Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?
2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை வழங்கும் .மூலிகை . அது என்ன?
3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?
4காமக்கண்ணி என்னும் சங்கப் புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.
கறுப்புக் கண்ணி மூலிகை எது ?
5.சின்னப் பெண் என்னும் மூலிகை எது ?
6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்
என்ன தாவரம் உளது?
8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?
9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?
10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?
11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
அட்லாண்டிக் கடல் கடந்த வீராங்கனையின் சுவையான அனுபவம் பற்றி 1992-ம் ஆண்டில் எழுதிய கட்டுரை இது
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நான் தினமணியில் எழுதிய பழைய கட்டுரை இது . ஆயினும் சுறாமீனோ அதன் குணங்களோ மாறவில்லை.
வாரம் தோறும் ஆஸ்திரேலியாவிலிருந்து சுறா மீன் தாக்குதல் பற்றி செய்திகள் வருகின்றன .சங்க இலக்கியத்தில் சுறாமீன் தாக்குதல் பற்றி நிறைய செய்திகள் உள .
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
16-11-2019 பாக்யா இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை –அத்தியாயம் 436
விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!
ச.நாகராஜன்
முதல் முதலாக பெண்கள் மட்டும் விண்கலத்திலிருந்து வெளியில் வந்து நடந்த சாதனை 2019 அக்டோபர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. விண்கலத்திலிருந்து வெளியில் வந்து நடந்த அமெரிக்க வீராங்கனைகள் இருவர் – கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மெயர்(Christina Koch, Jessica Meyer).
விண்வெளி வீரர்களின் அகராதியில் இந்த விண்வெளி நடைக்கு எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி (Extra Vehicular Activity – EVA)என்று பெயர்.
விண்கலத்திலிருந்து வெளியில் வந்து சுமார் ஐந்தரை மணி நேரம் இருந்த இந்த இரு வீராங்கனைகளும் செயலிழந்திருந்த ஒரு பவர் கட்டுப்பாடு சாதனத்தை எடுத்து விட்டு புதிய ஒன்றைப் பொருத்தும் வேலையைச் செய்தனர்.
ஏழு மாதங்களுக்கு முன்பேயே இந்த சாதனை நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் விண்கலத்திலிருந்து வெளியில் செல்வதற்கான ஸ்பேஸ் சூட் – ஆடை – ஒன்று தான் விண்கலத்தில் இருந்தது. இன்னொன்று தேவைப்படவே அதைத் தயாரித்து நாஸா அனுப்பியது. பின்னர் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் கோச் வெளியில் வரவே அவரைப் பின் தொடர்ந்து மெதுவாக கருவிகள் அடங்கிய பை ஒன்றை எடுத்துக் கொண்டு ஜெஸிகா வந்தார். கைப்பிடி ஒன்றுடன் இவர்கள் இணைக்கப்பட்டனர். தேவையான போது இதிலிருந்து விடுபட்டு அவர்கள் தங்கள் வேலையை விண்வெளியில் மிதந்தவாறே செய்தனர்.
பூமிக்கு மேலே 260 மைல் உயரத்தில் உள்ளது விண்வெளி நிலையம். அதில் இப்படி ஒரு சாதனையைச் செய்வது உலகெங்குமுள்ள தாய்க்குலத்தையே பரவசப்படுத்தி இருக்கிறது.
வேலையை முடித்து விட்டு பழுதான பேட்டரியை பத்திரமாக விண்கலத்திற்குள் கொண்டு வந்து வைத்து விட்டனர் இந்த இருவரும். அது பூமிக்குக் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
விண்வெளியில் நடை பயிலும் இந்த வீராங்கனைகளின் அடுத்த ஆசை என்ன தெரியுமா? சந்திரனில் கால் பதிக்கும் முதல் பெண்மணியாக ஆக வேண்டும் என்பது தான். ஜெஸிகா மெயர், “ சந்திரனில் கால் பதிக்கும் முதல் பெண்மணியாக ஆவதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதுவே எனது இலட்சியப் பயணமாக அமையும். இதோ நேரம் நெருங்கி விட்டது – நாம் திரும்பவும் சந்திரனுக்குப் போக! வெகு விரைவில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும் என நான் நம்புவதோடு அந்தக் குழுவில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் மெயரை கிறிஸ்டினா கோச் மிகவும் ஆதரித்து ஆமோதித்தார்.
கோச் (வயது 40) விண்வெளி நிலையத்தில் 2020 பிப்ரவரி முடிய இருக்க திட்டமுள்ளது. அப்போது அவர் விண்வெளி நிலையத்தில் இருக்கும் மொத்த நாட்கள் 328 நாட்களாகும். இது தொடர்ந்து ஒரு பெண்மணி விண்வெளியில் இருந்த அதிக நாட்களாக அமையும். ஸ்காட் கெல்லி என்பவர் 340 நாள் விண்வெளியில் இருந்திருக்கிறார், ஆனால் தொடர்ந்து அல்ல!
கோச் விண்வெளியில் நீண்ட காலம் இருந்த போது அவர் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்வர்.
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு விண்வெளியில் களைப்பு சீக்கிரம் ஏற்படுகிறது.
இதுவரை 14 வீராங்கனைகளும் 213 விண்வெளி வீரர்களும் விண்வெளியில் நடந்துள்ளனர். விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி ரஷியாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா ஸவிட்ஸ்கயா என்பவர். சல்யுட் 7 என்ற கலத்தில் 1984இல் விண்வெளி சென்றார்.
முதன் முதலாகவிண்வெளியில் நடந்த அமெரிக்க பெண்மணி காத்ரீன் சல்லிவன்.
இதற்கிடையில் நாஸா சந்திரனுக்குச் செல்வோர் அணியும் புதிய ஆடையின் வடிவமைத்து அதன் முன் மாதிரியைக் காட்டியுள்ளது.
ஸ்பேஸ் சூட் என்பது மிக முக்கியமான ஒன்று – ஏனெனில் விண்வெளியில் நடந்து செல்வோர் பல்வேறு உஷ்ணநிலையைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது. விண்ணில், உறைய வைக்கும் மைனஸ் 250 டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து மிக அதிக வெப்பமான 250 டிகிரி பாரன்ஹீட் வரை இருப்பதால் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பது அவர்கள் அணியும் ஸ்பேஸ் சூட் தான்!
பூமியில் இந்த ஆடையின் எடை 280 பவுண்டுகள். ஆனால் விண்வெளியில் எடையற்ற சூழ்நிலையில் இதற்கு எடையே இருக்காது.
பூமியிலிருந்து சந்திரனுக்குச் செல்ல சாதாரணமாக 3 நாட்கள் ஆகும். ஒரு விண்கலம் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் மைல்கள் பயணப்பட்டு சந்திரனை அடைகிறது. இதுவே பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். ஆனால் சரியான தூரத்தைக் கணக்கிட வேண்டுமானால் விண்கலம் எந்த ஓடுபாதை வழியே செல்ல இருக்கிறது என்பதை நிர்ணையித்து அதற்குத் தக தூரத்தைக் கணக்கிட்டு பின்னர் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
ஆனால் விண்வெளி விஞ்ஞானம் வெகு விரைவில் வளர்ந்து 12 மணி நேரத்தில் சந்திரனை அடைந்து விட முடியும் என சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சந்திரனுக்கு அடுத்த பயணம் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்ற செய்தி வலுப்பட்டு வரும் நிலையில் அங்கு செல்லும் குழுவில் ஒரு பெண்மணியும் இடம் பெறுவார் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
விக்ரம் அம்பாலால் சாராபாய் (தோற்றம் 12, ஆகஸ்ட்,1919 மறைவு : 30 டிசம்பர் 1971) மிகப் பெரிய இந்திய விஞ்ஞானி. இஸ்ரோ நிறுவப்பட பெரிதும் காரணமாய் இருந்தவர் அவரே. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார்.
அவரது மகள் மல்லிகா சாராபாய் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திப் பெயர் பெற்றவர். அவர் ஒரு நடிகையும் கூட! தன் தந்தையைப் பற்றி விழா ஒன்றில் அவர் கூறிய சம்பவம் இது.
மல்லிகா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் அவர் யாருடைய கேர்ள்-ப்ரண்ட் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். விவாதம் பெரிய சண்டையாக ஆகி ஒரு மாணவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தி விட்டார்.
விஷயம் பெரிதாகி விடவே விக்ரம் சாராபாய் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். பள்ளியின் பிரின்ஸிபால் விக்ரமின் சகோதரியான லீலாபென் தான்!
பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்த வெகத்தில் திரும்பி வந்தார் விக்ரம், சிரித்துக் கொண்டே.
அவர் தனது மகளிடம் கூறினார்; “மல்லிகா, இந்த மீட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ ஒரு குற்றமும் செய்யாத போது நீ தான் காரணம் என்று உன் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. ஒன்று தெரிந்து கொள்! இந்த உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்க மாட்டார்கள். வசதியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.
இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் வழியில் அமைத்துக் கொள்பவர்கள். அவர்கள் தங்களுக்கு எது உண்மை என்று படுகிறதோ அந்த வழியில் செல்வார்கள்.
நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த வழி தான் என் வாழக்கை எப்படிப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.
இந்த வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மல்லிகா.
விக்ரம் சாராபாய் பத்மபூஷன் (1966ஆம் ஆண்டு) மற்றும் பத்ம விபூஷண் (இறந்த பிறகு 1972இல் வழங்கப்பட்டது) விருதுகளைப் பெற்றவர்.
தந்தையிடமிருந்து அரிய வழிகாட்டுதலைப் பெற்ற மல்லிகா பின்னால் பிரபலமானதில் ஆச்சரியமே இல்லை!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில்
23-11-2019 அன்று வெளியாகியுள்ள கட்டுரை!
அச்சம் அகற்றும் பவளம்!
ச.நாகராஜன்
தெய்வீக மணி பவளம்
தெய்வீக மணி பவளம் நவ ரத்தினங்களுள்
ஒன்று. முக்கியமானதும் கூட!
சிவபிரானும் தமிழ்த் தெய்வமான
முருகனும் பவள நிற மேனியர் ஆவர்.
‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’ என்று சிவபிரானின் தோற்றத்தை
வர்ணித்த அப்பர் பிரான் இப்படிப்பட்ட உருவத்தைத் தரிசிக்க ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே’ என்று நெகிழ்ந்து
உருகுகிறார்.
குறுந்தொகை என்ற சங்க நூலில்
அதன் கடவுள் வாழ்த்தைப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார் ‘பவளத்தன்ன மேனித் திகழொளி’ என்று முருகனின் பவள மேனியைப்
போற்றிப் பாடுகிறார்.
முத்துகுமாரசுவாமி பிள்ளைத்
தமிழை அருளிய குமரகுருபரர் முருகன் ஆடி வரும் அழகை வர்ணிக்கையில்,
“கம்பி விதம்பொதி குண்டலமுங்குழை
காதும் அசைந்தாட
கட்டிய சூழியு முச்சியுமு முச்சிக் கதிர் முத்தொடும்
ஆட
அம்பவழத் திருமேனியும் ஆடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை”
என்று போற்றித் துதிக்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ “பச்சை மாமலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்” என்று திருமாலின் உருவைக் கண்டு பரவசம் அடைகிறார்.
பவளத்தின் இதர பெயர்கள்
பிங்கல முனிவர் பவளத்தின் வேறு
பெயர்களாக துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் எனப் பல பெயர்களைத்
தருகிறார்.
ஜோதிடத்தில் பவளம்
இப்படிப்பட்ட பவளம் ஜோதிடத்தில்
செவ்வாய் தோஷம் தரும் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கும் ஒரு அரும் சக்தியாக விளங்குகிறது.
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள்
செவ்வாயின் நற்பலன்களைக் கூட்டவும், சில சமயங்களில் ஜாதகத்தில் செவ்வாய் நற்பலன் தராத
இடங்களில் இருந்தால் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கவும் பவளம் அணிய வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
ஒன்பது எண் செவ்வாயுடன் தொடர்பு
கொண்டது என்பதால் ஒன்பது எண் பிறந்த தேதியாகவோ அல்லது கூட்டு எண்ணாகவோ அமைபவர்களுக்கு
உரியதும் பவளம் தான். ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து சரீர சம்பந்தமான வியாதிகளை
இவர்களுக்கு பவளம் போக்கி விடும்.
மருத்துவத்தில் பவளம்
வம்புச் சண்டைகளையும், வந்த
சண்டைகளையும் தீர்ப்பது பவளமே.
உஷ்ண சம்பந்தமான அனைத்து வியாதிகளையும்
போக்குவதும் பவளமே.
பவளத்தைக் கலந்து தயாரிக்கப்படும் பல மருந்துகளை நமது பண்டைய சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.
பவழம் தாவரமா அல்லது விலங்கினமா!
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடிலும்
அவரது சீடரான தியோப்ரெஸ்டஸும் தங்களது ‘கற்கள்’ என்ற புத்தகத்தில் பவளத்தைக்
குறிப்பிடுகின்றனர். பவளம் ஒரு தாவரமா அல்லது கடல் வாழ் உயிரினத்தால் உருவானதா என்பதைப்
பற்றிய சுவையான சர்ச்சை அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. பெர்ஸிய அறிஞரான அல்பெருனீ பவழத்தை விலங்கினத்தோடு சேர்த்து அதைத் தொடும் போது
அது உணர்கிறது என்று அதற்கான காரணத்தையும் கூறினார். வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி
ஒரு மைக்ராஸ்கோப்பின் உதவி கொண்டு விலங்குகளுக்கே உரித்தான மெல்லிய
சவ்வுத் திசு பவழத்தில் காணப்படுவதால் அது விலங்கினத்தைச் சேர்ந்ததே என்று இந்த
சர்ச்சைக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தார்.
பவளத்தின் வகைகள்
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பவளத்தைப் பற்றிப் பல உண்டு.
பவளத்தில் சிறந்த வகை சிவப்புடன் வெண்மை கலந்த வண்ணத்துடன் இருக்கும். குழிமுயலின்
இரத்த வண்ணத்தில் இது இருக்கும். பவளம் மிருதுவானது.அழகானது. மேலே எண்ணெயப்
பூச்சைக் கொண்டது போல இருக்கும். மிக சுலபமாகத் துளை போடக் கூடியபடி இருக்கும்.
பவளத்தின் அடுத்த வகை சிவப்பாக – குங்குமச் சிவப்பாக
– இருக்கும். பந்தூக மலர் அல்லது மாதுளம் பூ நிறத்திலிருக்கும். இந்த வகைப் பவளம்
சற்றுக் கடினமானதாக இருக்கும். பள பளப்பான எண்ணெய்ப் பூச்சைக் கொண்டிருக்காது.
இதில் துளையிடுவது சற்றுக் கடினமாக இருக்கும்.
மூன்றாவது ரகம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்டதாக
இருக்கும். பலாச புஷ்பம் போல நிறத்தில் இருக்கும். அழகிய இந்த வண்ணம் இருந்தாலும்
பளபளப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
நான்காவது வகை பவளம் கறுப்பு கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும். ரோஜா மலர் இதழ்கள் போல இருக்கும். அது கடினமாக இருக்கும்.
அதன் ஒளி பல நாட்கள் நீடிக்காது. அதில் துளை போடுவது மிகவும் கடினமாக இருக்கும்.
நல்ல பவளத்தை எப்படி அறிவது?
ஒரு நல்ல பவளமானது
1) சிவப்பு வண்ணம் 2) பளபளப்பான எண்ணெய் பூசப்பட்டது போன்ற தொற்றம் 3) சுலபமாகத் துளையிடக்
கூடியது 4) உருண்டை வடிவம் 5) நீடித்த காலம் இருக்கும் ஒளி 6) கனமானது 7) மேல் பரப்பு
மிருதுவானது ஆகிய இந்தக் குணங்களைக் கொண்டிருக்கும். இதுவே நல்ல பவளம்.
வெளுத்துப் போன
வெண்மை, சாம்பல் வண்ணம், சிறியது, கரடு முரடான மேற்பரப்பை உடையது, ஏராளமான பள்ளங்கள்
அல்லது குழிகளைக் கொண்டது, மிகவும் இலேசானது, தாமிர நிறமுடையது – இவை யாவும் விலக்கத்
தக்க பவளங்கள் ஆகும்.
நவரத்தினங்கள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டால் ஒரு இரும்பினால் கீறல் போடப்படும் தன்மை உடையவை முத்தும்
பவளமும் மட்டுமே.
பவளத்தின் பயன்கள்
பவளம் உடலை உருக்குகின்ற க்ஷய ரோகத்தைத் தீர்க்கும்.
இரத்தப் போக்கைப் போக்கும்.
இருமலைத் தீர்க்கும்.
கண் வியாதிகளைப் போக்கும்.
விஷத்தை முறிக்கும்.
தீய திருஷ்டியாலும் பிசாசு போன்ற தீய சக்திகளினால் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
இது இலேசானது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
இவையே
ரஸ ஜல நிதி தரும் அற்புதத் தகவல்கள்.
பல்வேறு
வடிவங்களிலும் நிறங்களிலும், அளவுகளிலும், வடிவமைப்புகளிலும் பவளம் கிடைக்கப் பெறுகிறது.
கடலின்
சில பகுதிகளில் மட்டுமே பவளப் பாறைகள் இருக்கின்றன. (பாலிப் என்ற) ஒரு அரிய வகைக் கடல்
வாழ் உயிரினத்தின் கழிவே பவளம். ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு செண்டிமீட்டர் என்ற
குறைவான அளவில் பவளம் வளர்கிறது.
150
அடி என்ற குறைந்த பட்ச ஆழம் இருந்தால் தான் பவளம் வளரும்; 900 அடி ஆழத்திலும் அது காணப்படுகிறது!
அதே
போல உஷ்ணநிலையும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. 70 முதல் 85 டிகிரி பாரன்ஹீட்
உஷ்ணம் அதற்குத் தேவை. தெளிவான கடல் நீரில் மட்டுமே பவளம் வளரும். பசிபிக் மற்றும்
இந்து மா கடலில் பவளங்கள் காணப்படுகின்றன.
ஆழமில்லாத
கடல் நீர்ப்பரப்பு மிகவும் சுலபத்தில் சூரியனின் வெப்பம் பட்டு வெப்பமாவதால் பவளம்
வளர வாய்ப்பில்லை. அதிக ஆழத்தில் தான் அது வளர முடிகிறது.
ஒரு
முக்கியமான விந்தையான விஷயம் நிலப் பரப்பின் கிழக்குப் பக்கம் உள்ள கடல்நீரில் தான்
பவளம் தோன்றுகிறது. உஷ்ணம் இந்தப் பக்கம் குறைவாக
இருப்பதால் இப்படி ஏற்படுகிறது என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கரை
மணல் திட்டில் பவளம் கிடைத்து விட்டது என்று கொண்டாட நினைப்போர் அது பாலிப் என்ற ஒருவகை
கடல்வாழ் உயிரினத்தின் ஓடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடல்
அலைகள் வலிமையுடன் வேகமாக இருக்கும் இடங்களிலும் அலைகள் ஆவேசம் அடையும் இடங்களிலும்
பொதுவாக பவளத்தின் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது.
ஏனெனில் அங்கு கடல்வாழ் உயிரினங்களுத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைப்பதால்
தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரும் பவழப்பாறை எனக் கூறப்படுவது ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதை விண்ணிலிருந்தும் பார்க்க முடியும். 1,33,000 சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள இது 2900 தனிப்பட்ட பவழப்பாறைகளையும் 1400 மைல் நீளத்தில் பரந்துள்ள 1050 தீவுகளையும் கொண்டிருக்கிறது!
பவளப்
பாறைகளை நம்மால் நேரில் பார்த்து மகிழ முடியும்.
அந்தமான்
– நிகோபர் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளின் கடல் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளன.
அந்தமானிலிருந்து
மிக அருகிலுள்ள ஜாலி பாய், பவளத் தீவு, ரோஸ் தீவு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்காக
விசேஷ படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தப் படகின் கீழ்ப்புறத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால்
படகில் இருப்போர் இந்தக் கண்ணாடி வழியே கடலின் அடியில் இருக்கும் பவளப் பாறைகளைப் பார்த்து
பிரமிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட
பவளங்கள், வளர்ந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்டு சிறிய் அளவுகளில் பட்டை தீட்டப்பட்டு
சந்தைக்கு விற்பனைக்காக வருகின்றன.
‘மோ
அலகின்’ படி பவளத்தின்
கடினத் தன்மை 3.5 முதல் 4 வரை உள்ளது.
பவளத்தின்
வளர்ச்சிக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை.
அறிவியல் ரீதியாக பவளம் எய்ட்ஸ், கான்ஸர், தீராத வலி
ஆகியவற்றிற்கான நிவாரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நாகரிகத்தில் சீனர்கள் பவள மாலையை அணிவது சாதாரணப்
பழக்கமாக இருந்து வந்திருக்கிறது.தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள பவளம் ஆயுளை
நீட்டிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
ஆயுர்வேதத்தில் பவள பஸ்மம் எலும்பு சம்பந்தமான நோய்களைத்
தீர்க்கவும், கால்சியம் குறைபாடுள்ளவர்களுத் தரப்படும் மருந்தாகவும் உபயோகப்படுத்தப்பட்டு
வருகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பில்ஜெர்
(Professor Bilger)
ஆஸ்திரேலியாவில் உள்ள ட்ரீ ஐலேண்டில் (Tree Island)ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இங்குள்ள பவளங்களை ஆராய்ந்ததில்
அவர் பவளம் பற்றிய ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளார். “மற்ற உலோகங்களில் ஐயான்
தாதுக்கள் (Mineral Ions) கடத்தப் படுவதை விட பவளத்தில் பத்து மடங்கு வேகத்துடன் இந்தச் செயல் நடைபெறுகிறது.ஆனால்
இது ஏன் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது” என்கிறார் அவர். பவளம் தனித்துவம் வாய்ந்த ஒன்று என்பது இதிலிருந்து புலனாகிறது.
பிரபலங்கள் போற்றும் பவளம்!
உலகின் ஏராளமான பிரபலங்கள் பவழத்தைத் தாங்கள் அணிவதை
உறுதிப்படுத்துகின்றனர். உலகமே பார்த்து வியந்து மயங்கிய ஸ்டைல் ராணியான எலிஸபத் டெய்லரின்
நவரத்தின ஆபரணக் குவியலில் பவளம் பதிக்கப்பட்ட அணிகள் உண்டு. இவை அனைவரையும் கவர்ந்ததில்
வியப்பில்லை.
ஹிந்தி திரைப்பட நடிகையான கரீனா கபூர், டி.வி. பிரபலமான
ஏகதா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பவளம்
பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் ஆபரணங்களை அணியத் தவறுவதே இல்லை என்பதற்கான காரணம் பவளத்தின்
மகிமை தான்!
பவளத்தில் உயரிய ரகம் 1000 டாலரிலிருந்து 6000 டாலர்
வரை விற்கப்பட்டு (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) உலக மக்களை ஆச்சரியப்பட
வைத்துள்ளது.
மணியாய் ஒளியாய் வருவாய்!
அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் பவளத்தைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.
முருகனின் பவள மேனி கண்டு உருகிய அவர் கந்தர் அனுபூதியில், இறுதிப் பாடலில், ‘உருவாய் அருவாய்’ என ஆரம்பித்து ‘மணியாய் ஒளியாய்’ எனத் துதித்து ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!’ என்று முடிக்கும் போது பவள மணியின் ஒளி நம் இதயத்தில் புகுந்து தெய்வீக உணர்வை எழுப்புகிறது இல்லையா!
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
உலகில்
எவ்வளவோ இயற்கை அதிசயங்கள் உள்ளன. அதில் ரஷ்யாவிலுள்ள பைகால் (Lake
Baikal)
ஏரிக்கு சிறப்பிடம் உண்டு. ஆழமான, பழமையான
ஏரி என்பதோடு 1500 உயிரினங்களை உடைய ஏரி இது. ஆனால் மற்ற
ஏரிகளைப் போல இதுவும் புறச் சூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது அளவில்
சுருங்கி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது பற்றி 1992 ஆகஸ்ட் 8ம் தேதி நான் தினமணியில் எழுதிய
கட்டுரையைப் படியுங்கள்
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாதரசம்
பற்றிய நேற்றைய கட்டுரையில் மெர்குரி எனப்படும் பாதரசத்தால் விஷம் (Mercury Poisoning) ஏறுவது ஏன் என்று விளக்கியிருந்தேன்.
அது எங்கெங்கு நிகழக்கூடும், அதன்
அறிகுறிகள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மேலும் காண்போம்.
பாதரச
உலோகத்தின்
மூலம் விஷம் ஏறுகிறதா அல்லது பாதரச உப்புக்கள் மூலம் விஷம் ஏறுகிறதா என்பதைப்
பொறுத்து உடலின் பாதிப்பு இருக்கும். நுரையீரல், தோல், ஜீரண உறுப்புகள் மூலம் விஷம் உடலில்
பரவும்.
விளைவுகள்
வாயில்
உலோகத்தைச் சுவைத்தது (metallic taste) போலத் தோன்றும். தலைவலி, வாந்தி, வயிற்று வலியும் ஏற்படும். சில
நாட்களுக்குப் பின்னர் உமிழ்ழ்நீர் (salivary glands) சுரப்பிகள் வீங்கும்; ஆதலால் நிறைய எச்சில் சுரக்கும்.
பின்னர் பற்கள் ஆட்டம் காணும்.
தொழிற்சாலைகளில்
ஏறும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்துக்கு ஏறுவதால் வேறு விதமான விளைவுகளைக்
காணலாம். இது களைப்பு, தூக்கமின்மை, பலவீனம், ஞாபக சக்திக் குறைவினை உண்டாக்கும். மனத்தொய்வு, பிறர் மீது சந்தேகப் படுதல் (Paranoia) முதலியன ஏற்படும்; கை நடுக்கத்தினால் எழுத்துக்கள்
கோணும்.
1810-ம் ஆண்டு விபத்து
1810-ல் ஸ்பெயின் நாட்டிலிருந்து லண்டனுக்கு, சிறிய கப்பலில் பாதரச பிளாஸ்குகளை
கொண்டு வந்தனர். புயல் வீசியதால் அதில் ஒன்று உடைந்தது. இதன் மூலம் பரவிய
விஷத்தால் மூவர் இறந்தனர். 200
பேர் பாதிக்கப்பட்டனர்.
கப்பலில் இருந்த ஆடு மாடுகள் அனைத்தும்
இறந்துபோயின.
குற்றம்
நடந்த இடங்களில் தடயங்களை ஆராயும் குற்றவியல் நிபுணர்களுக்கும் இது ஆபத்தாக
விளங்குகிறது. ஏனெனில் அங்கு பயன்படுத்தும் (Dusting) பொடியில் பாதரசம்
இருக்கிறது.
ஆங்கிலத்தில்
ஒரு மரபுச் சொற்றொடர் ‘தொப்பிக்காரன் போல பைத்தியம்’ (Mad as a hatter) என்பதாம். அதாவது தொப்பித் தொழிலில்
ஈடுபட்டவர்கள் பாதரச உப்புக்களைப் பயன்படுத்தியதால் பைத்தியக்காரான் போல நடந்து கொண்டனர். இது அவர்களின் உடலில்
பாதரசம் ஏறியதால் ஏற்பட்ட விளைவு. அதிகமான பாதரசத்தை சிறுநீர், மலம் மூலம் உடல் வெளியேற்றும். பாதரச விஷம் ஏறியவர்களுக்கு விஷத்தை
முறிக்க மருந்துகள் கிடைக்கின்றன.
வரலாறு
பாதரசம் 118 மூலகங்களில்
ஒன்று.
30,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதி மனிதர்கள் ஸ்பெயின் குகைகளில் சின்ன பார் எனப்படும் மெர்குரி சல்பைடை (Mercury
sulphide)
வண்ணம் ஏற்றப் பயன்படுத்தினர். குர்னா (Kurna) என்னும் எகிப்திய நகரில் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் பாதரசம் பயன்படுத்தப்பட்டது. அதை தேங்காய் வடிவக் குடுவையில்
வைத்து இருந்தனர்.
சின்னபார்
(Mercury sulphide) என்னும் சிவப்பு நிற உப்பை உருக்கி பாதரசம் எடுத்ததை சீன ரசவாதி கு
ஹோங் (281-361) எழுதிவைத்துள்ளார். அரிஸ்டாடில், ப்ளினி ஆகியோரும் இதை அறிந்திருந்தனர்.
ரோம் ஆண்டுதோறும் 4 டன் பாதரசத்தை வாங்கியதாக ப்ளினி
கூறுகிறார்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்மேடன் சின்னபார் சுரங்கம் 2500 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.. தென் அமெரிக்காவின் இன்கா (Incas) நகரீகம் இதை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தியது.
பொருளாதார
உபயோகம்
சின்னபார்
(cinnabar)
என்னும் பாதரச உப்பை உருக்கினால் பாதரசம் கிடைக்கும். இது ஸ்பெயின், ரஷ்யா, சீனா, இதாலி, ஸ்லோவீனியவில் அதிகம்
கிடைக்கிறது; பாதரசத்தை குடுவைக் (Flask) கணக்கில் விற்கிறார்கள். ஒரு
குடுவையில் 34-5 கிலோ அல்லது 76 பவுண்டு எடை உள்ள பாதரசம் இருக்கும்.
சோளப்
பயிரைப் பாதுகாக்க இது பயன்பட்டது. ஆனால் இதில் 280 பேர் இறந்ததால் கைவிடப்பட்டது. காளான்
வகை (Fungal disease) நோய், பயிரைத் தாக்காமாலிருக்க பாதரச உப்புக் கரைசல்
தெளிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் முதலியவற்றில் இதைப் பயன்படுத்துவது குறைந்து
விட்டது மின்சார கியர், சுவிட்சுகள், மின் விளக்குகள், பாட்டரிகளில் இப்போது பயன்படுகிறது.
கில்டிங் (gilding)
எனப்படும் முலாம் பூசும் தொழிலில் இது
பயன்படுகிறது ஆயினும் அதனால் விஷம் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவின்
செயின்ட்பீட்டர்ஸ் பர்க் நகர மாதாகோவிலுக்கு 100 கிலோ தங்க முலாம் பூசியபோது 60
தொழிலாளர்கள் பாதரச விஷம் ஏறி இறந்தனர்.
கழிவுப்பொருள்களில்
இருந்து டன் கணக்கில் பாதரசம் கிடைக்கிறது. மனிதர்கள் பயன்படுத்திய பாட்டரிகள், பல் செட்டுகள் ஆகியவற்றிலிருந்து
ஆயிரக்கணக்கான டன் பாதரசம் கிடைக்கிறது.
ஜப்பானில்
நடந்த மீனமாட்டா குடா விபத்து (Minamata Bay Disaster) எல்லோரும் அறிந்ததே. ஒரு தொழிற்சாலைக்
கழிவுகள் கடலுக்குள் விடப்பட்டு அதை உண்ட மீன்கள் மூலம் மனிதர்களும் பாதிக்கப்பட்டனர்.
10,000
பேருக்கு மினமாட்டா நோய் ஏற்பட்டது (மெர்குரி விஷ ஏற்றம்). பின்னர் அப்பகுதியில்
மீன் பிடிப்பதை தடை செய்தனர்.
5 Sep 2018 – நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396).
Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 September 2018. Time
uploaded in …
7 Sep 2018 – பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401).
written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 7 September 2018. Time
uploaded in London – 6-47 am (British Summer Time). Post No.
6 Nov 2019 – பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! … this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
please correct and read
பிழைத்திருத்தம் –
பாதாசம் – பாதரசம் வி பனை – விற்பனை மைரோ –மைக்ரோ பாயன்படுத்தி- பயன்படுத்தி
6 Nov 2019 – பாதரச மணி
பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184). mica. Written by
LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 6 NOVEMBER 2019. Time in London …
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
நான் எழுதி 27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அலமாரியில் சேகரித்து வைத்த தினமணி பேப்பர் கட்டிங்ஸ் (paper cuttings) பழுப்படைந்து உதிர்ந்து போகின்றன. ஆயினும் மரகதத்தின் (Emerald) மதிப்பு குறையவில்லை. என்னுடைய 21-6-1992 கட்டுரையைப் படியுங்கள். அத்துடன் இந்த பிளாக் (blog)கில் வெளியாகும் நவரத்தினக் (Nine Gems) கட்டுரைகளைப் படியுங்கள்; ‘நவரத்தினக் குருமா’வைவிட ருசியானவை இவை!
ஐம்பதுக்கும்
மேற்பட்ட ரத்தினக் கட்டுரைகள் இங்கே கிடைக்கும்
23 Apr 2012 – Queen Elizabeth will shine as long as the Kohinoor
shines on her crown jewels!! Posted 23rd … ((posted by swamiindology.blogspot.com AND
tamilandvedas.com)) … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். ….. நடிகர் நடிகையர்க்கு சங்கம் வைக்கும் பொழுது போக்கற்ற ….. நவ காளிதாசன் என்று புகழ்கிறார்.
8 Jan 2017 – Tagged with முத்து தோன்றும் இடங்கள். முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524).
Research Article … https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/.
15 Oct 2017 – கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST
No.4302). Written by S.NAGARAJAN. Date:15 October 2017. Time uploaded in
London- 5–51 am. Post No. 4302. Pictures shown here are taken from …
23 Apr 2012 – Picture shows Hope
Diamond. (தமிழ்நாட்டில்
பல குடும்பங்களில், குறிப்பாக
பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் …
5 Apr 2018 – Pictures shown here
are taken from various sources such as Facebook friends, Books, Google and
newspapers; thanks. Pictures may be subject to copyright laws. WARNING: PLEASE
SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG … TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி, …
21 Apr 2015 – Posts about Gems in Vedas
written by Tamil and Vedas. … Probably they imported the jewellery or the
idea from India. 1.Candra denotes gold …
27 Sep 2013 – Following are some
of the gems from Atharva Veda: … There are over 600 articles on Vedas,
Hindu Culture, Tamil and Sanskrit literature in …
13 Feb 2012 – Tamil and Vedas … Kalidasa’s praise of
Himalayan gems is sung by Sangam poets as well. … “Brought by the cart, gems and
gold from the Northern Mountain … (Please read my article :How did
Shakespeare know Cobra …
9 Feb 2015 – http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html.
Pearls in the Vedas and Tamil Literature- posted by …