August 2021 London Swaminathan Articles, Index-105 (Post No.10,207)

ANDAL KALYANAM PICTURES FROM FACE BOOK (NAACHIYAAR VAIBHAVAM; THANKS)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,207

Date uploaded in London – 13 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

ANDAL NARRATING HER DREAM- VAARANAM AAYIRAM

August 2021 Index 105

Ten Kinds of Plays in Bharata’s Natya Sastra ;9931;3/8

Watching Dance is equal to Studying Veda; Sin will run away; 936; 4/8

Nobel Laureate Tagore’s Quotes; 9946;7/8

Colour for Actors and Ornaments in Natya Sastra; 9961;10/8

What is the colour of Dravidas? Bharata Muni Replies’ 9968; 12/8

Falcon ? Hawk Mystery in the Rig Veda;9993;18/8

Positive Thoughts in the Rig Veda; 10,000;20/8

Sacred Thread- Upakarman Ceremony of London Brahmins;10,010;23/8

Interview with Dr V S Mani on E Book Publishing10,011’ 23/8

Amazing Epithets of Vedic Gods in Rig Veda; 10,017; 24/8

More Vedic Quotation from Rig Veda Third Mandala; 10,037;31 August, 2021

Tamil and English Words 2700 years Ago-59;9943;  6/8

Tamil and English Words 2700 years Ago-60;9990;17/8

Tamil and English Words 2700 years Ago-61;100,24;  26/8

ANDAL WEDDING — FIRE CEREMONY

INDEX, JAN.2020 INDEX 86,9923

Index 87 ,February 2020; 9935; 4/8

Index 88 ,March 2020; 9941; 6/8

Index 89; April 2020; 9949; 8/8

Index 90; May 2020; 9983; 16/8

Index 91: June 2020; 9995;19/8

Index 92; July 2020; 10,002; 21/8

Index 93; August 2020;10,020; 25/8

Index 94; September 2020; 10,027; 27/8

INVITING BRIDEGROOM KRISHNA/SRIRANGANATHAN

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 1-8-2021; 9925/Z

LONDON CALLING ( GNANAMAYAM) CALLING 2-8-2021; 9926

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 8-8-2021; 9959

LONDON CALLING ( GNANAMAYAM) CALLING 9-8-2021; 9960

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 15-8-2021;

LONDON CALLING ( GNANAMAYAM) CALLING 16-8-2021;

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 22-8-2021; 10,015

LONDON CALLING ( GNANAMAYAM) CALLING 23-8-2021; 10,016

LONDON CALLING (TAMIL MUZAKKAM) 29-8-2021; 10038

LONDON CALLING ( GNANAMAYAM) CALLING 30-8-2021; 10039

WORLD HINDU NEWS ROUNDUP 1-8-2021; 9919

WORLD HINDU NEWS ROUNDUP 8-8-2021;9950

WORLD HINDU NEWS ROUNDUP 15-8-2021; 9978

WORLD HINDU NEWS ROUNDUP 22-8-2021; 10,005

WORLD HINDU NEWS ROUNDUP 29-8-2021;10032

SAPTAPADI CEREMONY

XXXX

TAMIL ARTICLES  In August 2021; Index 105

புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் ;9917; ஆகஸ்ட் 1, 2021

பாங்குப் பணத்தைத் திருடிச் சிறை சென்ற புகழ் பெற்ற

சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி ;9924; 2/8

மண  முறிவு , மன நோயில் சிக்கிய பிரபல பிரிட்டிஷ்

எழுத்தாளர் ஜான் ரஸ்கின் ,9929; 3/8

பாரத நாட்டியம் பூமிக்கு வந்த கதை, 9930; 3/8

ஆர்.கே.நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு ஆங்கில நாவல் ஆசிரியர்

கிரஹாம் க்ரீன் ;9934; 4/8

சாகசம், விசித்திரம்,கற்பனை கலந்த ஆங்கில நாவல்கள்- ஜே ஆர் ஆர் டோல்கின்; 9942; 6/8

WEDDING PROCESSION

நாட்டியம், நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு இணையானது –

பரதமுனி, 9938; 5/8

பிரிட்டனின் பேய்க் கதை மன்னன் எம் ஆர் ஜேம்ஸ் ; 9939; 5/8

ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி நாவல்

ஆசிரியை ஆர் பி ஜாப்வாலா 9945; 7/8

கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள்; 9947; 7/8

பிரெஞ்ச்சு நாவல் ஆசிரியர் எமில் ஸோலா ;9952; 8/8

உபநிஷத் மொழிபெயர்த்த, நோபல் பரிசு வென்ற கவிஞர்

டபிள்யூ  பி யேட்ஸ் , 9955; 9/8

திருமந்திரத்தில் ரிக்வேத வரிகள்; 9956; 9/8

மீண்டும் அகராதி பிடித்த டாக்டர் ஜான்சன் ; 9958;10/8

அட்லஸ் ஷ்ரக்ட்  திரைப்பட புகழ் நாவல் ஆசிரியை அய்ன் ராண்ட்

9964;11/8

ANDAL WEDDING- LAJA HOMAM

ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாவல் ஆசிரியர் ஐயன் பிளெமிங்  ;9967; 12/8

2000 ஆண்டுக்கு முன் பாடிய ரோமானிய நையாண்டிப்

புலவன் ஜுவெனால் ; 9970;13/8

கந்தசஷ்டிக் கவசத்தில் ரிக்வேத வரி கள் ;9972; 13/8

விநாயக கவச அற்புதங்கள் : கவசம் எழுதியது யார்?9974; 14/8

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்ச்சு நாவல் , நாடக ஆசிரியர் காமு ;9975;14/8

இந்துக்களைப் புகழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர்

ரோமன் ரோலண்ட் ;9982;;16/8

சோமரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ்

ஹக்ஸ்லி 9987; 17/8

EXCHANGING GARLANDS

பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரிஷெல்லி ,9992;18/8

ரஷிய கவிஞர், மீனவர் மகன் மிகைல் லொமோனோ சொவ் ; 9996,19/8

ரிக்வேதத்தில் பருந்து மர்மம் 9997)19/8

பஞ்ச தந்திர, விகிதமாதித்தன் கதைகளைக் காப்பி அடித்த 

சி. எஸ் லூயிஸ் ; 9999.20/8

கனடா நாட்டு சிறுவர் கதை  ஆசிரியர் லூசி மாண்ட்கோமெரி 10003; 21/8

அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் புக்கர் டீ .வாஷிங்டன் ;10009;23/8

விநாயகர் கவசமும் ரிக் வேதமும் 10,013

இராமசாமிப் புலவர் சொல்லும் கவச அற்புதங்கள் 10,014;24/8

தூங்கும் அழகி கதை எழுதிய க்ரிம் சகோதரர்கள் ;10,019;25/8

ஆற்றலின் மகனே ! கட்டிளங் காளையே ! அக்கினி தேவனே!10,021; 25/8

பாரதி பாடலில் மந்திரச் சொற்கள், 10,023; 26/8

கிரேக்க புலவர் ஹெசியாட் , 10,026; 27/8

WITH FOSTER FATHER PERIYA ALVAR

சங்கப்  புலவர் மாமூலனார் ரிக் வேதத்தைக் காப்பி அடித்தாரா?10,029;28/8

செப்டம்பர் 2021 காலண்டர்- ரிக் வேதப் பொன்மொழிகள் 10.036; ஆகஸ்ட் 31, 2021

XXXXX

உலக இந்து சமய செய்தி மடல் 1-8-2021; 920;

உலக இந்து சமய செய்தி மடல் 8-8-2021;9951

உலக இந்து சமய செய்தி மடல் 15-8-2021; 9979

உலக இந்து சமய செய்தி மடல் 22-8-2021; 10,006

உலக இந்து சமய செய்தி மடல் 29-8-2021; 10,031

(சேலையில் கண்ணன் லீலை – ஏ .நாராயணன் கவிதைகள்) நாச்சியார் வைபவம் கவிதை, ஏ .நாராயணன் )

(Few of Delhi B Kannan’s Tamil Articles were also posted in  August 2021)

TWELVE  ALVAARS; TAMIL VAISHNAVITE SAINTS

—subham–

Tags- August 2021, Index 105

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-2 (Post No.10,206)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,206

Date uploaded in London – 13 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!- Part Two

ரிக். 10-22-6 உஷனன்

புலவர்களில் நான் உஷன கவி என்று பகவத் கீதையில் கண்ண பிரான் கூறுவதை நாம் அறிவோம். அவருடைய பெயரே ‘கவி’ என்பதாகும். அவருடைய கோத்திரம் காவ்ய கோத்திரம்.  தமிழில் மிகவும் பழையகாலக் கவி என்று கருதப்படும் தொல் காப்பியரும் தொன்மையான காப்பியக் குடியைச் சேர்ந்தவரே. இவருடைய பெயர் த்ருண தூமாக்கினி என்பது நச்சினார்க்கினியர் உரையால்  அறியப்படும். மற்றொரு புகழ்பெற்ற காவ்ய கோத்ர சங்கப்புலவர் காப்பியாற்றுக் காப்பியனார். அவரைப் பற்றிய அதிசய விஷயங்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் காணக்கிடக்கிறது.

காவ்ய என்பது தமிழில் காப்பிய என்று மாறும் (ப=வ)

இதில் அதிசயம் என்னவென்றால் ரிக் வேத காலத்திலேயே அவர் (USANA KAVI ) புராண புருஷர் ஆகிவிட்டார். சில கவிதைகள் அவருடைய பெயரில் கிடைத்த போதிலும் அவர் அக்காலத்திலேயே பழைய கவிஞர் என்று அழைக்கப்பட்டார் . அவரை ரிக் வேதத்தின் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவர் இந்திரனின் நெருங்கிய நண்பன், தோழன், துணைவர் என்றும் அவை பேசுகின்றன. ( இந்திரன் என்பது ஒரே ஆள் அல்ல. ஜனாதிபதி, பிரதமர் என்பதுபோல ஒரு பதவி; ஆகையால் எந்த இந்திரன் என்பது ஆராய்ச்சிக்குரியது )

Xxxx

சுசா , சுசி – 10-26-6

இந்த இரண்டு பெயர்களும் ஒரு ஆண் , பெண் ஆகியோரின் பெயர் என்பது லுட்விக் Ludwick என்பவரின் கருத்து .ஆனால் மாபெரும் உரைகாரரான சாயனர் மற்றும் வில்சன் Prof Wilson என்பவர்  வேறு கருத்துக்களை உரைப்பர். இவை ஆண்  ஆடு , பெண் ஆடு என்கின்றனர். ஏன் சுசா , சுசி என்ற பெயர்கள் என்பதை விளக்கவில்லை .

இதை அடுத்த மந்திரங்களில் ஆட்டு ரோமத்தால் ஆன கம்பளி ஆடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பூஷன் என்னும் வேதகால தேவதையை இழுத்துச் செல்லும் ரதம் ‘ஆட்டு ரதம்’ என்பதையும் நாம் அறிவோம். பிற்காலத்தில் அக்கினி பகவானின் வாகனமாக ‘ஆடு’ சித்தரிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இப்போது இவை ஆடா ? ஆட்களா ? குழப்பம் நீடிக்கிறது

Xxx

சோம மூலிகை பற்றிய அதிசயச் செய்தி

பஞ்சதச சோம 10-27-2

இந்த ‘15 சோமம்’ என்பதற்கு சாயனர் அற்புதமான விளக்கம் தருகிறார். சோமம் என்னும் அபூர்வ மூலிகை  சுக்ல பக்ஷ 15 நாட்களில் வளருமாம். கிருஷ்ண பக்ஷ 15 நாட்களில் அதன் இலைகள் வாடுமாம். தனால் அதற்கு 15 (பஞ்சதச) ஸோம என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கே பல முக்கிய விஷயங்களைக் கவனிக்கவேண்டும். R T H Griffith கிரிப்பித் என்பவர் 125 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ரிக் வேத மொழி பெயர்ப்பிலேயே , முதல் பக்கத்திலேயே, சோம லதை என்னும் தாவரம் பற்றி தவறான தகவலை வெளியிட்டார். அது போதை மருந்துச் செடி; காளான் வகையினது என்று. ஆனால் நம்மவரான சாயனரோ அது மரம் என்றும் 15 நாளில் வாடக்கூடியது , பின்னர் வளரக் கூடியது என்றும் புதிய தகவலைத் தருகிறார். இதனால்தான் சந்திரனுக்கும் சோமா லதைக்கும் ஒரே பெயர் போலும்.

இங்கே தாவரங்கள் பற்றிய அரிய அறிவியல் செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். இந்துக்கள் மட்டும் தாவரங்கள் வளர்ச்சியையும் சந்திரனையும் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். ஆனால் விஞ்ஞானிகளோ சூரியன்- தாவர வளர்ச்சி பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஒருவேளை, எதிர்காலத்தில் நாம் சொல்வதை அவர்கள் ஆதரிக்கக்கூடும்.

Xxxx

RV 10-30 ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன்

பத்தாவது மண்டல 30 ஆவது துதியிலும் பல புரியாத விஷயங்கள் வருகின்றன ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன் என்ற வரிக்கு சோம என்று வியாக்கியானக்காரர்கள்  உரை எழுதுவர் . இங்கே சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும்; சோம மூலிகையையும் குறிக்கும். ரிக் வேதம் முழுதும் பருந்து (Falcon or Eagle)  கொண்டு வரும் சோம குளிகை பற்றி புலவர்கள் பாடுகின்றனர். எவருமே சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை. கிளி, குயில், காகம், அன்னம் பற்றிப் பேசும் ரிக் வேதம் ‘பருந்து- சோம லதை’ பற்றியே சொல்லுகின்றன.

RV 10-30-5 சோம ஓஷதி

இதுமட்டுமல்ல. இதே துதியில் ஐந்தாவது மந்திரத்தில் சோம ஓஷதி (மூலிகை) என்பதற்கு தர்ப்பைப் புல்  அல்லது குச புல்  என்று உரை எழுதுகின்றனர். ஆக சோம என்பது உரிச் (Adjective) சொல்லாகவும் பயன்படுகிறது. நாம் பாயசத்தை சாப்பிட்டுவிட்டு அமிர்தம் !! என்று புகழ்வது போல ‘சோம’ என்பது பயன்படுகிறது. ரிக் வேதம் முழுதும் பசு, குதிரை, இரும்பு, இந்திரன் என்பன பல பொருள்களில் வருகிறது ; வெள்ளைக்கார மொழி பெயர்ப்பாளர்கள் இவைகளை மறைத்து விடுவார்கள் அல்லது மழுப்பி விடுவார்கள்

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். சிந்து சமவெளியில் கோட்டைகள் இருந்ததாகவும் அவைகளை ஆரியர்கள் அழித்ததாகவும் ஆரம்பத்திலேயே தப்பாக எழுதி இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களைப் படித்தறியமுடியாதபடி செய்துவிட்டனர். இரும்புக் கோட்டைகளை இந்திரன் அழித்ததாக ரிக் வேதம் இயம்புகிறது. அதை மொழி பெயர்க்கையில் ஆரியர் பற்றி வாய் திறவார். சிந்து சமவெளியில் இரும்பு கிடையாது என்று ஒரு புறம் எழுதிவிட்டு, அதை ஆரியர் அழித்ததாக எழுதிவிட்டு இரும்பு,  குதிரை எலும்புகள் எங்கே? என்று கேட்டால் மவுனம் சாதிப்பார்கள். ஆக இங்கு சோம என்பதற்கு சந்திரன், பருந்து, தர்ப்பை என்று பல பொருள்கள் வருகின்றன!!!

Xxxx

இரண்டு தாரைகள்

இதே 10-30 துதியில் இரண்டு தாரைகள் ( நீர் பெருக்கு ) என்பதற்கு ஏகதனா , வசதிவாரி என்று உரை எழுதுவர் ; இவை வேள்வி விஷயமா அல்லது நீர் நிலைகளா என்று விளக்கப்படவில்லை

Xxxx

குரு ஸ்ரவணன்  10-32-9

பத்தாவது மண்டல 32 ஆவது மந்திரத்தில் குரு ஸ்ரவணன் என்ற ‘பெயர்’ அல்லது ‘சொல்’ வருகிறது . ஸ்ரவண என்றால் கேட்பது என்று பொருள்; கேட்பதால் மட்டும் அறியப்படுவதால் வேதத்தை ‘சுருதி’ என்பர்; இதை அற்புதமாக சங்க காலத் தமிழர்கள் ‘கேள்வி’ என்று மொழிபெயர்த்தனர் ; பிராமணர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆன்ற கேள்வி நான் மறையாளர்’ என்பர். இதே பொருளில் ‘கேட்பவர்’ என்று சாயனர் உரை எழுதினார். வெள்ளைக்காரர்களோ இது ஒரு மன்னன்/ இளவரசன் பெயர் என்பர். இதற்கு அடுத்து வரும் துதியை சான்றாகக் காட்டுவர். 

Xxx

துஹ்சாசு  10-33-1

இதற்கு அப்படியே அகராதியில் பொருள் கண்டால் , பேய் அல்லது கெட்ட தேவதை , துஷ்ட தேவதை என்று வரும். ஆனால் லுட் விக் என்பவர் இதை பகை மன்னனின் பெயர் என்பார். பகைவர்களை நாம் பேய், பேமானி ,பேய்ப்பயல் என்னு திட்டுவது போல அவர் கொள்கிறார். இதன் மூலம் ஒரு பிசாசின் பெயரை நாம் அறிகிறோம்

Xxx

WOLF AND QUAIL- 10-39-13 ஓநாயும் காடையும்

இதற்கு உரை எழுதிய சாயனர், அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாஸ்கரை மேற்கோள் காட்டுகிறார். ‘இரவு’ என்னும் ஓநாயின் வாயிலிருந்து ‘உஷை’ (Dawn, Early Morning) என்னும் பறவையை மீட்டார்கள் என்று.

சங்கத் தமிழ் அகப்பாடல்களைப் போல இப்படி மறைபொருளில் பாடும் வழக்கம் ரிக் வேதத்தில் முதலில் துவங்கியதை ஒப்புக்கொள்கிறார்கள்

இரண்டாவது இது 1-112-8 துதியிலும் வருகிறது ஆனால் அங்கே அஸ்வினி தேவர்கள் செய்த அற்புதங்கள் பட்டியலில் வருவதால் வேறு பொருளும் இருக்கலாம். ஏனெனில் யாஸ்கர் காலத்துக்குள்ளேயே (கி.மு.850) வேதத்தில் உள்ள 600 சொற்களுக்கு பொருள் தெரியவில்லை என்று அரவிந்தர் தனது வேத அகராதியில் (Vedic Glossary by Sri Aurobindo)  சொல்கிறார்.

ஆகவே சாயனர், யாஸ்கர்  சொல் வதையும் ஒரு ஊகமாகவே கொள்ள வேண்டும் இதனால்தான் சங்கராசார்யார் போன்றோர் வேதத்தின் பொருள் காண்போரை மெச்சுவதில்லை. அதன் மந்திர ஒலியின் மஹிமையை மட்டுமே அவர்கள் போற்றுவர்.

Xxx

10-47-6 வைகுந்தன் , சப்தகு

இங்கு ஒரு அதிசய விளக்கம் வருகிறது. வைகுண்டம்/ன் என்ற பெயர் நமக்கு விஷ்ணுவின் இருப்பிடம் என்று தெரியும். அது ஒரு ரிஷியின் பெயர் – இந்திர வைகுண்டம்!!

அவரைப்பற்றிய வியப்பான செய்தி. அவர் விகுந்தா என்ற அரக்கியின் மகன்! அவரை இந்திரன் இரண்டாவது தாய் ஆக ஏற்றுக்கொண்டாராம். ஆக வேத காலத்திலேயே தேவர் – அரக்கர் கலப்பு உண்டு.  கச்ச தேவயானி- சுக்ராசார்யார் கதை, கிருஷ்ணனின் குடும்பத்தில் அரக்கர் சம்பந்தம் முதலியவற்றிலும்  இதை  அறிய முடி கின்றது

‘சப்தகு’ என்பதற்கு பெரும் துதி பாடுவோரின் பிரபு என்று பொருள் எழுதினார்கள். ஆனால் இது பிருஹஸ்பதியின் ஒரு பெயர் என்றும் அவருடைய தேரை/ ரதத்தை ‘ஏழு எருதுகள்’ (Drawn by Seven Oxen) இழுப்பதால் இந்தப் பெயர் என்றும் உரை எழுதியுள்ளனர் சிலர்.

வேதம் முழுதும் ரதத்தை இழுக்க, பல பறவைகள் , மிருகங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன .

கலைமான்கள் இழுக்கும் சாண்டா கிளாஸ் வண்டி Santa Claus Sledge drawn by Reindeer கூட வேதத்தில் உளது. பைபிளுக்குப் புறம்பான இதை கிறிஸ்தவர்களும் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள் (முன்னரே இது பற்றி எழுதியுள்ளேன்)

Xxx

10-48-8 பர்ணயன் , கரஞ்சன் 

இந்த மந்திரத்தில் இரண்டு பேய்கள் பற்றிய தகவல் வருகிறது. பர்ணயன் , கரஞ்சன்  என்ற இரண்டு மரத்தில் வசிக்கும் அரக்கர் பற்றி மந்திரம் எட்டில் (10-48-8) காண்கிறோம். மஹாபாரதத்தில் உள்ள யக்ஷப் பிரஸ்னம் என்ற பேயின் கேள்வி பதில் பகுதியை அறியாதோர் எவருமிலர். சங்க இலக்கியப் பாடல்களில் ‘அணங்குகள்’ பற்றி  அறிகிறோம். ஏரி , குளம், மலை, மரம் ஆகிய எல்லாவற்றிலும் அணங்கு  இருப்பதாக தமிழர்கள் பாடுவார்கள். அந் +அங்கு என்றால் உடல் இல்லாத (ஆவி) என்று பொருள்.

இந்த மந்திரத்தில் வரும் இரண்டு மரப் பேய்கள் பற்றி 1-53-8 மந்திரத்திலும் வருகிறது அங்கே ‘வாங்ருதா’ என்ற மேலும் ஒரு அரக்கர் பெயரையும் கேட்கிறோம் .

இதே துதியில் ‘கங்குகள்’ என்று ஒரு சொல் வருகிறது இவர்கள் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவிட்டனர்

ஒன்பதாவது மந்திரத்தில் ‘சாப்ய நமீ’ என்ற பெயர் வருகிறது – இவரை இந்திரனின் நண்பர் என்று சிலர் செப்புவர். ‘சய்யா’ என்பவரின் மகன் ‘நமி’ ; அவரை ‘சப்பிய நமீ’ என்பர் . பிற்காலத்தில் சமணர் பெயர்களில் ‘நமி’ நிறைய வருகிறது!

To be continued……………………………………………………

tags- பேய்கள், தேவதைகள்

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு ….2 (Post.10,205)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,205

Date uploaded in London – 13 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 2

ச.நாகராஜன்

“திரு நெடு வேல் இறை கந்த புராணம் அதைச் செந்தமிழ் செய்து தந்த

பொருவறு மெய்க் கச்சியப்ப சிவ புகழைப் பைந்தமிழிற் புகன்று தந்தான்

மருவுறு தில்லைப் பதி வாழ் மறைஞான குரவன் வரு வாமதேவ

குருவளர் தொன் மரபுதித்த  முருக பட்டாரகன் என்னுங்குரிசின் மாதோ

என்ற கவி வாக்கால் முருக பட்டாரகர் தான் மறைஞான சம்பந்த குருவின் மரபில் வந்தவர் என்பதை உறுதிப் படுத்துகிறார்.

தொண்டை நாட்டுப் பெருமையைப் பேச வந்தவர்,

சேக்கிழார் கலியனார் திருக்குறிப்பினார்

மேக்குறு பூசலார் விழையும் வாயிலார்

தேக்குமை யடிகளார் திகழு மூர்க்கனார்

ஆக்கமொடு உதித்தருள் அடைந்த நாடிதால்

என்று கூறி சேக்கிழார், கலிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், பூசலார் நாயனார், வாயிலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், மூர்க்க நாயனார் ஆகிய பெரியோர் அவதரித்த மண்டலம் தொண்டை மண்டலம் எனப் பெருமை படக் கூறுகிறார்.

முருகனே வந்து வீரசோழியச் செய்யுளை எடுத்துக் காட்டி அருள் பாலித்து மறைந்ததை ஆசிரியர் சிறப்புறப் பல செய்யுள்கள் மூலம் விவரிக்கும் பாங்கு அருமையாக இருக்கிறது.

பின்னர் தனது மாணாக்கரான கோனேரியப்பரை நோக்கி கச்சியப்பர், “ஸ்காந்தத்தின் ஏழாவது பகுதியான உபதேச காண்டத்தைத் தமிழ்ப் படுத்துக என்று அருள்கிறார்.

“மங்கலத்துறும் இடாடி மந்தலரிழிக்குஞ் செம்மை

யங்கமுளருனப் புத்தேள் அணி மகரத்தினின்றி

யங்கவுற்றிடு கரீரமென் றனைவோருங் கூறத்

திங்களினுருவ மூன்று திகழ் திருத் திங்கணாளில்

கச்சியப்பர் சிவபிரானொடு ஒன்றினார்.

கந்த புராணம் வாழ்க, ஆதிசைவர்கள் வாழ்க, என்று வாழ்த்துக் கூறி கந்த புராணத்தை எடுத்துரைத்தவர், ஆய்ந்தவர், கற்றவர், இனிக் கற்கப் போகின்றவர், உள்ளம் உருகிக் கேட்பவர்கள் ஆகிய அனைவரும் முக்திப் பேறை அடைவர் என்று உறுதி கூறி நூல் முடிவு பெறுகிறது.

நூலுக்கு அற்புதமாக அருள் வாழ்த்துரைகள் வழங்கியோரின் உரைகளில் ஒரு பகுதி இதோ :

திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் – கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள் ஆண்டு தோறும் இது போன்று சிறந்த நூல்களைப் பதிப்பித்து வருதல் பாராட்டத்தக்கது.

தருமை ஆதீனம் 27ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் – இந்நூலில் மூலப்பாடல் மட்டுமே இருந்த நிலையில் அவற்றுக்கு உரை எழுதப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுவது அறிந்தோம். இது சைவத்திற்கும் தமிழுக்குமாகிய தொண்டு

திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் கயிலைமாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ  காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் – பன்முகச் சிறப்புடன் நூல் வெளிவந்து பல்லாயிரம் பக்தர்களுக்கு விருந்து தந்து பரவசமூட்டிடச் செந்திற்கந்தன் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.

ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீமத் ராஜ.சரவணை மாணிக்கவாசக குரு பரமாச்சார்ய சுவாமிகள் – இவ்வரிய பயனுள்ள பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அனைவருக்கும் குருவருளும் திருவருளும் என்றும் முன்னிற்கவும் சைவக் கொள்கை நிறைந்து வாழும் அனைவருக்கும் இந்நூல் வரப்பிரசாதமாக விளங்குவதால் அனைவரும் பெற்று குருவருள் பெற்றிடவும் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம்.

விகாஸ் ரத்ன சிவஸ்ரீ கே. பிச்சை குருக்கள் – உரையாசிரியர் கூனம்பட்டி ஆதீனப்புலவர் உயர்திரு. இராம. மாணிக்க வாசகர் அவர்களின் ரத்தினச் சுருக்கமான அழகான உரை பாராட்டத் தக்கதாகும்.

மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனரும், முதல்வருமான சிவஸ்ரீ ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார் – “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி என்பார் நாவரசர். அவ்வாறு சிவ சிந்தையுடையோரால் ஆக்கப்பட்ட புராணங்களைப் படனஞ் செய்தும் செய்வித்தும் வந்தால் சிந்தை தெளிந்து ஏகாக்கிர சித்தமாய மகிழ்வுடன் வாழலாம் என்பது இந்நூலைப் பயிலுவோர்க்கு விளங்கும்.

திருச்சி, மலைவாசல் சிவஸ்ரீ M.N. கல்யாணசுந்தர சிவாச்சாரியார் – ஆதிசைவ மரபில் வந்துதித்த கச்சியப்ப சிவாசாரியார் புகழ் பாடும் இந்நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீள்பதிவு செய்து குருமரபினை நிலைநாட்டி வரும் எமது பேரன்புக்குரிய தில்லை கு. கார்த்திகேயசிவம் அவர்களின் இச்சேவை பாராட்டுக்குரியது. இப்புத்தகத்தை அன்பர்கள் வாங்கி படித்து குருவருள் பெற்றுய்ய ப்ரார்த்திக்கின்றோம்.

முத்தமிழ்ச் சைவ மாமணி சு. இராமலிங்க சுவாமிகள் (சீவம்பட்டியார்) – இது சைவ உலகிற்கு ஒரு அருட்கொடையாகும். சிவநேய மிகுந்த அன்பர்கள் கற்று உணர்ந்து சிவனருளைப் பெறுவீர்களாக

இந்நூலைப் பதிப்பித்த தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தனது பதிப்புரையில் 1) பழமையான நூலைப் பாதுகாத்து, மறுபதிப்பு செய்து, வரும் தலைமுறைகளுக்குத் தருவதும் உயர் சிவப்புண்ணிய தர்மமே ஆகும் 2) பழமையான இந்நூல் கருத்துக்கள் சைவ உலகைச் சென்றடைய வேண்டும் 3) காலவெள்ளத்தால் இந்த நூல் அழிந்து விடாமல் உயிர்பெற வேண்டும் என்ற இந்த மூன்று காரணங்களை முன் வைத்து அவற்றை மனதில் கொண்டு, தான் இந்த நூலைப் பதிப்பித்ததாகக் கூறுகிறார்.

கம்பன் கழகம் போல கச்சியப்பர் கழகமும் உருவாகி கந்தபுராணம் அனைத்துத் தமிழர் இல்லங்களையும் அடையும் என எதிர்பார்க்கலாம்.

“வாழ்க இந்த முயற்சி. நூலகங்களிலும் தமிழர் இல்லங்களிலும் தவறாது இந்த நூல் இடம் பெற வேண்டும்.” என்ற நமது வாழ்த்தையும் அளித்து இந்த நூல் தனது இரண்டாம் பதிப்பை விரைவில் காணும் என்ற நம்பிக்கையையும் இங்கு பதிவு செய்கிறோம்.

Tags- கச்சியப்ப சிவாச்சாரியார், புராணம், part 2

***

London Calling (Hindus) 11-10-2021 (Post No.10,204)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,204

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

XXX

11 -10– 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  SONG ON SARASVATI by Mrs Ranjani Dasarathi, Chennai -5 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  AND COMPOSER SRI SHYAMA SASTRIGAL-12 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10 mts.

xxx

SPECIAL TALK ON NAVARATRI BY SRI SULUR SIVA SHANMUGANATHA KURUKKAL, SYDNEY AUSTRALIA- 25 mts

Songs by – SELVI MEGHA, SELVI OVIYA, SELVI NAKSHATRA SRI NIDHI

60 minutes

–subham-

Tags- broadcast11102021

LONDON CALLING (TAMILS) 10-10-2021 (Post No.10,203)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,203

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

10-10-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  JANANI IYER, MELBOURNE, AUSTRALIA

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON AJMEER PUSHKAR GAYATRI & BRAHMA TEMPLES IN RAJASTHAN –  10 MTS

ABHIRAMI ANTHATHI, PATHIKAM – by MRS JAYANTHI SUNDAR  —  10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MISS

APARNA KRISHNAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY LONDON SWAMINATHAN

–25 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

XX

SPECIAL NAVARATRI PROGRAMME BY NITHYA SOWMY

SANGEETHA UPANYASAM- MUSICAL DISCOURSE ON GODDESS SHAKTI

XXXX

APPR. 100 MINUTES

tags — broadcast10102021

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1 (Post.10,202)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,202

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-1

ரிக் வேதம் உலகின் பழமையான நூல், உலகின் முதல் கவிதைத் தொகுப்பு (ANTHOLOGY)  , இன்றும் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே பழைய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெளிநாட்டு மண்டுகளும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. ஆனால் , வேடிக்கை என்னவென்றால், இப்போது இந்துக்களின் கல்யாணங்களில் பயன்படுத்தப்படும் மந்திரங்களில் உள்ள பல  சொற்களுக்குக் கூட  நமக்கு அர்த்தம் தெரியவில்லை. சிலர் அவைகளை ஆடைகள் என்பர்; சிலர் அவைகளை தேரின் பாகங்கள் என்பர். தினமும் மாட்டு மாமிசம் சாப்பிடும் பசுக்கொலை பாதகர்கள், அவை கல்யாண விருந்தில் வெட்டப்பட்ட மாமிசத் துண்டுகள் என்பர் . அதாவது ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வர்.

இந்துக்களைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு அர்த்தமே தேவை இல்லை ; மனித குலம் வாழும் வரை இவைகள் ஒலிக்கட்டும்; நன்மைகள் வந்தெய்தும்; தீமைகள் எல்லாம் நலியும் என்பதே. இந்தக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்திராவிடில் இன்று நம் கைகளில் வேதம் தவழாது ; வாய்களில் வேதம் முழங்காது.

குறிப்பாக ஒருவர் இறந்த பின்னர் 12 நாட்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் முழுதுமாக புரிவதில்லை. வெள்ளைக்காரர்கள் 30 பேர், ஆளுக்கு ஒரு கருத்து எழுதி இருக்கின்றனர். இன்று விக்கி பீடியாவில் கிடைக்கும் RALPH T H GRIFFITH கிரிப்பித் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் (FOOT NOTES) ‘எனக்கு அர்த்தம் புரியவில்லை’ என்று பக்கத்துப் பக்கம் எழுதியிருக்கிறார். வேதத்தை முழுதும் படிப்போருக்கு இது விளங்கும்.

நான் ரிக்வேதத்தைக் கரைத்துக் குடித்த கூத்தனுர் ஸ்ரீ சிங்கார சுப்ர மண்ய சாஸ்திரிகளுக்கு ‘உபந்யாச செக்ரடரி’யாக’ இருந்தேன். மதுரை வரும்போதெல்லாம் அவரது உபன்யாசத்துக்கு டி.வி.எஸ். (T V S) நிறுவனத்தார் கார் அனுப்புவார்கள். என் வீட்டிலிருந்து அவருடன் கூடவே சென்று அவர் உபன்யாசத்தைக் குறிப்பு எடுத்து தினமணிப் பத்திரிகையில் பிரசுரிப்பேன்.

அவர் காஞ்சி பராமசாரிய சுவாமிகள் வைத்த ரிக் வேத பரீட்சையில் தேறி, ஒரு வீடு, பசு மாடு, சால்வை, தங்கக் காசு பெற்றவர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நிலவுலகில் எவ்வளவு காலம் வாழப்போகிறார் என்பதைச் சொன்னவர். “ஏய் சிங்காரம் !என் கைகளில் அக்ஷதையைப் போடு என்று சொல்லி, அதில் கைகளில் தங்கியதை மட்டும் எண்ணிப் பார்த்து ‘ஓ நான் இவ்வளவு ஆண்டுகள் இருப்பேனா’ என்று வியந்தாராம். சாஸ்திரிகளுக்கே தெரிந்திருக்காது எதற்காக அக்ஷதையைப் போடச் சொன்னார் என்று; பின்னர்தான் தெரிந்திருக்கும் . நான் ஆர்வத்துடன் எத்தனை ஆண்டுகள்? என்று சாஸ்திரிகளைக் கேட்டபோது ‘அதல்லாம் சொல்லப்படாது’ என்று பிராமண  பாஷையில்  பதில் சொல்லிவிட்டார்.

ராமாயண உபன்யாசத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேத மந்திரங்களை முழங்குவார். வீட்டிற்கு வரும்போது இரவு 10 மணி ஆகிவிடும். முதல் நாள் உபன்யாசத்தில் சொன்ன வேத மந்திரங்களை மறுநாள் காலையில் கேட்டு எழுதி இயன்றவரையில் மதுரை தினமணியில் வெளியிட்டோம்.

வீட்டில் என் அம்மா சாப்பாடு பரிமாறும்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கோ அதை இரவு போஜனத்துக்கு செய்து வைக்கிறேன் என்பார். நாங்கள் எல்லோரும் ஏதோ அரிசி உப்புமா அல்லது இட்டிலி, தோசை என்று சொல்லுவாரோ என்று ஆர்வத்தோடு காது கொடுத்து நிற்போம். அவரோ “நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளுவார். அப்பேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கும் கூட வேதத்தின் ‘அர்த்தம்’ பெரிதல்ல.

நேரடியாக சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

பத்தாவது மண்டலத்திலுள்ள மந்திரங்களை முதலில் எடுத்துக் கொள்வோம் .

குளத்தின் நடுவில் பறவை வசிக்கிறது

10-5-1

‘பறவை சுனையின் நடுவே வசிக்கிறது’

ஆஹா, ஒரு கொக்கு அல்லது நாரை , வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்  உள்ளது போல  ஏரியின் நடுவில் மரத்தில் கூட்டு கட்டி வசிக்கிறது என்று நம் நினைப்போம்; ஆனால் விமர்சகர்களெழுதியது : ‘சூரியன் (பறவை) கிழக்கே (சுனையில்) உதிக்கிறான்’ என்பதாகும். ஆகையால் ரிக் வேத விஷயத்தில் வெள்ளைக்காரன் போல அவசரப்பட்டு மந்திரங்களை எடைபோடக் கூடாது.

Xxx

10-5-5

ஏழு சிவப்பு சகோதரிகள்

ஏழு என்ற எண் , ஏராளமான இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளியும் இந்த எண்ணையும் மூன்றையும் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளது .

‘ஏழு சிவப்பு சகோதரிகள்’ என்பதை அக்கினி தேவனின் 7 சிவப்பு நாக்குகள்’ தீக் கொழுந்துகள் என்று விமர்சித்து காளி , கராளி முதலிய 7 பெயர்களை அடுக்குகிறார் சாயன ர்.

சாயனரின் உரையை நோக்குமிடத்து புராணக் கதைகளுக்கான விதைகள் ரிக் வேதத்திலேயே ஊன்றப்பட்டது  தெளிவாகும்.

வேறு ஒரு இடத்தில் ‘ஏழு சகோதரிகள்’ என்பதற்கு பறவையியல் அறிஞர் தவே (Mr Dave) என்பவர் வங்காளத்தில் பெரும்பாலும் ஏழு ஏழாகப் பறக்கும் ஒருவகைப் பறவைகளை அவர்கள் இன்றும் ஏழு சகோதரிகள் என்று அழைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

இவ்வாறு எந்த ஒரு விஷயத்துக்கும் வேதமே மூலமாக இருப்பதால்தான் மநு போன்ற பேரறிஞர்கள் உலகத்துக்கும் தர்மத்துக்கும் வேதமே மூலம் (வேர்) என்கின்றனர்.

Xxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6

தருமத்தின் ஆணிவேர் வேதங்கள்; அவைதான் புனித சட்ட திட்டங்கள் ; இதற்கு அடுத்தபடியாக வருவது பாரபர்யமாகப் பின்பற்றப்படும் நடை முறைகள்; அதாவது அவரவர் குலத்தின், குடும்பத்தின் ஆசாரம் . இதற்கும் பின்னர் ஏதேனும் சந்தேகம் வருகிறதா; அந்தக்காலத்தில் வாழும் ஒழுக்க சீலர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் ; இதற் கெல்லாம் அடுத்ததாக மனச் சாட்சி என்று ஒன்றுள்ளது. அதுவே சொல்லும் எது தப்பு; எது சரி என்று.- மனு தர்ம சாஸ்திரம் 2-6

 “The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ reli-gion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6

पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥

 “The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94

வேதங்கள் என்பன நம்முடைய மூதாதையர்களின் , கடவுளரின், மனிதர்களின் சாச்வதமான கண்கள்; வேதங்களின் அறிவுரைகளை எவரும் முழுதும் படித்தறியமுடியாது . அதன் ஆழத்தையும் எவராலும் அளக்கமுடியாது ; இது ஆதாரம் உடைய சத்தியம்/ உண்மை–  மநு ஸ்ம்ருதி 12-94

Xxx

பகவத் கீதையில் கடல் பற்றிய வருணனை வருகிறது ‘அசலப் பிரதிஷ்டம், ஆபுர்யமானம்’  என்பது அந்தவரிகள் ; அதாவது எங்கும் நிறைந்தது ;அசைக்கவெண்ணாதது .

இந்த வரிகள் வேதத்துக்கும் பொருந்தும்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவை வருணிக்கையில் ‘அப்ரமேயம்’ என்பர்; அதாவது இவ்வளவு என்று அளவிட முடியாதவர். அதுதான் வேதம். சஹஸ்ரநாமத்தின் முதல் வரியே இறைவனை பூத , பவ்ய, பவத் பிரபு என்று போற்றும்; கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாம் இறைவன்; அதாவது அவன் காலத்தைக் கடந்தவன்; அவ்வாறே வானிலிருந்து ரிஷிகளால் ரேடியோ அலைகளைப் போல கேட்கப்பட்ட பேருண்மைகளே வேதங்கள்.

இதனால்தான் இன்று விக்கி பீடியாவில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ரிக் வேதத்தின் 10,000 மந்திரங்களை மொழிபெயர்த்த ரால்ப் டி .எச். கிரிப்பித் Griffith , பக்கத்துக்குப் பக்கம், ‘அர்த்தம் விளங்கவில்லை; தெளிவில்லாமல் இருக்கிறது;  ஒருவேளை இப்படி இருக்குமோ; Ludwick லுத்விக் இப்படி நினைக்கிறார்; Wilson வில்சன் இப்படி எழுதியுள்ளார்; சாயனர் இப்படிச் சொல்கிறார் என்றெல்லாம் அடிக்குறிப்பில் சேர்த்து வருகிறார்.  அதாவது அவரே  குழம்பி, நம்மையும் குழப்புகிறார்.

Xxx

கந்தர்வி 10-11-2

தட்சனின் மகள் சுரபி ; சுரபியின் மகள் கந்தர்வீ; அவள் ஒரு அப்சரஸ்; குதிரை இனத்தின் தாய் !! இங்கேயே புராணக்கதை வந்து விடுகிறது ஜொனாதன் ஸ்விப்ட் Jonathan Swift’s Gulliver’s Travels எழுதிய கல்லிவரின் யாத்திரை கதையை எல்லா சிறுவர்களும் படித்திருப்பார்கள். அது அரசியல் நையாண்டி ; லில்லிபுட் என்ற ஊரில் எல்லா மக்களும் கட்டை விரல் அளவுடைய மக்கள்; ஆகையால் மனித உருவமுள்ள கல்லிவரைக் கண்டு ஆச்கார்யமடைவர். இதற்கு அடுத்தபடியாக அவர் அறிவுள்ள குதிரைகள் வாழும் ஓரித்துக்குச் செல்வார். அந்தப் பெயர் ஆங்கிலேயர்களால்கூட உச்சரிக்க முடியாது. அதாவது குதிரை கணைக்கும் ஒலியைச் சேர்த்து எழுதிய பெயர்

Houyhnhnm . இந்தக் கதையை நினைவுபடுத்துகிறது  கந்தர்வீ கதை.

Xxx

 மாதலி – கவ்யர்கள்

10-14-3

மாதலி – இந்திரனின் தேரோட்டி;

கவ்யர்கள் – இறந்து போன (manes) முன்னோர்களின் ஒரு வகை.

மாதலி/ ரி பற்றிய சுவையான விஷயம்  மஹா பாரதத்தின் வன பர்வத்தில் உள்ளது ; பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விண்கலத்தின் பைலட் மாதரி; அவன் அர்ஜுனனை ஏற்றிக் கொண்டு இந்திரலோகம் செல்லும் போது, புண்ய ஆத்மாக்கள் ஒளி ரூபத்தில் வானவெளியில் நட்சத்திரங்களாக ஒளி வீசுவதைக் காண்கிறான். பின்னர் பூமிக்குத் திரும்புகிறான்.

ஆக மஹாபாரத மாதரியும் ரிக்வேதத்தில் வருகிறான். வியாசர் என்ற மஹாபாரத கால வரலாற்று ஆசிரியர்; முனிவர் நான்கு வேதங்களை தொகுத்ததால் மஹாபாரத, ராமாயண கதாபாத்திரங்கள் சிலரை நாம் ரிக் வேதத்தில் காண்கிறோம். அதாவது கி.மு. 3150-க்கு முன்னர் வாழ்ந்தோர் .

கவ்யர்கள் என்னும் பிதுருக்கள் (manes) பற்றி விளக்கம் இல்லை

Xxx

10-14-9 Ghosts

இப்பாடல் மயானத்தைச் சுற்றி வரும் பிசாசுகளை நோக்கி கூறப்படுவதாக சாயன பாஷ்யம் / உரை விளம்புகிறது

புறநாநூற்றில் மயானப் பேய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுடுகாட்டில் திரும்பிப் பார்க்கக்கூடாது  என்ற கருத்தும் புற நானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது ( பாடல்கள் 369-372)

To be continued………………………….

tags- ரிக் வேதத்தில் , புரியாத , பேய்கள், தேவதைகள்

UNKNOWN ANGELS AND DEMONS IN RIG VEDA-1 (Post No.10,201)

Research article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,201

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Rig Veda, the oldest book, and the oldest anthology in the world, contains many riddles. Sometimes the seers (Rishis) play with numbers, sometimes they play with words and sometimes with names. Even about the name, they talk about Secret Names of Gods. No one knows what they mean. Even the half baked, non- believers of Western countries could not say anything about them.

In the Yajur Veda the seers talk about 200 animals, plants, objects to be sacrificed in the Horse Sacrifice called Asvamedha. No one could identify several words in the list.  They don’t even know whether they mean a bird or insects or animals or plants!

Let us stick to Rig Veda and see how many unknown names crop up:

SEVEN RED SISTERS -10-5-5

Seven and Three are found in Indus Valley seals . Among the Number Seals they are at the top. For Hindus everything Sacred is 7 or 3. Seven rivers, cities, hills, continents etc are Sacred for them. Here Sayana rightly says they are the seven tongues of Fire/ Agni. They are given names Kaali, Karaali etc.

Seven is associated with rain bow colours (VIBGYOR) and Hindus called them Seven Horses of the Chariot of Sun God.

Mr Dave describes Seven Sisters as a kind of birds in Eastern Part of the country. Even Sayana interprets Seven differently as 7 meters in prosody, Saptaswara in  Music. That is why Hindus said Veda is the root of the world :-

MANU’S QUOTE ON VEDAS

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6

 “The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ religion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6

पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥

 “The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94

xxx

GANDHARVI : Rig Veda 10-11-2

Said to be the daughter of Surabhi, one of the daughters of Daksa and the Mother of the Race of Horses ( we are reminded of Jonathan Swift’s Gulliver’s Travels- Houyhnhnms are a fictional race of intelligent horses described in the last part of Jonathan Swift’s satirical 1726 novel Gulliver’s Travels. The name is pronounced either or. Swift apparently intended all words of the Houyhnhnm language to echo the neighing of horses)

(Seeds of all Hindu Mythologies are in the Rig Veda; one must  learn to read between the lines)

xxx

KAVYAS , MATALI 10-14-3

Kavyas – a class of manes, the spirits of a pious race of ancient times. No one knows who they are. Funeral hymns in the tenth Mandala are full of puzzles and riddles.

Matali is the charioteer of Indra; but in the Vanaparva of Mahabharata he is the pilot of Inter Galactic Space Shuttle who takes Indra to another galaxy and brings him back to earth. Even theory of Time Dilation is explained there. Stars are interpreted as departed pious people.

xxx

GHOSTS 10-14-9

According to Sayana, this stanza is addressed to the Pisacas/ ghosts and other evil spirits that haunts the place of cremation.

Sangam Tamil book Purananuru also talks about the spooky, eerie and unearthly things in the crematorium.

Next mantra talks about world’s first recorded dog Sarama’s two off springs, two dogs with four eyes. Sarama is Indra’s hound. Greeks borrowed this word from us and called Hermes (H=S in Greek; Sindhu becomes Hindu)

xxxx

USANAN -10-22-6

Usanaa or Usanas Kavya is frequently mentioned in the Veda as a favoured friend and companion of Indra.

(Indra is a title; not a single person; it means leader)

In the Bhagavad Gita, Krishna identifies himself with Usana among the Kavis/poets. Even during Rig Vedic days he became legendary. Probably the world’s first poet. He is known as Kavi. From him came Kavya; the oldest Tamil poet Tol Kappiyan also belongs to this clan. He is called Tol- Kavya. V=P/B are interchangeable. He is not the only one from this clan- Kavya Gotra; another Kaappiyaatru Kaappiyanaar of Sangam book Pathitru Pathu is also famous. They are all from Kerala, ancient Taml Chera Country.

xxx

SUSA, SUSI – 10-26-6

Ludwig says name of a man and a woman. According to Sayana and Wilson it is ‘he goat’ and ‘she goat’. But why Susa and Susi for goats? No explanation. This mantra also says about woollen garments

Vedic god Pusan has a goat drawn Chariot (it is in mantra 8). In later Puranas, the Vahana of Agni is also goat.

xxx

PANCHADASA SOMA- 10-27-2

Here Sayana gives some interesting details about Soma herb. Its leaves grow for 15 days in the bright half of month and dies in the next fifteen days in the dark half of a month. So, Soma is punned with Soma/moon because of this quality. Now we know the reason Soma herb is named after Soma, the moon because of this. Hindus always link Moon and the growth of plants, unlike others. Scientists couldn’t agree with us.

xxx

THE PURPLE TINTED EAGLE & SOMA OSHADI-10-30-2 AND 10-30-5

For the purple tinted eagle, commentators say Soma, The Moon (My view is that Soma herb is always connected with the falcon or eagle in many verses. So, it is not moon).

And in the fifth mantra Soma Osadhi is interpreted as Dharba or Kusa grass. In short Soma is interpreted according to their whims and fancies!

XXX

DOUBLE CURRENTS -TWO DHARAS – 10-30-10

Probably it meant two kinds of waters called Ekadhanaa and Vasativari.

( I don’t know what they mean; probably terms used in the Yaga??)

xxx

KURU SRAVANAN – 10-32-9

No one knows whether it is the name of a king or anyone that hears the hymn. Sayana interprets ‘the one who hear the praises’ (in the hymn); but others say it is the name of a King!!

xxx

DHUHISASU- 10-33-1

There is a scholarly discussion  on the word. Ludwig suspects it to be the name of a prince defeated by the king KURURSRAVANA. Literally the word means ‘the malevolent’.Ghost??

xxx

WOLF AND QUAIL- 10-39-13

Commentators say the quail is probably ‘Dawn’ delivered from the jaws of the wolf ‘Night’ by the TWIN LIGHT GODS. This is Yaska’s interpretation according to Sayana. Also in 1-112-8. Everyone, thus, agrees, that a lot of imagery, symbolism and allegory are in the Vedas. Wolf is not an animal here; quail is not a bird here!!!

xxx

VAIKUNDAN, SAPTAHU.10-47-6

Vaikunthaa was a female demon. Her son was Vaikuntha. That ‘Asuri’ woman becomes Indra’s second mother!

Saptagu means drawn by Seven Oxen!!

xxx

PARNAYAN, KARNJA – TREE DEMONS 10-48-8

Commentators say apparently ‘Tree Demons’. Sangam Tamils said Anangus/ Nymphs live in lakes, ponds, rivers and on Trees. Later Hindu Tamil epics said Brahmarakshas live in natural spots.

In 1-53-8 also we come across them along with one more Asura Vangrda

CHPAPANAMI- FRIEND OF INDRA- 10-48-8,9

xxx

KAVI, 10-49-3 father of Indra’s friend Usana

xxx

MRUGAYA, 10-49-5 A demon of the air.

Also occurring in 4-16-13 and 8-3-19

In Fourth Mandala, Mrgaya and Pipru are described as demons of the Air. And in the next line Indra is said to have struck down 50,000 black demons. Immediately the Anti Hindu Max Muller gang added it must be native aborigines!!! In all the world conflicts, we see enemies! But in Vedas only, all enemies are given Racial attributes!!! In 2000 year old Tamil literature Tamils killed only Tamils and they are all described as fiery enemies!!!

xxx

SRUTHARVARNAN -KING 10-49-5; may be a king.

PADGRIBI- DEMON  or some savage or enemy 10-49

xxx

GUNGUS – 10-48 WHO THESE PEOPLE ARE NOT KNOWN.

VAGINAN – 10-56-2 it meant strong, strong steed; apparently the name of the deceased.

ASUNITI – 10-59- 5 it is assumed it is the personification of a deity presiding over the funeral

USEENARANI- 10-59-10- It must mean wife of Usinara. The meaning is not clear. With the same name some people in Madhya Pradesh are found.

ASAMAATI- 10-60-2 Sayana says it is the name of a king; others don’t agree and they say it meant Unequalled.

BAJERATHA VAMSAM- 10-60-2 Griffith writes it is un certain whether the name of a prince or a country!

xxx

BOAR- 10-67-7 Sayana says bearers of excellent water!

SEVEN SISTERS – 10-71-3 commentators say tone of seven singers. One ornithologist says it meant a kind of birds. Even today they are known as seven sisters in Bengal.

ARJIKIYA, SUSOMA, VIBHASA – 10-75-5 commentators couldn’t even recognise these rivers.

SILAMAVATI and URNAVATI ARE RIVERS – 10-75-8 but no one knows where they are. Sayana says they are Sindhu’s other names.

xxx

10-85 is the most famous Wedding Mantras, used even today by the Brahmin priests:-

RAIBHI 10-85-6

This and the following two are feminine names; they may be secular songs; only a guess

NAARAASAAMSI

GAATHA

xxx

KOSAM 10-85-7 some say bridal outfit; others say chariot part; only a guess

KRTHYA 10-85-28 it may be the name of a deity or an evil spirit or demon

xxxx

ASASANAM, VISASANAM, ADHIVIKARTANAM 10-85-35

Some interpret it as parts of wedding dress; others as cutting, chopping meat. Hindus never serve non vegetarian food in weddings.

Even in wedding mantras (10-85) foreign translators could not get the meaning. They add ‘may be, probably’ etc. They say the wedding mantras are latest part of Vedas and yet they couldn’t get the meaning!

UPTO HYMN 85 IS COVERED IN TENTH MANDALA.

–SUBHAM–

tags- Soma plant, Demons, Asuras, Ghosts, Evil Spirits, in Rig Veda

கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 1 (Post.10,200)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,200

Date uploaded in London – 12 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 1

ச.நாகராஜன்

கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம் என்ற அருமையான நூலை சமீபத்தில் 4-10-2021 அன்று வெளியிட்டுத் தமிழுக்கு அரும் சேவையைச் செய்துள்ளது.

171 அழகிய  அரும் தமிழ்ச் செய்யுள்கள் கொண்ட இந்தப் புராணத்தை இயற்றியவர் ஸ்ரீமத் வாமதேவ முருக பட்டாரகர் ஆவார். ‘பட்டாரக என்றால் நல்லொழுக்கமும் உயரிய ஞானமும் உடைய அந்தணர் என்று பொருள். இவர் திருக்கைலாய பரம்பரை சிதம்பரம் வாமதேவ மறைஞான சம்பந்த சைவாசாரிய மரபினர் ஆவார். முருக பட்டாரகரின் தந்தையார் பெயர் பொன்னு பட்டாரகர். முருகவேளின் அணுக்க பக்தரான முருக பட்டாரகர் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தை அனுபவித்துப் படித்து அதை அனைவருக்கும் கூறி மகிழ, அன்பர்கள் பலர் அவரை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் பற்றி ஒரு நூலை இயற்றுமாறு வேண்டினர். அதன் பலனாக இந்த நூல் மலர்ந்தது. இதன் முதல் பதிப்பு 10-9-1917இல் வெளியானது. முதற் பதிப்பிற்கு முன்னுரை அளித்தவர் மாயவரம் தாலுக்கா ஸ்ரீ பொன்னுரங்கம் பிள்ளை ஆவார். அவர் தனது முன்னுரையில் இந்த நூலாசிரியரின் குமாரர் மாணிக்க பட்டாரகர் தனது தந்தையாரின் நூலிலிருந்து பல செய்யுள்களைக் கூறி மகிழ்விப்பது வழக்கம் என்று கூறி இருப்பதால் இவரது காலம் ஆயிர்த்து எண்ணூறுகளில் இருப்பது தெரிய வருகிறது.

முதல் பதிப்பில் செய்யுள்கள் மட்டுமே உள்ளது. 104 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் பெரு முயற்சி எடுத்து இதை வெளியிட்டுள்ளார்.

திரு கார்த்திகேய சிவம் சைவாகமங்களிலும் வல்லவர்; சிவத்தொண்டில் சிறந்தவர். தமிழுக்குச் சேவை செய்யத் துடிப்பவர். ஆகவே பல அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். நூலை அப்படியே செய்யுள் வடிவில் மட்டும் வெளியிடாமல் இதற்கு ஒரு அரிய உரையையும் சேர்த்து வெளியிட நிச்சயித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த அழகிய நூலுக்கு சுருக்கமான ஆனால் அற்புதமான உரையை கல்யாண்புரி என்ற கூனம்பட்டி ஆதீனப் புலவர் ‘தத்புருஷ தேவநாம சைவ.இராம.மாணிக்கவாசகன் சிறப்புறச் செய்துள்ளார்.

கடவுள் வாழ்த்து, நூல் பெயர், அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகிய நூலுக்குரிய அம்சங்களைப் பெற்றுள்ள இந்த நூல் உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை ‘குற்றமில்லாத அருட்குரவராகிய கச்சியப்ப சிவாசாரியர் சகாத்தம் எழுநூற்றில் கச்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றிய விதத்தை மெய்சிலிர்க்கும் வண்ணம் விவரிக்கிறது.

செய்யுள் நயமும் சொல் நயமும் பொருள் நயமும் கற்பனை நயமும் முருக பட்டாரகர் ஒரு தேர்ந்த புலவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கந்த புராணத்திற்கு அடியெடுத்து அருளியவர் சாக்ஷாத் முருகப்பிரானே ஆவார்.

‘திகடச் சக்கர செம்முக மைந்துளான்என்ற முருகப் பிரானின் அடியை கச்சியப்பர் சபையில் அரங்கேற்றத்தின் போது சொல்லி ஆரம்பிக்க ஒரு புலவர் எழுந்தார்.

“சுவாமிகாள்! தாங்கள் கூறிய முதல் அடியில் திகழ் தசம் என்பதை திகடசம் என்று கூறி இருக்கிறீர்! இப்படி அமைவதற்கு தொல்காப்பியத்தில் விதி இல்லையே! என்று கூற அதிர்ந்து போன கச்சியப்பர், ‘இப்படி எனக்கு அடி எடுத்துக் கொடுத்தவர் முருகனே தான் என பதில் கூறுகிறார்.

‘அப்படி எனில் அதை முருகனே சொல்லட்டும் அல்லது அதற்குரிய இலக்கண விதியைக் காண்பியும் என அப்புலவர் கூற ‘நாளை இதற்கு பதில் கூறுகிறேன் என்று பதில் சொல்கிறார் கச்சியப்பர். அன்று மனம் வாடி வருந்திய அவர் கனவில் தோன்றிய முருகப் பிரான். “வருந்தற்க! நாளை அவையில் சோழ நாட்டுப் புலவர் இதற்கான இலக்கண விதியை காட்டுவார் என்று கூறி அருள்கிறார். மறு நாள் அவை கூடியது. சோழநாட்டுப் புலவர் வீர சோழியம் நூலைக் காண்பித்து அதில் சந்திப்படலம் 18ஆம் செய்யுளை எடுத்துக் காட்டுகிறார். அதில் சரியான விதி இருக்கிறது. அனைவரும் அதிசயித்து அதை ஏற்றுக் கொள்கின்றனர். அப்படிக் கூறிய புலவர், “அவ்விடை மறைந்து போனார்!

வந்தவர் முருகப் பிரானே என்பதை உணர்ந்த அவையினர் சிரம் தாழ்த்தி கச்சியப்பரை வணங்கினர். தினமும் தனது நூலின் செய்யுள்களை விளக்கி ஒரு வருடத்தில் புராணத்தை முடித்தார் கச்சியப்பர்.

“மருவிய நாடொறும் வாசித்துப்

பொருளுரை செய்த புராணமதைக்

கருவறு தேசிகர் கச்சியப்பர்

ஒரு வருடத்தி னுற முடித்தார்

 10346 பாக்கள் அடங்கிய நூலை முறைப்படி அர்ச்சனை செய்து கச்சியப்பர் அரங்கேற்றம் செய்ய, தொண்டை நாட்டின் இருபத்தி நான்கு கோட்டத்தில் வாழும் வேளாளர்கள் பெரிதும் மகிழ்ந்து அவரைப் போற்றினர்; கச்சியப்பரை சிவிகையில் ஏற்றி காஞ்சி மா நகரை வலம் வந்தனர்.

இவ்வளவு விஷயங்களையும் தெள்ளு தமிழில் செய்யுள் இலக்கணம் வழுவாது அழகுறச் சொல்கிறது இந்த நூல்

இது முருக பக்தர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏன் தமிழ் மக்கள் அனைவருக்குமே படித்து மகிழ உகந்த ஒரு நூல். நூல் அழகுற வாசித்துப் பொருளைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக அச்சிடப்பட்டுள்ளது.

நூலின் மொத்தப் பக்கங்கள் 96. அச்சுப் பதிப்பு சிறப்புற அமைந்துள்ளது. வடிவமைப்பு சிறப்புற இருக்க நூல் தரம் வாய்ந்த தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் விலை ரூபாய் நூறு மட்டுமே.

இந்த நூலின் சில சிறப்புகளை அடுத்துக் காண்போம்              **         

அடுத்த கட்டுரையுடன் முடிவுறும்

tags — கச்சியப்ப சிவாச்சாரியார்,  புராணம்,  ஆதிசைவர்கள்,  நலவாழ்வு மையம், கார்த்திகேய சிவம்

புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்திபீடம்! பிரம்மா கோவில் (Post No.10,199)

GAYATRI MANDIR

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,199

Date uploaded in London – – 11 OCTOBER 2021

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 10-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆஜ்மீர் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்திபீடம்!

ஸ்ரீ நாராயண உவாச : த்வமேவ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ ச சரஸ்வதீ

ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்த ஸ்வேதா ஸிதேதரா

ஸ்ரீ நாராயணன் சொல்லுகிறார் :- ஹே! காயத்ரி தேவியே, தாங்களே ஸந்த்யையாகவும், காயத்ரியாகவும், ஸாவித்ரியாகவும், ஸரஸ்வதியாகவும், ப்ரஹ்மாவின் சக்தியாகவும், ரக்தஸ்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் ப்ரகாசிக்கிறீர்கள்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் 27வது பீடமாக அமையும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்தி பீடம் ஆகும். இந்தத் தலம் காயத்ரி மலையில் புஷ்கருக்கு அருகில் ஆஜ்மீரின் வடமேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புஷ்கர் பிரம்மா கோவிலுக்கு அருகே 7 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. சதியின் அங்கபாகங்களில் ஒன்றான மணிக்கட்டு விழுந்து அமைந்த சக்தி பீடம் இது.

தக்ஷப்ரஜாபதி தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. தாக்ஷாயணி எனப்படும் சதி தேவி தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று சிவபிரானை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க தக்ஷன் பெரும் கோபம் கொள்கிறான். சிவபிரான் அருளினால் வீர பத்திரனும் காளியாக மாறிய சதியும் யாகத்தை அழிக்கின்றனர். தக்ஷ வதமும் முடிகிறது. தேவி தனது தியானத்தால் அக்னியை மூட்டி அதில் தன் உடலை அர்ப்பணிக்கிறாள். நடந்ததை அறிந்த சிவபிரான் தாக்ஷாயணியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறான். யாராலும் தாண்டவத்தை நிறுத்த முடியாத நிலையில் விஷ்ணு பகவான் தன் சுதர்ஸன சக்கரத்தை ஏவி சதி தேவியின் உடலை 51 துண்டுகளாக ஆக்குகிறார். அவை பாரதமெங்கும் சிதறி வீழ்ந்தன. அவையே சக்தி பீடங்களாக ஆயின.

சதியின் மணிவேதிகா எனப்படும் இரு மணிக்கட்டுகள் ஆஜ்மீர் காயத்ரி மலைப் பகுதியில் விழுந்தன. ஆகவே இங்கு அமைந்துள்ள ஆலயம் மணிவேதிகா ஆலயம் எனப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு பின்னால் ஸ்தாபிக்கப்பட்ட விக்ரஹம் காயத்ரி தேவியினுடைய விக்ரஹம் ஆகும். இங்கு இரு விக்ரஹங்கள் உள்ளன. ஒன்று காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சதியினுடையது. இன்னொன்று அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்பவன் என்ற பொருளில் அமைந்துள்ள சர்வானந்தா என்ற சிவபிரானின் விக்ரஹம். இது சாமுண்டா ஆலயம் புஷ்கர் என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி விசேஷமாக இங்கு ஒன்பது நாட்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதே போல சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிது. சிவலிங்கத்தின் மீது பால் அபிஷேகம் செய்து வில்வப் பழம் நிவேதனம் செய்யப்படுகிறது.


காயத்ரி அறிவின் தெய்வமாகும். “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்பது காயத்ரி மந்திரத்திற்கான மகாகவி பாரதியாரின் தமிழாக்கம் ஆகும். காயத்ரி மந்திரத்தை உபாசித்து சாதனை மேற்கொள்பவர்கள் தமக்கு உகந்த இடமாக இதைக் கருதி இங்கு வருகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரமுள்ளது காயத்ரி மலை. பிரம்மாண்டமான தூண்களுடன் சிற்பச் சிறப்பைக் காட்டும் வண்ணம் இந்த ஆலயம் அமைந்துள்ளது.மலைகளில் மேருவும், பறவைகளில் கருடனும், புண்ணிய தீர்த்தங்களுள் புஷ்கரும் சிறந்தவை என்று பத்ம புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புஷ்கரானது புஷ்கர், கயா, கங்கா, குருக்ஷேத்திரம், பிரயாகை ஆகிய பஞ்ச தீர்த்தங்களுள் முதன்மை இடத்தைப் பெறுகிறது. பாண்டவர்கள் தமது அக்ஞாத வாச காலத்தில் ஒரு பகுதியை இங்கே கழித்தனர். பாண்டவர்கள் இங்கு ‘பஞ்ச குண்ட்’ என்ற இடத்தில் யக்ஞமும் செய்ததாக ஐதீகம்.

புஷ்கரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு முறை பிரம்மா யாகம் செய்யத் தகுந்த இடம் தேடி வான் வழியே வந்த போது இந்த இடத்தில் அவர் தாமரை வளைந்து நீர் ஊற்று சுரந்ததாம். அந்த இடமே புஷ்கரம் எனக் கூறப்படுகிறது. பிரம்மாவுக்கு உள்ள ஒரே கோவில் இது தான். ஒரு சமயம் சாவித்திரி தேவி பிரம்மாவை சபித்ததால் அவருக்கு வேறு எங்கும் ஆலயம் இல்லை என வரலாறு கூறுகிறது. இங்குள்ள பிரம்மா ஆலயம் முழுவதும் சலவைக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவில் ஏராளமான மக்கள் இங்கு கூடுகின்றனர்.பௌர்ணமி தினத்தை மையமாக வைத்து முன்னும் பின்னுமாக மொத்தம் ஏழு நாட்கள் இந்த விழா இங்கு கொண்டாடப்படுகிறது. பிரம்ம புஷ்கரணியில் ஸ்நானம் செய்து பிரம்மாவை வழிபட்டால் தலை எழுத்து மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயத்ரி தேவியும் சிவபிரானும், பிரம்ம தேவனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

PUSHKAR MELA

ஸ்ரீ காயத்ரி ஸ்தோத்ரம் கூறும் சத்ய வாக்கு இது :

மஹா பாப ப்ரஸமனம் மஹா ஸித்தி விநாயகம் |
இதம் கீர்தயேத் ஸ்தோத்ரம் ஸந்த்யா காலே ஸமாஹித: ||

கீர்த்தியைக் கொடுக்கும் காயத்ரி ஸ்தோத்திரத்தை ஸந்த்யா காலத்தில் படித்தால் மஹா பாபங்கள் விலகி அளவற்ற புண்யம் உண்டாகும். மஹா ஸித்திகள் ஏற்படும். நன்றி வணக்கம்!

tags–  மணிபந்த் ,சக்திபீடம், பிரம்மா கோவில், புஷ்கர் 

ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்! விபூதி மஹிமை (Post.10,198)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,198

Date uploaded in London – 11 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13 கட்டுரை எண் 10004 வெளியான தேதி

22-8-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 14

(46 முதல் – 50 முடிய)

ச.நாகராஜன்

46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!

அக்னி தேவதை கூறுகிறது:
நான் இப்போது வாசுதேவர் மற்றும் இதர தேவதைகளுக்கு ஆலயம் அமைப்பதன் பலன்களைக் கூறுகிறேன்.

கடவுளரின் கோவில்களை அமைக்க ஒருவர் ஆசை கொண்டால் அவருக்கு ஆயிரம் பிறவிகளில் அவர் செய்த பாவம் போய்விடும். யாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கிறதோ அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவம் நீங்கி விடும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோவில் அமைப்பதை அங்கீகரிக்கும் ஒருவரும் அவரது பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அச்சுத (விஷ்ணு) லோகத்திற்குச் செல்வார். ஹரிக்கு கோவில் ஒன்றை அமைக்கும் ஒருவர் அவரது ஒரு லட்சம் மூதாதையருக்கு சென்ற காலத்திலும் எதிர்காலத்திலும் விஷ்ணு லோகத்தை அளிக்கிறார். விஷ்ணுவிற்குக் கோவில் கட்டும் ஒருவர் அவரது மூதாதையரின் ஆவிகள் விஷ்ணு லோகத்தில் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மிகவும் கௌரவிக்கப்பட்டவர்களாய் அங்கேயே இருக்கின்றனர். தேவதைக்கு கோவில் அமைக்கப்படும் போது அப்படி அமைப்பவருக்கு பிராமணரைக் கொன்ற பாவம் உள்ளிட்ட அனைத்தும் போய் விடும்.

அக்னி புராணம் அத்தியாயம் 38- ஸ்லோகம் 1 முதல் 5 முடிய

47. நவநிதிகள் யாவை?

பத்ம, மஹாபத்ம, மகர, கச்சப, குமுத, நந்த, பத்ம, சங்க, பத்மினி ஆகிய இவையே நவ நிதிகளாகும்

 அக்னி புராணம் அத்தியாயம் 41 – ஸ்லோகம் 14

48 விபூதி தாரண மஹிமை

நாராயணர் கூறுகிறார்:

ஒரு நாளாவது ஒருவன் பஸ்மம் (திருநீறு/விபூதி) தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணிய பலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக:- என்னவெனில்  அவன் மஹாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போகும். இது சத்தியம்! சத்தியம்! சந்தேகமில்லை.

முக்தி என்னும் ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம், பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாம். பஸ்மோத்தூளனமுள்ளவன் மூர்க்கன் ஆனாலும் பண்டிதன் ஆனாலும் அவன் எவ்விடத்தில் புசிக்கின்றானோ அவ்விடத்தில் ரிஷபக் கொடியை உடைய பரமேஸ்வரன் தேவி ஆகியோரோடு புசிக்கிறான்

தேவி பாகவதம்,பதினொன்றாம் ஸ்கந்தம் அத்தியாம் 13

49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!

பசியுடன் வந்த துர்வாஸ முனிவரை கிருஷ்ணரின் அருளால் திருப்திப் படுத்தி அனுப்புகிறார் தர்மர்.

துர்வாஸ முனிவர் திருப்தியுடன் தர்மரை விட்டு அகன்றவுடன் தருமர் கிருஷ்ணனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

“கிருஷ்ணா, உன் அனுக்ரஹம் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலைமை மோசமாகப் போயிருக்கும். துர்வாஸரிடம் சாபம் பெறுவதைக் காட்டிலும் அவர் வருவதற்குள் உயிரை விட்டிருப்பேன்” என்றார்.

உடனே கிருஷ்ணன், “ தருமா! சிவபெருமானுடைய அனுக்ரஹம் தான் காரணம். துவாரகையில் இருக்கும் போது உபமன்யு முனிவர் எனக்குச் சிவ பூஜையை உபதேசித்தார்.வடுக கிரியில் ஏழு  மாதம் தீக்ஷை பெற்று சிவபூஜை செய்து தியானித்தேன். சிவனும் எனக்கு தரிசனம் தந்து சத்ருக்களை வெல்லும் சக்தியை அளித்தார். நீங்களும் சிவபூஜை செய்யுங்கள். அவர் அனுக்ரஹத்தால் உங்களுக்கு வரும் துன்பங்கள் பனி போல நீங்கும். எனக்கு அருள் புரிந்ததன் காரணமாக சிவபிரான் அங்கே வில்வேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்” என்றார்

  • சிவ புராணம் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறும் அத்தியாயம்

50. ஆதிசைவர் தோற்றம்!

சைவர்கள் ஏழு வகையானவர்கள் ஆவர்.

  1. அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹான சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7)  அந்ய சைவர்.

இவர்களில் அநாதி சைவர் சிவபிரானே.

ஆதி சைவர் எனப்படுவோர் சிவபிரானின் ஊர்த்வ முகத்திலிருந்து தோன்றியவர்கள் ஆவர்.

கௌசிகர், காசியபர், பரத்வாஜர், அத்திரி, கௌதமர் ஆகிய ஐந்து முனிவரும் சதாசிவனின் பஞ்ச முகங்களால் தீக்ஷை செய்யப்பட்டவர்களாம். அவர்கள் குலத்தில் பிறந்தவர்களே ஆதி சைவர்கள் ஆவர்.

***

புராணத் துளிகள் மூன்றாம் பாகம் முற்றிற்று.

INDEX

ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள், நவநிதிகள், விபூதி தாரண மஹிமை, கிருஷ்ணர் கூறிய சிவ பூஜை மஹிமை, ஆதிசைவர் மஹிமை.

tags- ஆலயம் கட்டுதல்,  பலன்கள், நவநிதிகள், விபூதி , ஆதிசைவர் , மஹிமை.