தமிழர்களின் வானியல் அறிவு நுட்பமானது. வேத வானியலும்
தமிழர்களின் வானியலும் ஒன்றே தான். ஒத்துப் போவது தான்.
நுட்பமானது அது.
வானியலில் நுட்பமான கணிதம் ஜா கணிதம் என்று சொல்லப்படுகிறது.
இதைப் பற்றி மாயவரம் ஸ்ரீ
V.சுப்பிரமணிய சாஸ்திரிகள் நன்கு விளக்கியுள்ளார்.
1969ஆம் ஆண்டு இவர், கால லக்ஷணம், லீலாவதி பஞ்சாங்கம், கலியுக கடிகாரம், லீலாவதி கிரக
கணிதம், நட்சத்திர மண்டலம், சந்திர க்ரஹணம், சூரிய க்ரஹணம், லீலாவதி ஜாதக கணிதம் உள்ளிட்ட
பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் கூறியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால் சில
விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜா கணிதம் என்றால் என்ன?
30 வருடத்தில் சனி ஒரு சுற்று சுற்றி வருகிறது.
27 நாள் 8 மணியில் சந்திரன் ஒரு சுற்று சுற்றி வருகிறது.
ஆகாய வீதி பற்றிய கணிதம் இக்காலத்தில் இரு விதமாகக்
கணித்துக் கூறப்படுகிறது.
ஒன்று வாக்கியம் (பாம்புப் பஞ்சாங்கம் என்று நடைமுறை
வழக்கில் அறியப்படுவது இது)
இன்னொன்று திருக்கணிதம்.
வாக்கியப்படி பஞ்சாங்கம் சொல்பவர்கள் தேவதைகளுக்கு
தலைகள், கைகள், கால்கள் விசேஷமாக உண்டு என்று சொல்கின்றனர்.
திருக்கணிதம் கணிப்பவர்கள் சந்திரனுக்கு வடக்கில்
சனி, குரு அல்லது சித்திரை நட்சத்திரம் என்று கூறி அதன் படி கணிக்கின்றனர்.
வாக்கிய கனிதம் வேத காலத்தது.
வேத காலத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்யும் போது
வானவீதியில் காலப் போக்கால் சில வித்தியாசங்கள் தென்பட்டன.
அதைச் சரி செய்ய ஜா வாக்கியங்களை காலத்திற்கு ஏற்ப
கணித, வான சாஸ்திர, ஜோதிட நிபுணர்கள் ஏற்படுத்தினர்.
மகர ஜா, மந்த ஜா, கடக ஜா ஆகியவை செவ்வாய், புதன்,
குரு, சுக்கிரன், சனி ஆகியவை சம்பந்தப்பட்டவற்றிற்கு உகந்தவை.
மேஷாதி ஜா, கடகாதி ஜா, துலாதி, மகராதி ஆகியவை சூரியனுக்கும்
சந்திரனுக்கும் சம்பந்தமுடையவை; அதற்குப் பயன் படுபவை.
ராகு மற்றும் கேதுவுக்கு ஜா வாக்கியங்கள் கிடையாது.
நுட்பமான இந்த ஜா வாக்கியங்கள் வானத்தில் காலப் போக்கில்
ஏற்படும் சிறிய மாறுதல்களைக் கூடக் கவனித்து கணிதத்தை இன்னும் அதி நுட்பமாக ஆக்கின.
தமிழ் நாட்டில் தான் அற்புதமாக பஞ்சாங்கம் கணிக்கப்படும்
முறை உருவானது.
திருவையாற்றில் அதி நுட்பமான வான சாஸ்திரத்தை அறிந்த
நிபுணர்கள் வாக்கிய பஞ்சாங்கத்தையும் திருக்
கணித பஞ்சாங்கத்தையும் கணித்தனர்.
இரு கை விரல்களை வைத்து மனப்பாடமாக இருந்த சூத்திரங்களை
அடிப்படையாகக் கொண்டு இவர்கள் துல்லியமாகக் கணித்த படியே சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும்
என்பது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!
இந்த நிபுணர்களை அழைத்து இவர்களின் கலை அழிந்து போகாமல்
காக்க ஹிந்து ஜோதிட, வானவியல் ஆர்வலர்களும் மத்திய மாநில அரசும் முன் வர வேண்டாமா?
அடுத்து வருடங்கள் இரு வகை.
சாந்திரமான (அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட)
ஸம்வத்ஸரம்; இன்னொன்று ஸௌரமான (அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட) ஸம்வத்ஸரம்.
சாந்திரமான ஸம்வத்ஸரம் 355 ராத்திரிகள் கொண்டது.
ஸௌரமான ஸம்வத்ஸரம் 365 ராத்திரிகள் கொண்டது.
இந்த இருவகை ஸம்வத்ஸர கணிதமும் இன்று தேவைப்படுகிறது.
இரவு பகல் எப்படி உண்டாகிறது என்பதை நன்றாகப் படித்தாலும்
அதன் உண்மை இது வரை மாயையாகவே அறிய முடியாதபடியே உள்ளது.
வானத்தில் ஏற்படும் கிரக சேர்க்கைகள் அற்புதமானவை.
அதையொட்டி பூமியில் ஏற்படும் நுட்பமான மாறுதல்கள்,
விளைவுகள் கூறப்பட்டன. அந்த சேர்க்கைகள் பூமியில் வாழும் மானிடர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்
நல்ல மற்றும் தீய விளைவுகள் கூறப்பட்டன.
யுத்தம், சமாதானம், வளம், வறட்சி ஆகியவையும் சுட்டிக்
காட்டப்பட்டன.
இவை மாபெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.
ஏராளமான நிபுணர்களும், நிறைய பொருள் செலவும் ஏற்படும்;
இதற்குப் பல அடிப்படை வசதிகளும் வேண்டும்.
காலம் கை கூடினால் இந்த ஆய்வு முடிக்கப்படும் போது
ஹிந்து ஞானம் நன்கு வெளிப்படும். அதன் நன்மையும் புலப்படும்.
ஜூலை
4–
சுவாமி விவேகநந்தர் நினைவு தினம்; 8- ஆனித் திருமஞ்சனம்; 13- சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம்; 14- விம்பிள்டன் பைனல், உலக கோப்பை கிரிக்கெட் பைனல்,16- குரு பூர்ணிமா;17 ஆடிப்பண்டிகை 27- ஆடிக்கிருத்திகை; 31- ஆடி அமாவாசை.
பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம்பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596) …
BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR
swamiindology.blogspot.com; contact.
20 Sep 2012 – விஜயவாடா, நவ.29:- ஆந்திரப்பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். … அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்! … https://tamilandvedas.com/2012/09/20/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9 .
ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, … இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் … ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் … https://tamilandvedas.com/2014/11/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af …
25 Feb 2012 – இந்த சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரை… … கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் தேறியதாக திருவிளையடல் புராணம் கூறும். … கண்டம் போன்ற விஷயங்களை “சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி ) … https://tamilandvedas.com/2012/02/25/3-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a% …