Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பிரபல விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் இரண்டு முறை வேலையை இழந்தார். இதை அவர் சிரித்துக் கொண்டே சுவைபட உரைப்பதைக் கேளுங்கள்:
“ஒரு தந்தி ஆபீஸில் வேலைக்குப் போனேன். நிறைய தந்திகள் வந்து கொண்டே இருந்தன.இந்தப் பாழாய்ப்போன மிஷின் இப்படி மெதுவாக வேலை செய்கிறதே; இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தந்திகள் குவிந்தன. அவைகளைப் பார்க்கவும் இல்லை; மற்றவர்களுக்கு அனுப்பவும் இல்லை. மானேஜர் அய்யா வந்தார். இன்றுடன் உன் சீட்டு கிழிந்தது; வீட்டுக்குப்போ என்றார். நானும் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் வீட்டுக்குப் போனேன்.
இன்னொரு ஆபீஸுக்கு வேலைக்குப் போனேன். அந்தப் பாழாய்ப் போன ஆபீஸில் எங்கு பார்த்தாலும் எலிகள்; கரப்பான் பூச்சிகள். நானா சும்மா இருப்பேன்; ஒரு அருமையான கருவியைக் கண்டு பிடித்தேன். அந்தக் கருவி அவைகளைக் கொசு அடிப்பது போலக் கொன்று குவித்தன. எனக்கு இந்தப் படுகொலையில் பேராநந்தம்; அலுவலகத் தரை முழுதும் இரத்த வெள்ளம்! எலிகளும் பூச்சிகளும் கால் பட்ட இடமெல்லாம் கிடந்தன. மானேஜர் அய்யா வந்தார். ஏனய்யா, எடிஸனாரே! அலுவலகத்தை சுடுகாடாக மாற்றி விட்டீரே; இதுக்கா உமக்கு சம்பளம்? வீட்டுக்குப் போம்! என்றார்.
நாயை அடிப்பானேன், XXXXயைச் சுமப்பானேன் – என்ற பழமொழிக்கு இணங்க வீட்டுக்கு வந்தேன்.
சிரித்துக் கொண்டே மிடுக்காகச் சொன்னார் எடிஸன்.
மானேஜர் அய்யா, ஆல்வாவுக்கு அல்வா கொடுத்த கதை இது
xxxx
நான் விஞ்ஞானி அல்ல; பணமே எனக்குக் குறி
ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிஸனைப் பாராட்டி ஒரு கட்டுரை , ஒரு பத்திரிக்கையில், வெளியானது. அதை நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.
“அந்தக் கட்டுரை முழுக்க தப்பு. நான் விஞ்ஞானி அல்ல. நான் ‘பக்கா பிஸினஸ்மேன்’; வியாபாரி; எனக்கு எல்லாம் ‘துட்டு’ பற்றியே சிந்தனை; ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு வெள்ளிப்பணம் கையில் வரும் என்று எண்ணித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன். பாரடேயை வேண்டுமானால் விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் எனக்குப் பணம் சம்பாதிக்க நேரமே இல்லை என்பவர். எனக்கு காசேதான் கடவுள்– என்றார் ஆல்வா
xxxx
தந்திரக்கார எடிஸன்!!!
தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு பங்களா வைத்திருந்தார். அது கோடை காலத்தில் தங்கும் விடுதி; எல்லோருக்கும் பெருமையாகச் சுற்றிக் காண்பிப்பார். அங்கே எல்லா நவீன வசதிகளும் , அதிசயமான கருவிகளும் இருக்கும். ஒரு முறை ஒரு பார்வையாளர் கூட்டம் வந்தது. எல்லோரையும் சுற்றிக் காண்பித்தார். தோட்டத்தின் வழியாக அடுத்த பகுதிக்குச் செல்ல வேண்டியி ருந்தது. அங்கு ஒரு கம்பியால் மறைக்கப்பட்ட தள்ளும் கேட் (வாசல்) இருந்தது. ஒவ்வொருவரும் அதைத் தள்ளினால் அது நகரும்; ஒவ்வொருவராக செல்லலாம். அதைத் தள்ள மகத்தான சக்தி தேவையாக இருந்தது.
ஒருவருக்கு வியப்பு ; ஐயா எடிசனாரே! வீடு முழுக்க அதி நவீன கருவிகளை வைத்திருக்கிறீர்; இங்கு மட்டும் நாங்கள் மூச்சுப் பிடித்துத் தள்ள வேண்டிய கம்பி கிராதி கேட் வைத்திருக்கிறீரே என்ன காரணமோ? என்று வினவினார்.
தந்திரக்கார எடிஸன் சிரித்துக்கொண்டே செப்பினார்:
நீங்கள் ஒவ்வொருவரும் மூச்சுப் பிடித்து அதைத் தள்ளி உள்ளே போகும்போதும் எட்டு காலன் தண்ணீர் என் (தோட்டத்து) வீட்டில் பாயும் என்றார்.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஆங்கில இலக்கியம்
கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!
ச.நாகராஜன்
கடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன். சற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா! பெரிய அலை ஒன்று வந்தது.
நான் எழுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது! சரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா? நிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன?
அற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர் ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்.
ஒரு பெண்ணின் மனதும் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது. அவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது. பெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும் அது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா! Lasting Record Stands! கவிதையைப் பார்ப்போம் வாருங்கள்!
A Name in the Sand By Hannah Flaff Gould (1789-1865)
[Born in Lancaster, Mass., 1789. Died at Newburyport, Mass., 1865.]
ALONE I walked the ocean strand;
A pearly shell was in my hand:
I stooped and wrote upon the sand
My name—the year—the day.
As onward from the spot I passed, 5
One lingering look behind I cast;
A wave came rolling high and fast,
And washed my lines away.
And so, me thought,’twill shortly be
With every mark on earth from me: 10
A wave of dark oblivion’s sea
Will sweep across the place
Where I have trod the sandy shore
Of time, and been, to be no more,
Of me—my day—the name I bore, 15
To leave nor track nor trace.
And yet, with Him who counts the sands
And holds the waters in his hands,
I know a lasting record stands
Inscribed against my name, 20
Of all this mortal part has wrought,
Of all this thinking soul has thought,
And from these fleeting moments caught
For glory or for shame.
ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர். அவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.
எப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம்! ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார். என்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.
கடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.
வெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்படலாமா, என்ன? செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்!
ஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார். பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.
நம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands!
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am not a scientist! I am business man!
Thomas A Edison never forgot his role as a business man. The profit motive was an essential part of his temperament. Once he said practically to a friend referring to a newspaper article which discussed him as a scientist, That is wrong. I am not a scientist. I am an inventor. Faraday was a scientist. He didn’t work for money, he said he hadn’t time. But I do. I measure everything I do by the size of a silver dollar. If it doesn’t come up to that standard, then I know it is no good.
Xxx
Cunning Edison
The late Thomas A Edison had a very beautiful summer residence in which he took great pride. One day he was showing his guests about, pointing out all the various labour saving devices on the premises. Turning back toward the house it was necessary to pass through a turn style which led on to the main path. The guests soon found out that it took considerable force to get through this device. Mr Edison, one of his guests asked, how is it with all these wonderful modern things around, you still maintain such a heavy turnstile?
Said Mr Edison, his eyes lighting up with laughter, Well, you see, everyone who pushes the turnstile around pumps eight gallons of water into the tank on my roof.
Xxx
Sacked for Killing Rats!
I got fired twice, said Edison. The first time was when I was a telegraph operator. It was my fault, alright, but I got so interested in the dinged machine and its workings that I began to see how I could improve it. But I forgot all about the messages that were coming over the wire, and I left a lot of messages unsent and undelivered. Of course, they discharged me and I didn’t blame them, he added.
Then he laughed again, I got a job in an office, and there were a fearful lot of rats; terribly old office, you know. I got up a thing that killed them like flies— the same with cockroaches. The floor used to be covered with dead roaches and they fired me for that.
Thomas A Edison, sacked twice, business man Xxx Subham xxx
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கம்பன் தனது இராமகாதையில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான். ஒருவனுக்கு எவ்வளவோ பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளுமிடத்தினால்தான் அதன் மகிமை புரியும். காளிதாசன் உலகப் புகழ்பெற்றதற்கு, அவன் கையாண்ட 1200 உவமைகள் மட்டும் காரணம் அல்ல. அதை அவன் பொருத்திக் காட்டிய இடத்தால்தான் அவனை ‘உவமைக்கோர் காளிதாசன்’ என்று உலகம் புகழ்கிறது. அதுபோலக் கம்பனும் உரிய இடத்தில், அரிய வழக்குகளைக் காட்டுவதன் மூலம் இராமாயணத்துக்கு மெருகூட்டினான்.
‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ என்ற பழமொழியை நாம் அறிவோம். அதைப் பயன்படுத்துகிறான் கம்பன்.
இதோ அந்தப் பாடல்
அருங்கடல் கடந்து இவ்வூரை அள் எரி மடுத்து வெள்ளக்
கருங்கடல் கட்டி மேருக்கடந்து ஒரு மருந்து காட்டி
குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்
பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப்பெற்றி
பொருள்
“கடத்தற்கரிய கடலைக் கடந்தேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்தேன்; கடலுக்கு அணை/பாலம் கட்ட உதவினேன்; மேரு மலையைக் கடந்து சென்று சஞ்சீவி மருந்தினைக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்து உனக்கு இணையான குரங்கு இந்த உலகில் இல்லை என்று இராமன் சொன்னான். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் இராமனுக்குச் செய்யும் தொண்டு கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆயிற்றே!”
இது மாயா சீதைப் படலத்தில் (யுத்த காண்டம்) வரும் பாடல்; அதாவது இந்திரஜித், சீதையைப் போல் ஒரு மாய உருவத்தைச் செய்து, அதை அனுமன் முன்னிலையில் கொணர்ந்து வெட்டியபோது, அனுமன் புலம்பிய புலம்பல் இது.
‘கோட்டம்’– என்ற சொல்லுக்கு ‘வாசனை தரும் பொருள்’ என்று அர்த்தம். இங்கே கடல் என்ற சொல்லுடன் வருகையில் அது பழமொழியை ஒட்டியே வந்தது.
இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய ஓரிரு பாடல்களிலும் அனுமனின் சாகசச் செயல்கள் அனைத்தையும் கம்பன் பட்டியலிடுவது, அனுமன் துதி/தோத்திரம் போல அமைந்துளது.
அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவதற்குக் காரணம், அவன் ஒரு பத்திரிக்கையாளன் போல – journalist ஜர்னலிஸ்ட் போல- எழுத, பேச, சொல்ல வல்லவன். சீதை எங்கு இருக்கிறாள் என்று அறிய பல்லாயிரம் குரங்குகளை எண் திசைக்கும் ஏவிய இராமன், சீதை பற்றிய செய்திக்காக காத்திருந்தபோது, அனுமன் வந்தவுடன் சொன்ன செய்தி ‘கண்டனன் சீதையை’ என்பதாகும். அத்தைப் பாட்டி கதை சொல்லுவது போலச் சொல்லாமல், பத்திரிக்கை தலைப்பு போல ‘கண்டேன் சீதையை’ என்றான். இராமன் அவனை கட்டி அணைத்தான். இது பழைய பாடல். அதை இப்போது அனுமன் நினைவு கூறுவதன் மூலம் அந்தக் காட்சியும் அதன் முக்கியத்துவமும் மீண்டும் வருகிறது;
துஞ்சினாள் என்றும் சொல்லத்தோன்றினேன் தோற்றம் ஈதால்
பொருள்
சீதையே! சிறந்த வில்லாற்றல் கொண்ட இராமபிரான் வஞ்சிக் கொடி போன்ற உன்னை எங்கும் காணாது, தன் உயிரையே மறந்து உன்னைத் தேடியபோது, அவன் மனம் மகிழ்வுறுமாறு, ‘அழகிய சொல் உடையாளைக் கண்களால் கண்டேன்’ என்ற நல்ல செய்தியைக் கொடுத்தேன். இப்போது நானே போய் அரக்கன் தாக்கியபோது சீதை செத்துவிட்டாள் என்று சொல்லப் போகிறேனே; இதற்காகவா பிறந்தேன்.
இது சீதையின் மாயத் தோற்றத்தை இராவணன் புதல்வனான இந்திரஜித் வெட்டியபோது பாடிய பாடல்.
ஆக, அனுமனுடைய சாகசப் பட்டியலுடன், இங்கே கம்பன் கவிநயத்தையும் ரசிக்க முடிகிறது.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
அறிவியல் துளிகள் 403 (எட்டாம் ஆண்டு முப்பத்தொன்பதாம் கட்டுரை)
ஒபிஸிடி கோட் – 1
ச.நாகராஜன்
(குறிப்பு : இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.இங்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது)
அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இப்போது உபவாசத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நொறுக்குத் தீனிகள் கிடையாது; நினைத்தபடி சாப்பாடு கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு திடீரென ஏற்படக் காரணம் என்ன?
ஒபிஸிடி கோட்! (The Obesity Code) 2016ல் வெளியாகி இன்றைய ட்ரெண்டில் முன்னணியில் நிற்கும் புத்தகம் இது. இதை எழுதியவர் டாக்டர் ஜேஸன் பங் (Jason Fung).
உடலின் எடை கூடி, பருமனாக இருக்கும் பெண்மணிகளும் ஆண்களும் தங்களின் உடல் பருமனைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமே. வெளியில் சகஜமாகப் போக முடியாது; எதையும் நினைத்தபடி உண்ண முடியாது; அதிலும் நீரிழிவு நோய்- டயபடீஸ் 2 – இருந்தாலோ அவ்வளவு தான்; ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்! இவர்களுக்கெல்லாம் வரபிரசாதமாக இந்த டிரெண்ட் புத்தகம் அமைந்துள்ளது. பல பழைய கால பத்தாம்பசலிக் கொள்கைகளைத் தூக்கி எறிகிறது இந்தப் புத்தகம்.
இப்போதைய கொள்கையின் படி கலோரிகளை வைத்து உடல் எடையைப் பற்றிய அளவை நாம் கண்காணிக்கிறோம். 20 வயதுடைய ஒரு இளைஞனுக்கு அன்றாட தேவை 2800 கலோரிகள். 60 வயதுடைய ஒருவருக்கு அன்றாட தேவை 2496 கலோரிகள். அன்றாடம் நாம் உண்ணும் உணவை இதன் அடிப்படையில் நாம் தேர்வு செய்கிறோம்.
100 கிராம் காரட்டில் இருப்பது 35 கலோரிகள். 100 கிராம் பீன்ஸில் 117 கலோரிகளும், 118 கிராம் வாழைப்பழத்தில் 106 கலோரிகளும், 100 கிராம் தயிரில் 156 கலோரிகளும். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 116 கலோரிகளும் உள்ளன. இப்படி கணக்கிட்டு நமது அன்றாட உணவை நாம் சாப்பிடுகிறோம் – உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க.
உள்ளே நாம் ஏற்கும் கலோரிகளைப் போல அதை அன்றாடம் செலவழிக்கவும் வேண்டும். இல்லையேல் அது கொழுப்பாக மாறி எடையை ஏற்றும். ஆக நடைப்பயிற்சி 28 நிமிடம் மேற்கொண்டால் 110 கலோரிகளையும், ஓடினால் 10 நிமிடங்களில் அதே கலோரிகளையும் இழக்கிறோம். ஆக இந்த உடல் இயக்கம் நமது அன்றாடத் தேவை ஆகிறது. இப்படி உடல் இயக்கம் மூலமாக நாம் இழக்கும் கலோரிகளால் குறையும் எடை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்கிறார் பங். ஆகவே அவரது அறிவுரை, முக்கியமாக உங்கள் உடலின் இன்சுலின் அளவைப் பாருங்கள் என்பதே! தொடர்ந்து தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக உடலில் இன்சுலின் அளவு மிகவும் ஏறி விடும்.
ஆகவே ஹார்மோனல் இம்பாலன்ஸ் எனப்படும் ஹார்மோன்களின் சமச்சீரின்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். முக்கியமாக ஹார்மோன்களில் இன்சுலின் அளவை நாம் கண்காணித்து அதன் சமச்சீர்தன்மையை பராமரித்து வர வேண்டும். இதற்கான வழியாக, இடைவெளி விட்டு மேற்கொள்ளும் உபவாசத்தை – Intermittant Fastingஐ – மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார் டாக்டர் பங்.
உணவை உட்கொள்ளும் போது நமது உடலில் உள்ள இன்சுலினின் அளவு ஏறுகிறது; நமது உடலில் உள்ள திசுக்களைச் சக்தி பெறச் செய்கிறது. நமக்குத் தேவையில்லாத அதிகப்படி சக்தியானது க்ளைகோஜனாக மாறி நமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.
உடனடியாகத் தேவைப்படும் அதிகப்படி சக்தி தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சக்தி தேவை என்ற நிலையில், க்ளைகோஜன் சக்தியைத் தருகிறது.மற்றவை கொழுப்பாக மாறுகிறது.
இந்த ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை இன்றைய நமது சூழ்நிலையின் காரணமாகவே ஏற்படுகிறது. உணவு வகைகளில் நமது விருப்பத் தேர்வுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளிலும் கேன்களிலும் அடைக்கப்படும் உணவு வகைகள், மிகுந்த அளவில் ஏற்றப்பட்ட சர்க்கரைச் சத்துக்களுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவை கட்டுப்பாடற்ற சந்தையில் கிடைக்கின்றன; அவற்றை ஆவலுடன் அவ்வப்பொழுது சாப்பிடுவதோடு நொறுக்குத் தீனியாக வேறு ஏராளமானவற்றைச் சாப்பிடுகிறோம். விளவு பருமனான உடல்; அத்துடன் டயபடீஸ்-2 போன்ற வியாதிகள்!
இத்துடன் இன்றைய வாழ்க்கை முறையிலான வேகம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு எந்த வித உடல் இயக்கமும் இல்லாமல் டி.வி முன்னால் உட்காரும் வாழ்க்கை முறை வேறு சேர்ந்து கொள்கிறது!
இதைப் போக்கும் வழி தான் ஒபிஸிடி கோட்! உடல் பருமனை நீற்கும் வழி முறை!
டோரொண்டோவில் இண்டென்ஸிவ் டயடரி மானேஜ்மெண்ட் ( தீவிர உணவுத்திட்ட நிர்வாகம்) என்னும் சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் பங் தன்னிடம் சிகிச்சைக்காக வருவோரிடம் பல்லாண்டுகளாகச் சோதித்து ஒரு புதிய வழிமுறைக் கண்டுபிடித்துள்ளார்.
உடல் பருமனை அறிவியல் ரீதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை.
இதைத் தான் ஒபிஸிடி கோடில் – உடல் பருமனைக் குறைக்கும் வழி என்ற தனது புத்தகத்தில் – அவர் தந்துள்ளார்.
சுருக்கமாக அவரது வழிமுறையைப் பார்ப்போம் ..
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
க்ரோவர் ஸாண்டர்ஸ் க்ராண்ட்ஸ் (பிறப்பு 5-11-1931 மறைவு 14-2-2002 – Grover Sanders Krantz) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மானிடவியலர் (ஆந்த்ரோபாலஜிஸ்ட்). மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். பிக் ஃபுட் (Big Foot) எனப்படும் பிரம்மாண்டமான புராண கால வரலாற்று பற்றிய ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அவர் அந்த மனிதனைப் பார்க்கவில்லை என்றாலும் அதைப் பார்த்ததாகக் கூறிய பலரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தார்.
வாழ்நாளின் இறுதியில் எட்டு மாதங்கள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புற்றார். தனது மரணத்திற்குப் பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் தனது நண்பரான டேவிட் ஹண்டிடம் வெளியிட்டார். “எனது உடலைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனது நாயும் உடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.
அவர் இறந்தவுடன், அவர் விருப்பப்படி அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யப்படவில்லை. அது மானிடவியல் பிரிவுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது பதப்படுத்தப்பட்டு மீண்டும் 2003ஆம் ஆண்டு நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரிக்கு அனுப்பப்பட்டது. அவரது விருப்பப்படி அவரது நாய்கள் க்ளைட், இக்கி, யாஹூ ஆகிய மூன்று நாய்களும் பச்சை பெட்டியில் வைக்கப்பட்டன.
2009இல் அவரது எலும்புக்கூடு கலை நோக்குடன் அழகுற மேம்படுத்தப்பட்டது. அவரது நாயான க்ளைடின் எலும்புக்கூடும் அப்படியே செய்யப்பட்டது. இரு எலும்புக்கூடுகளும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAMIL CROSS WORD
இந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Nitisataka 34,35,36
The lion, though young, attacks the mighty elephant The energy of the noble minded man proceeds from his natural disposition, not from his youth. It is the nature of the brave to aspire for the highest even when young. Indeed, age is no criterion for greatness.
Age is no bar for attaining name and fame. This is proved by Hindu mythological characters such as Dhruva, Prahlada, Markandeya and Vedic boys like Nachiketas , Aruni and Satyakama Jabala . Great philosophers hers like Shankara attained fame when they were young. Tamil saint Sambandar composed poems when he was 3 years old.
Age is No Bar -Authors who wrote before they were 30
Japanese Novelist Abe Kobo started to write at the age of 24. He won a prize when he was 26
Nigerian novelist Chinua Achebe published his first novel when he was 28.
English fantasy writer Douglas Adams published when he was 27.
English essayist, poet and playwright Joseph Addison
American poet, novelist, screenwriter James Agee published his first book when he was 25.
Israeli novelist and Nobel laureate SY Agnon published his first book When he was 20.
Ghanian playwright, poet and novelist AMA ATA Aidoo published her famous play when she was 28
American poet, short story writer and b Novelist Conrad Aiken became famous with his first collection of poems when He was 25
xxxxx
Wealth is more important than Virtues!
Two great poets emphasize the importance of wealth in their books.
I give below translation of the same couplets by two authors.
Wealth of kindliness is real wealth. Material wealth is possessed by even the basest— Kural 241
The best of all possessions is the wealth of compassion For the meanest of men too possess worldly wealth- Kural 241
As those without riches can have no enjoyments in this world so also are those without the grace of compassion denied the blessings of the world above— Kural 247
Even as happiness in the world depends wholly on material possessions Happiness in the world beyond will surely depend upon compassion-Kural 247
Both Bhartruhari and Tamil poet Tiruvalluvar agree on the point that material possessions account was for happiness on this earth..
Both the poets say that even the basest of men possess wealth.
In another couplet Tiruvalluvar in his Tirukkural say
The demon of poverty, when he overtake s one, the joys of this life As well as the next one are lost to him -1042 Infernal poverty blasts the joys of the earth and of heaven- 1042
Our noble birth may go to the lower regions; our virtues may perish; our moral character may fall as if from a lofty mountain; our family may be consumed by fire; a thunderbolt may strike our might as it were an enemy; let us keep our money, for without this all the collected virtues are but a heap of grass.
If a man be wealthy, he is of good family he is wise, he is learned in scriptures, he is virtuous, eloquent, handsome. All the virtues attach themselves to gold.
यस्यास्ति वित्तं स नरः कुलीनः स पण्डितः स श्रुतवान्गुणज्ञः । स एव वक्ता स च दर्शनीयः सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥
The importance given to the rich people has not changed from the ancient times; we see the same state of affairs even today. Money power boosts one to higher positions and higher awards.
TAGS- age no bar, no criterion, Niti sataka 34,35, 36, wealth
சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.
ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு
ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
மாற்றம் காண்பதுண்டோ?”
என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை
xxx
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’
மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர் தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது
பர்த்ருஹரி சொல்கிறார்,
நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்; பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!
பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.
வள்ளுவன் மொழியும் மற்றுமொரு குறளும் நோக்கற்பாலது
இன்மை என ஒருபாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் -குறள் 1042
வறுமை என்னும் கொடிய பாவி ஒருவனைப் பற்றிக்கொண்டால் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் தொடர்ந்து வரும்– என்பது வள்ளுவன் வாய்ச்சொல்.
பணம் இருந்தால்தான் மற்ற நல்ல காரியங்களை செய்ய முடியும்; அது இல்லாவிடில், அதை நாடித் தேடி ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிடும் என்பது சொல்லாமலே விளங்கும்
பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-
யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ
ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ
ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ
ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36
பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.
இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.
சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120
பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்
பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்
ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்
செத்த பிணத்திற் கடை- பாடல் 281
அப்பர் செப்பியது,
மாடுதானதில்லெனின் மானுடர்
பாடுதான் செல்வாரில்லை- (அப்பர் தேவாரம், கொண்டீசரம்-3) என்று மாடு (செல்வம்) இல்லாதவர் படும் பாட்டைப் பாடுவார் அப்பர்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர்- என்று திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணியில் விளம்புவார்.
xxx
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே
இசை: கே.வி .மஹாதேவன்
பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்
பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே (பணம்)
ஒன்றும் தெரியாத ஆளானாலும் பணமிருந்தாலே
அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்
பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)
இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)
உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)