மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!(Post.9287)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9287

Date uploaded in London – –21 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும்  ஸ்ரீ மத் பாகவதத்திலும்  மஹரிஷி கபிலரைப் பற்றிய சரித்திர விவரங்களைக் காணலாம்.

ஸ்ரீ  ஹரியானவர் கர்த்தம பிரஜாபதிக்கு தேவபூதி என்பவளிடத்தில் கபிலர் என்னும் பெயருடன் அவதரித்தார். அவர் பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். இன்னொரு விருத்தாந்தம் அவர் சூரிய பகவானிடத்தில் சக்ரதனு என்ற பெயருடன் அவதரித்ததாகவும் பின்னால்

tags- மஹரிஷி,  கபிலர், கங்கை

பிராமணாள் ஜிந்தாபாத் – புறனானூறு-1 (Post No.8357)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8357

Date uploaded in London – 17 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் , உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

***

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்சசியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

****

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடை யே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்யானே

தந்தை தோழன் ; இவர் என் மகளிர்;

அந்தணன், புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

ஜிந்தாபாத் 1

செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

ஜிந்தாபாத் 2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர். இதை அவ்வையாரும் சொல்லியிருக்கிறார் . இந்துக்கள் மஹாவீரரையும், அனுமனையும் மட்டுமே மகா வீரர் என்பர் . அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் .

பிராமணாள் ஜிந்தாபாத் –1,  புறனானூறு,  கபிலர் 

To be continued………………..

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2328

Time uploaded in London :– காலை 10-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.

நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.

அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!

coin valluvar

யார் அந்த எழுவர்?

பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.

அவ்வை

உப்பை

அதிகமான் (ஆண்)

உறுவை

கபிலர் (ஆண்)

வள்ளியம்மை

திருவள்ளுவர் (ஆண்)

பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படி, சுவாமி முடியும்?” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.

அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–

என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ”

 

இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.

இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.

 

“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்

சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே

கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?

அற்பனோ அன்னாய் அரன்?”

 

இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.

மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:

அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.

கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்

விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்

வாட்டமுனக்கேன்? மகிழ்!

ஔவையார்1

நான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.

சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்

அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  – மண்டி

அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை

நிலைகண்டு நீயறிந்து நில்.

இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.

நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்

உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்

நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்

தமக்குத் தொழிலென்னதான்?

ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:

அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்

இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை

யாடும் பெருமான் அவன்”

இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்

ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.

எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?

அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி

அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே

வருகுவதுதானே வரும்?

 

sundarambal2

இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.

எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!

உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.

வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!

–சுபம்–

புறநானூற்று அதிசயங்கள்

tamil puu parithal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.

சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

tamil-penkal

3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

queen

9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!

10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.

11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.

12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.

13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?

kannaki cooking

14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.

புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!

contact swami_48@yahoo.com

வரலாறு எழுதிய முதல் தமிழன்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

 

பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.

 

இரு பெரும் சோழர்களையும், இரு பெரும் சேரர்களையும் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது. இது தவிர கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.

 

நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். கழார்ப் பெருந்துறை நீர் விழாவில் ஆட்டனத்தியை காவிரி அடித்துச் சென்றது, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் அடைந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குப் பெண் கொடுத்த அழுந்தூரில் விழா நடந்தது, ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது, பாழியில் வேளிர் புதையல் செல்வங்களைச் சேர்த்துவைத்தது, தந்தையின் கண்ணைப் பறித்த கோசரை அன்னி மிஞிலி பழிவாங்கியது, மனைவியைப் பிரிந்து பரத்தை வீட்டில் வாழ்ந்த பேகனை மீண்டும் மனைவியுடன் சேர்த்து வைத்தது—இப்படி எத்தனையோ செய்திகளை பத்திரிக்கை நிருபர்கள் போல பிட்டுப் பிட்டு வைக்கிறார். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகள் இருந்திருந்தால் சிறந்த பத்திரிக்கையாளர் விருது பரணருக்குத்தான் கிடைத்திருக்கும்!

 

மேலே கூறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவையான நிகழ்ச்சி. இவைகளில் கரிகாலன், நன்னன், பறவை நண்பன் ஆய் எயினன், சேரன் செங்குட்டுவன் போன்றோரின் சுவையான கதைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க:

 

1.கரிகாலன் வெள்ளை முடி தரித்ததால்தான் இன்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் வெள்ளை “விக்” தரித்து வந்து தீர்ப்பு கூறுகிறார்கள்

2. துலாபாரம் கட்டுரையில்,எடைக்கு எடை தராசில் வைத்து தங்கம் தருகிறேன் என்று ஊர்மக்கள் மன்றாடியும் நன்னன் ஒரு பெண்ணைப் படுகொலை செய்தான் என்பதைக் கூறியிருக்கிறேன்

3. அதிசயப் பறவைத் தமிழன் கட்டுரையில் ஆய் எயினனுக்குப் பறவைகள் கூடி குடை பிடித்த அற்புத நிகச்சியைக் கொடுத்துள்ளேன்

4. கடற்கொள்ளையர்: இந்துக் கடவுள்கள் கடற்கொள்ளையரைத் தாக்கி ஒழித்த கட்டுரையில் கடம்பறுத்த செங்குட்டுவன் பற்றி எழுதினேன்.

5. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் கொடுத்திருக்கிறேன்

 

அறுகை என்ற நண்பனுக்கு உதவுவதற்காக மோகூர்ப் பழையன் மீது படை எடுத்த செங்குட்டுவன், பழையனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் சோழனையும் விரட்டிவிட்டு பழையனை வென்றான். பழையனின் காவல் மரமான வேம்பை வெட்டித் துண்டுகளாக்கி முரசு செய்ய யானைகளால் இழுத்துவந்தான்.  இதற்குப் பழையன் மனைவியரின் முடியைக் கத்தரித்து கயிறு செய்து அந்தக் கயிற்றைப் பயன்படுத்தினான். ஆக தமிழர் செய்த தவறான தவறுகளையும் துல்லியமாகத் தருகிறார். மாங்காய் எடுத்த பெண்ணைக் கொன்ற நன்னனை ஏசுகிறார். கடற்படையைக் கொண்டு கடல் கொள்ளயர்களைச் செங்குட்டுவன் அழித்ததையும் கூறுகிறார்.

 

ஆதிமந்தி—ஆட்டநத்தி

அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், உதயணன்—வாசவதத்தை, மும்தாஜ்- ஷாஜஹான் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி. அவள் ஆட்டநத்தி என்ற ஆடல்வல்லானை மணக்கிறாள். ஆட்டத்தில் சிறந்த அவன் பல நீர் விளையாட்டுகளைச் செய்து காட்டுகையில் காவிரி நதி அவனை அடித்துச் செல்லுகிறது. அவன் மனைவி ஆதிமந்தி காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை அவனைப் பின் தொடர்ந்து அலறியவாறே ஓடுகிறாள். இந்த அவலத்தைக் கண்ட சோழ நாடே கண்ணீர் உகுக்கும் வேளையில் மருதி என்பவர் அவனைக் கரை சேர்த்து விட்டு காவிரியால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிடுகிறார். இந்தச் சோகக் காட்சிகளை பரணரும் வெள்ளிவீதீயாரும் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

 

வடமொழிக்கு இலக்கணம் கண்ட, உலகமே வியக்கும் மேதை பாணிணீயை, பகவான் பணிணி என்று பதஞ்சலி புகழ்வார். நாமும் வள்ளுவனைத் தெய்வப் புலவன் என்போம். பரணரும் இவ்வாறு தெய்வப் புலவன் என்று நக்கீரரால் வணங்கப்படும் செய்தியைத் தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பேராசிரியர் கூறுகிறார்: “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

 

இதோ அவரால் பாடப் பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்:

  1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி 2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி 3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் 4. சேரன் செங்குட்டுவன் 5. பேகன் 6. ஊனூர் தழும்பன் 7. உறந்தை வெளியன் தித்தன் 8. மோகூர்ப் பழையன் 9. அறுகை 10. மலையமான் திருமுடிக் காரி 11. ஆய் அண்டிரன் 12. அதியமான் நெடுமான் அஞ்சி 13. கண்டீரக் கோப்பெருநள்ளி 14. வல் வில் ஓரி 15. கரிகாலன் 16. ஆட்டனத்தி 17. ஆதிமந்தி 18. நன்னன் 19.அன்னி மிஞிலி 20. அகுதை 21. ஆய் எயினன் 22.பாணன் 23. கட்டி 24. பொருநன் 25. கணையன் 26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 27. அதிகன் 28. எவ்வி 29. மத்தி 30. கழுவுள் 31. அழிசி 32. பெரும்பூட் பொறையன் 33. தழும்பன் 34. விரான் 35.விச்சியர் பெருமகன் 36. பழையன் 37. வல்லங் கிழவன் 38. பொதியில் திதியன் 39. வன் பரணர் 40. வெள்ளிவீதியார் 41. மருதி 42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்).

 

தமிழ் வரலாறு கண்ட ஏனையோர்:

பரணரைத் தவிர சங்க காலத்துக்கு முந்திய மௌரியர் காலம் குறித்து தகவல் தருகிறார் மாமூலன் என்ற புலவர். மௌரியர்கள் மலைகளில் சாலைகளை அமைத்து படை எடுத்து வந்தது, வேங்கட மலைக்கு அப்பால் வேற்று மொழிகள் பேசப்பட்டது ஆகிய தகவல்களைத் தருகிறார் (அகம் 251, 281).

சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான காவியம் குறித்து பழந்தமிழ் நூல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மருதன் இளநாகன் என்ற ஒரு புலவர் மட்டும் “முலையைத் தூக்கி எறிந்த பத்தினி” பற்றிப் பாடுகிறார். இது கண்ணகி தன் முலையை பிய்த்து எறிந்து மதுரையைத் தீக்கிரையாக்கிய சம்பவமே என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

 

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய சில வரிகள்தான் தமிழ் இலக்கியத்தின் காலத்துக்கே அடித் தளமாக அமைந்தது. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தான் என்று அவர் பாடியதால் இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்திலிருந்து கஜபாகு மன்னரின் காலம் கி.பி.130 என்பதை அறிந்து சேரன் செங்குட்டுவன் காலத்தை அறிந்தோம். இளங்கோவும் ஏனைய புலவர்களும் கூறும் சுனாமி தாக்குதல்கள் , தென் மதுரை முதலியன கடலுக்குள் சென்றது ஆகியன எல்லாம் கி.பி.130க்கு முன் நடந்தன என்பதையும் அறிகிறோம். இவை எல்லாம் சதகர்ணி மன்னர் பற்றிய குறிப்புகளாலும் ரோமானிய வணிகத் தொடர்பு தடயங்களாலும் உறுதியாக்கப்பட்டன.

 

திருவிளையாடல் புராணம் பல வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொன்னாலும் அவைகளைப் புராணக் கதைகள் என்றும் வரலாறு இல்லை என்றும் ஒதுக்கிவத்தனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் (திருநாவுக்கரசு) பெருமான், தருமிக்கு பொற்கிழி கிடைத்த சம்பவத்தைத் தனது தேவாரத்தில் பாடி ஏழைத் தருமிக்கு அழியாத புகழ் வாங்கிக் கொடுத்துவிட்டார். நரியைப் பரியாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டு மாணிக்கவாசகர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர் எனபதையும் சொல்லாமல் சொல்லுகிறார். செய செய சங்கரா போற்றி என்றும் கீதங்கள் பாடிய அடியார்கள் என்றும் பாடி ஆதிசங்கரர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்ததையும் காட்டுகிறார். (ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க).

 

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா நகரில் ஜைனர்களுடன் அப்பர் வாழ்ந்ததால் கங்கை  பற்றியும் அது வங்க தேசத்தை அடைந்தவுடன் ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கடலில் விழுவதையும் “ஆயிர மாமுக கங்கை” என்றும் பாடுகிறார்.

 

மருதன் இளநாகன் கண்ணகி பற்றி பாடியது– நற்றிணை 216.

“ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா வுண்ணிக்

கேட்டோர் அனையா ராயினும்

வேட்டோ ரல்லது பிறரின் னாரே”

****

(அப்பர், திருப்புத்தூர் திருத்தாண்டகம் 2-1-2

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்

*****

 

கரிகாலன் வெற்றி பற்றி பரணர் பாடியது:

காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகா

லார்கலி நறவின் வெண்ணி வாயிற்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பி

னிழிமிசை முரசம் பொருகளத்தொழியப்

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகம். 246)

*****

 

சிலப்பதிகாரத்தில் கஜபாஹு:

மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

மெந்நாட்டாங்க ணிமைய வரம்பனி

னன்னாட் செய்த நாளணி வேள்வியில் (சிலம்பு.30-2-159)

*********************