Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
சம்ஸ்கிருதத்தில் உள்ள ரசாயன புஸ்தகங்களின் பட்டியலைத் தனியே தருகிறேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அந்தக் காலத்தில் ஏலச் செய்திகளைப் படிக்கும்போது, அட! இந்தியாவுக்கு இவ்வளவு மதிப்பா என்று எல்லோரும் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தனர். இப்போதுதான் புரிகிறது; பல்லாயிரக் கணக்கான சிலைகளை விலைக்கு வாங்கி மியூஸியங்களில் வைத்து நம்மை விட அவர்கள் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள் என்பது. அது மட்டுமல்ல, நம் கோவில்கள் அனைத்தையும் மொட்டை அடித்துவிட்டு அங்கே போலி விக்ரகங்களை வைத்துவிட்டனர். இதற்குத் துணை போனவர்கள் நம்மவர்களே என்பதை நினைக்கையில் வருத்தமாகவும் இருக்கிறது.
இதோ 1992ல் நான் தினமணியில் எழுதிய மேலும் இரண்டு செய்திகள்:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
GULA WITH DOG
SUMMARY IN BULLET POINTS
Following are notable similarities between the Mesopotamia (Iraq) and Vedic India:–
1.They believed that diseases are caused by Gods and Evil spirits
2.They used magical spells to drive away the disease causing demons.
3.They wore talismans made up of animal, plant and inanimate objects to protect them from the demons or evil spirits
4.They worshiped Gods or Goddesses in charge of medicines.
5.They thought Gods who become angry send the diseases to earth to punish people.
6.Both the cultures did surgeries and had surgical instruments.
7.To some extent they used herbal medicines.
8.They had trained medicine men, magicians to cure diseases.
XXX
சுஸ்ருதர் உபயோகித்த கருவிகாளின் அச்சு (replicas) மாதிரிகள்
18 Jun 2015 – King Bhoja In Bhopal, Madhya Pradesh. Post No 1939; Date: 18 June 2015. Written by London swaminathan. Uploaded from London at 8-57. தேரையர், ஜீவகன் ஆகிய இரண்டு பெரிய ..
24 Apr 2016 – 2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை … திரிபிடகம் என்பது புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெரும் அறிவுக் களஞ்சிய நூல் … பெரியோர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் வேத கால அறிவை …
17 Jun 2015 – Posts about Brain Surgery written by Tamil and Vedas. … Brain Surgery in Ancient India: Bhoja and Indus Valley … Jeevaka’s Eye Operation.
25 Feb 2013 – Picture shows Kannappa Nayanar placing his foot on Shiva to mark the place for placing the second eye. Jeevaka’s Eye Operation. There is a …
3 Feb 2018 – Sushruta was the Father of Surgery. He describes a lot of surgical instruments. On the basis of his description, model instruments were created.
In two of the couplets he agrees with Charaka and Susruta, the great authors of …. A lot of surgical instruments, surgeries like rhinoplasty (plastic surgery for …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம் ஆண்டு நவம்பர் 8-ல் தினமணிப் பத்திரிக்கையில் நான்
கொலம்பஸின் புத்துலகக் கண்டுபிடிப்பின் 500ஆவது
ஆண்டு விழாவை ஒட்டி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பொழுதே அவரது விழாவுக்கு எதிர்ப்பு
அலைகள் கிளம்பின. சென்ற மாதமும் இதே போல ஒரு விழாவுக்கு எதிர்ப்பு அலைகளும் ஆதரவு
அலைகளும் கிளம்பி கொலம்பஸ் சிலைக்கு கரி பூசும் அளவுக்கு அது போய்விட்டது.
கொலம்பஸ் செய்த அக்கிரமங்கள், அதிசயங்கள்
பற்றிய கட்டுரை – “கொலம்பஸ் குறித்து சர்ச்சை” — இதோ:–
Columbus statues vandalized on US holiday named for him
October 15, 2019
PROVIDENCE, R.I. (AP) — Several Christopher Columbus statues were vandalized with red paint and messages against the 15th century Italian navigator Monday when the U.S. holiday named for one of the first Europeans to reach the Americas was being celebrated.
A statue in Providence, Rhode Island, was splashed from head to toe Monday with red paint, and a sign reading “Stop celebrating genocide” was leaned against the pedestal.
The word “genocide” was written in orange paint on the rear of the pedestal.
The statue has been the target of vandals on Columbus Day in the past. A spokeswoman for Mayor Jorge Elorza said the statue will be cleaned Monday.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த
இந்தியப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்கள் இவை.
பிரான்ஸின் ஈஸ்ட் இந்தியாவில்
(French East India) சந்திரநாகூரில் தலைமை நீதிபதியாக இருந்தவர்
லூயிஸ் ஜாகொல்லியட். (Mons.
Louis Jacolliot – Chief Justice of Chandranagoare).
அவர் ‘Occult
Science in India and among the Ancients’ என்ற புத்தகத்தில் தன்னிடம் வந்து அதிசய சம்பவங்களை
நிகழ்த்திக் காட்டிய இரு யோகிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒருவரின் பெயர் செல்வநாதன்.
இன்னொருவர் பெயர் கோவிந்தசாமி.
பாண்டிச்சேரி வந்த செல்வநாதன்
ஒரு தராசில் ஒரு பக்கம் 176 பவுண்ட் எடை வைக்கப்பட்ட போது எதிர்பக்கம் ஒரு மயில் இறகை மட்டும் வைத்தார். அவர் மயிலிறகை வைத்த
பக்கம் தராசு தாழ்ந்து போனது.
தனது கையை அவர் அசைக்கவே ஒரு பூங்கொத்து உருவானது. பின்னர் இன்னும் கையை
அசைக்கவே ஒரு நிழல் விதவிதமான பூக்களின் படத்தை வானில் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது.
கோவிந்தசாமி என்ற யோகி ஜாகொல்லியட்டை
வந்து பார்த்தார். அவர் ஒரு பூஞ்ஜாடியில் தண்ணீரை விட்டு சிறிது தூரத்தில் வைத்தார்.
அது சிறிது அசைந்து ஆடியது.
பின்னர் மெதுவாக அவரை நோக்கித் தத்தித் தத்தி அசைந்தவாறே நடந்து அவரிடம் வந்தது.
பிறகு அவர் அந்த ஜாடியிலிருந்து
வெவ்வேறு ஓசையை எழுப்பிக் காட்டினார். ஒரு இரும்புத் தடியினால் அதைத் தட்டினால் எப்படி
இருக்குமோ அப்படி இருந்தது அந்த ஓசை.
பிறகு மேலிருந்து புயல் காற்று
வீசும் ஓசை எழும்பியது.
பிறகு மத்தளத்தை வாசித்தால்
எழும்பும் ஓசை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது.
இசைக் கருவி ஒன்று கொண்டுவரப்பட்டு
அது இசைக்கப்படவே முதலில் ஜாடியிலிருந்து தட்டுகின்ற ஓசை எழுந்தது.
பின்னர் ரபின் டெஸ் போயிஸ்
(Rabin Des Bois) -இன் இசைக்குத் தக அதுவும் தாளம்
போட ஆரம்பித்தது.
பின்னர் ஒரு புயல்காற்று போன்ற
ஒன்றை அவர் உருவாக்க ஜாடியிலிருந்து எழும்ப ஆரம்பித்த நீர் சுமார் இரண்டடி உயரம் பீறிட்டு
அடித்தது.
இந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அந்தச்
சமயம் தோட்டக்காரன் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்
கொண்டிருந்தான்.
அங்கு தான் கோவிந்தசாமி தனது
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
அவர் தனது கையை அசைத்தவுடன்
கிணற்றிலிருந்த கயிறு அப்படியே அசையாமல் நின்று விட்டது.
தோட்டக்காரனோ பேச முடியாமல்
ஊமையாகி விட்டான்.
தனது கையை அவர் கீழே இறக்கியவுடன்
தண்ணீர் இறைக்கப்படும் வகையில் கயிறு அசைய ஆரம்பித்தது. தோட்டக்காரனும் பேச ஆரம்பித்தான்.
இதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இந்த சம்பவங்களை டாக்டர் பால்
ஜாய்ர் (Dr Paul Joire) தனது புத்தகமான ’Psychical and Supernormal Phenomenon’ என்ற புத்தகத்தில் (பக்கம்
79-84) விவரித்துள்ளார்.
யோகிகள் தங்கள் ஆற்றலைக் காண்பித்து
மேலை நாட்டாரை வியக்க வைத்த இது போன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு.
இவற்றை அப்படியே பலரும் பதிவு
செய்ததால் நம்மால் இவற்றை அறிய முடிகிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 28-10-2019 இதழில்
வெளியாகியுள்ள கட்டுரை
ரிஷிகள் தவம் புரியும் தலம்
ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!
ச.நாகராஜன்
கங்கோத்ரி
பாரத தேசத்தின் தெய்வீக மலை
இமாலயம்.
தெய்வ நதி கங்கை.
கங்கையை முதலில் தரிசிக்கும்
இடம் கோமுகி!
கங்கை பிரதேசத்தில் கங்கை எப்படித் தோன்றுகிறாள்
என்பதைத் துல்லியமாகக் கண்டவர் யாருமில்லை.
இமயமலையில் 14000 அடி உயரத்தில்
ஒரு குகை! இந்த குகையின் தோற்றம் பசுவின் வாய் போல் இருக்கிறது. இது கோமுகி என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து கங்கை வெளிப்படுகிறாள். இந்த இடம் கங்கோத்ரி எனப்படுகிறது.
சுமார் இருபத்திரண்டடி உயரத்திலிருந்து
நான்கு அடி அகலம் உள்ள நீர்த்தாரை விழ அதுவே பொங்கிப் பல்கிப் பெருகும் மாபெரும் தெய்வீக
நதியாக மிளிர்கிறது.
கங்கை கங்கை என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனது பாவங்கள் அனைத்தும் நசிந்து அவன் விஷ்ணு லோகம் அடைகிறான் என்ற ஸ்லோகம் கங்கையை நினைத்தாலே பாவம் போகும் என்கிறது.
ஹரித்வார்
கங்கோத்ரியிலிருந்து கிளம்பும்
கங்கை உத்தரகாசி வழியே தேவப்ரயாக் என்னுமிடத்தை அடைந்து ஹரித்வாரத்தை அடைகிறாள்.
ஹரித்வார் என்றால் மோட்சத்தின்
வாயில் என்று பொருள்.
கங்கோத்ரியிலிருந்து 365 மைல்
தூரம் யாத்திரை செய்து பக்தர்கள் ஹரித்வாரை அடைவது பெரிதும் போற்றுதற்குரிய கங்கா யாத்ரா
என அழைக்கப்படுகிறது.
புண்ணியசாலிகளே இந்த யாத்திரையை
மேற்கொண்டு ஹரித்வாரை அடைகின்றனர்.
இரு மலைத் தொடர்களுக்கு இடையே கங்கை பாய்ந்து வருகிறாள்; பக்தர்களைப் பரவசம் அடையச் செய்கிறாள்.
ரிஷிகேசம்
இங்கிருந்து பதிநான்கு மைல்
தூரத்தில் உள்ளது ரிஷிகேசம். ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே
கங்கையும் துணைக்கு வருவாள்.
ரிஷிகேசம் என்றால் ரிஷிகள் வசிக்கும்
இடம் என்று பொருள்.
இந்த இமயமலைப் பகுதி மட்டும்
ஆயிரக்கணக்கான ரிஷிகளால் அன்றும் இன்றும் சூழப்பட்டு தியானத்திற்குரிய தெய்வீக இடமாக
அமைகிறது.
பியர்ஸ் ஜெர்விஸ் என்ற மேலைநாட்டு
எழுத்தாளர் கங்கைக்கு இடையில் அமைந்துள்ள தீவிற்கு (பூர்வ புண்ணியவசமாக) சென்று பல
ரிஷிகளைப் பார்த்ததையும் அவர்களின் வயது நூறிலிருந்து ஆயிரம் வருஷங்கள் வரை இருக்கும்
என்றும் தனது நூலான நேகட் தே ப்ரே
நிர்வாணமாகவே அவர்கள் பிரார்த்திக்கிறார்கள் – (Naked They Pray) – என்ற புத்தகத்தில் எழுதி அதிசயிக்கிறார்.
ரிஷிக்கு இலக்கணம் என்ன?
ரிஷி என்றால் யார்?
சுயநலமின்றி பிறருக்காக வாழ்பவரே
ரிஷி. சத்தியத்தின் வழி நடந்து சத்தியமே உருவாக ஆகி இருப்பவர் ரிஷி!
ரிஷி என்பவர் சூட்சும திருஷ்டியின்
மூலம் ஒருவரின் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்கிறார்.
அந்தர் திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து
அவரது நடத்தையை அறிந்து அதற்கான ஆதி காரணத்தை அறிகிறார்.
திவ்ய திருஷ்டி மூலம் ஒருவரின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிகிறார்.
இப்படிப்பட்ட ரிஷிகளின் இருப்பிடம்
தான் ரிஷிகேசம்.
வெளிப்படையாகவும், பெரும்பாலான
சமயம் தங்களை மறைத்துக் கொண்டும் இன்றும் இவர்கள்
ரிஷிகேசம் சார்ந்த பகுதியில் தவம் புரிந்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக திருக்கடையூரில் அபிராமி பட்டர் தியானத்தில் மூழ்கி இருந்த போது அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம் கூற அன்று இரவு முழு நிலா எழுந்த உண்மை வரலாறை இங்கு நினைவு கூரலாம்.
லட்சுமண ஜூலாவும் ராமர் பாலமும்
சலசலத்து ஓடும் கங்கை நதியைக்
கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.
அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா
என்றால் ஊஞ்சல் என்று பொருள்.
இலேசாக அசைந்து ஆடும் இந்தப்
பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும்
கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர்
படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம்.
இந்தப் பகுதியில் தான் லட்சுமணர்
தவம் செய்தார்.
லட்சுமணருக்காகத் தனிக் கோவில்
அமைந்துள்ள இடம் இது ஒன்று தான்.
இங்கு வந்து இந்த இடத்தில் பூஜை
செய்த சூரத்மல்தாஸ் என்ற அரசன் இங்கு ஒரு கயிற்றுப் பாலத்தை அமைத்தான். ஆனால் கும்பமேளா
சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இதைப் பயன்படுத்தியதால் அது அறுந்து போயிற்று. ஆகவே
பிரிட்டிஷ் அரசை வேண்டிக் கொள்ள 1927ஆம் ஆண்டு கான்க்ரீட் அமைப்புள்ள ஒரு தொங்கு பாலம்
அமைக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த
சமயம் இன்னொரு பாலம் இங்கு அமைக்கப்பட்டது.
இதை ராமர் பாலம் என்கின்றனர்.
இந்த இரு பாலங்களின் மீது நடப்பதை பாவம் தீர்க்கும் புண்ணிய நடையாக பக்தர்கள் கருதுகின்றனர்.
ரிஷிகேசத்தில் உள்ள கோவில்கள்
இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள
இந்தத் தலத்தில் தான் ராமரும் லட்சுமணரும் ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து
தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.
அத்துடன் பரதரும், சத்ருக்னரும்
கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.
ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம்
மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம்
ராமர் பாலத்தின் அருகில் உள்ளது.
லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன்
அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி,
மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர்,
விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.
இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ்
மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.
சுற்றிலும் அழகிய சாந்தி தவழும்
மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும்,
ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம்! இங்கு இந்த ஆலயத்தை பாபா காளிகம்லிவாலா என்ற
மகான் அமைத்தார் என்று கூறப்படுகிறது.
பகவத் கீதையைப் பரப்பும் பெரும்
நிறுவனமான கீதா பவனும் லட்சுமண் ஜூலாவை அடுத்து அமைந்துள்ளது.
ரிஷிகேசத்தின் உள்ளேயே அமைந்துள்ள
இன்னொரு ஆலயம் பத்ரிநாதர் ஆலயம். பத்ரிநாத்திற்குப் போக முடியாதவர்கள் இங்கு வந்து
தரிசித்தால் அதே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரிஷிகேசத்தில் சிவானந்த ஆசிரமம்,
ஸ்வர்க்காசிரமம், காஞ்சி மஹாபெரியவர் அமைத்த சங்கர மடம் உள்ளிட்ட 72 ஆசிரமங்கள் உள்ளன.
ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்
என்று
கொண்டாடப்படுகிறது.
ரிஷிகேசம் டில்லியிலிருந்து
சுமார் 150 மைல் தூரத்தில் உள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்காக ஏராளமான பஸ்கள் உள்ளன.
ரயில் வசதியும் உண்டு. டேராடூனுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ரிஷிகேஷை அடையலாம்.நவம்பர்
முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.
ஏராளமான தர்மசாலாக்களும், ஆயிரம் அறைகள் கொண்ட இலவச தங்குமிட வசதியும் பக்தர்களுக்கென இங்கு உண்டு; ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன.
ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று ஹரித்வார்
அயோத்யா, மதுரா, மாயா, காசீ,
காஞ்சி, அவந்திகா, புரீ, த்வாராவதீ ஆகிய ஏழு தலங்களும் மோக்ஷபுரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹரித்வார் என்பது மோட்சம் தரும்
இந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. பழைய காலத்தில் மாயாபுரி என்று அழைக்கப்பட்ட திவ்ய
பூமியே இன்றைய ஹரித்வார்.
இது தான் தக்ஷப்பிரஜாபதி யாகம்
செய்த இடம்.மாயையின் வசமாகி அவன் அகம்பாவம் தலைக்கேறி சிவபிரானை அவமதித்தான். இதனால்
கோபமுற்ற தாக்ஷாயணி தேவி அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டாள்.
இதனால் கோபமுற்ற சிவபிரான் தட்சனை
மாய்த்து தாக்ஷாயணியைக் கையில் தூக்கிக் கொண்டு தாண்டவமாடினார். இப்படி தாக்ஷாயணி உயிர்
நீத்த இடமாதலால் தேவிக்கு இங்கு ஒரு கோவில் உண்டு. அது கனகல் கோவில் என்று புகழ் பெற்று
விளங்குகிறது.
தட்சன் செய்த வேள்வியின் பலனாக அவன் நற்கதியே
பெற்றதால், அவனுக்கென ஒரு கட்டமும் கோவிலும் இங்கு உள்ளன.
ஹரித்வார் கோவில்கள்
ஹரித்வாரில் இன்னும் பல முக்கியமான
கோவில்கள் உள்ளன.
மன்சா தேவி ஆலயத்தில் உள்ள மரத்தை
தரிசித்து தங்கள் பிரார்த்தனையைச் சொன்னால் இஷ்டங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின்
அனுபவம்.
கங்கா மாதாவிற்கென உள்ள கோவில்,பிரம்ம
குண்டத்தைச் சுற்றி இராமர் கோவில்,விநாயகர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள்
உள்ளன.
பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்ததாக
வரலாறு உண்டு. ஆகவே அவர்களுக்கும் திரௌபதிக்கும் இங்கு கோவில்கள் உண்டு.
இங்குள்ள குளத்தில் பீமன் தன்
காலை ஊன்ற உடனே அதிலிருந்து நீர் சுரந்ததாக வரலாறு கூறுகிறது.
ஹரித்வாரிலிருந்து சுமார் இரண்டு
கிலோ மீட்டர் தூரத்தில் கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிகிறது. இது சாத் சரோவர் – ஏழு துவாரங்கள்
– என்று சொல்லப்படுகிறது.
கண்வ ஆசிரமம்
ஹரித்வாரிலிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் மாலினி நதிக் கரையில் அமைந்துள்ளது கண்வ ஆசிரமம்.
கோட்துவா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தில் தான் கண்வ மஹரிஷி வாழ்ந்து வந்தார்.
அவர் வளர்த்த சகுந்தலையால் எழுந்த
மஹா காவியம் தான் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம்.
சகுந்தலை வளர்ந்த இடம், சகுந்தலை
துஷ்யந்தனைச் சந்தித்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்த்து மகிழலாம்; பயபக்தியுடன்
வணங்கலாம்.
ஹரித்வார் கும்பமேளா
ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை நடக்கும் கும்ப மேளா உலகில் மிக அதிகமாக பக்தர்கள் கூடும் ஒரே உலகத் திருவிழாவாகும்.
சூரியன் மேஷ ராசியிலும் குரு பகவான் கும்பராசியிலும் இருக்கும்போது ஹரித்வாரில் கும்பமேளா
நடக்கும்.
அமிர்தத்தைப் பெற வேண்டி பாற்கடலை
தேவர்களும் அசுரர்களும் கடையும் போது கலசத்திலிருந்து சில துளிகள் நான்கு இடத்தில்
விழுந்தன.
பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜயினி,
நாசிக் ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.
இந்த நான்கு இடங்களில் அமிர்தத்
துளிகள் விழுந்த புனித சம்பவத்தை நினைவு கூர்ந்து புண்ணியம் அடைய கும்பமேளாவில் பக்தர்கள்
கூடுகின்றனர்;
1903இல் நான்கு லட்சம் பேர்
இந்தத் திருவிழாவில் கூடினர். 2010இல் நடந்த கும்பமேளாவில் நான்கு கோடி பேர் கலந்து
கொண்டு நீராடி புண்ணியம் அடைந்தனர்.
சாமான்யனில் ஆரம்பித்து காடுகளில்
தவம் செய்யும் முனிவர்கள் ரிஷிகள் மகான்கள் முடிய கும்பமேளாவிற்கென அனைவரும் வருகின்றனர்.
பக்தர்கள் நீராடுவதோடு இப்படிப்பட்ட ரிஷிகளை ஒருசேர தரிசிப்பதால் இரட்டை புண்ணியத்தை
அடைகின்றனர்..
இன்னும் இமயமலைக் காடுகளிலும்
கங்கை நதிக் கரையோரப் பகுதிகளிலும் ஆங்காங்கே அமைந்துள்ள நகர்களிலும் ஏராளமான அதிசயக்
கோவில்கள் உள்ளன; அந்தப் பகுதியில்
நிஜமாக நடந்த ஆயிரக்கணக்கான பிரமிக்க வைக்கும் வரலாறுகளும்
உள்ளன!.
இப்போதும் தொடரும் பல அதிசய
சம்பவங்கள் ஊடகங்கள் வழியே உடனுக்குடன் பரவி உலகினரை பிரமிக்க வைக்கின்றன.
ரிஷிகள் தவம் புரியும் ரிஷிகேசமே
மோட்சத்திற்கு வழி காண்பிக்கும் ஹரித்வாரை அடையச் செய்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
***
Gangotri Himalaya Pictures by Radhika Balakrishnan
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் : 7131 வெளியான
தேதி : 26-10-2019 – கீதையின் ஆறாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை. இந்தத் தொடரில் இதுவே கடைசிக் கட்டுரை
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் கடைசிக் கட்டளை இது:
ஏழாவது கட்டளை :
Thou
Shalt Rejoice in Everything That the Will of God Brings to Thee
கடவுள் உனக்கெனக் கொண்டு வரும் எதிலும் சந்தோஷப்படு
இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்
சரணம் வ்ரஜ|
அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மா சுச:||
-கீதை அத்தியாயம் 18 – ஸ்லோகம்
66
அனைத்து அறங்களையும் துறந்து
விட்டு என் ஒருவனையே சரண் அடை; நான் உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
இது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக்
கூறிய அருளுரை.
இதை ராமானுஜர் கீதையின் சரம
ஸ்லோகம் – கடைசியான – முத்தாய்ப்பான ஸ்லோகம் என்று கூறியுள்ளார்.
அனைத்தையும் கடவுளிடம் விட்டு
விடு. அவரை முழுமையாக நம்பு. அவர் உனக்கு மிகவும் சிறந்ததையே அருள்வார் என்பதை அறிவாயாக.
இதைப் பற்றி, சில முக்கியமான
ஆலோசனைகள் உங்களுக்கு உதவக் கூடும்.
அவை இவை தான்:
இடையூறுகளை புன்னகையுடன் எதிர்
கொள்க. சோதனைகளையும் தற்காலிக தோல்விகளையும் அன்புடன் சந்தியுங்கள்.
பிரார்த்தனை என்பது உங்களுடைய
பழக்கமாகவே ஆகட்டும்.
இன்னும் அதிகம், அதிக நம்பிக்கைக்காக
பிரார்த்தியுங்கள்.
உலகியல் ரீதி, மன ரீதி, ஆன்மீக
ரீதியாக உள்ள அனைத்து வியாதிகளும் குணமடைவது ஆண்டவனின் தொடர்பினால் தான் என்பதில் உறுதி
கொள்ளுங்கள்.
வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி
சொல்வது இது தான்: இறை நம்பிக்கை கொண்டவன் ஒரு மலைப்பாம்பு போல. அவன் இரைக்காக அலைய
மாட்டான். இரை அவனைத் தேடி வரும்.
ஒரு முறை பெரிய சக்ரவர்த்தி ஒருவன் புத்தரிடம் சரணடைய
நினைத்தான்.
தன் ராஜ்யம் மக்கள், அரண்மனை
அனைத்தையும் துறந்து துவராடை பூண்டான்.
புத்தரிடம் அவன் உபதேசம் பெறுவதைப்
பார்க்க அனைத்து பிட்சுக்களும் திரண்டனர்.
புத்தரிடம் சமர்ப்பிக்க தன்
வலது கையில் விலை உயர்ந்த வைரம் ஒன்றை அவன் வைத்திருந்தான்.
ஒரு வேளை வைரத்தை அவர் வாங்க
மறுத்தால் அவருக்கு சமர்ப்பிக்க ஒரு தாமரையைத் தன் இடது கையில் வைத்திருந்தான்.
புத்தரை அவன் நெருங்கி நடந்த
போது புத்தர் அவனை நோக்கி, “ அதைக் கீழே போடு” என்றார்.
உடனே மன்னன் வலது கையிலிருந்த
வைரத்தைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
இந்த முறை மன்னன் தன் இடது கையிலிருந்த
தாமரை மலரைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
மன்னன் ஒரு கணம் திகைத்தான்.
பின்னர் புரிந்து கொண்டான்.
எல்லாவற்றிற்கும் காரணமான ‘நான்’ என்னும் எண்ணம் ஒரு போதும் இருக்கக் கூடாது என்று அவர் கூறிய போதனையை நினைவு கூர்ந்தான்.
தனது ‘தான்’ என்ற எண்ணத்தையும் விட்டான்.
புத்தர் அவனை அருள் கூர்ந்து
நோக்கினார்.
முழுவதும் சரணடைந்த அவனை ஏற்றுக்
கொண்டார்.
***
சாது வாஸ்வானியை பத்திரிகையாளர்
ஒருவர் சந்தித்தார்.
ஏராளமான அலுவல்களால் உங்கள்
டயரி நிரம்பி வழிந்திருக்குமே என்றார் அவர்.
அதற்கு சாது வாஸ்வானி, “எதையும்
நான் திட்டமிடுவதே இல்லை. இறைவன் என்னை வழி நடத்த விட்டு விடுகிறேன்” என்றார்,
***
சாது வாஸ்வானி மூன்று “கொல்லிகளை” (Killers) மனித குலத்தின் கொல்லிகள் என்றார்.
கடிகாரம், காலண்டர், டெலிபோன்
( The
Clock, The Calender and the Telephone) ஆகிய மூன்று தான் அவர் கூறிய் கொல்லிகள்!
அனைத்தையும் இறைவனிடம் விட்டு
விடுங்கள் என்பதே அவரது அருளுரை!
***
அருமையான ஏழு கட்டளைகளை இப்படி
விளக்கியுள்ள சாது வாஸ்வானி அவர்களின் உரைகள் The Seven
Commandments of the Bhagavad Gita புத்தகத்தில் 417 பக்கங்களில் இன்னும் ஏராளமான கதைகள், சம்பவங்கள், உவமைகள், செய்யுள்கள்,
ஸ்லோகங்கள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் உள்ளன.
அன்பர்கள் படித்து மகிழலாம்.
அவர் எழுதிய ஒரு புத்தகத்தில்
உள்ள சில கருத்துக்களையே நாம் இந்தத் தொடரில் பார்த்தோம்.
இன்னும் சுமார் 78 புத்தகங்களை
அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அனைத்தையும் படித்தால் ஆன்மீக ஞானம் மிகவும் பெற்றவர்களாக
ஆவோம் என்பதில் ஐயமில்லை.
பகவத் கீதையைப் படிப்போம்; அதன்
வழி நடப்போம்; உயர்வோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
22 Jun 2013 – Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those who use this article in other blogs must name the author London Swaminathan and Blog name. (English version of this article is …