மாதுளங்கனிகள்! செம்மண் பூமி!! பரிமாற்றம்!!! – கலில் ஜிப்ரான் (Post No.7147)

WRITTEN BY S Nagarajan


swami_48@yahoo.com

Date: 28 OCTOBER 2019

Time  in London – 7-31 am

Post No. 7147

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாதுளங்கனிகள்! செம்மண் பூமி!! பரிமாற்றம்!!! – கலில் ஜிப்ரான்

மூலம் : கலில் ஜிப்ரான் – தமிழில் : ச.நாகராஜன்

மாதுளங்கனிகள் (The Pomegranates)

முன்னொரு காலத்தில் ஒரு மனிதன் தனது தோட்டத்தில் நிறைய மாதுள மரங்களை வளர்த்தான். அதிலிருந்து கிடைத்த நிறைய மாதுளங்கனிகளை ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எடுத்து வெள்ளித் தட்டுகளில் வைத்தான்.

அவனது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட வெள்ளித் தட்டுகளில் இருந்த மாதுளங்கனிகளுடன் அவன் ஒரு குறிப்பையும் வைத்தான்.

“உங்களுக்கு நல்வரவு. ஏதாவது ஒரு கனியை எடுத்துக் கொள்ளலாம்.”

ஆனால் அங்கு செல்வோர் யாரும் அந்தக் கனிகளில் ஒன்றைக் கூடத் தொடவில்லை.

அந்த மனிதன் சற்று நினைத்துப் பார்த்தான்.

அடுத்த இலையுதிர்காலத்தில் வெள்ளித் தட்டுகளில் மாதுளங்கனிகளை வைத்த போது அவன் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தான்.

“இதோ, இங்கே பூமியில் கிடைப்பதிலேயே சிறந்த மாதுளங்கனிகள் உள்ளன. ஆனால் இவற்றை மற்ற எல்லா இடத்திலும் விற்கும் வெள்ளிப் பணத்தை விட அதிகமாகவே விற்கிறோம்.”

என்ன ஆச்சரியம், அண்டை அயலில் இருந்தோர், வருவோர் போவோர் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வந்து அங்கு வந்து அதை வாங்குவதற்காக நின்றனர்!

***

செம்மண் பூமி (The Red Earth)

அந்த மரம் மனிதனிடம் சொன்னது : “ஓ! மனிதா!! எனது வேர்கள் செம்மண் பூமியின் ஆழத்தில் உள்ளது.நான் உனக்கு எனது பழங்களைத் தருகிறேன்.”

மனிதன் உடனே மரத்திடம் சொன்னான் : “ஓ! மரமே!! நாம் எப்படி ஒன்று போல இருக்கிறோம்! எனது வேர்களும் செம்மண் பூமியில் ஆழத்தில் தான் உள்ளது. செம்மண் பூமி உனக்கு பழங்களை எனக்குத் தரும் சக்தியைத் தந்துள்ளது. அந்த செம்மண் பூமி உனக்கு நன்றி சொல்லி விட்டு அந்தப் பழங்களை வாங்கிக் கொள்ள கற்பிக்கிறது!”

***

பரிமாற்றம் (The Exchange)

முன்னொரு காலத்தில் ஒரு சாலை சந்திப்பில் ஒரு கவிஞனும் ஒரு முட்டாளும் சந்தித்தனர். இருவரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் பேசியது அனைத்தும் ஒருவருக்கொருவரிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது.

அப்போது அந்த சாலையின் தேவதை அங்கே வந்து தனது கரங்களை அந்த இருவர் மீதும் வைத்தது.

அட, என்ன ஆச்சரியம், இருவரும் தங்கள் உடைமைகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.

 இருவரும் பிரிந்தனர். ஆனால் சொல்வதற்கே விசித்திரமாக இருக்கிறது, கவிஞன் தனது கையில் ஒன்றுமே இல்லாதிருப்பதை உணர்ந்தான்; வெறுங்கையை மணலில் அளைந்தான்.

அங்கே அந்த முட்டாளோ தன் கண்களை மூடிக்கொண்டு ஒன்றுமில்லாதிருப்பதை உணர்ந்தான். அவன் இதயத்தில் நகரும் மேகங்கள் இருப்பதைக் கண்டான்.

***

கலில் ஜிப்ரானின் கவிதைகள் ஆழ்ந்த பொருளைக் கொண்டதாக இருக்கும்; சிந்திக்க வைக்கும். ஏராளமான உருவகச் சித்திரங்களை வசன நடையில் அவர் படைத்துள்ளார்.

^^^^^^^^

திகில் சினிமா படம் எடுக்க கதை வேண்டுமா? (Post No.7137)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 25 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-15 AM


Post No. 7137

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நான் எழுதிய ‘ரஷியாவை அதிரவைத்த கொலை வழக்குகள்’ என்ற கட்டுரை தினமணியில் உலகப் பலகணி -யின் கீழ் 1992-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியானது. அத்துடன் பாட்டில் படத்தின் விலை 21 லட்சம் டாலர் , இமயமலையில் புற்று நோய்க்கு மருந்து என்ற கட்டுரைகளும் வெளியாகின.

–subham–

கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள் (Post No.7133)

India- Vietnam Joint Issue

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am


Post No. 7133

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுளின் பாத சுவடுகளை வழிபடுவதும், ஞானியரின் காலணிகளை வழிபடுவதும் பாரத நாட்டில் தொன்றுதொட்டு  இருந்துவரும் பழக்கங்கள். ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன். காசி இந்து பல்கலைக் கழக துவக்க விழாவுக்கு வர இயலாது என்று சிருங்கேரி சுவாமிகள் சொன்னவுடன் பாதுகைகளை  வாங்கிச் சென்று பெரிய மரியாதை செய்து அவற்றைத் திருப்பி அனுப்பினார் அமைச்சர். பாதுகா சஹஸ்ரம் என்ற பெயரில் இறைவனின் திருவடிகள் மீது 1000 பாடல் இயற்றினார் வேதாந்த தேசிகன். வள்ளலார் பாதக் குறடுகள் முதல் மஹாத்மா காந்திஜியின் பாதக் குறடுகள் வரை இன்றும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் தரிசிக்கப்படுகிறது.

இந்துக்களுக்கு மண்ணும் புனிதம், மலையும் புனிதம். பக்தர்களின் காலடித் தூசி தன்  மீது படவேண்டும் என்பதற்காக மாமன்னர்கள் தங்கள் பாத சுவடுகளை கோவில் தரைகளில் பொறிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் காலடிச் சுவடுகள் மீது நாம் படக்கூடாது என்று அஞ்சி அதன் மீதும் மண்டபம் எழுப்பிவிட்டோம்.

இமய மலை முதல் இலங்கையின் சிவனொளி பாத மலை (Adam’s Peak) வரை பாதச் சுவடுகளை வழிபடுவதில் வியப்பில்லை ஆனால் கம்போடியாவிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபடக்கூடிய பாத சுவடுகள் உள்ளதைப் பலரும் அறியார்.

வியட்நாம், கம்போடியாவின் பழைய பகுதி ப்யூனான் (Funan). அங்கு முக்கிய வைஷ்ணவக் கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்வெட்டு ஜயவர்மனின் மனைவி குலப் பிரபாவதி செய்த தானம் பற்றியது. பிராமணர்கள் வசிக்கும் குரும்ப நகரத்தில் அவள் இறைவனின் தங்க விக்ரகத்தை நிறுவினாள்; ஒரு நந்தவனத்தையும், ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்தாள்; மற்றொரு கல்வெட்டு விஷ்ணுவின் பாத சுவடுகள் பற்றியது. குணவர்மன் என்பவன் சக்ர தீர்த்த ஸ்வாமின் என்னும் விஷ்ணுவின் பாத சுவடுகளைப் பொறித்தான். அடுத்ததாக ருத்ரவர்மன் கல்வெட்டு புத்தர், பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறது.

604-ம் (CE 604) ஆண்டில் (சக ஆண்டு 526) ஒரு பிராஹ்மணன், மலை உச்சியில் சிவன் பாதத்தைப் பொறித்து அதன் மீது தண்ணீர், பால் விழுவதற்காக ஒரு குடத்தை நிர்மாணிததாக ஒரு கல்வெட்டு இயம்புகிறது. அதைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பியதையும் கல்வெட்டு உரைக்கிறது.

613 (CE 613) ஆண்டில் சிவன் மடி மீது பார்வதி அமர்ந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது.

xxxx

Brahma Stamp in Indo China

சீனர்கள் அடித்த கொள்ளை – ஒரு லட்சம் பவுண்டு தங்கம்

சீனாவின் லியங் வம்சாவளி (History of Liang Dynasty) )  பற்றிய புஸ்தகம் கிடைத்துள்ளது. அதில் வியட்நாமென்னும் சம்பா  தேசத்தில் இருந்து சீனர்கள் ஒரு லட்சம் பவுண்டு எடையுள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கவுண்டின்ய வம்சத்தில் வந்த மன்னர் தங்க சிம்மாசனத்தில் படாடோபங்களுடன், அழகிகள் சாமரம் வீச, எழுந்தருளியதாகவும் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது நாம் சினிமாவில் காணும் மன்னர்களின் காட்சிகள் அத்தனையையும் அவர்கள் அப்படியே வருணித்து எழுதியுள்ளனர்.

சம்பா தேச பாமர மக்கள் உடை அணியாமல் இருந்ததாகவும் அவர்களுக்கும் உடை அணியும் வழக்கததை கவுண்டின்யர் கற்றுக் கொடுத்தகதாவும் சீனர்கள் எழுதி வைத்துள்ளனர்.

சீனர்களுக்கு சிறிய கப்பல் மட்டுமே கட்டத் தெரிந்ததால், தென் சீனக் கடலில் ,இந்துக்களின் நீண்ட கப்பல்களுக்கு , பயணிகள் மாற்றப்பட்டதாகவும் சீனர்கள் சொல்கின்றனர்.

ஒரு பவுண்டு= 453 கிராம்; ஒரு பவுன்/ சவரன் = எட்டு கிராம்)

xxx

உடனே செய்க!

உலக நாடுகள் முழுதும் அவரவர் எழுதிய புது வரலாற்றைப் படிக்கின்றனர். இந்தியர்கள் மாட்டும் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றை இன்று வரை படிக்கின்றனர்!!!

இந்திய வரலாற்றை விரைவில் திருத்தி எழுத மாபெரும் இயக்கம் துவக்க வேண்டும். தமிழர்களும் ஏனைய தென் இந்தியர்களும் தென் கிழக்கு ஆசியாவில் எட்டு நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆண்டதை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; சிங்க்கப்பூரின் பெயர் சம்ஸ்க்ருதம் (சிம்ஹ புரம்; இலங்கையின் பெயர் சம்ஸ்க்ருதம்- லங்கா, சிம்ஹலதேச); பர்மாவின் பெயர் பிரஹ்மா, கம்போடியாவின் பெயர் காம்போஜம், லாவோஸின் பெயர் லவன் தேசம்; வியட்நாமின் பழைய பெயர் சம்பா; மலேயாவின் பெயர் மலை நாடு- தமிழ்) சாவகம், சுமத்ரா போன்ற` இந்தோநேஷிய தீவுகள் தமிழ், சம்ஸ்கிருத நூல்களில் உள்ளன; தென் கிழக்காசிய வரலாற்றை தமிழர்கள் கற்றால் ராஜேந்திர சோழன், வீர பாண்டியன், குலோத்துங்க சோழனின் கடற்படை வலிமை புரியும். வியட்நாமை ஆண்ட திருமாற பாண்டியன் முதல் 1500 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்). அந்த புகழோங்கிய காலம் மீண்டும் வரும்; வரச் செய்ய முடியும்!)

Shoe worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › shoe-worship

1.      

15 Aug 2012 – Why Do Hindus Worship Shoes? By London swaminathan. “A pair of sandals worn by the Maharishi is expected to fetch £80,000 when they are …

Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …



https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-temple-in-syria-with-…

1.      

8 Apr 2017 – Written by London swaminathan Date: 8 APRIL 2017 Time uploaded in London:- 13-47 Post No. 3799 Pictures are taken from various sources; …

Footprints on sands | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › footprints-on-sands

1.      

12 Jul 2017 – Written by London Swaminathan Date: 12 July 2017. Time uploaded in London- 18-24. Post No. 4074. Pictures shown here are taken from …

Durga | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › durga

1.      

20 Jul 2018 – The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his …

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints …



https://tamilandvedas.com › 2018/10/07 › காலம…

1.      

Translate this page

7 Oct 2018 – Tamil and Vedas … காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the … some of his most famous poems, including the Village Black Smith. … Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)In …

Xxxx subham xxxx

பைரனின் உடைவாள் ஏலம் (Post No.7128)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-04 AM
Post No. 7128

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞரை பிரிட்டனை விட அதிகம் மதிப்பது கிரேக்க (Hellas= Greece) நாடுதான். அவருக்காக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தனர்.

லார்ட் பைரன் பாரதியாரைப் போலவே இலம் வயதில் மரணம் அடைந்தார். ஆனால் இலக்கிய உலகில் அழையாப் புகழ் பெற்றார்.

நான் 1992ம் ஆண்டில் நவம்பர் முதல் தேதி தினமணி பத்திரிக்கையில் எழுதிய ஆறு கட்டுரைகளில் பைரனின் உடைவாள் ஏலம் பற்றிய செய்தியைக் காண்போம்.

LORD BYRON

ENGLISH POET

BORN ON JANUARY 22, 1788

DIED ON April 19, 1824

Age at death 36

Publications

1807 Hours of Idleness

1809 English Bards and Scotch Reviewers

1812-18 Childe Harold’s Pilgrimage

1813 The Bride of Abydos

1817 Manfred

1818 Beppo

1819-24 Don Juan

1821 Cain

1822 The Vision of Judgement

My old articles on Byron

all the six articles were written by swaminathan in 1992.

Lord Byron | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › lord-byron

  1.  

10 Jan 2017 – Posts about Lord Byron written by Tamil and Vedas.

Byron | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › byron

  1.  

8 Aug 2018 – During one of Hobouse’s visit to Byron—Hobhouse was a College friend— at his villa near Genoa, and whilst they were walking in the garden, …

cccp = Soviet Union

ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் (Post No.7127)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 23 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-48 AM
Post No. 7127

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மார்வார் ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் ரதௌவ்ரா!

ச.நாகராஜன்

ஜோத்பூர் மன்னன் யஷ்வந்த் சிம்ஹாவுக்கு ஒரு செய்தி வந்தது.

பெண் ஒட்டகங்களை மேய்த்துப் பாதுகாக்கும் காவலன் விவசாயி ஒருவரின் மகன் ஒரு பெண் ஒட்டகத்தைக் கொன்று விட்டான் என்று செய்தி அனுப்பி இருந்தான்.

மன்னன் உடனே தன் படைவீரர்களுக்கு அந்த விவசாயியைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.

ஆசகரனா என்ற அந்த விவசாயி அவனது பையனுடன் அவைக்குக் கொண்டு வரப்பட்டான்.

மன்னன் கோபத்துடன் அவனை நோக்கி, “உன் பையன் ஒட்டகத்தைக் கொன்றது உண்மையா?” என்று கேட்டான்.

விவசாயி தன் பையனைச் சுட்டிக் காட்டி, “இதோ இருக்கிறான் என் பையன். அவன் தான் ஒட்டகத்தைக் கொன்றான்” என்றான்.

மன்னன் அந்தப் பையனை நோக்கி, “ஒட்டகத்தை நீ தான் கொன்றாயா?” என்று கேட்டான்.

“ஆம், மன்னவா! நான் தான் கொன்றேன். வயல்வெளியைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒட்டகம் எனது வயலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை மேய்ப்பவனிடம் அதை வயலுக்குள் விடாதே! என் சோளமெல்லாம் பாழாய்ப் போகும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒட்டகம் உள்ளே வந்து சோளக்கதிர்களை நாசம் செய்ய ஆரம்பித்தது. ஆகவே என் வயலைப் பாதுகாக்க ஒட்டகத்தைக் கொல்ல நேர்ந்தது” என்றான் அந்தச் சிறு பையன்.

மன்னனுக்கு அந்தச் சிறு பையனால் எப்படி ஒரு பெரிய ஒட்டகத்தைக் கொல்ல முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டது.

“எப்படி அந்த ஒட்டகத்தைக் கொன்றாய்” என்று கேட்டான் மன்னன்.

சுற்றும் முற்றும் பார்த்த பையன் தூரத்தில் இருந்த ஒரு ஒட்டகத்தைக் கண்டான்.

அதை அருகில் இழுத்து வந்து தன் வாளால் அதன் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டினான்.

“இப்படித்தான் வெட்டினேன்” என்றான் அந்தப் பையன்.

மன்னனுக்கு வியப்பு மேலிட்டது.

அவனைத் தன் படையில் உடனடியாகச் சேர்த்துக் கொண்டான்.

 அந்தப் பையன் தான் உலகமே வியக்கும் வண்ணம் பின்னால் மாபெரும் வீரன் என்று புகழ் பெற்ற  துர்காதாஸ்!

யஷ்வந்த் சிம்ஹாவின் ராணியையும் இளவரசன் அஜித் சிம்ஹாவையும் ஔரங்கசீப்பிடமிருந்து காப்பாற்றி விடுதலை செய்தவன் அவனே!

அந்த மாபெரும் வீரன் முகம்மதியர்களிடமிருந்து மார்வாரை விடுவித்தான்; வரலாற்றில் பெரும் புகழ் பெற்றான்!

****

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி (Post No.7117)


WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com

Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-53
Post No. 7117

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை  (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.

முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –



பாரதிக்குப் பிடித்தவர்

சைவ உணவுக்காரர், vegetarian

நாஸ்திகர், atheist 

பாரதி போலவே இளம் வயதில் மரணம்.

ஆனால் இலக்கிய உலகில் அழியா இடம்பெற்றவர்.

பிரெ ஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரத்தால் (Liberty, Equality, Fraternity) ஈர்க்கப்பட்டவர்.

அவரைப் பற்றி பெர்னாட் ஷா (Bernard Shaw) சொன்னதையும் படியுங்கள்:–

PERCY BYSSHE SHELLEY PROFILE

SHELLEY, English Poet, Novelist and Essayist

Born August 4, 1792

Died July 8, 1822

Age at death 29

Publications

1810 Zastrozzi

1813 Queen Mab

1816 Alastor

1818 The Revolt of Islam

1818 Ozymandias

1819 The Cenci

1820 Prometheus Unbound

1821 Adonais

Published after he died

1824 The Triumph of Life

Shelley was Tamil Poet Bharatiyar’s favourite poet.

ஷெல்லி | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › ஷெல்லி

  1.  

Translate this page

17 Oct 2015 – நமது பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். … ‘ஸார், நான் பேயை எழுப்பிக் கொண்டு இருக்கிறேன்’– என்றார் ஷெல்லி.

பாரதியார் நூல்கள் – 44, வரகவி …



https://tamilandvedas.com › 2017/12/03 › பாரதிய…

  1.  

Translate this page

3 Dec 2017 – அக்காலங்களில் எல்லாம், நம் கவிஞர் ஷெல்லி தாஸன் என்ற புனைபெயருடன் பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.

–subham–

Bhagavad Gita -New Discovery (Post No.7100)

Compiled by  London Swaminathan
swami_48@yahoo.com

Date: 15 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-59
Post No. 7100

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Does this terracotta tablet from around 1,000 BCE depict Lord Krishna and Arjuna?

ZEE NEWS 15-10-19

A nine-cm wide terracotta artifact lies in Hong Kong, in the possession of an art dealer, but the inferences and interpretations from it could possibly lead to interesting revelations about the time period of the Indian epic Mahabharata and its occurrence.

A nine-cm wide terracotta artifact lies in Hong Kong, in the possession of an art dealer, but the inferences and interpretations from it could possibly lead to interesting revelations about the time period of the Indian epic Mahabharata and its occurrence.

The tablet depicts a man holding four horses, standing on the back of a half chariot with a spoked wheel. There are two figures in the chariot, one who is presumably the charioteer, while another has his hand pointed in a direction. Both the figures in the chariot have quivers that contain arrows. 

Curious to know more about the tablet, Jeremy Pine, the owner had sent a picture of it to Dr Nanditha Krishna, CPR Institute of Indological Research and requested her to share her interpretations of the same and its historical significance. Dr. Nanditha along with other historians and domain experts had studied the image and historical texts to draw inferences.

According to a document shared with the media, the tabled is said to have been authenticated by Oxford Authentication using Thermoluminescence (TL testing) on May 14, 2019. The result of which states that the terracotta was fired between 2300 and 3600 years ago i.e. 1600 to 300 BCE. 

–subham–

வியட்நாமில் அகஸ்தியர், சிவன் சிலைகள் கண்டுபிடிப்பு (Post No.7098)

Written by  London Swaminathan
swami_48@yahoo.com

Date: 15 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-31
Post No. 7098

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Ramayana scenes at the bottom


— subham —

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2 (Post No.7091)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-48
Post No. 7091

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

12-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2

ச.நாகராஜன்

எல்லையில்லா மஹிமை கொண்ட வைரத்தை ஆலயங்களிலிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திடம் சமர்ப்பித்தனர் நமது முன்னோர்.

அரிய ரத்தினங்கள் அனைத்தும் தேவியை அலங்கரிக்க அருள் ஒளியுடன் ரத்னங்களிலிருந்து வரும் ஒளி அலைகளும் சேர்ந்து துதிப்போரின் மீது வெள்ளமெனப் பாய்ந்து சௌபாக்கியத்தைக் கொடுப்பது பாரம்பரியப் பழக்கமானது.

நீலத்திரைகடலின் ஓரத்தில் நின்று தவம் செய்யும் குமரியம்மனின் மூக்குத்தியின் ஒளி வெள்ளம் கடலில் தொலை தூரத்தில் வரும் கப்பல்களுக்கு வழி காட்டியாக அமைந்ததைச் சரித்திரம் கூறும்.

திருப்பதியில் குடி கொண்டிருக்கும் வெங்கடாசலபதிக்கு 1986ஆம் ஆண்டு வைர கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் சுமார் 26 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இதில் 28369 வைரங்கள் பதிக்கப்பட்டன.27 ½ அங்குலம் உயரமும் 13 அங்குல குறுக்களவும் கொண்டது இந்த கிரீடம். இதில் உள்ள வைரங்களின் அப்போதைய மதிப்பு 430 லட்சம் ரூபாய் ஆகும். பெல்ஜிய வைரங்களை ரஷியாவில் பட்டை தீட்டி இதில் பயன்படுத்தியுள்ளனர்.

இதை விட அதிகமாக 70000 வைரங்களுடன் 34 கிலோ எடை தங்கமுள்ள கிரீடம் ஒன்றை 2009 ஜூனில் ஒரு பக்தர் வெங்கடாஜலபதிக்குச் சமர்ப்பித்தார்.

ஒரு வைரத்திலிருந்து வீசும் ஒளிக்கதிர்களே எல்லையற்ற நன்மைகளை உருவாக்கும் என்று கூறும் போது இத்தனை ஆயிரம் வைரங்களின் கதிர்கள் ஏழுமலையானின் அருள் கதிர்களுடன் கலந்து பக்தர்களின் மீது படும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் வைர கிரீடமும் எல்லையற்ற மகிமையைக் கொண்டுள்ள ஒன்று.

இந்தியாவிற்குச் சொந்தமான மஹிமை வாய்ந்த கோஹினூர் வைரம் இன்று இங்கிலாந்தில் உள்ளது.

இதன் கதையே தனி. ஒரு வைரம் என்னென்ன செய்யும் என்பதற்கு கோஹினூரின் வரலாறே ஒரு சிறந்த சான்று.

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம், அவர்களுக்கு இது பெருமை தரும். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 106 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேசத்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு மடங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா எழுதி வைத்துள்ளார்.

 கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும். 

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை, எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் இருந்தது. இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன.

ஒவ்வொரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில  ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர்.

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

இந்தச் செல்வத்தைக் கவர, அவன் 1739ஆம் ஆண்டு டில்லியின் மீது படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா, தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்காக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சோகமயமானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக விளங்கிய அவர்.1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மறைந்தார்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

  ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ரஞ்சித் சிங்கின் இளைய ராணி ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான்.

தொடர்ந்து ஏற்பட்ட போர் ஒன்றில் சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் (பெயருக்கு) அரசாட்சி செய்தார்.

1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போக வைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று. பல இன்னல்களுக்கு ஆளான அவர் 1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார்.

     கோஹினூர் வைரத்தை டல்ஹௌசி பிரபு தன்னுடனேயே தனது இடுப்பு பெல்ட்டில் எப்போதும் வைத்திருந்தார். குளியலறை போகும் போது மட்டும் அதைத் தன் உதவியாளரிடம் கொடுப்பாராம்.

ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்ய, டல்ஹௌசி அதை இங்கிலாந்திற்கு அனுப்பினார்.

ராணியோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவரது மேலாடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது. 

பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.

விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது

விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார். 

2002ஆம் ஆண்டு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.

1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.

இந்தியாவிற்கு மட்டுமே உரிமையான இதை, இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் உரிமை கொண்டாடுகின்றன.

      2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும் என்றும் ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைப் பொருளைத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் எல்லாப் பொருள்களையும் இழந்து பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.

இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன. 

வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தைத் தந்துள்ளது.

ஒரு வைரத்தின் வரலாறே அதன் சாபத்தின் வாயிலாக இப்படி பல சாம்ராஜ்யங்களை ஆட்டி வைத்து, பல மன்னர்களுக்குத் துன்பங்களைத் தந்ததையும் பெண்மணிகளுக்குப் பெருமையைத் தந்ததையும் பார்க்கின்ற போது வைரத்தின் மகிமை நமக்கு நன்கு புலப்படுகிறது அல்லவா?

நமக்கென ஒரு வைரத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு சான்று.

வைரம் பற்றிய இன்னும் சில உண்மைகளை அடுத்துக் காண்போம்.

***

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090)

Research Article written by London swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-36 am
Post No. 7090

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.