ஆங்கிலக் கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Post No.9785)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9785

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பிறந்த தேதி –அக்டோபர் 21,1772

இறந்த தேதி – ஜூலை 25, 1834

ஆங்கிலக் கவிதை உலகத்தில் மகிழ்ச்சியூட்டும்  கற்பனைமிக்க படைப்புகளைத் துவக்கிவைத்தவர் கோல்ரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE). தி ரைம் ஆப் தி ஏன்ஷியன்ட் மரினர் (THE RIME OF THE ANCIENT MARINER )கவிதை மூலம் ரசிகர்களின் நினைவில் நீங்காத  இடம்பெற்றவர்.

கோல்ரிட்ஜ் , ஒரு மதப் பிரசாரகரின் மகன். இங்கிலாந்தில் ஒரு கிராமப்புறத்தில் ஒன்பது பேருடன் பிறந்தவர் .லண்டனில் பள்ளிக்கூட படிப்பின்போது பிரபல எழுத்தாளர் சார்ல்ஸ் லாம்பு (CHARLES LAMB) டன் பழக்கம் ஏற்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும்காலையில் கவிஞர் ராபர்ட் சதேயுடன்  (POET ROBERT SOUTHEY) பரிச்சயம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பென்சில்வேனியாவில் ஒரு லட்சிய சமுதாய அணியை (IDEAL COMMUNITY) உருவாக்க இருவரும் திட்டம் போட்டனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

இந்தத் தொடர்பு காரணமாக 1795-ல் சதேயின் காதலியின் சகோதரியை கோல்ரிட்ஜ் கல்யாணம் செய்துகொண்டார்.

1797ம் ஆண்டில் இயற்கையைப் போற்றும் புகழ்மிகு கவிஞர் வோர்ட்ஸ் வொர்த்து (Wordsworth) டன் நட்பு மலர்ந்தது. இருவரும்  சேர்ந்து லிரிக்கல் பாலட்ஸ் (Lyrical Ballads)  என்ற கவிதை நூலை வெளியிட்டனர்.

எளிய, அனறாடம் புழங்கும் சிறந்த மொழி நடையில் இவை  இருந்தன . இயற்கையை புதிய கோணத்தில் பார்க்கும் எண்ணத்தையும் உண்டாக்கியது . இதில் கோல்ரிட்ஜ் படைத்த ஏஷியன்ட் மாரினர் Ancient Mariner கவிதையும் அடக்கம். கடலில் பறக்கும் மிகப் பெரிய ஆல்பட்ராஸ்  (Albatross) பறவையை ஒரு மாலுமி கொன்ற பின்னர் ஏற்படும் துயரங்களை வருணிக்கும் பாடல் இது. இயற்கைக்கு எதிரான குற்றம் இழைத்தற்குக் கிடைத்த தண்டனை குறித்த கவிதை இது.

அவருடைய மற்ற சிறந்த கவிதைகளை குப்ளா கான், கிரிஸ்டாபல் கவிதைகள் ஆகும். இவை மர்மமும் அதிசயமும் நிறைந்தவை. குப்ளா கான் கவிதை வரிகளை இவர் கனவில் கண்டாராம்.

சொந்த வாழ்க்கையில் பல பிரச்ச்சினைகளை சந்திக்க நேரிட்டது. அபினி, கஞ்சாவுக்கு (Opium)  அடிமையானதே இதற்குக்காரணம். குடும்பத்தை விட்டு வெளியேறினார். ஆயினும் கவிதை, கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. கலைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

ஒரு கவிஞனின் பணி என்ன என்பதை ‘பயக்ராபியா லிட்டரேரியா’ (BIOGRAPHIA LITERARIA) என்ற நூலில் எழுதினார். சம காலத்தில் புழங்கும் நம்பிக்கைகள் எண்ணங்கள் ஆகியவற்றைக்கொண்டு, புதியவற்றை படைப்பதே புலவரின் வேலை என்று அதில் கோல்ரிட்ஜ் எழுதினார்.

இவரது முக்கிய இலக்கியப் படைப்புகள் :-

PUBLICATIONS

1796 – POEMS ON VARIOUS SUBJECTS

1798 – LYRICAL BALLADS – WITH WILLIAM WORDS WORTH

1802 – DEJECTION – AN ODE

1816 – CHRISTABEL

1816 – KUBLA KHAN

1817 – BIOGRAPHIA LITERARIA

1825 – AIDS TO REFLECTION

PUBLISHED AFTER HE DIED—

1895 – ANIMA POETAE

-SUBHAM-tags – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், S T Coleridge 

Leave a comment

Leave a comment