றான்” — என்ற உவமை இதில் இருப்பது குறித்தும் சிங்கம், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை அக்காலத்திலேயே இருந்தது என்றும் எனது முந்தைய கட்டுரையில் தந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
இறுதியாக, — இதில் வரும் முப்பத்தெட்டு பெயர்கள் என்ன என்ன?
You must be logged in to post a comment.