
Kerala CM offered 71 kilo Butter


WORLD HINDU NEWS BULLETIN 25 5 2026
Written by London Swaminathan
Post No. 15,786
Date uploaded in London –25 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தொகுத்து வழங்குபவர் லண்டன் சுவாமிநாதன்

பிரிட்டனில் புதிய விநாயகர் கோயில்
பிரிட்டனில் தெற்கு வேல்ஸில் உள்ள கற்பக விநாயகர் கோயில் (கணபதி கோயில்) கும்பாபிஷேகம் ஜூன் ஏழாம் தேதி நடைபெறவுள்ளது; முதல் தேதி முதல் கும்பாபிஷேகத்துக்கான யாக யஃஞங்கள் துவங்குகின்றன
The Hindu temple in Bridgend is the Wales Shri Kalpaga Vinayagar Temple (Ganesh Temple). It is located on Pandy Road in Aberkenfig, Bridgend. This temple serves as a local religious, cultural, and spiritual hub for devotees in the area.
- Location: Pandy Road, Aberkenfig, Bridgend, CF32 9PP
- Deity: Lord Ganesha
- Facilities: The temple relocated to this building to better serve the growing Hindu community in South Wales.
- ****
லண்டனில் ஒரே நாளில் இரண்டு பெரிய நிகழ்ச்சிகள்


மே 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மித்ர சேவா சார்பில் மஹாருத்ர யக்ஞமும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில் மத்திய லண்டனில் ரத யாத்திரையும் நடந்தன ; ஆங்கிலத்தில் (Go to my blogs or my Facebook Page) விரிவான செய்தியை வெளியிட்டுள்ளேன் . இரண்டிலும் வளமைபோல ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .





***
குருவாயூர் கோவிலுக்கு கேரள முதல்வர் விஜயம்! 71 கிலோ வெண்ணெய்!
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் வி.டி. சதீசன் குருவாயூர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் முதல்வர் வி.டி. சதீசன் வழிபாடு மேற்கொண்டார்.அப்போது கோயில் விதிமுறைங்கள் மீறயப்பட்டதாக கேரள பாரதீய ஜனதாக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது .
சதீசன் துலாபார நேர்த்திக் கடனாக வெண்ணெய் செலுத்தினார் எடைக்கு எடை கொடுப்பதற்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது
***
தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும்

தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை – முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு!தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
வட மாநிலங்களில் பசுவை பலியிடுவது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஜமாயத் உலமா – இ – ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் இறைச்சிக்காக பசுவை வளர்ப்போர் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.மேலும், இந்த கோரிக்கை தொடர்பாக முஸ்லீம்கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் அகில இந்திய குரேஷி ஜமாத் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
***
இந்து முன்னணி தலைவர் கண்டனம்
ராமேஸ்வரம், திருச்செந்தூர் கோயில்களில் ஊழல்

கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளான, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.
கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளான, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலில் லட்டு பிரசாதம் முறைகேட்டில் அதிகாரிகள் துணையோடு ஊழியர்கள் பல கோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி செய்தி வெளி வந்துள்ளது. நேற்று (21.5.26) திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில் 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி பிடிபட்டுள்ளார். தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்றும் முழுமையாக உள்ளது. ஆனால் கோவிலில் இறைவன் முன்பே மனசாட்சி இல்லாமல் பக்தர்களை ஏமாற்றி திருடும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்கண்டிக்கத்தக்கது.
உதயநிதியைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘சனாதன தர்மத்தை அழிப்போம்’ என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம், உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளார். மாநில தழுவிய போராட்டங்கள்: உதயநிதியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியது.
–SUBHAM—
TAGS- உலக இந்து மத செய்தி மடல் 25 5 2026, WORLD HINDU NEWS BULLETIN 25 5 2026