பெங்களூர் சீனிவாசன் உலகப் புகழ் பெற்றது எப்படி? (Post No.4180)

Written by London Swaminathan

 

Date: 2 September 2017

 

Time uploaded in London- 16-30

 

Post No. 4180

 

 

பெங்களூரில் 1917ஆம் ஆண்டில் நவம்பர் 13 தீபாவளித் திருநாள். ராமா சாஸ்திரி, வெங்கலெட்சுமி அம்மாளுக்கு தவப் புதல்வராக அவதரித்தார் ஸ்ரீனிவாசன்.  சிறு வயதில் நல்ல துணிசல் மிக்கவர். ஒரு அமாவாசை தினத்து மாலை வேளையில், இருள் சூழச் சூழ ஒரே பரபரப்பு.  இருள் சூழ்ந்த குளத்துக்கு பக்கத்தில் நின்ற சிறுவர்கள் குளத்தில் வசிக்கும் பேய்கள் பற்றி கிசுகி சுக்கத் துவங்கினர். பேய்கள் வாழும் குளத்துக்கு யார் தனியாகச் சென்று திரும்பி வர முடியும் என்று சவால் விட்ட வண்ணம் இருந்தனர். திடீரென ஒரு சிறுவன் விறு விறு என்று குளத்துக்கு நடந்தான்.கை, கால் கழுவி வந்தான். எல்லோரிடமும் காட்டினான். பேய்களும் இல்லை; அதைக் கண்டு பயப்படுபவனும் இல்லை என்ற செய்தி எல்லோருக்கும் கிடைத்தது. அவன் தான் ஸ்ரீனிவாசன்

 

குண்டு என்ற மாணவன் மகா சுட்டி. விஷமத் தனத்தின் உருவகம். விளையாடும் சிறுவர்களுக்கு இடையே சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பவன். யாரும் அவனை அடக்கத் துணிவில்லை. ஒரு நாள் அவனைவிட ஒல்லியான ஒரு சிறுவன் குண்டுவுடன் மோதினான். குண்டுக்குத் திகைப்பு. எவ்வளவோ சமாளிக்க முயன்றும் முடியவில்லை. குண்டு மல்லாந்து விழவே அவன் மீது நின்றுகொண்டு ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் இனி எந்தச் சிறுவர்க்கும் தொல்லை கொடுப்பதில்லை என்று எழுதி வாங்கினான். குண்டுவை வீழ்த்திய அவந்தான் ஸ்ரீனிவாசன்.

ராமா சாஸ்திரிகள் பெங்களூரில் ஒரு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர். சீனிவாசன் எட்டாம் வகுப்பு மாணவன். தனது மகன் சரியாகப் படிப்பதில்லை என்று எண்ணிய ராமா சாஸ்திரி பையனின் கையில் பிரம்பால் அடிக்கத் தொடங்கினார். அவன் ஒரு கையில் நிறைய அடி வாங்கி விட்டதால் அடுத்த கையை நீட்டினான். அதிலும் அடிக்கத் தொடங்கினார். அந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த வெங்கட்ரா மய்யர் என்னும் ஜோதிடர் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, கையைத் தடவிக் கொடுத்தார். வியப்பும் திகைப்பும் மேலிட்டது ஜோதிடருக்கு.

 

ராமா சாஸ்திரியிடம் சொன்னார்: நீங்கள் பெரும் பாக்கியசாலி. தலை சிறந்த யோகி இங் கே பிறந்துள்ளார். அடுத்த சங்கராச்சாரியாராக இவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது நீங்களே உங்கள் மகன் காலில் விழ நேரிடும்.

வெங்கட்ரா மய்யர் சொன்னது உண்மயாயிற்று. சிருங்கேரி மடத்தின் 35ஆவது சங்கராச் சாசார்யாராக — அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகள் — என்ற பெயரில் பட்டம் ஏற்று 1989 வரை கொடி கட்டிப் பறந்தார்.

இது போன்ற பல நல்ல செய்திகளும் அவருடைய முக்கிய உபதேசங்களும் ஒரு சிறிய புத்தகத்தில் கிடைக்கிறது. சிருங்கேரி மடத்துக்குச் சென்றாலோ நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கலாம்.

 

எங்கள் பாக்கியம்

சிருங்கேரி மஹாசந்நிதானம் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அழைத்து,  நாங்கள் பாத பூஜை செய்தோம். முடிவில் சஹோதர, சஹோதரியை தனித் தனியே அழைத்து பழம் கொடுத்து ஆசீர்வதித்தார

These pictures are the Rare Photographic Exhibition held at Madurai Setupati High School in August 2017.

—subham–

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4 (Post No.4179)

Written by S.NAGARAJAN

 

Date: 2 September 2017

 

Time uploaded in London-5-44 am

 

Post No. 4179

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no link to he article.

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 27வது கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4

 ச.நாகராஜன்

 

 

“இந்தப் புத்தகத்தில் இருப்பதை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவயவில்லை என்றால் நீங்கள் தத்துவம் பற்றிப் படிக்கவே வேண்டாம் – பேஸிலியஸ் வாலெண்டினஸ்

                              

           12 திறவுகோல்கள் (Twelve Keys) என்ற புத்தகத்தைப் புரிந்து கொண்டு அதன் படி செய்தால் ஈயம் தங்கமாக மாறும் என்று சத்தியம் செய்து கூறுகிறார் பேஸிலியஸ் வாலெண்டினஸ்.

 

     முதலில் எனது கொள்கை ரீதியான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அது புரியாவிட்டாலும் கூட செய்முறையில் நான் கூறியதைச் செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

 

     “ஒரு மருத்துவர் எப்படி ஒருவரின் உடல் பாகங்களை நன்கு உணர்கிறாரோ அது போல தங்கத்தைப் பகுத்து அதன் மூலக்கூறுகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்து தங்கம் தங்கமாக ஆகுமுன்னர் இருந்த நிலையை அடையுங்கள். அதன் விதை,நடு மற்றும் இறுதி நிலை பற்றி அறியுங்கள். அத்துடன் அதன் பெண் சக்தியையும் அறியுங்கள். – இப்படித் தன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார் அவர்.

 

       இதைப் படித்து ரஸவாதக் கல்லை அடையும் நீங்கள் பாக்கியவான்கள் என்ற ஆசீர்வாதத்துடன் தனது முதல் திறவுகோலை அவர் விளக்க ஆரம்பிக்கிறார்.

 

             எப்படி ஒரு மருத்துவர் முதலில் உடலின் உள் பாகங்களின் அழுக்கையெல்லாம் நீக்குகிறாரோ அதைப் போல எடுத்துக் கொள்ளும் உலோகத்தின் அழுக்கை நீக்குங்கள் என்பது அவரது முதல் அறிவுரை.

 

    தனது இரண்டாவது திறவுகோலில் அவர் தரும் உவமைகள் மிக்க சுவையானவை. ஒரு பெரிய மனிதரின் வீட்டில் பல விதமான பானங்கள் இருக்கும்.ஒவ்வொன்றுக்கும் ஒரு வித சுவை உண்டு.

 

ஒரு மணப்பெண் திருமணத்தின் போது தன் அழகுக்கு அழகூட்டும் விதமாக பல்வேறு ஆபரணங்களை அணிவாள். ஆனால் அவளது மண வாழ்க்கையின் முதல் இரவன்று எத வித ஆடை, அணிகலன் இன்றியே அவள் தன் வாழ்க்கையைத் துவங்குவாள்.

 

அது போலவே நமது தம்பதிகளான அபல்லோவும் டயானாவும் மிக பிரமாதமான ஆடைகளுடனேயே இருக்கின்றனர். அவர்களது தலையும் உடல்களும் வெவ்வேறு விதமான நீரால் கழுவப் படுகிறது. நமது மணமகனை வெவ்வேறு எதிரெதிரான நீரால் கழுவுவது முக்கியம்.

 

இங்கிருந்து சங்கேதமான வார்த்தைகளை பேஸிலியஸ் பயன்படுத்துகிறார்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கமாக்கும் கலையை அறிவர்.

 

அடுத்த திறவுகோலில் கந்தக ஆவி பற்றியும் அதனுடன் சேர்க்க வேண்டிய பொருள்களைப் பற்றியும் விளக்குகிறார். அனைத்தும் சங்கேதச் சொற்களாலேயே தான்!

அடுத்த திறவுகோலில் அனைத்தையும் பாதுகாத்துப் பேணும் உப்பைப் பற்றி விளக்குகிறார்.

 

இவ்வாறு 12 திறவுகோல்களில் தங்கமாக மாற்றும் ரஸவாதக் கலையைச் சொல்லி தான் சொல்வது அனைத்தும் உண்மை, இதைப் பின்பற்றுவோர் ரஸவாதக்கல்லை நிச்சயம் அடைவர் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

 

மிக்க பொறுமையுடன் பல்வேறு நூல்களைப் படித்து பல சோதனைகளை மேற் கொண்டால் பேஸிலியஸ் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சியில் தான் இன்று பலரும் இறங்கியுள்ளனர்.

பிரின்ஸிப் 12 திறவுகோல்கள் நூலைப் படித்த பின்னர் அதில் தங்கம் ‘ஆவியான உருவில் (vapour form) உருவாகும் விதம் தரப்பட்டிருப்பதாகக் கருதினார்.

 

இதே போன்று ஆவியாக தங்கம் உருவாவது பற்றிக் கூறும் இதர ஆவனங்களை அவர் சேகரிக்க ஆரம்பித்தார். பாயிலின் ஆவணங்களைப் பார்த்த போது அதில் பிலாஸபர்ஸ் மெர்குரி அதாவது பாதரஸத்தின் ஒரு திரவ வடிவம் மிக மிக மெதுவாக தங்கத்தைக் கரைப்பது பற்றிக் கூறப்பட்டிருப்பதைப் படித்தார். இது தங்கத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான ஒரு படியாகும்.

 

நியூடன் பாயிலிடமிருந்து பிலாஸபர்ஸ் மெர்குரி பற்றி அறிய முயன்றார். ஆனால் பாயில் அதை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்தார்.

 

நியூட்டனும் கூட தனது குறிப்புகளில் பல சங்கேத வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார். ரஸவாதம் பற்றி இதுவரை பிரசுரிக்கப்படாத நியூட்டனின் குறிப்புகள் பத்து லட்சம் வார்த்தைகளுக்கும் அதிகமாக உள்ளன என்பது விந்தையான ஒரு தகவல். அதில் அவர் க்ரீன் லயன் (green lion) நெப்டியூன் டிரைடெண்ட் (neptune trident)  என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இவற்றின் பொருள் என்னவென்று புரியவில்லை.

 

நியூட்டனை நன்கு புரிந்து கொள்ள பல சோதனைகளை நியூமேன் செய்ய வெண்டியிருந்தது. அதில் ஒரு சோதனையின் பெயர் டயானா மரம் (The Tree of Diana)  என்பதாகும்!

 

பழைய கால உலை, கருவிகள் ஆகையவற்றை இந்தியானா பல்கலைக் கழக இரசாயனப் பிரிவின் உதவியோடு உருவாக்கி பல சோதனைகளை அவர் செய்ய ஆரம்பித்தார்.

இந்த டயானா மர சோதனை பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

அதில் உலோகங்கள் மரம் போல ‘வளர்வதைப் பார்க்கலாம்!

 

       வெள்ளியையும் பாதரஸத்தையும் திடமாக இருக்கும் நிலையில் கலவையாக்கி, பின்னர் கரைக்கப்பட்ட வெள்ளி மற்றும் பாதரஸத்துடன் கூடிய நைட்ரிக் அமிலத்தில் மூழ்க வைத்தால் வெள்ளியின் சில துணுக்குகள் கிளைகள் போல உருவாகும் என்பதை நியூமேன் சோதனையில் தானே நேரில் கண்டறிந்தார்.

இன்று இரசாயனத்தில் இது ஒரு சாதாரண சோதனையாக ஆகி விட்டாலும் கூட நியூட்டன் காலத்தில் அவருக்கு உலோகம் வளர்க்கப்படக் கூடிய ஒன்றே என்பதை அறிய மிகவும் உதவியது.

நியூமேன் போலவே பிரின்ஸிப்பும் மிகப் பெரும் மேதைகளான நியூட்டன், பாயில், ஸ்டார்கி ஆகிய மூவர் கண்டறிந்த பிலாஸபர்ஸ் மெர்குரி என்பதை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதற்கான செய்முறை மிக சிக்கலானது; நீண்டது.

பிரின்ஸிப் பிலாஸபிகல் மெர்குரியுடன் தங்கத்தைச் சேர்த்து அதை சீலிடப்பட்ட ஒரு முட்டை வடிவிலான கண்ணாடியில் வைத்து என்ன நடக்கிறது என்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! விசித்திரமான விஷயங்கள் ஆரம்பமாயின.

அந்தக் கலவை கொதிக்க ஆரம்பித்தது. பிறகு அது பசை போன்ற திரவமாக மாறியது. பல நாட்கள் கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் சுரங்கத்தில் தாங்கள் பார்த்ததாக பழைய காலத்தில் சுரங்கத் தொழிலாளிகள் சொன்னார்களே, அந்த விசித்திரத்தைப் பார்த்தார்.

ஆம், முட்டை வடிவிலான கண்னாடிக் குடுவையிலே தங்கமும் பாதரஸமும் (மரம் போல) வளர்ந்திருந்தன.

ஆனால் அந்த மரத்தில் அதிக அளவு தங்கம் உருவாகவில்லை. அவர் போட்ட தங்கத்தை விட புதிதாக உருவாகி இருந்த தங்கம் மிகக் குறைந்த அளவே தான் இருந்தது. என்றாலும் கூட மிகக் கடுமையான சோதனைச் சாலை கட்டுப்பாடுகளின் மூலமாக ஒரு திடமான உலோகம் மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்பட்ட நிலையில் கொப்பளித்து, நிறம் மாறி, ஒளி விடும் பொறிகளை உருவாக்கி வேறு ஒரு நிலையை அடையும் என்பதை உறுதியாகக் காண முடிந்தது

 

இது நியூமேனுக்கும், பிரின்ஸிப்புக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

(12 திறவுகோல்கள் புத்தகத்தில் உள்ள 12 படங்களைப் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்: https://en.wikipedia.org/wiki/The_Twelve_Keys_of_Basil_Valentine  

புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் http://www.levity.com/alchemy/twelvkey.html உள்ளிட்ட பல தளங்களிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.)                                       (தங்க ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

அமெரிக்காவில் பேரறிஞர் ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில்,

ஹாரி பாலட் க்ளாதியர்ஸ் (Harry Ballot Clothiers) என்பது பிரின்ஸ்டனில் நாஸா வீதியில் உள்ள ஒரு பெரிய ஆடை நிறுவனமாகப் புகழ் பெற்றிருந்தது. அங்கு நல்ல ஆடைகளை வாங்காதவர்களே இல்லை.

 

பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தன் உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்துபவர் இல்லை. அவரது பழைய கோட் மிகவும் அழுக்காக இருந்தது.

 

அவரது உதவியாளராக இருந்த பெண்மணியான ஹெலன் ட்யூகாஸ் (Helen Dukas) அவரது அழுக்கு கோட்டை எப்படியாவது தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்தார்.

ஆனால் ஐன்ஸ்டீனுக்கோ அதில் துளிக் கூட சம்மதம் இல்லை.

 

ஒரு போதும் அந்தக் கோட்டை தூக்கி எறியக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

 

அதை டிரை க்ளீனரிடம் போட்டால் போதும் என்றார் அவர்.

அடுத்த நாள் ஹெலன் ஹாரி பாலட் கடைக்குச் சென்று அங்கிருந்த கடைக்காரரான வெண்ட் ராஃப் (Wendroff) என்பவரிடம் ஐன்ஸ்டீனின் கோட்டைக் காண்பித்து அதே போல ஒரு புது கோட் கிடைக்குமா என்று கேட்டார்.

புது கோட் கிடைத்தது.

 

அது புதிது என்பதற்கான சீட்டை அதிலிருந்து கிழித்து எறிந்து விட்டு அதை டிரை க்ளீனர் கொண்டு வரும் மூட்டையில் சேர்த்தார் ஹெலன்.

 

டிரை க்ளீனிங்கிலிருந்து வந்த கோட்டைப் பார்த்த ஐன்ஸ்டீன் ‘அட, நான் சொன்னது சரியாக இருக்கிறதே. டிரை க்ளீனிங் செய்யப்பட்ட கோட் எவ்வளவு ஜோராக இருக்கிறது! என்றார்.

 

      நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஹெலனுக்கு மட்டுமே வெளிச்சம்!

****

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (Post No.4178)

Written by London Swaminathan

 

Date: 1 September 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 4178

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

எனது பழைய பள்ளிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017ல் சென்றேன். இதற்கு மு மதுரை சென்றபோதெல்லாம் இருள் சூழ்ந்திருக்கும் அல்லது நான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருபேன்.இப்பொழுது சூரிய பகவான் ஒளிவீச, அதில் அப்பள்ளியில் பணியாற்றிய பாரதியின் சிலை புதுப் பொலிவுடன் மிளிர நல்ல புகைப் படங்கள் எடுத்தேன்.

வீர பாரதி! கம்பீர பாரதி!! எனது பள்ளியில் பாரதி!
இந்தப் படத்தைப் பயன்படுத்துவோர் படம் எடுத்தவர் லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரையும் சேர்த்தால் பாரதியின் பரிபூரண ஆசியைப் பெறுவர்

My brother Suryanarayanan adds

Santanam Suriyanarayanan 1966.sslc படித்த ஆண்டு.பாரதி பேச்சுபோட்டியில்first prize.இந்த சிலை திறப்புவிழா பசுமையாக நினைவில் உள்ளது.அந்த ஆண்டு ,பள்ளிவிழாவில் பாரதியின்,ரா.பி.சேதுப்பிள்ளை வசனம் பேசினேன்.பக்தவத்சலம் எங்களுக்கு பரிசளித்தாா்.thanks for reminding this

 

 

Santanam Suriyanarayanan சிலை திறப்பின்போது மிக அருகில் நின்றிருந்தேன்.thanks to teachers,especially திரு.வி.ஜி.சீனிவாசன்

 

 

ஏதோ ஒரு காரணத்தினால் நான் அன்று (1966) அப்பள்ளிக்குப் போகவில்லை. மதுரைக் கல்லூரியில் சேர்ந்த உற்சாகத்தில் பழைய பள்ளியை மறந்திருக்கலாம்

 

எப்படியாகிலும் எங்கள் தமிழ் குரு வி.ஜி.எஸ்,ஸை நினைவுகூற, இப்பொழுது, ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.

முறுக்கு மீசையும் மொபைல் போனும் : எச்சரிக்கை

 

நான் படித்த, பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குள் சென்றேன். சிருங்கேரி சங்கராசார்யாரின் அபூர்வ புகைப்படக் கண்காட்சியையும், எனது அருமை பாரதியார் சிலையையும் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு பெரிய போர்டு பளிச்செனத் தென்பட்டது. மொபைல் போன் பற்றி எச்சரிக்கை லண்டனிலுள்ள பள்ளிக் கூடங்களிலும் உள்ள து. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் முறுக்கு மீசைக்கும் தடை விதிக்கப்படதைப் பார்த்து ‘’சிரி சிரி’’ என்று சிரித்தேன். எங்கள் காலத்தில் யூனிfஆர்ம் (Uniform) கூடக் கிடையாது. இப்பொழுது எல்லோரும் சீருடையுடன் காணப்பட்டனர்.

MANAGEMENT STORIES (Post No.4177)

Compiled by S.NAGARAJAN

 

Date: 1 September 2017

 

Time uploaded in London-13-12

 

Post No. 4177

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

I  USED TO COLLECT MANAGEMENT STORIES FROM THE NET AND MANAGEMENT BOOKS.

Here are the two stories I could share regarding scheduling the work and team work

First things first means giving  due importannce to the important works. You have to put them in order according to the importance.

First Things First!

 

An exercise is known as ‘Stephen Covey’s Big Rocks’. Imagine a bucket. Put three or four big rocks in. “Is the bucket full? ” “No” you reply. “Of course not” I say and put some smaller rocks in it to fill in the gaps. “Full now? “, “No”. I put in some sand, then some water. It’s full.

 

So, what’s the learning here? It’s to do with the order. What would happen if you’d reversed the order? Put the water in first, then the sand, then the small rocks. There would be no room for the big rocks. These big rocks are the important things in your life. You need to schedule them first, not try to squeeze them in after arranging the water (writing pointless reports), sand (unnecessary travel) or small rocks (staff meetings where no-one listens and everyone looks at the clock).

What are the big rocks in your life? For many it’s things like family, time to watch the children grow up, time to write that novel, time for themselves, time to make a difference. You decide. You identify 3 or 4 things you believe are important. The 3 or 4 things that will make a difference at your funeral.

SourceReal Time Management by Byron Kalies

 

TEAM WORK COUNTS

A mother, who wanted to encourage her young son to continue playing the piano, bought tickets and took her son to a performance of the great pianist Ignace Paderewski.

They took their seats near the front of the concert hall the evening of the performance and eyed the majestic Steinway waiting on stage for the great pianist to begin.

Soon the mother found an old friend to talk to and didn’t notice that her boy had slipped away.

On the hour the lights in the hall began to dim and the spotlights came on. It was at that moment the little boy’s mother noticed him up on piano bench hammering out “Chopsticks.”

She was shocked and embarrassed, but it was too late to hurry up and get him as the Master of the night appeared on the stage and quickly moved to the keyboard where her little boy was focused in on his own masterpiece.

Paderewski gently whispered to the boy, “Don’t quit. Keep playing.” Leaning over, he reached down with his left hand and began filling in the bass part. Soon his right arm reached around the boy and improvised a delightful enhanced melody.

Together, the old master and the young beginning pianist mesmerized the audience with their blended and beautiful music.

Teams kind of work this way don’t they?

The novice to the expert on great teams work together to accomplish extraordinary things. There is little of what we do on teams that doesn’t require some type of help from someone. We can’t succeed without the help of others. Whether that is depending on someone to complete something for you, asking for a hand on something, asking a question, or simply working together – we need each other on teams!

***

செப்டம்பர் 2017 காலண்டர் (Post No.4176)

30 ஆழமான கருத்துடைய பழமொழிகள்

compiled by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 16-59

 

Post No. 4176

 

4-ஓணம், 6-மாளயபட்சம் ஆரம்பம்,19-மஹாளய அமாவாசை,11 பாரதி நினைவு தினம்,

6-யஜூர் உபாகர்மா,21– நவராத்ரி ஆரம்பம் 28- சரஸ்வதி பூஜா, 30-விஜயதசமி,30- தசரா

பௌர்ணமி 6

சுபமுகூர்த்த நாட்கள்- 4, 8, 15

ஏகாதசி – 1 or 2, 16

 

 

செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை

வைகறைத் துயில் எழு

 

செப்டம்பர் 2 சனிக்கிழமை

 

விஷத்துக்கு விஷம் மாற்று

செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

 

ஆலும் வேலும் பல்லுல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

செப்டம்பர் 4 திங்கட் கிழமை

இலங்கணம் (பட்டினி கிடத்தல்) பரம ஔஷதம்

செப்டம்பர் 5 செவ்வாய்க்கிழமை

கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம்?

செப்டம்பர் 6 புதன் கிழமை

பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்

ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்

செப்டம்பர் 7 வியாழக்கிழமை

ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும்

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை

அகங் குளிர முகம் மலரும்

 

செப்டம்பர் 9 சனிக்கிழமை

சுத்தம் சோறு போடும்

 

செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

அன்ன தானத்துக்குச் சரி, என்ன தானம் இருக்கிறது?

செப்டம்பர் 11 திங்கட் கிழமை

அன்றைக்குத் தின்கிற பலாக் காயை விட இன்றைக்குத் தின்கிற

களாக்காய் பெரிது

செப்டம்பர் 12 செவ்வாய்க்கிழமை

வாய் நல்லதானால் ஊர் நல்லது

செப்டம்பர் 13 புதன் கிழமை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

 

செப்டம்பர் 14 வியாழக்கிழமை

 

ஊமைக்கு உளறுவாயன் சண்டப்பிரசண்டன்.

 

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை

 

வைகுண்டத்துக்குப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேண்டுமா?

 

செப்டம்பர் 16 சனிக்கிழமை

பாலுக்குச் சீனி இல்லை என்பார்க்கும் கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும் விசாரம் ஒன்றே

 

செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

 

ஓசிப் பொடி வாங்கி நாசியில் போட்டால், காசிக்குப் போனாலும் கருமம் தொ லையாது.

 

 

செப்டம்பர் 18 திங்கட் கிழமை

தன் ஊருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

 

செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை

 

ஈட்டி எட்டின மட்டும் குத்தும், பணம் பாதாளம் மட்டும் பாயும்

 

செப்டம்பர் 20 புதன் கிழமை

அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

 

செப்டம்பர் 21 வியாழக்கிழமை

உட்கார்ந்தல்லவோ படுக்க வேண்டும்

 

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை

அடியாத மாடு பணியாது

 

செப்டம்பர் 23 சனிக்கிழமை

பிச்சையிட்டுக் கெட்டவனும் இல்லை பிள்ளை பெற்றுக் கெட்டவளும் இல்லை

 

 

செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே

 

செப்டம்பர் 25 திங்கட் கிழமை

பனங்காட்டு நரி சலச்லப்புக்கு அஞ்சாது

 

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை

 

கொல்லவரும் யானை மீது கல்லை விட்டு  எறியாதே

செப்டம்பர் 27 புதன் கிழமை

குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

 

 

செப்டம்பர் 28 வியாழக்கிழமை

கன்று கெட்டால் காணலாம் தாயருகே

செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

செப்டம்பர் 30 சனிக்கிழமை

கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?

 

—-Subham–

 

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! (Post No.4175)

Written by S.NAGARAJAN

 

Date: 31 August 2017

 

Time uploaded in London-11-43 am

 

Post No. 4175

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

அனுபவம் பேசுகிறது

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

 

ச.நாகராஜன்

 

லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.

அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.

 

நடந்தது என்ன?

 

அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.

அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

 

இதை எப்படிப் போக்குவது?

 

தீவிர சிந்தனைக்குப் பிறகு  புகையற்ற ஸ்டவ்களை அங்கு சில குடிசைகளில் நிரமாணித்தார் கோகலே. அவர்கள் இருமுவது குறைந்தது. சமைக்கும் போது புகையினால் கண்களிலிருந்து பெருகும் நீர் குறைந்தது. பார்க்க சந்தோஷமான காட்சி. கோகலே மகிழ்ந்தார்.

 

இதைப் பார்த்த பூர்வ குடியினரில் ஏனையோரும் இந்தப் புதிய முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

 

ஒரு வருடம் கழிந்தது.

 

தாங்கள் நிறுவி ‘புது வழி’ காட்டியதால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு மிகிழ அங்கு சென்றார் கோகலே.

 

சந்தோஷமான முகங்களைக் காணப் போகிறோம் என்று சென்ற அவரது குழுவினருக்கு ஒரு திகைப்பூட்டுக் காட்சி காத்திருந்தது.

அங்கு கிராமத்தையே காணோம்.

 

திகைப்படைந்த அவர்கள் பூர்வ குடியினரைத் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர்.

அங்கே புதிதாக அமைக்கப்பட்ட குடிசைகளில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கோபத்துடன் கோகலே குழுவினரைச் சூழ்ந்து கொண்டனர்.

 

 

கோபமான குரலில், “ நீங்கள் எங்களுக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டீர்கள். எங்கள் முன்னோர் எங்களுக்கு வலுவான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாக் அதில் வாழ்ந்து வந்தோம். அவற்றை ஒரே ஆண்டில் அழிக்க வகை செய்து விட்டீர்களே! உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள்” என்று அவர்கள் கத்தினர்.

அனைவரும் திகைத்தனர்.

திகைப்புடன் திரும்பினாலும் அவர்களிடம் இருந்த விஞ்ஞான மனப்பான்மை அவர்களை பழைய குடிசைகளை நோக்கிப் போக வைத்தது.

 

அந்தக் குடிசைகளில் இருந்த மரங்கள் கறையானால் அரிக்கப்பட்டு உளுத்துப் போயிருந்தன. கூரை விட்டங்கள் வளைந்திருந்தன.பலவித பூச்சிகள் கட்டைகளையும் குடிசைப் பகுதிகளையும் விதம் விதமாக் ஆக்கிரமித்திருந்தன.

வாழவே முடியாத ஒரு கோரம்!

 

கொசுக்களும் பூச்சிகளும் குழுவினரைச் சூழ்ந்து கடிக்க உள்ளே அவர்கள் பார்த்த போது அவர்கள் தந்த புகையில்லா ஸ்டவ் மட்டும் அலங்காரமாக அப்படியே இருந்தது!

திகைப்பும் வியப்பும் ஆட்கொள்ள அவர்கள் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.

 

அப்போது வழியிலே அவர்களைப் பார்த்த பழங்குடியினரில் வயதான ஒருவர்,’என்ன கவலையுடன் இருக்கிறீர்களே! என்ன விஷயம்?” என்று கனிவாகக் கேட்டார்.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்ல அவர் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டார்.

 

 

“இன்று களைப்புடன் இருக்கிறீர்கள். மன உளைச்சல் வேறு.

ஆகவே நாளை உங்களுடன் நானும் வருகிறேன். அவர்களைப் பார்ப்போம்” என்றார் அவர்.

 

கோகலே குழுவினரைப் போல ஏராளமான “குழுவினரை”ப் பார்த்து விட்ட அனுபவம் அவர் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் அவரும் கூட வந்தார்.

பழைய குடிசைகளில் சிதிலமடைந்து கிடந்த கட்டைகள், சில பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை ஆய்வுக்காக சேர்த்தது விஞ்ஞானக் குழு.

 

“அவர்களுக்கு உதவவே முன் வந்தோம். அவர்களோ எங்களைத் தீய ஆவிகளைக் கொண்டு வந்து விட்டு விட்டோம் என்கிறார்கள். நீங்களும் ஒரு பழங்குடியினர் தானே. நாங்கள் தீய ஆவிகளையா இங்கு விட்டோம், சொல்லுங்கள்” என்று கேட்டார் கோகலே.

“இல்லை, நீங்கள் தீய ஆவிகளை இங்கு விடவில்லை” என்றார் அந்தப் பெரியவர்.

 

 

அவர் சொற்கள் சற்று ஆறுதல் அளித்தன.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிருந்த நல்ல ஆவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட்டீர்கள்’ என்று தொடர்ந்து கூறினார் அவர்.

 

 

இதைக் கேட்ட குழுவினர் திகைத்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “ தீ மூட்டி சமைப்பது புனிதமானது. அது நல்ல ஆவிகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. புகையும் சாம்பலும் குடிசை நீடித்திருக்க நமது உடலுக்கு உணவு போல அவசியமானது. புகையும் வெப்பமும் பூச்சிகள், கரையான் போன்ற தீய ஆவிகளை ஒண்ட விடாது. அந்த புகை என்ற நல்ல ஆவியை விரட்டி விட்டு கரையான் என்ற தீய ஆவிகளைத் தந்ததால் தான் அவர்கள் உங்கள் மீது கோபப் படுகிறார்கள்.இந்தக் குடிசைகளுக்குப் விறகு வைத்து கல்லினால் ஆன அடுப்பில் சமைப்பதே சிறந்த பாதுகாப்பு!”

 

 

படிப்பறிவே இல்லாத சாமானிய பூர்வீக பழங்குடிப் பெரியவரின் வார்த்தைகள் அவர்களை பிரமிக்க வைத்தன.

சிறிய வார்த்தைகள் மூலம் அரிய உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தக் கணம் முதல் படிப்பறிவில்லாதவன், பழங்குடி என்றெல்லாம் சொல்லி அவர்களை கேலி செய்யக் கூடாது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் முன்னால் விஞ்ஞான மனப்பான்மை கூட பல சமயம் தோற்று விடும் என்பதை கோகலே உணர்ந்து கொண்டார்.

 

 

இந்த அனுபவத்தை ஒரு கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்து “விஞ்ஞானம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் தானா கற்பிக்கப்படுகிறது? அறியப்படுகிறது?” என்ற கேள்வியையும் கட்டுரையின் முடிவில் எழுப்புகிறார்!

உண்மை தான்!

 

அறிய வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன.

 

பூர்வ குடியினரிடமும் கூட!

****

 

SEPTEMBER 2017 GOOD THOUGHT CALENDAR (Post No.4174)

30 Quotations on Chaste women

written by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4174

 

 

FESTIVE DAYS : Sep.4- Onam, Sep 6- Yajur Upakarma, September 11- Bharati Memorial Day,  21- Navaratri begins,, 28- Sarasvati Puka, Durga Ashtami, 29- Sarasvati Puja, Maha Navami, 30- Dusserah, Vijaya Dasami

Sep 6- Malaya Paksham begins

 

 

EKADASI FASING DAYS- 1 or 2, 16

FULL MOON- 6

NEW MOON- Mahalaya Amavasai 19

AUSPICIOUS DAYS- 4, 8, 15

 

SEPTEMBER 1 FRIDAY

Chaste women are by nature truthful- Bharat Katha Manjari

SEPTEMBER 2 SATURDAY

The mind of chaste women finds happiness in the glorious tales of virtuous women- Bharat Katha Manjari (BKM)

 

SEPTEMBER 3 SUNDAY

Universally, virtuous women are desireless- Katha Sarit Sagara (KSS)

SEPTEMBER 4 MONDAY

Women of great calibre committed to their husbands are glorified in Heavens too- Valmiki Ramayana 2-118-12

SEPTEMBER 5 TUESDAY

Which chaste women  will defy her husbands instructions?- KSS

SEPTEMBER 6 WEDNESDAY

A chaste woman has no independent happiness, but her husband’s happiness is hers. -KSS

SEPTEMBER 7 THURSDAY

Noble women do not oppose the  desires of their husbands- KSS

 

SEPTEMBER 8 FRIDAY

It is sheer cruelty  on the part of a woman to desert her husband- Valmiki Ramayana 2-24-12

 

SEPTEMBER 9 SATURDAY

A woman attains supreme heaven by serving her husband – Valmiki Ramayana 2-24-36

 

SEPTEMBER 10 SUNDAY

Noble women are single pointedly focussed on the welfare of their husbands- BKM

SEPTEMBER 11 MONDAY

For women their husband’s desires are  paramount, not crores of sons- Valmiki Ramayana 2-35-8

SEPTEMBER 12 TUESDAY

The wife alone enjoys the fortunes of her husband- Valmiki Ramarayana 2-27-5

SEPTEMBER 13 WEDNESDAY

Women have their husbands as their Lords (PN)

 

SEPTEMBER 14 THURSDAY

Chaste women are protected by the strength of their character alone- KSS

 

SEPTEMBER 15FRIDAY

 

Modesty is the insignia of  chaste women -KSS

SEPTEMBER 16 SATURDAY

Chastity is a very challenging vow (Proverb)

SEPTEMBER 17 SUNDAY

Noble women do not visit their residence of their husband’s friend – (Proverb).

SEPTEMBER 18 MONDAY

Invincible indeed is the power of chaste women- BKM

SEPTEMBER 19 TUESDAY

For the chaste women husbands is GOD- BM

 

SEPTEMBER 20 WEDNESDAY

Following the path tread by their husbands is the ultimate vow of women- KSS

SEPTEMBER 21 THURSDAY

Women have their husbands as GODS – PN

 

SEPTEMBER 22 FRIDAY

Noble wives, ever engaged in the welfare of their husbands, endure all sorrows – BKM

SEPTEMBER 23 SATURDAY

Though the husband be ruthless, the minds of chaste women will not stray- KSS

SEPTEMBER 24 SUNDAY

When my husband is blnd why shy should I deck myself?-KR

 

SEPTEMBER 25 MONDAY

Gods alone protect women of moral integrity in their hour of danger KSS

SEPTEMBER 26 TUESDAY

For women husband himself is the lord- V Ramayana, 7-95

SEPTEMBER 27 WEDNESDAY

Good women, desirous of the welfare of their husbands , pay no heed to the malice of the others KSS

SEPTEMBER 28 THURSDAY

Tears of chaste women do not  wet the earth esaily- Valmiki Ramarayana 6-14-67

 

SEPTEMBER 29 FRIDAY

There is no vow ordained for women other than serving their husbands- Valmiki Ramarayana 2-118.9

 

SEPTEMBER 30 SATURDAY

The mind of a chaste woman is tender-KSS

 

–SUBHAM–

 

மேலை நாட்டினர் போற்றும் வாஸ்து சாஸ்திரம்! (Post No.4173)

Written by S.NAGARAJAN

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 5-52 am

 

Post No. 4173

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

ஹிந்து தத்துவத்திற்கும் அதைச் சார்ந்த கலைகளுக்கும் உல்கெங்கும் இப்போது பெரும் வரவேற்பு உள்ளது.

யோகா

ஆயுர்வேதம்

வாஸ்து சாஸ்திரம்

 

 

ஆகியவை மேலை நாட்டினரால் நாளுக்கு நாள் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற்ன.

 

இவை அனைத்தும் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் ஆன்ம உயர்விற்கும் வழி வகுக்கின்றன என்பது உண்மை.

பௌதிக ரீதியாக மட்டும் அனைத்தையும் அணுகும் மேலை நாட்டு விஞ்ஞானம் ஆன்மீக ரிதியாகவும் அனைத்தையும் அணுகும் ஹிந்துத்வத்திடம் போட்டி போட முடியாது என்கின்ற சாஸ்வதமான உண்மையை உலகம் இப்போது உணர்கிறது.

காத்லீன் காக்ஸ் என்ற பெண்மணி தி பவர் ஆஃப் வாஸ்து லிவிங் ( Kathleen Cox – The Power of Vastu Living) என்ற நூலை எழுதி வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை உலகம் உணரச் செய்திருக்கிறார்.

 

1985ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து நியூடெல்லி வந்தவர் இங்குள்ள ஹிந்து வாழ்க்கை முறையைக் கண்டு வியந்து போனார்.

1990இல் நிரந்தரமாக டில்லியை தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார்.

 

 

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை ஒவ்வொரு ஹிந்துவும் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அவரை வியப்பில் ஆழ்த்தின. வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டுமின்றி ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அவை அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் வாஸ்து சாஸ்திரத்தின் பால் தன் மனதைச் செலுத்தி அதைக் கற்றுத் தேர்ந்தார்.

மூன்று முக்கிய விஷயங்களை வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக அவர் வலியுறுத்துகிறார்.

 

 

  • ஐம்பூதங்களைப் போற்றி பிரபஞ்சத்தின் லயத்தை ஒருவர் மதிக்க வேண்டும்.
  • இயற்கை உலகை நாம் வாழும் இடத்திலும் நாம் பணி புரியும் இடத்திலும் இணைக்க வேண்டும். இயற்கையின் வெளி உலகும் வீட்டில் நாம் வாழும் உலகும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத தொடர்புடன் இருக்கிறது.
  • நாமும் கூட இறைசக்தியின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்து நாம் யார் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்

ஆகிய இந்த மூன்று கொள்கைகளை வலியுறுத்தி வாஸ்து சாஸ்திரம் எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பதை அவர் 400 பக்கங்களில் தெளிவு படுத்துகிறார்

 

.

அவரது இணையதளம் www.vastuliving.com பல உண்மைகளை விளக்குகிறது.

கோவில்கள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படியே அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு வழிபாட்டிற்காகக் குழுமும் மக்களுக்கு உயரிய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

 

சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், வான சாஸ்திரம் முதலானவை ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதை அதை நன்கு அறிந்தோர் உணரலாம்

.

ஹிந்து வாழ்க்கை முறையில் அனைத்துக் கலைகளும் அற்புதமாக இணைக்கப் பட்டிருப்பதை மேலை நாட்டினர் உணர்ந்து அதை நமக்கே திருப்பிச் சொல்லி நம் அருமையை விளக்கும் போது தான் நாம் நமது சாஸ்திரங்களை மதிக்கத் தலைப்படுகிறோம்.

 

வேதனையான் உண்மை இது!

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்கள் பதிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே உள்ளன.

 

சில சுவடிகள் பதிக்கப்பட்டு அந்த நூல்கள் தரும் தாக்கத்திற்கே மேலை உலகம் வியப்பின் உச்சிக்கு ஏறும் போது அனைத்தும் பதிக்கப்பட்டால் நமது பெருமை எந்த உயரத்திற்குச் செல்லும்!

நினைத்துப் பெருமைப்படலாம்; வாஸ்து உள்ளிட்ட் அனைத்தையும் பழைய காலம் போல அனைவரும் கற்றுப் பின்பற்றலாம்.

 

 

ஹிந்து வாழ்க்கை முறை உலகெங்கும் பரவ ஹிந்துக்கள் அதை வாழ்ந்து காட்ட வேண்டும்!

****

உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்: மேலும் ஒரு கர்நாடக அதிசயம்! (Post No.4172)

830 ft Jog Falls

 

Written by London Swaminathan

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 9-22 am

 

Post No. 4172

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

உலகிலேயே மிகப்பெரிய வீணை சிருங்கேரி மடத்தில் இருப்பது பற்றி எழுதினேன்.

 

உலகிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலைகளில் ஒன்றான கோமடேஸ்வர் (சமண சமய சாது) 57 அடி உஅயர்த்துக்கு மலை மீது நிற்பது பற்றி எழுதினேன்.

 

 

இந்தியாவிலேயே மிகப்பெரிய (Bulls) நந்திகள் கர்நாடகத்தில் பல இடங்களில் உள்ளன.

மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிலில் ஒரு நந்தி

துருவகரே கோவிலில் ஒரு நந்தி

ஹளபீடுவில் ஒருநந்தி

 

சிவமுகா (ஷிமோகா) வில் உள்ள அரசாங்க மியூசியத்தில் அபூர்வ நாணயங்களும் 18-29 மீட்டர் நிளமுள்ள பழங்கால கணக்குப் புத்தகமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய தங்க  சிம்மாசனம் (200 கிலோ) மைசூர் அரணமனையில் உள்ளது.

 

பேலூர், ஹளபீடு, சோமநாத்பூரிலுள்ள ஹோய்சாள வம்ச சிற்பிகளின் அற்புதப் படைப்புகள் பற்றியும் பார்த்தோம்.

Badami  Caves

உலகிலேயே அதிக சிற்பங்களை ஒரு சிறிய பரப்பில் காணும் அதிசயம் ஹளபீடில் இருக்கிறது. நட்சத்திரவடிவக் கோவிலில் 35000 சிற்பங்கள்! ராமாயண, மஹாபாரத, தசாவதார, கண்ணன் லீலைகளை தத்ரூபமாகச் செதுக்கியுள்ளனர்.

 

அணிவகுத்துச் செல்லும் யானைகளில் ஒரு யானை போல மற்றொரு யானை இல்லாத வகையில் செதுக்கியுள்ளனர்.

 

இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் பால்ஸ் (830 feet) எனப்படும் நீர்வீழ்ச்சி கர்நாடகத்தில்தான் உள்ளது.

 

இந்துக்கள் போற்றும் கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி க்ருஷ்ணன்,

குகே சுபரமண்யர்கோவில், சிருங்கேரி சாரதாம்பாள், காவிரி தோன்றும் தலைக் காவேரி,  மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்,  மருதேஸ்வர் கோவில், தர்மஸ்தமலம், உலகப் புகழ்பெற்ற ஹம்பி நகர சிதைவுகள், பாதாமி குகைக் கோவில்கள், ஐஹோல், தென்னாட்டுக் காசி என வழங்கும் மூடபித்ரி கோகர்ணம், மஹாபலேஸ்வர் கோவில்கள்

– ஊருக்கு ஊர் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கும் மாநிலம் கர்நாடகமே.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் மௌரிய சாம்ராஜ்ய அரசர் பதவியைத் துறந்து சமண மத துறவியான சந்திர குப்த மௌர்யனின் சந்த்ரகிரி முதல், ஏராளமான சமண மத புனிதத் தலங்கள் நிறைந்த பூமி இது.

Marudeshwar Temple

கோவிலகளுக்கோ, தொல் பொருட் துறைச் சின்னங்களுக்கோ நுழைவுக் கட்டணம் கிடையாது! இது ஒரு பெரிய அதிசயமே

 

சென்னகேசவ பெருமாள் கோவில் முதலியவற்றில் 880 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பூஜை நடக்கிறது. தமிழ் நாட்டில் முஸ்லீம் படையெடுப்புகளால் பல கோவிலகளில் பூஜை தடைப் பட்டது. மாலிக்காபூர் என்னும் முஸ்லீம் கொள்ளைகாரன் தங்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோவில்களை விட்டு விட்டான்

 

 

ஹோய்சாள சிற்பிகளுக்கு எதையுமே பெரிதாக, கலைவண்ணத்துடன் படைப்பதே குறிக்கோள்

 

 

உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள ஓம் வடிவ பீச் (கடற்கரை) ஒரு இயற்கை அதிசயம்.

 

நாடு முழுதும் உடுப்பி ஹோட்டல்களை திறக்கும் அளவுக்கு புகழ்பெற்ற சமையல்காரகள்.

மணிப்பால் முதலிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்

 

ஏராளமான நீர்வீழ்ச்சிகள்,பறவைகள் சர ணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்பொங்கும் இயற்கைக் காட்சிகள், ஆகும்பே என்னும் இடத்திலுள்ள மழைவனக் காடுகள், காவிரி, ஷராவதி, துங்கபத்திரா நதிகளின் சமவெளிகள் என எங்கும் இயற்கை அன்னையின் அருள்பாலிப்பு.

மாத்தூர் முதலிய கிராமங்களில் சம்ஸ்கிருதத்திலேயே பேசும் மக்கள் கூட்டம் மற்றும் ஒரு அதிசயம்!

World famous Hampi Ruins

கோலார் தங்கச் சுரங்கம், காவிரியின் குறுக்கேயுள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, மைசூர் பிருந்தாவனம், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு, 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோமடேஸ்வரின் மஹா மஸ்தக அபிஷேகம், ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் உடுப்பி பர்யாய உற்சவம், ஆண்டுதோறும் நடைபெறும் மைசூர் தசரா அலங்கார அணிவகுப்பு ஆகியவற்றைக் காண ஆயிரக் கணக்காணோனோர் கூடுகின்றனர்.

 

கூடுதல் விவரம் வேண்டுவோர் நான் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து பகுதி கட்டுரைகளைப் படிக்கவும்.

Om shaped beach

TAGS:-பெரிய கணக்குப் புத்தகம், உயரமான நீர்வீழ்ச்சி, ஓம் வடிவ பீச்

–சுபம்–

 

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***