TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 33 (Post No.9236)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9236

Date uploaded in London – –6 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -33

3-3-137

Kaala கால

Aha = pahal அஹ =பகல்

Ratri = iravu ராத்ரி = இரவு

இந்த 3 ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் தமிழர்கள் இன்று வரை பயன்படுத்துகின்றனர்

All these three Sanskrit words are used until today in Tamil

Commentators used Maasa which becomes month in English and Maatham in Tamil

Xxx

3-3-142

Gar haa – insulting, criticism

In Tamil it becomes Kariththal, kariththu kottukiran

கர்ஹா = கரித்தல், கரித்துக் கொட்டுகிறான்

Xxxx

3-3-156

Sakatam for cart, vehicle is in Sangam literature.

சகடம் , சாக்காடு = சங்க இலக்கியம், குறளில் வரும் சொல் = வண்டி

Valluvar use it as saakkaadu

North indians also use it

Xxxx

3-3-158

Commentators give vanchati for wish, want etc

வாஞ்சை = ஆங்கிலம்/வாண்ட்

We see van here = Wants.

சமான = சமம்= சேம் /ஆங்கிலம்

Samaana = same in English

Xxxx

3-3-161

Panini uses praarthana

That becomes Prayer in English

Iha is used fore here, similar to Ingu in Tamil

பிரார்த்தனை – இப்பொழுதும் இந்தியா எங்கும் புழங்கும் சொல்.

அது ஆங்கிலத்தில் ப்ரேயர் ஆகிறது.

Xxx

3-3-164

Muhuntham. Now adays it i

Used for a short period in wedding ceremonies

முஹூர்த்தம் என்பது ஒரு கால அளவு.

ஆனால் தமிழில் இன்று நல்ல நேரம் என்று ஆகிவிட்டது

But it means a  particular period of time

Xxx

3-3-171

Commentators use avasyam for certainly, surely, necessary

அவஸ்யம் என்பாதி இன்றும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர்

It is a common word used in many indian languages

3-3-172

Baram weight

பாரம் = சுமை , பளு

ர = ல என்ற வகையில் பர = பளு ஆகிவிட்டது

Baram becomes Balu in tamil

Xxx

3-3-173

Panini used Aasi for blessings and greetings

We have already looked at that word.

ஆசி, ஆசீர்வாதம் – மு ன்னரே பார்த்துவிட்டோம்

Here commentators Chiranjeevi, chiran jeevah to greet Long Live.

It is also common throughout indi a

பாஷ்யக்காரர்கள் சிரஞ்சீ வி – முதலிய உதாரணங்களைத் தருகின்றனர்

.

Xxx

3-3-175

Maa is dont, no, not in Sanskrit

It may be No, not

M and N are interchangeable. We have several such occurrences.

மா என்றால் செய்யாதே , கூடாது, —–ஆதே என்பது சம்ஸ்க்ருத அர்த்தம்.

இது நோ, நாட் என்று மருவியிருக்கலாம்.

Xxx

3-4-2

Luneeta, luneeta

Luneehi, luneehi

வெட்டு வெட்டு முதலிய இருமுறை சொல்லல் இந்திய மொழிகளுக்கே பொருந்தும். ஆதாவது இலக்கிய நடையிலும் எழுதப்படும்; பேச்சு வழக்கில் மட்டுமல்ல

Meaning Cut, Cut; already covered.

Repetition/ doubling is found only in Indian prose.

Xxxx

3-4-27

Anya, anyata- another

அன்ய, அந்யதர = அநதர்/ஆங்கிலத்தில் 

Xxx

3-4-31

Sarma is skin, leather

சர்ம /தோல் என்பது லத்தின் முதலிய மொழிகளில் டெர்ம ஆகும்

ச=ட ஆவதை முன்னரே கண்டோம்

Sarma becomes derma in Latin and other languages.

S = d

Dermatology = Study of Skin Diseases

Xxxl

3-4-33

Sela is clothes in Sanskrit

சேல = சேலை என்பது துணிகள் என்ற பொருளில் பாணினி காலத்தில் பயன்பட்டது.

இப்பொழுது தமிழில் அது பெண்களின் சேலையை மட்டும் குறிக்கும்

இதே போல வஸ்த்ர, வேஷ்ட  என்பது துணி என்பதைக் குறிக்கும். ஆனால் அது தமிழில் வேஷ்டியாகி ஆண்கள் அணிவதை மட்டும் இன்று குறிக்கிறது.

அது வெஸ்ட் என்று ஆங்கிலத்தில் மாறி உள்ளாடைகளை மட்டும் குறிக்கிறது .2700 ஆண்டுகளில் பல மாற்றங்கள்

Sela has been used for women s sari nowadays.

xxxx

3-3-35

Panini used Sushka and churn a

Sushka is dried ginger., known as sukku in Tamil

சுக்கு, சூர்ணம்/பொடி

Churna is powder in medical books.

xxxx

3-4-37

Karane is instrument கருவி

It is used in the famous line இந்த TOLKAPPIAM

Ayya yatthanar karanam enba

ஐயர் யாத்தனர் கரணம் என்ப – தொல்காப்பியம்

People in at the olden days made marriage code, when there was lot of false claims

பொய்யும் வழுவும் பெருகிய பின்னர் முனிவர்கள் திருமணச் சடங்கு விதிகளை ஏற்படுத்திய சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது ; கரணம் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்

Karanam is a Sanskrit word meaning ritual, code, dos and donts

Hanthi means kill, hunter

ஹந்தி = கொல் ; ஹண்ட்டர் = வேட்டைக்காரன்/ஆங்கிலத்தில்

Xxxx subham சுபம் xxx

tags-  Tamil in Panini-33

நடந்தவை தான் நம்புங்கள் – 6 (Post No.9235)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9235

Date uploaded in London – –6 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 5 வெளியான தேதி : 31-1-2021; கட்டுரை எண் : 9207

நடந்தவை தான் நம்புங்கள் – 6

ச.நாகராஜன்

1

 ஒரு பிரபல கர்நாடக வித்வானின் கச்சேரிக்கு ரஸிகர் ஒருவர் அடிக்கடி வருவது வழக்கம். (அந்த வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரா, செம்மங்குடி சீனிவாச ஐயரா என்பது நினவில் இல்லை – பழைய கால அமுத நிலைய மலிவுப் பதிப்புகளில் இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகத்தில் படித்தது இது). ஒரு கச்சேரி முடிந்தவுடன் பரபரப்பாக மேடைக்கு வந்த அவர் அந்த பிரபல வித்வானிடம், “இப்ப எல்லாம் நீங்கள் ரொம்ப நன்னா பாடறேள். ஆலாபனை, விதவிதமான ராகங்கள் எல்லாம் அற்புதம்” என்று கூறினார்.  அந்த வித்வான் புன்சிரிப்பை உதிர விட்டவாறே, மெதுவாகக் கூறினார் இப்படி; “அப்படியெல்லாம் புகழாதேள்! அவ்விடத்து ஞானம் தான் அதிகமாயிண்டிருக்கு!” குழுமியிருந்த அனைவரும் சிரித்தனர் – அவர் சொன்னதன் சூக்ஷ்மத்தைப் புரிந்து கொண்டு. (“நான் பாடும் படி தான் பாடிக்கொண்டிருக்கிறேன், முட்டாளே! உனக்கு இப்போது தான் ராகம் என்றால் என்ன, ஆலாபனை என்றால் என்ன என்று புரிந்திருக்கிறது!”) அவர் அங்கிருந்து நகர்ந்தார்!   

             2                        ஸ்பெயினைச் சேர்ந்த சராசடே (Sarasate) ஒரு பெரிய வயலின் கலைஞர் (வித்வான்) 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். (சுப்புடு போன்ற ஒரு!!) பிரபல விமரிசகர் ஒருமுறை அவரை ஜீனியஸ் (இசை மேதை) என்று புகழ்ந்து கூறினார். உடனே அவர் இப்படி பதிலடி கொடுத்தார் அவருக்கு :- “ஜீனியஸா! நானா?! கடந்த 37 வருடங்களாக ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் வயலினை வாசித்து பிராக்டீஸ் செய்து வந்திருக்கிறேன். இப்போது என்னை ஜீனியஸ் என்கிறார்கள்!”

தன்னைப் பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். “திறமையோ மேதைத் தன்மையோ தன்னை புகழழேணியில் உச்சிக்குக் கொண்டு வரவில்லை. இடைவிடாத தொடர்ந்த முயற்சியின் காரணமாகவே தான் இந்தப் புகழ் தனக்குக் கிட்டி இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த வயலின் கலைஞராகத் தன்னை ஆக்கியது தனது ப்ராக்டீஸே” – என்பதை அவர் உலகிற்கு வலியுறுத்தினார்.

               – The Power of Habit என்ற நூலில் ஜாக் டி. ஹாட்ஜ் (Jack D. Hodge)

              3                                நிகோலா பாகனினி (Nicolo Paganini) என்பவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வயலின் கலைஞர். அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பும். உடனுக்குடன் பதில் சொல்வதிலும் அவர் வல்லவர். ஒரு சமயம் இத்தாலியில் முழு ஆர்கெஸ்ட்ராவுடன் அவர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.  அரங்கு முழுவதும் மக்கள் திரள். புது புது உத்திகள், புது புது இசை வடிவம். அனைவரும் மெய்மறந்து அதில் லயித்து விட்டிருந்தனர். இசை நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தனது ஒரு அபாரமான இசையமைப்பை (Composition) வாசிக்க ஆரம்பித்தார்.  அப்போது திடீரென்று அவரது வயலினில் ஒரு கம்பி அறுந்தது. அனைவரும் திகைத்து ஆவென்று கூவினர். ஒரு நிமிடம் திகைத்த பாகனினியோ தனது தலையை ஒரு முறை அசைத்தார். பின்னர் தனது இசையைத் தொடர்ந்தார். அப்போது இன்னொரு கம்பி அறுந்தது. அனைவரும் என்னடா இது என்று ஆச்சரியப்பட்டனர். சற்று நேரத்தில் இன்னொரு கம்பியும் அறுந்தது. காமெடியன் போல நின்ற அவர், மூன்று கம்பிகள் வயலினிருந்து அறுந்து கீழே தொங்க, வயலினைத் தொடர்ந்து தன் இசையமைப்பை விடாமல்  வாசித்துக் கொண்டிருந்தார். ஒரே ஒரு கம்பியில் தன் முழுத் திறமையையும் காட்டி தனது இசையை அவர் முடித்த போது அரங்கமே அதிர்ந்தது – கைதட்டலாலும், ஆச்சரியக் கூக்குரலாலும்.                        திறமைசாலிகள் எந்த நிலையிலும் திறமைசாலிகளே!

***

tags- நடந்தவை, நம்புங்கள் – 6, 

INDEX 48 FOR LONDON SWAMINATHAN’S NOVEMBER 2016 ARTICLES (Post.9234)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9234

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

XXX

NOVEMBER 2016 TAMIL POSTS

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404); 30 நவம்பர் 2016

ஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)29/11

திருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்! (Post No.3399)29/11

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! (Post No.3396)28/11

அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை ! (Post No.3395)28/11

பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்! (Post No.3393) 27/11

ஆண்களுக்கு உயிர் ‘வேலை’, பெண்களுக்கு உயிர் ‘கணவன்’:தமிழர் கொள்கை (Post No.3391)26/11

கண்ணே! கண்மணியே! காளிதாசன் உவமைகள் (Post No.3388)25/11

போர்க்கள உருவகம்: பரணரும் காளிதாசனும்! (Post No.3384)24/11

நெடுவாச ல்பாளையத்துறை கொண்டான் கதை (Post No. 3380)22/11

ஒரு யானையின் சோகக் கதை!(Post No.3379) 22/11

உலகு இன்பக் கேணி! பாரதி சொன்னது உண்மையே! (Post No.3376) 21/11

மரமும் மேகமும் கொடை வள்ளல்கள்- புலவர்கள் புகழாரம் (Post No.3373)20/11

சம்பாதி செய்த அற்புதம்: கம்பன் கூறும் செய்தி!! (Post No.3369) 19/11

நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி! (Post No.3367)18/11

அனுமாருக்கு இரண்டு இறக்கை! கம்பன் புதுத் தகவல்!( Post No.3363)17/11

இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை! (Post No.3358)16/11

கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’! (Post No.3350) 13/11

உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும்? வள்ளுவன் தகவல் (Post No.3355)15/11

கம்ப ராமாயணத்தில் பரத நூலும், சுரத நூலும்! (Post No.3352)14/11

வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி (Post no.3348)12/11

ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!! (POST NO.3344)

கம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து(Post No.3342)11/11

குடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை (Post No.3337)9/11

9000 கோடி படைவீரர்! கம்பன் சொன்ன பொய்!! (Post No.3333)8/11

பாம்பு தலையில் பூமி! கம்பன், காளிதாசன் தரும் தகவல்(Post No.3330)7/11

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு! (Post No.3326)6/11

வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)5/11

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்; உலகத்தை உண்மை தாங்குகிறது! (Post No.3319)4/11

புத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)3/11

5 மஹா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக யக்ஞங்கள் (Post No.3312)2/11

S. NAGARAJAN’S TAMIL ARTICLES ARE ALREADY INDEXED SEPARATELY—3402, 3398, 3392, 3389, ,3381, 3386, 3383, 3377, 3374, 3371, 3368, 3364, 3360, 3361, 3357, 3353, 3349, 3345,3341, 3339,3335, 3331, 3327,3323, 3320, 3317,3314,3311, 3308,

XXXXXXXXXXXXX

ENGLISH ARTICLES – NOVEMBER 2016

Stupidity Anecdotes (Post No.3403); 30/11

Rough and Ready Anecdotes (Post No.3401)29/11

Foreign Scholar who studied Tamil Language for 63 years! (Post No.3397)28/11

Hindu Quotations on Food (Post No.3394)27/11

My Challenge to Dalits in Britain (Post No.3390) 26-11

Caste Issue in Britain; Remove Tamil Word “Pariah” from English Dictionaries!(Post No 3387)25/11

Temper Anecdotes (Post No.3385)

It’s a Beautiful World! (Post No3382)23/11

Significance of Bangles for Hindu Ladies (Post No.3378) 22/11

Jewellery of Hindu Women! 12 for Head and 15 for Ear ! (Post No.3375) 21/11

Tact Anecdotes! Coffee for the Cat! (Post No 3372) 20/11

ADVICE TO JUDGES! (Post No.3370)19/11

Tolerance Anecdotes: Abraham Lincoln and his Horse! (Post No.3365)18/11

Why do Hindus dissolve ash in the River Ganges? (Post No.3366)18/11

Why do Hindus stop the Funeral Procession at Three Places? (Post No.3362)17/11

Single is each man born; Single he dies: Manu (Post No.3359)16/11

COURT TRIAL ANECDOTES (Post No3354) 14/11

Man Proposes, Destiny Disposes!(Post No.3343)11/11

Hindus’ belief in Gem Stones (Post No.3356)15/11

SUPREME COURT JUGDES DON’T KNOW THE LAW! COURT ANECDOTES (Post No.3351)13/11

Don’t Tax Brahmins: Manu’s Warning! (Post No.3347) 12/11

Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a German book (Post No.3346)12/11

FIVE DAY HINDU MARRIAGE- PART 4 (Post no.3340)

FIVE DAY HINDU WEDDING- Part 3 (Post No.3338) 9/11

Rare Pictures of Temples of South India from A French Book (Year 1887) – Post No.3336;9/11

FIVE DAY HINDU MARRIAGE – PART 2 (Post No.3334) 8/11

Rare Pictures of Dravidians, Tamils and Tamil Nadu from A French Book (Year 1887)8/11

Five Day Hindu Marriage- Part 1(Post No.3329)7/11

Rare Pictures of People of India from 1887 French Book (Post No. 3328)7/11

A Wife is a Gift from the Gods- Manu Smrti (Post No 3325)6/11

Rare Pictures of Thanjavur Plates and Pots from 1887 French Book (Post No. 3324)6/11

Sarvam Satye Pratishtitam ! Everything Rests on Truth (Post No.3322)5/11

Bull Fighting by Kallans (Post No.3318)4/11

Miracle Cure for Eczema! (Post No.3316)3/11

Hindu Fire Ceremonies: 7 Paka Yajnas and 14 Srauta Yajnas (Post No.3310)1/11

Why do Hindus say ‘Idam Na Mama’/ It is Not Mine? (Post No. 3309)1/11

British M.P. visits 7 Hindu Temples on New Year Day! (Post No.3313)2/11

–SUBHAM–

TAGS- INDEX 48, NOVEMBER 2016,

ரத ஸப்தமி ஸ்லோகம் (Post No.9233)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9233

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழைய ‘பேப்பர் கட்டிங்’ PAPER CUTTINGS குகளைக் களைந்து வருகிறேன். இதோ நான் வெட்டி வைத்த ரத்த சப்தமி ஸ்லோகம் . இவ்வாண்டு 2021ல் பிப்ரவரி 19ம் தேதி.வருகிறது. அனைவரும் தலையில் அல்லது தோளில் எருக்கம் இல்லை மீது அரிசி கொஞ்ச்ம வைத்து குளிக்க வேண்டும். மஹாபாரத பீஷ்மரின் நினைவாக .

Rata saptami Sloka

பழைய ரத சப்தமி கட்டுரைகளையும் காண்க



ரத சப்தமி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ரத-சப்…

· Translate this page

3 Feb 2014 — Please click here for the article. உலக மகா தியாகி பீஷ்மர் நினைவு தினம் · Following a special Puja to Lord Surya …



சூரியனே போற்றி! – 1 (Post No.9216) | Tamil and …

tamilandvedas.com › 2021/02/02

  1.  

Translate this page

3 days ago — tamilandvedas.com, swamiindology.blogspot.com … தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி

–subham–

 tags – ரத சப்தமி

வள்ளுவர் கதை STORY OF TIRU VALLUVAR (Post No.9232)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9232

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழைய ‘பேப்பர் கட்டிங்’ PAPER CUTTINGS குகளைக் களைந்து வருகிறேன். இதோ நான் வெட்டி வைத்த லண்டன் ‘கலசம்’ பத்திரிகையில் வெளிவந்த வள்ளுவர் கார்ட்டூன்/ சித்திரப் படக்கதை  கதை.

STORY OF TAMIL POET TIRUVALLUVAR, AUTHOR OF TIRUKKURAL

–SUBHAM–

TAGS- VALLUVAR STORY

ORIGIN OF SPEECH IN PANINI SIKSHA(Post No.9231)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9231

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Four Types of Speech in the Rig Veda

Speech plays an important part in the utterance of the name of the god. The word speech has a broad meaning.

There are four types of speech.  Only the learned men know them. The first three are always kept secret. It is the fourth one that man speaks.

Rigveda 1-164

The four kinds of speech are

Para, Pasyanti, Madhyama and Vaikhari.

Para is subtle.

Pasyanti is only suggestive.

Madhyama has no phonetic quality of production of sounds. It simply creates a movement of one’s larynx or throat for the purpose of uttering words.

Vaikhari is an articulated speech with accent and meaning.

Xxx

The Panini Siksha

Teachings Panini gives us an account of the articulation of words as under:

The individual Atman – soul- wishing to express something, sends orders through buddhi/intellect to the manas/mind. The mind then strikes at kayagni/the fire of the body and the latter urges the marital/ the vital wind, and the vital wind passing through Ursa/ the chest generates Svarajambu/sound vibration. The sound vibrations rise up to the top of the head from inside the murdhan, a cerebral point and strikes on various spots in the mouth, thereby creating varnam/letters which are divided into five categories.–Panini Shiksha 6-7-8

With Paninis grammar Sanskrit language reached its classic form with developed vocabulary. The greatest linguistic achievement of this remarkable language is that the alphabet begins with vowel s followed by consonants with a definite science of phonetics.

Paninis grammar recognised the root as the basic element of word, classified 2000 monosyllabic roots and introduced the proper use of pre fixes suffixes and inflexions. It is considered the greatest intellectual and scientific achievement of the ancient civilisation of the human race before the nineteenth century, when the whole world was in dark about the subject.

The work contain s about 4000 rules for the cases,

moods, persons, tenses, sandhi/euphonic combination etc.

Patanjali s Mahabhasya /Great Commentary, is composed as a commentary on Paninis grammar. Kashika Vrtti/ Benares commentary of Jayadeva Nd Vamana is also a commentary on Paninis work.

Xxx

The common man utters god’s name with Vaikhari or articulated speech. As one goes from vaikhari to madhyama and then to Pasyanti and para, ones meditation becomes more internal. The higher form of speech is mentioned in the Rig Veda.

The altar is the limit of the earth, the sacrifice is the centre of the universe. Soma is the seed of the powerful horse and Brahman is the highest abode of peace

Rig Veda 1-164-35

SOURCE BOOK –

THE HINDUS A NOBLE RACE, PRANAB BANDYOPADHYAI, SOAS LIBRARY, LONDON

Xxx

tags- tags- origin of speech, Pani, Siksha

யானை குழியில் விழுந்தால் தவளை கூட உதை கொடுக்கும்- ஞான மொழி (9230)

COMPILED   BY KATTUKKUTY

Post No. 9230

Date uploaded in London – –     5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்- 21

Kattukutty

EVERY SUCCESSFUL PERSON HAS A PAINFUL STORY,

EVERY PAINFUL STORY HAS A SUCCESSFUL ENDING,

SO ACCEPT THE PAIN AND GET READY TO SUCCESS !!

XXX

YOU CANT BUY LOVE, BUT YOU PAY HEAVILY FOR IT!!!

THERE IS ONE PERFECT CHILD IN THE WORLD,

AND EVERY MOTHER HAS IT.

XXX

HAVING ONE CHILD MAKES YOU PARENT, HAVING TWO

YOU ARE A REFEREE !!!

XXX

NOBODY CAN TOUCH WORDS,

BUT WORDS DO TOUCH EVERYBODY,

WE ARE THE MASTERS OF OUR UNSPOKEN WORDS,

AND SLAVE TO OUR SPOKEN WORDS!!!!

XXX

SUCCESS IS GETTING WHAT YOU WANT,

HAPPINESS IS WANTING WHAT YOU GET!!!

XXX

THE BEAUTIFUL THING ABOUT TODAY IS THAT

YOU GET THE CHOICE TO MAKE IT

BETTER THAN YESTERDAY!!!

XXX

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்

வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல்எடுக்க வேண்டாம்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

என்று எழுதியிருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை

பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்

கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்”

XXXX

நான் இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டுமே…..

என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே.

எனக்கு பிடித்தவர்களை என்னிடமிருந்து தூரமாக்கி விடாதே…..

XXX

ஒரு இளநீர் மற்றொரு இளநீரிடம் பேசிக்கொண்டது :-

இளமையில் வழுக்கை ஏற்படுவதும், முதிர்ச்சியில்

வழுக்கை இல்லாமல் போவதும் நினைத்துப் பார்த்தால்

ஆச்சரியமாக இல்லை ???

XXXX

யானை படுகுழியில் விழுந்து விட்டால் தவளை கூட பின்னாலிருந்து

ஒரு உதை கொடுக்கும்

                                    பாரசீக பழமொழி.

XXXX

அறிவாளியுடன் ஒருமுறை உரையாடுவது ஒருமாதம் நூல்களை

படிப்பதை விட மேலானது

                                       – பழமொழி

XXXX

ஒழுக்கம் பிச்சைக்கார உருவத்தில் இருந்தாலும்

கௌரவிக்கப்படும்

                                        – ஜெர்மன் பழ மொழி

XXXX

தனிமை

தனிமை இனிமையானது – வேதாந்திக்கு

தனிமை அழகானது – ஓவியனுக்கு

தனிமை பயங்கரமானது – இரவில் பயந்தவனுக்கு

தனிமை அலுப்பானது – தலைவிக்கு

தனிமை போரடிப்பது – மாணவனுக்கு

தனிமை கொடுமையானது – கோழைக்கு

தனிமை பலவீனமானது – பெண்ணுக்கு

தனிமை சுகமானது – சோம்பேறிக்கு

தனிமை ஆனந்தமானது – பைத்தியத்திற்கு

தனிமை ஆபத்தானது –  செல்வந்தருக்கு

தனிமை இசைவானது – ஆராய்ச்சியாளனுக்கு

தனிமை துணிவானது – வீரனுக்கு

தனிமை பயனற்றது – பேச்சாளனுக்கு

தனிமை அன்பானது –  பக்தனுக்கு

தனிமை வாய்ப்பானது – சங்கீத் சாதகனுக்கு

தனிமை வெறுப்பானது – காதல் வயப்பட்டோருக்கு

தனிமை மயக்கம் தருவது – குடிகாரனுக்கு

தனிமை உவப்பானது – கஞ்சனுக்கு

XXX

நூல்கள் நிறையவும், நண்பர்கள் குறையவும் இருக்க வேண்டும்.

                                            ஸ்பானிஷ் பழமொழி.

XXXX

கொஞ்சு மொழிகள்

அன்புக்குரியவர்களை நாம் “கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே”

என்று கொஞ்சுகிறோம் அல்லவா???

அது போல பிரஞ்சுக்காரர்கள் “சிறு கீரையே “என்கிறார்கள்.

சீனர்கள் “என் லவங்கப்படையே “ என கொஞ்சுகிறார்கள்.

அரபு நாட்டில் “என் வெள்ளரிக்காயே “என்பதே கொஞ்சும் மொழி.

“இளம் தளிரே “என இனிமையாக கொஞ்சுகிறார்கள பின்லாந்தில்.

“மலரே” என்பது கிரீஸ நாட்டு வழக்கம்.

“பின்கட்டே”என்பார்கள் போலந்துக்காரர்கள்

“காட்டு மலரே” என்று கொஞ்சுவார்கள் லிதுவேனியர்கள்.

“சின்னஞ்சிறு பன்றியே” என்று செல்லமாக கொஞ்சுவது திபேத்தியர்.

“சிறு நத்தையே” என்பது வியன்னா மக்கள் வழக்கம்.

“வெட்டுக் கிளியே”எனகிறார்கள் ஸெர்பியர்கள்.

யூகோஸ்லேவியாவில் “சிறு புல்லே” என்று கொஞ்சுகிறார்கள்.

XXXX

இது தெரியும்……அது தெரியுமா ???

சிறுத்தை தெரியும், உறுத்தை தெரியுமா???

அச்சகம் தெரியும், கச்சகம் தெரியுமா???

குறும்பி தெரியும், எறும்பி தெரியுமா???

கோகுலம் தெரியும், நகுலம் தெரியுமா???

வள்ளுவம் தெரியும், பிள்ளுவம் தெரியுமா???

உறுத்தை — அணில்

கச்சகம்—-குரங்கு

எறும்பி——யானை

நகுலம் ——கீரி

பிள்ளுவம்—-யானை

XXXX

ஒரு சராசரியான பெண், தனக்கு மூளையை விட அழகுதான்

அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பாள்.

ஏனெனில் ஒருசராசரி மனிதன் சிந்திப்பதைவிட, தன்கண்ணால்

காண்பதையே நம்புகிறான்.

XXXX

நாளாக நாளாக கணவன்மார்களின் “வருமான” சக்தி,

தங்கள் மனைவிமார்களின் “விரும்பும்” சக்தியை சரிக் கட்டவே முடிவதில்லை.

XXXX

ஒரு மாணவனின் ஆராய்ச்சி

காந்தம் என்பது இரும்பை இழுக்கக் கூடியது.

அந்த காந்த சக்தி என்னும் “பவர்” பெண்களிடம் தான் அதிகம்

காணப்படுகிறது!!!

XXXX SUBHAM XXXX

 TAGS- ஞான மொழிகள் 21,

ஜனவரி 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் INDEX(9229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9229

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

January

1-1-21     9094   மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணரின் பதில்!

2-1-21     9096   ஹிந்துக்களின் எண்ணிக்கை – 5

3-1-21    9100    டிசம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்!

4-1-21     9103    Truth Magazine – ஒரு அறிமுகம் 4-1-21 ஞானமயம் உரை

5-1-21     9105    சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சுபாஷிதம்)

6-1-21     9111  மஹரிஷி சூளி!

7-1-21    9115   காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபாலதாஸர்!

8-1-21    9119   புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத்1 (1-யோக ரகசியம்,2 –

            பரமபதம்)

9-1-21    9123    புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத் 2 (3- முக்தி அடைய

            உள்ள மூன்று யோகங்கள்)

10-1-21  9125  விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ரிகார்ட் செய்தது யார்? (Truth vol 88-2)

11-1-21  9130  பெற்றோருக்கு பணிவிடை செய் – யமனின் உபதேசம்!

12-1-21  9133  ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவின் திரண்ட வடிவமே!

13-1-21  9137  ‘ய’ என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? (11-1-21 ஞானமயம்

              உரை)

14-1-21  9141   சூரியனைப் போற்றித் துதிப்போம்! புகழும் வளமும் பெறுவோம்!

15-1-21   9145   நடந்தவை தான் நம்புங்கள் – 3 (2-8992 3-12-20200

16-1-21    9148  நல்ல ஒரு ஆங்கில இதழ் இனி வராதா? (Kalyana kalpataru)

17-1-21  9152  என்னே விதியின் கொடுமை! (சுபாஷிதம்)

18-1-21 9157   காயத்ரி மந்திரத்தின் பத்து பகுதிகள்; 24 எழுத்துக்களின் அக்ஷர 

            தேவதைகள்

18-1-21 9160   பா.கண்ணன் அறிமுக உரை – 17-1-21 உரை

19-1-21 9162  அறிவியல் வியக்கும் ஸ்ரீ சக்ர ரகசியம் (ஞானமயம் 18-1-21 உரை)

20-1-21  9166  புராணத்துளிகள் 3- அத் 3 (7-எள்,தர்ப்பையின் முக்கியத்துவம்  

          ஏன்; 8- பரீக்ஷித் பெயர் 9- திருதராஷ்டிரனுக்கு விதுரன் அறிவுரை)

21-1-21 9170  ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

22-1-21 9173 சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

23-1-21  9177 உதவிக் குறிப்புகள் – 15 (191-210)

24-1-21  9180  அன்னமும் கொக்கும் வெள்ளை நிறம்! இரண்டிற்கும் என்ன

            வித்தியாசம் (சுபாஷிதம்)

25-1-21  9184  நடந்தவை தான் நம்புங்கள்! – 4

26-1-21  9189  ஒளிவட்ட உண்மைகள்! (ஞானமயம் 25-1-21 உரை)

27-1-21  9192 தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 1 (ஞானமயம்   

           தைப்பூசம் ஆறு நாள் விழாவில் 24-1-21 அன்று பேசிய உரை!)

28-1-21  9195   தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 2

29-1-21  9199  தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 3

30-1-21 9204  ஹிந்துக்களின் எண்ணிக்கை -6 (Truth Vol 88 No 20; 4-12-20)

31-1-21 9207  நடந்தவை தான் நம்புங்கள் – 5

***

 TAGS- ச.நாகராஜன் , ஜனவரி 2021, கட்டுரைகள்

Tolkappiam – a Compilation or Original? Third chapter an Appendix? (Post No.9228)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9228

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Summary in English (This is the summary of my Tamil article with attachments)

Tolkappiar used ‘they say ‘ or ‘He says’ in over 300 places in the three books on Letters (Ezuthu), Word (Sol) and about Tamil Traditions (Porul).

What did he mean by this journalistic jargon, ‘they say’, ‘it is said that’?

Commentators say he mentioned the book before him written by Agastya.

Tolkappiam is a grammar book in Tamil, which Tamils consider the oldest Tamil work available now.

*****

My Views

All the three books were written by the same author, who lived during the mysterious Kalabra (Jains from Karnataka) rule or just after that in 4th or 5th century. The last book on Porul (Tamil Traditions) is not an appendix or a later addition.

At the same period came two more books Tirukkural and Silappadhikaram (all the three books used ADHIKARA, a Sanskrit word , mostly used  by Jains to denote Chapter or Book)

These three verbs ‘Enmanar, Enba, Moliba’ which occur at least 305 times are uniformly used in all the three chapters. Also used by Post Sangam authors. Tamil classification puts the other two books Tirukkural and Silappadikaram in Post Sangam period. (See my attachments in Tamil article posted today giving 305 words).

 Dravidians put forth a curious statement saying that wherever Tolkappiar speaks about Vedas, Gods Varuna and Indra, Eight Types of Marriage put forth by Manu Smrti etc are interpolations!!

Last but not the least, Tolkappiar’s period is different from the period of Tolkappiam. The book in the present form is later. Same with Ilango and Silappadikaram. Book came later than the original author.

Dravidians created a Tolkappiar with moustache to demolish the commentators’  writing that he was a Brahmin Rishi. Old books and old commentators say that he belongs to Jamadagni clan and Kavya Gotra. Tolkappiar means one who belongs to Old Kavya Gotra. His real name was Truna Dumagni according to old Tamil Encyclopedia Abhidana Chintamani of Singaravelu Mudaliyar and 700 year old commentaries.

Dravidias are notorious for wiping out the holy ash from the Tiruvalluvar pictures after 1967. When they came to power in 1967, they defaced Tiruvalluvar and gave him a ‘widow like’ look. Now they have made Tolkappiar  a moustached Brahmin !!!

Strange indeed are the ways of Dravidians!!!

taggs- Tolkappiam, Third chapter, book, appendix

தொல்காப்பியர் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? (இலக்கணம் ) எழுதினாரா? (Post.9227)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9227

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில உண்மைகளை அவரே தன து நூலில் காட்டுகிறார். அதை ஆதாரங்களுடன் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் ஒரு  ஜோக்.. திருவள்ளுவர் உருவத்தைக் காட்டும் பழந்தமிழ் நூல் களில் அவர் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். 1967ல் திராவிடக் கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தவுடன் அவர் நெற்றியில் இருந்ததை அழித்து விதவை போல ஆக்கிவிட்டனர்.ஆனால் தொல்காப்பியர் படத்தை எந்த நூலிலும் காண முடியாது. தொல்காப்பியர் காப்பியக் குடியில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர் என்றும் அவருடைய உண்மையான பெயர் த்ருண தூமாக்கினி என்றும் பழைய உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘அபிதான சிந்தாமணி’யிலும் இந்த விஷயம்தான் இருக்கிறது.

காப்பியக் குடி – காவ்ய கோத்ரம் – கவி = ரிக் வேதமும் கிருஷ்ணனும் (பகவத் கீதையில்) புகழும் உஷனஸ் கவி. ரிக் வேத காலத்திலேயே அவர் மிகப் பழைய கால கவி என்பப்படுகிறார்!!!

மீசை வைத்த பிராஹ்மணன் !

ஜமதக்கினி முனிவரின் மகன், பரசுராமனின் சகோதரன். அத்தகைய பெருமை மிகு குலத்தில் உதித்தவர் என்பதே பொருந்தும் இதற்கு இன்னும்  இரண்டு  எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்  கேரளத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பரசுராமன் ‘ஒரிஜினல்’ Original அல்ல. அந்தக் குலத்தில் வந்த , அவரைப் போன்ற சிறப்பு மிக்கவர். இதே போல ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பரசுராமன் (கர்ணனின் குரு ) வருகிறார். மஹாபாரத பரசுராமன் ‘ஒரிஜினல்’ அல்ல. அகத்தியர் என்பதும், பரசுராமன் என்பதும் கோத்திரப் பெயர்கள். நாம் மதுரைக்காரன் என்றவுடனே அவன் செந்தமிழ் பேசுவான் மதராஸ்காரன் என்றால் சம்ஸ்கிருதம் பேசுவான் (வாடா , கஸ்மாலம்; கஸ்மலம் = பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்ட கண்ணன் பயன்படுத்திய சொல் – கஸ்மலம் ) என்றெல்லாம் பொதுப்படையாகக் கொள்வதை போன்றதே இதுவும்.

தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நட்டு மலர்களை வெளியிட்டபோது தொல்காப்பியருக்கு மீசை வைத்து படங்களை வெளியிட்டது! பாவம் அவர் பிராமணர் இல்லை என்று காட்ட இந்த முயற்சி. ஆனால் சிவபெருமானுக்கே மீசை உள்ள பழைய படங்கள் இருப்பது அந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. போகட்டும் . சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் .

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம், திருக்குறள் , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இவை மூன்றும் சமணர் ஆடசிக் காலத்தில் — சுமார் 4, 5ம் நூற்றான்டில் தோன்றியவை என்றும்  முன்னரே காட்டிவிட்டேன்)

தொல்காப்பியத்தின் சிறப்பே பொருள் அதிகாரம்தான். தொல்காப்பியருக்கு சுமார் 1000  அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் பல்வேறு விஷயங்களை கதைத்தாலும் இப்படி தனி அதிகாரமாக எழுதவில்லை. ஆனால் இந்தப் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்பது சிலர் கருத்து. ஏனெனில் இதன் சொல் அமைப்பும் , பொருளடக்கமும் அப்படிப்பட்டவை என்பது அவர்கள் வாதம். இந்திரன், வருணன் ஆகியோரை தமிழ்க் கடவுள் என்று பாடிவிட்டார் தொல்காப்பியர் . அதுமட்டுமல்ல பலராமனின் பனைக்கொடி முதலிய விஷயங்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத பதத்தையும் பயன்படுத்திவிட்டு நான்கு ஜாதிகள் பற்றியும் பாடுகிறார். அதில் அந்தணரை முதலில் வைக்கிறார். அது மட்டுமல்ல தர்மார்த்த காம மோக்ஷ என்ற வரிசையை அப்படியே தமிழில் திருக்குறள் போலவே அறம்,பொருள், இன்பம், வீடு என்று பேசுகிறார்.

எனது முடிவு

கீழேயுள்ள இணைப்புகளில் தொல்காப்பியர் 300 இடங்களுக்கும் மேலான வரிகளில் ‘என்மனார்’, ‘என்ப’, ‘மொழிப’ எந்றெல்லாம் பாடியிருக்கிறார். இது பத்திரிகையாளர் பயன்படுத்தும் (Journalists Jargon) வழக்கு. ‘அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’, ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறியப்படுகிறது’, ‘பேசப்படுகிறது’ என்ற வகையைச் சேர்ந்தது.  முதல் சூத்திரமே “எழுத்தெனப்படுவது ……………………… “ என்று துவங்குகிறது —

சிலர் , எங்கெங்கு தனக்குப் பிடிக்காத விஷயங்கள் வருகின்றதோ அவற்றை எல்லாம் இடைச் செருகல் (Interpolation)  என்று சொல்லி விட்டனர் . சில வெளிநாட்டுக்காரர்கள் மூன்றாவது அதிகாரமான பொருள் அதிகாரம் பிற்பாடு வந்தது என்றும்  கூறிச் சென்றனர் (Kamil Zvelebil )கமில் சுவலபில் கூட இப்படிச் சொன்னதாக நினைவு.)

ஆனால் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை அல்ல என்பதை அவர் ‘என்ப’, ‘மொழிப’ , ‘என்மனார்’ என்பதை ஒரே வேகத்தில் , ஒரே மூச்சில்  (cogently, uniformly) பாடுவதை 300 இடங்களையும் கவனிப்போருக்கு விளங்கும் .

தொல்காப்பியர் காலத்தை அறியவும் இது உதவுகிறது. ‘என்ப’ என்பதை இவரைப் போலவே திருவள்ளுவரும் அதிகம் பயன்படுத்துகிறார். சங்கப் புலவர்கள் இதை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்குக் கிடைத்த தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்களும் – ஒரே காலத்தவை – களப்பிரர்  காலத்தவை – களப்பிரர் எனப்படும் மர்ம (கர்நாடக சமணர்?? ) ஜாதி ஆட்சி முடிந்த காலத்தவை. அதாவது 4 அல்லது 5ம் நூற்றாண்டு .

இன்னொரு விஷஜ்யத்தையும் சொல்ல வேண்டும். தொல்காப்பியர் ‘ஒரிஜினல்’ வேறு. நாம் மனதிற் கற்பனை செய்யும் தொல்காப்பியர்  வேறு. அதாவது இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது

உண்மையானால், அவர் கஜபாகு (கிபி.132) காலத்தில் வாழ்ந்தவரே. ஆனால் அவர் பெயரிலுள்ள சிலப்பதிகாரம் அந்த இளங்கோ யாத்தது இல்லை. அது போலவே தொல்காப்பியர் என்பவர் அ கத்தியர் மாணாக்கர் என்றால் அவர் வேறு; அவர் பெயரில் நாம் படிக்கும் தொல்காப்பியம்  வேறு.சங்க இலக்கியத்திலும் காண முடியாத நீண்ட உவமை உரு பு பட்டியலைக் கொடுப்பதால் இவர் பழங்கால விதிகளை, சூத்திரங்களை, நமக்கு 5ம் நூற் றாண்டில் தொகுத்துத் தந்தார் என்று சொல்லுவதே  பொருந்தும்.

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தொல்காப்பியர்  மிகப் பழங்காலத்தவர். ஆனால் தொல்காப்பிய நூல்  பிற்காலத்தது.

திராவிட ரகஸியம்

தொல்காப்பியத்துக்கு சொல்லடைவு (Word Index)  வெளியிட திராவிடர்கள் பயப்படுகிறார்கள் . ஏனெனில் அவர் யார், எக்காலத்தவர் என்பது  வெளிப்பட்டுவிடும். அதாவது அவர் சொல்லும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் முதலியன வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும். திருவள்ளுவர் துணிச்சலாக குணம், காமம், காலம், தானம், என்றெல்லாம் சம்ஸ்கிருத்ச் சொற்களை முதலில் வைத்தே கவி பாடினார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவன் காமத்துப் பால் என்று ஒரு அத்தியாத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் வைத்தார். இதைப் போலவே த்ருண தூமாக்கினி என்ற பெயர்படைத்த பார்ப்பன தொல்காப்பியரும்  உவம இயல் என்று ஒரு பிரிவுக்கே சம்ஸ்கிருதத் சொல்லை பயன்படுத்துகிறார். ஏனெனில் இவர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற உவமை மன்னன்  காளிதாசன் காலத்துக்குப் பிற்பட்டவர்கள். சங்கப்  புலவர் சிலரும் வள்ளுவனும் உவமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் கையாளுகின்றனர் .

முதல் இரண்டு அதிகாரங்களில் வேத கால மக்கள் எழுத்தின் பிறப்பிடம் பற்றிப் பாடியதை தொல்காப்பியர் நமக்குத் தருகிறார். கர , கார (அ -கர, உ-கார )  என்பதை பற்றி பாணினி சூத்திரம் செய்தது போலவே இவரும் சூத்திரம் செய்கிறார் . இவர் காலத்தில் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்குவது இருந்ததால் அதுபற்றியும் சூத்திரம் செய்கிறார். மேலும் சம்ஸ்கிருத நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் அது பற்றியும் பாடுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக இவருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து நூலை உலகிற்கு அளித்தது நான்கு வேதங்களில் கரைகண்ட பார்ப்பனன் அதங்கோட்டு ஆச்சார்யா என்பதை பனம்பாரனார் பாடிவிட்டார். அக்கால மன்னர் பெயர்கள் மஹா கீர்த்தி! நூல்களின் பெயர்கள் பூதபுராணம்!! , ஊரின் பெயர் கபாடபுரம்!!! , அவர் படித்தது ஐந்திரம்!!! என்றெல்லாம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் வருகிறது. அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாக விளங்கின.

305 இடங்களில் “மொழிப , என்ப, என்மனார்” என்பதெல்லாம் அகத்தியர் சொன்னதை இவர் திரும்பிச் சொல்கிறார் என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். “முந்து நூல்” என்று பனம்பாரானார் சொல்லுவதும் அகத்தியமே என்பது ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் துணிபு

ஆக முடிவுரை —

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒருவரால் இயற்றப்பட்டதே.

ஒரே காலத்தில் — திருக்குறள் காலத்தை ஒட்டி – 4, 5-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதே .

தொல்காப்பியர் பெயரில் இந்த நூல் இருந்தாலும் இதை தொகுத்து நமக்குத் தந்தவர்கள் பிறகாலத்தவரே.

வாழ்க தமிழ், வளர்க தொல்காப்பியன் புகழ்

–subham—

tags தொல்காப்பியர், காப்பி அடித்தாரா?, தொகுத்தாரா ?, இலக்கணம் , எழுதினாரா?