
Post No. 9103
Date uploaded in London – –4 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 4-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.
TRUTH : ஒரு அறிமுகம்!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

ஸத்யமேவ ஜயதே, நாந்ருதம்! நான் ஸத்யப்ரியன். I am a lover of Truth. Truth என்னும் ஆங்கில வார இதழ் கல்கத்தாவிலிருந்து 88 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. என்னிடம் இருப்பது வால்யூம் 88 இதழ் 21 இதழ் தேதி : டிசம்பர் 11,2020.
இதை ஸ்தாபித்தவர் ஸ்ரீஸ்ரீ உபேந்திர மோஹன் என்னும் பெரிய மகான். இவரது வாழ்க்கையில் ஏராளமான பிரமிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1872ஆம் ஆண்டுஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்த இவர் 1951ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இறைவன் திருவடி சேர்ந்தார். Our Founder என்ற நூல் இவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி கலெக்டராகவும் டெபுடி மாஜிஸ்ட்ரேடாகவும், மாஜிஸ்ட்ரேடாகவும் சுமார் 25 ஆண்டுகள் பதவி வகித்த இவர் ஆங்கில வழியிலான சயின்ஸ் படிப்பு நமது சாஸ்திரங்களின் மீதான மதிப்பை வெகுவாகக் குறைப்பது கண்டு மனம் நொந்தார். சாஸ்திர தர்ம பிரசார சபா என்று ஒரு சபையைத் துவங்கி அதன் வெளியீடுகளாக ஏராளமான நூல்களை வெளியிட்டார். Truth வார இதழையும் வங்காள வார இதழையும் துவக்கினார். காஞ்சி மஹாபெரியவாள் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் இந்த முயற்சியைப் பாராட்டி ஆசீர்வதித்துள்ளனர். வால்மீகி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம் முதலில் வெளியிடப்பட்டன. இப்போது மஹாபாரதம் தொடர் சம்ஸ்கிருத மூலத்துடனும் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வெளியாகிறது. அத்துடன் ஏராளமான கட்டுரைகளைப் படிக்கலாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹால் நூல் நிலையத்தில் முதன் முதலாக நான் இதைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது இதன் சப்ஸ்க்ரிப்ஷன் ஆண்டுக்கு ரூ 12. இப்போது ரூ 100/.இதழின் அருமை கருதி அதை சப்ஸ்க்ரைப் செய்த நான் சுமார் 2300 இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இது ஒரு பொக்கிஷம்! It is a Treasure!
ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் இதழ் இது. ஹிந்துக்களின் இன்றைய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி தீர்வுகளைக் காண்பிக்கும் இதழ் இது. அருமையான புராணக் கதைகள், மகான்களின் வரலாறுகள், அறிஞர்களின் கட்டுரைகளையும் இதில் படிக்கலாம். நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப இது டிஜிடல் வடிவிலும் இப்போது வருகிறது. இதன் (WEBSITE) வெப்சைட்
sdpsorg.com.

எந்த இதழை எடுத்தாலும் அதில் நல்ல கட்டுரைகளே இருக்கும். அருமையான இதன் ஆங்கில நடைக்குக் காரணம் இதன் ஆசிரியர் டாக்டர் ஷிப் நாராயண் சென் அவர்கள். கல்கத்தாவில் டைரக்டர் அளவில் பல உயர் பதவிகளை வகித்த இவர் இப்போது Truth ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். ஞானமயம் சார்பில் இவரைப் பேச அழைத்த போது மனமுவந்து நமது அழைப்பை ஏற்று இதோ இங்கு அவர் வந்துள்ளார். அவரைப் பேச அழைக்கிறோம்.
On behalf of Gnanamayam we invite you Sir to participate in this programme.
It is all yours now. ***
Contact mail id : sdps_us@yahoo.com
Website : www.sdpsorg.com
Blog : jayantishastrani.com
Truth Editor : Dr Shib Narayan Sen
Yearly Subscription Rs 100/


–SUBHAM–
tags — TRUTH MAGAZINE, TRUTH, DR S N SEN,
You must be logged in to post a comment.