Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 23 December 2018 GMT Time uploaded in London – 16-23 Post No. 5819
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Greek, Chinese and Roman travellers or pilgrims visited India long ago. Later French, English and other Europeans visited India and gave their accounts. With the Muslim invaders came Arabic and Persian travellers. But Russian contacts with India was little and was not that popular.
Among the accounts of India, mention must be made of the ‘Voyage Beyond Three Seas’ by the Russian Afanasy Nikitin, a merchant from Tver (present name Kalinin). His historic journey took place from 1471 to 1474. It established direct contact between India and Russia.
Russians came to know about India through Iran and some western countries. Nikitin’s work was the first-hand account by a Russian. It was hailed widely and it was incorporated in Sofiskaya Chronicle. After Nikitin’s death in Smolensk, his manuscript was taken to Moscow in 1475; thus it was given state importance.
Nikitin sailed to Iran via Astrakhan. This was the usual route of the Russian merchants to the East. He then followed the trade from Iran to India. During his journey he carefully recorded what grows and where, how much things cost, where was found plenty of pepper and incense and the price of horses etc. The object of his journey was not merely commercial. He had a thirst for knowledge. He made a comparison of the Indian sculpture with the monument to emperor Justinian in Tsarsgrad (Constantinople). His remarks on Indian religion and the kingdoms of Vijayanagar and Bahmani are historically valuable. This is the first account of those kingdoms by a European.
Literary works
Indian literary motifs and stories infiltrated into Russia partly through the Wet and partly through Iran.
Romance of Barlaam and Joasaph was a transposition of the legendary life of Buddha.
Indian texts on the origin of castes came to Russian folklore tradition.
Knowledge of India poured into Russia through the following works
THE NARRATIVE OF MACARIUS OF ROME
VISIT OF ZOSIMA TO THE RAHMANS
NARRATIVE OF METHODIUS OF PATARA.
THE STORY OF THE INDIAN KINGDOM, based on the story of a letter from the Indian priest king John to Greek ruler Manuel Commenus. The letter in Greek appeared in the middle of the 12th century. Russian version appeared in the 13th century.
Alexandria (Alexander’s Romance) by pseudo Callisthenes is also another work.
Fables of Indian origin by Stephanitus and Ihnelates
Polish Chronicle of the Whole Word by M Bielski
Italian Cosmographia by G Botero
Flemish Cosmographia by G Mercator also has Indo -Russian contact information.
Archaeological finds in the form of coins and goods show relations between Kiev and India in 8th and 9th centuries.
In the 14 th century, Sultans of India maintained contacts with Russia. Indian gold coins of the 14th century were found in Volga region.
The ‘Tuglakhnama’ testifies to the service of Russians in the army of Ghiassudin Tughlak.
Babur sent an ambassador to Russian king Vassily Ivanovich
During the regime of Ivan the Terrible (1533-1584) commercial contacts were made. Indian goods reached Moscow through Iran. Indian merchants appeared in the Moscow market.
Gurumukhi Inscription
A bronze vessel with an inscription in Gurumukhi script of 16th century was found in Orsk (South Urals). India merchants appeared in Astrakhan in 1615.They amassed money by money lending business as well in addition to selling precious stones, medicines and incense.
During the rule of Shajehan and Aurangzeb, Russian ambassadors came.
Closer commercial contacts were established during the rule of Peter the Great (1689-1725)
Lebdev learnt Tamil and Sanskrit
In the academic field, lot of exchanges took place. A firm link was established by noted Russian Lebdev (1749-1817). He came to Madras in 1785 and learnt some Tamil. He went to Calcutta and learnt Bengali, Hindi and Sanskrit. He wrote extensively about Indian culture and religion.
Christ Visit to India
There is a tradition that Jesus Christ not only came to India but also studied in the Gurukulam in the Himalayas. He learnt Indian philosophy and the Upanishads from Hindu saints.
The Russian traveller Nicholas Notovich, on the basis of a manuscript discovered in Tibet, wrote in his book entitled Jesus Christ, that he spent twelve years in India.
Bible is silent about Jesus’ teenage years. After talking about birth and boyhood of Jesus it suddenly jumps to his later life. King Constantine was a Christian fanatic and he burnt all other versions of the Bible in the fourth century. Now there is an old Greek version in the British library. Scholars hesitate to reveal the contents because it contradicts the current Bible in hundreds or thousands of places!
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 23 December 2018 GMT Time uploaded in London – 8-57 am Post No. 5818
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்குப் பல நாட்டுத் தூதர்கள் வந்தனர். இது இந்திய வரலாற்றில் முக்கியத் தகவல்களைத் தருகின்றது.
ராமாயணத்தில் அனுமனும், மஹாபாரதத்தில் அக்ரூரன், கிருஷ்ணன் முதலியோரும் தூது சென்றதை நாம் அறிவோம். சங்க இலக்கியத்தில், அதன் பிறகு எழுந்த திருக்குறளில், தூதர் பற்றிய விஷயங்கள் நிறைய உள.
ஆயினும் கீழ்க்கண்ட தூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நிறைய தகவல்களை எழுதி வைத்துள்ளனர். இதே நேரத்தில் அசோகனும் அவனுக்கு முந்திய மன்னர்களும் வெளிநாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய செய்திகளையும் காணலாம்.
இதோ ஒரு பட்டியல்
சந்திரகுப்த மௌரியன் (கி.மு.302)ஆண்ட காலத்தில் கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகடார் என்ற மன்னன் மெகஸ்தனீஸ் என்ற தூதனை அனுப்பினான்.அவன் எழுதிய ‘இன்டிகா’ நூல்முழுக்கக் கிடைக்கவில்லை.ஆயினும் பிற்காலத்தில் அர்ரியன்,தியோதரஸ் முதலியோர் கொடுத்த மேற்கோள்களில் இருந்து நாம் மெகஸ்தனீஸ் சொல்லியவற்றை அறிகிறோம்.
அர்ரியன்= ஆர்யன்
தியோதரஸ் = தேவதரன்
ஸ்ட் ராபோ எழுதிய நூல்களிலிருந்து தெய்மஸ்ஸோஸ் ( தேவ மச்சான்) என்ற தூதர் மௌரிய மன்னன் பிந்துசாரனின் (கி.மு.300-273)அவைக்கு பல முறை வந்தது தெரிகிறது.
போரோஸ் (புரு) என்ற இந்திய மன்னன் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் அரசவைக்கு கி.மு 20-ல் தூதரை அனுப்பிய செய்தியையும் ஸ்ட் ராபோ நமக்கு அளிக்கிறார்.
பிந்துசாரன் அவைக்கு எகிப்திய மன்னன் டாலமி பிலடெல்போஸ் (கி.மு.285-247) அனுப்பிய தூதன் தியோநிஸோஸ் (தேவநிஸன்) வந்தான். எகிப்தில் புத்த மத பிரசாரம் வெற்றி பெற்றதாக அசோகனின் 13 ஆவது கல்வெட்டிலிருந்து அறிகிறோம்.
பாக்ட் ரி ய (வடமேற்கு இந்தியாவின் கிரேக்க ஆளுகை) அரசன் அந்தியகிடஸ் (கி.மு140-130) ஒரு தூதனை விதிசா (பில்ஸா) நகருக்கு அனுப்பினான். அந்த தூதனின் பெயர்-ஹீலியோடரஸ். அவன் பரம பாகவதன் அதாவது மஹா விஷ்ணு பக்தன்.அவன் வசுதேவனைப் போற்றி ஒரு பெரிய தூண் எழுப்பினான். அது இன்றுமுளது. அது ஒற்றைக்கல்லில் எழுப்பப்பட்ட தூண். இதிலிருந்து 2200 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள்,இந்துக்களாக மதம் மாறியது தெரிகிறது. ஏனெனில் கிரேக்க கடவுளர், வீரர்கள் ஆகியோரை அவர்கள் விஷ்ணுவாகவும்,சிவனாகவும் கண்டனர்.
ரோம் நகருக்கு இந்திய தூதர்கள் விஜயம்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியில் ரோம் நகரிலிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு நிறைய இந்திய தூதர்கள் சென்|றனர். இந்தியா முழுதும், குறிப்பாக தென் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதுவும் தூதர் தொடர்பை உறுதிப்படுத்தும்.
ட் ராஜன் (கி.பி.98-117)
ஹேட் ரி யன் (117-138)
அந்தோணியஸ் பயஸ் (138-161)
மார்கஸ் ஆரேலியஸ்(261-280)
ஹீலியோ ஜெரிலஸ் ( 218-222)
ஹீலியோ= சூர்ய
ஜூலியன் (270-275)
கான்ஸ்டன்டைன் (323-353)
ஜஸ்டீனியன் (527-535)
ஆகியோர் காலத்தில் இந்திய தூதர்கள் ரோம் நகருக்கு வந்ததாக எழுதி வைத்துள்ளனர்.
சிரியா நாட்டுக்கு இந்தியா, 218 முதல் 222 வரை தூதர்களை அனுப்பியது.
ஹர்ஷவர்தனன் (606-647), சீனாவுக்கு 641-ல் ஒரு தூதரை அனுப்பினான்.
இபின் படூடா என்ற தூதரை முகமது பின் துக்ளக் 1342ல் சீனாவுக்கு அனுப்பினன்.
சீனாவும் இருமுறை, ஹர்ஷனின் சபைக்கு தூதர் வாங் லியன்ட்ஸியை அனுப்பி வைத்தது.
முதல் முறை ஹர்ஷன் அவருக்கு வரவேற்பு அளித்தான். இரண்டாம் முறை வங் வந்தபோது, ஹர்ஷன் இறந்து போனதால் அர்ஜுனன் பதவியில் இருந்தான். அவன் சீன தூதரை விரும்பவில்லை. ஆயினும் வாங் 657-ல் புத்த கயா, வைசாலியில் புத்தமத பிரார்த்தனை செய்தார்.
பாரஸீக (ஈரான்) மன்னன் இரண்டாம் குஸ்ரூ சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேஸி காலத்தில் ஒரு தூதனனை அனுப்பி வைத்தான் இது கி.பி 627ல் நடந்தது. அவன் தூதர் நியமன கடிதத்தைக் கொடுக்கும் காட்சி அஜந்தா குகை ஓவியங்ளில் தீட்டப்பட்டுள்ளது.
1443-ல் பாரஸீக சுல்தான் ஷாரூக் ஒரு தூதரை அனுப்பினான். அந்த தூதரின் பெயர்- அப்துர் ரஜாக். கோழிக்கோடு, விஜய நகரம் முதலிய இடங்களுக்குச் சென்ற அப்துர், விஜய நகரத்தில் கஜானாவுக்குக் கீழ் சுரங்கப்பாதைகள் இருந்த சுவையான செய்தியை நமக்கு அளிக்கிறார். அங்கே தங்கப் பாளங்கள் கொட்டிக் கிடந்ததையும், நாட்டு மக்கள் கை, கால்,மூக்கு, காது எல்லாவற்றிலும் நகைகளுடன் காட்சி தந்ததையும் விவரிக்கிறார். அந்த நாட்டில் 300 துறை முகங்கள் இருந்ததையும் சொல்கிறார்.
கி.பி. 1615ல் மொகலாய மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு இங்கிலாந்திலிருந்து தாமஸ் மன்றோ வந்தார்.
சீன யாத்ரீகர்கள்
பாஹியான் (கி.பி.405-411), யுவாங் சுவாங் (630-645), இட்சிங் (671-695) ஆகிய சீன யாத்ரீகர்கள் புத்த சமய புனிதத்தலங்களைத் தரிசித்து புத்த மத நூல்கலைப் பயின்றனர். அவர்கள் இந்தியா பற்றி மிக விரிவாக எழுதியுள்ளனர்.
அசோகன் தனது புதல்வி சங்க மித்ரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கை முதலிய நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான்..
ஏசு கிறிஸ்து இந்தியா வருகை
ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமம் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்.
அக்பர் முதலிய மன்னர்களின் அவைக்கும் பல வெளிநாட்டினர் வந்தனர்.
இந்தியாவுக்கு யாத்ரீகர்களாகவும் தூதார்களாகவும் வந்த ஆல்பெருனி, இபின் படூடா, மார்க்கோ போலோ ஆகியோர் மிக விரிவாக இந்தியா பற்றி எழுதினர்.
மொகலாய,விஜய நகர சாம்ராஜ்ய செல்வ வளம் பற்றி ஜீன் பாப்டிஸ் டாவர்னியர் (1638-1663), நிகலோ மனூச்சி (1653-1708), பிரான்ஸ்வா பெர்னியர் (1656-1717) ஆகியோர் அற்புதமான தகவல்களைச் சொல்கின்றனர்
(இதுபற்றி தனி புத்தகமே எழுதலாம். டாவர்னியர், பெர்னியர் புத்தககங்கள், லண்டன் லைப்ரரிகளில் உள்ளன.நேரம் கிடைக்கும்போது அவர்கள் தரும் அற்புத விஷயங்களை உங்களுடன் பகிர்வேன்.
சிரி,உன்னோடு உலகம் சிரிக்கும்! அழு, நீ மட்டும் தனியாக அழுவாய்!!
ச.நாகராஜன்
சிரி,உன்னோடு உலகம் சிரிக்கும்; அழு, நீ மட்டும் தனியாய் அழுவாய்!
எப்படிப்பட்ட அற்புதமான கவிதா வரிகள்.
Laugh, and the world will laugh with you, Weep, and you weep alone;
இப்படி ஆரம்பிக்கும் சாலிட்யூட் என்ற கவிதையை இயற்றியவர் எல்லா வீலர் வில்காக்ஸ் என்னும் பெண்மணி. (Ella Wheeler Wilcox பிறப்பு: 5-11-1850 மறைவு: 30-10-1919)
சிறந்த கவிஞரான இவர் அமெரிக்காவில் வில்கான்ஸின் மாகாணத்தில் ஜேனஸ்வில்லி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது கவிதைகளில் அனைவரின் மனதையும் கவர்ந்த கவிதை சாலிட்யூட். அத்துடம் மட்டுமல்ல, உலக மக்களில் பெரும்பாலானோரால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முதல் இரண்டு வரிகளும் இந்தக் கவிதையில் இருப்பது தான்.
ஏராளமான பொருள் பொதிந்த வார்த்தைகளும் கூடிய இந்தக் கவிதையில் வார்த்தை விளையாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை.
ஒவ்வொரு வார்த்தையும் எடுத்து அதன் பின்புலம் என்ன என்பதை ஆய்வாகவே எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்தோர் ஏராளம். அவர்களின் கண்டுபிடிப்புகளை எழுதினால் அதுவே ஒரு பெரிய புத்தகம் ஆகி விடும்
அப்படி ஒரு புலமை; அப்படி ஒரு அர்த்தம்; அப்படி ஒரு மறை பொருள் – இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது.
கவிதை இது தான்:
Solitude
Laugh, and the world laughs with you;
Weep, and you weep alone;
For the sad old earth must borrow its mirth,
But has trouble enough of its own.
Sing, and the hills will answer;
Sigh, it is lost on the air;
The echoes bound to a joyful sound,
But shrink from voicing care.
Rejoice, and men will seek you;
Grieve, and they turn and go;
They want full measure of all your pleasure,
But they do not need your woe.
Be glad, and your friends are many;
Be sad, and you lose them all;
There are none to decline your nectar’d wine,
But alone you must drink life’s gall.
Feast, and your halls are crowded;
Fast, and the world goes by.
Succeed and give, and it helps you live,
But no man can help you die.
There is room in the halls of pleasure
For a large and lordly train,
But one by one we must all file on
Through the narrow aisles of pain.
இந்தக் கவிதை வில்காக்ஸின் மிகவும் பிரசித்தி பெற்ற கவிதை. ஒரு தனி மனிதனுக்கும் வெளி உலகிற்குமான தொடர்பை விவரிக்க ஆரம்பிக்கிறார் கவிஞர்.
எதிரெதிர் பதங்களைக் கொண்டுள்ள கவிதை இது. சிரி; அழு – இரண்டு வார்த்தைகளும் எதிரெதிர் அர்த்தங்களைத் தருபவை. உலகம் என்ற வார்த்தை கவிதைக்குள் முதல் வரியில் நான்காம் வார்த்தையாகவே வந்து விட்ட போதிலும் கவிதையின் தலைப்போ சாலிட்யூட் – தனிமை!
உலகில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்ற உத்வேகமூட்டும் வார்த்தைகளைக் கொண்டுள்ளது கவிதையின் முதல் இரு வரிகள்.
சிரி; சிரித்துக் கொண்டே இரு; உலகமும் சிரித்து உன்னை மகிழ வைக்கும்.
அழு; அழுது கொண்டே இரு; உலகம் உன்னிடமிருந்து ஒதுங்கி நின்று உன்னை மட்டும் அழ வைத்து வேடிக்கை பார்க்கும்.
ஆனால் கவிதையின் உள்ளர்த்தம் இன்னும் ஆழமானது. உலகில் ஒவ்வொருவரும் தனிமையில் இருப்பதாகவே கவிஞர் எண்ணுகிறார்.
இந்தக் கவிதையை அவர் எழுதிய சம்பவம் சுவையான ஒன்று.
ஒரு நாள் வில்கான்ஸின் மாகாணத்தில் உள்ள மாடிஸனுக்குச் செல்லும் வழியில் துயரமுற்றிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தார். அவளுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தார். ஆனால் எவ்வளவு தான் ஆறுதல் கூறினாலும் கூட அவளது துக்கத்தை அவரால் தணிக்க முடியவில்லை. அவளது இழப்பு அப்படிப்பட்ட ஒரு இழப்பு! மிகவும் கவலையுற்ற அவர் தனது ஹோட்டலுக்குத் திரும்பினார். தனது துயரம் தோய்ந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்த கவிஞர் வேகமாக ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டார்; எழுத ஆரம்பித்தார். அது தான் சாலிட்யூட் கவிதை!
நீதியை போதிக்க வந்த கவிஞர் உலகில் நம் முன்னர் விருப்பத் தேர்வாக அமைந்துள்ள ஏராளமானவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். நீ சிரிக்கலாம், பாடலாம், சந்தோஷப்படலாம், விருந்துண்ணலாம் (Laugh, Sing, Rejoice, Feast)- உடனே உன்னுடன் உலகம் சேரும்.
ஆனால் நீ அழுதாலோ, பெருமூச்சு விட்டாலோ, உண்ணாமல் இருந்தாலோ, துயரமுற்றிருந்தாலோ (Weep, Sigh,Fast, Grieve), அது உன்னைக் கை விட்டு விடும்!
But one by one we must all file on
Through the narrow aisles of pain.
கடைசி கடைசியாகப் பார்த்தால் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் சேர வேண்டியது தான்!
இது அனைவரும் காலன் முன்னே வரிசையில் தனித் தனியாக நிற்க வேண்டியதைக் குறிப்பிடுகிறதோ. கவிதையின் கடைசி வார்த்தையான பெயின் – வலி – மரண தேவன் தரும் இறுதி அவஸ்தையைத் தான் குறிப்பிடுகிறதோ!
Joyful sound, bound – சந்தோஷமான ஒலி எதிரொலியாக வருவது இருக்கட்டும். சவுண்ட்,பவுண்ட் என்பதிலேயே ஒரு ஓசை இனிமை இருக்கிறதல்லவா!
இந்தக் கவிதையில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் முடிந்த வரை அலசி ஆராயலாம்; புதுப் புது அர்த்தங்களைக் காணலாம்.
எல்லா வீலர் வில்காக்ஸ் ஒரு Rosicrucian கூட!
ரோஸிக்ரூசியன் என்றால்!
அது ஒரு மர்ம சங்கம். அதைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்க்கலாம்.
கவிதையை ரசித்து விட்டதால் சற்று சிரியுங்கள்;
அட, உலகம் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறதே!
Sukar is reciting the story of Sri Krishna to the seers of Naimisaranya Forest
FOLLOWING ARE THE PICTURES FROM A 100 YEAR OLD BOOK OF BHAGAVATA PURANA. THESE PICTURES COVER FIRST TWO BOOKS; BHAGAVATA HAS 12 BOOKS
Compiled by London Swaminathan swami_48@yahoo.com Date: 22 December 2018 GMT Time uploaded in London – 18-49 Post No. 5815
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Heavenly beauty Ramba tries to distract Sukar, but failed
Sukar addressing the saints in the Naimisaranya Forest
Brahma is coming out from Maha Vishnu in Ocean of Milk
When Sukar came the women in semi nude condition in the river never bothered; but when Vyasa came they hurriedly put their clothes on. Sukar’s mind was as pure as a crystal
Narada meetsVyasa
Asvattama was arrested and brought to Draupadi by Arjuna
Yudhisthira listening to Bhishma
Parikshit was crowned by Yudhisthira
Parikshit threw a dead snake around the neck of Samika muni and was cursed by him to die within seven days.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 22 December 2018 GMT Time uploaded in London – 9-44 am Post No. 5813
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வாரத்தில் மூன்று நாட்களாவது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கோ, லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரிக்கோ சென்று புத்தக வேட்டை ஆடும்போது பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிறைச் சாலையில் இருக்கும்போது தினகரன் மொழிபெயர்த்த வங்காளி நாடகம் மூலம் தினகரன் பற்றியும், அதை எழுதிய வங்காளி மொழி ஆசிரியர் பாபு துவிஜேந்திர லால் ராய் பற்றியும், அதை வெளியிட்ட உத்தமபாளையம் பாரதி புத்தக நிலையம் பற்றியும் அறிந்தேன். இதோ சில சுவையான விஷயங்கள்.
பாபு துவிஜேந்திர லால் ராய் என்பவர் வங்காளி மொழியில் பல நாடககங்களை எழுதிப் புகழ்பெற்றவர். அவர் ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றபோது ‘இந்திய கீதங்கள்’ Lyrics of Ind (லிரிக்ஸ் ஆஃப் இன்ட்) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதைக் கண்டோர் அவரை மெச்சினர். Light of Asia (லைட் ஆஃப் ஏசியா) நூலின் புகழ்மிகு ஆசிரியர் ஸர் எட்வின் ஆர்னால்ட்வரை அனைவரும் அவரைப் புகழ்ந்தனர்.
அவருடைய தாய் மொழியான வங்காளியிலும் எழுத வேண்டும் என்று மக்கள் வேண்டிய பின்னர் 15 நூல்களை எழுதி வங்கத் தாயின் பாத கமலங்களில் சமர்ப்பித்தார். 1913-ம் ஆண்டில் உயிர்நீத்த அவரது கவிதைகளும் நாடகங்களும் இன்று வரை புகழ்மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. 500 பாடல்களுக்கு மேல் எழுதி இசைத் துறையில் தமக்குள்ள புலமையையும் நிலை நாட்டியவர்.
அவர் விவசாயத்தில் பட்டம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் பல துறைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். பெண்கள் விடுதலை, தேச விடுதலையில், குடியானவர் உரிமையில் ஆர்வம் காட்டினார்.
அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த லட்சியத்தைப் போதித்தன. மனதில் தூய எண்ணங்களை உருவாக்கின. இயற்கையை வர்ணிப்பதில் அவர் வல்லவர். அவருடைய ‘பாஷாணி(அகல்யா) என்ற நாடகம் பிராமண தர்மங்கள் பற்றியது. ‘துர்காதாஸ்’ ஆண்மகனின் லக்ஷணங்கள் பற்றியது. ‘ராணா பிரதாப்’ க்ஷத்ரிய தர்மங்களைச் சிறப்பிக்கிறது .’சீதா’ நாடகம் பதி பக்தியையும், ‘மேவார் வீழ்ச்சி’,குடும்ப அன்பையும் விளக்கும். இவை அனைத்தும் மனதை ஒரு அபூர்வமான உலகிற்கு இட்டுச் செல்லும்.
குறைவான பெண் கதாபாத்திரங்களையே படைத்தபோதும், கிடைக்கும் போதெல்லாம், கதா பாத்திரங்கள் வாயிலாக பாரதப் பெண்களின் உயரிய லட்சியங்களைப் போற்றத் தவறியது இல்லை. 35 வயதிலேயே மனைவியை இழந்தார். எந்த நேயராவது நீங்கள் இரண்டாம் முறை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும்; மனைவி மீது அவ்வளவு அன்பு; தனது தாயாருடன் மனைவி வசித்தபோது அவரிடம் கண்ட அற்புத குணங்கள், தியாகங்களை நாடகக் கதைகள் வாயிலாக வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இறுதிவரை மறுமணம் செய்யாது பிரம்மசர்யம் காத்தார்.
“இந்த மானிட மிருகங்களுடன் தெய்வீகப் பெண்களின் சம்பந்தம் எப்படி உண்டாயிற்று? நாற்றமெடுக்கும் சேற்றில் சந்திரப் பிரதிமை எப்படி தோன்றுகிறது? இந்த அடிமைகளிடம் விலைமதிக்க வொண்ணாத ரத்தினங்கள் எப்படி வந்தது?”— என்றெலாம் வசனம் எழுதி பெண்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைப்பார்.
‘மேவார் வீழ்ச்சி’ என்னும் நாடகத்தில் தேச பக்தி, பதி பக்தி, தியாகம் முதலியன் கொழுந்துவிட்டு எரிவதைக் காணலாம்.
ஷாஜஹான் நாடகத்தில் பெண்களின் நிர்வாகத்திறமையைக் காட்டியுள்ளார்.
தமிழில், தினகரன் அவர்கள் மொழி பெயர்ப்பில் 1933ம் ஆண்டில் சில நாடகங்கள் வெளியாகின.
அவற்றை உத்தமபாளையம் பாரதிப் புத்தகாலயம் வெளியிட்டது.
துவிஜேந்தர்லால் ராயின் புதல்வர் திலீப் குமார் ராய் புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்கி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ராட்டூர் வீரன் துர்காதாஸ்’ முதலிய
நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்த தினகரன் சொல்லும் சுவையான செய்தி:-
“மனிதனுக்கு பால்யத்திலே விளையாட்டு, வாலிபத்தில் காதல், முதுமையிலே பகவதா பக்தி என்று பருவ ரஸனைகள் உண்டு. இது எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் பொது விதி. ஆனால் ருஸிகரமான நூல்கள் தரும் இன்பத்தை எதற்கு ஈடு சொல்லலாம்?
‘சுக வெறியைப் பூரணமாக அனுபவிப்பதற்கு ஒரு கவள அன்னமும், ஒரு கலச மதுவும் (தேனும்), தலை சாய்க்க நிறிது நிழலும், ரஸமான காவியம் ஒன்றும், காலஹிதமான காந்தை ஒருத்தியும் இருந்தால் போதும் ; அப்போது வெறுமையான பாலைவனமும் ரமணீயமான உத்தியானம் ஆகிவிடுகிறது- என்று பாரசீக மஹா கவி உமர் கையம் தனது ரூபாயிற் கூறுகிறான்.
பாலைவனத்தைப் போல் வெறுமையும் வறுமையும் நிறைந்த சிறைக் கம்பிகளுக்கிடையே சிந்தை புழுங்க, உடல் ஒடுங்க, தனிமைத் துயரத்தாலும் உற்றாரைப் பிரிந்த ஹிருதய கிரந்தியாலும் சிறையில் , நிறம்பிய துக்கச் சுமையைச் சுமந்து கொண்டு இராஜ மகேந்திரம் மத்திய சிறையில் ஓர் அறையில் கிடந்தபோது ஒரு நாள் இரவு
என் பக்கத்து அறையில் இருந்த நண்பரின் நெடு மூச்சும், நெட்டுயிர்ப்பும் எனக்,, நன்றாய்க் கேட்டது. ஒரே கப்பலில் துக்கிகளான இரண்டு யாத்ரீகர்கள் சம்பாஷித்துக் கொள்ளுவது போல, நண்பரும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம் .நண்பர் ஹிந்தியில் நல்ல பண்டிதர்; நல்ல பிரசாரகர். கதையாட்டிலேனும் கேட்டுக் களித்தும் கண்ணயரலாம் என்று அவரிடம் ஒரு கதை கேட்டேன். நண்பரும் கூறினார். ஹா! எவ்வளவு ருசியான கதை! எவ்வளவு புளஹிதமான ரஸனை! எத்தனை வெற்றி தரும் மயிர் சிலிர்க்கும் செயல்கள்! சிறைத் துயர் சென்ற இடம் காணேன்.
துர்காதாஸின் கதையைக் காதால் கேட்ட மாத்திரத்தில் அதை பாஷாந்தரத்திலேனும் (Translation) படிக்க வேண்டும் என்று ஹிந்தி பாஷையைப் படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே எனக்கு ஹிந்தி பாஷையில் பேசும் ஆற்றல் இருந்ததால் இரண்டொரு வாரத்தில் அட்சர சிட்சையும், அவற்றைக் கூட்டி வாசிக்கும் ஆற்றலும் எனக்கு ஏற்பட்டது. பின்னர் கோயமுத்தூர் சிறையில் அதை இன்னும் சிறிது வளர்க்க சந்தர்ப்பமும் ஸர்வ அவகாசமும் கிட்டியது. ஆனால் துர்காதசைப் படிக்கும் பாக்கியம் அல்லிப்புரம் சிறையிலேதான் பெற்றேன். படித்தேன் படித்தேன்; பன்முறை படித்தேன்; தெவிட்டவில்லை. எத்தனை முறை படித்தாலும் நூற்சுவை அதிகரித்ததேயன்றி குறைவு என்பது கிஞ்சிற்றும் கிடையாது. துவிஜேந்தர்லால் ராயின் நாடகப் பூங்காவிலே ‘மீவார் வீழ்ச்சீ’யைப் பார்த்தேன்; ராணா பிரதாபனை ரஸித்தேன்; நூர்ஜஹானை நுகர்ந்தேன்; ஷாஜஹானிற் சஞ்சரித்தேன்; ஸிம்ஹள விஜயத்தைச் சிந்திதேன்;எல்லாம் ஒன்றிற்கொன்று அதிகமான யாசனையையும் வாசனையயும் தந்தன.
தமிழ் நாடக பீடத்திலே இத்தகைய அபூர்வமான கதைகள் ஏன் அரங்கேற்றப்படலாகாது? வன்னியையும் அல்லியையும் நல்ல தங்காளையும் சதாரத்தையும் சாவித்திரியையும் அரிச்சந்திரனையும் கோவலனையும் சிறுத்தொண்டரையும் விட்டால் தமிழ் ஜாதிக்கு வேறு கெதி இல்லையா? காதல் பாகத்தை மற்றும்தானா தமிழன் ரஸிக்கக் கற்ற்றிருக்கிறான்? வேறு ரஸனைகள் அவனுக்குத் தெரியாதா? துர்காதாஸின் தேசாவேசத்தையும், பிரபு பக்தியையும் , யுத்த கௌசல்யத்தையும் மனிதத்துவத்தையும் குறிக்கின்ற ஒரு நாடகத்தைக் காண்பி! மஹா மாயாவின் துணிச்சலையும் சாரணத் திறமையையும் பிரசாரத் திறமையயும் காட்டும் ஒரு கதையாவது சொல்லு! திலேர் கானுடைய ஸ்நேகத்துவத்தையும், வீரத்தையும்,சம தர்மத்தையும் உருவகப்படுத்துகிறதான சரித்திரம் ஒன்றைத்தானும் குறிப்பிடு! காதல் ரஸம் நமது நாடகங்களில் நிறைய உண்டு; சோக ரசமும் இருக்கிறது; வீர ரஸம் இல்லை; மற்ற ரசங்களும் இல்லை; பூலோகம் போய்க்கொண்டிருக்கிற புரட்சி (மாறுதல்)ப் பிரக்ருதியில் இந்த தமிழ் நாடக அரங்கம் மாத்திரம் இன்னும் ஏனோ கர்நாடகத்திலேயே இருக்கிறது . ஜெகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்) செய்திருக்கிற நாடகங்களை ஒன்றுவிடாமற் பார்! கதேயயையும் ஷில்லரையும் நடி! பிளெச்சருடைய வீர விருந்தினனாய் இரு!மோலியரின் ஹாஸ்ட்ய ரசத்தைப் பாருங்கள். பெர்னாட்ஷாவின் பெருமையைப் படி! துவிஜேந்தர்லாலின் ஜீவ வேகத்தையும் சிந்தி! தமிழா! எனது பிரிய தமிழா! உனது தனிக் காதல் ருசியை நான் தடுக்கவில்லை. உனது பரமார்த்தீகமான நாடககக் கதைகளை நான் வெறுக்கவில்லை. ஆனால் அந்த ஒரே ரஸத்தாலே மாத்திரம் மனித மனது திருப்திகொண்டு விடாது. இதர ரசனைளையும் ரஸிப்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்லுகிறேன் பார்!
நமது தமிழ் மன்னர்கள் காலத்திலே நிகழ்ந்ததான பல ரஸனைகளைப் புகுத்தி பல கதைகலை எழுதி நாடக மேடைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பிறநாட்டு நாடக ஆசிரியர்கள் செய்திருக்கிற நாடககங்களையும் தமிழில்
கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது.எவரேனும் கற்பானாசிரியர்கள் தமிழ் ஜாதியில் இருக்கமாட்டார்களா? எழுத மாட்டார்களா? என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, நீயேதான் ஏன் எழுதக் கூடாது? என்கிற கேள்வியை என் மனதுக்குள் ஏதோ ஒரு இயந்திரம் கேட்டது. முயன்று பார் என்று மனோதர்மமும் சொல்லிற்று. தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் முயற்சித்திருக்கிறேன். அதன் முதல் தோற்றம் இது.
(இதற்குப் பின்னர் தினகரன் அக்காலத்திய நாடக அரங்குகளில் காணப்பட்ட விசித்திரங்களைக் கூறுகிறார்)
கடைசியாக அவர் சொல்லுவது
ஸ்வர்கீய த்விஜேந்தர்லால் செய்த ‘துர்காதாஸை’ நான் அப்படியே தமிழில் ஆக்கிவைக்கவில்லை. கதாசாரத்தில் ஒரு சிறு விஷயத்தையும் கூட மாற்றாமலுந் திருத்தாமலும் ஹிந்தி பாஷாந்தரத்தில் உள்ளவாறே கூறியிருக்கிறேன். ஆனால் கற்பனையிலும் வர்ணனையிலும் துவிஜேந்திரனை ஆங்காங்கு கடந்துவிட்டிருப்பதால் அநேகமாய் முதல் பார்வைக்கு இந் நூல் பாஷாந்திரமாகவே தோன்றாது; தழுவி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றும்
சுத்தத் தமிழ் வளர்ப்பவர்கள் என் மீது ஒரு குறை கூறுவார்கள். எனது நடையிலே சம்ஸ்கிருத பதங்கள் விரவியிருப்பது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பிற பாஷையே கூடாதென்கிற இப் பாஷாபிமானிகள் பாஷையை வளர்க்கிறவர்கள் ஆக மாட்டார்கள். சம்ஸ்கிருதப் பதங்களைப் பெரும்பாலாகக் கொண்டிருக்கிற ஹிந்தி இந்தியாவின் ராஷ்டிரப் (பொது) பாஷையாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதே எனது வாசகத்தில் சம்ஸ்கிருத, ஹிந்தி, உர்து நான் சேர்த்திருப்பதற்கு மன்னிப்பாகும்.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அறிவியல் துளிகள் அத்தியாயம் 404
(எட்டாம் ஆண்டு நாற்பதாம் கட்டுரை)
ஒபிஸிடி கோட் – 2
ச.நாகராஜன்
முதலில் ஒபிஸிடி கோட் முறையை யார் பின்பற்றலாம் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். கர்ப்பிணிகளும், டயபடீஸ் 2 மற்றும் நீடித்த நோயுள்ளவர்கள் இதைப் பின்பற்றுதல் கூடாது. நல்ல ஆரோக்கியமாய் இருந்து ஆனால் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே இதைப் பின்பற்றலாம். குடும்ப டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னரே ஏனையோர் உபவாச முறையைப் பின்பற்றலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் (240 மில்லி லிட்டர்) நீர் அருந்துதல் வேண்டும்.
உபவாசத்தின் போது சோர்ந்து படுத்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
பசி எடுப்பது போல இருந்தால் நீர் அருந்தலாம் அல்லது காப்பி குடிக்கலாம்.
யாரிடமும் சாப்பிடாமல் இருப்பதைச் சொல்ல வேண்டாம். உடனே அவர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உபதேசத்தை ஆரம்பித்து விடுவர்.
ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே பலன் தெரிய ஆரம்பிக்கும்.ஆகவே பொறுமை தேவை.
உபவாசம் இல்லாத தினங்களில் நல்ல சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.
முதலில் வாரம் ஒரு முறை ஆரம்பிக்கலாம். பிறகு உடல் தகுதிக்கும் மனப் பக்குவத்திற்கும் தேவைக்கும் தக இதை வாரம் இரு முறை ஆக்கலாம்.
12-12 என்ற முறையை ஆரம்பத்தில் பின் பற்றலாம். அதாவது இரவு 7 மணிக்குச் சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலை 7 மணிக்கே காலை உணவைச் சாப்பிட வேண்டும். 12 மணி நேர உபவாசம், பின்னர் அடுத்த 12 மணி நேரத்திற்குள் உடலுக்குத் தேவையான உணவு என்பது இந்த முறை. இது எளிய முறை.
இன்னும் அதிகமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்
16 – 8 மணி நேர உபவாசம் என்ற முறையை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது இரவு 8 மணிக்கு சாப்பாட்டை முடித்து விட்ட பின்னர் அடுத்த நாள் காலை உணவை விட்டு விட்டு 12 மணிக்குத் தான் உணவை ஏற்க வேண்டும். ஆக 16 -8 என்ற மணி நேரப்படி இந்த முறை அமையும்.
உடலின் இயக்கத்தினால் ஏற்படும் கலோரி இழப்பு போக உடல் பயிற்சியினால் சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. 95 சதவிகிதம் உணவுத் திட்டத்தினால் மட்டுமே உடல் எடை குறையும் என்கிறார் டாக்டர் பங். ஆகவே இந்த 95 சதவிகித உணவுத்திட்டத்தின் மீது உங்கள் அக்கறையைச் செலுத்துங்கள் என்பது அவரது அறிவுரை.
ஆகவே உடலில் எடையைக் கூட்டும் இன்சுலின் பற்றியும் அதை ஊக்குவிக்கும் உணவுகளின் மீதும் நமது பார்வை பதிய வேண்டும். குறைந்த பட்ச இன்சுலினுடன் உடல் நெடு நேரம் இருந்தால் போதும். இன்சுலினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
இதற்கான நல்ல வழி 16 மணி நேர உபவாசம் தான். உடலுக்கு இன்சுலின் ப்ரேக் தர வேண்டும். அது உடல் எடை கூடுவதைத் தடுக்கும்.
“எதை உண்ணுவது என்பதும் முக்கியம். பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு வகைகளும் விலக்கப்பட வேண்டும். சர்க்கரைச் சத்து, மாவுச் சத்து பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி உண்பதை விட்டு விட்டு குறைந்த தடவைகளே உண்ணுதல் வேண்டும். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது. பாட்டி கால வைத்தியம் என்று இதற்குப் பெயர். ஆனால் அது தான் சிறந்த உணவுப் பழக்கம்.
உடல் மிகவும் பருமனாக இருந்தால் காலை உணவு நேரத்தை மாற்ற வேண்டும். குறைந்த அளவு உணவை காலை 8 மணிக்கு பதிலாக 12 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம். 12 மணி நேர உபவாசத்திற்கு பதில் 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் உபவாசத்தைத் தொடரலாம். இதைத் தான் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்கிறேன்” என்கிறார் டாக்டர் பங்.
இந்தப் பழைய காலப் பழக்கத்திற்கு யாரும் இன்று மதிப்புக் கொடுப்பதில்லை. ஆனால் இன்றைய தேவை அது தான்.
தரைக்கு மேல் வளரும் செடிகளிலிருந்து கிடைக்கும் கறிகாய்கள், சோயா, பருப்பு வகைகள், ஆப்பிள், பெர்ரி போன்ற பழ வகைகள், புரோட்டீன் உள்ள அசைவ உணவு வகைகள் முதலியவற்றை நமது உணவுத் திட்டமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட புதிய வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் பருமன் குறைந்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உங்கள் உடல் பொலிவு கூடும். ஆயுள் நீளும். ஆரோக்கியம் நிலைப்படும்.
உலக நாடுகளில் இன்று இந்தியா தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கக் கூடிய நாடாகத் திகழ்கிறது. சீனாவில் ஜனத்தொகை கூடுதலாக இருந்தாலும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் காரணமாக இன்று அதிக வயதானவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் இளைஞர்களின் நாடாகத் திகழும் நம் நாட்டில் இளைஞர்கள் தொப்பை இல்லாதவர்களாக ஆரோக்கியமான உடல் அழகுடன் திகழ இன்றைய தேவை: ஒபிஸிடி கோட்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
அமெரிக்க டி.வி. சீரியலான ஸ்ட்ரேஞ்ஜ் ஏஞ்சல் (Strange Angel) 2018 ஜுனில் ஆரம்பித்து மக்களைக் கவர்ந்த ஒரு சீரியல். இது ராக்கெட் விஞ்ஞானியான ஜாக் பார்ஸன்ஸின் (Jack Parsons) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்.
அமெரிக்கரான ஜாக் பார்ஸன்ஸ் (பிறப்பு 2-10-1904 மறைவு 17-6-1952) கலிபோர்னியாவில் உள்ள பாஸடோனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு எப்படியாவது சந்திரனுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை. அது மட்டுமல்ல, இன்னும் தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செல்ல அவர் ஆசைப்பட்டார்.
தனது இல்லத்தின் பின்புறத்திலேயே அவர் ராக்கெட்டைக் கட்ட ஆரம்பித்தார். பாஸடோனாவில் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி ஒன்றையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் விஞ்ஞானிகளோ இதெல்லாம் சாத்தியமான காரியம் இல்லை என்று சொல்லி வந்தனர். அது மட்டுமன்றி அல்தாஸ் க்ரோலி (Althaus Crowley) என்பவர் ஆரம்பித்த தெலேமா என்ற தத்துவம் கொண்ட அமானுஷ்யம் சம்பந்தமான (அக்கல்டிஸம்) சங்கத்தில் சேர்ந்தார்.
பகலில் ராக்கெட்டைக் கட்டுவது, இரவில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆராய்ச்சி என்று வாழ்க்கையைத் தொடரலானார். எஃப்.பி. ஐ இவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் வீட்டில் இருந்த லாபரட்டரியில் திடீரென்று ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.
ஒரு இரசாயனக் கரைசலை அவர் கலக்க முயன்ற போது அது கீழே சிந்தவே வெடி விபத்து ஏற்பட்டதாகப் பின்னர் தெரிய வந்தது. பெரிய காயங்களுக்குள்ளான அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் விபத்தின் காரணமாக சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவ மனை டாக்டர்கள் அறிவித்தனர்.
தொலைக்காட்சித் தொடரில் ஜாக் பார்ஸன்ஸாக ஜாக் ரெய்னர் நடித்துக் கலக்கியுள்ளார். 37 ஆண்டுகளே வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை ஜார்ஜ் பெண்ட்லி எழுதியுள்ளார். விண்ணில் பறக்க விரும்பிய இந்த விஞ்ஞானி இளம் வயதிலேயே மண்ணில் விபத்திற்குள்ளானது மகத்தான சோகம்!