கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு பற்றி அருணகிரிநாதர் (Post No.15,489)

Written by London Swaminathan

Post No. 15,489

Date uploaded in Kumbakonam, India –  12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 42

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 42

***

ஆதிமக மாயி யம்பை … முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும்,

அம்பாளும்,

தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது … தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார்

தந்த குமரேசா … பெற்றருளிய குமாரக் கடவுளே,

***

திருட்டுப் புலவர்கள் மீது வசைமாரி

கருடன் மிசை வரு கரிய புயல் என … கருடன்மேல் வருகின்ற

கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும்,

கமல மணி என உலகோரை … தாமரை (பதும நிதி), சிந்தாமணி

நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி … கூச்சலிட்டு,

பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில்

மிக்க கருத்துடன்

முது மொழிகளை நாடி … பழைய செஞ் சொற்களைத் தேடியும்,

திருடி ஒரு படி நெருடி … திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து

அப்பாடலில் அமைத்தும்,

அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி … அறிவில்லாத

மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும்,

திரியும் அவர் சில புலவர் மொழிவது … திரிகின்றவர்களாகிய சில

புலவர்கள் கூறுவது,

சிறிதும் உணர் வகை அறியேனே … சற்றேனும் உணரும்படியான

வழியை நான் அறிந்திலேன்.

வருடை இனம் அது முருடு படும் … மலை ஆடுகளின் கூட்டமும்,

கரடு முரடு உள்ள

அகில் மரமும் மருதமும் அடி சாய … அகில், மருதம் ஆகிய

மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி,

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய … மதுரம் என்ற

ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி,

வகை வகை குதி பாயும் … பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற

குருடி மலை உறை முருக … குருடி மலையில்* வீற்றிருக்கும்

முருகனே,

குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் … சிறந்த வட மலை

ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும்,

குமர குருபர திமிர தினகர … குமரனே, குருபரனே, அஞ்ஞான

இருளுக்கு ஓர் சூரியனே,

குறைவில் இமையவர் பெருமாளே. … குறைவில்லாத தேவர்களின்

பெருமாளே.

குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.

***

பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள

செண்டு ஆடி அசுரர்களை … தாமரை மலரில் வாழும் பிரமனும்

மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை

நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து,

ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும்

பெருமாளே. … யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும்

தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

***

முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்ட கதை

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் … கொங்கு நாட்டில்

உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*)

அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே …

(அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு … யானைமுகப்

பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற

கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. … கொங்கணகிரி

என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது. திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,

வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று

அருணகிரியார் வேண்டுகிறார்.

***

மனத்தின் போக்கு :அருணகிரி வருத்தம்

பாட்டி லுருகிலை … மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து

உருகுதல் இல்லை,

கேட்டு முருகிலை … பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும்

உருகுதல் இல்லை,

கூற்று வருவழி பார்த்து முருகிலை … யமன் வரும் வழியைக்

கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை,

பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை … கஷ்டங்களை தினமும்

அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை,

தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை …

நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ

இன்பத்தை விரும்புவதும் இல்லை,

நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை … நுனி நாக்காலாவது

இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை,

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது … பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே,

நல் வழிபோக மாட்டம் எனுகிறை … நீ நல்ல வழியிலே

போகமாட்டேன் என்று சொல்கிறாய்.

கூட்டை விடுகிலை … உடல் சிறையாகிய இந்தக் கூட்டை

விடுகின்றதாக நீ இல்லை,

ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை … ஏட்டில் உனக்கென

எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை,

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் …

உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் – இதை நீ கேட்பாயாக.

வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் …

அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான்.

அடியார்க்கும் எளியனை வாழ்த்த … அடியார்களுக்கு அவன்

வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால்

இருவினை நீக்கு முருகனை மருவாயோ … நல்வினை தீவினை

இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக.

ஆட்டி வடவரை வாட்டி … உலகையே ஆட்டி வைப்பவரான

சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,

அரவொடு பூட்டி திரிபுர மூட்டி … வாசுகி என்ற பாம்பை நாணாகக்

கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி,

மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி … யமனுடைய ஆணவம்

அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி,

மதனுடல் திருநீறாய் ஆக்கி … மன்மதனுடைய உடலைச்

சாம்பலாகும்படி எரித்து

மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி …

தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி,

மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும் … வேதவல்லி சரஸ்வதி

தேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும்,

உமையவன் அருள்பாலா … உமாதேவியின் கணவருமான

சிவபிரான் அருளிய பாலனே,

சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி … திருப்பாசுரம்

எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக

ஓட்டியும்,

அழல்பசை காட்டி சமணரை … நெருப்பிலே இட்ட ஏடு பச்சை

நிறத்துடன் விளங்கும்படி காட்டியும்,

சீற்ற மொடுகழு வேற்ற … (வாது செய்து தோற்ற) சமணர்களைக்

கோபித்துக் கழுவேற வைத்தும்,

அருளிய குருநாதா … அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த)

குருநாதனே,

தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை … பரிசுத்தனே, என் மனம்

விருப்பத்துடன் உன்னை

ஏத்த அருளுட னோக்கி அருளுதி … துதிக்கும்படி நீ

திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும்.

தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே. … தீர்த்தமலை**

நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள்

தேவயானையின் பெருமாளே.

தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷாயணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த சரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் – கந்த புராணம்.

** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.

***

கோம்பை நாய்கள் பற்றி

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ

என ஓசை … (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த

திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன்

மருகோனே … அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம்

ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய

மருகனே,

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி

திகழ் சோலை … பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,

பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன்,

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்

பெருமாளே. … அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்

இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.

கோம்பை – செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.

** பூம்பாறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.

கோம்பை அல்லது பாலிகர் நாய் என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனமாகும் பாரம்பரியமாக காவல் மற்றும் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் .

கோம்பை நாய்கள் அகலமான, குட்டையான, தசைநார், சக்திவாய்ந்த மற்றும் தடகள நாய்களாக விவரிக்கப்படுகின்றன, அவை பொதுவாக வெளிர் பழுப்பு முதல் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் மெல்லிய, கருப்பு, முகமூடி போன்ற முகவாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மிகவும் புத்திசாலியாகவும், தங்களுக்குப் பரிச்சயமானவர்களிடம் மிகவும் விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கும் .

தேனி மாவட்டத்தில் தோன்றிய இந்த இனம் கோம்பை நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது .

–subham—

Tags- கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு, முதலை , சுந்தரர் மீட்ட கதை, அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 42

Four Crores verses in one day?! (Post No.15,488)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,488

Date uploaded in Kumbakonam, India – 12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Four Crores verses in one day?! 

S. Nagarajan 

The Tamil literature is a vast treasure, and it is not possible to learn all this literature in one lifetime.

Avvaiyar is a great female poet of Sangam period. She is belonging to the first century BCE.

 She was respected by one and all in the Tamil country. She travelled widely from one point of the country to the other point inspiring people with her fantastic poems.

 All the kings were delighted to have Avvaiyar in their court. They used to ask several questions and used to get amazing answers.

 Once Avvaiyar went to Pandiyan kingdom and the king welcomed her with respect.

 When the court assembled one mischievous person asked Avvaiyar, “You are great! Could you compose four crores’ poems in one day?”

 All were stunned on hearing this mischievous question.

 But Avvaiyar laughed, “Why not? I will recite four crores poem tomorrow.”

 Everybody was worried how Avvaiyar could compose four crores’ verses in one day.

Avvaiyar took rest and there was no action on her part to compose any poem.

 Next day when the court assembled the King asked, “Madam, have you got four crores’ poems? There is no cart to carry all the four crore palm leaves contain the verses?’

 Avvaiyar unfolded her small bag and took one palm leaf, and said, “This is enough to answer the question raised by the person yesterday.”

All were eagerly looked her face.

She started reading her poem from the palm leaf.

The poem consisted of four lines.

She read one by one.   

Not stepping into the place of those who is not respecting you is equals to a crore.

 Not taking food in those persons’ home who have not invited you with whole heart is equals to a crore.

 To get a friendship of person from a noble lineage even by giving one crore equals to a crore.

Not allowing your tongue swerving from truth even one is offering crores and crores to you equals to a crore.

 Everyone was wonderstruck on hearing this four crores poem. The person asked for four crores only. But Avvaiyar used many crores in her verse and the king was so pleased that he bows down before Avvaiyar.

 Even to this day, the four-crore poem is very famous in Tamil World. And Avvaiyar is being honored by every Tamil speaking people till this day.

 In 1991, a 20.6-kilometer-wide crater in Venus was named after her by the international Astronomical Union.

 Her famous quote, “What you have learned is a mere handful; What you have not learned can be compared to the size of the world” is included in NASA’s Cosmic Questions Exhibit.

 **

Two Famous Shiva Temples in Kumbakonam that I Visited (Post No.15,487)

STORY OF KUMBAKONAM IN PICTURES; ALL PHOTOS TAKEN BY LONDON SWAMINATHAN

Written by London Swaminathan

Post No. 15,487

Date uploaded in Kumbakonam, India –  11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I was fortunate to have good darshan at Kumbesshwar Shiva temple and Nageswara Shiva temple in Kumbakonam. I visited Kumbeshwar temple for the fourth time in the past four years. This time I went there specifically to thank the Lord and the priest for retrieving my lost passport. During my visit in 2025, my British passport was pickpocketed by someone. Finding no money in the passport bag, he threw it into the temple flower heap. The priest saw that while clearing the flowers and gave it to his wife to find the owner. She found me after a great effort and spending much time. After a few hours of phoning people, she googled swaminathan from London, and all my books appeared in google and amazon. Then she found the publisher Pustaka.co.in and phoned the proprietor. He is a good friend of my brother in Bengaluru. When my brother phoned me the good news, I booked a taxi to and from Chennai and reached Kumbakonam just before midnight. I thanked the priest and his wife and travelled back to Chennai to catch my flight to London. When I gave some money as a token of thanks, they refused to take it and asked me to donate it to the temple. It was almost midnight and the temple was closed. This time on 5-3-2026, I went to Kumbeshwar  temple and put the money in the temple Hundi thanking both lord Shiva and the priest family.

Kumbheswar is the God who gave the name to the town. Here are the salient features:

The Adi Kumbeswarar Temple in Kumbakonam is at least  1400-year-old Shiva temple ;it is the site for the Mahamakam Festival held every 12 years. The big Mahamakam tank is near the temple.

Temple features a unique, sand-mixed lingam created by Lord Shiva and houses a rare, ancient stone Nagaswaram

  • Deity: Lord Shiva as Adi Kumbeswarar and Parvati as Mangalambigai Amman.
  • Significance: It is the primary temple in Kumbakonam, linked to the pot of nectar in Hindu mythology.
  • Features: It showcases Chola and Nayak architecture, including a 1400-year-old legacy.
  • Cultural Reference: it has rare statue of Jvaradeva/Jurakareśvara and a stone Nagaswaram.
  • The Siva Linga is slightly tilted at the top towards left.
  • It has four towers in four directions; The tallest is the eastern tower, with 11 stories and a height of 128 feet (39 m) .
  • The sixteen-pillared hall built during the Vijayanagara period has all the 27 stars and 12 zodiacs sculpted in a single stone.
  • During cosmic dissolution, a pot containing nectar (Amirta) was floating and lord Siva came in the disguise of a hunter and pierced the pot with an arrow, thereby making the nectar to flow through it’s nostril on all sides. Hence this place is named Kudamooku (kuda – pot; mooku – nostril or tip). Kudam in Sanskrit is Kumbham. The Kumbeswarar (Linga) is on the form of conical lingam. That gave the name Kumbha konam.

***

Special Features of Nageshwar Shiva Temple

The presiding deity is revered in the 7th-century Tamil Tevaram. The temple is one of the earliest of all Chola temples. Shiva in the guise of Nagaraja, the serpent king.

Sun rays fall directly on the deity during April-May. 

WHITE FIGURE- PADAKACHERI SWAMI WHO RENOVATED THE TEMPLE IN 1920S.

 

Key Details of Nageshwar Temple, Kumbakonam:

  • Deity: Lord Shiva is worshipped as Nageswaran, Naganathar, or Koothandavar.
  • Architecture: Known as Kudandai Keezhkkottam, the temple is a masterpiece of Chola engineering, with the main sanctum constructed in the shape of a chariot.
  • Astronomy & Light: The temple is designed so that sun rays fall on the central lingam for three days in the Tamil month of Chithirai (April/May).
  • Significance: It is one of the 12 temples associated with the Mahamaham festival.
  • Legend: It is believed that the serpent king Adisesha worshipped Shiva here. Another legend features kings and sages worshipping here to overcome obstacles.
  • Specialty: It is a major spot for relieving Rahu dosham, with special prayers held on Mondays and Thursdays. 

The temple complex is famous for its intricate carvings and its role as a key historical site representing the Chola dynasty’s architectural prowess.

The temple has numerous shrines, with those of Nageswarar, Pralayamkathanathar and Periyanayagi being the most prominent..

This place has been referredto  in Tevaram written by Saint Tamil poet of 7th Century CE, Thirugnana Sambanthar. So it is older than 1400 years.

The temple had been a centre of learning as seen from the inscriptions in the temple. The inscriptions indicate specific subjects like Purvamimansa styled as Pravahakarma. There were also provisions made for feeding and maintaining for teachers and students

–subham—

Tags-  Famous Shiva Temples in Kumbakonam, Kumbeshwar, Nageshwar, Stone Nadaswara, Stone Chariot, Mahamakam Tank, Festival, Adishesan, Snake worship, PICTURES BY LONDON SWAMINATHAN

சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! (Post No.15,486)

Written by London Swaminathan

Post No. 15,486

Date uploaded in Kumbakonam, India –  11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part41

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 41

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் … இரை

கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு,

குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப்

பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி … குக்குக்

குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி,

சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி … குறிப்புடன் கொக்கரிக்கின்ற

சேவலைக் கொடியாகக் கொண்டவனே,

****

தர தர தர தர தர  திருப்புகழ்

சடிலதர விடதர … ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால

விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,

பணிதர தரபரசுதர … பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும்,

மேன்மையான மழுவைத் தாங்கியவரும்,

சசிதர சுசிதர … சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே

உருவாக நிற்பவரும்,

இத தமருக மிருக தர … இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும்,

மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும்,

வனிதர சிரதர … பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும்,

பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும்,

பாரத் தரணிதர … சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும்,

தநுதர … மேருமலையையே வில்லாகத் தரித்தவரும்,

வெகு முககுல தடினி தர … ஆயிரம் முகங்களை உடைய சிறந்த

கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும்

சிவ சுத … ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே,

குண தர … அரும் குணங்களை உடையவனே,

பணி சயில … நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி

இருப்பவனே,

விதரண … தயாள மூர்த்தியே,

தருபுர சசிதரு … கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி

மகள்

மயில்வாழ்வே … மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக

இருப்பவனே,

***

கொல்லிப் பாவை கதை

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண

வல்லி மணவாளா … முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,

அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே,

பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட

துன்னு கொல்லி மலை நாடா … வழியில் அமைக்கப்பட்டிருந்த

மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே,

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை

வல்ல பெருமாளே. … பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி

இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்செலுத்த வல்ல பெருமாளே.

** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.

*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.

***

பெண்களின் தழை உடை

தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும் … சோர்வடையச்

செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு

வேதாங்கங்களாகி*1,

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் … பலப்பல

நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம்

ஆகியவற்றில் தங்குவதாய்,

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி … பெருகிவரும் தமிழ்

மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி,

பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே …

பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி

நின்ற தருள்வாயே … எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ

அருள்வாயாக.

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ … கல்லும்

உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம்

அடைந்திருந்த பசுக்கள்

அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் … அழகிய புகும்

இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்

மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை …

(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்

கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா … கை குவித்துத்

தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று … தினைக்

கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,

கொள்ளைகொளு மாரன்கையலராலே … உயிரைக் கொள்ளை

கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,

கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த … தழைகளைக்

கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,

கொல்லிமலை மேனின்ற பெருமாளே. … கொல்லிமலை*4 மீது

நின்றருளும் பெருமாளே.

(*1) ஆறங்கம் – வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை: சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் – இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.

(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு. அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும். வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.

***

ஞான மலை எங்கே இருக்கிறது மேலும் ஒரு புதிர்

திருப்பதியில் முருகன், சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனத்தில் முருகன் என்றெல்லாம் புதிர் போட்ட அருணகிரிநாதர் ஞானமலை  குறித்தும் புதிர் போடுகிறார்.

நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்

பாலா … தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே,

நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்

பெருமாளே. … நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.

ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

***

அருணகிரிக்கு முருகன் கொடுத்த உயிர் பிச்சை

தடிநிகர் அயிற்கடாவி … மின்னல் போன்ற ஒளிவிடும்

வேலாயுதத்தை வீசி

அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி

முருகோனே … அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய

ஜோதி முருகனே,

எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத … என்

மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை

உடையவனே,

எழுதரிய பச்சை மேனி உமைபாலா … எழுதுதற்கு அரியதான

மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே,

இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக … தேவர்கள்

துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின்

மணவாளனே,

இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. … விளங்குகின்ற

இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.

அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.

–subham—

Tags- சேவல், அருணகிரி வருணனை, ஞான மலை, தழை உடை, கொல்லிப் பாவை, தர தர திருப்புகழ் , Part 41

கும்பகோணம் நாகேஸ்வரரும் கும்பேஸ்வரரும் (Post No.15,485)

Pictures by London Swaminathan

Written by London Swaminathan

Post No. 15,485

Date uploaded in Kumbakonam, India –  11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கும்பகோணத்தில் இரண்டு சிவன் கோவில்கள் பிரசித்தமானவை . கும்பகோணத்துக்குப் பெய கொடுத்த கும்பேஸ்வரர் சிவன் கோவிலும் நாகேஸ்வரர் சிவன் கோவிலும் புகழ் பெற்றவை . கும்பேஸ்வரர் கோவிலுக்கு நான்காவது முறையாக 5-3-2026 ல் சென்றேன் . முந்தைய கட்டுரைகளில் விவரமாக எழுதியுள்ளேன். சென்ற முறை லண்டனிலிருந்து வந்து தரிசித்தபோது எனது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டினை யாரோ பிக்பாக்கெட் அடித்து கோவில் பூக்குவியலில் எறிந்துவிட்டனர் . அதை எடுத்த குருக்கள் அவருடைய மனைவியின் கையில் கொடுக்கவே, அவ்வாறு மிகவும் நேரம் செலவழித்துக் கஷ்டப்பட்டு லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரில் புஸ்தகங்கள் இருப்பதைக் கண்டு அதன் வெளியீட்டாளருக்கு போன் செய்தார். அவர் எனது அண்ணனின் நண்பர் என்பதால் எனக்குத் தகவல் கிடைக்கவே சென்னையிலிருந்து  டாக்சியில் வந்து, நள்ளிரவுக்கு முன்னர் பாஸ்போர்ட்டினைப்  பெற்றுக்கொண்டு குருக்களுக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துவிட்டு பணம் கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டு அதைக் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள் என்றார். நள்ளிரவில் கோவில் பூட்டியிருந்ததால் இப்போது கோவிலுக்குச் சென்று உண்டியலில் காணிக்கை செலுத்தி இறைவனுக்கும் குருக்களுக்கும் மனதார நன்றி செலுத்தினேன் . அத்தோடு நாகேஸ்வரர் கோவிலுக்கும் சென்றேன் .

(கும்பேஸ்வரர் கோவில் பற்றி எழுதிய கட்டுரைகளின் இணைப்புகள் கீழே உள்ளன)

***

நாகேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்

கோவிலின்  கோபுரத்தில் ஒரு உருவத்தைக் காணலாம் . வேறு எங்கும் காண முடியாத வடிவம் இது . இந்தக் கோவிலை செப்பனிட்டுக் கும்பாபிஷேகம் செய்த பாடகச் சேரி ராமலிங்க சுவாமிகளின் உருவம் அது. அவர் கழுத்தில் பித்தளைச் சொம்பினை மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்து கோவில் கோபுரத்தில் முளைத்திருந்த புல்பூண்டுகளை அகற்றி கும்பாபிஷேகம் செய்த  மகான் ஆவார். அப்பர் பெருமான் செய்த அரும்பணியைப் போன்றது இது .

கோவிலின் ஐந்து நிலைக் கோபுரத்தில் இவரைத் தரிசிப்பதோடு கோவிலுக்குள் உள்ள சந்நிதி ஒன்றிலும் தரிசிக்கலாம்.

இன்னுமொரு சிறப்பு சித்திரை மாதத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் திட்டமிடப்பட்ட பொறியியல் சிறப்பு ஆகும்  

இங்குள்ள இறைவன் இறைவியின் சிறப்புகள்

இறைவன் நாமம் –  நாகேஸ்வரர்

இறைவியின் நாமம் -பெரியநாயகி

இந்தக் கோயிலை அப்பர் பெருமான் பாடியுள்ளதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது பிரபலமாகியது தெளிவாகிறது

கும்பகோணம் பகுதியில் இரண்டு முக்கிய நாகேஸ்வரர் கோவில்கள் உள்ளன, இரண்டும் பாடல் பெற்ற ஸ்தலங்கள். ஒன்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் (கும்பகோணம் நவக்கிரக கோவில்களில் ஒன்று), மற்றொன்று கும்பகோணத்தின் மையத்தில் உள்ள இந்த கோவில்.

இந்தக் கோயில் குடந்தை கீழ்கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பிரம்மா அனைத்து உயிரினங்களின் விதைகளையும், வேதங்கள் மற்றும் புராணங்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக வைத்திருந்தார், இது அமிர்த கலசம் என்று அழைக்கப்பட்டது. பிரளயம் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்தது. பிரம்மா தயாரித்த கும்பமும் இடம்பெயர்ந்து, பல ஆண்டுகளாக வெள்ள நீரில் மிதந்தது. இறுதியாக, அது ஒரு இடத்தில் குடியேறியது. சிவபெருமான், வேட்டைக்காரன் வேடத்தில், தனது வில் மற்றும் அம்பினால் கும்பத்தை உடைத்தார். கும்பத்தை அலங்கரிக்கும் வில்வம் இலைகள் விழுந்த இடம் இது (இங்கு சிவன் வில்வவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.).

நாகர்களின் அரசனான ஆதிசேஷன் தன் 1000 தலைகளில் பூமியின் பாரத்தை சுமந்தான். கருணை உள்ளம் கொண்ட இறைவன் அவர் மீது இரக்கம் கொண்டு, எந்த நேரமும் தனது ஒற்றைத் தலையில் பூமிச் சுமையை சுமக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கினார். ஆதிசேஷனால் லிங்கம் நிறுவப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டதால், இறைவன் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. சாரங்கபாணி கோவில் ரதம் போலக் காட்சிதருகிறது .

சிவகாமி வடிவில் அம்பாள், நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்திற்கு தாளம் போடுவதும், விஷ்ணு புல்லாங்குழல் வாசிப்பதும் வேறெங்கும் காண முடியாத காட்சிகள் .

மகாகாளிக்கும் வீரபத்ரருக்கும் எதிரெதிரே தனித்தனி சன்னதிகள் உள்ளன, சிவனும் காளியும் நடனத்தில் போட்டி போடுவது போல்  சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன., சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலையின் அற்புதத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல் – மே) சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது விழும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

தீர்த்தவாரி திருவிழாவின் போது இறைவன் மகாமகக் குளத்திற்கு வருகை தருகிறார்.

தமிழகத்தில் உள்ள நான்கு நாகர் கோயில்கள் : கும்பகோணம் நாகேஸ்வரர் ,கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் .

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

***

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்  (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர்; இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார்.

வெள்ளை வெளேர் என்று வேட்டி அணிந்திருப்பார்.  ஒரு பித்தளைச் செம்பைக் கயிற்றில் கட்டியிருப்பார். அவருடைய இடுப்பில் தொங்குகிற பாத்திரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த சில்லறையைப் போட்டுவிடுவர்.

 நாகேஸ்வரர் கோயில் கோபுரத்தில் மரம் செடிகள் முளைத்து அது பிளப்புண்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அந்த கோபுரத்தை சீரமைக்க உறுதி கொண்டார். தனிநபராக அவர் சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து, அக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார்.

***

அப்பர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

ஆறாம் திருமுறை

பதிகம் – 75

காவிரி தென்கரைத் தலங்களில் இருபத்து ஏழாவது தலம் – திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்

  சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்

கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்

  கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்

மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்

  மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்

கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்

  கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்

ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்

  தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்

தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்

  செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்

கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்

  நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை

ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்

  அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்

ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்

  ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்

கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்

  சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்

செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி

  செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்

மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி

  மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்

கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்

  காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்

ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்

  ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்

நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்

  நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்

கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்

  முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்

அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி

  அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்

துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு

  சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்

குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்

  கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்

சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்

  சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்

பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்

  பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்

கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்

  புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு

மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்

  மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல

தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து

  திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்

கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்

  பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்

சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்

  சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்

அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை

  அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே

கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை

  இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே

கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்

  குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்

தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை

  சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்

கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்

  தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்

நெறிகொண்ட குழலியுமை பாக மாக

  நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்

மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்

  மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்

குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்

  குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

திருச்சிற்றம்பலம்

குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்) 612001.

இறைவர் திருப்பெயர்:

நாகேஸ்வரர், நாகநாதர்.

இறைவியார் திருப்பெயர்:

பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

வில்வம்

தீர்த்தம் :

சிங்கமுக தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்.

****


கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல …


Tamil and Vedas

https://tamilandvedas.com › கு…

·Translate this page

11 Apr 2025 — மகாமக குளம் , மற்றும் கோவில் பற்றி முன்னர் எழுதிய இணைப்புகள் கீழே உள்ளன . விருந்தினர் அறைக்குச் செல்வதற்கு முன்னர் மீண்டும் ராமசாமி

கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11860)


Tamil and Vedas

https://tamilandvedas.com › கு…

·Translate this page

1 Apr 2023 — கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் . என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த …Read more

கும்பகோணத்திலும் ஆழ்வார் திருநகரியிலும் …


Tamil and Vedas

https://tamilandvedas.com › கு…

·Translate this page

21 Nov 2025 — ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் டிசம்பர் முதல் நாள் தேதி நடைபெறவுள்ளது. … கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள …Read more

கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post …


Tamil and Vedas

https://tamilandvedas.com › கட…

·Translate this page

21 Mar 2025 — … சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன்.Read more

இருபது நாட்களில் 40++ கோவில்கள் …


Tamil and Vedas

https://tamilandvedas.com › இர…

·Translate this page

3 Mar 2023 — பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.Read more

Tamil and Vedas | Page 119

–subahm—

Tags- பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்,கும்பகோணம் நாகேஸ்வரர், கோயில், கும்பேஸ்வரர் , தேர் மண்டபம், கல் ரதம் , சிவன் கோவில்கள், ஆதிசேஷன்

நடுக்கடலில் தத்தளித்த குடும்பம்…. 4 கி.மீ. கடலில் நீந்தி மீட்ட 13 வயது சிறுவன்! (Post No.15,484)

 Joanne and Austin with Beau 12 and Grace, eight

Austin

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,484

Date uploaded in Kumbakonam, India – 11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 2-3-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

நடுக்கடலில் தத்தளித்த குடும்பம்…. 4 கி.மீ. கடலில் நீந்தி ஒற்றை ஆளாக மீட்ட 13 வயது சிறுவன்! 

ச. நாகராஜன் 

மேற்கு ஆஸ்திரேலியாவில் சவுத் ஆஃப் பெர்த் என்ற இடத்திலிருந்து 125 மைல் தள்ளி உள்ளது க்விண்டால்ப் என்ற கடற்கரை.

ஜாலியாகப் பொழுதைக் கடலில் சற்று நேரம் குழந்தைகளுடன்  அங்குள்ள ஜியோகிராப் பே என்னும் இடத்தில் கழிக்கலாம் என்று நினைத்தாள் தாயான ஜோன் ஆப்பிள்பீ. 

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை. பகல் நேரம்.

13 வயதே ஆன மகன் ஆஸ்டின், குழந்தைகள் பீயூ (12), க்ரேஸ் (8) ஆகியோருடன் பேடில்போர்ட் எனப்படும் விளையாட்டுப் படகில் ஏறிய தாயார் கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்றாள்.

திடீரென்று காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. துடுப்புகள் அலை அடித்துக் கொண்டு சென்றது.

என்ன செய்வதென்று ஜோன் திகைப்பதற்குள் அலைகள் படகை கடலுக்குள் வெகு தூரம் இழுத்துச் சென்று விட்டது.

எல்லோரும் உயிர் காக்க உதவும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டனர். நிமிஷத்திற்கு நிமிஷம் நிலைமை மோசமானது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணோம்! 

பிழைக்க முடியுமா, அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்கலானாள் ஜோன்.

வேறு வழியில்லை, துணிந்து ஒரு முடிவை அவள் எடுத்தாள்.

ஆஸ்டினை நோக்கி, நீ கடலில் குதித்து கரையை நோக்கி நீந்து. அங்கே யாரையாவது உதவிக்கு அழை” என்றாள்.

இதைச் சொல்ல அவள் மனம் துடித்தது. என்றாலும் ஆஸ்டினின் நீச்சல் பயிற்சி மீது அவளுக்கு அபார நம்பிக்கை இருந்தது.

ஆஸ்டினும் உடனே கடலுக்குள் குதித்தான். முரட்டு அலைகளுடன் போராடி நான்கு கிலோமீட்டர் தூரம் நீந்திக் கரையை அடைந்தான்.

இருட்ட ஆரம்பித்து விட்டது.

கரையை அடைந்த ஆஸ்டினுக்குத் தன்னை நம்பவே முடியவில்லை. தானா இவ்வளவு தூரம் நீந்தி வந்தது?

அங்கிருந்து இரண்டு மைல் தூரம் சென்றால் தான் போன் பூத் இருக்கும்.

அங்கே ஓடினான் ஆஸ்டின்.

அவசர உதவியை அழைத்தான்.

“காப்பாத்துங்க, காப்பாத்துங்க, ஹெலிகாப்டர் வேண்டும். ப்ளேன் வேணும். படகு வேணும். என்னோட அம்மாவும்,, தம்பியும் தங்கையும் கடலில் மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்க. உடனே வாங்க.”

பேசி முடித்து விட்டு அப்படியே கீழே விழுந்தான் ஆஸ்டின். அங்கு விரைந்து வந்த உதவிப் படை அவனை உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றது.

அங்கிருந்து தனது தந்தைக்குப் போன் செய்து நடந்ததை விவரித்தான் ஆஸ்டின்.

தனது தாய், தம்பி, தங்கை ஆகியோர் உயிருடன் இருப்பார்களா என்று ஏங்கியவாறு இருந்தான் அவன்.

இதற்குள் உதவிப்படை ஒன்று கடலுக்குள் சென்று ஜோன் சென்ற படகைத் தேட ஆரம்பித்தது.

மாலை மணி ஆறு.

இருட்ட ஆரம்பித்து விட்டது.

ஒரு பெரிய அலை வந்து படகை ஆட்டி குழந்தைகளைப் படகிலிருந்து தள்ளி விட்டது. குழந்தைகள் கடலில் விழ ஜோன் அலற, நல்ல வேளையாக உதவிப் படை அவர்களைக் கண்டு விட்டது. கடற்கரையிலிருந்து  சுமார் 9 மைல்கள் தள்ளி இருந்த படகை அவர்கள் கண்டனர்.

ஜோனும் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். 

டாக்டர்களும் போலீஸ் அதிகாரிகளும் மகிழ்ச்சியில் குதித்தனர். 

ஆஸ்டினை ஏற்றிச் சென்ற அதே ஆம்புலன்ஸ் இவர்களையும் அழைத்துச் சென்றது. தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்பதை ஆம்புலன்ஸில் இருந்த உதவியாளர் மூலம் அறிந்து மகிழ்ந்தாள் ஜோன். 

கார்டியன் பத்திரிகை இதைப் பெரிய செய்தியாக 4-2-26 இதழில் வெளியிட்டது.

பிபிசிக்கு பேட்டி கொடுத்த ஆஸ்டின், “என்னால் நம்பவே முடியவில்லை. அது ஒரு நீண்ட கனவு” என்று என்றாள்.

காலம் முடியும் முன்னே காலன் வர மாட்டான் என்பது நமது நம்பிக்கை அல்லவா!

**

Two Famous Vishnu Temples of Kumbakonam that I Visited (Post No.15,483)

Pictures are taken by London Swaminathan’.

Written by London Swaminathan

Post No. 15,483

Date uploaded in Kumbakonam, India –  10 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Like Kanchipuram, Kumbakonam in Tamil Nadu is also dotted with several Vishnu and Shiva temples. They are called Temple Towns; only difference is Kanchi has Jain temples as well. In Kanchi one can see more Pallava influence and in Kumbakonam one can see more Choza influence.

The Vishnu temples I visited on 5-3-2026, are Bow Holder Temple (Sarangapani) and Wheel Holder Temple (Chakrapani). They are sung by Alvars, Tamil Vaishnavite saints and dated 1200 to 1500 years old. Both the temples have some unique features.

Vishnu has five weapons in his hands.

Vanamali Gadi Sarangi Shanki Chakri Cha Nandaki Shriman Narayano Vishnur Vasudevo Bhirakshatu.

वनमाली गदी शार्ङ्गी शङ्खी चक्री च नन्दकी।

श्रीमान् नारायणो विष्णुर्वासुदेवोऽभिरक्षतु॥

Vanamali (वनमाली): One who wears the Vanamala, a divine garland made of forest flowers (Vaijayanti), representing the subtler elements of nature.

Gadi (गदी): The bearer of the mace named Kaumodaki;

Sharngi (शार्ङ्गी): The wielder of the Sharnga bow;

conch (Shankhi), discus (Chakri), and sword (Nandaki).

Lord Narayana, who is adorned with these divine weapons and symbols, including the conch (Shankhi), discus (Chakri), and sword (Nandaki). It is chanted for safety and to remove obstacles.

Let us first visit Sarngapani (saarngapaani) Sarngam is the bow and Paani in Sanskrit is Hand.

The Sarangapani Temple is a 1000 year old Hindu temple in  dedicated to Lord Vishnu, who is depicted holding the sharanga (bow). It is one of the 108 Divya Desams and a significant Pancharanga Kshetram located on the Kaveri River bank. It features unique chariot-shaped architecture and legends.

Situated in Kumbakonam, this temple is revered in the Nalayira Divya Prabandham by seven Alvars (poet-saints).

Architecture: The main sanctum is designed like a chariot (Ratha) pulled by elephants and horses, featuring intricate carvings from the Chola and Nayak periods.

Deity: Lord Sarangapani is in a reclining posture (Bhujanga sayanam) on the chariot bed.

Legends: The temple is associated with Sage Hemarishi, who did penance to have Lakshmi as his daughter, and it is a Pancha Kshethram where Goddess Lakshmi was born as Bhargavi.

Key Spots: Includes the Pathala Srinivasan sanctum (underground) and the Mettu Srinivasan (above ground) sanctum.

Festivals: The temple celebrates major festivals, including the chariot festival (Rathotsavam).

Lakshmi emerged from the Potramarai tank among thousand lotuses and was thus named Komalavalli (the one who emerged from lotus). Vishnu descended to earth as Aravamudhan in a chariot drawn by horses and elephants from his abode Vaikuntam.He stayed in the nearby Someswaran Temple to convince Lakshmi to marry him and the couple eventually got married. The temple follows Pancharatra Agama and Vadakalai tradition.

Tallest tower

The Sarangapani Temple dates back to the Pallava era; however, the existing edifice is linked to the Vikrama Chola period, beginning in 1121 AD. Its importance grew significantly during the reigns of the Vijayanagara and Nayaka dynasties from the 15th to the 17th centuries, which saw considerable expansion of the temple’s structure

A notable highlight of the Sarangapani Temple is its main entrance, the rajagopuram, which rises to a height of 173 feet and consists of eleven tiers. This structure is the tallest temple tower in Kumbakonam and ranks as the third tallest gopuram among the Divya Desams, following Srirangam (236 feet) and Srivilliputhur (192 feet).

Trial Run of the New Chariot

Trial run of the New Ratha/ Chariot of Sarngapani

Is taking place on 13-3-2026. This is one of the biggest chariots of Tamil temples.

Height – 60 feet; Weight 500 Tons;

Chariot’s horses and other figures are made up of papier mache and bamboo. It will be used next Chitrai month . Thousands of people will pull it using 300 metre long huge rope.

***

Chakrapani temple

All the Shiva and Vishnu temples are in walking distance. Chakrapani temple is unique in many respects.

In the Chakrapani Temple, Lord Vishnu appears in the form of a discus or Chakra to put down the pride of Surya, who subsequently became his devotee. Like Lord Shiva, Lord Chakrapani has a third eye on his forehead.

Lord Vishnu appears as the fiery Sudarshana Chakra with eight arms and a third eye, resembling Lord Shiva to subdue Surya’s pride. It is known for its “Bhaskara Kshetram” where the Sun God worships the deity. Bhaskra means Sun/Surya.

Picture shows Sun God worshipping Chakrapani.

Unique Deity Form: Lord Chakrapani is depicted not as a human avatar but as the radiant, Sudarshana Chakra (wheel ) housed in a central sanctum.

Third Eye & Eight Arms: Unlike typical Vishnu forms, this idol has eight arms holding weapons and a third eye on the forehead, similar to Lord Shiva.

Bilva leaves are used here instead of Tulsi.

Sun Worship (Bhaskara Kshetram): Legend holds that the Sun God (Surya) worshipped the Chakra here to regain his lost brilliance, making it a prominent place for Sun worship.

Architecture & Entrances: The temple has a five-tiered Raja Gopuram and features two entrances—”Thatchinaya Vayil” and “Utharavana Vayil”—and an outer Prakara built like a balcony.

Historical Significance: A bronze statue of the Maratha King Serfoji II is present, as he is said to have been cured of a severe illness by the deity.

Important Rituals: It is one of the five Vishnu temples involved in the Mahamaham festival, with major, unique celebrations including the, Thirumanjanam (holy bath) and special, worship during Masi Magam.

Pancha Mukha Hanuman: The temple complex contains an idol of the five-faced Hanuman.

The temple is also known for, being a place where worshippers, pray for relief, from, physical, or, mental, illnesses.

***

As per Hindu legend, Chakra (also called Sudarshana), is the most powerful weapon of god Vishnu. He once sent his weapon to nether world to kill king Jalandasura. The weapon is believed to have come out of the nether world through river Kaveri. God Brahma, installed the image of Sudarshana in the place where the temple is now located. Surya, the Sun god, who was glowing in brilliance, had his brightness diminished by the effulgent Sudarshana. Surya worshipped Sudarshana and pleased by his devotion, Sudarshana restored all the powers of Surya. He worshiped Chakrathazhwar (personified Wheel or Discuss) during Masi Magam and every year Masi Magam festival is celebrated during the day, commemorating the event. The temple car is drawn around the streets of the temple during the day.

–subham—

Tags- Kumbakonam, Sarngapani temple, Chakrapani temple, unique features, wheel, bow, Bhaskara kshetra, tallest tower, tallest chariot, Sun/Surya

குடந்தையில் சாரங்க பாணியும், சக்ர பாணியும் (Post No.15,482)

Written by London Swaminathan

Post No. 15,482

Date uploaded in Kumbakonam, India –  10 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லண்டன் சுவாமிநாதன் எடுத்த படங்கள்

பாணி என்றால் கை. சார்ங்கம் என்னும் வில்லைத் தாங்கிய பெருமாளுக்கு ஒரு கோயில். சக்ரம் என்னும் சுதர்சன சக்கரத்தைத் தாங்கிய பெருமாளுக்கு ஒரு கோயில். இரண்டு பெருமாள் கோவில்களும் நல்ல பிரசித்தமானவை.

குடந்தை என்னும் கும்பகோணத்தில் சிவன் கோவில்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் பஞ்சமில்லை. எண்ணற்ற புகழ்பெற்ற கோவில்கள் அடுத்தடுத்தே உள்ளன . போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால் நடந்தே எல்லாக் கோவில்களையும் தரிசிக்கலாம். முதலில் நான் சார்ங்கபாணியைத் தரிசித்தேன் . மார்ச்-5 ஆம் தேதி ஓரே மூச்சில் சென்றேன்; நல்ல தரிசனம் கிடைத்தது.

சாரங்கபாணி கோவிலின் சிறப்புகள்

சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதிக்கு அடுத்தபடியாக 3-வது முக்கியமான, விஷ்ணு தலம் ஆகும். தேர் வடிவிலான கருவறை, உத்ராயண மற்றும் தட்சிணாயன வாசல்கள், மற்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாதாள ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி ஆகியவை இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

11 அடுக்கு ராஜகோபுரத்தின் உயரம் 173 அடி.

பூமிக்கு கீழ்மட்டத்தில் உள்ளது. படிகளில் இறங்கி கனிந்து பார்த்தால் மிகவும் அழகான ரூபத்தில் பெருமாளைக் காணலாம்

தேர் வடிவிலான கருவறை: சாரங்கபாணி பெருமாள் வைகுண்டத்திலிருந்து தேரில் வந்ததால், கருவறை தேர் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குதிரைகள் மற்றும் யானைகள் இழுப்பது போன்ற அமைப்பு உள்ளது.

இரண்டு வாசல்கள்

 கருவறைக்கு உத்ராயண வாசல் (தை – ஆனி) மற்றும் தட்சிணாயன வாசல் (ஆடி – மார்கழி) என இரண்டு வாசல்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறக்கப்படும்.

பள்ளிகொண்ட தோற்றம்: மூலவர் சாரங்கபாணி, ஆதிசேஷன் மீது சாய்ந்த கோலத்தில் (உத்தான சயனம்), கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார்.

108 திவ்ய தேசம் : 108 திவ்ய தேசங்களில் 3-வது முக்கிய இடமாகும். அதாவது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோயில்.

பரதநாட்டிய சிற்பங்கள்: தஞ்சை பெரிய கோவில் போன்று, இக்கோவில் கோபுரத்தின் முதல் அடுக்கில் பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோமலவல்லி தாயார்: பெருமாள் தாயாரை மணக்க இங்கு தேரில் வந்ததால், சன்னதி தேர் போன்ற அமைப்பில் உள்ளது.

பொற்றாமரைக் குளம்: இக்கோவிலின் தீர்த்தம் பொற்றாமரை குளம் ஆகும்.

இக்கோவில் சோழ, விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டுள்ளது .

இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் மூலவராக ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

ஹேமரிஷி என்ற முனிவருக்காக இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வைணவ தெய்வம் சாரங்கபாணி தோன்றினார் என்று கூறுகிறது தல புராணம் .

பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.

தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட

வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று

நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்

கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,

குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.

கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.

இன்னொரு சிறப்பு 12 கருடசேவைகளில் ஒன்று ; கும்பகோணத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியையில்கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த பெருமாள்  கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்..

·         ஆராவமுதன்: இத்தலப் பெருமாள் ‘சாரங்கபாணி’ என்றும், ‘ஆராவமுதன்’ (ருசிக்க ருசிக்கத் திகட்டாத அமுதம்) என்றும் பாசுரங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.

·         பதிகங்கள்: நம்மாழ்வார் திருவாய்மொழியில் இத்தலத்தைப் பற்றி 11 பாசுரங்களில் பாடியுள்ளார் (5.8).

·         பாசுரத்தின் பொருள்: “குடந்தைக் கிடந்த எம் கோவே” – குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் எங்கள் இறைவனே, என்று ஆராவமுதனின் கருணையைப் பாசுரங்கள் போற்றுகின்றன.

·         திருமங்கையாழ்வார் பாசுரம்: “ஆவியே! அமுதே! என நினைந்துருகி” என்று குடந்தை சாரங்கபாணியை பக்தி பரவசத்துடன் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். 

7 ஆழ்வார்கள் மொத்தம் 51 பாசுரங்களில் இத்தலத்தைப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். “குடந்தைக் கிடந்த மாலாய்” என்று மங்களாசாசனம் செய்துள்ள, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

ஆரா அமுதே! அடியேன் உடலம்  நின்பால் அன்பாயே

நீராய் அலைந்து கரைய  உருக்குகின்ற நெடுமாலே*

சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்  செழு நீர்த் திருக்குடந்தை

ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!  கண்டேன் எம்மானே

அரிஏறே! என் அம் பொன் சுடரே!  செங்கண் கருமுகிலே!

எரி ஏய்! பவளக் குன்றே!  நால் தோள் எந்தாய் உனது அருளே*

பிரியா அடிமை என்னைக் கொண்டாய்  குடந்தைத் திருமாலே

தரியேன் இனி உன் சரணம் தந்து  என் சன்மம் களையாயே.

****

சக்ரபாணியின் புகழ்

சார்ங்கபாணியைத் தரிசித்த பின்னர் சக்ரபாணி கோவிலுக்குச் சென்றேன்.

விஷ்ணுவின் சக்திவாய்ந்த சக்ராயுதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருத்தலம் ஆகும். மூலவர் சக்ரபாணி பெருமாள், சிவனைப் போல மூன்றாவது கண் (நெற்றிக்கண்) கொண்டு, எட்டு கரங்களுடன் காட்சியளிப்பது இக்கோவிலின் மிக முக்கிய சிறப்பாகும். ஜலந்தராசுரன் என்ற அரக்கனை அழிக்க விஷ்ணு தன் சக்கரத்தை அனுப்பிய கதை, இத்தலத்தின் வரலாற்று சிறப்பைக் குறிக்கிறது.

பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலத்துக்குப்  பாஸ்கர க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு

சக்ரபாணி கோவில் சிறப்புகள்:

மூன்றாவது கண்: சிவபெருமானைப் போல திருமால் நெற்றிக்கண்ணுடன் காட்சி தரும் அரிதான தலம் இது.

வில்வ அர்ச்சனை: பொதுவாக பெருமாள் கோவில்களில் துளசி பயன்படுத்தப்படும்., இங்கு சிவனுக்கு உகந்த வில்வ இலைகளால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படுவது சிறப்பு.

பாஸ்கர ஷேத்திரம்: சக்ரபாணி பகவான் சூரியனின் (பாஸ்கரன்) செருக்கை அடக்கிய தலம் என்பதால், இது பாஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பிரம்மா பூஜித்த சக்கரத்தின் ஒளியை மிஞ்ச சூரியன் முயன்றான்; அவனுடைய ஒளியைக் குறைத்து ஆணவத்தை அடக்கினார் விஷ்ணு. ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க , இங்கே ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர க்ஷேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர க்ஷேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.

இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமையான வைணவத்தலம் ஆகும்.

முதலாம் சரபோஜியின் காலத்தில் (CE 1712–1728) இக்கோயில் மேலும் புகழ்பெற்றது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

மூலவர்:       சக்கரபாணி

 தாயார்:       விஜயவல்லி தாயார்

தீர்த்தம்        சக்கர படிதுறை

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

கோவில் உள்ளே உள்ள தீர்த்தம்

அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் காசியை விட மகிமை கூடியது

 ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

பிரம்மாவும், அக்னி மற்றும் மார்க்கண்டேயர்இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர்.

இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.  கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.  

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில்.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

உட்பிரகாரத்தில்  விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார்.

யோக நரசிம்மர் மற்றும் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

சுதர்சனம்

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான்.

சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும்.

திருவிழா:   

மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும். அட்சய திருதியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும். வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

–subham—

Tags– குடந்தை, சாரங்க பாணி, சக்ர பாணி, கோயில்,  லண்டன் சுவாமிநாதன், எடுத்த படங்கள், பாஸ்கர க்ஷேத்திரம், திவ்யதேசம், சரபோஜி மன்னர் சிலை, உயர்ந்த கோபுரம், கும்பகோணம் , சுதர்சன சக்கரம், தேர் வடிவ கருவறை

தாமா தாமா யாமா யாமா காமா காமா தேமார் தேமா: அருணகிரியின் சொற் சிலம்பம்– 40(15,481)

Written by London Swaminathan

Post No. 15,481

Date uploaded in Kumbakonam, India –  10 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 40

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 40

***

தாமா தாமா லாபா லோகா

     தாரா தாரத் …… தரணீசா

தானா சாரோ பாவா பாவோ

     நாசா பாசத் …… தபராத

யாமா யாமா தேசா ரூடா

     யாரா யாபத் …… தெனதாவி

யாமா காவாய் தீயே னீர்வா

     யாதே யீமத் …… துகலாமோ

காமா காமா தீனா நீணா

     காவாய் காளக் …… கிரியாய்கங்

காளா லீலா பாலா நீபா

     காமா மோதக் …… கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ

     தேசா தேசத் …… தவரோதுஞ்

சேயே வேளே பூவே கோவே

     தேவே தேவப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தாமா தாம ஆலாபா லோக ஆதாரா … மாலையை உடையவனே,

இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே,

தார(ம்) தரணி ஈசா … நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும்

ஈசனே,

தான ஆசாரோ பாவா பாவோ நாசா … கொடை அளிக்கும்

ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே,

பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு … பாசங்களில்

பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச்

சேர்ந்தவர்களிடையே,

ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் … ஆராய்ச்சி

இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல்

ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய்.

தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ … கெட்டவனாகிய

நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல்

நன்றோ?

காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் …

அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி

என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே,

கங்காளா லீலா பாலா நீபா … எலும்பு மாலையை விளையாட்டாக

அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே,

காம ஆமோதக் கன மானின் … மிகுந்த விருப்பமுள்ள, பெருமை

பொருந்திய மான் போன்ற வள்ளியின்

தேம் ஆர் தே மா காமீ பாகீ … தேன் கலந்த இனிய தினை மாவில்

விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே,

தேசா தேசத்தவர் ஓதும் சேயே … ஒளி உள்ளவனே, உலகத்தோர்

போற்றும் குழந்தையே,

வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. …

தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே,

தேவர்களுடைய பெருமாளே.

இன்னுமொரு சொல் விளையாட்டு

மெய்ச்சார்  வற்றே பொய்ச்சார் வுற்றே

     நிச்சார் துற்பப் …… பவவேலை

விட்டே றிப்போ கொட்டா மற்றே

     மட்டே யத்தத் …… தையர்மேலே

பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்

     பத்தார் விற்பொற் …… கழல்பேணிப்

பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்

     முற்பா லைக்கற் …… பகமேதான்

செச்சா லிச்சா லத்தே றிச்சே

     லுற்றா ணித்துப் …… பொழிலேறுஞ்

செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்

     நித்தா செக்கர்க் …… கதிரேனல்

முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்

     முத்தார் வெட்சிப் …… புயவேளே

முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே … உண்மையான

புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு,

நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல் …

நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி

கரை ஏறிப் போக முடியாதபடி,

தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப்

போர் எய்த்தார் … தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது

என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம

வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள்,

பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால்

பெற்றார்முன் … பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய,

ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால்

தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக

மாறும் போது அவர்களுக்கு

பாலைக் கற்பகமே தான் … நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ

விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய்.

செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப்

பொழிலேறும் … செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல்

மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும்

செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா … திருச்செங்கோட்டு*

மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே,

செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்

முத்து ஆர் வெட்சிப் புயவேளே … சிவந்த கதிர் கொண்ட

தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள்

கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை

நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய

செவ்வேளே,

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …

முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி

வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி

அளிக்கும் பெருமாளே.

இது வேண்டுகோள் எதுவும் அற்ற ஒரு துதிப் பாடல். வட மொழிச் சொற்களும், சந்திகளும் நிறைந்தது.

திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.

செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ – என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

***

சிவபெருமானுக்கு யானைத் தோல் வந்த கதை

குன்று எடுத்துப் பந்தடித்துக் கண் சிவத்துச் சங்கரித்துக்

கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் சுர லோகா … கிரவுஞ்ச

கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண்

சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே,

கொம்பு குத்திச் சம்பு அழுத்தித் திண் தலத்தில் தண்டு

வெற்பைக் கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் பொரும்

வேழம் … கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால்

அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை

சென்று உரித்துச் சுந்தரிக்கு அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்

சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) களி கூரும் … சென்று தாக்கி

தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண்

களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி

கொள்ளும்,

செண்பகத்துச் சம்புவுக்குத் தொம் பதத்துப் பண்பு உரைத்து …

செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி

என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக

நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி,

செங்குவட்டில் தங்கு சொக்கப் பெருமாளே. …

திருச்செங்கோட்டில் உறையும் அழகிய பெருமாளே.

கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு, மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட  அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம் நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.

–subham—

Tags- கயாசுரன், சிவபெருமான், யானைத் தோல், தாமா தாமா யாமா யாமா , சொற் சிலம்பம், அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 40

What is the distance between you and the God? (Post.15,480)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,480

Date uploaded in Kumbakonam, India – 10 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

What is the distance between you and the God?

S. Nagarajan

Narada is a great sage. He is devoted to Lord Narayana who is the protector of Universe according to the Hindu religion.

All the scriptures says that Narayana resides at Vaikunda, a sacred place in the sky.

Once Narada went to Vaikunda, where Narayana is supposed to be dwells.

But to his surprise Narada did not see the Lord, there!

He started searching the Lord.

At that time one devotee came in front of him.

He asked Narada, “oh! Great sage, wherefrom you are coming?”

Narada replied to him that he is coming from Vaikunda. He also said that he did not see the Lord at Vaikunda and in search of him he is wandering:’

The devotee laughed at him.

“Oh! Great sage! You do not know where he is. He is at a calling distance,” said the devotee.

Narada was wonderstruck.

He told the devotee that he is not able to understand the meaning of his words.

The devotee said, “It is simple. He is at a distance to hear your call. When the elephant Gajendra called “Oh, the Origin of everything”, he heard that call and immediately came to the elephant’s rescue.

Actually, the elephant’s leg was grabbed by a crocodile in a river and at any moment it may be dragged into the river.

Similarly, the Pandavas Queen Draupadi called him, “Oh, my lord who is dwelling in my heart. Pl come and rescue me. The wretched Gaurav Dussasana is stripping my sari.”

On hearing Draupadi’s call he came immediately to her rescue and started supplying numerous saris.

Telling all these things the devotee asked Narada, “I hope now you understand where he would be. Go and find him in devotees’ assembly.

Narada accordingly found the Lord in a large gathering where devotees were chanting His name.

Narada finding the Lord there prostrated before Him.

Narada told the Lord that he is coming from Vaikund in search of him.

The Lord laughed at him and said the famous reply.

“I am not residing at Vaikunda nor at the yogi’s heart. Wherever my devotees are chanting my name, oh, Narada, you may find me there.

Narada understood the power of the devotion.

God is in your heart and that is the distance between you and the God!

**

Published in http://www.writing.com