திருநாங்கூர் கோவில்கள் தொடர்ச்சி(Post.15,715)
Written by London Swaminathan
Post No. 15,715
Date uploaded in London –9 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(28)திருவெள்ளக்குளம் (அண்ணன்கோயில்),திரு நாங்கூர்- தென்திருப்பதி
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி; ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்; சீர்காழி
திருவெள்ளக்குளம்-அண்ணன் பெருமாள் கோயில்-தென்திருப்பதி
இறைவன்– கிழக்கு நோக்கி நின்ற அண்ணன் பெருமாள் எனப்படும் ஸ்ரீநிவாசன்
இறைவி–அலர்மேல் மங்கை
திருமலையில் வழங்கப்படும் இறைவனின் பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.
திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.
திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும்.
“திருவெள்ளக்குளம் திருமால்’, திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார்.
****
(29)திருதேவனார் தொகை– திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி-தெய்வநாயகன்; மாதவப் பெருமாள்; சீர்காழி
இறைவன்–தெய்வநாயகன், மாதவநாயகன்
இறைவி–கடல்மகள் நாச்சியார்
திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.
“திருத்தேவனார் தொகை பெருமாள்’, தன்னுடன் கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார்.
(30)திருக்காவளம்பாடி-திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை-ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)-– கிருஷ்ணன் பாரிஜாத மலர்; சீர்காழி
திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) என்பது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 27-வது தலமாகும். கோபாலகிருஷ்ணன் மூலவராக அருளும் இத்தலம், திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இது திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் ஒன்றாகும், இங்கு தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை சிறப்பானது.
மூலவர்: கோபாலகிருஷ்ணன் (நின்ற திருக்கோலம்)
.தாயார்: ருக்மிணி, சத்யபாமா.தீர்த்தம்: கோபால தீர்த்தம், கௌதம தடாகம்.
சிறப்பு: திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர், மங்கைமடம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.
***
(31)திருபார்த்தன் பள்ளி-திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி-ஸ்ரீ தாமரையாள் கேள்வன்; ஸ்ரீ பார்த்தசாரதி;
31.திருப்பார்த்தன் பள்ளி
இறைவன்–மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்,தாமரையாள் கேள்வன்
இறைவி– தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்
திருவெண்காட்டிலிருந்து 2 மைல் தூரம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.
“திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான்’ சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேரளிக்கிறார்.
***
(33)திருவண்புருடோத்தமம்-திரு நாங்கூர்
இத்தலத்தில் இறைவன் புருஷோத்தமனாக, தாயார் புருஷோத்தம நாயகியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
:மூலவர்: புருடோத்தமன் (புருஷோத்தமன்)
தாயார்: புருடோத்தம நாயகி
தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீர்காழிக்குக் கிழக்கே சுமார் 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் வளம் மிக்க, வள்ளல் தன்மையுடைய புருஷோத்தமன் வீற்றிருக்கும் இடம
***
(34)திருசெம்பொன்செய் கோயில்-திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்-ஸ்ரீ பேரருளாளன்-ஹேமரங்கன் (செம்பொன்னரங்கன்);
சீர்காழி-தங்க-பசு
***
(38)திருமணிமாடக்கோயில்-திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு); நாராயணன், அளத்தற்கரியான்; சீர்காழி – பத்ரிகாசிரமம் –11 கருட சேவை
^^^
30. திருக்காவளம்பாடி
இறைவன்: ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)
இறைவி: மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
31 கண்ணன் சத்தியபாமாவுடன் நரகாசுரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான்.
வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான்.
துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான்.
திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
32. திரு வைகுந்த விண்ணகரம்
வைகுண்ட நாதர் திருக்கோவில்-வைகுண்ட விண்ணகரம்.
மூலவர் வைகுண்ட நாதர்-அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியர்களுடன் காட்சி.
*வைகுண்டதில் பெருமான் காட்சி தருவது போல் இங்குள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி காட்சி தருவது கூடுதல் சிறப்பு.
இந்த திவ்ய தேசத்தில் தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது.
*பொதுவாக அனைத்து பெருமாள் ஸ்தலங்களிலும் கருடன் பெருமாள் எதிரே நின்று காட்சி கொடுப்பார், ஆனால் இந்த புண்ணிய திவ்ய தேசத்தில் கருடன் பெருமாளின் திருவடி கீழ் காட்சி தருகிறார்.
*மூலவர் மேல் உள்ள விமானம் ” அனந்த சத்ய வர்த்தக” விமானம்
*பெருமாள் வைகுண்ட நாதன் வைகுண்டதில் காட்சி தருவது போல் இருப்பதால், இந்த ஸ்தலம் ” பரமபதத்திற்கு” சமமான ஸ்தலம்.
*பெருமாள் “தாமரை கண்ணன்” என்றும் அழைக்கப்படுகிறார்.
“வைகுந்த விண்ணகரப் பெருமாளை’, வணங்கியோர் ஸ்ரீ வைகுந்த நாயகனையே வணங்கிய அருள்பெறுவர்
33. திருவண்புருடோத்தமம்
இறைவன்: புருடோத்தமன்-கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
இறைவி: புருடோத்தம நாயகி
வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார்.
“திருவண் புருஷோத்தம நாயகனை’, வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.
34. திருச்செம்பொன் செய்கோயில்
இறைவன்: செம்பொன் ரங்கர்; ஹேமரங்கர்; பேரருளாளன்
இறைவி: அல்லிமாமலர் நாச்சியார்
இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததது.
“செம்பொன்சேய் கோயில் பெருமாள்’, காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார்.
35.திரு மணிக்கூடம்
இறைவன்-கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்
இறைவி- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி
, திரு
நாங்கூர் பதிகங்கள்
திருநாங்கூர் மணிமாடக்கோயில்
*****************www.fb.com/thirumarai
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
முதலைத் தனி மா முரண் தீர அன்று
முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவ
TO BE CONTINUED……………………………
TAGS-18Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-18;
திருநாங்கூர் கோவில்கள் தொடர்ச்சி