தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் – 2; பாம்பாட்டியும் குரங்காட்டியும்; காளையும் யானையும் (Post.15,716)

Written by London Swaminathan

Post No. 15,716

Date uploaded in London –9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 2

From Darasuram- Bull Elephant; picture by London swaminathan

***

Snake Charmer and Monkey Charmer ; Location- Sri Vaikundam Temple; painted by Artist Silpi

பாம்புப்பிடார்களும் பாம்பாட்டிகளும் இல்லாத பெரிய ஊரோ கிராமமோ இந்தியாவில் இல்லை; ஏனெனில் உலகில் அதிகமான எண்ணிக்கை உடைய பாம்புகளும் மிக அதிக விஷமுள்ள பாம்புகளும் இருப்பது இந்தியாவில்தான்; மேலும் குழந்தை பிறக்காத பெண்கள்,  நாகர் சிலைகளை கோவிலிலோ புனித இடங்களிலோ மரத்துக்கு அடியில் நிறுவுவதும் இந்தியாவில்தான் .

பாம்பாட்டியும் குரங்காட்டியும் என்ற தலைப்பில் ஓவியல் சில்பி விகடன் பிரசுரம் வெளியிட்ட தென்னாட்டுச் செல்வங்கள் என்ற நூலில் ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் கோயிலில் உள்ள சிற்பங்களைத் தத்ரூபமாக வரைந்து நமக்கு அளித்துள்ளார் .

இது தாராசுரம் , திருபுவனம் கோவில்களில் காணப்படுகிறது இரண்டு இடங்களிலும் சர்ப்ப மூர்த்தியும் இருப்பதால் இரண்டும் ஒரே சிற்பியின் படைப்புகள்தான் என்று ஓவியர் சில்பி கருதுகிறார்.   

***

ரிஷபமும் யானையும்

Bull and Elephant with one head ; Location- Tiru Bhuvanam and Darasuram Temple; painted by Artist Silpi.

ஒரே உருவத்தில் காளையின் முகத்தையும் யானையின் முகத்தையும் இணைத்துச் செதுக்கியுள்ள சிறங்களைப் பல கோவில்களில் காணலாம் ; நானே இதை பல கோவில்களில் கண்டுள்ளேன் ; தாராசுரம் கோவிலில் புகைப்படமும் எடுத்தேன்.

இந்த உருவத்தில் ஒரு புறத்தைக் கைகளால்  மறைத்துக்கொண்டு  மறுபுரத்தைக் கண்டால் ஒரு மிருகம் மட்டும் காணப்படும்; இவ்வாறு யானையையும் ரிஷபம் என்னும் கலையையும் காணலாம் .

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமி (சிவன்) சந்நிதிக்கு நுழைவதற்கு முன்னர் ஒரு குரங்கு சிற்ப்பத்தைப் பல வகைகளில் காணும்படி சிற்பி அமைத்துள்ளார் !

இத்துடன் இணைத்துக்ள்ள படங்களைக் கண்டால் விளக்கமே தேவை இல்லை

Nagarani– Indus Valley Seal

–subham—

Tags- தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் – 2 , பாம்பாட்டியும் குரங்காட்டியும், காளையும் யானையும் , rare sculptures, part 2, snake charmer with monkey, elephant and bull , one sculpture , one head

Leave a comment

Leave a comment