ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  சூர்யநாராயண் ராவ் அறிவுரை!(11,681)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,681

Date uploaded in London –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  

புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ் அறிவுரைகள்! 

ச.நாகராஜன் 

ஜோதிடம் கற்க வேண்டுமென்று விரும்புவோர் ஏராளம், ஏராளம். இவர்களுக்கு என அறிவுரைகளை வழங்குகிறார் புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ்.

இவரைப் பற்றிய அறிமுகமே தேவை இல்லை. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற ஜோதிடர் பி.வி.ராமனின் பாட்டனார் தான் இவர்.

Valuable Instructions to the Students of Astrology’  – ‘ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மதிப்புள்ள அறிவுரைகள்’ என்ற தலைப்பில் ‘The Astrological Primer’ என்ற தனது நூலில் அவர் 24 முக்கியமான விஷயங்களை அறிவுரைகளாகக் கூறுகிறார்.

அவையாவன:

1) ஜோதிடம் கற்க விரும்பும் மாணவர்கள் ராசிகள், கிரகங்கள், நக்ஷத்திரத் தொகுதிகள், நல்ல மற்றும் தீய கிரகங்கள், கிரகங்களின் பார்வைகள், கிரகங்களில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகள் (நட்பு, பகை ஆகிய விவரங்கள், கிரகங்களில் ஆண், பெண் கிரகங்கள், கிரகங்களின் இயற்கை, கிரகங்களின் வர்ணங்கள், கிரகங்களின் திசைகள், கிரகங்கள் உச்ச, நீச நிலைகள், இடங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், கிரகங்களின் 10 நிலைகள், கிரகங்களின் குணாதிசயங்கள், கிரகங்களின் 27 தொழில்கள், கிரகங்களின் காலம், ராசிகளின் அடையாளக் குறிகளும் அவற்றின் பிரிவுகளும், வர்கங்கள், ஒரு நாளில் 12 ராசிகளின் நேரங்கள், ராசிகளும் கால புருஷனும், ஹோரை, த்ரேக்காணம், நவாம்சம், த்வாதசாம்சம், த்ரிம்சாம்சம், ராசிகளின் குணாதிசயங்கள், ராசிகளை சொந்த உரிமையாகக் கொண்ட கிரகங்கள், 12 வீடுகளின் முக்கியத்துவம் ஆகிய இவற்றை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் அப்படியே பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் முதல் படி.

2. கேந்திரங்கள், த்ரிகோணம், பனபரா, கிரக சேர்க்கைகள் ஆகியவை பொதுவாக லக்னத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

3. கிரகங்களில் சொந்த வீடு நிலையான ஒரு விஷயம் தான். அது மாறவே மாறாது.

4. கிரகங்கள் சேர்வது எவ்வளவு சக்தி படைத்ததோ அதே அளவு சக்தி

அவற்றின் பார்வைக்கும் உண்டு.

5.ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் நீசத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அநேக துர்பாக்கியங்கள் நேரும்.

6. ‘எல்லா கிரகங்களும்’ – என்று சொல்லப்படும் போதெல்லாம், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகு, கேது உள்ளிட்ட நவ கிரகங்கள் என்று சொன்னால் மட்டுமே ஒன்பது கிரகங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. நல்ல மற்றும் தீய கிரகங்கள் தங்கள் தசா காலத்திலும் புக்தி காலத்திலும் தங்கள் விளைவுகளைத் தருகின்றன.

8. நன்கு ஆராயாமல் ஒருவரது ஆயுள் காலத்தைச் சொல்லவே கூடாது.

9. சந்திரனிலிருந்து பார்த்து சேர்க்கைகளைப் பார்ப்பதும் சக்தி உள்ளதே. இதை வைத்தும் கணிப்புகளைக் கூறலாம்.

10. தீய கிரகங்கள் சேர்ந்தால் அவை உடல்நலத்தைப் பாதிக்கும், (அவற்றை நல்ல கிரகங்கள் பார்த்தாலொழிய).

11. கிரகங்களின் நிலையான நட்புகள் முதலியவை தற்காலிகமான உறவுகளால் சிறிது மாறும்.

12. ஒரு ராசியை இரண்டாகப் பிரித்தால் வருவது ஹோரா. மூன்று சம பிரிவுகளாகப் பிரித்தால் வருவது த்ரேக்காணம். ஒன்பது பிரிவுகளாக ஆக்கினால் வருவது நவாம்சம்.  அதை 12ஆகப் பிரித்தால் வருவது த்வாதசாம்சம். 30 பிரிவுகளாக ஆக்கினால் வருவது த்ரிம்சாம்சம். அறுபது பிரிவுகள் என்றால் ஷஷ்டியாம்சம்.

13. லக்னத்தை முதலில் சரியாகக் கணிக்க வேண்டும். இது இல்லாமல் ஒரு வித கணிப்பையும் பலனையும் கூற முடியாது. கூறக்கூடாது.

14. ஒரு குழந்தையின் பாலாரிஷ்ட சேர்க்கைகளை முதலில் பார்த்த பின்னரே மற்றவற்றைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

15. பெற்றோர்களின் பாவங்கள் குழந்தைகளின் மீது படியும். ஆகவே குழந்தைக்கான ஆயுள் மற்றும் இதர பலன்களைச் சொல்லும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.

16. எல்லா ஜோதிட விஷயங்களையும் அத்துபடியாகக் கொள்ளாமல் தன்னை ஒரு பெரிய ஜோதிட மேதையாக நினைத்துக் கொண்டு பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.

17. பார்வைக்குத் தோன்றும் முரண்பாடுகள், மாறுபாடுகள் ஆகியவை எல்லாம் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராயும் போது மறைந்து விடும்.

18. நல்ல பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு  முதலில் கிரக நிலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் கொடுத்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லக் கூடாது.

19. ஒரு ஜோதிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதை நன்கு பயில வேண்டும். அதுவே இதர சித்தாந்தங்களை நன்கு அறிய வழி வகுக்கும். சாயனா மற்றும் நிராயணா பற்றிக் குழப்பம் கொள்ளக் கூடாது.

20. தன்னை ஒரு ஜோதிட மேதை என்று நினைத்துக் கொள்பவன் அதில் முன்னேறவே முடியாது.

21. பாரத தேசத்தில் உதித்த மஹான்களின் பெருமை சொல்லி மாளாது. எல்லாவித சந்தேகங்கள், கஷ்டங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நன்கு அறிவர்.  அவர்களின் நூல்களைப் படிக்கப் படிக்க அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், மேதைகள் என்பது புலப்பட ஆரம்பிக்கும்.

22. சில நாட்கள் உழைத்தால் அது மட்டுமே, பெரிய நிலைக்கு கொண்டு வந்து சாதனைகளைப் படைக்க வழி வகுக்காது. தொடர்ந்து கற்றல் வேண்டும்.

23. முதலில் உங்கள் ஜாதகத்தையும் உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் ஆகியோரின் ஜாதகங்களையும் பாருங்கள். நீங்கள் கற்ற ஜோதிடத்தின் படி, உங்களின் கணிப்பின் படி, அந்த ஜோதிட பலன்கள் அவர்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.

24. உங்கள் ஜோதிடப் படிப்பில் உண்மை இருக்க வேண்டும், ஆர்வம் இருக்க வேண்டும், கவனக் குவிப்பு இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான ஜோதிட நிபுணர் தான்!

*** 

மேற்கண்ட அறிவுரைகளை அவர் எழுதிய The Astrological Primer என்ற நூலில் அவர் தந்துள்ளார்.. புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு -1905

தொல்காப்பியத்தில் பகவத் கீதை வரிகள்-1 (Post No.11,680)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,680

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே – 1592

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — என்பது

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியலில் வரும் சூத்திரம் (சூத்திர எண் 1592)ஆகும் .

இது பகவத் கீதையில் கண்ணனும் மனு ஸ்ம்ருதியில மனுவும் சொன்னதாகும் ; பின்னர் சாணக்கியரும் இதைச் சொல்லுகிறார். வால்மீகியும் , காளிதாசனும், அவ்வையாரும் மன்னர் என்ற பெயரில் இதைச் சொல்லி இருக்கிறார்கள் .

முதலில் தொல்காப்பியர் பற்றி நமக்கு இரண்டே பேர்தான் ‘பெர்சனல்’ விஷயங்களைச்  PERSONAL DETAILS சொல்கிறார்கள். ஒருவர் அவருடைய கிளாஸ்மேட் CLASSMATE ; அதாவது சக மாணவர்; அவர் பெயர் பனம்பாரனார் ; தொல்காப்பியருக்கு ஐந்திரம் தெரியும் என்றும் அவர் நிலம் தரு திரு வில் பாண்டியன்  சபையில் அதங்கோட்டு ஆச்சார்யன் என்னும் நான்கு வேதம் படித்த பிராமணன் சர்ட்டிபிகேட் CERTIFICATE  கொடுத்தவுடன் அதை மன்னர் சபை ஏற்றதாகவும் கூறினார். சுருங்கச் சொன்னால் அய்யர் அக்மார்க் AGMARK SEAL குத்தினார். சபையில் எல்லோரும் கைதட்டி மாலை போட்டார்கள் 

அடுத்தாற்போல் தகவல் தருபவர் உரை மன்னன், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார் . நச்சி. தான் அதிக, சிறந்த உரைகளை எழுதியவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர் மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பிராமணர். அவர் தொல்காப்பியர் என்பவர் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் அவர் ஜமதக்னி முனிவரின் புதல்வர் என்றும் எழுதியுள்ளார். இது திராவிடங்களுக்குப் பிடிக்காததால் பொய்யுரை என்று ஒதுக்குவர். பழ மையான காப்பியக்குடியில் இவர் பிறந்ததால் தொல் + காப்பிய என்று இவர் அழைக்கப்பட்டதாக இளம்பூரணரும் நச்சி. யும் கூறுவர். அதுவும் திராவிடங்களுக்குப் பிடிக்காததால் இரு உரைகார்களுக்கும் பொய்யர் பட்டம் கட்டி, திராவிடங்கள் ஒதுக்கின. அதுமட்டுமல்லாமல் தொல்காப்பியருக்கு மீசை வைத்து படம் வரைந்து ஊர் ஊராக சிலைகளும் வைத்தன திராவிடங்கள்.

ஆனால் தொல்காப்பியரோ முழுக்க முழுக்க — அதாவது மூன்று அதிகாரங்களிலும் வள்ளுவனைப் போலவே கூசாமல் ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இதை எல்லாம் தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை பட்டியல் போட்டுக்காட்டினார் . இந்தப் பின்னணி தெரிந்தால்தான்  நான் சொல்லும் பகவத் கீதை விஷயம் புரியும்.

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரத்துக்கு  உரை பின் வருமாறு ,

“ஆன்றவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள்  நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம்வழக்கு உலக வழக்கு எனக்கொள்ளப்படாது”.

Xxxx

மஹாபாரத  ஸ்லோகம் இதோ:

ச்ருதிர் விபின்னா  ஸ்ம்ருதி ரேவ பின்னா

நை கோ முனிர் யஸ்ய வசம் பிரமாணம்

தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்

மஹா ஜனோ  யேந கத ஹ ஸ மார்க்கஹ

வேதம் பல பிரிவுடையது ; ஸ்ம்ருதியும்/ சட்ட புஸ்தகங்கள்  கூட பல வகையானது.

இதைக் கூறிய முனிவரோ ஒருவரல்ல. பல முனிவர்கள் அறநெறி விதிகளைக் கூறியுள்ளனர்.

யாருடைய சொல் சான்று ? யார் சொன்னதைக் கை விடுவது? அறத்தினுடைய உண்மைப்பொருள் மறைவாக வைக்கப்பட்டுள்ளது  .எனவே பெரியோர்கள், எந்த வழியில் சென்றார்களோ , அதையே நாமும் பின்பற்றி நடப்போமாக.

In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma, What is the path?

Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”

– Yaksha Prasna, Vana Parva, Mahabharata

Xxxx

Tolkappian, the Brahmin sporting a moustache

மனு ஸ்ம்ருதியில் மனு சொல்கிறார்

एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः ।

स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः ॥ २.२०॥ 2-20

ஏதத் தேச ப்ரஸுதஸ்ய  சகாஸாத் அக்ரஜன்மநஹ

ஸ்வம் ஸ்வம்  சரித்ரம் சிக்ஷரேன  ப்ருதிவ்யாம் ஸர்வ மானவாஹா

இந்த நாட்டின் முன்னணியில் நிற்போரிடமிருந்து , பூமியில் பிறந்த அனைவரும் நடத்தை விதிகளை அறியட்டும்

— என்று மனு (2-20) கூறுகிறார் ..

அக்ர ஜன்மநஹ என்பது முன்னிலையில் நிற்பவர்கள்; அவர்கள் , அந்தக் காலத்தில் முனிகள், ரிஷிகளாக இருந்தவர்களாவர்.

உலகத்திலுள்ள எல்லோருக்கும் நாமே (இந்துக்களே) குரு என்பதை பாரதியாரும் மூன்று முறை சொல்லி சத்தியம் செய்கிறார் :

எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

கவிகளின் வாக்கு பொய்க்கவே பொய்க்காது; நடந்தே  தீரும்

All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land…

Following is George Buhler’s translation

Manu 2-20. From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages.

xxxxxxx

विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।

हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1

வித்வத்பிஹி ஸேவிதஹ ஸத்பிர் நித்யம த்வேஷராகிபிஹி

ஹ்ருதயே நாப்யனுக்ஞாதோ யோ தர்மஸ்தம் நிபோதத 

Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.

2-1 வேதத்தை நன்றாக அறிந்த பெரியோர்களிடமிருந்து விதிகளை அறிய வேண்டும் . விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,குணவான்களாக விளங்குவோரே அத்தகைய பெரியோர்கள் . அவர்கள் அங்கீகரித்தால் போதும்.

Xxxxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥

வேதோகிலோதர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம்

ஆசாரஸ் ச்சைவ  ஸாதூனாம் ஆத்மனஸ்துஷ்டிரேவ ச- Manu

Manu 2.6. The whole Veda is the (first) source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction.

வேதம்தான் புனித விதிகள் அடங்கிய தர்மத்தின் ஆணிவேர் ; அதற்கு அடுத்தபடியாக காலா காலமாக பின்பற்றப்படும் சம்பிரதாயம் முக்கியம்; அதற்கடுத்தாற் போல அந்த சம்பிரதாய நெறி முறைகளை அறிந்தோர் சொல்லுவதே சட்டம்; இறுதியாக உங்கள் மனச்சாட்சியை நம்புங்கள் . (எது அறம் , எது மறம் என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.)- Manu 2-6

மனு எவ்வளவு பெரியவர், எந்த அளவுக்கு மனிதனின் நல்ல குணத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று இதிலிருந்தே விளங்கும். இதே போல உண்மை சொல்லுவது பற்றியும் அவர் பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார். கசப்பான உண்மைகளை சொல்லாதே. இனிமையாக, ஆனால் உண்மை மட்டுமே விளம்பு என்பார் . பெண்களை அழ வைத்தால் அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும் என்கிறார்.

ஆக தர்மம் சட்ட விதிகள் எல்லாம் மாறுபடும். நாமும் அம்பேத்கார் சொன்னதை ஏற்காமல் அவ்வப்போது பார்லிமென்டில் விதிகளைத் திருத்தி (Constitutional amendments) வருகிறோம். ஆனால் அரசியல் சாசன அடிப்படை மாறாது. அது போல வேதமும் மாறாது.

இதைத் தொல்காப்பியர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரம் 1592

xxxx

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’

என்று இதனை , சேந்தன் திவாகர நிகண்டும்  – (மக்கட் பெயர்த் தொகுதியின் (17-ஆம்) பாடல்  குறிப்பிடும்

xxxx

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவதைக் காண்போம் :

यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।

स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥२१॥ 3-21

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|

ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||

ஸ்²ரேஷ்ட² யத் யத் ஆசரதி = எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ

இதர ஜந: தத் தத் ஏவ = மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்)

ஸ யத் ப்ரமாணம் குருதே = அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ

லோக தத் அநுவர்ததே = உலகத்தார் அதையே தொடருகிறார்கள்

எதையெதை  உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர்

 பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோஅதையே

 உலகத்தார் பின்பற்றுகிறார்கள்.– 3-21

இதைத்தான் தொல்காப்பியரும் மொழிபெயர்த்து சூத்திரமாகத் தந்துள்ளார்.

இரண்டு மூன்று இடங்களில் திருக்குறள் போலவே தர்ம அர்த்த காம = அறம்பொருள்இன்பம் என்று தொல்காப்பியரும் சொல்லுவதால் அவர் மஹாபாரதத்தைப் பின்பற்றுவதும் தெரிகிறது. மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை என்பது அனைவரும் அறிந்ததே.

இனி காளிதாசர், சாணக்கியர், வால்மீகி , அவ்வையார் திருமூலர் , மோசிகீரனார் சொல்லுவதைக் காண்போம்.

To be continued………………………………………………..

tags–  தொல்காப்பியத்தில், பகவத் கீதை, வரிகள்,

அம்பலவாணர் சொல்லும் பிறந்த நாள் பலன் (Post No.11,679)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,679

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் என்ன கிழமையில் இருக்கிறதோ அதன்படி பலன் சொல்கிறார்  அறப்பளீசுர சதகம்  ஆசிரியர் அம்பல வாணர் :

ஜென்ம நட்சத்திரம்

ஞாயிற்றுக் கிழமையானால் –தீரா அலைச்சல் ;

திங்கட்   கிழமையானால் — சுக போசனத்தினொடு

          திரு மாதின் அருளும் உண்டாம்; அதாவது சுக போக வாழ்வு; லக்ஷ்மீ கடாக்ஷம்  இருக்கும்.

செவ்வாய்க் கிழமையானால்–  சுகமது வாராது; சுகபோகம் இல்லை;

புதன் கிழமையானால் — மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம்; அதாவது நன்றாகக் கல்வி கற்று நிறைய பட்டங்கள்  பெறுவார்கள்.

 வியாழக்  கிழமையானால் – ஆடை நன்மையுடனே வந்திடும்; அதாவது புத்தாடைகள் நிறைய குவியும்.

வெள்ளிக் கிழமையானால் — பெண்கள் எல்லாம் உங்களை வந்து மொய்ப்பார்கள். நாரியருடன் போகம் மிகவும் உண்டு!!!!!!!!!!!!!

சனிக்  கிழமையானால்– சுகப்படாது. சுகபோகம் இல்லை.

நான் முன்னர் எழுதியதை நினைவு படுத்துகிறேன்; உலகிலுள்ள பல கோடிப்பேரை இப்படி 7 வகையாகப் பிரித்துப் பலன் சொல்லுதல் சரியாக இராது; அதாவது துல்லியமாக இராது. ஆகையால் யாரவது ஒரு ஆராய்ச்சியாளர், குறைந்தது கிழமைக்கு 1000 பேர் வீதம் தேர்ந்தெடுத்து புள்ளிவிவரம் திரட்டி சரிபார்க்க வேண்டும். அதுவரை இதை நம்பவும் வேண்டாம்; உதாசீனம் செய்யவும் வேண்டாம்.

நான் சில பேர் திட்டுவதை கேட்டு இருக்கிறேன் : பயல் ராகுகாலத்தில் பிறந்திருப்பான் போல என்று.

அப்படிப் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் திரட்டி ஆராயும் வரை அவை எல்லாம் பொருளற்ற வசை மொழிகள் என்றே கருத வேண்டும் .

அட சனியனே — என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதற்கு சனிக் கிரகமா காரணம்?

Xxxxx

அறப்பளீசுர சதகம்

77. பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்

சென்ம நட்சத்திரத்து ஆதி வாரம் வரின்

          தீரா அலைச்சல் உண்டாம்;

     திங்களுக்கு ஆகில் வெகு சுக போசனத்தினொடு

          திரு மாதின் அருளும் உண்டாம்,

வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும்

          வாராது சுகமது என்பார்;

     மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம் புந்தி எனும்

          வாரத்துடன் கூடினால்;

நன்மை தரு குரு வாரம் அது சேர்ந்து வரில் ஆடை

          நன்மையுடனே வந்திடும்;

     நாரியருடன் போகம் மிகவும் உண்டு ஒரு வெள்ளி

          நல்ல வாரத்தில் வந்தால்;

அல் மருவு பீடை உண்டாம் என்பர் சனியனுக்(கு);

          அமலனே! அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

TO BE CONTINUED……………………………………

Tags-கிழமைகள், பலன், ஜென்ம நட்சத்திரம், அம்பலவாணர்,

பிறந்த நாள், அறப்பளீசுர சதகம் 

பொங்கல் பண்டிகை – அன்றும் இன்றும் என்றும் (Post No.11,678)

WRITTEN BY Dr Ganesan, Tenkasi

Post No. 11,678

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பொங்கல் பண்டிகை –  அன்றும் இன்றும் என்றும்  

(முனைவர் தென்காசி கணேசன்)

நுழை வாயில்

நமது தேசத்தின் அடித்தளம் மற்றும் முக்கியப் பெருமையே, அதன் கலாச்சாரமும், பண்பாடும் தான். அவற்றின் வெளிப்பாடுதான், நாம் கொண்டாடும்  பல்வேறு பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகையும் மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், வாழ்வியல் நெறிகளையும், கற்றுக் கொடுக்கிறது என்றால் மிகை ஆகாது. பண்டிகைகளின் சிறப்பு என்பது, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மட்டுமல்ல, இயற்கையைப் போற்றி, வணங்கி, பாதுகாத்து, வேளாண்மை மற்றும் உயிரினங்களை வாழ்த்தி வணங்கும் நிகழ்வும்  ஆகும். இந்த வரிசையில் மிக முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.

இந்திய நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,

“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு

கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு”

எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.

காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்

கண்டதோர் வையை பொருனை நதி என

மேவிய ஆறு பல ஓடத் திரு

மேனி செழித்த தமிழ்நாடு

என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும்.பொங்கல் பண்டிகை என்பது வேளாண்மை சார்ந்த ஒரு கொண்டாட்டம் என்பதே உண்மை.

பொங்கல் பண்டிகை – வரலாற்றுக் காலம்

சங்க காலமான கி.மு 200 – கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்க்ருத புராணத்தில்   திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முன்னோர்கள் பொங்கல் சங்க காலத்தில் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாவை நோன்பு சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

 பல்லவர் காலத்தில் பல்லவர்களின் காலமான கி.பி 400 – கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மரபும், சடங்குகளும் நிறைந்த இந்த பொங்கல் கொண்டாட்டம். திருப்பாவை குறிப்பு ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவ கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப பண்டிகை, இஸ்லாமியப் படைஎடுப்பு, ஆங்கில ஆட்சி, எல்லாக் காலங்களிலும், பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், இந்தப் பண்டிகை, குறிப்பாக, இந்த மண்ணின் மாண்பை, விவசாயத்தை, நீர் மேலாண்மையை இணைத்து இருப்பதால், தொடர்ந்து கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை – 50 வருடங்கள் முன்னால்

1970களில் எங்கள் ஊரான தென்காசியில் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தக் கொண்டாடத்தில், நான் பள்ளி மாணவன். ஜாதி, இனம், பணக்காரர், இல்லாதார் என்ற வேறுபாடு நாங்கள்  பார்த்ததேயில்லை.  மார்கழி மாதம் பஜனையில் இருந்தே எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிடும். பள்ளிகளும் குறைந்தது ஒரு வாரம் விடுமுறை இருக்கும். ஜனவரி முதல் வாரத்திலேயே வீடுகள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு, காவி, வண்ணங்கள் பூசப்படும். பெரும்பாலும்,வீட்டில் உள்ளவர்களே,  சுண்ணாம்புக்கல் வாங்கி, வீட்டின் கொல்லைபுறத்தில் வெள்ளாவி வைத்து, நீலம் சேர்த்து, வெள்ளை அடிப்பார்கள். தெருக்களே பளிச்சென்று இருக்கும்.

ஒரு வாரம் முன்னாலேயே, மஞ்சள்குலை, கரும்பு, கடைவீதி மட்டுமல்லாமல், வீதியிலும் வைக்கப்படும், எனது தந்தையின் நண்பர் திரு பழனியாண்டி முதலியார் என்பவர், குறைந்தது 6 கரும்புகள், மஞ்சகுளை, கிழங்குகள் என வீட்டில் கொண்டு வைத்துவிடுவார். வீட்டின் முற்றத்தில் அவை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பொங்கல் மறுநாள் தான் கரும்பு வெட்டப்படவெண்டும், அதாவது மறுநாள் காகத்திற்குப் படைத்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்பது சாஸ்திரம் என்பார்கள் வீட்டில். மறுநாள் விடியலுக்கு காத்துக்கொண்டிருப்போம்.  எவ்வளவு தான் தந்தாலும், உடன் பிறப்புக்களுடன் (என் உடன் பிறந்தவர்கள் தான்) சண்டை உண்டு. நண்பர்களிடம் ஒப்பீடு என்ற பெயரில்  சண்டையும் உண்டு.

அம்மாவின் வெங்கலப்பானை (வெறும் பானையைத் தூக்குவதேற்கே, 10 டம்ளர் ஆர்லிக்ஸ் குடிக்கவேண்டும்). சர்க்கரைப்பொங்கல், அவியல், வடை என அன்று முழுவதும் , உள்ளே போய்க்கொண்டிருக்கும்.

மறுநாள் யானைகள் வரும் – கரும்பின் தோகை மற்றும் கரும்பு, சொளகு நிறைய அரிசி, வெல்லம் என கொடுப்போம். அன்றைய ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைக் காளை என்பதை உணர்த்தும் விதமாக, நீண்ட வரிசையாக, இரட்டைக் காளைகள் கொம்புகளில் அன்றைய காங்கிரஸ் கொடியுடன் நடைபோடும். மாலை நேரத்தில் அதை பார்த்து ரசிப்பதே தனி அழகு.

இல்லம் முழுவதும் மக்கள். தெரு முழுவதும் மக்கள். எல்லாரது வீடுகளும் திறந்தே இருக்கும், பாவுள், குச்சில் என்று பொருட்கள் வைத்திருக்கும் அறைகள் இருந்தன. தனியாக எனக்கு தெரிந்து privacy என்று பகலில் மெத்தையுடன், படுக்கை அறை பார்த்த நினைவில்லை. எந்த வேறுபாடும் இல்லாமல் மகிழ்ந்து கொண்டாடிய தருணங்கள் அவை. இனி வருமா – காலம் தான் பதில் கூறவேண்டும்.

தொடர்ந்து, எனது மனைவி, மகன்கள் மற்றும் உறவு, நட்புக்களுடன், இது தொடர்கிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நாங்கள் இருந்த 10 வருடங்களிலும், பாரம்பரியமான மற்றும் விமர்சையான பொங்கல் விழாவைப் பார்த்து இருக்கிறோம்.

பொங்கல் பண்டிகை – இன்று

இன்றும் பொங்கல் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது என்பதில் இரு கருத்துகள் இல்லை. மகிழ்ச்சி, பண்டிகை, சாப்பாடு, உறவுகள் (கொஞ்சமாக என்றாலும்), ஏதோ ஒன்று குறையாகவே நெருடுகிறது. அதற்கு காரணம் காலத்தின் ஓட்டமா, பணிச்சுமையா, பணம் தேடும் வேகமா, தொலைகாட்சி மற்றும் கைப்பேசிகளின் பாதிப்பா – பதில் தெரியவில்லை ,  பண்டிகை, நாட்களாக கொண்டாடப்பட்டது , நாள் என்று வந்து விட்டது. இருப்பினும , அந்தப் பண்பாடு தொடர்வது மகிழ்ச்சியே.

பொங்கல் பண்டிகை – என்றென்றும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு

பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்

தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு

பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இன்று சேராதோ?

தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

என்ற உலக மாகலைஞன் நடிகர் திலகம் நடித்த பழனி படத்தில்  வரும் கவியரசின் வரிகளுகேற்ப நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாமே இயற்கை மற்றும் மக்கள் வாழ்வு சார்ந்து இருப்பதால், இந்தப் பண்டிகைகள் நிச்சயம் எல்லாக் காலத்திற்கும் தொடரும். நமது கலாச்சாரம், பண்பாடு தொடரும், இது தான் உண்மை,

—xxxxxx—–

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்? (Post.11677)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,677

Date uploaded in London –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்?

ச.நாகராஜன் 

நமது முன்னோர்கள் உலக இயற்கைய அனைத்தையும் மிகத் தீவிரமாக, தெளிவாக ஆராய்ந்தவர்கள்.

மரம், செடி, கொடி, பறவைகள், புழு, பூச்சிகள், வர்ணங்கள், நேரம், காலம், இரவு, பகல், வெளி, விண்வெளியில் உள்ள கிரகங்கள், நக்ஷத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை அவர்கள் கூர்ந்து கவனித்ததோடு அந்த உலக இயற்கைக்கும் மனிதனுக்குமான சம்பந்தத்தையும் ஆராய்ந்து முடிவுகளை சாஸ்திரங்களாக அமைத்துத் தந்தனர்.

இவற்றில் பல, இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சி ஆராய்ந்து தரும் முடிவுகளோடு ஒத்திருப்பது ஆச்சரியத்திற்குள்ள ஒரு விஷயமாகும்.

ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்: “நமது ரிஷிகள் காலத்திற்கு முற்பட்டவர்கள். அவர்கள் கூற்றெல்லாம் மெய் என்பதை உலகம் உணர பல காலமாகும்”

இதோ இங்கு ராசிகளுக்கு உகந்த வர்ணங்கள் கீழே தரப்படுகின்றன.

மேஷம் – சிவப்பு, தாமிரம்

ரிஷபம் – நீலம், இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை

மிதுனம் – பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு(Purple), நீலம், இளஞ்சிவப்பு

கடகம் – பச்சை, வெள்ளை,பாலேடு நிறம் (Cream), சிவப்பு, மஞ்சள்

சிம்மம் – ஆரஞ்சு, சிவப்பு, பச்சை

கன்னி – பச்சை, வெள்ளை, மஞ்சள், பச்சைக் கல் நிறம் (Emerald)

துலாம் – நீலம், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு

விருச்சிகம் – மஞ்சள், சிவப்பு, பாலேடு நிறம் (Cream), ஆரஞ்சு’

தனுசு – வயலட், வெள்ளை, பாலேடு நிறம் (Cream),ஆரஞ்சு, இள நீலம்,

         பச்சைக் கல் நிறம் (எமரால்ட்)

மகரம் – இண்டிகோ, வெள்ளை, நீலம், கறுப்பு

கும்பம் – இண்டிகோ, மஞ்சள், வெள்ளை, பாலேடு நிறம்

மீனம் – பச்சை, வயலட், சிவப்பு, மஞ்சள், ரோஜா மலர் நிறம், ஆரஞ்சு,

         பாலேடு நிறம், வெள்ளை

ராசிகளுக்கு ஆகாத வர்ணங்கள் :

மேஷம் – கறுப்பு

ரிஷபம் – சிவப்பு

மிதுனம் – சிவப்பு, கறுப்பு

கடகம் – நீலம்

சிம்மம் – கறுப்பு

கன்னி – சிவப்பு, நீலம், கறுப்பு

துலா – பச்சை, மஞ்சள்

விருச்சிகம் – நீலம், சுத்த வெள்ளை நிறம், பச்சை

தனுசு – சிவப்பு, முத்து நிறம், கறுப்பு

மகரம் – மஞ்சள், பாலேடு நிறம்

கும்பம் – ஆரஞ்சு, பச்சை, நீலம், சிவப்பு

மீனம் – நீலம்

ஆடைகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், படுக்கை மற்றும் வீட்டில் உள்ள மரசாமான்கள்,  ஆகியவை உகந்த வண்ணங்களைக் கொண்டதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வாகனத்தின் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருத்தல் வேண்டும்.

உகந்தது அல்லாத நிறங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

அனுபவமே சிறந்த ஆசான்.

அனுபவத்தினால் முடிவு காண்பதே நமக்குத் திருப்தி தர வல்ல ஒரே வழி!

ஆகவே இதுவரை நீங்கள் பயன்படுத்தும் வண்ணங்களைப் பாருங்கள்.

அவை உகந்தவை அல்ல என்றால் மாற்றுங்கள், பின்னர் பலன்களைக் குறித்து வைக்க ஆரம்பியுங்கள்.

இது செலவில்லாத வழி; ஏனெனில் நாம் செய்யப்போவது வண்ணங்களின் மாற்றத்தை மட்டுமே!

வாங்கப் போவது உறுதி; அதில் நமது தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கலர்ஃபுல் யோசனை இது, அவ்வளவு தான்!

***

 tags- ராசி, வர்ணங்கள்

Learn Tamil Verbs– Part 39 (New Verbs)—Post 11,676

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,676

Date uploaded in London – –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 xx 

Note the underline or italics in both the languages.

1.                 நான் உன் வீட்டுக்கு வருகிறேன்.

I come to your house.

Naan un veettukku varukiren

I to your house am coming

xxxx

2.                 நான் நேற்று வகுப்புக்கு வரவில்லை.

did not come  to the class yesterday

Naan netru vakuppukku varavillai

I yesterday  to the class did not come.

3.                 நான் கட்டாயமாக நாளைக்கு வருவேன்

I will certainly come tomorrow.

Naan kattaayamaaka naalaikku varuven

I certainly tomorrow will come.

xxxx

4.        அவன் இங்கே போன வருசம் வந்திருந்தான்.

He had come here last year.

Avan inge pona varusham vanthirukkaan

He last year here had come.

xxx

4.                 அவனும் சினிமாவுக்கு வருகிறானா?

Is he coming to cinema (film)?

Avaum sinimaavullu varukiraanaa?= he also to the film coming?

xxxx

5.                 சரியாக 10 மணிக்கு வந்துவிட்டானே! .கெட்டிக்காரன்தான்!

He came exactly at 10 O clock, clever indeed.

Sariyaaka paththu manikku vanthu vittaane! Kettikkaaran than

Exactly 10 o clock had come; clever indeed

xxx

6.                 முதலில் இங்கே வந்து இதைச் சாப்பிடு

Firstly, come here and eat this.

Muthalil, inge vanthu ithaich saappidu= firstly here come, this eat.

8.        அவன் வந்தால் நானும் வருவேன்

If he comes I will also come.

Avan vanthaal  naanum varuven= he if comes, I too will come.

xxx

9.        ஆசிரியர் வந்ததும் பாடம் ஆரம்பித்தார்.

As the teacher came, he began the lesson.

Aasiriyar vanthathum paadam aarambiththaar

xxx

10.      உமா வரட்டும். லதாவும் வரலாம்.ஆனால் கீதா வரக்கூடாது.

Let Uma come; Latha also can come. But Geetha should not come

Umaa varattum; Lathaavum varalaam. Aanaal Geethaa varak koodaathu.

xxx

11.      அங்கே வருகிற பையன் என் தம்பி.

The boy coming there is my brother.

Ange varukira paiyan en thambi (There coming boy my brother)

xxxx

12.      பஸ் சரியாக 9 மணிக்கு வரும்.

Bus will come exactly at  9 O’clock

Bus sariyaaka onpathu manikku varum.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

1.        புலியைப் பார்த்த மான் திகைத்தது

The deer that saw the tiger was stunned (benumbed, stupefied)

திகை= amaze, astonish, stupefy, stun

பார்த்த= adjective participle or Verbal Adjective

பார்த்த past (பார்க்கிற present; ,பார்க்கும் future)

Paarththa – paarkkira — paarkkum

xxxxxxxx

2.        அவள் வழி தெரியாமல் திகைத்து நின்றாள்.

She was confounded and stood without knowing the way.

(தெரியாமல்= negative converbial திகைத்து= positive converbial)

Theriyaamal = தெரியாமல்

xxxxxx

3.        ஏன் திகைக்கிறாய்?

Why are you bewildered or astonished?

திகைத்தாய் past; திகை ப்பாய் future:

Thigai = amaze, astonish, confound, stun, stupefy, bewilder

xxxxxx

Prime Minister hoisted the flag.

4.        பிரதமர் கொடி ஏற்றனார்.

ஏற்று = hoist = etru

xxxxx

5.        கொடி ஏற்றுவது யார்?

Who is the one hoisting the flag? Who is the one hoisting ?

ஏற்றுவது verbal noun future , ஏற்றியது past, ஏற்றுகிறது present

Aatruvathu – etriyathu—etrukirathu–

xxxxxx

6.        இமய மலை உச்சியில் புலிக்கொடி ஏற்றினான் கரிகாலன்

On top of the Himalayas Karikaalan hoisted Tiger Flag.

Karikaalan was a great Choza king.

Imaya malai = Himalaya mountain; uchchiyil = on top

xxxxxx

7.        அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள்

They were sent out of the meeting

Koottam = crowd or meeting

xxx

8.        மயிலுக்கு பொன்னாடையை போர்த்தினான் பேகன்

Bekan adorned peacock with golden shawl.

Bekan was a great Tamil  philanthropist.

Mayil = peacock; mayilukku = to the peacock

xxx

போர்த்தினான்= He covered with cloth

xxxx

9.        குளிராக இருக்கிறது. போர்வையைப் போர்த்துங்கள்

It is cold; cover (him or her, this) with shawl/sheet/cloth

Kulir = cold, kuliraaka = as cold

xxxx

10.      டாக்டர் ஊசி போட்டவுடன் குழந்தை கத்தியது.

The child screamed as soon as the doctor injected (gave it an injection with needle

Inoculation/ vaccination ) ஊசி போடு = inoculate, vaccinate, give injection

ஊசி= needle= uusi or oosi

xxxx

11.      அறைக்குள் நின்று கத்தாதே

Don’t scream/shout standing inside the room

Arai = room

xxxx

12.      அவன் ஏன் இப்படிக் கத்துகிறான்?

Why does he scream, shout like this?

E En = why

xxxx

13.      இதைப் பயன்படுத்தினால் 10 ரூபாய் தள்ளுபடி உண்டு

If you use this there is 10 rupees discount (you will get 10 rupeees discount if you use this

Payan = use; payanpatuththinaal = if used

14.      அங்கே மதுபானத்தைப் பயன்படுத்தாதே

Don’t use liquor there.

Madhupaanam = liquor

xxx

15.      அதை தலைமேல் பொருத்து

Fix it on your head. Thalai = head; thalai mel = head on; on head

16.      சங்கை பெரிதாக ஊதினான்.

(he) blew the conch loudly= Perithaaka

சத்தமாக= noisily, loudly =Saththamaaka

xxxxxx

17.      கரை மேல் பெரிய அலைகள் மோதின

Big waves dashed on the shore/ coast /banks

xxxx

18.      அவன் அவள் மீது மோதினான்

He bumped on her (He crashed on her)

Avan Aval meethu mothinaan

xxx

19.      மரத்தின் மேல் கார் மோதியது

Car crashed on the tree.

xxx

20.      எனக்கு நாளைக்கு ஞாபகப்படுத்து.

Remind me tomorrow. Enakku / எனக்கு= to me

Enakku naalaikku njaapakap paduththu

xxxx

21.      நல்லவேளைக்கு நினைவுபடுத்தினாய்.

It my good time that reminded me

Nalla velaikku ninaivu paduththinaay

xxxx

22.      அதை உடுத்தினால் அழகாக இருக்கும்.

If it is worn, it will be beautiful ( If you put on that it would be beautiful; you would look beautiful)

Athai uduththinaal azakaaka irukkum

xxx

23.      அவன் மிகைப்படுத்திப் பேசுகிறான்.

He spoke in exaggeration (he exaggerated and spoke)

Mikaippaduththu = exaggerate

xxxx

24.      பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனான்.

Listening to the song he was dumbfounded (amazed, astonished)

Kiru kiru = fainting, going in to trance

xxxx

25.      டுத்பேஸ்டை பிதுக்கினால்தான் வரும்

Tooth paste will come out only if it is squeezed

Pithukku= squeeze

xxxx

26.      என் மேல் பழி சுமத்தாதே

Don’t blame me; don’t accuse me.

Pazi = blame, accusation

xxxx

27.      என் தலையில் அவ்வளவு காரியத்தையும்

 சுமத்திவிட்டார்கள்

Don’t load all tasks on my head (Don’t burden me with all the works)

Kaariyam = work, task

En thalaiyil avvalavu (that much) kaariyaththaiyum sumaththividaatheerkal

Sumaththu = load, put the weight on.

To be continued-……………………………

tags- Tamil, sentences, verbs

அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே (Post No.11,675)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,675

Date uploaded in London – –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே ! 

உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் இறைவனைத் தொழுவதற்குத்தான் உள்ளது என்ற விஷயம் அப்பர் பாடிய தேவாரத்தில்   திரு அங்கமாலை என்னும் பதிகத்தில் உள்ளது. அதர்வண வேதத்திலும் இதே  கருத்து இருக்கிறது அம்பலவாணரும் அதே கருத்தை இறைவனின் அடியார்களிடத்தில் எதிரொலிக்கிறார்.

ஹஸ்தெள  ச பாதெள நயனே ப்ரஸன்னே

கர்ணெள சுதீக்ஷ்ணெள  வதனம் ச காந்தம் 

நாஸா சு ரம்யா மனநாய சித்தம்

ஈ சேன  தத்தம் ததிதம் ஸமக்ரம்

— என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் / பொன்மொழிப்பாடல் – உள்ளது.

இதன் பொருள்

இரண்டு கைகள், கால்கள், கண்கள் , காதுகள், அழகிய முகம் , மூக்கு, சிந்திப்பதற்காக ஒரு மனம் — இவையாவும் நல்வழியில் செயல்படவே இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன .

ஆதி  சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சத் சங்க மஹிமையை ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் — என்ற பாடலில் எடுத்துரைக்கிறார் .

ஆயினும் தமிழில் மிக எளிமையாகச் சொன்னது அவ்வையார்தான்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று— அவ்வையார்

Xxxx

அப்பர் பாடிய திரு அங்க மாலை பதிகத்தில் இருந்து பாடல் முதல் வரிகளை மட்டும் காண்போம்

தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேரும் தலைவனைத்

தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ – கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை…………

செவிகாள் கேண்மின்களோ – சிவன்

எம்மிறை செம்பவள……………………………

மூக்கே நீமுரலாய் – முது

காடுறை முக்கணனை………………………….

வாயே வாழ்த்துகண்டாய் – மத

யானை யுரிபோர்த்துப்……………………………….

நெஞ்சே நீநினையாய் – நிமிர்

புன்சடை நின்மலனை……………………………

கைகாள் கூப்பித்தொழீர் – கடி

மாமலர் தூவிநின்று……………………………………..

ஆக்கை யாற்பயனென் – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் – கறைக்

கண்ட னுறைகோயில்……………………………

என்று ஒவ்வொரு பாட்டும் ஒரு அங்கத்தின் பயன், இறைவனைத் தொழுவதற்கானதே என்று சொல்கிறார்.

XXXX

இதோ இறைவனின் அடியார்கள் பற்றி சதகத்தின் பாடலும் பொருளும்:–

              76. நற்சார்பு

காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே

     கண்ணிணைகள் செய்புண் ணியம்;

  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு

     காதுசெய் திடுபுண் ணியம்;

பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்

     பேசில்வாய் செய்புண் ணியம்;

  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை

     பெரிதுசெய் திடுபுண் ணியம்;

வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்

     மேனிசெய் திடுபுண் ணியம்;

  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே

     மிக்கபூ ருவபுண்ணியம்;

ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே

– நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை

….. தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது

கண்இணைகள்செய் புண்ணியம் – பார்த்தற்கரிய பெரியோர்களின் தரிசனம் கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும்கருணையாய் அவர் சொல்மொழி

கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் – அவர்கள் அருளுடன் கூறும்மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,

அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில்வாய் செய்புண்ணியம்

– அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய்செய்த நல்வினை ஆகும், அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது

கைபெரிது செய்திடு புண்ணியம் – அவர்களைத் தவறாமல் வணங்கக்

கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், வீண்நெறி செலாமல்

அவர் பணிவிடை லபிப்பது தன்மேனி செய்திடு புண்ணியம் – பயனற்ற

வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய் செய்திட்ட நல்வினை ஆகும். விழைவொடு அவர் சொற்படி நடந்திட

லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் – விருப்பத்துடன் அவர் கூறியவாறு

நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.

 —SUBHAM—-

 tags-  நல்லோர், சத் சங்கம், அம்பலவாணர் , சான்றோர் , ஒளவையார் ,அப்பர், அங்க மாலை 

மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்! (Post.11,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,674

Date uploaded in London –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்!

ச.நாகராஜன்

மயூர கவி இயற்றிய சூரிய சதகத்தில் 36, 70, 94 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் அவர் ஒரே அக்ஷரத்தைப் பல முறை பயன்படுத்தி இருக்கிறார், அதனால் அந்த அக்ஷரம் வலூவூட்டப்பட்டு ஒரு வித மந்திரசக்தியை ஏற்படுத்துகிறது என்பதை சென்ற கட்டுரையில் குறிப்பிட்டோம்.

எடுத்துக்காட்டாக 36வது ஸ்லோகத்தை விரிவாகப் பார்த்தோம்.

அடுத்து இங்கு 70வது ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

நி: ஸ்பந்தானாம் விமாந வஸி

  விததிவாம் தேவவ்ருந்தாரகாணாம்

வ்ருந்தை: ஆனந்த – ஸாத்ரோத்யமமபி

  வஹதாம் விந்ததாம் வந்திதும் நோ |

மந்தாகின்யாம் – அமந்த: புலிநப்ருதி

  மருதுர்மந்தரே  மந்திராபே

மந்தாரை: மண்டிதாரம் தததரி

   திநக்ருத் ஸ்யந்தந: ஸ்தான்முதே வ: ||

மயூர கவி இந்த அற்புதமான ஸ்லோகத்தில் சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடுகிறார்.

பாடலின் திரண்ட பொருள் :-

பெரிய மாடங்களைக் கொண்டு அதில் வாழும் தேவர்கள் மகிழ்ச்சி பொங்க சூரியனைக் கண்டு வணங்க விமானங்களில் செல்கினறனர்.  ஆயினும் அவர்களால் வணங்க முடியாதபடி மிகவும் தூரத்தில் சூரியன் இருக்கிறான். காரணம் சூரியனின் உத்வேகமே. சூரிய ரதத்தைத் தொடர்ந்து தேவ விமானங்கள் செல்ல முடியாமல் அவை ஆங்காங்கே நிற்கின்றன.

இவ்வளவு வேகமுடன் செல்கின்ற ரதம் ஆகாய கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் செல்லும் போதே, நகரம் போலக் காணப்படும் மந்தா மலைக் குன்றின் முகடுகளிலும் , குகைகளிலும் மெல்ல மெல்லச் செல்கின்றது. இத்தகைய சிறப்புடையதும் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சூரியனின் ரதம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.

இங்கு நாம் ரசிக்க வேண்டியது சூரியனின் ரதம் செல்லும் பாணியையே. பொதுவாக ஜனசந்தடி அதிகமுள்ள ஒரு நகரத்தில் ரதம் செல்லும் போது அது மெதுவாகவே செல்ல வேண்டி வரும். ஆனால் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் அதன் வேகம் கூடுதலாகும்.

இங்கு மாடமாளிகை போல உள்ள மந்தார மலைக் குன்றுகளில் மெதுவாகவும் ஜன சஞ்சாரமற்ற மந்தாகினி மணற் பரப்பில் வேகமாகவும் சூரிய ரதம் செல்கிறது. இதை மெல்ல மெல்லச் செல்லும் சூரிய ரதம் என மயூர கவி அழகுறக் குறிப்பிடுகிறார்.

இந்த ஸ்லோகத்தில் ‘ந்த’ என்னும் அக்ஷரம் 12 முறைகளுக்கும் மேலாக வருவதைக் காணலாம்.

உரை நூல்கள்

சூரிய சதகத்திற்கு  15 உரை நூல்கள் உள்ளன.

அவையாவன:

1)  மதுசூதனர் இயற்றிய பாவபோதினீ  என்னும் உரைநூல்

2)  ஜகன்நாதர் இயற்றிய உரை நூல்

3)  வல்லபதேவர் இயற்றிய ஸூர்யானுவாதினீ என்னும் உரை நூல்

4)  யக்ஞேஸ்வர சாஸ்திரி இயற்றிய உரை நூல்

5)  திரிபுவநபாலர் இயற்றிய உரை நூல்

6)  ஜயமங்களர் இயற்றிய உரை நூல்

7)  ரங்கதேவர் இயற்றிய உரை நூல்

8)  கங்காதரர் இயற்றிய உரை நூல்

9)  பாலமபட்டர் இயற்றிய உரை நூல்

10)ஹரிவம்சர் இயற்றிய உரை நூல்

11) கோபிநாதசூரி இயற்றிய ப்ரபாவளீ என்னும் உரை நூல்

12) ராமபட்டர் இயற்றிய உரை நூல்

13) அன்வயமுகர் இயற்றிய உரை நூல்

14)ராமச்சந்திரர் இயற்றிய உரை நூல்

15) லிங்கையர் இயற்றிய உரை நூல்

இவற்றில் பல நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை.

சுவடியில் இருந்த மயூர பட்டரின் சூர்ய சதகம் நூலை சரஸ்வதி மஹால் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.

மேலே உள்ள தமிழ் அர்த்தம் சிறந்த ஆய்வை மேற்கொண்ட வேதாந்த சிரோம்ணி, தமிழ் வித்வான் திரு என்.சீனிவாசன், ஸம்ஸ்கிருத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் அவர்களால் ஆய்ந்து எழுதப்பட்டு 1998ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நன்றி : திரு என். சீனிவாசன்

   சரஸ்வதி மஹால் நூல் நிலையம்

***

Interesting Titbits from Valmiki Ramayana (Post No.11,673)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,673

Date uploaded in London – –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sita using old proverb to avoid suicidal thoughts:-

Sundara kanda 5-33- 10/11 (Hanuman says)

रोदनादतिनिश्श्वासाद्भूमिसंस्पर्शनादपि।।5.33.10।।

न त्वां देवीमहं मन्ये राज्ञ स्सर्वज्ञावधारणात्।

“From your weeping, your sighing and your touching the earth (gods do not touch the earth) and your signs of sovereignty, I do not think you are a goddess (meaning otherwise she possessed divine grace).

व्यञ्जनानि च ते यानि लक्षणानि च लक्षये।।5.33.11।।

महिषी भूमिपालस्य राजकन्या च मे मता।

I do not think you can be a divine creature, for I see you weep, breathe heavily; also that your feet touch ground. I also think that you might be Sita herself because I hear you say Rama, Rama. Certainly I must be right in guess. Then she reveals her identity and at the end days,

xxxx

V-33-31/32 (Sita speaks)

द्वौ मासौ तेन मे कालो जीवितानुग्रहः कृतः।।5.33.31।।

ऊर्ध्वं द्वाभ्यां तु मासाभ्यां ततस्तक्ष्यामि जीवितम्।

“That awful being has given me two months respite. If during these two months I be not rescued, then the only alternative is for me to take my life.

Then Sita says, slowly making up her mind that this is Hanuman. I have heard of the famous proverb which has come down to us from all time.

V -34-6

Provided only life is granted to us, we need not at anytime give up hope. After a time at least , prosperity must return to everybody. I thought I was not going to live, but now you come here, sent by Sri Rama

कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति मा।

एति जीवन्तमानन्दो नरं वर्षशतादपि।।5.34.6।।

“The adage that ‘joy comes to a living being even though it be at the end of a hundred years’ is popular. It appears true in my case”.

Xxx

73 TIMES ‘kaschit

Then to comfort herself , she puts a series of questions to hanuman , all in the style in which in the Ayodhya Kanda Rama puts questions about the kingdom to Bharata in that famous ‘kaschit, kaschit’ repeated 73 times in 76 slokas.

Kaścit (कश्चित्).—ind. Some boby, some one, a certain one:

Sita addresses to hanuman twenty two questions about her husband and Lakshmana and others, then she says

V -36-30/31

“My lord and husband Rama has none on earth so dear as myself.  A dearer person there cannot be, not his mother, not his father, not his brothers, no one. Nor is there one who is of the same degree. I shall live only so long as I hear about him and his movements”.

 The poet cleverly uses Rama four times.

न चास्य माता न पिता च नान्यः स्नेहाद्विशिष्टोऽस्ति मया समो वा।

तावत्त्वहं दूत जिजीविषेयं यावत्प्रवृत्तिं शृणुयां प्रियस्य।।5.36.30।।

इतीव देवी वचनं महार्थं तं वानरेन्द्रं मधुरार्थमुक्त्वा।

श्रोतुं पुनस्तस्य वचोऽभिरामं रामार्थयुक्तं विरराम रामा।।5.36.31।।


Then Hanuman replies in tender slokas. Of course Hanuman makes his gesture always when he addresses Rama or Lakshmana

Shirasya anjalim aadhaaya

Keeping his hands over his head , to do namaste.

–From Lectures on The Ramayana by The Rt. Honourable V S Srinivasa Sastri

tags- Titbits, Valmiki, Ramayana, Hanuman, Sita

மயூர கவியின் சூர்ய சதகம்! (Post No.11,672)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,672

Date uploaded in London –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 15,2024 மகர சங்கராந்தி நன்னாள். சூரியனை வழிபடுவோம்; உயர்வோமாக!

மயூர கவியின் சூர்ய சதகம்!

ச.நாகராஜன்

1

ஹர்ஷ சக்ரவர்த்தியின் அவையில் அவைப் புலவராக இருந்தவர் மாபெரும் கவிஞர் மயூர கவி.

அவருக்கு கொடிய நோயான குஷ்ட ரோகம் பிடித்தது.

இதனால் அவர் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் மனம் நொந்து போன மயூர கவி சூரியனை உபாசிக்கலானார்.

சூரியனின் வழிபாட்டால் அவன் அருள் அவருக்குக் கிடைக்க அவரது கொடிய குஷ்டம் நீங்கியது.

2

அற்புதமான நூலான சூரிய சதகத்தில் சதகம் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப நூறு ஸ்லோகங்கள் உள்ளன.

சொற்சுவையும் பொருள் சுவையும் கொண்ட இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தியைக் கொண்டிருப்பதால் சூரியனின் அருளையும் பெற்றுத் தர வழி வகுப்பவை.

இதில் இன்றைய அறிவியல் கூறி நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் உள்ளன.

தன் யோக சக்தியாலும், தவ மகிமையாலும், சூரியனின் அருளாலும் இந்தப் பேருண்மைகள் அவருக்குக் கிடைக்க அதை அவர் அப்படியே ஸ்லோகங்களில் பதித்தார்.

இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தி உடையவை என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

ஒரே அக்ஷரத்தை சில ஸ்லோகங்களில் அவர் பயன்படுத்துகிறார்.

இதன் மூலம் அந்த அக்ஷரத்திற்கான சக்தியை வலுவூட்டி மந்திர சக்தியையும் வலுப்படுத்தி, இதைப் பாராயணம் செய்வோருக்கு சூரிய அருள் கிடைத்து அதனால் ஏராளமான நலன்களும் பலன்களாகக் கிடைக்க அவர் வழி வகை செய்திருக்கிறார்.

குறிப்பாக மூன்று ஸ்லோகங்களைச் சொல்லலாம்.

ஸ்லோகம் 36இல் ‘த்ய’ என்ற அக்ஷரம் பல முறை வருகிறது.

ஸ்லோகம் 70இல் ‘ந்த’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.

ஸ்லோகம் 94இல் ‘ச’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.

3

ஸ்லோகம் 36ஐ இங்கு காண்போம்:

கந்தர்வை: கத்ய பத்ய

    வ்யதிகரித்வகோ ஹ்ருத்யமாதோ த்யவாத்யை:

ஆத்யைர்யோ நாரதாத்யை:

    முநிபிரப்பிநுதோ வேதவேத்யைர் விபித்ய |

ஆஸாத்யாபத்யதே யம்

   புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்

உத்யோதோ த்யோதிதத்யௌ: த்யது

    திவஸக்ருதோ (அ) ஸாவவத்யாநி வோத்ய ||

த்ய என்ற அக்ஷரம் இந்த ஸ்லோகத்தில் குறைந்த பட்சம் 18க்கும் மேற்பட்ட தடவைகள் வருவதைக் காணலாம்.

சூரியனின் புதிய ஒளியைக் காண்கின்றனர் கந்தர்வர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட சூரியனை வணங்கித் துதித்து வாத்தியங்களுடன் அவனது புகழிசை பாடுகின்றனர் என்கிறார் கவிஞர்.

எவனுடைய ஒளி பெற்று உலகம் அன்றாடம் உற்சாகம் மிக்க யௌவனப் பருவத்தை அடைகின்றதோ அவன், இனிமையான சொற்களைக் கொண்டு புனைந்த உரைநடையாலும், செய்யுள்களாலும், இன்னிசைக் கருவிகளுடன் கந்தர்வர்களால் துதிக்கப் படுகின்றான். வேதங்களில் வல்லவர்களான தும்புரு நாரதர் உள்ளிட்ட முனிவர்களால் துதிக்கப்படுகின்றவனும், ஆகாயத்தில் பிரகாசிக்கின்றவனுமாகிய சூரியனின் புத்தம் புதிய, அப்போதே தோன்றிய ஒளியானது உலகைப் புதிய யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது.

அது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.

இந்த ஸ்லோகத்தில் ‘ஆதோத்ய வாத்யை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘ஆதோத்ய வாத்யம்’ என்பவை விரல்களால் இயக்கப்படுபவை ஆகும்.

இவை நான்கு வகைப்படும்.

அவையாவன : 1) ததம் – தந்தி வாத்தியங்கள் – வீணை, தம்பூர் முதலியன.

2) வித்தம் – ஜாலர், சதங்கை முதலியன (உலோக வாத்தியங்கள்.

3) ஆனந்தம் – முரசு, மத்தளம் போன்ற தோல் கருவிகள்.

4) சுஷிரம் – புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற துளைக் கருவிகள்.

இப்படி இந்த நூலுக்கு உரை எழுதியுள்ள த்ரிபுவனபாலர் குறிப்பிட்டுள்ளார்.

4

அற்புதமான இந்த மகர சங்கராந்தி நாளில் சூரியனை வழிபடுவோம். மயூர பட்டர் இயற்றிய சூரிய சதகத்தைச் சொல்லி சூரியனைத் துதிப்போம்; அவன் அருளைப் பெறுவோம்.

நோயில்லா அருள் வாழ்வைப் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவி, சேவை புரிந்து நீண்ட நாள் வாழ்வோமாக!

சூர்யாய நம:

***

சூர்ய சதகம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

5 Jan 2018 — மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக்