247 தமிழ் எழுத்துக்கள் வேண்டாமே!

தமிழ் வாழ்க ! தமிழ் (எழுத்து) ஒழிக!!

ஆண்டுதோறும் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பில் முதல் நாள்தான் எனக்கு மிகவும் கஷ்டமான நாள். முதல் ஒரு மணி நேரத்தில் தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் ‘இந்திரனே சந்திரனே’ என்று புகழ்வேன். தொல்காப்பியத்தில் துவங்கி இட்லி, சாம்பார், வடை, மசாலா தோசை முதலியவற்றை விளக்கிவிட்டு நகைப்புக்குரிய திராவிட கட்சிகள் பிளவுபட்டதையும் தமிழ் அரசியல் சினிமா அடிப்படையுடையது என்பதையும் சொல்லிவிட்டு, தமிழர்கள் சினிமா இல்லாமல் வாழமுடியாது என்ற பொன் மொழிகளை உதிர்த்துவிட்டு ஒரு ‘காப்பி பிரேக்’ கொடுத்து விடுவேன். சுவையான விஷயங்களை கேட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு திரும்பியவுடன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவேன்.

“ ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் இருப்பது உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியும். தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று தெரியுமா?” என்று கேட்பேன். பெரும்பாலும் அமைதியே நிலவும். ஏனெனில் படிக்க வருவோரில் ஒரு இத்தாலியர், ஒரு பிரெஞ்சு,, ஒரு ஜப்பானியர், அதிகமாக பிரிட்டனில் பிறந்த இந்திய-இலங்கைத் தமிழர்கள், அவர்களை மணந்துகொண்ட நார்வே, கனடா, சுவீடன் நாட்டினர் என்று ஒரே அவியல்தான்.

நான் சொல்கிறேன். தமிழில் 247 எழுத்துக்கள் என்றவுடன் வகுப்பில் பெருமூச்சு விடும் இரைச்சல் கேட்கும். பின்னர் ஒருவரை ஒருவர் புருவத்தை உயர்த்தியவாறே முறைத்துப் பார்ப்பார்கள். ஒரு நிமிடம் ‘பாஸ்’ கொடுத்துவிட்டு ஒரு ‘குட் நியூஸ்’ சொல்கிறேன். 12 உயிர் எழுத்துக்களையும் 18 மெய் எழுத்துக்களையும் படித்துப் புரிந்து கொண்டால் போதும் மற்ற 216 (18×12=216) எழுத்துக்கள் தானாக வந்து விடும் என்பேன். அப்போதும் அவர்கள் முகத்தில் ஏமாற்றமே தேங்கி நிற்கும். இன்னொரு ‘குட் நியூஸ்’ சொல்லட்டுமா? என்று சொல்லிக் கொண்டே மதுரை புதுமண்டபம் புத்தகக் கடைகளில் இருந்து வாங்கிவந்த பெரிய ‘போஸ்டர்’களைப் பிரித்து சுவற்றில் ஒட்டி இவைதான் 247 தமிழ் எழுத்துக்கள் என்று அறிமுகப் படுத்துவேன். பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் தெய்வத்தின் முதல் தரிசனம் அதுதான். கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையுடன் பயபக்தியுடன் எழுத நோட்டுப் புத்தகங்களைத் திறப்பார்கள். இதற்குள் வேறு ஒரு போஸ்டரைத் திறந்து “ இதில் இவை எல்லாம் உதவாக்கரை எழுத்துக்கள். இன்று பயன்படாதவை. அதில் ஒன்று ஆயுத எழுத்து” என்றெல்லாம் விளக்குவேன்.

தமிழில் வேண்டாத எழுத்துக்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய அரிச்சுவடி செய்தால் என்ன? என்று தோன்றவே தமிழ் எழுத்துக்கள் ஒழிக என்று தலைப்பிட்டேன்.

தமிழர்கள் ‘டியூப் லைட்’டுகள்! எந்தக் கருத்தைச் சொன்னாலும் முதலில் ஏற்கமாட்டார்கள். காரணம், புரிவதற்கு கொஞ்சம் தாமதமாகும். எங்களைப் போன்று வெளி நாட்டு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால்தான் இந்த விசயம் நன்கு புரியும் ‘ங’ வர்க்கம் ‘ஞ’ வர்கம் ‘ஔ’ வர்கம் ‘ ஃ ’ இவை இல்லாமல் தமிழால் வாழ முடியும். பல எழுத்துகளை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் அரிச்சுவடியில் இன்னும் இருக்கின்றன!!!!!

‘யுனிகோட்’ வந்த பின்னர்,  முன்னால் இருந்த பல எழுத்துக்கள் போய்விட்டன. பழைய கால குமுதம் ஆனந்த விகடன், கல்கி படிப்பவர்கள் “லை” முதலிய எழுத்துகள் வேறு விதமாக இருப்பதை அறிவார்கள். நானே கூட அவசரத்தில் போர்டில் அப்படி எழுதிவிடுவேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பது சரிதான். யாராவது ஒருவர் கேள்வி கேட்ட பின்னர் அது பழைய ‘ஆர்த்தோக்ராபி’ பற்றி விளக்குவேன்.

 

நீங்களும் யோசியுங்கள். கீழேயுள்ள எழுத்துக்கள் தேவையா?

ங வரிசை, ஞ வரிசை, ஔ வரிசையை எடுத்தால் சுமார் 40 எழுத்துக்களைக் குறைக்கலாம். மேலும் சிறிது முயற்சி செய்தால் எதிர்காலத்தில் இன்னும் குறைக்க முடியும்.

 

நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரைகளையும் படியுங்கள் :–

1.தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுக 2.தமிழ் ஒரு கடல் 3.தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா? 4.மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? உண்மையா 5. தொல்காப்பியம் காலம் தவறு- பகுதி 1,2,3,4,5 (6) தமிழர்களின் தழை உடை 1 & 2 (7) Ghost that killed 72 Tamil people 8). Three beautiful Tamil Hindu Weddings 9).இசைத் தமிழ் அதிசயங்கள் 10)தமிழ்நாட்டை உலுக்கிய பேய் 11) வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 12) வீரத்தாயும் வீர மாதாவும் 13) சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 14) தமிழர்கள் கணித மேதைகள் 15) Tamil saint’s Mad Experiment 17) Hundred Wonders of Tamil Nadu 18) Time Travel by Two Tamil Saints 19) Tamil Quiz பகுதிகள் 1, 2, 3. 20) First Tamil Historian 21) வரலாறு எழுதிய முதல் தமிழன் 22) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 23) முதல் திராவிட ராணீ 24) கலித்தொகையில் ஒரு அதிசய செய்தி 25) புறநானூற்றில் காமாட்சி 26) புறநானூற்றில் பகவத் கீதை—பகுதி 1&2 27) சுமார் 20 தமிழ் அறிஞர்களுடன் 60 வினாடி பேட்டிகள் (எ.கா) பாரதியுடன்… கம்பனுடன்…. வள்ளுவனுடன்……. 28) குறுந்தொகையில் இருதலைக் குழந்தை 29) 20,000 தமிழ் பழமொழிகள் 30)சங்க இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள் 31)தமிழர்களின் எண் ஜோதிடம் 32)அதிசய பறவைத் தமிழன் 33)Mysterious Tamil Bird Man 34) 3 Tamil Sangams: Myth and Reality 35) வரலாறு எழுதிய முதல் தமிழன் 36)தமிழன் காதுல பூ 37)Tolkappiyan –A genious 38) தமிழர்களுக்கு தாலி உண்டு

studytamil.wordpress.com

Free YouTube Videos!

The link to my YouTube channel is below.

http://www.youtube.com/user/swaminathansantanam

 

மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

சம்ஸ்கிருதச் செல்வம்- 8

 

மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

By ச.நாகராஜன்

 

சுய முன்னேற்றம் என்னும் SELF IMPROVEMENT நூல்களில் ‘HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE’ என்ற டேல் கார்னீகி நூலில் ஆரம்பித்து இன்று ஆயிரக்கணக்கான “ஹௌ டு” நூல்கள் வந்து விட்டன. ஆனால் நம் முன்னோர்கள் சின்னச் சின்ன பாடல்களில் சுய முன்னேற்ற வழிகளைச் சுலபமாக நினைவில் இருக்கும்படி பாடலாகப் பாடி விட்டார்கள்.

 

யாருடன் சேரக் கூடாது. மூர்க்கரோடு அதாவது முட்டாள்களுடன். இவர்களை நம் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விட்டாலே ஐம்பது சதவிகிதம் வெற்றி நிச்சயம்!

அவர்களை எப்படி இனம் காண்பது?

கவிஞர் வழி காட்டுகிறார்:-

 

கர்வம் (PRIDE), துர்வசனம் (NASTY WORDS), விரோதம் (ENEMITY), தேவையற்ற அதிகப் பேச்சு (TOO MUCH TALK), கடமையைச் செய்ய மறுப்பது (REFUSAL TO DO THE DUTY), செய்யும் செயல்களில் அலட்சியம் (CARELESSNESS IN ACTIONS) இந்த ஆறு குணங்களும் எவரிடம் இருக்கின்றனவோ அவர்கள் மூர்க்கர்கள். அவர்களுடன் சேர வேண்டாம் என்பது கவிஞரின் அறிவுரை. பாடலைப் பார்ப்போம்.

 

மூர்க்கம் சின்ஹானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே I

விரோதி தீர்க்கவாதி க்ருத்யாக்ருத்யம் ந மன்யதே II

 

மூர்க்கருக்கான சின்னங்கள் ஆறு. கர்வம், கெட்ட வார்த்தைகள், பகைமை, தீர்க்கவாதம் என்னும் அதிகப்பேச்சு, கடமையைச் செய்யாமை, செய்யும் செயல்களில் அக்கறையின்மை (இவையே மூர்க்கருக்கான அடையாளங்கள்!)

 

மூர்க்கனிடம் தர்ம பிரஸங்கம் ஏன்?

—————————————————————  

இன்னொரு கவிஞர் இவர்களுடன் பேசி அறிவுரை சொல்வது வீண் அல்லவா என்று எச்சரிக்கிறார் நளினமாக!

 

முக்தாபலை: கிம் ம்ருகபக்ஷிணாம் ச

   மிஷ்டான்னபானம் கிமு கர்தபானாம் I

அந்தஸ்ய தீபோ பதிரஸ்ய கானம்

   மூர்கஸ்ய கிம் தர்மகதா ப்ரஸங்கை: II

 

ம்ருகபக்ஷிணாம் – மிருகங்களுக்கும் பறவைகளுக்கும்

முக்தாபலை: கிம் – முத்துக்களினால் என்ன பயன்!

மிஷ்டான்னபானம் – (அற்புதமான) அறுசுவை உணவும்,   பானங்களும்

கிமு கர்தபானாம் – கழுதைக்கு என்ன பயன்?

(கர்த்தபம் – கழுதை)

அந்தஸ்ய தீபோ – அந்தகனுக்கு தீபத்தால் என்ன பயன்?

பதிரஸ்ய  கானம் –அருமையான கானம் செவிடனுக்கு

என்ன பயன்? மூர்கஸ்ய  கிம் தர்மகதா ப்ரஸங்கை –முட்டாளுக்கு தர்ம கதையை பிரசங்கம் செய்து என்ன பிரயோஜனம்?

 

தர்மோபதேசத்தால் அவன் திருந்தவும் போவதில்லை; நமது நேரமும் வீண் தான் என்று சுட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

‘ஆத்திசூடி’யில் அவ்வையாரும் ‘மூர்க்கரோடு இணங்கேல்’ என்று சுருக்கமாகக் கூறி விட்டார்.

 

அதிவீர்ராம பாண்டியரோ ‘வெற்றி வேற்கை’யில்,

 

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்க்குள் பாசி போல் வேர்க் கொள்ளாதே

என்று அழகுறச் சொல்லி விட்டார்.

நீர்க்குள் பாசி போல வேர் கொள்ளாத நட்பு எதற்காக?

உலகநாத பண்டிதரோ தனது ‘உலக நீதி’யில்

 

“நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம்

   நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்”  என்றும்

“சேராத இடம்தனிலே சேர வேண்டாம்”     என்றும்

“துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்றும்

எச்சரித்து அறிவுரை பகர்கிறார்.

 

மூர்க்கரை இனம் கண்டு அவர்களை ஒதுக்கி முன்னேறுவதே வெற்றி பெறும் வழியாகும்!

***********

 

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

 

உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

முதல் முதலில் ஒரு விண்கலத்தில் இந்தப் பூமியை வலம் வந்தவர் யார்? என்று கேட்டால் பலரும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் என்றே சொல்லுவார்கள். கலைக் களஞ்சியங்களும் அப்படியே சொல்லும். அது சரியல்ல. த்ரிலோக சஞ்சரியான நாரதர் கிரஹங்களுக்கிடையே பயணம் செய்ய வல்லவர். ஆயினும் பூமியை வலம் வந்ததாக தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் முருகப் பெருமான பூமியை வலம் வந்த குறிப்பை  அருணகிரிநாதர் எழுதிய திருவகுப்பில் தெளிவாகக் காணலாம். அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார். இதை கற்பனை என்று யாராவது கருதுவார்களானால் குறைந்தது இந்தக் கொள்கையை முதலில் சொன்ன பெருமையையாவது அவருக்குக் கொடுக்க வேண்டும்.

 

அருணகிரிநாதர் 500 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது உலகம் உருண்டை என்பது கூட மேலை நாட்டினருக்குத் தெரியாது. நாமோ வட மொழியிலும் தமிழிலும் பூகோளம் முதலிய சொற்கள் மூலம் துவக்க காலத்திலிருந்தே இதை உருண்டையானது என்று சொல்லிவருகிறோம்.

இதோ திருவகுப்பு பாடல்:

“ ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பொழுதில்

ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்

இலகு கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும்

இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்

இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற

எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்”  (திருவகுப்பு)

 

ஒரே நொடியில் உலகம் முழுதையும் சுற்றி வந்தார் முருகன். 1961  ஆம் ஆண்டில் ககாரின் ஒரு முறை பூமியை வலம் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று!!

Picture of Yuri Gagarin on Stamps

இசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்

ஐபாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் காதுகளில் இயர்போனை (ear phone) வைத்துக் கொண்டு இசை கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் காலத்தில் விமானத்தை ஓட்டும் பைலட்டுகள் இசைத்துறை இயக்குனர்கள் அல்லது டெலிபோன் துறையினர் பெரிய இயர் போன்களை காதுகளில் வைத்திருப்பதை பழைய திரைப்படங்களில் பார்த்தோம். இன்றோ இசைக் கருவி காதில் சொருகாத இளஞர்களே இல்லை.

சோனி நிறுவனத்தார் (Sony’s Walkman) வாக்மேன் கண்டுபிடித்த பின்னர் இப்படி எல்லோரும் இசைகருவியும் இயர் போனும் வாங்கினர். பின்னர் எம் பி 3 கருவிகள் ஐ-பாடுகள் வந்தன. உண்மையில் இந்தக் காதில் இசை கேட்கும் வழக்கத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சிவபெருமான் தான். சம்பந்தர் தேவாரத்தின் முதல் பாடலான ‘தோடுடைய செவியன்’ பாடல் உரையில் இச் செய்தி உள்ளது.

கிருபானந்தவாரியார் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்.:  அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். ஆனால் அவர்களுக்கு ரசிகர்களே இல்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்து சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவனோ வீணை வாசிப்பதிலும் சாம கானம் கேட்பதிலும் அதி சமர்த்தர்.  ஆகவே கந்தர்வர்கள் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க அவர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் எங்கள் இசையை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். சிவன் அதற்கு இசைந்தார். ஆனால் நடை முறையில் இவர்களோடு எப்போதும் இருக்க முடியாதே!

 

சிவனுக்கு ஒரு யோசனை உதித்தது. உங்கள் இருவரையும் தோடுகளாகச் செய்து காதில் அணிந்து கொள்கிறேன். பாடிக்கொண்டே இருங்கள் என்றார். அவர்களுக்கு எல்லை இலா மகிழ்ச்சி. இப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த எம் பி-3 பிளேயரையும் விட அதிக பேட்டரி அந்த தோடுகளில் இருக்கிறது. ஆண்டு முழுதும் சிவன் பாட்டுக் கேட்கிறார். இந்த ‘ஐடியா’தான் வாக் மேனாகவும் ஐ பாடாகவும் பிற்காலத்தில் பரிணமித்தது என்றால் பிழை ஏதும் இல்லையே!

 

உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி)  பேடண்ட் உரிமையும் கந்தனுக்கும் அவன் தந்தை முக் கண்ணனுக்குமே உரித்தானவை.

வாழ்க கந்தன்! வாழ்க சிவன்!

 

முந்தைய கட்டுரைகளில் லேசர் ஆயுதம் கண்டு பிடித்த பெருமையும் ஸ்டார் வார் ஆயுதங்கள் கண்டு பிடித்த பெருமையும் சிவனுக்கே உரித்தானவை என்று நிலை நாட்டி இருக்கிறேன். பறக்கும் செம்பு, வெள்ளி தங்கம் கோட்டைகளை நெற்றிக் கண்ணில் உள்ள லேசர் ஆயுதம் மூலம் தகர்த்தவர் சிவன்.. இதே போல பூமராங் ஐடியாவும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தில் இருந்தே வந்தது என்பதையும் நிலை நாட்டி இருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகளில் முழு விவரமும் காண்க.

Contact swami_48@yahoo.com

“வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?”

காஞ்சி பரமாசார்யாள் அருளிய கட்டுரை:

 “வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?”

By ச.நாகராஜன்

 

பவன்ஸ் ஜர்னல் கட்டுரை     

குலபதி கே.எம்.முன்ஷி பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானோருள் ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய செல்வத்தையும் வாழ்க்கைமுறையையும் அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். பாரதீய வித்யா பவன் என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரிய செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர பவன்ஸ் ஜர்னல் என்ற பத்திரிக்கையையும் ஆரம்பித்தார்.

காஞ்சி பரமாசார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?’ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும் பேறு இந்த பத்திரிக்கைக்கு கிடைத்தது. பொதுவாக பெரும்  அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சி பெரியவர் லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை  இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

 

மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

     அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்கமுடியாமல் தவித்து கூக்குரலிட்டதைக் கேட்டு திருடன் தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆசார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

 

அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார்.மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி  இருந்தான் – தங்கத்திற்கு சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

 

அவசரம் அவ்சரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை.

கவர்ச்சி, திருடு, பேராசை,ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆசார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக  சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

பீடம் ஏறிய வரலாறு

 

அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராசார்யார் சித்தி அடைந்து விட்டார்.

ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராசாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சி புரம் செல்கிறார் பரமாசார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்த சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராசாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சகட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும் ஆகையால் அவரையே அடுத்த சங்கராசாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாசார்யாள்!

 

இப்படியாகத் தான் சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திரு நாமம் கொண்ட பரமாசார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

இரு நிகழ்ச்சிகள்

 

1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்த போது 12 வயது சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக்

கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆசார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

 

இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்த்த. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி பிராமணர் அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவறை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவறை பகிரங்கமாகக் கூறி மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆசார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை  ஆசார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நேசித்துப் போற்றியோர்

 

அடுத்து ஆசார்யாள் தன்னை  மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார்,

இறுதியில் கட்டுரையை கடவுள் சிலரை பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார் என்ற வரியுடன் முடிக்கிறார்.

 

ராஜாஜியின் பாராட்டு

 

அற்புதமான இந்த கட்டுரை வெளியானவுடன் ராஜாஜி இப்படிப்பட்ட அரிய கட்டுரையப் பெற்று வெளியிட்டதற்காக பவன்ஸ் ஜர்னலைப் பாராட்டினார் என்றால் கட்டுரையின் அருமையை சுலபமாக எவரும் உணர்ந்து கொள்ளலாம்.

 

பரமாசார்யாளின் நீண்ட நெடிய 100 வயது யாத்திரையின் ஒவ்வொரு கணமும் லோக க்ஷேமம் ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்ததை அவர் அருளிய  உரைகள், அவரது வாழ்க்கையில் நடந்த ஆயிரக்கணக்கான அற்புத சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

 

உன்னத உணர்ச்சிகளைத் தூண்டி விடும் அவரது உரைகளைப் போல இந்தக் கட்டுரையும் நம் மனத்தை உயர வைக்கிறது என்பதே அவரது அருள் சக்தியின் வல்லமைக்கு ஒரு உதாரணம்.

 

கட்டுரையை முழுதுமாக ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய தளம் : http://www.kamakoti.org/souv/4-13.html

**************

சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

ராமாயண வழிகாட்டி- 4

ச.நாகராஜன்

 

சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

 

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹார்ணவே I

சமேத்ய ச வ்யபேயாதாம் காலமாஸாத்ய கஞ்சன் II

 

ஏவம் பார்யாஸ்ச புத்ராஸ்ச ஞாதயஸ்ச  வசூனி ச I

ஸமேத்ய வ்யவதாவந்தி த்ருவோ ஹ்யேஷாம் விநாபவ: II

 

மஹார்ணவே –சமுத்திரத்தில்

காஷ்டம் ச காஷ்டம் ச – இரண்டு கட்டைகள்

சமேயாதாம் – சேருகின்றன

கஞ்சன் காலே சமேத்ய – சிறிது காலம் கூடி

ஆஸாத்ய ச – இருந்து விட்டு

வ்யபேயாதாம் – பிரிகின்றன

யதா ஏவம் – அவ்வண்ணமே

பார்யா ச –மனைவிமார்களும்

புத்ரா ச – புதல்வர்களும்

ஞாதய: ச – ஞாதிகளும்

வசூனி ச – பொருள்களும்

ஸமேத்ய – சேர்ந்திருந்து

வ்யவதாவந்தி – பிரிகின்றன

ஏஷாம் விநாபவ: – இவர்களின் பிரிவு

த்ருவ: ஹி – நிச்சயமே

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 26 மற்றும் 27ஆம் ஸ்லோகங்கள்

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

வால்மீகி மஹரிஷி முதல் முதல் காவியத்தைச் செய்தவர் என்பதால் ஆதிகவி என்று போற்றப்படுகிறார். வால்மீகி ராமாயணத்தில் வரும் அற்புதமான உவமைகளும் கருத்துக்களும் காலம் காலமாக பின் வந்த இலக்கியங்க:ளில் காணப்படுகின்றன. மேலே உள்ள கருத்தை மஹாபாரதத்திலும் காணலாம்.சாந்தி பர்வத்தில் வரும் இதே கருத்தைப் பார்க்கலாம்:

எவ்விதம் பெரிய கடலில் கட்டையும் கட்டையும் சேர்க்கை அடையுமோ, சேர்ந்த பின் விலகுமோ அவ்விதம் பிராணிகளின் சேர்க்கையிருக்கிறது. புத்ரர்களும் பௌத்ரர்களும் ஞாதிகளும் பந்துக்களும் அவ்விதமே இருக்கிறா

ர்கள்.

   (சாந்தி பர்வம் 173வது அத்தியாயம்; மோக்ஷ தர்மம்)

 

ஸேனஜித் என்ற மன்னன் தன் புதல்வனை இழந்த சோகத்தால் வாட அவனது நண்பரான பிராமணர் ஒருவர் ஆறுதல் அளிக்கும் போது இந்தக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இதே கருத்து சங்க நூலான புறநானூற்றிலும் இடம் பெறுகிறது.

இடம் பெறும் பாடலோ உலகப் புகழ் பெற்ற பாடல். கணியன் பூங்குன்றனார் இயற்றியது. புறநானூறு பாடல் எண் 192 ஐப் பார்ப்போம்:

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே.

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

(புறநானூறு 192)

இதன் சுருக்கமான பொருள் :-

அனைத்து ஊர்களும் எம்முடைய ஊர்களே. அனைத்து மக்களும் எமது உறவினரே! தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. செத்துப் போவது புதுமை இல்லை. வாழ்தல் இன்பம் என்று மகிழ்ந்தது இல்லை. வாழ்வது துன்பம் என வெறுத்து ஒதுங்கியதுமில்லை. மின்னலொடு வரும் மழை வானத்திலிருந்து பொழிந்து கல்லை மோதி மணலைப் புரட்டி வரும் வளமார்ந்த பெரிய ஆறு ஒன்றில் ஓடுகின்ற தெப்பம் (கட்டை) போல இயற்கை வழியில் நடக்கும் உயிர் வாழ்வு என்பதை திறவோர் கண்ட காட்சியால் தெளிந்து அறிந்திருக்கிறோம். ஆகவே பெரியோரை வியப்பதும் இல்லை. சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் இல்லை

ஹிந்து மதக் கருத்தான இதை முதலில் கூறிய ராமாயணம், மஹாபாரதம் ஆகிய நூல்களை விட்டு விட்டு பௌத்த மதத்திற்கு வலிந்து ஏற்றி கணியன் பூங்குன்றனாரை ஒரு பௌத்தர் என்று சிலர் சித்தரிப்பது அவர்கள் பழைய நூல்களை நன்கு கற்காததும், சம்ஸ்கிருதத்தை அவர்கள் அறியாததுமே காரணம் என்று கொள்ளலாம்.

***********  

 

 

 

தாயார், தந்தையர் யார் யார்?

Picture of King and Queen (Raja and Raja patni)

 

சம்ஸ்கிருதச் செல்வம்– 7

 

தாயார், தந்தையர் யார் யார்?

 ச.நாகராஜன்

பெற்றால் தான் தாயா என்ன? யார் யார் தாய்க்குச் சமானம் என்று கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-

ராஜபத்னி – அரசனின் மனைவி

குரு பத்னி – குருவின் மனைவி

ப்ராத்ரு பத்னி – (மூத்த) சகோதரனின் மனைவி

பத்னி மாதா – தனது மனைவியின் தாயார்

ஸ்வ மாதா – பெற்றெடுத்த தாயார்

ஆகிய இந்த ஐவரும் பெற்ற தாயாருக்குச் சமம்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

ராஜபத்னி குரோ: பத்னி ப்ராத்ரு பத்னி ததைவ ச I

பத்னிமாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர: ஸ்ம்ருதா: II

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித தொகுப்பு நூலில் இந்தப் பாடல் உள்ளது.

சரி, தந்தையர் பற்றியும் ஒரு கவிஞர் தெளிவாகக் கூறுகிறார் இப்படி:-

ஜனிதா – பெற்ற தந்தை

உபநீதா – மந்திரங்களை உபதேசிப்பவர்

வித்யா தாதா – வித்தையைக் கற்றுக் கொடுப்பவர்

அன்ன தாதா – அன்னம் அளிப்பவர்

பய த்ராதா – பயத்தைப் போக்குபவர்

ஆகிய இந்த ஐவருமே ஒருவருக்குத் தந்தைக்குச் சமானம்.

பாடலைப் பார்ப்போம்:


Picture of Ramakrishna and Sarada Devi (Guru and Guru Patni)

ஜனிதா சோபநீதா ச யஸ்ச வித்யா ப்ரயச்சதி I

அன்னதாதா பயத்ராதா பஞ்சைதே பிதர: ஸ்ம்ருதா: II

 

நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா இது!

 

Picture of Mahatma Gandhi and Kasturbai Gandhi

********* 

சம்ஸ்கிருதச் செல்வம்- 6

 

 சிதையும் சிந்தையும்!

 

By ச.நாகராஜன்

 

 

  சிதையையும் சிந்தையையும் பற்றிச் சிந்தித்தார் கவிஞர் ஒருவர்.

அற்புதமான ஒற்றுமை அவருக்குத் தோன்றியது. பாடலாக வடித்து விட்டார்.

சிதை என்பது இறந்த உடலை வைத்துத் தீ மூட்டும் இறுதி யாத்திரையின் இருப்பிடம்.

சிந்தை என்பதோ ஒரு காரியத்தைப் பற்றித் தீவிரமாக எண்ணுவது.

இரண்டு எழுத்துக்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்!

ஒரு அனுஸ்வரம் அதாவது ஒரு ‘ந்’ இடையில் வருகிறது.

 

சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: I

சஜீவம் தஹதே சிந்தா நிர்ஜீவம் தஹதே சிதா II

 

 

சிதா சிந்தா சமா ஹ்ருத்கா பிந்து மாத்ரம் விசேஷத: – சிதை, சிந்தை இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் ஒரு பிந்து (ந் என்ற புள்ளி தான்!)

நிர்ஜீவம் தஹதே சிதா – உயிர் போனவுடன் சிதை எரிக்கிறது

 

சஜீவம் தஹதே சிந்தா – உயிருடன் இருக்கும் போதே எரிக்கிறது சிந்தை!

 

எப்படிப்பட்ட கவலையில் இருந்திருந்தால் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும்!

ஆனால் எப்போதுமே மனித சிந்தை கவலைக்கு இருப்பிடமாகத்தானே இருக்கிறது. ஆகவே ஒரு புள்ளி மாத்திரமே வித்தியாசமாக இருந்தால் கூட சிதையும் சிந்தையும் ஒரே வேலையைத் தான் செய்கிறது.

கவிஞரின் கருத்து பெரும்பாலும் உலகத்தில் சரியாகத் தானே இருக்கிறது!

******

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்

 

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்: உங்களுக்கு விடை தெரியுமா?

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

  1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.

 

  1. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

 

  1. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள். என்னுடைய ஊகங்களை முதலில் கூறிவிடுகிறேன். திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

 

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

சரஸ்வதி நதி மர்மம்

சரஸ்வதி நதிக்கரையில்தான் உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக்வேதம் உருவானது. அந்த நதி மறைந்து விட்டதால் பிரயாகை என்றும் த்ரிவேணி சங்கம் என்றும் அழைக்கப்படும் இடத்தில் கங்கையும் யமுனையும் இன்று கண்ணுக்குத் தெரிகின்றன. த்ரிவேணியில், மூன்றாவதான சரஸ்வதி பாதாளம் வழியாக கலப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். இப்போது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா எடுத்த புகைப்படங்களில் மறைந்து போன வழித்தடங்கள் தெரிகின்றன. ஆனால் இப்போது சரஸ்வதி நதியும் இல்லை, வயிரவி வனம் எங்கே இருக்கிறது என்றும் தெரியவில்லை. அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக உள்ளொளி பெற்றவர்களுக்கு வயிரவி வனம் என்ன, கைலாசம் க்குடத் தெரியும். ஆனால் நம்மை போன்றவர்களுக்கு வயிரவி வனத்தைக் கண்டுபிடிக்காத வரை தூக்கம் வராது. இண்டியானா ஜோன்ஸ் வேலை செய்து நாமும் முயற்சி செய்து பார்ப்போமே.

இதோ சரஸ்வதி நதி பாடும் திருப்புகழ்:

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்

வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு

வயிரவி வனத்தில் மேவு பெருமாளே

 

மாங்கனியா? மாதுளங்கனியா?

திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?

இதோ மாதுளங் கனி திருப்புகழ்:

உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்

முறைநாய கங்கவுரி             சிவகாமி

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை

ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா

 

ஏனைய எட்டு திருப்புகழ் கட்டுரைகளையும் படித்து இன்புறுக.

லண்டன் சுவாமிநாதனைத் தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com

கழிந்த இரவு மீண்டும் வராது!

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 3 

By ச.நாகராஜன்

 

கழிந்த இரவு மீண்டும் வராது!

 

அத்யேதி ரஜனி யா து  ஸா ந ப்ரதிநிவர்ததே I

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம் II

 

யா ரஜனி – எந்த இரவு;

அத்யேதி – கழிந்து விடுகிறதோ

ஸா து – அது எப்படியும்

ப்ரதிநிவர்ததே ந – திரும்புகிறதில்லை

பூர்ணா யமுனா- பிரவாகமெடுத்தோடும் யமுனா நதியும்

உதகாகுலம் – ஜலங்களுக்கெல்லாம் சாஸ்வத

வாசஸ்தலமான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

யாதி ஏவ – சென்றே விடுகிறது.

 

பொங்கிப் பெருகும் யமுனா நதி எப்படிக் கடலைச் சென்று அடைகிறதோ அதே போல கழிந்த இரவு மீண்டும் வராது.

                     அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 19ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

*************

சூரிய கிரணங்கள் செல்கின்றன; ஆயுளும் குறைகிறது!

 

அஹோராத்ராணி கச்சந்தி  சர்வேஷாம் ப்ராணிநாமிஹ I

ஆயும்ஷி க்ஷபயந்த்யாஷு க்ரீஷ்மே ஜலமிவாஷவ: II

 

இஹ அஹோராத்ராணி – இவ்வுலகில் அஹோராத்திரி

கச்சந்தி அம்சவ: – செல்லுகின்ற சூரிய கிரணங்கள்

க்ரீஷ்மே ஜலம் இவ – கோடைகாலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல

சர்வேஷாம் ப்ராணிநாம் – சமஸ்தமான பிராணிகளுடைய

ஆயும்ஷி  ஆஷு க்ஷபயந்தி – ஆயுள்களையும் விரைவில் குறைக்கின்றன

அஹோராத்திரியில் சூரிய கிரணங்கள் செல்லும் போது கோடைக்காலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல அனைத்து உயிர்களின் ஆயுளையும் குறைக்கின்றன.

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 20ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின் 

                   திருக்குறள் நிலையாமை குறள் 334

 

வள்ளுவரின் திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கி இன்புதற்குரியது.

                        ****************** 

 

 

யமன் கூடவே வருகிறான்!

 

ஸஹைவ ம்ருத்யுர்வ்ரஜதி ஸஹ ம்ருத்யுர்நிஷீததி I

கத்வா சுதீர்க்கமத்வானம் ஸஹ ம்ருத்யுர்நிவர்ததே II

 

ம்ருத்யு ஸஹ ஏவ வ்ரஜதி –யமன் கூடவே நடக்கிறான்

ம்ருத்யு ஸஹ நிஷீததி – யமன் கூடவே வசித்து வருகிறான்

ம்ருத்யு சுதீர்க்க – யமன் மிக நீண்ட

அத்வானம் கத்வா – வழியில் சென்று

ஸஹ நிவர்ததே- கூடவே திரும்புகிறான்

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 22ஆம் ஸ்லோகம்

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நிலையாமையை வற்புறுத்தி தர்மத்தைப் பின்பற்ற வேண்டியதை ராமர் வலியுறுத்திக் கூறும் அற்புதமான ஸ்லோகங்களில் மூன்றை மேலே பார்த்தோம்

************* 

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

 

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

 

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

 

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

 

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

 

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

Contact London Swaminathan at swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

Please read other 425 English and Tamil posts already uploaded by me.

Amazing Andal: Where did she see the Lion?

Andal  is one of the famous women poets of Tamil Nadu. She lived around 8th century. Though she is known as a devotional poet, her knowledge in several subjects is amazing. She has sung about various subjects from Astronomy to Zoology. In her A to Z dealings, I am going to touch A for Astronomy and Z for Zoo in this article. Ancient Tamil women were well educated. We have scores of female poets (poetesses) in Sangam Tamil literature. We had more than one Avvaiyar in Tamil literature. Among the devotional poetesses Karaikal Ammaiyar of fifth century and Andal of 8th century AD are more popular.

Andals’s 30 verses known as Tiruppavai and  another 143 verses known as Nachiyar Tirumozi are household names in Tamil Vaishnavite families. Her wedding song Varanam Ayiram (part of Nachiyar Tirumozi) is sung in all the Vaishnavite Brahmin weddings. She is the only one female in the twelve famous Vaishnavite Saints known as Alvars.

Two of the 30 Tiruppavai verses are known for her knowledge in Animal Behaviour and Astronomy. One may wonder whether she encountered a lion in a forest or a zoo when one reads her description of a lion. Unless she had keen observation power or a personal visit to a zoo in Madurai near her native place Srivilliputur she would not have described the lion in the following manner:

“ As a fierce lion, which throughout the rains

Within his mountain lair has lain asleep

And awakes, and flashes fire from the eye

And angrily with bristling mane he moves

All of his body, and shakes himself and stands

Upright and roars, and lordly issues forth:

So who flowerlike art, come graciously

Forth from thy shrine; in grace upon by throne

Of cunning craftsmanship, search out the cause

That brings us here. Ah, Elorembavoy  (23)

(From Hymns of the Alwars by J S M Hooper)

Andal and Astronomy

Andal must be an amateur astronomer. Though she was a teenage girl she knew ornithology, zoology, astronomy etc. She mentioned a particular bird called Anaichathan (Asian Drongo Cuckoo or Valiyan Kuruvi) . Her keen observation of Venus rising and Jupiter setting in the early morning sky 1200 years ago helped us to confirm her period. We know approximately her period because of her father Periyalvar and the Pandya king of his times. Andal’s precise date was determined by her astronomical reference in the following verse:

Singing the glory of him

Who split the bird’s bill and killed

And Him who plucked the wicked demon as a weed

Girlies all reached the site of deity

Venus ascended and Jupiter had slept sunk;

Birds too clanged behold, belle gild:

The eye is a la flower or deer flirting?

Yet asleep in bed

Enjoin to dip and shiver in bath of cold;

Shed off thy stealth untold

This day is auspicious, consider our damsel.

 

In the very first verse of Tirupavai, she says that it was Full moon day in the month of Markazi.( Markazi thingal mathi niraintha nannaalal in Tamil) and then she says Venus ascended and Jupiter went down. This happened on 18th December 731 AD according to scholars Raghava Iyengar and KG Shankar. Thanks to Andal we were able to pinpoint the date.

I am giving both the verses in Tamil for the benefit of Tamil readers:

 

Animal behaviour:

மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய

சீரிய சிங்காசனத்திருந்து, யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 23)

 

Astronomy:

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 13)

Contact swami_48@yahoo.com