மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542)

rifle

Compiled by london swaminathan

Post No. 2542

Date: 15th February 2016

 

Time uploaded in London:- 9-07 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஜோக்.

ஆதாரம்: விநோத விகட சிந்தாமணி;

அனுப்பியவர்: சென்னை ச. சீனிவாசன்

 

“சாமத்தில் வயிற்றுச் சாப்பாட்டுக்கு வழியின்றி, தந்திரம் ஒன்றும் தோன்றாமல்,சென்னையன் என்ற கருமான் பழைய துப்பாக்கி ஒன்றைச் சம்பாதித்து, கையிற்பிடித்து, அடர்ந்து படர்ந்த சாலையின்கண், துப்பாக்கியும் கையுமாய் உலவிக்கொண்டிருக்கையில், சங்கிலிபோல தங்கக் கொலுசு அரை ஞாணும்  நிறைய வெண்டயம் போல் வளைவுள்ள  விசிறிமுருகுகளையும் அணிந்து கையில் பணப்பையுடன் ஒரு செட்டியைக் கண்டு சந்தோஷத்துடன் கருமான், கையிலுள்ள துப்பாக்கியால் செட்டியைச் சுடுவது போலக் குறிவைத்து, “செட்டி மகனே! உன் கெட்டிக் கொலுசையும், வட்ட முருக்கையும், பொட்டிப் பணத்தையும் கொட்டிக்கொடுக்கிறாயா? சுட்டுப்போடட்டுமா? என்று பயமுறுத்திக்கேட்க, அதற்குச் செட்டி மகன், கெட்டியுக்தி பண்ணி, உன் துப்பாக்கியை எனக்குக் கொடுத்துவிட்டால், என் சொத்தனைத்தையும் உனக்குத் தருகிறேன் என்றான்.

(இதுவரை ஒரே வாக்கியம்; பழையகால நடை!!!!!!!!!!!!!!!!!)

 

கருமான் சம்மதித்து, சொத்தையெல்லாம்  பறித்துக்கொண்டு துப்பாக்கியைக் கொடுத்தான். அதைக் கையிற்பிடித்து, “பட்டி மகனே! என் சொத்து முழுவதையும் கட்டிவைக்கிறாயா? அல்லது உன்னைச் சுட்டுப் போடட்டுமா? என்று செட்டியார் கேட்க, அதற்குக் கருமான், “செட்டியாரே! சுட்டுப் போட அதில் மருந்திருந்தாலன்றோ? என்று சொல்லிக்கொண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தான். செட்டியார் ஏமாந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் மதியீனத்தை நினைத்து துக்கித்தார்.

–சுபம்–

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–

 

புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533)

IMG_9502 (2)

Written by london swaminathan

 

Post No. 2533

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 10-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பொட்டை வெளியில் அய்யர் மலை நிற்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்று. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் புனிதச் சின்னம் இது.

 

வரலாற்று ரீதியிலும், புவியியல்  ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம். பழங்குடி மக்கள் இதை உள்ளூரு என்று அழைபர். இந்த முறை எனது ஆஸ்திரேலியப் பயணத்தில் ஐய்யர்ஸ் ராக் எனப்படும் உள்ளூருக்குப் போகமுடியவில்லை. நான் சிட்னி மியூசியத்தில் கண்டதையும், புத்தகத்தில் படித்ததையும் கொண்டு இக்கட்டுரையை வரைகிறேன்.

 

இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ் என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்து, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு  எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்.

IMG_2401

இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகட்டும் ஒரு கதை சொல்லும். வேதகால மக்கள் எப்படி வாய்மொழியாக வேதங்களைப் பாதுகாத்தார்களோ, அது போலப் பழங்குடி மக்களும் பாடல் வடிவில் பல கதைகளைப் பாதுகாத்துப்  பாடிவருகிறார்கள். எல்லாம் பாம்பு, பல்லி தொடர்பான கதைகளாக இருக்கும். குனியா, வன்னாபி, வானவில் பாம்பு. விஷ ,மலைப்பாம்பு என்று பல வகைகள். ஒவ்வொன்றும் அந்தந்த இன மக்களைக் குறிக்கும்

 

இந்த அய்யர் மலையில் பல பழங்கால வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. 30 மைல் தொலைவில் கட தூஜா என்னும் இடமிருக்கிறது இது பெண்களுக்கு புனிதமான இடம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் உடலமைப்புபோலத் தோன்றும். நாம் சதி என்னும் பார்வதி தேவி தட்ச யக்ஞத்துக்குப் பின்னர் கோபமடைந்து தனது உடலை எரித்தபோது அதன் பகுதிகள் விழுந்த இடமெல்லாம் எப்படி சக்தித் தலங்கள் ஆனதாக நம்புகிறோமோ அதே போலப் பழங்குடி மக்களும் புனிதமான பெண்ணின் உடல் என்று நம்புகின்றனர்.

 

ஆஸ்திரேலியாவின் படைப்புக் கதைகள் பழங்குடி மக்களின் புராணத்துக்கு அடிப்படையாக அமைகிறது. இதைக் கனவுநேரம் என்று அவர்கள் மொழியில் சொல்லுவர். நாம் திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் செய்கிறார் என்பது போல இது. இந்தப் படைப்புக்காலத்தில் இரண்டு பையன்கள் , உளூரு மலையை உருவாக்கியதாக அவர்கள் கதைகள் சொல்லுகின்றனர். மேலும் குனியா என்னும் மலைப்பாம்பு மக்களை நீரு என்னும் விஷப் பாம்பு ஆட்கள் தாக்கியபோது படைப்புகாலம் முடிவுக்கு வந்தது என்பர்.

 

அவர்கள் புராணப்படி, முன்னோர்களின் ஆவிகள் இந்த உலகைப் படைத்ததாகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று பெயர் சூட்டியதாகவும் அவை பாடல் வடிவில் உள்ளன என்றும் சொல்லபடுகிறது. இந்த விஷயங்களை, சமயத் தலைவர்கள் மட்டுமே அறிவர் என்பர். இது நமது வேதப் பாடல்களை ரிஷிகள் மட்டுமே “கேட்க” (சுருதி) முடியும் என்பதைப் போல. ஒரு பழங்குடி இனத் தலைவருடன் பயணம் செய்தால் அவர், ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் அழைத்துச் சென்று அது தொடர்பான பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார்.

 

மற்றொரு கதை குனியாவும் மாலாவும், ஒரு முக்கிய சடங்கிற்கு குறித்த காலத்தில் வராததால், விண்டுல்கா என்னும் மேற்குப்பகுதி மக்கள் கோபமடைந்ததாகவும் பின்னர் பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது.

IMG_9501

No. 22 Kata Tjuta and No.23 Uluru in this map.

 

எனது கணிப்பு

பழங்குடி மக்கள் பாம்பின் பெயரில் மக்களை அழைப்பதைப் பார்க்கையில் இவர்களும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த நாகா இன மக்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் – பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் நடத்தி பாம்புகளைக் (நாகா இன மக்களை) கொன்றதையும், பின்னர் இருவருக்கும் உறவினரான ஆஸ்தீக மகரிஷி சமாதான உடன்படிக்கை செய்து கொடுத்ததையும் இந்த பல்லாயிரமாண்டு வரலாற்றை பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் சொல்லிவருவதையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுடியுள்ளேன் ( மாயா இன மக்கள் இந்திய நாகர்களா – என்ற கட்டுரையில் விவரம் காண்க) ).

 

 

பின்னர் மய தனவன் என்ற ஒரே ஒரு நாகர் இன மனிதன் மட்டும் அர்ஜுனனின் உதவியைப் பெற்றதையும் நமது புராணங்கள் விளக்குகின்றன. இவனது தலைமையில் பாதாள லோகத்துக்கு (தென் அமெரிக்கா) சென்றவர்களே மய= மாயா நாகரீகத்தைத் துவக்கினர். எகிப்தின் முதல் மன்னன் மனு, மாயா இன முதல் மன்னன் ஆகிய அனைவரும் கலியுக முதல் ஆண்டான கி.மு.3102-ல் ஆட்சி துவக்கியதாக அந்தந்த நாட்டு வரலாறு சொல்வதும், ஆஸ்தீக மகரிஷி பெயரில் அஸ்டெக் நாகரீகமிருப்பதும் இவைகளௌக்கு மேலும் சான்று பகரும். இதே போல ஆஸ்திரேலியாவிலும் நாகர்களே சென்று ஆட்சி அமைத்ததால் எல்லாம் பாம்பின் பெயரில் அமைந்துள்ளன. பல்வேறு காலத்தில் – 40,000 ஆண்டுகளில் — பல நாகா அணிகள் சென்றதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கலாம்.

 

மாயா, ஆஸ்திரேலியப் பழங்குடிகள், எகிப்திய மன்னர்கள் ஆகியோருடன் வேறு பல ஒற்றுமைகளும் நிலவுவதை தனித் தனி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து வதுள்ளேன். அதன் பிண்ணனியில் நான் கூறுவதை வைத்துப் பார்த்தால் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது விளங்கும்.

 

இந்துக்களுக்கு கன்யாகுமரிக்குக் கீழே 7 பாதாள லோகங்கள் இருப்பது நன்கு தெரியும். கடலில் சென்று அடையும் எல்லா தீவுகளையும் நாகர் தீவு என்றும் அங்குள்ள பெண்கள் நாக கன்னிகைகள் என்றும் சொல்லி வந்தனர். பல்லவர் வரலாறு, மணிமேகலையில் சோழர் வரலாறு முதலியவற்றிலும் இதைக் காணலாம்.

IMG_9505 (2)

ஆஸ்திரேலியாவில் முதல் முதலில் குற்றவாளிகளை மட்டுமே குடியமர்த்தி வந்தனர். இதே போல வாமனாவதாரத்திடம் தோற்றுப் போன மஹா பலி சக்ரவர்த்தியையும் தென் அமெரிக்கவுக்கு நாடு கடத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திரும்பிவரலாம் என்று பணித்தனர். அப்படி வந்த நாளையே இன்று வரை மலையாளிகள் ஓணம் என்று கொண்டாடிவருகின்றனர். இதுபோலவே, வேத முறைகளைக் கைவிட்ட விஸ்வாமித்திரரின் மகன்களை தெற்கே அனுப்பி அவர்கள் திராவிடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் புரணங்கள் கூறும். ராம லெட்சுமணர், பஞ்ச பாண்டவர்கள் கூட 14 ஆண்டுகளும், 13 ஆண்டுகளும் வனவாசத்தில் தெற்கு வரை வந்து சென்றனர்.

 

அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்பதெல்லாம் பிற்காலத்தில் பல பெயர்கள் ஏற்படக் காரணமாயீற்று. அதல என்பதிலிருந்தே, அடலாண்டிக் மஹாசமுத்திரம் என்றும் சுதல என்பதிலிருந்தே சவுத் (தென் திசை என்பதும் ) வந்தன. கபிலாரண்யா என்பதே, அமெரிக்காவின் கலிபோர்னியா என மருவியது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

-சுபம்-

 

 

 

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்! (Post No. 2529)

IMG_8880

Free Red Ferry of Brisbane

 

Written by london swaminathan

Post No. 2529

Date: 11th February 2016

 

Time uploaded in London  14-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_8850

 

பிரிஸ்பேன் (Brisbane) என்னும் நகரம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது சிட்னி நகரிலிருந்து 1000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிஸ்பேன் நதிக்கரையில் இருக்கிறது. நாங்கள், உலக மஹா இயற்கை அதிசயமான பெரும் பவளத்திட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பிரிஸ்பேன் வந்தோம்.

 

பிரிஸ்பேனில் என்னை அதிசயிக்க வைத்த முதல் விஷயம், இலவச படகு சவாரி! உலகில் பத்துப் பதினைந்து நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க படகு சவாரியானலும் சரி, அல்லது பாரீஸ் நகரில் செயின் நதியில் பவனி வருவதானாலும் சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் படகில் ஏற்றுவர். அட! எங்கள் லண்டன் மாநகரில் எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் தேம்ஸ் நதியில் உலாவர அழைத்துச் சென்றபோதும் ஒவ்வொரு ஆளுக்கும், ஒரு இருபது  பவுனாவது (ரூ2000) செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் இலவச படகு சவாரி.

IMG_8886

Beautiful Brisbane River

ஹோட்டலில் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், சில தகவல் விசாரித்தபோது ‘ரெட் Fபெர்ரி’யில் (Red Ferry) போங்கள்; டிக்கெட் எதுவும் வேண்டம் என்று ஒரு துப்பு கொடுத்தார். சிவப்பு நிற படகில் ஏறினால் பிரிஸ்பேன் முழுதும் சுற்றிப் பார்க்கலாம். ஊரின் வரைபடம் கையிலிருந்தால் எந்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் என்ன சுற்றுலாக் கவர்ச்சி இருக்கிறது என்பது தெரியும். ஆங்காங்கே இறங்கி இலவசமாகப் பார்த்துவிடலாம்.

 

உலகில் சில இடங்களில் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் இலவச சவாரி இருக்கும். ஆனால் நதியில் ஊர் முழுவதும் செல்ல இலவச சவாரி, எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான். வாழ்க பிரிஸ்பேன்.

IMG_8843

Himalayan Salt for Good Health

இன்னொரு அதிசயம்!

பிரிஸ்பேனில் கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்தவாறு நகர்ந்தோம். ஒரு கடையின் வாசலில் பெரிய பெரிய பாறைகளாக (சிவப்புக் கூழாங்கற்கள் போல இருக்கும்) 30 கிலோ, 35 கிலோ என்று வைத்திருந்தார்கள். ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் – (Himalayan Salt) இமய மலை உப்பு என்று எழுதிவைத்திருந்தனர். எனக்கு ஒரே வியப்பு. அட! இந்தியாவில் கூட நான் பார்த்திராத இமயமலை உப்பை ஆஸ்திரேலியாவில் விற்பதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழவே, கடைக்குள் சென்றேன். அங்குள்ள ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடமென் ஐயப்பாட்டைக் களைய வினாக்கள் தொடுத்தேன். அவர் சொன்னார்: “ இவை அனைத்தும் இமயமலையிலிருந்து வந்தவை. இது மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்குச் சுகமளிக்கும். காற்றைத் தூய்மையாக்கும்”. பல புத்தகங்களும் வைத்திருந்தனர். காசு கொடுத்து வாங்க மனமுமில்லை. ஓசியில் புரட்டிப் பார்க்கத் துணிவுமில்லை. மனைவி மக்கள் விரட்டவே மெதுவாக நகர்ந்தேன்.

IMG_8897

Asia Pacific Art Gallery

எங்களுக்கு போனஸ்

ஒவ்வொரு இடத்திலும் ஒரே நாள் இரவு ஹோட்டல் ரிசர்வ் செய்திருந்ததால் அருகிலுள்ள கோல்ட்கோஸ்ட், (Koala) கோவாலா சரணாலயம் ஆகியவற்றுக்குப் போகமுடியவில்லையே என்று வருத்தம். கோவாலா என்னும் மரக் கரடியும். கங்காரு என்னும் மிருகமும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் பிராணிகள்.

 

ஆயினும் கலைக் கூடத்துக்குச் (Art Gallery) சென்று வண்ண ஓவியங்களைப் பார்ப்போம் என்று குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். எங்களுக்கு போனஸ் காத்திருந்தது. நாலு மாதங்களுக்கு ஆசிய- பசிபிக் வண்ண ஓவியங்களின் விசேஷ காட்சி என்பதைக் கண்டு மகிழ்ந்தோம். உள்ளே சென்றவுடன் அருமையான ஓவியங்களைக் கண்டு இரண்டு காமிராக்களையும் முடுக்கினேன். ஒரு நூறு படங்கள் கிடைத்தன. நேபாள, இந்திய ஓவியர்கள் பல இந்துமத ஓவியங்களைத் தீட்டியிருந்தனர்.

 

எல்லா ஊர்களிலும் இருப்பது போல இராட்சத ராட்டினம் (பிரிஸ்பேன் வீல் Brisbane Wheel) இங்கும் இருந்தது. ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு ஒரு புதுமையைக் காண விரைந்தோம். செயற்கைக் கடற்கரை அங்கு இருப்பதாக சுற்றுலாக் கவர்ச்சிப் பட்டியலில் இருந்தது. ஒரு பெரிய பூங்காவில் நிறைய கடல் மணலை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாண உடையுடன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தனர். அருகிலேயே குழந்தைகள் , அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அப்படி ஒன்றும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. அட, சரியப்பா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூதானே சர்க்கரை என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தோம்.

IMG_2014

Brisbane Wheel

இரவு நெருங்க நெருங்க பசி எடுத்தது. நாங்களோ சுத்த சைவம். எனது மகன் கஷ்டப் பட்டு, கூகிள் செய்து ஒரு ‘வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்டைக் கண்டுபிடித்திருந்தான். ‘கூகிள் மேப்’ பைப் பயன்படுத்தி அங்கே போவதற்குள் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அது ஒரு தாய்(லாந்து) ரெஸ்டாரண்ட். வழக்கம்போல எங்கள் பல்லவியைப் பாடினோம். “நாங்கள் அனைவரும் சுத்த வெஜிட்டேரியன்ஸ். அதன் பொருள் என்ன வென்றால், ‘நோ பிஷ்’, ‘நோ மீட்’, ‘நோ எக்’ No Fish, No Meat, No Egg (மச்சம், மாமிசம், முட்டை அற்ற) என்று விளக்கினோம். அந்தப் பெண்ணோ, ‘நோ பிராப்ளம்’, பிஷ் சாஸ் (No Problem; we will use fish sauce or oyster sauce)  போடுகிறோம் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் போடுகிறோம், மாமிசம், முட்டை எதுவும் போட மாட்டோம்’ என்று உறுதி தந்தாள்!!!! அடக் கடவுளே! அது வெஜிட்டேரியன் அல்லவே என்றோம். அதற்கென்ன, அதையெல்லாம் போடாமல் செய்வோம் .ஆனால் அது ‘ஹாரிபிள்’ (Horrible அதி பயங்காச் சுவை) ஆக இருக்குமென்று அச்சுறுத்தினாள்; தாயே, உண்மையைச் சொன்னாயே; நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க என்று மனதிற்குள் வாழ்த்திக்கொண்டே ஒரு இதாலிய ரெஸ்டாரண்டில் நுழைந்து வழக்கம்போல பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta) சாப்பிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

 

பிரிஸ்பேன் நகரில் வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே, நீல நதியில் படகு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நல்ல பூங்காக்கள், தாவரவியல் பூங்கா ஆகியனவும் அழகூட்டுகின்றன. சுமார் 24 மணி நேரமே இருந்தாலும் மலையளவு சாதித்த மகிழ்ச்சி.

IMG_2021

Whale song

ஆர்ட் காலரிக்குச் செல்லும் வழியில் அந்த ஊர் அறிவியல் காட்சிசாலையும் உள்ளது. அந்தக் கூடத்தில் பெரிய திமிங்கில உருவங்களைத் தொங்கவிட்டுள்ளனர். திமிங்கிலங்கள் கடலில் எழுப்பும் பெரிய சங்கொலி போன்ற சப்தத்தை திமிங்கிலப் பாட்டு (Whale Song) என்பர். அதை அப்படியே ரிகார்ட் செய்து அந்தக் கூடத்தில் ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறார்கள். முதலில் இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று வியந்த எங்களுக்கு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் விளங்கியது.

 

எல்லா ஊர்களையும் போல, பல ஷாப்பிங் மால் (கூடங்கள்), தெருக்களும் இருக்கின்றன. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல. அதையும் பார்த்து பொழுதும் போக்கலாம்.!

IMG_8854

 

IMG_8865

 

IMG_8825

Brisbane by Night

 

–subham–

 

 

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

IMG_9051

Research Article written by london swaminathan

Post No. 2523

Date: 9th February 2016

Time uploaded in London காலை 10-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2345

(பழங்குடி மக்கள்- இந்துக்கள்  இடையேயுள்ள கருத்தொற்றுமைகளைக் காணும் மூன்றாவது கட்டுரை இது. நேற்றும், அதற்கு முதல் நாளும் வெளியிட்ட கட்டுரைகளையும் காண்க)

 

 

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

 

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

IMG_9039

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

 

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

IMG_9041

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

 

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

 

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

 

அடுத்த கட்டுரையில் , ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சில விநோத நம்பிக்கைகள், பழக்க, வழக்கங்களை சுருக்கி வரைவேன்.

IMG_8996

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520)

IMG_2255

Research Article written by london swaminathan

Post No. 2520

Date: 8th February 2016

Time uploaded in London 9-18 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2338

 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.

 

“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி

இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.

ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.

 

பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

IMG_2399

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

IMG_2331

சம்ஸ்கிருதச் சொற்கள்

ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.

 

இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….

பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)

 

இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.

தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)

“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

 

IMG_2327

எனைத்தானும் நல்லவை கேட்க…

மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.

ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”

 

இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

IMG_2282

வான சாத்திர நிபுணர்கள்

ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.

ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.

 

IMG_2403

 

 

IMG_2398

தொடரும்………………………………..

 

 

 

 

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510)

IMG_2959

Written by london swaminathan

Date: 5 February 2016

 

Post No. 2510

 

Time uploaded in London :– 14-26

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2960

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.

 

நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம்.ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம்.

 

 

சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1300 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.

பசிபிக்  சாமா

ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம்.

 

இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.

 

இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.

 

IMG_2945

பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்

விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1300 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள்.

 

இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர்.

 

ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன.

 

IMG_2942

இந்தப் பெரும் பவளத்திட்டில்

600 வகையான பவளங்கள்

100 வகையான ஜெல்லி மீன்கள்

3000 வகையான கிழிஞ்சல்கள், சங்குகள், சோழிகள்

500 வகையான கடற்புழுக்கள்

1625 வகையான மீன்கள்

130 வகையான சுறாமீன்கள், மாண்டா ரேய்ஸ்

30 வகையான திமிங்கிலங்கள், டால்பின்கள் உள்ளன.

இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்!

 

மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!

IMG_2961

இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டியத் இடம்.

 

நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது அங்கு வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!

IMG_2964

 

IMG_2975IMG_2979IMG_2983

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!

 

–சுபம்-

 

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)

IMG_9777

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2507

 

Time uploaded in London :–  8-23 (காலை)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டு பழமையான ஜோக்குகள்; சென்னை சீனிவாசன் , அனுப்பிய விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

 

RES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

மடயசாம்பிராணி

ஒரு நாட்டுப்புரத்து பிரமணன் திருவையாற்றிற்குப் போகப்புறப்பட்டுத் தஞ்சாவூரிலிறங்கி அங்கே வழியில் போய்க்கொண்டிருக்கும் பட்டணத்தானொரு வனைப் பார்த்து ஐயா! திருவையாற்றிற்குப் போவதற்கு வழி எது என்றான்.

 

அதற்கவன், ஸ்வாமி! இப்படி நெடுக வடக்கே பூனீங்கன்னா சந்துபூவுது, அதிலே விழுந்து கிழக்கே பூனா ஒரு டிரையின்சு இருக்குது. அதிலே விழுந்து பூனா ஒரு ஆலமரம் நிக்குது, அதிலே ஏறிப்பூனா ஒரு கூரை வீடு இருக்குது. அதுமேலே ஏறி மேற்கே பூவது வழி என்றான்.

 

இந்தப் பிராமணன் பிரமித்து ஒகோ ஒருக்கால் அப்படித்தான் போகவெண்டுமோ என்று நினைத்துப் பட்டணத்தான் பகர்ந்ததையே நோக்கி சந்திலே விழுந்து, டிரைன்சிலேயும் விழுந்து,  ஆலமரத்து மேலேறி, மறுபடியும் கூரைமீதேறிப்போகும் போது அவ்வீட்டுக்காரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர் மனைவி நெய் பரிமாறும்போது நாட்டுப்புரத்து பிராமணன் கூரை மீதேறிய அதிர்ச்சியால், கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரன் இலையில் இரண்டு மூன்று செத்தை விழுந்தது.  உடனே வீட்டுக்காரன் யார் உயர இருக்கிறது என்றான்.

 

அதற்கு உயர நடந்து கொண்டிருக்கும்  பிராமணன், “ஏண்டா! நான் திருவையாற்றிற்குப் போகிறேன். உனக்கென்ன! நீயேன் கேட்கிறாய்? என்றான். அதற்கு வீட்டுக்காரன், புத்திசாலி மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டி! லவண்டி! திருவையாற்றுக்குப் போகிற வழியில் ஏன் சாதம் போட்டாய்” என்று பலவிதமாய் வைது அடித்தான். இதில் யார் புத்திசாலி என்பதை இதை வாசிப்போர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Xxx

IMG_9769

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை

இவர் சிறுவயதிலேயே சீமைக்குப் போய் ஆங்கில பாஷையில் தேர்ச்சியுற்று பெரிய பரீக்ஷைகள் எழுதி, நமது ஜில்லாவுக்கு டெபுடி கலெக்டர் உத்தியோகம் பெற்றுவந்திருந்தார். அக்காலத்தில் ஹெட்கிளார்க் கிருஷ்ணாராவ் என்பவர்.

 

புரட்டாசி சனிக்கிழமையன்று விடுமுறை கேட்கவேண்டுமென்று கேட்க, சென்ற வருஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாவென்று எஜமான் கேட்க, , ஹெட்கிளர்க் அதிக வணக்கத்துடன், “ஸார்! சென்ற வருஷத்தில், புரட்டாசி சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையன்று வந்ததினால் விடுமுறை கொடுக்கப்படவில்லை” யென்று தமிழில் பதில் சொன்னார்.

 

உடனே எஜமான், “ஆல்ரைட்” என்று தலையசைத்துக் கொண்டு விடுமுறை யளித்தார்

–சுபம்–

இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள் (Post 2506)

salt-sugar

Written by S Nagarajan

 

Date: 4 February 2016

 

Post No. 2506

 

Time uploaded in London :–  8-08 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள்

.நாகராஜன்

 

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி   பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!

 

என்ன அநியாயம் இது!

 

அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!

 

 

சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.

 

 

TRANS FATS

 

வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.

 

உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.

 

பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.

 

 

REFINED GRAINS

 

மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.

 

எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

 

sugar

SUGAR

க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.

 

 

FATTY MEATS

இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.

 

 

ENERGY DRINKS

 

சக்தியூட்டும் எனர்ஜி பானங்கள்

சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின்பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

 

salt

SALT

உப்பு

 

உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக்  கூடாது!

 

 

இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்

 

சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீஸா

 

பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)

கொழுப்புள்ள இறைச்சி வகைகள்

சிக்கன் ஸ்கின் (Chicken skin)

எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்

பாஸ்தா

ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats

சர்க்கரை உள்ள பானங்கள்

க்ரீம் சாஸ் வகைகள்

கெட்ச் அப்

assorted_ice_cream_cones

 

ஆரோக்கியமான உணவு வகைகள்

 

எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.

 

ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.

I

இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்

******

ஆவி உலகம்: உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்! (Post No. 2499)

Daniel_Dunglas_Home_by_Nadar

(விக்கிபீடியா படம்; நன்றி)

Written by S Nagarajan

 

Date: 2 February 2016

 

Post No. 2499

 

Time uploaded in London :–  8-2  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 home

பாக்யா வார இதழில் 16-1-16 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை.

பாக்யா இதழ் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

மன்னர்கள் சந்தித்த உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்!

.நாகராஜன்

“ஹோமுடன் நான் பழகிய பல வருடங்களில் அவரைப் பற்றி நான் அறிந்ததில் அவர்  சந்தேகத்துக்குரிய எந்த விதமான மோசடி வேலைகளையும் செய்து நான் பார்த்ததே இல்லை” – வில்லியம் க்ரூக்ஸ்.

 

உலகின் மிக அபூர்வமான மீடியம் என்ற பெயரைப் பெறுபவர் டேனியல் டங்ளஸ் ஹோம் (1833-1886).  இவர் செய்யாத ஆவி உலகம் சார்ந்த அபூர்வச் செயல்களே இல்லை எனலாம்.

 

அதனால் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்கள் அனைவரும் இவரைப் பார்க்க ஆசைப்பட்டனர். இவர் நடத்தும் அதீத உளவியல் அமர்வை தங்கள் முன் நடத்துமாறு வேண்டிக் கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டின் மன்னனான மூன்றாம் நெப்பொளியன் ஹோமை ஆவித் தொடர்பு கொள்வதற்கான அமர்வு ஒன்றை நடத்துமாறு வேண்டினான். அதற்கிணங்க ஹோம் அவர் முன்னால் ஒன்றல்ல, பல அமர்வுகளை நடத்தினார். நெப்போலியன் அதீத ஆர்வத்துடன் ஹோமின் ஒவ்வொரு அசைவையும் கூட மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

 

மன்னரும் ராணியும் அருகருகில் அமர்ந்திருக்க அவர்கள் எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்த ஹோம், அவர்கள் மனதில் எண்ணுகின்ற கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தந்தார். ஒரு சமயத்தில் அங்கு ஆவி ரூபத்தில் தானே உருவான ஒரு கை ராணியைத் தொடவே, அவர் அந்தக் கையில் இருந்த ஒரு சிறு குறையால் அது தன் தந்தையின் கை தான் என்பதைக் கண்டுபிடித்துப் பிரமித்துப் போனார். இன்னொரு அமர்வில் அறையே ஆடியது. அங்கிருந்த மேஜையும் ஆடியது. பின்னர் மேஜை உயரத் தூக்கப்பட்டது. பின்னர் அதிக எடையுள்ளதாக் ஆகி யாருமே நகர்த்தமுடியாதபடி அது தரையுடன் ஒட்டிக் கொண்டது. மூன்றாம் அமர்வில் மாயமான ஒரு ஆவித் தோற்றமுடைய கை தோன்றியது. அது மேஜை மேலிருந்த ஒரு பென்சிலை எடுத்து முதலாம் நெப்போலியனின் கையெழுத்தை அப்படியே போட்டது.

 

ட்யூக் டி மார்னி என்பவர் மன்னரிடம் வந்தார். இப்படி ஆவிகளை மன்னர் நம்புவது தப்பு என்று கூறி அதை அனைவருக்கும் அறிவிக்கப் போவதாகவும் சொன்னார்.

உடனே மன்னர், ‘ நீங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அத்துடன் இதையும் இறுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை நம்புவதிலும் அதை அப்படியே நேரடியாக நிரூபணமாகப் பார்ப்பதிலும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்தது எல்லாம் உண்மை. அதை நிச்சயமாக நான் உணர்கிறேன். ஆகவே இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்றார்.

 

இந்த அதிசயமான சம்பவங்களால் ஹோமின் புகழ் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பரவியது.

 

ஹோம் அமெரிக்கா சென்றவுடன் அவர் மன்னரால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்று வதந்திகள் கிளம்பின. ஆனால் உண்மை என்னவெனில் ராணி ஹோமின் சகோதரியைத் தானே ஆதரிக்கப் போவதாக உறுதி அளித்ததன் பேரில் அவரை அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்குக் கூட்டி வரவே ஹோம் அமெரிக்கா பயணமானார்.

 

அமெரிக்காவிலிருந்து வந்த ஹோமை பவேரியா (BAVARIA) நாட்டு மன்னர் உடனே பார்க்க வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து இத்தாலியில் நேப்பிள்ஸ் மன்னர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். இடைவிடாத அமர்வுகளால் இத்தாலியில் ஹோமின் உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டது. உடனே ஹோம் மஸாஸ் சிறையில் மன்னரால் அடைக்கப்பட்டார் என்று வதந்தி பரவியது. இப்படி வதந்திகள் பரவுவது அவரைப் பொருத்த மட்டில் சாதாரணமாகிப் போனது!

 

அலெக்ஸாண்டர் டூமாஸ் பிரான்ஸின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரது நூல்கள் இன்றைய உலகில் நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக மக்களால் படித்துப் போற்றப்படுகின்ற்ன. அவர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். ஆனால் பீட்டர்ஹாஃப் என்ற நகருக்கு வருமாறு மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஹோமுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஹோமினால் தட்ட முடியவில்லை.

 

இதனால் சற்று மன வருத்தம் அடைந்த எழுத்தாள்ர் அலெக்ஸாண்டர் டூமாஸ், “ ஏராளமான அலெக்ஸாண்டர்கள் உலகில் இருக்கலாம். ஆனால் டூமாஸ் ஒருவன் தான் இருக்க முடியும்” என்றார்.

260px-Home_and_the_accordion_trick

டாக்டர் ஆஷ்பர்னர் என்பவர் ஹோமின் அமர்வுகளினால் ஈர்க்கப்பட்டார். இதைப் பார்த்த பகுத்தறிவுவாதியான அவரது நண்பர் டாக்டர் எல்லியொட்ஸனுக்குத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் ஃப்ராடு வேலை என்று அவர் மூலைக்கு மூலை முழங்கினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து எல்லியொட்ஸனை ஹோம் நேருக்கு நேர் சந்தித்தார். தனது அமர்வுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அங்கு சென்ற எல்லியொட்ஸன் மிகத் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார்.

 

லண்டனுக்குத் திரும்பி வந்த அவரது பேச்சில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஹோம் எந்தவித மோசடி வேலையையும் செய்யவில்லை என்று பகிரங்கமாக அவர் சொல்ல ஆரம்பித்தார். இதை டாக்டர் ஆஷ்பர்னருடன் இணைந்து வேறு சொல்லவே ஹோமின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

ராபர்ட் சேம்பர்ஸ் என்ற இன்னொரு பகுத்தறிவுவாதி ஹோமைத் தீவிரமாகத் தாக்கி வந்தார். ஆனால் அவர் ஹோமின் அமர்வு ஒன்றில் இறந்து போன தனது தந்தையுடனும் மகளுடனும் தொடர்பு கொண்டார். யாருக்கும் தெரியாத அந்தரங்க விஷயங்களை அவர்கள் பேசியதால் சேம்பர்ஸும் ஆவி உலகை நம்ப ஆரம்பித்தார். இருந்தாலும் வெளிப்படையாகச் சொன்னால்  பகுத்தறிவுவாதி என்ற தனது பெயர் பாதிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். ஆகவே ஹோம் 1862ஆம் ஆண்டில் எழுதிய சுயசரிதைக்கு இன்னொரு புனைப் பெயரில் முன்னுரை எழுதினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து அவரது போலி வேஷத்தை உதறினார். பகிரங்கமாக மக்களிடையே ஹோமை ஆதரித்துப் பேசலானார்.

வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் 1871ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் ஹோம் மீது பல சோதனைகளை பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு நடத்தினார். தீவிரமான கண்காணிப்பில் நடந்த இந்த சோதனைகளின் முடிவில் க்ரூக்ஸ் ஹோம் செய்வது அனைத்தும் உண்மையில் நடப்பதே; எந்த மோசடியும் இல்லை என்று அறிவித்தார்.

 

இப்படி ‘பல விஞ்ஞான முறைப்படியான சோதனைகளில் வெற்றி பெற்றவர்; உலகின் பல நாட்டு மன்னர்களைக் கவர்ந்தவர்’ என்ற பெரும் புகழைப் பெற்றார் ஹோம்.

சுயசரிதையில் தனது அனுபவங்களை ஒளிவுமறைவின்றி அவர் எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே ஆவி உலக உண்மைகளை அறிய விரும்புவோர் நாடும் புத்தககமாக அது அமைந்துள்ளது!

neil_armstrong_1930-2012_stamp_hires

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சந்திரனில் கால் பதித்து பெரும் புகழைப் பெற்றார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

ஆனால் தலைக்கனம் இல்லாத எளிமையானவர் அவர். ஒரு நாள் பிரபல புகைப்பட நிபுணரான யூசூப் கார்ஷ் (Yousuf Karsh)  தன் மனைவியுடன் அவரைப் புகைப்படம் எடுக்க வந்தார். மதிய உணவு கொடுத்து அவரை உபசரித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அப்போது யூசூப்பிடம் அவர் சென்ற நாடுகளைப் பற்றி ஆர்வத்துடன் விலாவாரியாக விசாரித்துக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட யூசுப்பின் மனைவி, “ ஆனால் நீங்கள் சந்திரனுக்கே சென்றவர் ஆயிற்றே. உங்களது பயண அனுபவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்.

 

புன்னகையுடன்,“அந்த ஒரே இடம் தான் நான் பயணித்த இடம்” என்று மெதுவாகச் சொன்னார் ஆர்ம்ஸ்ட்ராங்.

 

ஒருமுறை அவர் ஜெருசலத்திற்குச் சென்றார். அங்கு டெம்பிள் மவுண்டுக்குச் செல்லும் ஹுல்டா வாயிலில் (Temple Mount, Hulda Gate) நின்றார். இதே படிகளின் வழியாகத் தான் ஏசு கிறிஸ்து நடந்து சென்றாரா என்று ஆவலுடன் கேட்டார். ஆம் என்ற பதில் வந்தது. ஆஹா! இந்தப் படிகளின் மீது காலடிகளைப் பதிக்கும் போது சந்திரனில் காலடி பதித்த போது ஏற்பட்டதை விட அதிக பரவசத்தை நான் அடைகிறேன்” என்றார் அவர்!

**********