மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள் (Post.10,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,337

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும் ஒரு ரீடிங் READING கொடுத்துவிட்டேன். இப்போது அதர்வ வேதத்தில் நாலாவது காண்டத்தைப் படித்து வருகிறேன். மொத்தம் 20 காண்டங்கள். இன்னும் யஜுர் வேத அற்புதங்கள் வேறு பாக்கி இருக்கின்றன. இவ்வளவையும் சொல்ல ஒரு வாழ் நாள் போதாது. போகட்டும்; சப்ஜெக் subject டுக்கு வருகிறேன் .

வேதத்தில் இது வரை நான்,  4 தவளை அற்புதங்களைக் கண்டு பிடித்து விட்டேன்.

முதல் அற்புதம் வசிஷ்டர் பாடிய உலகப் புகழ் பெற்ற தவளைப் பாட்டு. ( RV 7-103) அதை கிரேக்க நாட்டு எழுத்தாளர் அரிஸ்டோபனீஸ் காபி copy  அடித்து கிரேக்க அர்சியல்வாதிகளை நக்கல் செய்தார். கம்பனும் அதை இமிடேட் imitate  செய்தான் ; முன்னரே நான் அதைப்பற்றிக் கதைத்து விட்டேன் (கட்டுரையின் கடைசியில் இணைப்பைக் காண்க . அது ரிக் வேத 7-103 பாடல்)

மேலும் 3 அதிசயங்கள்

1.சுடுகாட்டில் நடக்கும் தகனக் கிரியையில் , சடலம் தகனம் செய்யப்பட இடத்தில், குளிர்ந்த பின்னர் ஒரு பெண் தவளையை வையுங்கள் என்று ரிக் வேதம் செப்புகிறது.

2.கால்வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விடுங்கள்;  சிவப்பு; நீல நிற நூல்களால் சுற்றி அலங்கரியுங்கள் ; அதன் மீது அவக என்னும் நீர்த் தாவரத்தை வைத்து கால்வாயில் விடுங்கள் என்று அதர்வண   வேத மந்திரம் உரைக்கின்றது .

3.இன்னொரு அதர்வண  வேத மந்திரம் தவளையின் மூன்று விநோதப் பெயர்களை சொல்கிறது ;  அதற்கு அர்த்தம் புரியாத அத்தனை வெள்ளைக்காரப்பயல்களும் அது ஒலி  நயம் கருதி உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள் என்று சொல்லிவிட்டார்கள் . இதை ஆங்கிலத்தில் ஒனமோடோபியா ONOMATOPETIC என்பர். நாம் அலிபாபா கதைகளில் அப்ரகடப்ரா , அண்டாகா காசும் அபுல்கா காசும் என்பது போல.. ஆனால் நான் அதை நமபவில்லை; நமக்கு இன்று அர்த்தம் விளங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

இதோ 3 அதிசயங்களின் மேல் விவரம்:

XXXX

சுடுகாட்டில் பெண் தவளை; ரிக் வேதம் 10-16-14

தகன துதியில் 14 ஆவது மந்திரம்

குளிர்ந்தவளே! ஈர நிலமே ! பசும் புற்கள் நிறைந்தவளே !

இன்பம் தருபவளே!  இன்பம் ஊட்டும் மரங்கள் நிறைந்தவளே! (பூமாதேவியே ).

பெண் தவளைகளோடு  சேரட்டும் ; இந்த அக்னியை மகிழ்வியுங்கள்

இது பற்றி ப்ளூமபீல்ட்BLOOMFIELD  என்ற மொழி பெயர்ப்பாளர் சொல்கிறார்:-

உடலைத் தீ எரித்த பின்னர் , அதன் மீது நீர் ஊற்றப்படுகிறது . பின்னர் அங்கே சில செடிகள் ஊன்றப்படுகின்றன .நெருப்பு அணைந்த இடத்தில் ஒரு பெண் தவளையோ ஆண் தவளையோ வைக்கப்படுகின்றது இவை நீரின் பிரதிநிதி. நீரானது தீயைத் தடுக்கவும் அணைக்கவும் பயன்படுகிறது.

ஆயினும் வெள்ளைக்காரன் (Bloomfield) விளக்கம் சரியாகத் தோன்றவில்லை .

இன்னும் சிலர் இது மீண்டும் பிறப்பதற்கான அறிகுறி; செழிப்பு என்பதன் சின்னம் தவளை என்பர்.

Xxx

கால்வாயில் தங்கமும் தவளையும்

அதர்வண வேதம் — மூன்றாவது காண்டம் ; துதி 13, மந்திரம் 7

ஜலங்களே ! இது உங்களது இருதயம்;  புனிதம் நிறைந்தவர்களே ! இது உங்களது கன்று; இங்கே பாயுங்கள்; பிரவாகித்து எழும் நீங்கள் இந்த வழியாக வாருங்கள்.

இதற்கு முந்தைய ஆறு மந்திரங்கள் சொற்பிறப்பியல் ETYMOLOGY பற்றியது; அதை தனியாக எழுதுகிறேன்; அதில் குறள் 11 மற்றும் தமிழ்ச் சொல் வாரி/ மாரி உள்ளது

இப்போது ஏழாவது மந்திரத்தின் விளக்கத்தைக் காண்போம். எப்படி மதுரை பாரத்வாஜ கோத்திர பார்ப்பனனான

“உச்சிமேற் புலவர் கொள்” நச்சினார்க்கினியனின்  உரை இல்லாமற் சங்க இலக்கியத்தை நாம் அறிய முடியாதோ, அது போல கெளசிக சூத்திரம் இல்லாமற் நாம் அதர்வண வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாது!

அந்த சூத்திரம் சொல்லும் விளக்கம்:-

இப்பாடல் கால்வாய் வெட்டும் சடங்கு பற்றியது ; முதல் பாடல் முடிந்தவுடன் சிறிது தங்கம் அங்கே வைக்கப்படுகிறது ; இரண்டாவது பாடலின் பொழு து தங்கத்துக்குப் பின்னால் ஒரு தவளை FROG வைக்கப்படும் . அதன் உடலின் மீது நீளமும் சிவப்பும் கலந்த வண்ண நூல்கள் கட்டப்படுகின்றன. மூன்றாவது பாடலின் போது அவகா AVAKAA என்னும் நீர்தாவரம் அதன் மீது வைக்கப்படவேண்டும் இதன் பொருள் புரியவில்லை. அநத சடங்கிற்குப் பின்னர் அங்கே பொன்னும், தவளைகளும், தாமரைப் பூவும் சிதறிக்கிடக்கும்.

உண்மைதான் ; இதன் பொருளை அறிய இயலாத அளவுக்கு இது பழமையானது. உதவாக்கரை வெள்ளைக்காரன்கூட அதர்வண வேததத்தை கி.மு 1000 என்பான். நாமோ நாலு வேதமும் உருவானது வியாசர் காலம் (கி.மு.3150) என்று நம்புகிறோம் தங்கத்தை வேதம் ஓதும் பிராமணன் எடுத்துக் கொள்வான் என்று எவனாவது கதை கட்டினாலும், எதற்கடா? தவளை மீது குறிப்பிட்ட கலர் நூல், எதற்கு குறிப்பிட்ட ‘அவகா’ தாவரம் என்று நாம் கேட்கலாம். அவகா தாவரத்தை மீன் வளர்ப்போர் இப்போதும் வாங்கி மீன் தொட்டிக்குள் வைக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜன் இல்லாமல் வாழும் தாவரம் இது!

XXXX

நாலாவது அதிசயம்

கண்வகா , கைமுகா ததுரீ !!!

இவைகள் எல்லாம் தவளைகளின் பெயர்காளாம்.!!!

வெள்ளைக்காரப்பயல்களுக்கு விளக்கம் தெரியவில்லை.

இவை அர்த்தமற்ற ஒலி நயச் சொற்கள் என்று எழுதிவிட்டு தப்பித்துப் போய்விட்டான் . அவன் ‘முட்டாள்’ என்பது மற்ற மந்திரங்களைப் பார்க்கையில் நமக்குத் தெரிகிறது.

இப்படித்தான் பாம்புகளுக்கு ஆறு பெயர்கள் ஒரு மந்திரத்தில் வருகிறது. அவைகளில் அலிகி , விளிகி ALIGI, VILIGI என்ற பாம்புகளின் பெயர்கள் சுமேரியாவில் உளது. அதர்வண வேத பாம்புகள் எப்படிச் சுமேரியாவுக்குப் போயிற்று?

வெள்ளைக்காரனால் விளக்கம் சொல்ல முடியாது.

அது போல இந்த மூன்றுத் தவளைப் பெயர்களுக்கும்  மர்ம அர்த்தம் இருக்கலாம்! ஒரு சங்கரனோ நச்சினார்க்கினியனோ பிறக்கையில் இவைகளுக்கு விளக்கம் கிடைக்கலாம். அதுவரை நாமும்

ஹிக்கறி டிக்கரி டாக் தி மவுஸ் ரன் அப் தி க்ளாக்

என்று நாமும் நர்சரி பாட்டுப் பாடலாம்

எப்படி?

கண்வகா , கைமுகாததுரீ  FROGS ஃராக்ஸ்

கம்  டு  மை  ஹவுஸ் டு ஸீ எ பாக்ஸ் TO SEE A FOX   – என்று

KHANVAKHAA!! KAIMUKHAA!! TADUREE FROGS

COME TO MY HOUSE TO SEE A VERY GOOD FOX!

அடுத்த தவளைக் கட்டுரையில் எகிப்திய தவளை முக அரசி /கடவுள் )  இந்து மதத்தினரின் குழந்தைக் கடவுளே என்று காட்டுகிறேன்  TO BE CONTINUED………………………………………

XXX

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் …

https://tamilandvedas.com › ரிக்…

15 Dec 2016 — ரிக் வேத தவளைப் பாட்டு. ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் வசிஷ்டரும் அவரது …

Tags-   தவளைப் பாட்டு , தவளை, மர்மங்கள், கால்வாய், சுடுகாடு, வினோத பெயர்கள், வேதம்