
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 25 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-43 am
Post No. 6931
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

தமிழர்கள் ‘ஜோக்’ அடிப்பதில் சளைத்தவர்கள் இல்லை; உ.வே.சா. மற்றும் ராகவ அய்யங்கார் ஜோக்குகளைப் படிப்பதற்கு முன்னர் எனது சேதுபதி பள்ளி ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன் சொன்ன ஜோக்குகளை மீண்டும் எழுதுகிறேன்.
இரண்டு நண்பர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நண்பர் அவர்களை சமாதானப் படுத்துவதற்காக நல்லெண்ணத்தில் தலையிட்டார்.
சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு நண்பர்களும் சொன்னார்கள்:
ஏய் , நீ இதில் தலையிடாதே; எங்களுக்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்; நீ தள்ளிப் போ.
மூன்றாம் நண்பர் சொன்னார்:
ஏய், சரிதான் பா; ஆளுக்கு 500 எடுத்துக்குங்க; சண்டை போடாதீங்கன்னு சொல்லத்தான் நானும் வந்தேன்; என்ன, கமிஷன் கேக்கவா வந்தேன்?
Xxx
மகன் சொன்னான்:
அப்பா, இது என்னப்பா?
சாப்பா,
டுப்போ,
டப்ப,
டும்!
என்று எழுதியிருக்கே.
அப்பா சொன்னார்:
தமிழ் தெரியாதவர்கள் தப்பிதமாகப் பிரித்து எழுதிவிட்டார்கள்-
சாப்பாடு போடப்படும் — என்று ஹோட்டல்காரர், வெளி நாட்டு டூரிஸ்டுகளுக்காக எழுதி வைத்துள்ளார்.
Xxx
மதுரையில் ஒரு சிறுமி கடைக்கார செட்டியாரிடம்,
அம்மா
சுக்குமி.
ளகுதி,
இப்பிலி
வாங்கிட்டு வரச் சொல்லிச்சு– என்றாள்.
கடைக்காரர செட்டியார் அப்பெண்ணின் கை யில் இருந்த சிட்டியைப் பார்த்து சுக்கு, மிளகு, திப்பிலியைக் கையில் கொடுத்து அனுப்பினார்.
xxx


xxx


–subham–



































