அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Hermann's tortoise shutterstock_78129739

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3028

Time uploaded in London :–  6-26 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை  (தித்தியம் ஆமை )  பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

yaha kunda

 

“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”

பாடல் வரி கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!

 

நான் கண்ட புதுப் பொருள்:-

யாக குண்டம் கட்ட  செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில்   எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.

 

யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.

தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை.  மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள  மற்றொருவிதமாகவும் இருக்கும்..

 

நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.

கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.

ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.

ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

tortoise

அகநானூற்றுப் பாடலின் பொருள்

இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.

இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!

சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட  யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!

ஆமை ரகசியம் அம்பலமானது!

buildings

சிந்து சமவெளி செங்கற்கள்!

சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில்  காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.

மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.

முந்தைய கட்டுரை/ Previous Article

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan

Date: 7 March, 2016

–subham–

 

 

 

உருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்! (POST No.3016)

baby kiran

Written  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  17-30

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.

 

லண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.

joe and baby

“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.

அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்தது. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.

 

அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.

 

பெற்ற மனம் சும்மா இருக்குமா? அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.

 

குழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.

 

குழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள்.  ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.

joe

கடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு  அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.

 

திடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்த்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

kiran

கீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..

 

ஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.

 

 

(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)

 

Xxx  SUBHAM XX

 

கடிதமும் பதிலும்: சுகமான கல்யாணி ராகம் (Post No.2996)

RAMA BEFORE THYAGARAJA

Article Written S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 5-26 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது பதிலும் கூட!!)
ச.நாகராஜன்
திரு ஆர். நஞ்சப்பா அவர்கள் ஒரு நல்ல ரஸிகர். விஷயம் தெரிந்தவர். நல்லதைப் பாராட்டும் பெரிய மனமுள்ளவர். பக்குவமாக விஷயங்களை எடுத்துச் சொல்பவர். நேரில் அவரைப் பார்த்ததில்லை; எந்த ஊரில் இருப்பவர் என்பதும் தெரியாது. இந்த ப்ளாக் மூலமாக பரிசயம் அவ்வளவே!
அவர் கல்யாணி ராகம் பற்றிய கட்டுரைக்கு அனுப்பியுள்ள ஒரு அற்புத விளக்கம் இதோ; (அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும் என்பதாலேயே தனிக் கட்டுரையாகத் தந்துள்ளேன். அத்துடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதமான் சங்கீதம் பற்றிய விளக்கத்தையும் என் பதிலில் இணைத்துள்ளேன்).

 

thyagaraja brown

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களின் கடிதம் இதோ:

பயனுள்ள விஷயங்கள் சொல்லும் கட்டுரை.
பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava )உண்டு என்பார்கள்.கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள் .பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.

 
ஸ்ரீ தீக்ஷிதரின் க்ருதிகள் ராக ‘பாவத்தை” முக்கியமாகக் கொண்டவை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ராகத்துடன், தன் இறைஅனுபவத்தின் பல கூறுகளையும், நிலைகளையும் (mystical experiences and moods ) குழைத்து ஸாஹித்யமாக்கித் தந்திருக்கிறார். அதனால் அவர் க்ருதிகளில் ஸாஹித்ய ‘பாவம் ‘ மேலோங்கி நிற்கிறது! இதுவே நம்மை ஈர்க்கிறது! ஸ்வாமிகள் கல்யாணி ராகத்தில் 18 கீர்த்தனைகள் அருளியுள்ளார். ஓவ்வொன்றும் ஒவ்வொரு வித ‘பாவ’த்தை வெளிப்படுத்துகின்றன. இது ஒர் அற்புதம். ஆனால் பாடகர்கள் பொருள் உணர்ந்தும், ராக ‘பாவ’த்தில் ஊறியும் இருக்கவேண்டும்.

 
கச்சேரி ஃபேஷன் வந்துவிட்டபிறகு இப்போது யாரும் நிதானித்து, அனுபவித்துப் பாடுவதில்லை. தானே அனுபவிக்கவிட்டால், அதைப் பிறருக்கு எப்படி அளிப்பது? ” தன சௌக்யமு தா நெருகக யொருலகு தகுபோதன ஸுகமா ” என்கிறார் ஸ்ரீ த்யாகராஜர். ( ராமா நீயெட ). இப்போது பல வித்வான்களும் புத்தகம்/ நோட்டைப் பார்த்தே படிக்கிறார்கள். யாரும் எந்த ராகத்திலும் specialise செய்வதாகத் தெரியவில்லை. பின், ஸாஹித்ய ‘பாவ’மோ, ராக ‘பாவ’மோ எங்கிருந்து வரும்? ஏதோ இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விதிவிலக்குகள் இல்லாமலில்லை.

 
பழைய சினிமா பாடல்களில், எம்.எல்.வி. பாடிய ” கொஞ்சும் புறாவே ” கல்யாணி ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல். இதில் வயலின் பங்கும் அபாரம். இசை சித்தூர் வி, நாகையா. விஷயம் தெரிந்தவர் !

கடிதம் கண்டவுடன் மகிழ்ச்சி கொண்டேன். அதற்கான எனது பதிலையும் உடனே பதிவு செய்து விட்டேன். அது இது தான்:

அடடா! அற்புதமான விளக்கம்! உங்களின் விளக்கத்தைப் பார்த்தவுடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
வீணை வாசிக்கும் ஒரு பெண்மணி ரமண மஹரிஷியிடம் வந்தார். “தியாகராஜ ஸ்வாமிகளும் மற்ற சங்கீதம் பாடிய பெரியோர்களும் பாடித் தானே மோட்சம் பெற்றார்கள். நானும் அவர்களைப் போல சங்கீதம் பாடி மோட்சத்தை அடைய இயலுமா?” என்று கேட்டார் அவர். அதற்கு மஹரிஷி, “தியாகராஜரும் மற்ற பெரியோரும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றனர்: என்றார்.
என்ன அற்புதமான் பதில்! இசையில் உள்ளம் உருகி லயித்துப் பாடினால் அனைத்து ராகங்களின் நல்ன்களையும் பாடகர் தர முடியும். நஞ்சப்பா அவர்களுக்கு ‘வழக்கம் போல’ எனது நன்றி! – நாகராஜன்

 
ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளும் முத்துசாமி தீட்சிதரும் அவர் போன்ற இசை மேதைகளும் மகான்களும் ‘பெற்றதைப் பாடினார்கள்’. தாங்கள் பெற்ற பெரும் பேறை இசையில் குழைத்துத் தந்தார்கள்.
கேட்க மனம் உருகுகிறது. பல நலன்களையும் தருகிறது.
இசையின் முழு குணநலன்களை அள்ளி அள்ளித் தரும் அவர்களது இசை பற்றிப் போற்ற வார்த்தைகளே இல்லை.

*******

மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965)

kalai3

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2965

Time uploaded in London :– 14-19

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி சொத்தில் வாழலாமா? மனைவி மூலம் கிடைத்த பணத்தில் வாழவே கூடாது. அது மிக மிக கடைத்தரமானது. அப்படியே கிடைத்தாலும், அதை விஞ்சும் அளவு ஒரு ஆண்மகன் சம்பாதித்துக் காட்டவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே செல்வம்.

 

குந்தித் தின்றால் குன்றும் கரையும்; ஒருவன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவானால், அந்தச் செல்வம் மலை போல இருந்தாலும் கரைந்து போகும் என்பது சான்றோர் வாக்கு.

 

உத்தமம் ஸ்வ ஆர்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம்

அதமம் சேவகாவித்தம் ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

 

 

ஸ்வ ஆர்ஜிதம்உத்தமம் – சுயமாக சம்பாதிப்பது மிகச் சிறந்தது

 

பிதுரார்ஜிதம் மத்யமம் – அப்பா விட்டுச் சென்ற சொத்தைப் பெறுவது மத்தியமம் – இடைநிலைப்பட்டது.

 

சேவகாவித்தம் அதமம் – பிறரிடம் உழைத்துச் சம்பாதிப்பது கடைநிலைப்பட்டது ( அதமம்)

 

ஸ்த்ரீ வித்தம் அதமாதமம் – பெண்கள் (மனைவி) மூலம் கிடைத்த சொத்து மிகவும் கீழ்த்தரமானது. அதமத்திலும் அதமம்!

 

பெண்கள் வருமானத்தில் பெற்றோர்கள் வாழ்வதும் கூட பல பிரச்சினைகளை உண்டாக்குவதைக் காண்கிறோம்.

 

பெண்கள், திருமணமாகிப் போனால், தங்களுக்கு வருமானம் நின்று, வாழ்வு இருண்டுவிடுமே என்று கருதி, தி ருமணத்தைப் பல சாக்குகள் சொல்லி தள்ளிப்போட்டு,  சொந்தப் பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறார்கள்.

kalai23

மற்றொரு புறம் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கத் துவங்கிவிட்டால், அவர்கள் ஆட்டம்போடுவது அதிகரிப்பதையும் காண்கிறோம். இஷடப் பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட ஆட்களோடு போய்விட்டு,  இஷட்ப்பட்ட நேரத்துக்கு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேடுகளையும் காண்கிறோம்.

 

மனு ஸ்ம்ருதி சொல்வது போல பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்த முந்தைய சமுதாயம் ஒழுங்குக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. பெண்களை மனமகிழ்ச்சியோடு வைக்காத வீடு அடியோடு அழிந்துவிடும், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் மட்டுமே தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் என்றும் மனு ஸ்மருதி சொல்லுகிறது. அப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துவிட்டால் பின்னர், அவர்களுக்க் சம்பாதிக்கும் தேவையும் இல்லையே.

 

இன்ன பிற காரணங்களால்தான் மேற் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் பெண்களின் பணத்தில் வாழ்வது அதமாதமம் என்று சொன்னதுபோலும்!!!

 

–Subham–

 

 

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!!

rubiks-cube-world-record

Picture of Rubik’s Cube

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2954

Time uploaded in London :– 8-06 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு செயலைச் செவ்வனே முடிக்க பல வழிகள் உள்ளன. சிறிது சிந்தித்துச் செயல்பட்டால் எதையும் எளிதில் முடிக்கலாம்.

 

 

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். துன்பம் என்று எதுவுமே இல்லை. ஏனெனில் உலகில் எல்லாவகைத் துயரங்களுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன என்று தெளிதல் வேண்டும்.

கடவுள் யாருக்கும் துன்பம் தருவது இல்லை!

 

சின்னக் குழந்தைகள்  ரூபிக் கியூப் (RUBIK CUBE)  போல பல புதிர் விளையாட்டுகள் விளையாடும். ஒருமுறை அதற்கு விடை கண்டுவிட்டால் பின்னர் எளிதில் அதைத் தீர்த்துவிடலாம். முதல் முறை மட்டும் கொஞ்சம் கடினமாகத் தோன்றும். ஆனால் ,ஒவ்வொரு புதிருக்கும் ஒரு விடை உண்டு.

 

இது போலவே கடவுள் சில கஷ்டங்களைத் தரும்போது அதற்கான தீர்வையும் தருவான். அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு வேண்டும். அது இல்லை என்றால் இது போன்ற கட்டுரைகளைப் படித்து அறிய வேண்டும். பெரியோர்களிடமும் அறிவுறை கேட்கலாம்.

 

இதற்கு ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூற்றுக் கணக்கான Self Improvement சுய முன்னேற்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதில்லை. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு முதலிய நூல்களைக் கற்று சுய முன்னேற்றம் தொடர்பான விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டால் போதும். அதை அடிக்கடி “பாராயணம்” செய்தால் போதும்.

caged birds

 

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி!

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

முள்ளை முள்ளால் எடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

வைரத்தை வைரத்தால் அறு சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.

 

நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடி என்பதை அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்ற பிராமணனும், பின்னர் திருவள்ளுவரும் “யானையால் யானை யாத்தற்று” – என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

வினையால் வினையாக்கிக்கோடல் நனைகவுள்

யானையால் யானை யாத்தற்று (குறள் 678)

பொருள்: ஒரு செயலைச் செய்ய இன்னொரு செயலைப் பயன்படுத்தலாம்; நனைந்த மத நீரையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போல.

(நனை கவுள் = மத நீரினால் நனைந்த கபோலத்தை உடைய)

 

இதே உவமையை வால்மீகி ராமாயணத்திலும் காணலாம் (3-56-31)

(6-16-16)

 

பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் 276-லும் காண்க:-

தாரும் தானையும் பற்றி, ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல

 

(பிடி = பெண் யானை, களிறு = ஆண் யானை)

 

வடக்கில் , குறிப்பாக இமய மலையில், சம்ஸ்கிருத மொழியைப் பயன்படுத்தும் ரிஷி முனிவர்களையும் கற்றோரையும் “ஆரியர்” என்ற சொல்லால் சங்க இலக்கியம் அழைக்கும். இங்கே பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிக்கும் உவமையை பரணர் கையாளுகிறார்.

25KI-ELEPHANT_1155726f

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து!

 

நன்னெறி என்னும் நூலில் ஒரு நல்ல பாடலும் இதே கருத்தை வலியுறுத்தும்.

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்

தங்கட் குரியவரால் தாங்கொள்க – தங்கநெடுங்

குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் ஆவின்பால்

கன்றினாற் கொள்ப கறந்து.

 

பொருள்:–

தங்கநெடுங்குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் – நெடிய பொன் மலையால் செய்தது போன்ற அழகிய கொம்பு போன்ற பெண்ணே (அட! என் தங்கக் கட்டியே!)

 

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து- மாட்டுப் பாலை அதன் கன்றினாற் கறந்து கொள்வார்கள் (கன்று பக்கத்தில் இருந்தால் மாடு தானே பால் சுரக்கும். மற்றொரு பொருள்- கன்று இல்லாவிடினும் இறந்து போன கன்றின் தோலுக்குள் வைக்கலை அடைத்து கன்று போல பொம்மை செய்து , பசு மாட்டின் பக்கத்தில் வைத்துப்   பால் கறப்பது)

 

(அதுபோல)

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளின் – தங்களுக்கு உதவி செய்யாத ஒருவரிடமிருந்து உதவி பெற வேண்டுமானால்,

 

தங்கட் குரியவரால் தாங்கொள்க- அவருக்கு யார் நண்பர் என்று அறிந்து அவரை அணுகுக; அல்லது உங்கள் நண்பர்களில் யார், அவருக்கு நெருக்கமோ அவர் மூலம் அணுகி உதவி பெறுக.

 

எவ்வளவு அருமையான, எளிமையான விஷயம் பாருங்கள்.

 

2670_bessie_cow_calf_

 

நாட்டுப் பிரச்சினையானாலும், வீட்டுப் பிரச்சினையானாலும், குடும்பப் பிரச்சினையானாலும் திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்காதீர்கள்; முக்காடு போட்டுக் கொண்டு அழாதீர்கள்.

 

கஷ்டங்களைக் கொடுப்பவன் இறைவனே யானாலும், அதற்குத் தீர்வும் உண்டு!

 

முடியாதது என்ற சொல்லை என் அகராதியில் காண முடியாது என்று சொன்னான் நெப்போலியன். அதற்கு முன்னரே நாம் (தமிழர்கள்) சொல்லிவிட்டோம்.

 

–Subham–

 

கோபக்காரர்கள் நான்கு வகை! (Post No.2951)

angry-status

Article Written by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2951

Time uploaded in London :– 8-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

fight-scenes-290x300

நான்கு வகையான கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.

 

பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையான மொழி எதுவுமே இல்லை. கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரூ), சீனம், லத்தின், தமிழ் ஆகிய எல்லா மொழி வரலாறுகளையும் படித்த என் போன்றோருக்கு இது உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரியும். செக்ஸ், மருத்துவம், நாட்டியம், இசை, இலக்கணம், சட்டம், நாடகம், காப்பியம்,சமய இலக்கியம், தத்துவம், மொழி இயல், அகராதி இயல், இதிஹாச, புராணம் ஆகிய எல்லாவற்றிலும் உலக மொழிகளில் முதலிடம் வகிப்பது சம்ஸ்கிருதம். இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வருவது கிரேக்க மொழி மட்டுமே. ஆனல் அதில் கி.மு 800-க்கு முன் எதுவுமே கிடையாது. அதற்குப்பின்னர் ஓரளவு எல்லா விஷயங்களும் உள்ள மொழி. அதிலும் கூட பாணிணீய இலக்கணம், காமசூத்திரம், மனுதர்ம சாத்திரம், பரதம் போன்ற நூல்கள் இல்லை.

 

தமிழ் மொழியில் கி.மு. 300க்கு முன் எதுவும் இல்லை. அப்படிக்கிடைத்த விஷயங்களிலும் சம்ஸ்கிருதம் கலந்து இருக்கிறது.தமிழ்க் கல்வெட்டுகளும் இந்தக்காலத்துக்குப் பிந்தியவையே. ஆனால் சம்ஸ்கிருதச் சொற்களுடன் உள்ள கல்வெட்டுகள் கி.மு. 1400 லிருந்து நிறைய கிடைக்கின்றன.

young-angry-man-52068682

கோபக்கரரர்கள் நான்கு வகை

 

உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்

அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:

 

கடிகா என்றால் 24 நிமிடங்கள்

க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி

 

முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். இதை வள்ளுவனும்

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29

 

நொடி= க்ஷணம்= கணம்

 

குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.

 

இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.

 

கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.

 

ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.

 

இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.

 

முனிவு என்றாலும் கோபம். அந்த முனிவை வென்றவரே முனிவர் என்றும் ஒரு விளக்கம் உளது.

 

ரிஷி, முனிவர்களின் கோபம் பற்றி காளிதாசன் ரகுவம்சத்தில் (5-54) மிக அழகாகச் சொல்லுகிறான்:

 

” நான் அவர் (மதங்க முனிவர்)  பாதத்தில் வணங்கி அவருடைய கோபத்தை நீக்கினேன். அவர் சாந்த சுபாவத்தை அடைந்தார். நீரின் இயற்கைக் குணம் குளிர்ச்சியாகும்.  நெருப்பு, வெய்யில் இவைகளால்தான் அது சூடாகிறது. அது போல மஹரிஷிகளின் இயற்கைக் குணம் குளிர்ச்சிதான் (சாந்தம்). ஏதேனும் ஒரு தக்க காரணதால்தான் அது கோபம் அடையும்” (ரகு வம்சம் 5-54).

 

 

இதைத்தான் வள்ளுவனும் சொன்னான். வள்ளுவன் பயன்படுத்தும் கணம், குணம் முதலியன சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

மனு சொல்லுகிறார்; கோபத்தால் எட்டு தீய குணங்கள் வரும் என்று (7-48)

angry-woman

கோபத்தால் வருபவை எட்டு

 

பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்

வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:

மனு 7-48

 

கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.

வள்ளுவன் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் கோபம் பற்றி பத்து குறள்கள் பாடியிருப்பதை இவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்

 

 

கோபம் பற்றிய முந்தைய கட்டுரைகள்:–

தன்னையே அழிக்கும் கோபம் , சம்ஸ்கிருத செல்வம் , கட்டுரை 20, (எழுதியவர் நாகராஜன்), தேதி 28-1-2014

கோபக்காரர்களை வெல்வது எப்படி? (Article: Written by London swaminathan

Date: 14th September 2015)

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

Date: 19 December 2015

 

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568)

Compiled  by London Swaminathan, Date: 23 February 2016

 

When angry, count a hundred! (Post No 2565), Date: 22 February 2016

 

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839)

Date: 25 May 2016

Sringeri Acharya’s Advice on Anger Management! Compiled  by London Swaminathan,  Date: 22 September 2015

–Subham–

 

 

 

கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது……….. (Post No. 2949)

pegnant

Article Written by London swaminathan

Date: 7 July 2016

Post No. 2949

Time uploaded in London :– 9-45 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

oldman

யார் யாரைப் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையோடு போகக்கூடாது என்று ஒரு பாடல் இருக்கிறது:–

 

கர்ப்பிணிகள்

குழந்தைகள்

குரு (சந்யாசிகள்)

முதியோர்

கோவில்

அரசர்கள் (பிரதமர், முதலமைச்சர், ராஷ்டிரபதி)

அக்னிஹோத்ரம் செய்பவர்கள் வசிக்கும் இடங்கள்.

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீம் வ்ருத்த பாலகௌ

ரிக்த ஹஸ்தேன ந உபேயாத் ராஜானம் தைவதம் குரும்

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் = தினமும் அக்னிஹோத்ரம்

செய்யும் பிராமணர்களின் வீடுகள்

கர்பிணீம், வ்ருத்த, பாலக: = கர்ப்பிணிகள், முதியோர், சிறுவர்/சிறுமியர்

 

ராஜானம், தைவதம், குரும் = அரசர்கள், தெய்வம், குரு ஆகியோரின் இருப்பிடம்

 

ரிக்த  ஹஸ்தேன = வெறும் கையோடு

ந உபேயாத் = நெருங்கக்கூடாது (செல்லக்கூடாது)

 

children

குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட், மிட்டாய் அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்றால் தாய், தந்தையர் மிகவும் மகிழ்ச்சி அடைவர். நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளின் வயது, விருப்பங்களை அறிந்து வைத்திருக்கிறார்களே என்று வியப்படைவர். உங்களுக்கு வடை, பயசத்துடன் சாப்பாடும் போடுவார்கள்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கையும், பல விருப்பங்களும் இருக்கும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, அதற்குத்தக சமைத்துக்கொண்டுபோய் கொடுக்க வேண்டும். பெண்ணின் அம்மாவோ, மாமியோரோ உங்களை வாழ்த்துவர். உங்கள் வீட்டில் அத்தகைய சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஓடிவந்து உதவி செய்வர்.

 

கோவில்களுக்குச் செல்லுகையில் கட்டாயம் பூவும், பழமும் கொண்டு செல்ல வேண்டும். தேவைப்படும் இடங்களில் பிரசாதம் செய்துகொண்டுபோய் கொடுக்கவேண்டும். ஒன்றும் செய்ய அவகாசமில்லாவிட்டால் உண்டியலிலும், ஐயர் (பட்டர், குருகள்) தட்டுகளிலும் காசுபோட வேண்டும். காரணம் என்ன வென்றால் கோவில்களிலிருந்து ஒரு துரும்பு கூட எடுத்துவரக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்லும். சிவன் சொத்து குல நாசம். ஆனால் நாமோ அங்கிருந்து விபூதி, குங்குமம், பூ, பழம், துளசி முதலியவற்றை அன்புடன் வாங்கி வருவோம். இதற்கு உடனே காசு போட்டுவிடவேண்டும்.

கோவிலுக்குச் செல்

பெரியோர்கள், சாது சந்யாசிகள்  முதலியோரைப் பார்க்கச்செல்லுகையில் பூ, பழம், தேங்காய் அல்லது குறைந்தது ஒரு எலுமிச்சம்பழமாவது வாங்கிச் செல்லவேண்டும். குரு, தெய்வம், சாதுக்களின் பரிபூரண ஆசி கிட்டும்.

 

வயதானவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் செல்லுகையில் பழங்கள், இ னிப்புகள், காரங்கள், புத்தகங்கள் (books), கடிகாரம், வாக்கிங் ஸ்டிக் (Walking Stick) , பிளாஸ்க் (Flask), காலணி (Shoes) போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

–Subham–

 

 

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

உடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்!

Post No. 2922
Date 27th June 2016
Written by london swaminathan
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்மணி போரில் காயமடைந்தோருக்கு உதவி செய்து
புகழ் பெற்றதை அறிவோம். மேலை நாடுகளில் இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஹாஸ்பிஸ்’Hospice
என்ற அமைதியான தங்கும் இடங்கள் இருப்பதை அறிவோம். முதியோர் காப்பகங்கள் இப்போது பல்கிப் பெருகி வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தும் அறக்கொடை நிறுவனங்களும்
பெருகி வருகின்றன. ஆனால் இவையனைத்தையும் பாரத நாடுதான் முதல், முதலில் உலகிற்குக் கற்பித்தது என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகளும், மணிமேகலை முதலிய காப்பியங்களும்,
புராணக் கதைகளும் சான்றாகத் திகழ்கின்றன.
உடலூனம் அடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்காக
இன்று நிறைய அறக்கொடை நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன. அதே போல அரசாங்கமும் பல சலுகைகலை அறிவிக்கின்றன. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இது பற்றி சிந்தித்து எழுதிவைத்திருப்பது வியப்பானது; மற்றும் தமிழர்களின் மனிதாபிமானத்துக்கும் இது ஒரு
எடுத்துக்காட்டு.

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்போர் பின்ன்வரும் பாடல்களைப் படித்தாலே போதும்:–

காணார் கேளார் கால்முடமானார்
பேணுதலில்லார் பிணிநடுக்குற்றார்
யாவரும் வருக —
என்று அழைத்து மணிமேகலை உணவளித்ததை மணிமேகலை காப்பியம் மூலம் அறிகிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்பது பாரத நாடு முழுதும் போற்றப்படும் கொள்கை.

இதோ இன்னும் ஒரு சான்று:–

புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டு இல்லாதார் – கண்பட்டாங்

காழ்ந்து நெகிழ்ந்தவர்க்கீந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (சிறுபஞ்சமூலம்)

பொருள்:- போரில் காயம் அடைந்தவர்களுக்கும், காப்பாற்றுவார் இல்லாத அனாதைகளுக்கும், உயிர்போகும் தருவாயில் இருப்பவர்க்கும், கண் தெரியாதவர்களுக்கும், இரண்டு காலும்
இல்லாமல் முடமானோருக்கும், மனம் உருகி, நெகிழ்ந்து உதவி செய்தவர்கள்,  சாகும் வரைக்கும் கஷ்டம் இல்லாமல் இன்புற்று இருப்பார்கள் என்று சிறுபஞ்சமூலம்
சொல்லும்.

ஏலாதி என்னும் நூலிலும் ஒரு பாடல் வருகிறது:-

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் – குடம்பட்

டுடையராயில்லுளு ணீத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று (ஏலாதி)

பொருள்:– பெரும் கடனில் சிக்கித் தவிப்போருக்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர்  முதலியோர்க்கும், எளியவர்களுக்கும், முடவர்க்கும் வாழ வழியற்ற முதியவவர்களுக்கும் அனாதைச் சிறுவர்களுக்கும் உதவுவோர் இந்த மண்ணுலகில் நால் வகைப் படைகளையுடைய
அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஏலாதி கூறும்.

இறுதியாக அதே நூலில் இருந்த இன்னொறு பாடலையும் காண்போம்:–

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் — போயிழந்தார்

கைத்தூண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கீந்தார்

வைத்து வழங்கி வாழ்வார்

.

பொருள்:–
அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவையர்க்கும், ஊமைகளுக்கும், வியாபாரத்தில் முதல் முழுதையும் இழந்தோருக்குமுணவுப் பொருளை இழந்தவர்க்கும், குருடர்களுக்கும் உதவியவர்கள் பிற்காலத்துக்கு புண்ணியம் சேர்த்து
வைப்பவராவர். போகும் வழிக்குப் புண்ணியம் தேடியவர் ஆவர்

–சுபம்–

 

“ஆரிய” சப்தத்தின் பிரயோகம் (Post No.2887)

arya

Article written by London swaminathan

 

Date: 11 June 2016

 

Post No. 2887

 

Time uploaded in London :– 6-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

Arya (1)

Please read my (London Swaminathan) articles posted earlier:

1.Aryan Hitler and Hindu Swastika

2.Sibi Story in Old Tamil Literature

3.Were Moses and Jesus Aryans? (Two Parts)

4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)

5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)

  1. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)

7.திராவிடர்கள் யார்? (July 17, 2013)

8.தமிழன் காதுல பூ!!! (March 25, 2012)

9.ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும் (August 14, 2013)

10.ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்(December 29, 2013)

11.Eighteen groups of Indians! (November 4, 2013)

12.‘Dravidians are Invaders’ ( December 26, 2013)

13.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain! (November 10, 2013)

14.Arya Putra Ravana Spoke Sanskrit! Hanuman spoke Prakrta! (Research Article No.1848; Date: 6 May 2015)

15.Brahmin Kings of Sri Lanka! (Article No.1854; Dated 9 May 2015.)

16.Were Moses and Jesus ‘Aryans’? (July 20, 2013)

17.Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)

(July 23, 2013)

18.Are these customs Aryan or Dravidian?

(July 2, 2013)

19.Aryan Chapatti and Dravidian Dosa!

(August 14, 2013)

20.Who are Dravidians? (July 17, 2013)

 

arya

ஆரிய என்ற சொல் சங்க இலக்கியத்தில் இமயத்தில் வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்கால இலக்கியங்களில், வடக்கில் வாழும் மக்களையும், சம்ஸ்கிருத மொழியையும் குறிக்கப் பயன்பட்டது. இந்தியாவைப் பிளந்து, மதத்தை நிலைநாட்ட வந்தவர்கள், இதற்கு இனப்பூச்சு பூசி, திராவிடர் என்றால் பூர்வ குடி மக்கள், ஆரியர் என்றால் கைபர் கணவாய் வழியாகக் குடியேறியவர்கள் என்று விஷமத் தனமான புதுப் பொருள் கற்பித்தனர். ஆனால் தமிழ் இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கியத்திலோ இதற்கு ஆதாரம் கிடையாது. ராமாயணத்தில், ராமனை சீதை, ‘ஆரிய’ என்று அழைப்பார். மாண்புமிகு, மரியாதைக்குரிய என்று இதற்குப் பொருள். நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாவல் எழுதியவர்களும், வெளியிட்டவர்களும், ஆரிய சிகாமணிகளே, ஆரிய சிரேஷ்டர்களே என்று, வாசகப் பெருமக்களை அழைத்துள்ளனர். ‘மெத்தப் படித்தவர்களே’, ‘பண்பாடுடுடையவர்களே’ – என்று பொருள்.

 

ஆரிய என்ற சொல் மருவி ‘ஐயர்’ (உயர்ந்தோர்) என்று ஆயிற்று (ஆர்ய= அஜ்ஜ= அய்யர்= ஐயர்).

 

சில சுவையான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ‘ஆரிய’ – என்ற சொல்லின் பிரயோகத்தை விளக்குகின்றன:–

 

கர்தவ்யம் ஆசரன்  கார்யம் அகர்த்வ்யம் அநாசரன்

திஷ்டதி ப்ரக்ருதாசாரே ச வா ஆர்ய  இதி ஸ்ம்ருத:

தர்ம விதிகளைக் கடைப்பிடிப்பவன், அதர்ம விதிகளை அனுசரிக்காதவன், நடைமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவன் ஆர்யன் என்று கருதப்படுவான்.

 

வாச்யௌ நடீசூத்ரதாராவார்ய நாம்னா பரஸ்பரம்

வயஸ்யேத்யுத்தமைர்வாச்யோ மத்யாரார்யதி சாக்ரஜ:

 

(வக்தவ்யோ) அமாத்ய ஆர்யேதி சேதரை:

ஸ்வேச்சயானாமபிர்விப்ரார்விப்ர  ஆர்யேதி சேதரை:

 

நாடகத்தில் நடிகரும், சூத்ரதாரியும் (டைரக்டர்) ஒருவரை ஒருவர் ‘ஆர்ய’ என்று அழைக்கலாம் (இதை காளிதாசன் நாடகங்களில் காணலாம்).

 

வயதில் குறைந்தவர்கள் மூத்தவர்களை ஆர்ய எனலாம்.மந்திரிகளை ஆர்ய (மாண்புமிகு) என்று கூப்பிட வேண்டும். பிராமணர்கள் விருப்பத்தின்பேரில் மற்றவர்களை ஆர்ய என்று அழைக்கலாம்.

 

வீடு எது? காடு எது?

வீடு என்றால் பவனம். இதில் ‘ப’ என்ற எழுத்து போய்விட்டால் அது ‘வனம்’—அதாவது காடு. இதை விளக்கும் அழகிய சம்ஸ்கிருத ஸ்லோகம் இதோ:

யன் மனீஷி பதாம்போஜரஜ: கணபவித்ர்ரிதம்

தத்தேவ பவனம் நோ சேத்பகாரஸ்தத்ர லுப்யதே

பூதம் ஹி தத் க்ருஹம் யத்ர ஸ்வதாகார ப்ரவர்த்ததே

 

பொருள்:-

எந்த வீட்டில் ஞானிகளின் பாததூளி படுகிறதோ, எந்த வீட்டில் ஸ்வதா என்ற வேத மந்திரத்துடன் நீத்தார் (இறந்தோர்) கடன் நடைபெறுகிறதோ அது பவனம் (வீடு); மற்றதனைத்தும் வனம்!

(அரும் பத விளக்கம்:–மனீஷி= அறிஞர்கள், ஞானிகள்; கண=பாத தூளி, பத+அம்புஜ= பாத கமலங்கள், திருவடிகள்; பூதம்= புனிதமாக்கப்பட்ட)

 

–சுபம்–