தாய்தன்னை அறியாத கன்று இல்லை! கம்பன் உவமை நயம்!! (Post No 3079)

 

pasuvum kandrum

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 7-53 AM

Post No.3079

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

கம்ப ராமாயணம் ஒரு இனிய நீர் ஊற்று; தோண்டத் தோண்ட இனிய நீர் சுரக்கும். தொட்டனைத்தூறும் மணற் கேணி அது; படிக்கப் படிக்க கற்றனைத்தூறும் அறிவு.

 

சின்ன வயதில் எனக்கு ஒரு வியப்பு! நான் மதுரையில் வடக்கு மாசி வீதியில் யாதவர் (கோனார்கள் ) இடையே வாழ்ந்தேன். அந்தக் காலத்தில் மதுரையில் வைகை நதியில் தண்ணீர் ஓடும். ஆகையால் யாதவ இளைஞர்கள் தினமும் மாடுகளை எங்கள் தெரு வழியாக ஆற்றங்கரைக்கு நடத்திச் செல்லுவர். அந்த மாட்டுக் கூட்டம் வரும்போது வீட்டு வாசலில் உள்ள சைக்கிள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக சுவற்றை ஒட்டி நிறுத்துவோம் அல்லது ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு இடிததுச் சென்று விடும். அந்த மாட்டுக் கூட்டம் வரும் முன்னே, “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளும் தகர டப்பிகளும் (ஏழைகளின் மணி!) சப்தம் போடும்.

 

அப்பொழுது ஒவ்வொரு மாடும் அதன் கன்றுடன் செல்லும். கூட்டத்தில் அது அது அதனதன் தாய்ப் பசுவுடன் செல்லும்.  நானோ பள்ளிக் கூடப் பையன். அட, எல்லா மாடுகளும் ஒரே மதிரியாக இருக்கிற தே, எல்லா கன்றுகளும் ஒரே மதிரியாகத் தெரிகின்றனவே. எப்படி அது அது அதனதன் தாயாரை அறிகிறது என்று வியந்து நிற்பேன்.

pasu cow claf kandru

கம்பனும் இப்படி ஒரு காட்சியைக் கண்டான் போலும்! அவனது உவமைகளில் ஒன்று — “தாய்தன்னை அறியாத கன்று இல்லை”.

 

வேதத்திலும் தாய்ப் பசு -கன்றின் அன்பு அடிக்கடி உவமையாகக் கையாளப்படுகிறது. இந்துக்களின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் இரண்டு:

  1. காடுகளில் திரிந்த பல விலங்குகளில் மாட்டின் பால்தான் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கண்டுபிடித்து அதை நாட்டு விலங்காக மாற்றி (DOMESTICATION) உலகம் முழுதும் விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் கற்றுக் கொடுத்தான்.
  2. இரண்டாவது கண்டு பிடிப்பு– டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM (தசாம்ச முறை). இந்த இரண்டையும் இந்துக்கள் கற்பிக்காவிடில் உலகில் நாகரீகம் என்பதோ விஞ்ஞானம் என்பதோ வளர்ந்திரா. நிற்க.

 

கம்பன் உவமை நயத்தைக் காண்போம்:-

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத

ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய

நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா

மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்

 

பொருள்:–

“தலைவனே! பக்தர்களிடம் வருவதற்கு அரியவன்போல் தோன்றி, பிறகு எளிதாக வந்து காட்சி தரும் வல்லமை உள்ளவனே! தன்னைப் பெற்ற தாயைத் தெரிந்து கொள்ளாத கன்றுகள் இல்லை. தான் பெற்ற கன்றுகளை தாயும் அறிந்து கொள்ளும். உன்னிடமிருந்தே உலகம் தோன்றியதால் நீ உலகத்தின் தாயாக விளங்கி, எல்லாப் பொருள்களையும் அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் எல்லாம் உனது தனிமையான நிலையை அறிய மாட்டா.”

 

எனது கருத்து:–

இதைப் படிக்கையில் பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த உண்மையும் நினைவுக்கு வருகிறது.

 

வாத்சல்யம் (தாய்ப் பசு – கன்று (வத்ஸ) இடையிலுள்ள அன்பும் நினைவுக்கு வருகிறது.

 

ஒவ்வொரு பசுவும் அதன் கன்றை அறியும். அது போல ஒவ்வொரு கன்றும் அதன் தாயை அறியும்.

இதே போல தாயாகிய இறைவனே நீ எங்கள் எல்லாரையும் அறிவாய். நாங்கள் உன்னை அறியும் பக்குவம் பெறவில்லையே. இது என்ன மாயமோ என்று கம்பன் வியக்கிறான்.

கன்று எப்படி தன் தாயை அறிகிறதோ அது போல நாமும் இறைவனை  அறிய வேண்டுமானால் அது போலப் பாசம் (பக்தி) வேண்டும். இறைவனோ எப்போதுமே தாய்ப்பசு போல நம் மீது அன்பைப் பொழிந்துகொண்டிருக்கிறான்.

எது எப்படியாகிலும் வேதத்தில் காணும் இந்த உவமை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது சிறப்புடைத்து.

வேத கால உவமை சைவ சித்தாந்தத்துக்கும் வித்திட்டது!

hi-620-emperor-penguins-on-the-sea-ice-close-to-halley-research-station-credit-british-antarctic-survey

இன்னும் வியப்பு நீங்கவில்லை

 

டெலிவிஷனில் இயற்கை பற்றி வரும் ‘டாகுமெண்டரி’களைப் (Documentary ) பார்ப்பேன். அதில் ஒன்று அண்டார்ட்டிகா என்னும் தென் துருவப் பகுதியில் வாழும் பெங்குவின் பறவைகளைப் பற்றியது. அவை கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் அப்படிப் பெரிய கூட்டம்! திருவிழாக் கூட்டம்!!! ஆண் பெங்குவின்கள், கடலில் குதித்து நீந்திவிட்டுக் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் திரும்பி வரும். ஒவ்வொன்றும் அதன் பெண்சாதியைக் கண்டுபிடித்து அதன் அருகி ல் போய் நிற்கும். குட்டிகளும் அதன் அருகே நிற்கும். இதைக் கண்டு எல்லோரும் வியப்பர். எப்படி பல்லாயிரம் பெங்குவின்கள் இடையே ஒவ்வொன்றும் தன் மனைவியைக் கண்டு பிடிக்கின்றன என்று. ஆக , கம்பனின் உவமையை இப்பொழுது நாம் பெக்குவினுக்கும் மாற்றலாம்!

penguin kuuttam

–subham–

 

அஷ்ட லெட்சுமி கதை: ஒன்று வாங்கினால் ஏழு இலவசம்! (Post No.3075)

ashta lakshmi

Written by london swaminathan

Date: 20th    August 2016

Post No. 3075

Time uploaded in London :– 6-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் சிறப்பாக ஆண்ட பெருமையுடையவன் போஜன். ஆனால் போஜன் என்ற பெயரில் பல மன்னர்கள் ஆண்டதால் எந்த போஜ ராஜனைப் பற்றியது அஷ்ட லெட்சுமி கதை என்று சொல்வதற்கிலை.

 

துணிவே துணை!

 

கடவுள் ஆறு இடங்களில் இருக்கிறார் என்று

சம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான ஸ்லோகம்/பாடல் இருக்கிறது.

 

உத்சாஹ: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம:

ஷடேதே யத்ர திஷ்டந்தி தத்ர தேவோபி திஷ்டதி

 

பொருள்:–

 

உற்சாகம் (ஊக்கம்/ஆவல்), சாஹசம் (துணிகரச் செய்ல்), தைர்யம் (துணிவு),

புத்தி: (மூளை/அறிவு), சக்தி: (உடல் வலிமை), பராக்ரம: (வீரம்)

–ஆகிய ஆறும் எங்கே இருக்கின்றனவோ அங்கே இறைவன் உறைவான்.

 

ashtalakshmi,chennai

வான் புகழ் வள்ளுவனும் தேன் தமிழில் செப்புகிறான்:-

 

விழுப்புண் படாத நாள் எல்லாம்  வழுக்கினுள்

வைக்கும் தன் நாளை எடுத்து

 

பொருள்:- வீரன் ஒருவன், தன் வாழ்நாளில் போரில் காயங்கள் ஏற்படாத நாட்களை எல்லாம், வீணாகிவிட்ட நாட்கள் என்று கணக்கிடுவான்.

 

ஆக துணிவு, வீரம் என்பன போற்றப்படும் பண்புகள். போரில் இறந்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்று பகவத் கீதையும் புறநானூறும் பகரும். (முன்னொரு கட்டுரையில் இது பற்றி விரிவாக கொடுத்துள்ளேன்)

 

சுவையான கதை

 

தைர்யத்தின் மதிப்பை விளக்க ஒரு சுவையான கதை உளது.

 

போஜராஜன் அரசாட்சியில் எட்டு லட்சுமிகளின் அருள் இருந்ததால் பயமோ, பஞ்சமோ இன்றி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் போஜன் ஒரு தவறு செய்துவிட்டதால் எட்டு லெட்சுமி களுக்கும் கோபம் வந்துவிட்டது.

 

போஜ ராஜனே! உன் பிழை கண்டு வருந்துகிறோம்; நாங்கள் போய் வருகிறோம் என்று தன, தான்ய, தைர்ய, வீர, விஜய, வித்யா, கஜ, சந்தான லெட்சுமிகள் அறிவித்தனர்.

 

போஜனோ

“சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே — என்பது ஆன்றோர் வாக்கு ஆயிற்றே.

“எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்” – என்று சான்றோர் பாடுகின்றனரே. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று முறையிட்டான்.

 

உடனே எட்டு லெட்சுமிமார்களும் “ஒரு வரம் தந்தனம். எங்களில் ஒருவரை மட்டும் கொள்க” என்றனர்.

 

புத்தியுள்ள போஜன் சொன்னான்: எனக்குத் துணிவு இருந்தால் உலகத்தையே வென்றுவிடுவேன். ஆகையால் தைர்ய லெட்சுமி என்னிடம் இருக்கட்டும் என்றான்.

 

அவர்களும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று இயம்பினர்.

மறுநாள் காலையில் போஜ ராஜனுக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.

lakshmi parade

தைர்ய லெட்சுமி இருந்த இடத்தில் வீர, விஜய, வித்யா லெட்சுமிகள் நுழைந்தனர். எங்கே துணிவு இருக்கிறதோ அங்கே தான் நாங்கள் இருப்போம் என்றனர். அதையடுத்து தன, தான்ய, சந்தான, கஜ லெட்சுமிகளும் உள்ளே வந்தனர். எங்கே கல்வியும் (வித்யா) தைர்யமும், வெற்றியும், வீரமும் இருக்கிறதோ அங்கே தான் தன, தான்யம், பிள்ளைப்பேறு (சந்தானம்), கஜலெட்சுமி (அதிர்ஷ்டம்/ லாபம்) இருப்போம் என்று ஓதினர்.

 

போஜனுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர்களைப் போற்றித் துதிபாடினான்.

 

இன்று கல்வியிலோ, தொழிலிலோ, அரசாட்சியிலோ , அலுவலகத்திலோ, குடும்பப் பொறுப்பிலோ உள்ளோருக்கு இந்தக் கதை தரும் அறிவுரை ஆயிரம் புத்தகங்களிலும் காணக்கிடைக்காத அற்புத அறிவுரை ஆகும்.

 

பாரதி பாடுகிறான்:–

குடுகுடு  குடுகுடு  குடுகுடு  குடுகுடு

சாமி மார்க்கெல்லாம் தைரியம் வளருது

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது

எட்டு லச்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது

சொல்லடி சக்தி, மலையாள பகவதி

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

 

அஷ்ட லக்ஷ்மி நமோ நம:

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!!

 

 

 

 

5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்! (Post No.3058)

adi 18 food

Written by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3058

Time uploaded in London :– 18-29

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

boli

உணவில் சைவ உணவு, அசைவ உணவு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

குஜராத்தி உணவு, வங்காளி உணவு, தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளால் உணவு கேள்விப்பட்டது இல்லை அல்லவா?

 

ஆனால் ஏதோ காரணத்தால் சம்ஸ்கிருத அறிஞர்கள் உணவை ஐந்து வகையாகவும், தமிழ் அறிஞர்கள் உண்வை ருசியின் அடிப்படையில் ஆறு வகையாகவும் பிரித்து இருக்கின்றனர்..

நளன், பீமன் போன்ற புகழ் பெற்ற புராண, இதிஹாச சமையல் நிபுணர்கள் “பஞ்ச பக்ஷ பரமான்னம்” படைத்ததாகப் படிக்கிறோம்.

 

பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவோர் , அடடா! பஞ்சபக்ஷ பரமான்னம் கிடைத்தது என்பர். அவர்களே தமிழ் உணவு சாப்பிடும்போது அடடா! அறுசுவை உணவு என்பர்.

 

அது என்ன பஞ்ச பக்ஷ பரமான்னம்?

fruits 2

பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று ஐந்து வகையாக பிரித்ததற்குக் காரணம் அந்த உணவும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டவே.

 

1.பக்ஷணம் என்ற சொல் நம் எல்லோருக்கும் தெரிந்ததே; இது நொறுக்குத் தீனி வகை; கருக்கு முறுக்கென்று சப் தம் போட்டுச் சாப்பிடும் திட உணவுப் பொருட்கள். எடுத்துக் காட்டு: முறுக்கு, காராச் சேவை, காராபூந்தி

 

2.போஜ்யம்: போஜனம் (Bois in French) என்ற சொல்லும் தமிழர்களுக்குத் தெரிந்த சொல்லே. என்ன போஜனம் ஆயிற்றா? என்றால் சாப்பிட்டாகிவிட்டதா? என்று பொருள். அதாவது சாதம், சாம்பார், குழம்பு முதலியன. பெரும்பாலும் திட வடிவில் வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி இருக்கும்.

 

 

3.லேஹ்யம்: இந்தச் சொல்லும் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொல்லே; சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் லேகியம் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கையில் வாங்கி நக்கிச் சுவைப்போம். ஆங்கிலச் சொல் LICK ‘லிக்’ (நக்கு) என்ற சொல்லும் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்த சொல்லே.

 

 

சோஷ்யம் என்ற வகை உணவுகள் உறிஞ்சிக் குடிக்க வேண்டிய பானங்கள். சக் SUCK (உறிஞ்சு) என்ற ஆங்கிலச் சொல் இதிருந்து பிறந்த சொல்லே. ரோஸ் மில்க் முதல் பட்டர்மில்க் (மோர்) வரை எல்லா பானங்களும் பாயசங்களும் இதில் அடக்கம்..

 

 

பேயம் என்பனவும் திரவ நிலையிலுள்ள உணவு வகைகளே. ஆனால் இவைகளை உறிஞ்சத் தேவை இல்லை. அன்னாந்து அப்படியே குடிக்கலாம். பால், தண்ணீர், நீர்மோர் போன்றவை.

 

கம்ப ராமாயண காலத்திலேயே ஸ்ட் ரா STRAW இருந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். இலைகளின் காம்பிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு அவைகளை ஸ் ட் ரா போல தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கம்பன் தரும் தகவல்!

 jilebi, jangri

அறு சுவை உண்டி

பொருள்கள் திட நிலையில் இருக்கிறதா, திரவ நிலையில் இருக்கிறதா என்ற அடிப்படையில் சம்ஸ்கிருத வல்லுநர்கள் பிரித்தனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் சுவையின் அடிப்படையில் உணவு வகைகளை ஆறு பிரிவுகளாகப் பயன்படுத்தினர்.

 

அறு சுவை யாவை?

தித்திப்பு= இனிப்பு (சர்க்கரை, வெல்லம், கரும்பு, பழச்சுவை)

கைப்பு= கசப்பு ( பாகற்காய், வேப்பிலை)

புளிப்பு= புளியங்காய், மாங்காய், எலுமிச்சை

உவர்ப்பு= உப்புச் சுவை (உப்பு)

துவர்ப்பு= பாக்கு முதலியன தரும் ருசி

கார்ப்பு= காரம், உறைப்பு (மிளகாய், மிளகு)

 

தமிழர்கள் இதை 1200 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியமைக்கு நாலடியாரில் சான்றுளது.

 

அறுசுவையுண்டி யமர்ந்தில்லாளூட்ட

மறுசிகை நீக்கியுண்டாரும் — வறிஞராய்ச்

சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்

றுண்டாக வைக்கற்பாற்றன்று

(நாலடியார் பாடல் 1)

fruit salad

அறு சுவை உண்டி = ஆறு சுவையுடைய உணவை

இல்லாள் அமர்ந்து ஊட்ட = பெண்சாதி அன்புடன் பரிமாற

மறு சிகை நீக்கி = மற்றொரு கவளத்தை  வேண்டா ம் என்று தள்ளி

உண்டாரும் = உண்ட செல்வர்களும்

வறிஞராய் = வறுமையுற்று

ஓர் இடத்துச் சென்று =  வேறு ஒரு இடத்துக்குப் போய்

கூழ் இரப்பர் எனில் = கூழை பிச்சையாக கேட்பார்களானால்

செல்வம் ஒன்று = செல்வம் என்கிற ஒரு பொருள்

உண்டு ஆக = நிலையாக இருப்பதாக

வைக்கல் பாற்று அன்று = வைக்க வேண்டாம் (நினைக்க வேண்டாம்)

 

செல்வம் நிலையாமை தலைப்பில் வரும் பாடல் இது.

 

ஆக 5 உணவு, ஆறு உணவு — எதைச் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.

 

கண்ணனோவெனில் பகவத் கீதையில் உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கிறார். சத்துவ குணம், ராஜச குணம், தமோ குணம் கொடுக்கும் உணவு எவையென்று செப்பியதை முன்னரே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

 

–subham–

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057)

sheridan novel

Compiled by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3057

Time uploaded in London :– 11-55 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐரிஷ் கவிஞர்,  நாடக ஆசிரியர்,  அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:–

 

ஒரு முறை ஷெரிடன் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டார். ஒரு பெண்மணி அவருடன் உலாப் போக வேண்டும் (வாக்கிங்) என்று நச்சரித்தார். என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்தார் ஷெரிடன்.

 

“அம்மையாரே! வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எந்த நேரமும் மழை கொட்டலாம்”  என்றார் ஷெரிடன்.

 

அந்தப் பெண்மணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது ஷெரிடன் பின்புறக் கதவு வழியாக நழுவினார்.

 

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்ததப் பெண்மணி ஓடோடி வந்தார்.

 

“மிஸ்டர் (ஷெரிடன்), வானம் வெளிறிவிட்டது போல இருக்கிறதே” என்றார் அந்த மாது.

 

நீங்கள் என்னுடன் வரக்கூடாது என்று சொல்ல விரும்பாத ஷெரிடன், மறைமுகமாக அதைச் சொன்னார்:

“ஆமாம், ஆமாம், வானம் தெளிந்துவிட்டது. ஆனால் ஒருவர் செல்லும் அளவுக்குதான்!”

 

–என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தார்.

xxxx

தாமஸ் கில்லிக்ரூ கொடுத்த சூடான பதில்

jeses thieves

கில்லிக்ரூ இங்கிலாந்தின் இரண்டாவது சார்லஸ் மன்னரின் அரசவையில் இருந்த நாடக ஆசிரியர்,  நகைச்சுவை மன்னன்.

 

ஒரு முறை பாரிஸில் பிரெஞ்சு மன்னன் 14ஆவது லூயியை பார்க்கச் சென்றார். அவர் அரண்மனையைச்  சுற்றிக் காண்பித்தார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட   ஒரு படத்தைக் காட்டினார். இதோ பாருங்கள் அதற்கு வலது புறம் இருக்கும் படம் போப்பாண்டவருடையது. இட து புறம் இருக்கும் படம் என்னுடையது என்று பெருமையாக சொன்னார்.

 

உடனே தமாஷ் பேர்வழியான கில்லிக்ரூ சொன்னார்:

அட! ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது அவர் கூடவே இரு புறமும் இரண்டு திருடர்களையும்  சிலுவையில் அடித்ததாகப் படித்திருக்கி றேன். இப்போதுதான் தெரிகிறது யார் அந்தத் திருடர்கள் என்று!

220px-Disraeli

டிஸ்ரேலியின் சூடான பதில்

 

டிஸ்ரேலி என்பவர் பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராகப்  பதவி வகித்தவர்.

 

அவருடைய அரசியல் எதிரி கிளாட்ஸ்டோன்.

 

ஒருமுறை “துரதிருஷ்டம்” என்ற சொல்லுக்கும் “பேராபத்து” என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

 

நான் உடனே சொல்கிறேன்; நன்றாகக் கேளுங்கள்:

 

கிளாட்ஸ்டோன், தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது துரதிருஷ்டம்.

அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அது “பேராபத்து!” — என்றார் டிஸ்ரேலி

 

–Subham–

 

வால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்! சூடான பதில்கள் (Post No.3054)

VOLTAIRE

Compiled by london swaminathan

Date: 12th    August 2016

Post No. 3054

Time uploaded in London :– 10-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வால்டேர் 1694 ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரெஞ்சு தத்துவ அறின்ஞர், எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர். அவர் லண்டனுக்கு வந்தபோது நடந்த நிகழ்ச்சி!

 

பிரன்சுக்கும் இஙிலாந்துக்கும் இடையே எப்போதும் போட்டி, பொறாமை, போர்கள் இருக்கும். இன்றும் கூட பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது!

 

1727 ஆம் ஆண்டு! ஒரு நாள் !

வால்டேர் லண்டன் தெருக்களில் நடந்து கொண்டிருந்தார்.

 

அவர் பிரெஞ்சுக்காரர் என்று தெரிந்தவுடன் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.

 

“டேய்,  எல்லாரும் வாங்கடா,  இதோ இருக்கான் பிரெஞ்சுக்காரன், அடித்து நொறுக்குங்கடா, அவனை தூக்கில் தொங்கவிடுவோம்” என்றெல்லாம் கூட்டம் கொக்கரித்தது.

 

வால்டேர் அஞ்சாத சிங்கம்; புத்தி வேலை செய்தது.

“நான் பிரெஞ்சுக்காரந்தான்!. ஆனால் ஆங்கிலேயனாகப் பிறக்காததே பெரும் தண்டனை ஆயிற்றே; இதற்குப் பின்னரும் எனக்குத் தண்டனை தேவையா?

 

இதைக்கேட்டவுடன் கூட்டத்தினருக்கு பரம சந்தோஷம்! அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தனர்.

 

Xxxx

டேனியல் வெப்ஸ்டர்

Danielwebsterbirthplace

டேனியல் வெப்ஸ்டர் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி. செனட் முதலிய சபைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

சின்னப் பையனாக இருந்தபோது அழுக்குச் சட்டை, அழுக்கான கை,கால்களுடன் பள்ளிக்கு வருவார். அவனது வகுப்பு ஆசிரியைக்கு அந்த அசிங்கத்தைப் பார்க்கப்  பிடிக்கவில்லை.

ஒருநாள் அவனைப் பார்த்து சத்தம் போட்டார்:

 

“இன்னொரு முறை, அழுக்குக் கைகளுடன் வகுப்புக்கு வந்தால், உன்னை அடித்து நொறுக்கி விடுவேன் – என்றார்.

 

அவனோ விஷமக்கார சுட்டிப் பையன். கொஞ்சமும் மாறவில்லை. அதே அழுக்குச் சட்டை, அழுக்கு கைகள்!

 

ஆசிரியைக்கு மஹா கோபம்:-

 

“டேய் நாயே! உனக்கு எத்தனை முறை சொல்லவேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. கையை நீட்டு, இந்தா அடி! என்று கம்பை ஓங்கினார்.

 

அவன் அந்தக் கையில் ‘தூ’ என்று துப்பிவிட்டு எச்சிலால் டிரவுசரில் துடைத்துக்கொண்டு கையை நீட்டினான்.

 

“சீ நாயே! இதைவிட இந்தப் பள்ளிக்   கூடத்தில் வேறு எங்காவது இதைவிட அசிங்கமான கை இருந்தால் எனக்குக் காட்டு “– என்று சொல்லி தடியை ஓங்கினார்.

வெப்ஸ்டரா சளைப்பான்?

 

அடுத்த கையை நீட்டினான்! அது முந்தைய கையை விட அசிங்கமாக இருந்தது என்பதை சொல்லவும் வெண்டுமா?

 

டீச்சருக்கு அடிப்பதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

 

DanielWebster

Xxx SUBHAM xxx

 

 

 

 

மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)

Abraham-Lincoln

Translated by london swaminathan

Date: 11th    August 2016

Post No. 3051

Time uploaded in London :– 6-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சில தலைவர்கள் கொடுக்கும் சூடான பதில்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. இந்தியப் பிரதமர், ஒரு காலத்தில் டீக்கடை வைத்தது பற்றி பலர் கிண்டல் செய்தவுடன், பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், எல்லா இடங்களிலும் இலவச தேநீர் கடை வைத்து தேநீர் வழங்கியதை நாம் அறிவோம்

 

 

இதுபோல அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர் ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறியவர்.

 

ஒருமுறை, வாழ்க்கையின் உயர்மட்டத்திலுள்ள பிரமுகர் டக்ளஸ் என்பவர் பொது இடங்களில்   லிங்கனை விமர்சித்து வந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் டக்ளஸ் சொன்னார்:-

 

“நான் லிங்கனை முதலில் சந்தித்ததே ஒரு கடைப் பையனாக வேலை பார்த்தபோதுதான். அவன்  விற்காத பொருள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?  அவன் மதுபானக் கடையில் எடுபிடியாகவும் இருந்தான்!”

 

இப்படி டக்ளஸ் பேசி முடிந்தவுடன் ஒரே கரகோசம்!

 

லிங்கனா சளைப்பார்? அவர் சொன்னார்:’

 

“மாண்புமிகு டக்ளஸ் சொன்னது எல்லாம் உண்மை. எள்ளளவும் பிசகில்லை! நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்; பஞ்சு விற்றேன்; சுருட்டு விற்றேன்; மெழுகு வர்த்தி வியாபரமும் செய்தேன்; சில நேரங்களில் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விஸ்கியும் விற்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் டக்ளஸ், ‘கவுண்ட’-ருக்கு எதிர்ப் பகுதியில் நின்று என்னிடம் பொருள்களும் வாங்கியது உண்மையே; ஆனால் இப்பொழுது என்ன நிலை?

 

‘கவுண்ட’–ருக்கு அந்தப்புறம் நின்று பொருள்களை விற்ற நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். உங்களுக்கே தெரியும். ஆனால் மதுபானக் கடையில் என்னிடம் ‘கவுண்ட’’-ருக்கு எதிர்ப்புறத்தில் நின்று என்னிடம் விஸ்கி வாங்கிக் குடித்தாரே அவர் மட்டும் அந்தப் பகுதியை விட்டு இன்று வரை விலகவே இல்லை! அது மட்டுமல்ல, அதிபயங்கர விசுவாசத்தோடு அக்கடையை விட்டு அகலுவதே இல்லை என்றார்.

 

பொதுக்கூட்ட மண்டபத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு கரவொலி எழுந்தது!

 

Xxxx

m twain

மார்க் ட்வைனின் சூடான பதில்!

(சாமுவேல் லாங்ஹார்ன் க்ளெமென்ஸ் என்பவரின் புனைப் பெயர் மார்க் ட்வைன். சிறந்த அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர், நாவலாசிரியர், நகைச் சுவைப் பேச்சாளர்)

 

ஒருநாள் அவரும் வில்லியம் டீன் ஹவல்ஸ் என்ற பிரமுகரும், சர்ச்சிலிருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கன மழை கொட்டியது.

 

ஹவல்ஸ்: “ சாமுவேல் இந்த மழை நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

சாமுவேல் (மார்க் ட்வைன்):- எனக்குத் தெரிந்தவரை மழை, எப்போது பெய்யத் துவங்கினாலும் நின்று போய் இருக்கிறது!

–என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

 

மழையில் சொன்னாலும், இ துவும் சூடான பதில்தான்!

 

–subham–

 

 

புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON (Post No.3037)

IMG_0225

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3037

Time uploaded in London :– 9-47 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் ரோம், நியுயார்க், ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களுக்குச் சென்று வந்த பிறகு புதுப் புது யோஜனைகளை எழுதி இந்தியர்களும் இப்படிச் செய்யலாமே என்று எழுதினேன். இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் MAGNETS ஒரு மெஷினையும் பாருங்கள். மேலை நாடுகளில் எந்த ஊருக்குப் போனாலும் பிரிட்J FRIDGE மேல் பொருத்த மாக்னெட் கிடைக்கும். அதில் படமோ மேற்கோளோ பொன்மொழியோ இருக்கும். இது போல நாமும் பாரதி, கம்பன், ராகவேந்திரர், தியாகராஜர் பொன்மொழி ளை காந்த வில்லைகளாக விற்கலாம். எல்லா இடங்களிலும் அதுவது அல்லது அவரவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், படங்கள் விற்கப்படுகின்றன.

 

IMG_4711

படத்தில் காட்டிய மிஷினில் ஒரு பென்னி அல்லது இண்டு பென்ஸ் காசுகளை நுழைத்தால் SHAKESPEARE படத்துடன் அது வெளியே வரும். இது போல நாமும் ஒரு காசை நுழைத்தால் கம்பன், பாரதி படம் அல்லது பொன் மொழியோடு வரச் செய்யலாம்.

 

IMG_4709

 

IMG_4502

இது போல நாமும் நம் கவிஞர்களின் படைப்புகள் பற்றி சுருக்கமாக போர்ட் அல்லது போஸ்டர் வைக்கலாம்

இது போல அந்தக் கால உடைகளில் நாமும் கவிஞர்கள், சரித்திர நாயகர்கள், ராஜா-ராணிகளின் கதைகளை அவரவர் பிறந்த இடத்தில் நடித்துக் காட்டலாம். இவர்கள் இருவரும் 37  நாடகங்களிலிருந்து முக்கிய கட்டங்களை நடித்துக் காட்டுவர்.

 

IMG_4577

 

Shakespeare’s Birth Place at Stratford upon Avon- two hours’ drive from London: Every time I go to a country or a place, I write about new ideas for Indians to follow (Please see my ideas from New York, Stockholm and Rome).

 

Why dont we sell the quotations of Kamban, Bharatiyar and others on magnets so that we fix them on the Fridges. We always buy fridge magnets whenever we go to a country or a city. Look at the Shakespeare quotations here. And see the machine: if you insert one penny or two pence coin you will get a picture embedded on it. We can also do such things at the birth places of Ragavendra, Bharathy, Kamban, Thyagaraja etc.

மண்டை ஓடு போல காப்பிக் கோப்பைகள்

IMG_4716

பானை உடைத்தவன் பாக்கியசாலி! (Post No.3018)

-font-b-Ceramics-b.jpg

Translated  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  8-16 AM

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

எழுத்துத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்:–

பிறருடைய கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முதலியவற்றை மீண்டும் பயன்படுத்துகையில் எழுதியோருடைய பெயர்கள், வெளியிட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பகிருங்கள்; எழுத்தைத் திருடினால் உங்கள் மனைவி, மகள்கள், சொத்து, சுகம் இவைகளை வேறு ஒருவன்  திருடிவிடுவான் என்பதை அறியீரோ!

xxx

vase large_1027_2083145b

பீங்கான் தட்டுகள், குடங்கள்,பூக்கள் வைக்கும் ஜாடிகள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள். அவனுக்கோ கை நடுக்கம்.

 

நல்ல பூ வைக்கும் ஜாடியை உடைத்துவிட்டான்.

முதலாளி விரைந்தோடி வந்தார்.

 

இதோ பார், இதற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உனக்கு வேலை.

 

இதன் விலை என்ன?

முதலாளி: 300 டாலர். அவ்வளவு பணம் உன்னிடம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆகவே வாரா வாரம் உனது சம்பளத்தில் ஒரு டாலர் கழித்து வருவேன்.

ரொம்ப நல்லது, முதலாளி! எனக்கு 300 வாரங்களுக்கு வேலை இருக்கிறதே! அதுவே போதும்!!

 

.////

சந்தேகப் பங்காளிகள்!

 

இரண்டு பேர் கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்தி வந்தனர். இருவரும் விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சென்றனர். கடலில் நீந்தக் குதிக்கும்போது ஒரு பார்ட்னர் சொன்னார்:-

 

அடக் கடவுளே? கடையின் கதவைப் பூட்டினேன். ஆனால் பணப் பெட்டியைப் பூட்ட மறந்து விட்டேன்!

 

மற்றொரு பங்காளி: அதனால் என்ன?

 

ஆமாம், ஆமாம், அதனால் ஒன்றுமில்லை! நீதான் என்னுடன் இருக்கிறாயே!!

 

////

confident-businessm

தன்னம்பிக்கை வாழ்க!

 

உலக வணிக கண்காட்சிக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பொறு ப்பான குரோவர் வேலனைச் சந்திப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருந்தது. அவரைக் காண பலரும் காத்திருந்தனர்.

 

ஒருவருக்கு வேலை இல்லை. அவரைச் சந்தித்து வேலை வாங்க துடியாய்த் துடித்தார். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

 

ரிசப்ஷன் (RECEPTION) பெண்மணியிடம் குரோவர் வேலன் அலுவலக அறை எது? என்று கேட்டார்.

 

ரிஷப்ஷன் பெண்:- அவர் மிகவும் (BUSY) ‘பிஸி; இப்பொழுது நீங்கள் அவரைச் சந்திக்க முடியாது.

 

அவர் விறு விறு என்று அந்த அறையை நோக்கி நடந்தார்.

 

பெண்: – அன்பரே! அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொன்னேனே! காதில் விழவில்லையா?

 

ஏ, பெண்ணே! நான் காலையிலும் மாலையிலும் கடவுளுடனேயே இரு முறை பேசுகிறேன். உங்கள் முதலாளியுடன் பேச முடியாதா? என்று சொல்லிக் கொண்டே குரோவரின் அறைக்குள் நுழந்தார்.

அவருக்கு வேலை கிடைத்துவிட்டது!

 

தன்னம்பிக்கை வாழ்க!

 

////

whistling

பாடினாலும் வேலை!

 

எட்வார்ட் ஹாரிமேன் என்பவர் பெரிய ரயில்வே கம்பெனியின் அதிபர். அவரிடம் பல அதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்..

ஒரு நாள் அவர் திடீரென அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்.

ஒரு அதிகாரி மேஜையின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு ஜாலியாக ‘விசில்’ அடித்து பாடிக்கொண்டிருந்தார்.

 

முதலாளியைப் பார்த்தவுடன் தூக்கிவாரி போட்டது.

உடனே நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

 

சரி! நம்முடைய ‘சீட்டு’ இன்று கிழிந்தது– வீட்டுக்கு அனுப்பிவிடுவார் முதலாளி என்று நடுங்கினார்.

 

முதலாளி சொன்னார்: அட! இவ்வளவு கடுமையான வேலையிலும் உனக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கிறதே.

வெரி குட் (ரொம்ப நல்லது)

/////

 

ஏமாற்றியவருக்கு இரட்டைச் சம்பளம்!!

 

ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் பெரிய பத்திரிக்கை முதலாளி. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுபவர். யாரும் மதுபானம் குடித்துவிட்டு அலுவலத்துக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.

 

ஒரு பத்திரிகை அலுவலக ஊழியர்,  ‘ஓஸி’யில் கிடைத்த மதுபானத்தை  நன்றாக மாந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்தார். முதலாளி எங்கே இந்த அறைக்குள் வரப்போகிறார் என்று எண்ணி இருந்தார்.

 

அவரது “அதிர்ஷ்டம்” பென்னெட் உள்ளே நுழைந்தார். உடனே இந்த குடிகார பத்திரிக்கை ஊழியர் கொஞ்சம் பிரிண்டிங் இங்க் — மையை முகத்தில் பூசிக் கொண்டார்.

 

பென்னெட், அவரை, ஒரு பார்வை பார்த்தார். போர்மன் (FOREMAN), யார் இந்த ஆள்?

 

உடனே அவர் அவர் பெயரைச் சொன்னார்.

Ink-face-black-eyes-Ilaria-Berenice

முதலாளி: கடுமையாக உழைப்பவர் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது. இன்று முதல் அவருக்கு இரட்டைச் சம்பளம் கொடுங்கள்!

 

–SUBHAM—

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)

 

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–