WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,913
Date uploaded in London – 25 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாச்சி டிங்கிரி டிங்காலே!
ச. நாகராஜன்
நண்பர் ஆர். ரங்கராஜன் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெஸேஜைப் பார்த்து திடுக்கிட்டேன்.
தலைப்பைக் கொடுங்கள். கவிதை வரும் என்பது தான் செய்தி.
வெண்பா ஒரு வினாடியில் வந்து விடும் உங்கள் தலைப்பிற்கு ஏற்றபடி.
சரி, டெஸ்ட் செய்து தான் பார்ப்போமே என்று நான் எழுதிய பழைய கால வெண்பா ஒன்றின் ஈற்றடியை அனுப்பினேன்.
வந்தது பாருங்கள் ஒரு புதிய வெண்பா. அசந்து போனேன்.
இரண்டையும் கீழே தருகிறேன்:
தலைப்பு: பாட்டிற்கோ பாரதியே தான்
நான் இயற்றிய வெண்பா
செய்யுள் நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்)நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி
பாட்டிற்கோ பாரதியே தான்!
கீழே உள்ளது AI கவிதை
காற்றினிலே செந்தமிழைக் காரிகையாய்ப் பாடிநின்ற ஆற்றல் மிகுபாரதி ஆங்கெழுதிக் – கூட்டிவைத்த பாட்டிற்கோ பாரதியே தான்பொருத்தம் பாரினிலே வேறொருவர் இல்லை விரைந்து.
அடுத்தாற்போல இன்னொரு தலைப்பைத் தந்தேன். ஒரு வினாடியில் வெண்பா வந்து விட்டது. அதையும் கீழே தருகிறேன்:
தலைப்பு: நெஞ்சினிலே நின்றாள் அவள்
கீழே உள்ளது AI கவிதை
கண்ணினிலே நின்றாள் கருத்தினிலே மேவினாள் நெஞ்சினிலே நின்றாள் நிலைபெறவே – நெஞ்சத்து அன்பினிலே என்றும் அமர்ந்தாள் உள் அன்புடையவளாய் இன்பமுமே தந்தாள் இனிது.
‘செத்தாண்டா கவிஞர் எல்லாம்’ என்று நண்பருக்கு மெஸேஜ் அனுப்பிய என் மனதில் தோன்றியது ஒரு ஒரு பழைய கால திரைப்படப் பாடல்! (அன்பு எங்கே படம் -1958 வெளியீடு பாடலாசிரியர் வி. சீதாராமன் இசை: வேதா பாடியவர் டி.எம்.எஸ். நடிப்பு : எஸ்.எஸ். ராஜேந்திரன் 4.51 நிமிடப்பாடல் இது.)
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே
சரி, எந்த இணையதளத்தில் இப்படிப்பட்ட வெண்பாக்களை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இதோ இருக்கிறது இணையதள சைட்https://www.avalokitam.com/ai
முயன்று பாருங்கள். உடனே வரும் வெண்பா.
உங்கள் கருத்தையும் அனுப்புங்கள் tamilandvedas.com- க்கு!
**