

Post No. 9219
Date uploaded in London – –3 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ENGLISH MATTER INCLUDED
The Book of Life 180 Practical Questions & Answers Mainly Based on the Bhagavad-Gita Teachings
By Kamlesh C. Patel
Copyright © May 2015 by Kamlesh C. Patel First Edition

கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்!
ச.நாகராஜன்
கமலேஷ் சி. படேல் கடவுளைக் காட்டு என்போருக்கும், கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்போருக்கும் தனது ‘தி புக் ஆஃப் லைஃப் – 108 ப்ராக்டிகள் கொஸ்டின்ஸ் அண்ட் ஆன்ஸர்ஸ்’ என்ற நூலில் பதில் அளித்திருக்கிறார். அது காபிரைட் கொண்ட புத்தகம். என்றாலும் இந்த புத்தகத்தில் உள்ளவற்றைப் பரப்புவதை நான் ஊக்குவிக்கிறேன் என்கிறார். அவருக்கு நமது நன்றிகள். இதோ சில முக்கிய பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறேன்.
*
கடவுளைக் காட்டு அப்போது தான் என்னால் நம்ப முடியும்.!
நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த மிகச் சிறிய கிரகத்தில் உள்ள ஒரு சிறிய நாடான நமது நாட்டின் ராஷ்டிரபதியையே பார்க்க முடியாது. அப்படி இருக்க, எப்படி பல கோடி அண்டங்கள் உள்ள பிரபஞ்சத்தில் ஜனாதிபதியைப் பார்க்க முடியும்? கடவுள் நமது வேலைக்காரன் இல்லை, நமது முன்னால் நாம் விரும்பும் போதெல்லாம் அவர் வருவதற்கு! அவரை நாம் பார்க்க விரும்பினால், அவரது நிபந்தனைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.. நீங்கள் ஜப்பனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, என்றாலும் கூட, அதைப் பார்க்காத போதிலும் கூட, ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். ஜப்பானைக் கண்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உலக வரைபடங்கள் அதிகாரபூர்வமாக இருப்பதைக் கொண்டு அதை ஒப்புக்கொள்ள நீங்கள் தயார். அப்படி இருக்க, அனைத்திற்கும் மேலான பரம புருஷனான கிருஷ்ணரை, 18000 முறைகள் தனது அசல் உருவத்தில் அதே உடலுடன் தோன்றி, ஒவ்வொரு முறையும் தானே மேலான் பரம புருஷன் என்று நிரூபித்தவரை சனாதனமாக என்றும் இருக்கும் வேத நூல்களின் பிரமாணத்தைக் கொண்டு, அவரை ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது? கிருஷ்ணரை தரிசித்த கோடிக்கணக்கான வேதத்தைக் கடைப்பிடிப்போர் கூறுவதை ஏன் அதிகாரபூர்வமானதாக ஒப்புக் கொள்ளக் கூடாது?
*
கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானிகளும், நாத்திகர்களும் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்.
* எந்த ஒரு விஞ்ஞானியாலாவது உயிரை உருவாக்க முடியுமா? கடவுள் பல்கோடி உயிரினங்களைப் பலவேறு வடிவங்களில் படைக்கிறார். இதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம்,
- இந்த பூமியில் ஒவ்வொன்றும் உயிரினங்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களை யார் பராமரித்து வருகிறார்? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- எந்த ஒரு விஞ்ஞானியாலாவது பழங்களை உருவாக்கும் மரங்களையும் காய்கறிகளையும் உருவாக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- பசுவானது நீரையும் புல்லையும் உண்கிறது. அதைப் பாலாகத் தருகிறது. எந்த ஒரு விஞ்ஞானியாலாவது இதைச் செய்ய முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- சூரியன் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வெப்பத்தை உருவாக்க 4000 லட்சம் அணு ஆயுதங்களாலேயே முடியும், இப்படி 1500 கோடி ஆண்டுகளாக சூரியன் வெப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் இதே போல் ஒரே ஒரு வினாடி மட்டும் வெப்பத்தை உருவாக்கிக் காண்பிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- சூரியன் நேரத்திற்கு உதிக்கிறான், நேரத்திற்கு அஸ்தமிக்கிறான். பருவங்கள் வருகின்றன, உரிய காலத்தில் போகின்றன, மாறுகின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- மனிதன் உட்பட, பலகோடி ஜீவராசிகளின் கால்கள் நூறு சதவிகிதம் ஒரே மாதிரியாக ஒரே அளவுடன் தான் இருக்கின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- ஏன் பல்வேறு விதமான ஜீவராசிகள் உள்ளன? மனிதன் ஒருவனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- ஒவ்வொரு மனிதனின் முகமும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இது என்ன தற்செயல் நிகழ்வா? மனிதனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் தனித்துவம் கொண்ட பொருள்கள் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- மனித உடலானது இரு பாதிகளிலும் சமச்சீராக இருக்கிறது. (இரு பகுதிகளும் 100! ஒரே மாதிரியாக உள்ளது) இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- ஒரு கழுதை ஏன் மனிதன் போல சிந்திப்பதில்லை? ஒரு மனிதன் ஏன் கழுதை போல சிந்திப்பதில்லை? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
- நீங்கள் சில செங்கற்களை தரையில் தூக்கிப் போட்டால் அவை ஒரு வீடாக மாறி விடுமா? ஒரு உயிருள்ள ஆத்மா இல்லாமல் செங்கற்கள் எதாகவும் ஆக முடியாது. அணுக்கள் சில ஒன்றிணைந்து அணுக்கூறுகளாக மாறுவது என்பது தற்செயல் நிகழ்வா என்ன? இல்லை. ஒவ்வொரு அணுவிலும் உறையும் இறைவனே – கிருஷ்ணரே அணுக்களை குறிப்பிட்ட மூலக்கூறுகளாக உருவாக்குகிறார்.
****

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்.
புத்தகம் பற்றிய விவரமும் கீழே தரப்பட்டுள்ளது.
The Book of Life 180 Practical Questions & Answers Mainly Based on the Bhagavad-Gita Teachings
By Kamlesh C. Patel
Copyright © May 2015 by Kamlesh C. Patel First Edition
All rights reserved. I encourage people to reproduce or transmit this book and help spread the truth. ISBN:978-0982715055
- Show me God, only then will I believe? Most of us can’t even meet the President of a small country on this insignificant planet. So how can we meet the President of millions of universes? God is not our servant who will come in front of us whenever we desire it. If we want to see Him, then we have to accept His terms. Have you seen Japan? No! But you still believe there is a country called Japan, even though you have not seen it. You are willing to accept the authority of world maps created by people and also the words of people who have seen Japan. Why not accept the authority of the eternal Vedic scriptures which state that Lord Krishna is the Supreme person, who has appeared more than 18,000 times in His original form (same body) and each time proving He is the Supreme person. Why not accept the authority of millions of Vedic followers who have seen Lord Krishna?
What is the evidence for God?
The scientists and atheists say there is no God:
- Can any scientist create life? Every second God is creating trillions of living beings in various forms. This is evidence of God
- Everything on this planet is maintained by living beings, so who is maintaining everything beyond this planet? This is evidence of God
- Can any scientist create trees that produce fruits and vegetables? This is evidence of God
- The cow takes water and grass and turns it into milk. Can any scientist do this? This is evidence of God
- According to the scientists, it would take over 400 billion nuclear weapons to produce the same amount of heat that the sun produces in just 1 second, and the sun has been doing this for at least 15 billion years according to the scientists themselves. Can the scientists replicate the sun, even for 1 second? This is evidence of God
- The sun always rises and sets on time, and the seasons come and go on time. Is this by chance? This is evidence of God
- The legs of trillions of living beings, including humans are 100% of the same length. Is this by chance? This is evidence of God
- Why is there a variety of living beings? Can a manufacturing company produce anything without the input from a person? This is evidence of God
- Every human face is unique, is this by chance? Can a manufacturing company produce unique products without any input from a person? This is evidence of God
- The human body is symmetrical (both halves are 100% same). Is this by chance? This is evidence of God
- Why doesn’t the donkey think like a human and vice versa? This is evidence of God
- If you throw some bricks on the ground, will they form into a house? Without a spiritual being, the bricks cannot be formed into anything. Do the atoms combine to form certain molecules by chance? No. It’s Krishna (God) who is present in every atom who combines the atoms to form specific molecules .
***
TAGS- SHOW ME, GOD, WHERE,