கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு! (Post No.2909)

valampuri 1

Compiled by London swaminathan

 

Date: 20  June 2016

 

Post No. 2909

 

Time uploaded in London :– 10-34 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்தை ராம பிரானின் புனித வாழ்வைப் போற்றும் காவியமாகப் பார்ப்பர் பலர்; இலக்கிய இன்பத்துக்காக நுகர்வர் பலர்; ஆராய்ச்சி நோக்குடன் அணுகுவர் சிலர். இவ்வாறு அணுகி முன்னரே பல கட்டுரைகளில் மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் மின்சார பல்புகள் போல அவைகளின் கூடுகளில் வைத்துப் பயன்படுத்துதல் முதலியன பற்றி எழுதியுள்ளேன். இன்று வலம்புரிச் சங்குகளில் மிகவும் அதிசயமான சலஞ்சலம் பற்றி கம்பன் சொன்னதைக் காண்போம்.

 

செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய்

அங்கண் அங்கவலயங்களும் இலங்க அணியச்

சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே

–விராதன் வதைப் படலம், ஆரணிய காண்டம்,கம்ப ராமாயணம்

பொருள்:-

விராதன் என்னும் அரக்கன் எப்படி வந்தான்? சிவந்த, செம்மையான உடம்புடைய பாம்புகள் கக்கிய மாணிக்க வளையங்களையும், சங்குகள் வருந்திப் பெற்றெடுத்த சலஞ்சலம் எனும் சங்குகளினால் ஆன வளையல்களையும் அணிந்த கரங்களை முன்னும் பின்னும் வீசியவாறு வில் வீரர்களுக்கு எதிரே விராதன் வந்தான்.

valamum itamum

 

பாம்புகள் கக்கும் நாகரத்தினம் (மாணிக்கம்) பற்றி முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறிவிட்டேன். இப்பொழுது அதிசய சலஞ்சலம் பற்றிப் பார்ப்போம்.

 

வலம்புரிச் சங்கு என்பது இந்து மஹா சமுத்திரத்தில், மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலான சங்குகளுக்கு உள்ள சுழிக்கு எதிர்ப்புறமாக இதன் சுழி இருக்கும். ஆங்கிலத்தில் இதை இடம் சுழிச் சங்கு என்பர். சங்கை மேல் புறத்திருந்து பார்க்கிறோமா, கீழ்ப் புறத்திலிருந்து பார்க்கிறோமா என்பதைப் பொருத்து இடம், வலம் என்ற மாறுபாடு வருகிறது.

கம்பன் ஏன் சலஞ்சலம் என்னும் சங்கினால் ஆன வளையல் என்று சொன்னான்? மாணிக்கத்துக்கு நிகரான விலை கொண்டது அது. நாகரத்தினம் போல அபூர்வமானது அது.

ஆயிரம் இடம்புரிச் சங்குகளால் சூழப்பட்ட சங்கு வலம்புரிச் சங்கு என்றும், அதுபோன்ற 1000 வலம்புரிச் சங்குகளால் சூழப்படது சலஞ்சலம் என்றும் நூல்கள் செப்பும். இது போன்ற சங்குதான் கிருஷ்ணன் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஆகும்.

 

பகவத் கீதையிலேயே ஐந்து பாண்டவ வீரகளின் கையிலுள்ள ஒவ்வொரு சங்கிற்கும் தனித் தனி பெயர் கொடுத்திருப்பதால் இந்துக்கள்தான் முதல் முதலில் சங்கைப் பயன்படுத்திய நாகரீகம் வாய்ந்த சமூகம் என்று சொல்லவேண்டும்.

 

பகவத்கீதை முதல் அத்தியாயத்தில் பாண்டவர்கள் கையிலும் கிருஷ்ணன் கையிலும் உள்ள சங்குகளின் பெயர்கள் காணப்படுகின்றன:

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீ கேசோ தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீம கர்மா வ்ருகோதர:

 

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷ மணிபுஷ்பகௌ (1-15/16)

 

கிருஷ்ணன் – பாஞ்சஜன்யம்

அர்ஜுனன் – தேவதத்தம்

தர்மன் – அனந்தவிஜயம்

பீமன் – பௌண்ட்ரம்

நகுலன் – சுகோஷம்

சஹாதேவன் – மணிபுஷ்பகம்

 

(‘அபூர்வ வலம்புரிச் சங்கு’ என்ற தலைப்பில் நான் எழுதி 17 செப்டம்பர் 2012-ல் இங்கே வெளியிட்ட கட்டுரையில் சங்குகள் பற்றிய சுவையான விவரங்களையும் காண்க)

–சுபம்–

 

கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு வருணன் கடவுள் (Post No. 2905)

body parts

Compiled by London swaminathan

 

Date: 18  June 2016

 

Post No. 2905

 

Time uploaded in London :– 13-26

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.

 

காது – திசை

தோள் (த்வக்) – காற்று

கண் – சூரியன்

நாக்கு –வருணன்

க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி

வாக்கு – அக்னி (வன்னி)

கை (ஹஸ்த) – இந்திரன்

கால்( பாத)  – உபேந்திரன்

பாயு: (குதம்) – மித்ரன்

ஜனன உறுப்பு – பிரஜாபதி

மனது – சந்திரன்

 

இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-

ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

 

elephant

Xxx

 

உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?

 

ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:

ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:

–சப்தகல்பத்ருமம்

சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

 

பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-

 

ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)

(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்

 

(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

என் குடும்பம்

Xxx

ஆத்ம யாஜீ யார்?

சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)

 

எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்

ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்

 

கீதையிலும்

இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-

சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:

ப.கீதை 6-29

பொருள்:–

யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்

இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.

–சுபம்–

 

 

 

புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்! (Post No.2904)

Article written by S.NAGARAJAN

 

Date: 18 June 2016

 

Post No. 2904

 

Time uploaded in London :–  5-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

செல்வந்தனாக, புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்!

 

.நாகராஜன்

 

 

 

மூன்று ஆசைகள்

 

வாழ்வாங்கு வாழ் ஹிந்து மதம் காட்டாத வழியே இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று ஆசைகள் நிச்சயமாக வேண்டும்.

  • நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்
  • செல்வந்தனாக வாழ ஆசைப்படுங்கள்
  • நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்ப்டுங்கள்

வெறுமனே ஆசைப்படுங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்வில்லை ந்ம் அருளாளர்கள்.

இந்த மூன்று ஆசைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதையும் மிகத் தெளிவாக வழிமுறைகளுடன் விளக்கியுள்ளனர்.

 

சரக சம்ஹிதா என்று வாழ்வாங்கு வாழ வழி உரைக்கும் நூலில் சரகர் ஆரோக்கியம் சம்பந்தமாகச் சொல்லாத விஷயமே இல்லை.

 

பதினோராம் அத்தியாயத்தில் ஆரம்பித்திலேயே இதைச் சொல்லி விடுகிறார்.

 

இஹ கலு புருஷேணானுபஹதசத்வ, புத்தி, பௌருஷ, பராக்ரமேண ஹிதமிஹ சாமுர்ணிமிச்ச லோகே சமநுபஷ்யதா திஸ்ர ஏஷணா: பர்யேப்ருதிவ்யா பவந்தி | தத்யதா – ப்ராணைஷனா, தநைஷனா,பரலோகைகஷணேதி ||

 

 

சாதாரண திறமையுடன், புத்திசாலித்தனம், பலம், ஆற்றல் உள்ளவனாக, இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நலமாக  இருக்க ஆசைப்படும் ஒரு சாமானியன் மூன்று ஆசைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

1)நீண்டநாள் வாழ, 2) நன்கு சம்பாதிக்க, 3)நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும்.

 

 

 

நீண்ட நாள் வாழ ஆசைப்படு!

 

அடுத்து சரகர் அதிரடியாகச் சொல்வது:

இந்த மூன்று ஆசைகளிலும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் இந்த வாழ்வு முடிந்து போனால் எல்லாம் முடிந்து போகும்.

 

 

இப்படி நீண்ட நாள் வாழ்வதற்கு, ஆரோக்கியமாக வாழும் மனிதர்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாதி வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் (உடனடி) சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளோம். அதைப் பின்பற்றுங்கள். ஆக நீண்ட நாள் வாழ்வது பற்றி இப்போது விளக்கப்பட்டுள்ளது.

 

செல்வந்தனாக ஆசைப்படு!

 

 

அடுத்து வருவது செல்வந்தனாக வாழ ஆசைப்படும் இரண்டாவது ஆசைஒருவன் ஏன் செல்வந்தனாக வாழ ஆசைப்பட வேண்டும்? ஏனெனில் நீண்ட நாள் வாழும் போது பணமில்லாமல் வாழ்வது போன்ற துக்ககரமான விஷயம் வேறொன்றுமில்லைஆகவே பணம் வரும் வெவ்வேறு வழிகளையும் ஒருவன் நாட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன? விவசாயம் செய்வது, பசு போன்றவற்றை வளர்ப்பது, வணிகம் செய்தல், அரசாங்க சேவை உள்ளிட்ட பல உத்தியோகங்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவையே வழிகளாகும். நல்ல பெரியோர்களால் நிந்திக்கப்படாத, ஒதுக்கப்படாத எந்த ஒரு வேலையையும் ஒருவன் மேற்கொள்ளலாம். இப்படி நீண்ட நாள் வாழ்வதால் ஒருவன் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழலாம். இப்படியாக இரண்டாவது அடிப்படை ஆசை விளக்கப்படுகிறது

வையகம் காப்பவரேனும் சிறு                             வாழைப்பழக்கடை வைப்பவரேனும்                     பொய்யகலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் பூமியில் எங்கணும் மேலோர்

 

 

என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

 

இங்கு கஞ்சனாக வாழாதே என்பதும் மறைமுகமாக சரகரால் சொல்லப் படுகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக கெட்ட வேலைகளில் ஈடுபடாதே என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

 

 

மேலுலக சந்தோஷத்துக்கும் சேர்த்து ஆசைப்படு!

 

அடுத்து சரகர் கூறுவதைப் பார்ப்போம்:

 

அடுத்து வருகிறது மேலுலக சந்தோஷத்திற்கு ஆசைப்படுவது.

இதில் சில சின்ன சந்தேகங்கள் எழுகின்றன. இறந்த பின்னர் மறு உலகம் உண்டா என்ன? ஆனால் ஏன் இந்த சந்தேகம் எழுகிறது? ஏனெனில் இந்த உலகில் பலரும் பிரத்யட்சமாகக் காண்பதையே நம்ப முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் தான். ஆகவே பிரத்யட்சமாக காணமுடியாத மறு உலக வாழ்க்கையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இதற்கு மாறாக மறு உலக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் சாஸ்திரங்கள் சொல்வதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதால் அதை நம்புகின்றனர். இதிலும் பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. பெற்றோர், இயற்கை, அழிவற்ற ஆன்மா”, “மதி (Free will) ஆகியவை மறுபிறப்புக்கு காரணம் என பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன.

முதலில் இறப்புக்குப் பின்னர் மறு பிறப்பு உண்டா என்பதை ஆராய்வோம்.

 

 

இதை அடுத்து மறுபிறப்பு உண்டா, உண்டு என்றால் காரணங்கள் என்னென்ன என்று அலசி ஆராய்கிறார் சரகர்.

சரகர் சொல்லாத ஆரோக்கிய விஷயமே இல்லை என்று தோன்றும் சரக சம்ஹிதையைப் படித்தால்!

 

                                 _தொடரும்

 

 

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன? (Post No.2897)

family havan2

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2897

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-

 

அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்

ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே

 

அக்னிஹோத்ரம்

தவம்

சத்யம்

வேதம் ஓதுதல்

அதிதி /விருந்தோம்பல்

வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)

இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.

(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).

 

WELL IN SALEM, AZAKIYA SINGAR

வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச

அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே

குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)

 

xxx

 

ஆறு வகையான ஆபத்துகள்

அதிக மழை (அதி வ்ருஷ்டி)

மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)

வெட்டுக்கிளி (சாலபா:0

எலிகள் (மூஷகா:)

கிளிகள் (சுகா:)

அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)

 

அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:

ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:

belize_1984_parrots

–சுபம்–

 

 

“ஆரிய” சப்தத்தின் பிரயோகம் (Post No.2887)

arya

Article written by London swaminathan

 

Date: 11 June 2016

 

Post No. 2887

 

Time uploaded in London :– 6-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

Arya (1)

Please read my (London Swaminathan) articles posted earlier:

1.Aryan Hitler and Hindu Swastika

2.Sibi Story in Old Tamil Literature

3.Were Moses and Jesus Aryans? (Two Parts)

4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)

5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)

  1. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)

7.திராவிடர்கள் யார்? (July 17, 2013)

8.தமிழன் காதுல பூ!!! (March 25, 2012)

9.ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும் (August 14, 2013)

10.ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்(December 29, 2013)

11.Eighteen groups of Indians! (November 4, 2013)

12.‘Dravidians are Invaders’ ( December 26, 2013)

13.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain! (November 10, 2013)

14.Arya Putra Ravana Spoke Sanskrit! Hanuman spoke Prakrta! (Research Article No.1848; Date: 6 May 2015)

15.Brahmin Kings of Sri Lanka! (Article No.1854; Dated 9 May 2015.)

16.Were Moses and Jesus ‘Aryans’? (July 20, 2013)

17.Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)

(July 23, 2013)

18.Are these customs Aryan or Dravidian?

(July 2, 2013)

19.Aryan Chapatti and Dravidian Dosa!

(August 14, 2013)

20.Who are Dravidians? (July 17, 2013)

 

arya

ஆரிய என்ற சொல் சங்க இலக்கியத்தில் இமயத்தில் வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்கால இலக்கியங்களில், வடக்கில் வாழும் மக்களையும், சம்ஸ்கிருத மொழியையும் குறிக்கப் பயன்பட்டது. இந்தியாவைப் பிளந்து, மதத்தை நிலைநாட்ட வந்தவர்கள், இதற்கு இனப்பூச்சு பூசி, திராவிடர் என்றால் பூர்வ குடி மக்கள், ஆரியர் என்றால் கைபர் கணவாய் வழியாகக் குடியேறியவர்கள் என்று விஷமத் தனமான புதுப் பொருள் கற்பித்தனர். ஆனால் தமிழ் இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கியத்திலோ இதற்கு ஆதாரம் கிடையாது. ராமாயணத்தில், ராமனை சீதை, ‘ஆரிய’ என்று அழைப்பார். மாண்புமிகு, மரியாதைக்குரிய என்று இதற்குப் பொருள். நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாவல் எழுதியவர்களும், வெளியிட்டவர்களும், ஆரிய சிகாமணிகளே, ஆரிய சிரேஷ்டர்களே என்று, வாசகப் பெருமக்களை அழைத்துள்ளனர். ‘மெத்தப் படித்தவர்களே’, ‘பண்பாடுடுடையவர்களே’ – என்று பொருள்.

 

ஆரிய என்ற சொல் மருவி ‘ஐயர்’ (உயர்ந்தோர்) என்று ஆயிற்று (ஆர்ய= அஜ்ஜ= அய்யர்= ஐயர்).

 

சில சுவையான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ‘ஆரிய’ – என்ற சொல்லின் பிரயோகத்தை விளக்குகின்றன:–

 

கர்தவ்யம் ஆசரன்  கார்யம் அகர்த்வ்யம் அநாசரன்

திஷ்டதி ப்ரக்ருதாசாரே ச வா ஆர்ய  இதி ஸ்ம்ருத:

தர்ம விதிகளைக் கடைப்பிடிப்பவன், அதர்ம விதிகளை அனுசரிக்காதவன், நடைமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவன் ஆர்யன் என்று கருதப்படுவான்.

 

வாச்யௌ நடீசூத்ரதாராவார்ய நாம்னா பரஸ்பரம்

வயஸ்யேத்யுத்தமைர்வாச்யோ மத்யாரார்யதி சாக்ரஜ:

 

(வக்தவ்யோ) அமாத்ய ஆர்யேதி சேதரை:

ஸ்வேச்சயானாமபிர்விப்ரார்விப்ர  ஆர்யேதி சேதரை:

 

நாடகத்தில் நடிகரும், சூத்ரதாரியும் (டைரக்டர்) ஒருவரை ஒருவர் ‘ஆர்ய’ என்று அழைக்கலாம் (இதை காளிதாசன் நாடகங்களில் காணலாம்).

 

வயதில் குறைந்தவர்கள் மூத்தவர்களை ஆர்ய எனலாம்.மந்திரிகளை ஆர்ய (மாண்புமிகு) என்று கூப்பிட வேண்டும். பிராமணர்கள் விருப்பத்தின்பேரில் மற்றவர்களை ஆர்ய என்று அழைக்கலாம்.

 

வீடு எது? காடு எது?

வீடு என்றால் பவனம். இதில் ‘ப’ என்ற எழுத்து போய்விட்டால் அது ‘வனம்’—அதாவது காடு. இதை விளக்கும் அழகிய சம்ஸ்கிருத ஸ்லோகம் இதோ:

யன் மனீஷி பதாம்போஜரஜ: கணபவித்ர்ரிதம்

தத்தேவ பவனம் நோ சேத்பகாரஸ்தத்ர லுப்யதே

பூதம் ஹி தத் க்ருஹம் யத்ர ஸ்வதாகார ப்ரவர்த்ததே

 

பொருள்:-

எந்த வீட்டில் ஞானிகளின் பாததூளி படுகிறதோ, எந்த வீட்டில் ஸ்வதா என்ற வேத மந்திரத்துடன் நீத்தார் (இறந்தோர்) கடன் நடைபெறுகிறதோ அது பவனம் (வீடு); மற்றதனைத்தும் வனம்!

(அரும் பத விளக்கம்:–மனீஷி= அறிஞர்கள், ஞானிகள்; கண=பாத தூளி, பத+அம்புஜ= பாத கமலங்கள், திருவடிகள்; பூதம்= புனிதமாக்கப்பட்ட)

 

–சுபம்–

 

பூமியைத் தாங்கி நிற்பது எது? (Post No.2884)

atlas

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2884

 

Time uploaded in London :– 14-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

750px-Solar_sys

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.

 

பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.

கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.

 

சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

myth-1-21

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.

 

ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

 

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:–

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

 

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

lead_deskew=0 checksum=2e0f339cc42d8ab0fcbb3871de675d79

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

 

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

–புறம் 182

–சுபம்–

வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************

 

பைத்தியத்துக்கு வைத்தியம்: சுவையான சம்பவங்கள் (Post No.2866)

grimadi

Translated by London swaminathan

 

Date: 4 June 2016

 

Post No. 2866

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:

நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.

டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:

“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.

நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”

(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)

Xxx

(மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்; இந்த சம்பவங்கள் ஏற்கனவே என்னால் இங்கே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன)

mozart notes

சங்கீதம் – நல்ல மருந்து!

ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.

 

மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” — என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.

 

உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?

மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.

பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.

உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.

மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.

Xxx

dollars

காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!

டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.

 

டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.

அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.

 

வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.

(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)

–சுபம்–

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட! (Post No 2853)

 

 

books picture

Article written by london swaminathan

 

Date: 30 May 2016

 

Post No. 2853

 

Time uploaded in London :– 8-41 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

 

Devi_Bhagavata_S_4f3ca6ead5de8

மதுரையை விட்டு லண்டனுக்கு வந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் மதுரை நினைவுகள் மறைவதில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் வரும் பழைய நினைவுகள் திடீரென்று சிரிப்பை உண்டாக்கும். என் மனைவி , ஏதோ அவளைப் பார்த்துதான் சிரிக்கிறேன் என்று நினைத்து என்ன சிரிப்பு? என்பாள். ஒன்றுமல்ல 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்ததை எண்ணி சிரிக்கிறேன் என்பேன். உங்களுக்கு என்ன பைத்தியமா? என்பாள்.

இதோ ஒரு பழைய, சுவையான சம்பவம்:–

 

எனது தந்தை வெ. சந்தானம் மதுரை தினமணிப் பதிப்பு துவங்கிய காலத்திலிருந்து மதுரை தினமணிப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி; காமரஜருடன் சிறையிலிருந்தவர். ஆகையால் அந்தக் கால மனிதரைப் போலவே கதர் ஜிப்பா அணிவார். பணம், புகழ் முதலிய ஆசைகள் கிடையாது. அவருக்குப் பொழுது போக்கு புத்தகம் சேகரித்தல், படித்தல், உரையாற்றுதல்; குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.

 

வீட்டிற்கு நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஏ.கே. செட்டியார், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்றோர், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள் எனப் பலரும் வருவர். அவர்கள் அமரும் முதல் அறையில் இரண்டு ‘காத்ரேஜ்’ பீரோக்கள் உண்டு. பேச்சு வாக்கில் ஏதேனும் புத்தகத்தை எடுக்க அந்த இரும்பு/எஃகு பீரோவைத் திறப்பார். அதில் பழுப்பேறிய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வந்தவர்கள் ‘கொல்.லென்று சிரித்து விடுவர்!

 

“என்ன சார்! இது? அவனவன் காத்ரேஜ் பீரோவுக்குள் தங்க நகை, பணப்பெட்டி, பட்டுப்புடவை என்று வைத்திருப்பான். நீங்கள் பழுப்பேறிய புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள்? என்பார்கள். என் தந்தையோ பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். அவர் விட்டுச் சென்ற 6000 புத்தகங்களை, நாங்கள் சகோதர்கள் பிரித்தெடுத்துக் கொண்டு இன்றும் அனுபவித்து வருகிறோம்.

 

ஒரு நாள், என் தந்தையின் சகா (தினமணி உதவி ஆசிரியர்) ஒருவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல இலக்கிய, தெய்வீக, தேசீய தலைப்புகளில் சம்பாஷணை நீடித்தது. தேவி பாகவதம் பற்றிப் பேச்சு வந்தவுடன் வந்தவர் சொன்னார், “எனக்கும் படிக்க ஆசை. நல்ல புத்தகம் எங்கே கிடைக்கும் “ என்றார்.

 

உடனே பீரோவைத் திறந்து, இது நல்ல பதிப்பு. இதைப் படி” என்று சொல்லிக் கொடுத்துவிட்டார். அவர் நல்ல மனிதர். ஒரு சத்திய சந்தர். ஆனால் அவரது சகோதரர் அப்படியில்லை. “கெட்ட மனிதர்”; அதாவது சிகரெட் குடிப்பார். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொண்டாலோ, சிகரெட் குடித்தாலோ, பெண் கூட கொடுக்க மாட்டார்கள்!!!!!

 

தேவி பாகவதம் இரவல் கொடுத்து பல மாதங்கள் கழிந்தன. நாங்கள் எங்கள் தந்தையுடன் வழக்கம்போல ‘புத்தக வேட்டை’யாட பழைய புத்தகக்கடைக்குச் என்றோம். மதுரை தெற்குச் சித்திரை வீதியில் அக்காலத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளில் என் தந்தைக்கு தனி மதிப்பு. என் தந்தை வரும் நாட்களில் அவர்களுக்கு நல்ல வரும்படி உண்டு. ஒரு ரிக்க்ஷா வண்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். பழைய புத்தகக் கடைக்குள் நுழைய எங்களுக்கு முழு அனுமதி உண்டு. நாங்களும் நேரத்தை வீணடிக்காமல், அங்கே படியில் அமர்ந்து, அம்புலி மாமா பிரதிகளை எடுத்துக் கொண்டு, மூன்று மந்திரவாதிகள், டனால் கோட்டை, வால் நட்சத்திரம் முதலிய தொடர்கதைகளைப் படிப்போம்.

இவ்வாறு புத்தகங்களைப் புரட்டும்போது திடீரெனக் கண்ணில்பட்டது தேவி பாகவதம். அது என் தந்தை கையெழுத்துடன், அவர் ரப்பர் ஸ்டாம்புடன் இருந்தது. பழைய புத்தகக்கடைக்காரரிடம் இது என்ன விலை? என்று சிரித்துக் கொண்டே விலையைக் கேட்டார். அவன் சொன்ன விலையைக் கொடுத்து அதை வீட்டுக்கும் கொண்டுவந்தார். பழைய புத்தகக் கடைக்காரருக்குத் தெரியாது எங்கள் வீட்டுப் புத்தகம்தான் இரவல் கொடுக்கப்பட்டு, வட துருவம், தென் துருவம் எல்லாம் பயணம் செய்து, பின்னர் அங்கே விற்கப்பட்டது என்பது.

 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? யார் இரவல் வாங்கினாரோ அவரது ‘கெட்ட’ சகோதரர், சிகரெட்டுக்கு காசு வேண்டி அந்தப் புத்தகத்தை அங்கே விற்றிருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று சொல்லுவதைவிட,

“போன புத்தகம் திரும்பி வந்தது புது மணத்தோட” என்று சொல்லுவது சாலப் பொருந்தும்.

–சுபம்–