செப்டம்பர், 2015 காலண்டர்
(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)
Compiled by London swaminathan
Date : 31 ஆகஸ்ட் 2015
Post No. 2110
Time uploaded in London : 11-49 am
Swami_48@yahoo.com
Important days:-
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.
முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,
பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24
இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.
செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை
பலம் மூர்கஸ்ய மௌனித்வம்
மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.
செப்டம்பர் 2, புதன் கிழமை
தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா
தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்
செப்டம்பர் 3, வியாழக் கிழமை
மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி
சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்
செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை
மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)
செப்டம்பர் 5, சனிக்கிழமை
மௌனம் சம்மதி லக்ஷணம்
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை
மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45
பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.
செப்டம்பர் 7, திங்கட் கிழமை
மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9
மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.
செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை
வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.
பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.
செப்டம்பர் 9, புதன் கிழமை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 291
ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138
உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.
செப்டம்பர் 10, வியாழக் கிழமை
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள் 962
புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை
சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43
உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.
செப்டம்பர் 12, சனிக்கிழமை
வாக் ஜன்ம வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத் – நைஷதீய காவ்யம்
நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)
செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை
விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி
மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.
செப்டம்பர் 14, திங்கட் கிழமை
அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய
பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்
செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை
துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி
தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.
செப்டம்பர் 16, புதன் கிழமை
அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:
அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்
ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)
செப்டம்பர் 17, வியாழக் கிழமை
அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்
மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.
செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182
செப்டம்பர் 19, சனிக்கிழமை
அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.
கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)
செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை
உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி
நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.
செப்டம்பர் 21, திங்கட் கிழமை
நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்
பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.
செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை
ந அஹங்காராத் சத்ரு:
நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.
செப்டம்பர் 23, புதன் கிழமை
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963
செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.
செப்டம்பர் 24, வியாழக் கிழமை
ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி
உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.
செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969
ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.
செப்டம்பர் 26, சனிக்கிழமை
வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்
தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.
செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை
பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்
மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.
செப்டம்பர் 28, திங்கட் கிழமை
சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்
மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).
செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை
தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்
நிலையின் இழிந்த கடை – குறள்- 96964
மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.
செப்டம்பர் 30, புதன் கிழமை
அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.
-subham-
You must be logged in to post a comment.