வரருசி தமிழனா? க-ட-ப- யாதி எண் முறையை அவர் கண்டுபிடித்தாரா ?(Post 9106)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9106

Date uploaded in London – –5 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

க-ட-ப-யா-தி எண் முறை என்றால் என்ன?

எழுத்துக்களுக்கு சில எண்களை ஒதுக்கும் முறையாகும்.

தமிழில் கூட ‘க’ என்பது ஒன்றையும் ‘அ’ என்பது எட்டையும் குறிக்கிறது.

இது போல சம்ஸ்க்ருத எழுத்துக்களுக்கு எண்களை ஒதுக்கும் முறை ‘க-ட-ப-யாதி’ எண் முறை எனப்படுகிறது.

ஏன் இதற்க்கு இப்படி ‘கட்டமுட’ சப்தம்?

தமிழில் 18 மெய் எழுத்துக்களையும்

கசடதபற,

ஙஞணநமன,

 யரலவழள

—வல்லினம், மெல்லினம், இடையினம் என்று சொல்லுவோம்

அதில் முதலில் உள்ள வல்லின எழுத்துக்களின் பெயரில் அமைந்தது இது. க, ட , ப , ய  என்ற வரிசைக்கு ‘எண்  1’- என்று சொல்லிக்கொண்டே போகும் . கீழே அட்டவணையில் முழு விவரம் உளது.

கடபயாதி முறையால் நமக்குக் கிடைக்கும் அதிசயச் செய்திகள் என்ன? வரருசி என்பவர் இதை உருவாக்கியதாக ஒரு கருத்து உளது. அவரது காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. சிலர் 2000 ஆண்டு என்றும் சொல்லுவார்கள். இவர் “ழ” சிறப்பு தமிழ் எழுத்தையும் இந்த முறையில் புகுத்தி அதற்கு எண் / நம்பர் கொடுத்துள்ளார். “ழ” என்னும் வளை நாமடி ஒலி (Retroflex) தமிழில் மட்டுமே உண்டு. ஆகையால் இவர் தமிழராகவோ, தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவோதான் இருக்க வேண்டும். இதற்கு சில இடங்களில் 3 என்றும் இன்னும் சில இடங்களில் 9 என்ற மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அதிசயச் செய்தி

இந்த முறையில் எழுத்தைக் கண்டுபிடிக்க, வலமிருந்து இடமாகப் படிக்க வேண்டும் . இதே முறையில்தான் மக்கள் சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் எழுத்துக்களை எழுதினர். ஒருகாலத்தில் அதை நாம் படிக்க இந்த எண்களும் உதவலாம்.

மூன்றாவது அதிசயச் செய்தி

இது 2500 ஆண்டுக்கும் முந்தைய பழமையுடைத்து.சாம வேதத்திலேயே இப்படிப்பட்ட முறை உளது. அதை பரப்பும் பணியை ஜைமினி என்னும் மகரிஷியிடம் ஒப்படைத்தார் வியாச முனிவர். அந்த ஜைமினிக்கும் வரருசிக்கும் தொடர்பு உண்டு.

நாலாவது அதிசயச் செய்தி

உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் syllabus  / பாடத்திட்டம் போட்டுக்கொடுத்தவர் வாத்ஸ்யாயன மகரிஷி. அவர் எழுதிய காம சூத்திரம் உலகின் முதல் sex செக்ஸ் புஸ்தகமாகும். அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்தார் ( இந்தப் பட்டியல் இந்த பிளாக்கில் இரு முறை புதிய தவல்களுடன் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது) . இந்த 64 கலைகளில் ஒன்று ரகசியக் குறியீடு. அதாவது சங்கேத மொழியில் (coded language)  செய்தி அனுப்ப எண்களைப் பயன்படுத்துவது . இதையும் அவர் பெண்கள் பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார். (காண்க காமசூத்திர நூல் பற்றிய எனது கட்டுரை)

ஐந்தாவது அதிசயச் செய்தி

எண் ஜோதிடம் என்னும் நியூமெராலஜிக்கும் (numerology) இந்துக்களே வித்திட்டனர் . இதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ‘ஜய’ . இதை கடபயாதி முறையில் எண் ஆக்கினால்  கிடைப்பது 18. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததும், 18 டிவிஷன்/ அக்ஷவ்ணி  (11+7) படைகள் பங்கேற்றதும், மஹாபாரதம் 18 பிரிவுகளாக (பர்வம்) பிரிக்கப்பட்டதும், மாபாரதத்திலுள்ள பகவத்கீதை 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டதும் 18-ன் மஹிமையை உணர்த்தும். யாருடைய பெயரின் கூட்டுத் தொகையாவது 18 (நியூமராலஜி) என்று வந்தால், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னரே வெற்றி கிட்டும் என்பது வெளிப்படை.

மற்றோர் அதிசயச் செய்தி தமிழர்களும் ஸம்ஸ்ருத முறையைப் பின்பற்றியதாகும். நீளத்திற்கு ஏற்ப செய்யுட்களை ‘குறு’ந்தொகை, ‘நெடு’ந்தொகை என்று வகைப்படுத்துவது. இதை வேதத்திலும் காண்கிறோம் .

அதே போல 4, 40, 400, 4000 என்று செய்யுட்கள் செய்தது தமிழர்களின் புதுமை.(ஏற்கனவே இவ்வகை நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன் )

சம்ஸ்க்ருதம் போலவே தமிழர்களும் பஞ்சகம் (5 செய்யுள்), அஷ்டகம் (8), பதிகம்/தசகம் (10), சதகம் (100) சஹஸ்ரம் (1000) என்று நூல் செய்தனர்.

அகனானூறு புஸ்தகத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு திணைக்கும் எண்வரியாக பாடல்களை ஒதுக்கியது புதுமையிலும் புதுமை (இணைப்பைக் காண்க).

பெரிய எண்களை குறிப்பிடுவதற்கு தமிழர்கள் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே எடுத்துக்கொண்டனர் . யஜுர் வேதத்திலேயே இப்படி பெரிய எண்கள் வந்து விடுவதால் உலகில் முதல் முதலில் பெரிய எண் களை உருவாக்கிய பெருமை வேத கால இந்துக்களுக்குக் கிடைத்துவிடுகிறது. சங்கம், பதுமம், சமுத்திரம், ஆயிரம் முதலிய சம்ஸ்க்ருத எண்கள் இதற்கு எடுத்துக் காட்டு  (ஆயிரம் என்பது சஹஸ்ரம் என்பதன் மருவு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை)

டெசிமல் முறையை  DECIMAL SYSTEM  (10, 100, 1000,100,000) இந்துக்கள் உலகிற்கு கற்பித்ததாலும் பூஜ்யம் ZERO என்னும் எண்ணைக் கண்டுபிடித்ததாலும் இந்துக்கள் உலக விஞ்ஞான முன்னேற்றத்துக்கு வித்திட்டனர். இது நிகழ்ந்திராவிடில் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டெர்நெட் , விண்கோள், ராக்கெட் , விண்வெளிப் பயணம் ஆகியன கிடைத்திரா.

ஒரு சில எடுத்துக் காட்டுகள்

ஜய =18 (ஜ =8; ய= 1);

18 என்று ஒருவர் எழுதினால் அதை வலமிருந்து இடமாகப் படித்தால் ஜய என்று படிப்பர்.

ஏனைய எழுத்துக்களுக்கு உள்ள எண்களை  இணைப்பில் காண்க ‘.ஜய ‘ என்றால் வெற்றி.

இதுதவிர எல்லோருக்கும் தெரிந்த வேதத்திலுள்ள கடவுளர் எண்ணிக்கையையும் பயன்படுத்துவர்

(ஏகாதச) ருத்ரர் – ஆகையால் ருத்ர என்று சொன்னாலேயே 11 என்ற எண்ணைத்தான் குறிக்கும்.

(அஷ்ட) வசு =8, (த்வாதஸ ) ஆதித்ய =12,

கடபயாதி முறையில் குழப்பத்தைத் தவிர்க்க சில விதிகளையும் இயற்றினார்.

பொதுவான தகவல்

சம்ஸ்க்ருதத்தில் 4 க, 4 ச, 4 த, , 4 ப உண்டு. தமிழில் 3 ல, ள ,ழ இருப்பது போல ஸம்ஸ்க்ருத்ஸத்தில் ஸ , ஷ ச உண்டு.

க- ட -ப- ய = 1

க்க -த் த- ப்ப – ர = 2

………………………………………..

அட்டவணையைக்  காண்க

உயிர் எழுத்துக்கள் அனைத்தும் = 0

CONSONANTS  (மெய் எழுத்துக்கள் )           NUMERALS

Ka ta pa ya                               1

Kha tha pha ra                          2

Ga da ba la                               3

Gha dha bha va                        4

Na na ma sa                              5

Ca  ta         sa                               6

Cha  tha      sa                              7

Ja   da           ha                             8

Jha        dha      la                        9

Na   na                                         0

Vowels                                         0

(Sanskrit has three different ‘s’ and two different ‘n’ sounds and two different ‘l’ sounds)

எழுத்துக்களின்  முன்னால்  என்ன இருக்கிறது பின்னால் என்ன இருக்கிறது என்பது  தொடர்பான விதிகளையும் அறிந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன  தள்ள வேண்டும்.

–SUBHAM- –

வரருசி,ஜய 18, க-ட-ப-யா-தி, எண் முறை, கடபயாதி எண் முறை,

சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (Post No.9105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9105

Date uploaded in London – –5 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

ச.நாகராஜன்

கீத்ருக்ஷா கிரிஷதனுர்ஜயே ச தாதுர

   விஷ்ணௌ கா விபுதஜராதமஸ்த்ருதீயா |

மத்யார்னே சதி  கதமாஸ்மகோஸ்தி தேஷ:

  சோமாஜ்யம் சகலகலா ஜஸாதசாஹா: ||

சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சோமா : பார்வதியுடன் இணைந்து)

வெற்றி அடைதல் என்ற வினைச்சொல்லுக்கு மூலம் எது (ஜி ; வெல்வதற்கு)

விஷ்ணுவின் மேல் அமர்ந்திருப்பவர் யார்? (அம் : லக்ஷ்மி)

புத்திசாலியான மூத்தோருக்கு துணை எது? (சகலகலா : அனைத்து கலைகளும்)

ஜலத்தின் மத்தியில் உனது தேசம் எப்படி இருக்கும்? (ஜலதசாஹா)

How is the body of Lord Siva? (Soma: United with Parvati)

What is the verbal root of  ‘to conquer’? (ji : to conquer)

Who is seated on Lord Vishnu? (am : Lakshmi)

What is the third to the old age of wise and darkness? (sakalakala : all arts)

In the midst of waters how can your country be? (jalatasaha)

                                                             (Translation by A.A.R)

இது ஒரு புதிர் சுபாஷித ஸ்லோகம். இந்த்ரவ்ரஜா சந்தத்தில் அமைந்துள்ளது இது.

*

கிம்ஸ்விச் சித்ரம் பவேத் தோஷ: கிம்ஸ்வித் ஹி வினிபாதநம் |

குதோ மம ஸ்த்ரவேத் தோஷ இதி நித்யம் விசிந்தயேத் ||

என்னிடம் உள்ள பலஹீனமான விஷயம் ஒரு குறையாக மாறுமா?

அது தொடர்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் குறையாக ஆகி விடுமா?

எப்படி எனது குறைகள் நீங்கும்?

இப்படியாக ஒருவன் தினமும் சிந்திக்க வேண்டும்.

Can a weak point in me turn out to be a defect?

May it lead to a defect of serious consequences? (to my downfall)

How may my defects disappear?

Thus should one ponder carefully, every day.

                                                            (Translation by A.A.R)

*

க்ருத்யாக்ருத்யவிபாகஸ்ய ஜாதார: ஸ்வயமுத்தமா: |

உபதேஷே புனர்மத்யா நோபதேஷே நராதமா: ||

உத்தமமான மனிதர்கள் தீயதிலிருந்து நல்லனவற்றைத் தாமே பிரித்து அறிய வல்லவர்கள்.

மத்யமான மனிதர்கள் ஒருவர் அவருக்கு அறிவுறுத்தும் போது அதை அறிவர்;

ஆனால் அதமமான மனிதர்களோ அப்படி ஒரு அறிவுறுத்தினாலும் கூட அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்!

The highest men can discern by themselves the right from wrong;

The middle men after they had been advised;

The worst ones even not after they had been advised.

*

VIRINCHIPURAM  SIVA LINGA – PICTURE BY LALGUDI VEDA 

–SUBHAM–

TAGS – சிவன் , உடல், 

4-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post No.9104-A)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9104-A

Date uploaded in London – –4 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

HINDU temple vandalization in Andhra Pradesh

Desecration of Hindu temples in Andhra has become a big political issue

HERE IS A SUMMARY FROM INDIAN NEWSPAPERS-

A series of incidents of vandalization of Hindu temples in different parts of Andhra Pradesh is snowballing into a major issue with the opposition targeting the Jagan Mohan Reddy government for its inaction and the YSR Congress party openly accusing the Telugu Desam Party of involvement in the incidents.

The political tussle over the matter peaked on Saturday with TDP president and former chief minister N Chandrababu Naidu visiting the 400-year-old Ramatirtham temple in Vizianagaram district, where the idol of Lord Rama was found desecrated on December 28.

In a swift reaction to the desecration of an idol in Ramatheertham temple, the state government sacked senior Telugu Desam leader Pusapati Ashok Gajapathi Raju from the chairman posts of Rama Swamy Devasthanam, and two other Devasthanams for failure in temple administration.

A tense situation is prevailing in Ramatheertalu village of Vizianagaram district in Andhra Pradesh with leaders of  the ruling YSRC, Opposition TDP and BJP visiting the ancient temple where the idol of Lord Sri Rama was vandalised.

The idol of Lord Sri Rama was vandalised and the severed portion of the idol was found in the temple pond the next day.

Former chief minister Naidu said,  in the last 18 months of YSRC regime, there had been 127 incidents of attacks on temples and desecration of idols, hurting the sentiments of Hindu devotees, but not a single culprit was punished till date.

Naidu said that the beheading of the Rama statue was a ‘great disgrace’ to the land.

XXXX

NEWS FROM UTTAPRADESH

UTTAR PRADESH STATE GOVERNMENT to transfer Rs 12K each to labourers selected for religious travel

     

The Yogi government will provide Rs 12,000 each to a selected number of labourers, employed in close to 6.5 lakh commercial establishments and 20,500 factories and workshops in Uttar Pradesh, to undertake religious travel said officials.

The process would begin from January 24, the state’s foundation day, when the state’s labour welfare board would invite applications from nearly 1.5 CRORE labourers, enrolled with the board, to avail the benefit under Swami Vivekananda Itihasik Yatra Yojana.

“For travel, the board has identified places like religious cities of Ayodhya, Mathura, Prayagraj and Varanasi, along with Hastinapur in Meerut, Gorakhnath temple in Gorakhpur, the temples of Shakumbhari Devi and Vindhyavasini Devi. We will also allow travel to Agra. Apart from these, there would be some more places for which the beneficiaries would have to make an application,” said Sunil Bharala, the board chairman who has a minister of state rank.

The scheme was conceptualised on November 10— the birth anniversary of Dattopant Thengadi, the RSS ideologue, who founded the Bharatiya Mazdoor Sangh (BMS), a trade union organisation, which acts as a pressure group to enforce pro-labour policies.

BOARD CHAIRMAN SUNIL BHARALA ADDED…………………

“We have a scheme for marriage of daughters of labourers, named after social reformer and Dalit icon Jyotiba Phule.

There is another scheme named after former President APJ Abdul Kalam aimed at helping labourers’ children pursue technical education,

an incentive scheme named after freedom fighter and journalist Ganesh Shankar Vidyarthi,

financial compensation for kin of labourers named after Raja Harishchandra. T

here is another scheme to provide financial assistance for completing the last rites of labourers that is named after Dattopant Thengadi,” he said.

XXXX

Pandemic brought down ego of man like a deck of cards, says Swami Vishudhananda

On second day of the 88th annual Sivagiri pilgrimage, Swami Vishudha   nanda, President of Sree Narayana Dharma Sangham Trust, recalled that the pandemic had brought down the ego of human beings like a deck of cards. He was speaking at the annual Sivigiri pilgrimage at Sivagiri Mutt on Thursday.

The darshan is open to 1,000 people a day who have booked in advance. Pilgrims spread across the world participated in the conferences through the Sivagiri TV’s YouTube channel making it a global online pilgrimage. Unlike the previous years, no food or accommodation was provided to the pilgrims. 

Usually the rickshaw used by social reformer Sree Narayana Guru would be taken out in a procession in Varkala. But this time due to the pandemic the customary procession was cancelled. Instead, Swami Vishudha nanda held a universal peace prayer for all living beings.

xxxxx

Lingaraj temple in Odisha reopens

After remaining closed for almost nine months due to Covid-19 pandemic, the Shri Lingaraj Temple in BHUBANESWAR reopened last week. Sevayats and their family members were allowed inside the oldest shrine of the State Capital on the first day.

The residents of Bhubaneswar are allowed darshan of the Lord from January 3. The temple will be thrown open to public from January 6. However, a maximum of 500 devotees will be allowed inside the temple at any given point of time to ensure social distancing and other Covid-19 norms.

Xxxxx

SARAYU RIVER UNDER TEMPLE SITE

The Shri Ram Janmbhoomi Teerth Kshetra trust has asked the engineers from the Indian Institutes of Technology (IITs) to formulate a better model for Ram Mandir’s foundation after a stream of the Sarayu river was reportedly found flowing below it.

The committee, chaired by former principal secretary to the prime minister Nripendra Misra, overlooking the temple’s construction held a meeting in this regard on December 29. During the meeting, it was realized that the existing model for the foundation of the Mandir would not be feasible because of the stream of the Sarayu River flowing below the temple site. The trust has requested the IITs including IIT Mumbai and IIT Delhi, to propose a better model for a strong foundation.

Vishwa Hindu Parishad (VHP) chief Alok Kumar said that the engineers from top institutes of India would work on the model to ensure structural stability of the Ram Mandir in Ayodhya.

xxxxx

JUST BEFORE I CONCLUDE, SOME GOOD NEWS FOR YOU.

GLOBAL RUDRA MANTRA CHANTING ORGANISED BY

GNANAMAYAM, ALONG WITH ITS SISTER ORGANISATIONS, WAS A GRAND SUCCESS.

SRI KALYANASUNDARA SIVACHARYA OF WORLD HINDU MAHASANGAM AND GNANMAYAM CHANNEL INITIATED   THE GLOBAL RUDRA MANTRA CHANTING  THAT WAS HELD ON 2nd and 3rd January 2021.

THE CHANTING BEGAN IN NEW ZEALAND AND MOVED ALONG DIIFERENT TIME ZONES COVERING ALL THE FIVE CONTINENTS ON EARTH AND FINISHED IN AMERICA. THIS WAS DONE FOR THE WELFARE OF THE HUMANITY. 

KANCHI SHANKARACHARYA SRI VIJAYENDRA SARASVATI, SRI OMKARANANDA OF THENI VEDAPURISWAR ASHRAM AND SEVERAL OTHER CHIEFS FROM FAMOUS MUTTS OF TAMIL NADU BLESSED THE RUDRA CHANTING BY SENDING MESSAGES.

XXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

ONCE AGAIN WISH YOU ALL A VERY HAPPY AND COVID FREE HEALTHY NEW YEAR.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

—subham—

tags- 4-1-21 Hindu News, Roundup,

உலக இந்து சமய செய்தி மடல் 4-1-2021 (Post No.9104-B)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9104-B

Date uploaded in London – –4 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜனவரி 4-ஆம் தேதி —   திங்கட் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

முதலில் புத்தாண்டை நல்ல செய்தியுடன் துவக்குவோம்

ஞானமயம்அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்துநடத்திய அகில  உலக  ருத்ர மந்திர பாராயணம் வெற்றிகரமாக முடிந்தது. ஞானமயம் மற்றும் உலக மஹா இந்து சந்து சங்கத்தின் தலைவர் சிவ ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாச்சார்யா  அவர்கள் முயற்சியில் உலக நன்மைக்காக ஜனவரி 2, 3 தேதிகளில் ஐந்து கண்டங்களில் ருத்ர மந்திர பாராயணம் நடந்தது. நியுஸிலாந்து  முதல் அமெரிக்கா  வரையுள்ள  ஏராளமான அன்பர்கள் இதில் பங்கேற்றனர்.

1. ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 

2. வேதபுரீ ஶ்ரீசித்பவானந்த ஆச்ரம பீடாதிபதி பூஜ்யஶ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள்

3. கூனம்பட்டி  57வது குருமஹா சன்னிதானம் கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க சரவண மாணிக்க வாசக ஸ்வாமிகள்

.

4 விகாஸரத்னா சிவஶ்ரீஅண்ணா, குருமுதல்வர், வேதாகம பாடசாலை பிள்ளையார் பட்டி

5 ப்ரும்மஶ்ரீ சுந்தர் சர்மா, 

6 முல்லைவாசல் ப்ரும்மஶ்ரீ R.கிருஷ்ணமூர்த்தி கணபாடிகள்

7. சிவஶ்ரீ .ஏ.வி ஸ்வாமிநாத சிவாச்சாரியார் ,குருமுதல்வர், வேதாகம பாடசாலை சிவபுரம் குளோபல் சிவாகம அகாடமி மாயவரம்

8 சிவஶ்ரீ ராஜா பட்டர், குருமுதல்வர், வேதாகம பாடசாலை, திருப்பரங்குன்றம்

9. சிவாகம கல்பதரு சிவஶ்ரீ விஜயசோமசேகர சிவாச்சாரியார்

10. இலங்கை முத்தமிழ்  குருமணி சிவஶ்ரீ ந .ஸர்வேஸ்வர குருக்கள்

11. தில்லை கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், கள்ளக்குறிச்சி

மித்ர சேவா, லண்டன்,

காஞ்சி காமகோடி கைங்கர்யசபை,

உலக இந்து மஹாசங்கம்,

தாம்ராஸ் அமெரிக்கா

SACRAMENTO MAHA PERIYAVA MANDALI

SIVA SRI ABHIRAMA SIVACHARYA , USA

மற்றும் கோவில் தலைமை  அர்ச்சகர்களும் ஆசியுரை நல்கி சிறப்பித்தனர்.

XXXX

இனி இந்திய செய்திகளைப் பார்ப்போம்…………………………

முதலில் ஆந்திர மாநிலத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சை 

ஆந்திரத்தில் இந்துக்கோவில்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் பெரிய அரசியல் பிரச்சனையாக உருவாகி  வருகிறது

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், ராமதீர்த்தம் பகுதியில் உள்ள கோதண்டராமர் சிலையின் தலை மற்றும் உடல் பாகத்தை மர்ம நபர்கள் உடைத்து வெவ்வேறு பகுதியில் வீசியதால் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆந்திரத்தின் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால்தான் இப்படி தாக்குதல் அதிகரிப்பதாக முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சித்தலை வருமான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் தெலுங்குதேசம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி  தாக்கப்பட்ட கோவிலின் தலைவரை ஜகன்மோகன் அரசு நீக்கிவிட்டது. அவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்

ராமர் சிலை உடைக்கப்பட்ட கோயிலை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

விஜயநகரம் மாவட்டத்தில் நுழைவதற்கு முன்பு சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி வைத்த போலீஸார், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து ராமதீர்த்தம் செல்ல விடாமல் தடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராமதீர்த்தம் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

சமீபத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு தேர் தீப்பிடித்து எரிந்தது. ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்குதேச கட்சித் தலைவர் ஜெயதேவ் கல்லா இந்த தாக்குதல்களுக்கு ஆளும் கட்சியின் மீது குற்றம் சுமத்தினார்.

சமீப காலத்தில் மட்டும் 6 ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறிய அவர், இதனால் மாநில அரசாங்கம் தங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று குற்றவாளிகளுக்கு தைரியம் வந்துள்ளதாக கூறினார். சில நாட்களுக்கு முன்பு தான் வரலாற்று சிறப்பு வாய்ந்த காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் உள்ள நந்தி சூறையாடப்பட்டது.

இந்து கோவில்களின் மீதான தாக்குதலுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தினார்.

இந்த மாத ஆரம்பத்தில் தெலுங்கு நடிகர் மற்றும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண்,

பல பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ,

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா கோவிலை சேர்ந்த தேர் ஒன்று சதித் திட்டத்தால் எரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.. இந்த விஷயத்தில் பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது .

XXXXX

2 லட்சம் எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்

எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடற்கரையில் கடலை நோக்கி அமைந்துள்ள சின்னம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 12 மூட்டை மக்காச்சோளம், 2.15 லட்சம் எலுமிச்சை பழம், 11 பெட்டி ஆரஞ்சு பழம் மற்றும் 3 ஆயிரம் சாத்துக்குடி பழங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை கொண்டு கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் அலங்காரம் மற்றும் தோரணங்கள் அமைத்தனர்.

பின்னர் சின்னம்மன் மற்றும் சியாமளா தேவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

புத்தாண்டு வழிபாடு முடிந்த உடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

XXXX

ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 2.30 மணிஅளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிவரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாமிஅம்பாளுக்கு பால், பன்னீர், தேன், மாபொடி, மஞ்சள்பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் கோவிலின் சாமி சன்னதியில் இருந்து தங்ககேடயத்தில் மாணிக்கவாசகர் நடராஜர் சன்னதி எதிரே எழுந்தருளினார்.

தொடர்ந்து நடராஜர் சன்னதி முன்பு அமைக்கப்பட்டு இருந்த 7 திரைகள் திறக்கப்பட்டு கடைசியாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்த நடராஜர் காட்சி தந்தார். அவருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு மகாதீபஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

XXXXXXXXXXXXXX

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

ஆருத்ரா தரிசன விழா

கடந்த டிசம்பர் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. முக்கிய திருவிழாவான தேரோட்டம்

முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக வந்து ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.

அங்கு இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் நடந்தது.

பின்னர் சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. இதையடுத்து மாலை 5.10 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ராஜசபையில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

XXXXXX

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30ம் தேதி நிகழ்ச்சி நடந்தது.

சாமிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் அன்று கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பைரயில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவர் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சில பக்தர்கள் டிசம்பர் 30ம் தேதி இரவில்

விடிய, விடிய கிரிவலம் சென்றனர். டிசம்பர் 31ம் தேதியும் காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

XXXXX

45 வகை திரவியங்களால் அபிஷேகம்.

அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 45 வகை திரவியங்களால் நடராஜனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவிநாசி  லிங்கேசுவரர் கோயில் உள்ளது. தேவார, திருவாசக பாடல் பெற்றதும், கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான இங்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 3 மணி  முதல் 6 மணி வரை நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.

இதில், விபூதி, வெண்ணெய், அன்னம், சந்தனாதி தைலம், நெல்லிப்பொடி, பாசிப்பயறுமாவு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்பு சர்க்கரை, தேங்காய்த்துருவல், மாதுளை, பால், தயிர், கரும்புச்சாறுஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, அன்னாசிப்பழம், கொய்யா, விளாம்பழம், எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகம், ஸ்தாபன கலச புனித தீர்த்தம் உள்ளிட்ட 45 வகை திரவியங்களால் மகா அபிஷேகம்  நடைபெற்றது.. பின்னர் நடராஜப்பெருமானுக்கும், சிவகாமியம்மனுக்கும் அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, வேர், ஏலக்காய், வெட்டிவேர், மருகு, மயிற்கண், திராட்சைசெவ்வந்தி, விருட்சப்பூ ஆகிய அழகிய மணம் மிகுந்த மலர்களைக்கொண்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.

XXXXXX

பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்குதல் தொடர்பாக  26 பேர் கைது

பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம், தெரி கிராமத்தில், ஹிந்து கோவில் உள்ளது. இங்குள்ள ஒரு மகான் சமாதிக்கு, வியாழன் தோறும் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். இதில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் வருவர். இந்த கோவிலை புனரமைத்து, விரிவாக்கம் செய்யும் பணி சமீபத்தில் துவங்கியது. இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து சேதப்படுத்தினர் இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜமாத் உலமா இ இஸ்லாம் கட்சி தலைவர் ரஹ்மத் சலாம் கட்டக் உள்ளிட்ட, 26 பேரை கைது செய்தனர்.

பாகிஸ்தானில், 75 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், சிந்து மாகாணத்தில் உள்ளனர்.

XXXXXXXXXXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

–subham–

tags – உலக, இந்து சமய, செய்தி மடல் 4-1-2021, 

TRUTH MAGAZINE : ஒரு அறிமுகம்! (Post No.9103)

DR SIB NARAYEN SEN SPEAKING IN GNANAMAYAM BROAADCAST ON 4-1-21

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9103

Date uploaded in London – –4 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 4-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

TRUTH : ஒரு அறிமுகம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

ஸத்யமேவ ஜயதே, நாந்ருதம்! நான் ஸத்யப்ரியன். I am a lover of Truth. Truth என்னும் ஆங்கில வார இதழ் கல்கத்தாவிலிருந்து 88 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. என்னிடம் இருப்பது வால்யூம் 88 இதழ் 21 இதழ் தேதி : டிசம்பர் 11,2020.

இதை ஸ்தாபித்தவர் ஸ்ரீஸ்ரீ உபேந்திர மோஹன் என்னும் பெரிய மகான். இவரது வாழ்க்கையில் ஏராளமான பிரமிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1872ஆம் ஆண்டுஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்த இவர் 1951ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இறைவன் திருவடி சேர்ந்தார். Our Founder என்ற நூல் இவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி கலெக்டராகவும் டெபுடி மாஜிஸ்ட்ரேடாகவும், மாஜிஸ்ட்ரேடாகவும் சுமார் 25 ஆண்டுகள் பதவி வகித்த இவர் ஆங்கில வழியிலான சயின்ஸ் படிப்பு நமது சாஸ்திரங்களின் மீதான மதிப்பை வெகுவாகக் குறைப்பது  கண்டு மனம் நொந்தார். சாஸ்திர தர்ம பிரசார சபா என்று ஒரு சபையைத் துவங்கி அதன் வெளியீடுகளாக ஏராளமான நூல்களை வெளியிட்டார். Truth வார இதழையும் வங்காள வார இதழையும் துவக்கினார். காஞ்சி மஹாபெரியவாள் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் இந்த முயற்சியைப் பாராட்டி ஆசீர்வதித்துள்ளனர். வால்மீகி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம் முதலில் வெளியிடப்பட்டன. இப்போது மஹாபாரதம் தொடர் சம்ஸ்கிருத மூலத்துடனும் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வெளியாகிறது. அத்துடன் ஏராளமான கட்டுரைகளைப் படிக்கலாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹால் நூல் நிலையத்தில் முதன் முதலாக நான் இதைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது இதன் சப்ஸ்க்ரிப்ஷன் ஆண்டுக்கு ரூ 12. இப்போது ரூ 100/.இதழின் அருமை கருதி அதை சப்ஸ்க்ரைப் செய்த நான் சுமார் 2300 இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இது ஒரு பொக்கிஷம்! It is a Treasure!

ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் இதழ் இது. ஹிந்துக்களின் இன்றைய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி தீர்வுகளைக் காண்பிக்கும் இதழ் இது. அருமையான புராணக் கதைகள், மகான்களின் வரலாறுகள், அறிஞர்களின் கட்டுரைகளையும் இதில் படிக்கலாம். நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப இது டிஜிடல் வடிவிலும் இப்போது வருகிறது. இதன் (WEBSITE) வெப்சைட்

sdpsorg.com.

எந்த இதழை எடுத்தாலும் அதில் நல்ல கட்டுரைகளே இருக்கும். அருமையான இதன் ஆங்கில நடைக்குக் காரணம் இதன் ஆசிரியர் டாக்டர் ஷிப் நாராயண் சென் அவர்கள். கல்கத்தாவில் டைரக்டர் அளவில் பல உயர் பதவிகளை வகித்த இவர் இப்போது Truth ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். ஞானமயம் சார்பில் இவரைப் பேச அழைத்த போது மனமுவந்து நமது அழைப்பை ஏற்று இதோ இங்கு அவர் வந்துள்ளார். அவரைப் பேச அழைக்கிறோம்.

On behalf of Gnanamayam we invite you Sir to participate in this programme.

It is all yours now.                                ***

Contact mail id : sdps_us@yahoo.com

Website : www.sdpsorg.com

Blog : jayantishastrani.com

Truth Editor : Dr Shib Narayan Sen

Yearly Subscription Rs 100/

–SUBHAM–

tags — TRUTH MAGAZINE, TRUTH, DR S N SEN,

PLEASE JOIN US TODAY MONDAY 4-1-2021

PLEASE JOIN US TODAY MONDAY 4-1-2021

AGENDA OF GNANAMAYAM BROADCAST TODAY-

xxx

PRAYER –MRS  BHAIRAVY UMAKANTHAN, SWARALAYAM MUSIC SCHOOL, SWITZELAND

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH

BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL

BY MRS VAISHNAVI ANAND

CHENNAI MRS RAMESH singing Bharati’s  VILLINAI………………….

SRI SHIB NARAYEN SEN , EDITOR OF TRUTH MAGAZINE –TALK

LALITHA MALAR MANIAM from Malaysia – SINGING

NALAUNGU PAATTU BY SARASVATHY RAMACHANDRAN

DR NARAYANAN KANNAN ON ALVARS – TALK

LAKSMI RAMESH KEECHU KEECHU TIRUPPAVAI

BHARATI SONG from SRI LANKA

APPR 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS – PUBLICITY4121

DECIMAL SYSTEM OF NUMBERS IN YAJUR VEDA (Post No.9102)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9102

Date uploaded in London – –3 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECIMAL SYSTEM OF NUMBERS

DECIMAL SYSTEM IS FOUND IN THE RIG VEDA, THE OLDEST BOOK IN THE WORLD. IT IS DATED BETWEEN 6000 BCE AND 1200 BCE. BUT THE FULL DECIMAL SYSTEM  10 TO BILLION IS FOUND IN THE VAJASANEYA SAMHITA OF  SUKLA YAJUR VEDA 17-2.

IF HINDUS HAVE NOT DISCOVERED HE VALUE OF ZERO AND THE DECIMAL SYSTEM , THERE WOULDN’T BE ANY COMPUTER, INTERNET OR SATELITES. SCIENCE ADVANCED BECAUSE OF THE MATHEMATICAL CONTRIBUTION OF HINDUS. ON THE OTHER SIDE, THEY DISCOVERED COW’S MILK IS EQUAL TO MOTHER’S MILK. ALSO FOUND OUT THE POWERFUL HORSE CHARIOT WITH WHEELS.

Yajur Veda has this passage ,

“O Agni , may these sacrificial bricks be mine. Own milch kine; one and ten, a ten and hundred, a hundred and a thousand, a ten thousand and a hundred thousand , a hundred thousand and a million, a million million or a billion. May these bricks be mine milch kine in yonder world and this world.

There are other similar passages too.

Ekam multiplied by ten  is dasa;

Dasa multiplied by ten  is satam

Satam multiplied by ten  is sahasram and so on.

The numbers greater than thousand crore crore are not given separate names.

The numbers obtained by dividing one by ten, hundred, thousand etc, are called dasaamsa, sataamsa, sahasraamsa etc respectively.

The reference to the bricks is to be noted. We see lot of brick structures in the Indus- Sarasvati River Bank Civilization. Though out Vedas we see references to Vedic altars built with bricks , particularly with Star names. All these points out to the Vedic basis of the civilization.

 Source (with my inputs in the article):–

Sadratnamala of Sankaravarman with English notes and translation by Dr S Madhavan, THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE, CHENNAI 600004, 2011

See my early articles on numbers…..

Tamil numbers | Tamil and Vedas

tamilandvedas.com › tag › tamil-numbers

  1.  
  2.  

8 Aug 2012 — Posts about Tamil numbers written by Tamil and Vedas. … Tamil Nadu supplies a large number of computer software personnel in the world.


Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and …

tamilandvedas.com › 2014/09/03 › numbers-in-the-rig-…

  1.  

3 Sept 2014 — Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda:


Decimal system | Tamil and Vedas

tamilandvedas.com › tag › decimal-s…

  1.  

Translate this page

11 Mar 2016 — … நண்பன் (Post No.3602). Search. Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Tagged with Decimal system …


Number symbolism | Tamil and Vedas

tamilandvedas.com › tag › number-symbolism

  1.  

12 Feb 2020 — Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda: RV 5-29-8 …


Hindu Symbolism | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-symbolism

  1.  

Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda: RV 5-29-8 3X100 =300 No …


Hindu Maths | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-maths

  1.  

Posts about Hindu Maths written by Tamil and Vedas. … Unless the general public is familiar with the decimal system and mathematics in general, poets like …


Vedic Routes | Tamil and Vedas

tamilandvedas.com › tag › vedic-routes

  1.  

25 Jul 2016 — Posts about Vedic Routes written by Tamil and Vedas. … Decimal system is found in the Rig Vedic hymns in innumerable places. Cow is the …

–subham–

tags- Yajur Veda, big numbers

ஆலயம் அறிவோம்! சிதம்பரம் (Post No.9101)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9101

Date uploaded in London – –3 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 3-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்,  ஜடாதரம் பார்வதி வாம பாகம்

ஸதாசிவம்  ருத்ரமனந்த ரூபம்,   சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி”

கருணைக் கடலும், அழகான முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடையைத் தரித்தவரும், பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரும், எப்போதும் மங்களமூர்த்தியாயும், துக்கத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பரநாதனை மனதில் பாவிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாகவும், புருஷ வடிவமாக உள்ள உலகத்தில் இதய ஸ்தானமாக விளங்குவதும், பிரபஞ்ச மர்மத்தைத் தன்னுள் அடக்கி அனைவருக்கும் அருள் பாலிக்கும் ஆடல் வல்லானின் தலமுமான சிதம்பரம் ஆகும். சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. 

இந்த ஆகாசமானது, பூத ஆகாசம் போல் ஜடமாக விளங்காமல், சித் அம்பரமாக விளங்குவதால் சிதம்பரம் எனப் பெயர் பெற்றது. இறைவன் திரு நடனம் ஆடுகின்ற இந்த அம்பலம் பொன் தகடு வேயப்பெற்றதால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

கோயில் என்றாலேயே சைவர்களிடம் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஏராளமான அதிசயிக்க வைக்கும் புராண வரலாறுகள் கொண்டது இந்தத் தலம். இறைவனுக்கு அன்றலர்ந்த வண்டு மொய்க்காத உயரமான மரங்களில் இருக்கும் பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க தை மாதம் பூச நட்சத்திரமும்,குருவாரமும், பூரனையும் கூடும் வேளையில் தன்னுடைய ஆனந்த நடனத்தைக் காண்பிப்பதாக அருளிய நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம்.

அருவம் அதாவது ரகசியமானது, மற்றும் உருவம் அதாவது நடராஜர், மற்றும் அருவுருவம் அதாவது மூலநாதர் லிங்க வடிவம் என இப்படி மூவகை வழிபாடுகளைக் கொண்ட இந்த அதிசய தலத்தில் மூலவரே உற்சவராக வலம் வருவதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

சிதம்பரம் ஆலயத்தில் சித்சபை, கனகசபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை என பஞ்ச சபைகள் உள்ளன. சித்சபையில் நடராஜரும் சிவகாமி அம்மையும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள படிகள் ஐந்து. அவை பஞ்சாக்ஷரங்களாகும். தங்க ஸ்தம்zaபங்கள் பத்தில் ஆறு சாஸ்திரங்களும் நான்கு வேதங்களும் இருக்க வெள்ளி ஸ்தம்பங்கள் ஐந்தில் பஞ்ச பூதங்களும் உள்ளன. வெள்ளிப் பலகணிகள் 96 உள்ளன. இவை 96 தத்துவங்களாகும். இங்குள்ள ஸ்தம்பங்கள் 18 புராணங்களாகவும், கைமரங்கள் 64 கலைகளாகவும் காட்சி தருகின்றன. இச்சபையின் தங்க விமானத்தில் மேல் உள்ள 21600 ஓடுகள் மனிதன் தினசரி விடும் சுவாசங்களின் எண்ணிக்கையையும், 7200 ஆணிகள் நாடி நரம்புகளையும் குறிக்கின்றன. 9 தங்க கலசங்கள் நவ சக்திகளாகத் திகழ பொன் ஓட்டில் ‘சிவாய நம’ என பஞ்சாக்ஷரம் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆதி சங்கரர் ஐந்து ஸ்படிக லிங்களில் ஒன்றை ஸ்தாபித்தருளினார்.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியதை சிவபெருமானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு அவர் சொல்லச் சொல்ல தானே எழுதினார். பின்னர் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்ல மாணிக்க வாசகர் திருகோவையார் பாடினார். பின்னர் ‘மாணிக்கவாசகன் சொல்ல சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று சிவபிரான் கையொப்பமிட்டு ஓலைகளை பஞ்சாக்ஷரப் படியில் வைத்துப் பின் மறைந்தார். மறு நாள் பூஜை செய்ய வந்தோர் ஓலைச் சுவடிகளை கண்டு மாணிக்கவாசகரை அணுகி ‘இவற்றின் பொருள் என்ன’ என்று கேட்க அவர், அவர்களை சிற்சபைக்கு அழைத்துச் சென்று சிற்றம்பலமுடையாரைக் காட்டி ‘இதன் பொருள் இவனே’

என்று கூறி சபைக்குள் புகுந்து மறைந்தார்.

ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் குருந்த மரத்தடியில் உபதேசம் செய்தார். அன்று தான் அவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இந்த உபதேச நிகழ்வு திருவிழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள ராஜசபையின் நடுவில் உள்ள நந்தி மண்டபத்தில் தான் சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். எப்படிப் பாடத் துவங்குவது என்று நினைத்து கூத்தப்பெருமானை அவர் வழிபட்ட போது ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று பெருமான் அடி எடுத்துக் கொடுத்தார்.

இந்தத் தலத்தில் சிவகங்கைத் தீர்த்தம், சமுத்திரம், புலிமடு, வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி, பிரம்மதீர்த்தம், சிவப்ரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூபம் என பத்து தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு கோயிலில் பூஜைகளை தீக்ஷிதர்களே செய்து வருகின்றனர்.

சிதம்பர சித்சபையில் ஸ்ரீ தாண்டவமூர்த்தி உமையோடு வீற்றிருக்கும் ஸ்தானமும் ஆயிரங்கால் மண்டபத்தில் மஹாபிஷேகத்தில் வீற்றிருக்கும் உயர்ந்த மேடையும் ஒரே அளவு என்றும், அந்த ஸ்தானத்தின் மஹிமையை எடுத்துச் சொல்வதற்கு ஆதி காலத்திலிருந்த மகான்களால் கூட முடியவில்லை என்றும் தெரிகிறது. இந்த திவ்யமான சுந்தர மஹாபீடத்தின் கீழ் ஜிதேந்திரியர்களும் வித்யா தரங்கிணி முதலான சிவ கணங்களும் ஸதா கோஷங்களுடன் வசிப்பதாகவும் காணப்படுகிறது. ஸ்ரீ குஞ்சிதபாத தீர்த்தமாகிய சிவகங்கைக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் தீர்த்தத்திற்கும் கீழே ஒரு பாதை இருப்பதாகவும் அந்த மார்க்கமாக தினந்தோறும் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்க இவர்கள் வந்து  கொண்டிருக்கிறார்கள் என்றும் பழைய நூல்கள் அறிவிக்கின்றன.

இதை மஹாமஹோபாத்யாய ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் திருத்தலங்கள் வரலாறு என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களையும் திருநாவுக்கரசர் 8 பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் ஆக மொத்தம் 11 பதிகங்களை இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.  அருணகிரிநாதர் 65 திருப்புகழ் பாடல்களை, இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளதோடு, இந்தத் தலத்தை புலியூர்,புலீச்சுரம்,கனக சபை, கனகம்பலம்,பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப்புலியூர் எனப் பலவாறாகப் புகழ்ந்து போற்றி அருள்கிறார்.. சுமார் 12 ஆண்டுகள் சிதம்பரத்தில் தன் அருள் வாழ்வைக் கழித்தார் திருஅருட்பிரகாச வள்ளலார். அவர் பாடல் அருளி வழிபட்ட 14 தலங்களில் சிதம்பரமும் ஒன்று.

திருநீலகண்ட நாயனார், நந்தனார், கூற்றுவ நாயனார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட ஏராளமான அருளாளர்கள் இங்கு நடராஜரை தியானித்து முக்தி பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிர்ட்ஜாஃப் காப்ரா (Dr Fritjof Capra) சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்தார்.  ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான அவர் தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ் (The Tao of Physics) என்ற தனது நூலில், “ ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கிப் பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம். இது அணுத்துகளின் நடனம் போலவே உள்ளது” என்கிறார்.

அணுவின் அசைவை, சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சல்ஸில் 1977 அக்டோபர் 29ஆம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடாபிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் பிரபஞ்சம் பற்றிய COSMOS தொடரை எடுத்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் பிரபஞ்சத்தின் வயது 864 கோடி என்று அறிவியல் கூறும் அதே வயதைச் சரியாகச் சொல்லும் ஹிந்து மதத்தைக் கண்டு வியந்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார். தனது தொடரான COSMOS தொடரின் ஆரம்பத்தில் பிரபஞ்ச நாயகனான நடராஜரின் திருவுருவத்தைக் காண்பித்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கினார்.

GOD PARTICLE ஆராய்ச்சியில் கடவுள் துகளைக் கண்ட உலகின் பெரும் சோதனைக் கூடம் ஜெனிவாவில் உள்ளது. CERN என்று புகழ் பெற்ற இந்த சோதனைச் சாலையின் முகப்பில் இந்திய அரசு 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று வழங்கிய இரண்டுமீட்டர் உயரம் உள்ள நடராஜர் திருவுருவம் அலங்கரிக்கிறது. இப்படி பெரும் ரிஷிகள், மகான்களுடன் அறிவியல் விஞ்ஞானிகளையும் ஈர்க்கும் தலம் உலகில் இது ஒன்றே தான்!

காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், விவரிக்க முடியாத எல்லையற்ற பெருமையைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் அருள் வாக்கு –

“நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே, நல்லவெலாம் செய வல்லவனே,

நாதாந்த நாட்டுக்கு நாயகரே, நடராஜரே சபாநாயகரே

நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே, நடராஜ எனில் வரும் நித்தியமே” நன்றி. வணக்கம்.

tags – சிதம்பரம்

PLEASE JOIN US TODAY SUNDAY 3-1-2021

PLEASE JOIN US TODAY SUNDAY 3-1-2021

AGENDA OF TAMIL THUNDER/ THAMIZ MUZAKKAM TODAY-

PART OF GNANAMAYAM

xxx

PRAYER

RANJANI DASARATHY  SONG- SABAAPATHIKKAU………

MRS BRHANNAAYAKI SATHYANARAYANAN OF B’LURU- INTRODUCING ONE MORE NEW TEMPLE

Thiruppugaz  By………….

MRS JAYANTHI SUNDAR AND SELVI DIKSHA MURALI 

BHARATI EPISODE 3- BY  DUBAI  SRI VIDHYA

BHARATI SONG FROM SRI LANKAN SISTERS

SRIVILLIPUTUR RAMESH IYANGAR TALK- Antiquity of Hinduism

LONDON SWAMINATHAN ARTICLE IN TAMIL READ BY VAISHNAVI ANAND

CHENNAI MRS RAMESH LAKSHMI’S STUDENT –SONG

LONDON MRS HARINI RAGHU’S — latest Bhartiyar song in New Tune

APPR 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

டிசம்பர் 2020 இல் வெளியாகிய ச.நாகராஜன் கட்டுரைகள் (Post .9100)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9100

Date uploaded in London – –3 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

December 2020

1-12-20     8985   தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா? (Truth கட்டுரை)   

2-12-20     8989   நடந்தவை தான் நம்புங்கள் – 1

3-12-20     8992    நடந்தவை தான் நம்புங்கள் – 2   

4-12-20     8995    ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை – ராமர்!

5-12-20     8998    ஸ்ரீ அரவிந்த ரகசியம்

6-12-20     9003  நவம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்

7-12-20    9006   பாரதியார் பா நலம்! (6-12-20 தமிழ் முழக்கம் உரை)

8-12-20    9009   கோவில்களில் ராகங்கள்!

9-12-20    9013    மஹரிஷி சரத்வத் – கிருபா, கிருபி தோற்றம்!

10-12-20  9017  எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்?

11-12-20  9020  பாரதியாரின் ராகங்கள் – 1

12-12-20  9025  பாரதியாரின் ராகங்கள் – 2

13-12-20  9029  ராஜராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள் – (கொங்கு மண்டல

            சதகம் பாடல் 55)

14-12-20  9033  திரைப்படங்களில் பாரதியார் – 1 (தமிழ் முழக்கம் 13-12-20 உரை)

15-12-20   9037   சுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒலிபரப்புக்குத் தடை!

16-12-20  9040  மஹரிஷி தனுசாக்ஷர்!

17-12-20  9044  சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூன்று, மதிப்புப் 

            போடவே முடியாதவர் மூன்று (சுபாஷிதம்)

18-12-20 9047  பாரதியாரின் ராகங்கள் -3

19-12-20 9052A  ஒரு அறிஞரை இழந்தோம்! (R.நஞ்சப்பா இரங்கல்)

20-12-20  9054 உமாபதி சிவம் – 1 (சிவப்பிரசாதம், குரு பிரசாதம்)

21-12-20 9058  உமாபதி சிவம் – 2 – ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!

22-12-20 9061 மலர் மருத்துவம் – 20-12-20 (தமிழ் முழக்கம் உரை)

23-12-20  9066 உமாபதி சிவம் – 3 (முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது)

24-12-20  9070 யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

25-12-20  9074 சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

26-12-20  9078 உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்!

27-12-20  9080  ஹிந்துக்களின் எண்ணிக்கை -1 (Truth Vol 88 No 20 4-12-20)

28-12-20  9082   ஹிந்துக்களின் எண்ணிக்கை -2 (Truth Vol 88 No 20 4-12-20

29-12-20  9085 பிரமிட் மர்மம் (28-12-20 ஞானமயம் உரை)

30-12-20 9089  ஹிந்துக்களின் எண்ணிக்கை -3 (Truth Vol 88 No 20 4-12-20

31-12-20 9092  ஹிந்துக்களின் எண்ணிக்கை -4 (Truth Vol 88 No 20 4-12-20

***