Are you a victim of procrastination? Do you often find yourself unable to meet deadlines because you spent too much time in front of the TV, cooking or even sleeping? Well, I was exactly like that just twenty years ago. But, that’s now Past. These days, I can set goals and achieve them easily without any complaints. And you can do the same. Here’s a few tips to get you started.
1. Plan your daily must-do activities : Draw up a to-do list; preferably, write it down on paper; or, use a computer if you prefer. And, include all the MUST do’s in your list. These are things that must be done today.
2. Prioritize the activities : The more important ones taking precedence over the less important. If there are urgent things to do, but not important enough to be worried about if not done, put them below the important ones. The idea is based on the established principle that 80% of rewards come from 20% of effort directed towards accomplishing important work. This is based on ABC analysis – Always have a Better Control over the time available.
3. Start working now: Even if the deadline is 5 days from now or a month from now, starting out on an important project will help you avoid stress and do it well. When you start a major project just the day of the deadline, you are bound to stress out and leave out important points. Get in the habit of starting things before the deadline.
4. Start working bit by bit : Things may seem like huge mountains at first but it is important to stay calm. Just start working on the project or task on hand and don’t worry about getting it perfect. You still have a lot of time to iron out the details. Remember to start well before the deadline so you can focus on finishing the task and then ironing out the details. Trying to get everything right on first attempt is the best excuse used by procrastinators! Habit is a bit of it.
Procrastination is a deadly disease and it not only kills motivation but also your chances of success. Stop procrastinating right now and start achieving your goals. You can learn more about getting rid of procrastination and how to manage your time to achieve all your goals. Do it now – It is now or never .
23 Oct 2014 — In the Bhagavad Gita, Lord Krishna uses a beautiful word “Dirghasutri”. Literally translated it will be ‘Long Rope’. The word has got a bad …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குழந்தைகளுக்கு கதைகள் எழுதி புகழ்பெற்றவர் ரோல்ட் டால் (ROALD DAHL)
ரோல்ட் டால் போர்க் கால பிரிட்டிஷ் விமானி;
திரைப்பட வசன கர்த்தா;
நாவல் ஆசிரியர்;
டெலிவிஷன் நிகழ்ச்சிகள் தந்தவர்;
25 கோடி புஸ்தகங்கள் விற்பனைக்கு மூல புருஷன்;
குழந்தைகள் மனதில் நீங்காத இடம்பெற்றவர்;
அமெரிக்க நடிகையை மணந்தவர்.
பிறந்த தேதி – செப்டம்பர் 13, 1916
இறந்த தேதி – நவம்பர் 23, 1990
வாழ்ந்த ஆண்டுகள் – 74
பிரிட்டனில் ரோல்ட் டால் என்ற பெயரை அறியாத பள்ளிச் சிறார் இரார்.
சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும் என்ற குழந்தைகளுக்கான கதை மூலம் பிரபலம் ஆனவர் ரோல்ட் டால் .
பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் பிறந்தவர். இவருக்கு 4 வயதானபோது தந்தையை இழந்தார். அதற்கு முன்னரே, இவருடைய பெற்றோர்கள் நார்வே நாட்டிலிருந்து பிரிட்டனில் குடியேறினர். ஹாஸ்ட்டலிலேயே தங்கிப் படிக்கும் போர்டிங் ஸ்கூலில் (BOARDING SCHOOL) கல்வி கற்றார். அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தன. இதனால் இவர் எழுதிய கதைகளில், கொடுமை செய்யும், வயதில் முதியோரைப் பழிவாங்கும் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அதே போல எல்லாக் கதைகளிலும் சாக்லேட்டும் இடம்பெறும்.
பள்ளிக்கூட கல்வி முடித்த பின்னர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அதை உதறித் தள்ளிவிட்டு, ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு எண்ணைக் கம்பெனியில் வேலை பார்த்தார். 1939-ம் ஆண்டில் இரண்டாவது உலக மகாயுத்தம் வெடித்தது. பிரிட்டிஷ் விமானப் படையின் பெயர் ராயல் ஏர் ஃ போர்ஸ் (ROYAL AIRFORCE). அதில் விமானியாகச் சேர்ந்து வானில் பறந்து வெடிகுண்டுகளை வீசினார் ரோல்ட் டால்.
அவருடைய போதாத காலம்; விமானம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் உலகப் போரில் உளவாளியாக (SPY) பணி புரிந்தார்.
கனவில் மலர்ந்த கதைகள்
உலகப் போரில் ஏற்பட்ட காயங்களிலிருந்து குணமடையும் காலத்தில் அவருக்கு வினோதமான கனவுகள் உண்டாயின. அவற்றை சொற்களில் வடித்துக் கதைகளாகத் தந்தார்.
போர் முடிவுக்கு வந்தவுடன் தனது கதைகளை புஸ்தகமாக (FOR ADULTS) வெளியிட்டார். இவை குழந்தைகள் கதை அல்ல .
அவைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பிற் காலத்தில் அவை டெலிவிஷன் கதைகளாக வலம் வந்தன. அந்தக் கதைகளில் எதிர் பாராத முடிவுகள், விசித்திரமான முடிவுகள் இருக்கும்; அச்சறுத்தும் செயல்களும் கதைகளில் இடம் பிடிக்கும்.
ரோல்ட் டால் அமெரிக்க நடிகை பட்ரீஷியா நீல் (PATRICIA NEAL) – ஐ திருமணம் செய்தார். அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர்தான் குழந்தைகளுக்கான கதைகளை எழுதத் துவங்கினார் .அவருக்கு 44 வயதானபோது , அவர் எழுதிய ஜேம்ஸும் இராட்சத பீச் பழமும் என்ற கதை குழந்தைகள் உலகில் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல குழந்தைக் கதைகள் வெளிவந்தன. அவற்றில் கேளிக்கையும் வேடிக்கையும் இருக்கும். வயதில் பெரியோரை மட்டம் தட்டும். இதனால் பெற்றோரும் ஆசிரியரும் இக்கதைகளை வெறுத்தனர்; மறுத்தனர் ; கரித்தனர்.
அமெரிக்க நடிகையுடனான 30 ஆண்டு திருமண வாழ்வு முறிந்தவுடன் இரண்டாவது கல்யாணம் கட்டினார் . புதிய மனைவியின் பெயர் – பெலிஸிட்டி லிஸ்ஸி கிராஸ்லான்ட் (FELICITY LICCY CROSSLAND) அவர் டாலின் புகழ் பரவும் வகையில் குழந்தைகள் அறக்கட்டளை, ரோல்ட் டால் மியூஸியம் , கதை சொல்லும் நிலையம் ஆகியவற்றை அமைத்தார்.
திரைப்படங்கள் இரண்டுக்கு ,ரோல்ட் டால் கதை வசனம் எழுதினார்.
YOU ONLY LIVE TWICE (ஜேம்ஸ் பாண்ட்)
CHITTY CHITTY BANG BANG
இவ்வாறு பல துறைகளில் ரோல்ட் டால் இறங்கியதால் திரைப்படம், டெலிவிஷன், குழந்தைகள் இலக்கியம் போர்க்கால வீர தீரச் செயல் கள் , உளவுத்துறை , நாவல்-சிறுகதைத் துறை என்று எல்லா வகைகளிலும் அவரது பெயர் இடம்பெற்றது. இதனால் ரோல்ட் டாலுக்கு நிறைய விருதுகளும் பட்டங்களும் கிடைத்தன.
ரோல்ட் டால் இலக்கிய படைப்புகள்—
1953- SOMEONE LIKE YOU
1959 – KISS, KISS
1961 – JAMES AND THE GIANT PEACH
1964 – CHARLIE AND THE CHACOLATE FACTORY
1970 – FANTASTIC MR. FOX
1975 – DANNY THE CHAMPION OF THE WORLD
1982 – THE BFG
1983 – THE WITCHES
1988 – MATILDA
–SUBHAM–
tags: பிரிட்டிஷ் கதாசிரியர், ரோல்ட் டால்,Roald Dahl, Children Stories
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great
ராஜ் வேதம் கூறுகிறார், இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட வேண்டும் என்று!
ச.நாகராஜன்
டாக்டர் ராஜ் வேதம் – Dr Raj Vedam -(28-12-2019 வெள்ளிக்கிழமை அன்று ஆற்றிய உரை பற்றி ஹைதராபாத்திலிருந்து India EducationDiary.com (idnewsdesk) விவரமாகக் குறிப்பிடுகிறது.
டாக்டர் ராஜ் வேதம் திங்க் டேங்கின் இணை நிறுவனர். (CoFounder of Think tank, Indian History Awareness and Research, USA)
அவர் அளித்த உரையின் தலைப்பு :- ‘Ancinet India: What our History texts do not teach us’.
அவர் உரை நிகழ்த்திய இடம் :- CCRT Regional Centre, Hyderabad
வரவேற்கத் தக்க அந்த முக்கிய உரையின் சில பகுதிகளை பாரத மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
உரையின் சில முக்கிய கருத்துக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:
இன்றைய இந்திய இளைஞர்கள் தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாமல் திணறுகிறார்கள்.
இந்தியப் பண்பாடு பழம் பெரும் பண்பாடு. ஆனால் அது நமது நாட்டின் மனச்சாட்சியிலிருந்து அகற்றப்பட்டு விட்டது.
ஐந்து சக்திகள் நமது வரலாற்றிற்கு எதிராக ஒன்று பட்டு வேலை செய்து அதை ஒன்றும் இல்லாதது போலக் காட்டி விட்டன.
அவைகளாவன : காலனி ஆதிக்கம், ஐரோப்பியமயமாக்கும் உத்தி, சுயநலமிகளின் ஆதிக்கம், (இந்திய நாகரிகத்திற்கு எதிராக) பட்சபாதமுள்ள தாரளமாக்கும் கொள்கையின் படி அமைந்த கல்விக் கொள்கை மற்றும் மார்க்ஸிஸ்டுகள். (Colonial, Euro-centric, vested interests, Liberal Academia bias and Marxists)
இவை ஒவ்வொன்றிற்கும் இப்படிச் செய்வதற்கான காரணங்கள் தனித்தனியே வெறுபட்டு உள்ளன. காலனி ஆதிக்க வரலாற்று ஆசிரியர்கள் பைபிள் கூறும் கால அட்டவணையை ஒட்டியே அனைத்தும் இருக்கப்பட வேண்டும் என்று நினைத்தனர்; ஆகவே இந்தியாவின் தொன்று தொட்ட பழங்காலத்தைப் புறக்கணித்தனர். அவர்களின் கருத்துப்படி இந்திய நாகரிகம் தொட்டில் பருவத்தில் இருந்த ஒன்று; கிரேக்கர்களே நாகரிகம் என்றால் என்ன என்பதை இந்தியர்களுக்குகுச் சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆனால் இவர்களின் இந்தக் கருத்து இது மாபெரும் தவறு.
நம்மில் பலரும் நமது வரலாற்றிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் ஆகி விட்டோம். நமது வரலாற்றைப் பார்க்கும் போது, வானவியல் அறிவை எடுத்துக் கொள்வோம். நமது புராதனமான வேதங்கள், மஹாபாரதம் உள்ளிட்டவற்றில் ஏராளமான வானவியல் குறிப்புகள் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிப் பதிவு செய்துள்ளன. நமது முன்னோர்கள் வான சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். வானில் கிரகங்கள் நகர்வதை ஊன்றிக் கவனித்து அதைப் பற்றிய பல தகவல்களை வாய்மொழி மூலமாகவே அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தந்து வந்தனர். பழைய கால நூல்களில் அவை எழுதப்படுவதற்கு முன்பேயே வெகு காலம் முன்னமிருந்தே அவை கவனிக்கப்பட்டு வந்தவை.
நமது முன்னோர்கள் தங்களது அறிவை கதைகள் மூலமாகச் சொல்லி வந்தனர். எடுத்துக்காட்டாக ஒன்றைக் காண்போம். சந்திரன் தக்ஷ மஹராஜனின் 27 புதல்விகளை மணந்தான். இந்தக் கதையானது சக்தி வாய்ந்த ஒரு கற்பித்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். கதையின் படி சந்திரன் ரோஹிணிக்கு மற்ற மனைவிகளை விட அதிக முக்கியத்துவம் தருகிறான். இது வானவியல் கணிப்பு. வானவியல் பார்வை. இந்தப் பார்வையே ஒரு கதையாக நமக்குத் தரப்பட்டுள்ளது.
நமது இந்திய வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் தொட்டு ஆரம்பிக்கிறது. இது ஏனெனில், காலனி எழுத்தாளர்கள் பைபிளை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு 4000 வருடங்களுக்கு முன்னர் எதுவும் இருந்திருக்காது என்பது அழுத்தமான ஒரு நம்பிக்கை. ஆரம்ப காலத்தில் நமது வரலாறு காலனிய மிஷனரிகளால் தான் எழுதப்பட்டு வந்தது. இப்போது அது மார்க்ஸிஸ்டு வரலாற்று ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்குள் போய் விட்டது.
மரபணு ஆய்வானது, 70000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் இந்தியாவிற்கு வந்தனர் என்று தெரிவித்து நிரூபிக்கிறது. ஆனால் நமது புதைபொருள் ஆய்வின் முடிவுகளோ அதற்கு வெகு முந்தைய காலத்தைக் காட்டுகிறது! மரபணு ஆய்வின் முடிவுகள் ஆரியன் படை எடுத்தான் என்ற கொள்கையை முற்றிலுமாக முறியடித்து விட்டது!
மரபணு ஆய்வு, வானவியல் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள், இந்தியாவிலிருந்து இதர நாடுகளுக்கு ஏற்பட்ட அறிவுப் பரிமாற்றங்கள் ஆகியன, நமது வரலாறானது சரித்திர ஆசிரியர்கள் இன்று சொல்லும் காலத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இருப்பதைக் காட்டும்.
ஆரியப் படையெடுப்பு என்பதே அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்து (எதை வேண்டுமானாலும்) சொல்வதற்கெல்லாம் ஆதாரமாக (அவர்களுக்கு) அமைகிறது. ஆகவே நாம் நமது வரலாற்றை -உண்மையான வரலாற்றை- திருப்பி எழுத வேண்டும். அதை உலகிற்குத் தர வேண்டும்.
டாக்டர் ராஜ் வேதம் பல்துறை நிபுணர். பல கலைகளின் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.
வரவேற்கப்பட வேண்டிய இந்த முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவிப்போம்; அவரை ஆதரிப்போம்; அவருக்கு உறுதுணையாக ஒவ்வொருவரும் நிற்போம்.
வாழ்க பாரதம்! வந்தே மாதரம்!!
***
INDEX
டாக்டர் ராஜ் வேதம், அமெரிக்க அறிஞர், பல்துறை நிபுணர், இந்திய வரலாறு 5 சக்திகளால் தவறாகத் திரித்துத் தரப்பட்டன, ஐந்து சக்திகள் எவை எவை, இந்தியரின் வானவியல் அறிவு, தக்ஷன், சந்திரன், ரோஹிணியின் கதை,
மரபணு ஆய்வு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நாகரிகம் ஹிந்து நாகரிகம்
அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய் 4-6-8
Xxx
ஜூலை 2 வெள்ளிக்கிழமை
அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10
xxx
ஜூலை 3 சனிக்கிழமை
இந்த செல்வத்தின் மதிப்பு என்ன? லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9
Xxx
ஜூலை 4 ஞாயிற்றுக்கிழமை
அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3
xxx
ஜூலை 5 திங்கட்கிழமை
அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6
xxx
ஜூலை 6 செவ்வாய்க்கிழமை
பறவை, பூமியின் பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது 4-5-8
xxx
ஜூலை 7 புதன் கிழமை
அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3
xxx
ஜூலை 8 வியாழக்கிழமை
அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2
ஜூலை 9 வெள்ளிக்கிழமை
அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14
xxx
ஜூலை 10 சனிக்கிழமை
அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு. யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1
xxx
ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை
எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5
xxx
ஜூலை 12 திங்கட்கிழமை
அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13
xxx
ஜூலை 13 செவ்வாய்க்கிழமை
அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2
xxx
ஜூலை 14 புதன் கிழமை
கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8
xxx
ஜூலை 15 வியாழக்கிழமை
பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9
xxx
ஜூலை 16 வெள்ளிக்கிழமை
அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11
xxx
ஜூலை 17 சனிக்கிழமை
அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப் போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12
xxxx
ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை
அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13
xxx
ஜூலை 19 திங்கட்கிழமை
அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக 4-3-13
xxxx
ஜூலை 20 செவ்வாய்க்கிழமை
பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள் 4-3-1
xxxx
ஜூலை 21 புதன் கிழமை
அக்கினியே, நீ அசுரன்! மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5
இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை அறிந்தார்கள்)
(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13
xxx
ஜூலை 24 சனிக்கிழமை
அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள் 4-1-14
xxx
ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை
பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15
xxxx
ஜூலை 26 திங்கட்கிழமை
அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9
xxx
ஜூலை 27 செவ்வாய்க்கிழமை
அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு புகழுடன் தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)
xxx
ஜூலை 28 புதன் கிழமை
வேள்விக்காக தன் தலையில் விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே
அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Nothing can stop the man with the right mental attitude from achieving his goal. Nothing on earth can help the man with the wrong attitude. The greatest discovery of this generation is that human beings can alter their lives by altering their attitudes of mind. Never underestimate your potential power to change yourself. A positive attitude is a person’s passport to a better tomorrow.
Think , act and talk with enthusiasm and you will attract positive results.
1. Success begins in the mind.
2. Watch your words– how positive language can help to propel you towards your goals.
3. Heaven helps those who act.
4. Success is a state of mind . If you want success start thinking of yourself as a success.
Better keep yourself clean and bright, you are the window through which you must see the world. Attitudes are secret power working 24 Hrs a day for good or bad. You can’t always control circumstances, but you can control your own thoughts. There is nothing either good or bad but thinking makes it so.
A happy person is not a person in a certain set of circumstances but rather a person with a certain set of attitudes. Your success in life begins and ends with your attitude. You must first clearly see a thing in your mind before you can do it. You have control over the pictures that occupy your mind.
Vision is the art of seeing things invisible to others. If you can dream it then you can do it. Words are of course the most powerful drug used by mankind. Success is going from failure to failure without loss of enthusiasm. If you are positive and enthusiastic then people will want to spent time with you.
Getters do not get – givers get. You can succeed best and quickest by helping others to succeed. Treat every person you encounter with dignity and respect. To change your circumstances, first start thinking differently .
Winners don’t do different things. They do things differently. Hence in order to get success in all your assignments always have a positive attitude. Nothing in this world is impossible to a willing heart. The distance between success and failure can only be measured by one’s desire and attitude.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்
நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின் தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன் ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க
பிறந்த ஆண்டு- கி.மு.450
இறந்த ஆண்டு – கி.மு.385
இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian) என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள் (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.
அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.
அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார். இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.
இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்; அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece) நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.
8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …
15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …
Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …
Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …
Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,
கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.
ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?
ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.
அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?
இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.
எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.
இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.
“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”
“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”
“அதை விட வேறு எதையாவது கேளேன்”
“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”
சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.
திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.
வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.
ஒன்றுமே தெரியவில்லை.
மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.
சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.
தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.
பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.
“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”
தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே எழுதி வைத்துள்ளார்.
அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு
ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.
உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.
அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.
விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!