
Written by london swaminathan
swami_48@yahoo.com
Date: 26 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 19-10
Post No. 6125
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்; இதோ பாடல் 52, 53,54
அறநெறிகளையும், விதி முறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கடந்தகால தவறுகளை மறந்துவிட்டு, நல்லது அனைத்துக்கும் எதிரே நிற்கும், குருட்டு அதிர்ஷ்டத்தில் பணம் சேர்த்த, அகந்தைமிக்க ஒருவன் அருகில் வசிப்பவன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?
உத்பாசிதாகிலகலஸ்யவிஸ்ருங்கலஸ்ய
ப்ராக்ஜாதவிஸ்ருதநிஜாதமகர்ம வ்ருத்தேஹே
தைவாதவாப்தவிபவஸ்ய குணதவிசோஅஸ்ய
நீசஸ்யகோசரகதைஹி சுகம் ஆப்யதே 1-52
उद्भासिताखिलखलस्य विशृङ्खलस्य
प्राग्जातविस्तृतनिजाधमकर्मवृत्तेः ।
दैवादवाप्तविभवस्य गुणद्विषोஉस्य
नीचस्य गोचरगतैः सुखम् आप्यते ॥ 1.52 ॥
கெட்டவர்கள் பற்றி தீ நட்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அழகாகச் சொல்லுவார்:-
சொல்லும் செயலும் வெவ்வேறாக இருப்பவர்களுடன் தொடர்பே வைத்துக்கொள்ளக்கூடாது; அது கன்aவிலும் துன்பம் தரும்- 819
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல்வேறுபட்டார் தொடர்பு-819
Xxxxxxxxxxxxxxxxxxx

பாடல் 53
காலையில் நிழல் நீளமாக விழும்; நேரம் செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும்;
பிற்பகலில் விழும் நிழல் சின்னதாக இருக்கும் ஆனால் நேரம் ஆக ஆக வளர்ந்துகொண்டே போகும்;
இதே போலத்தான் தீயோர் தொடர்பும் நல்லோர் தொடர்பும்.
आरम्भगुर्वी क्षयिणी क्रमेण
लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना
छायेव मैत्री खलसज्जनानाम् ॥ 1.53 ॥
ஆரம்பகுர்வீக்ஷயிணீ க்ரமேண
லக்வீபுரா வ்ருத்திமதீச பஸ்சாத்
தினஸ்ய பூர்வதர்பரார்தபின்னா
சாயேவ மைத்ரீ கல ஸஜ்ஜனானாம்
இந்திய தத்துவஞான கருத்துக்களை 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வெளியிட்ட பிதகோரஸின் ஐந்து முக்கியக் கொள்கைகளில் ஒன்று மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான குணங்கள் நட்பும் அடக்கமும்தான் என்பதாகும்.
தமிழ் நூல்களும் நட்புறவை, குறிப்பாக நல்ல நண்பர் உறவை, மிகவும் வலியுறுத்துகின்றன. பர்த்ருஹரி நிழல் உவமையைப் பயன்படுத்தினார்.
திருவள்ளுவர் தமிழ் வேதமான திருக்குறளில் பிறை நிலவு உவமையைப் பயன் படுத்துகிறார்:-
நிறை நீர நிரவர் கேண்மை பிறைமதிப்
பின் நீர பேதையார் நட்பு – குறள் 782
அறிவுடையார் நட்பு வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரும்; அறிவில்லாதார் நட்பு, தேய் பிறை நிலவு போல நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகும் என்று திருவள்ளுவர் சொல்வார்.
Xxxxxxxxxxxxxxxxx
பாடல் 54
மான், மீன், நல்லோன் ஆகியோர் புல், தண்ணீர், திருப்தி ஆகியவற்றின் மூலமே சந்தோஷம் அடைகின்றனர் (ஆயினும் அவர்களுக்கும் எதிரிகள் உண்டு). வேடனும், மீனவனும், தீயோனும் காரணமில்லாமல் அவர்களிடம் விரோதம் பாராட்டுகின்றனர்.
ம்ருகமீன ஸஜ்ஜனானாம் த்ருணஜல ஸந்தோஷ விஹித வ்ருத்தீனாம்
லுப்தகதீவரபிசுனா நிஷ்கரணவைரிணோ ஜகதி 1-54
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
मृगमीनसज्जनानां तृणजलसन्तोषविहितवृत्तीनाम् ।
लुब्धकधीवरपिशुना निष्कारणवैरिणो जगति ॥ 1.54 ॥
மிருகங்கள், பறவைகளைக் கொண்டு நீதி போதிப்பது பாகவத காலத்தில் இருந்து திருவள்ளுவர் காலம் வரை இருக்கிறது .பர்த்ருஹரியும் காரணமின்றி பகைமை பாராட்டுவதை விளக்க அந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.
காக்கை போல கரைந்து உண்ணுதல்,நாய் போல நன்றி செலுத்துதல் என்பன அடிக்கடி வரும். ஆனால் பர்த்ருஹரி வே றுகோணத்தில் இருந்து பார்க்கிறார்.

–சுபம்–










































































