Date: 6 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 17-53 Post No. 6039 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஹெல்த்கேர் மாத இதழில் டிசம்பர்
2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தங்கமான விஷயம் -தசை
காயங்களுக்கு தங்கமே மருந்து!
ச.நாகராஜன்
நவீன ஆய்வுகள் தங்கத்தின் சிறு துகள்கள் – நேனோ துகள்கள்
– உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக அமைவதோடு தசை மறுபடியும்
உருவாக்க உதவுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளன! விஞ்ஞானிகள் தங்கத்தை தசையில் ஏற்படும்
காயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.
சாதாரணமாக தசையில் ஏற்படும் காயங்கள் ஆற சற்றுக் காலம்
ஆகும். ஏனெனில் காயம் பட்டவுடன் தசையில் ஏற்படும் வீக்கம் வடிய சிறிது காலம் தேவை.
அந்த வீக்கம் மீண்டும் பெரிதாகித் தொந்தரவு கொடுக்கவும் கூடும்.
தசையில் காயம் ஏற்பட்டு தசைப் பிடிப்பு என்று சொல்கிறோமே
அது ஏற்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை சமீபத்திய ஆய்வுகள் தருகின்றன. தங்கத்தின்
சிறு துகள்களை வீக்கத்தை வடிய வைக்கும் மருந்துகளுடன்
சேர்ப்பதற்கான ஒரு வழியை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
இதை ‘ப்ரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்’
இதழின் சமீபத்திய இதழ் வெளியிட்டுள்ளது. காயமடைந்து
இருக்கும் ஒரு தசைப் பகுதிக்கு காயம் ஆறி அது
மீண்டும் பழையபடி வளர்வதற்காக ஆண்டி இன்ஃப்ளமேடரி
சிடோகின் (Cytokine) எனப்படும் இண்டர்ல்யூகின் 4 (Interlukin 4
– IL 4) என்ற ஊசி மருந்து இப்போது வழக்கமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால்
அதில் ஒரு விரும்பத்தகாத செயல்பாடும் உண்டு. அது வெகு வேகமாக உடைந்துபடும். ஆகவே பல
முறை அதை உடலில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சினைக்குத் ‘தங்கமான ஒரு தீர்வாக’ நிஜ தங்கம் அமைகிறது!
வீக்கம் : பழைய மருந்து, புதிய நம்பிக்கையைத் தருகிறது.
இந்த ஆய்வானது வீக்கம் எப்படி உருவாகிறது, அதை எப்படி நிறுத்துவது என்பன போன்ற பல விஷயங்களில் அதிக தகவல்களைத் தருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஸ் நிறுவனத்தில் உயிரியல் எஞ்சினியரிங் பிரிவும் ஜான் ஏ.பால்ஸன் ஸ்கூல் ஆஃப் எஞ்சினியரிங்கும் இணைந்து செயல்பட்டன. அங்குள்ள விஞ்ஞானிகள் ஐ எல் 4 உடன் தங்கத்தின் நேனோ துகள்களை இணக்கும் புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.
காயமடைந்த
பகுதியில் உள்ள தசைத் திசுக்கள் தசையை மறுபடியும் உருவாக்கி ஐ எல் 4ஐ எங்கு அதிகம்
தேவைப்படுகிறதோ அங்கு கொண்டு சென்று வைத்திருக்கும். இரத்த ஓட்டத்துடன் இணைந்து அலைந்து
தனது சக்தியை இழக்கும் நிலை ஏற்படுவதை இது தடுக்கும். இந்த ஆய்வின் போது காயமடைந்த எலி ஒன்றின் மீது ஐ
எல்-லுடன் நேனோ தங்கத் துகள் இணைக்கப்பட்ட ஊசி போடப்பட்டது. 15 நாட்களில் அதிகமான தசை
ஃபைபர் எலிக்கு ஏற்பட்டது. தங்கத் துகள் சேர்க்கப்படாத ஊசி மருந்து போடப்பட்ட போது
இந்த அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஆய்வை
இணைந்து நடத்திய விஞ்ஞானியான டேவிட் மூனி (David Moony), “இந்த ஆய்வு வீக்கத்தை ஒழுங்குபடுத்தி, இயங்கும் திசுக்களை மறுபடி உருவாக்க சக்தி
வாய்ந்த ஒரு முறையாக ஆகிறது” என்கிறார்.
மருந்தில் தங்கம்
மருத்துவ உலகில் தங்கம் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது புதிய
செய்தி அல்ல!
தங்க சிகிச்சை என்பது மருத்துவர்களின் முதல் தேர்ந்தெடுப்பு சிகிச்சையாக என்றுமே அமைந்ததில்லை. ஏனெனில் மருத்துவ முன்னேற்றத்தினால் ஏற்பட்ட இதர மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் விஞ்ஞானிகள் முன் வைத்ததால், தங்க உப்புகளைப் பயன்படுத்துவது பல ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ருமாடாய்ட் ஆர்திரிடிஸுக்கு இளம் குழந்தைகளுக்கும் வயது வந்தோருக்கும் நல்ல மருந்துகள் சில நோய்களின் மோசமான நிலைக்காகவே சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சில வீக்கங்களைக் கட்டுப்படுத்த தங்கத்தையும் தங்க உப்புகளையும்
நிபுணர்கள் பயன்படுத்தி வந்த போது ருமாடாய்ட்
ஆர்திரிடிஸுக்கு நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலை இருந்ததால், சில பக்கவிளைவுகளைக்
கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்தவில்ல. 35 சதவிகித மருத்துவர் அந்த சிகிச்சையை
ஒதுக்கி இருந்தனர்.
அதுமட்டுமின்றி இந்த சிகிச்சை முறையில் முன்னேற்றம் காண பல மாதங்கள்
காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பக்கவிளைவுகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும்
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்க சிகிச்சை பழைய தங்க உப்புகளைப் பயன்படுத்துவது
போன்ற ஒன்று அல்ல. மையொக்ரைசின் (Myochrysine)போன்ற் மருந்துகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியவையாகும். சில ஆய்வுகள் இந்த நேனோ துகள்கள் தங்க உப்புகளைப்
போல விஷத்தன்மை கொண்டவை அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அதுவும் ஊசி மூலம் குறைந்த
டோஸில் இவை கொடுக்கப்பட்டால் இவை எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.
எதிர்கால முன்னேற்றங்கள்
கோல்ட் தெராபி வயது வந்தோருக்கு தசையில் ஏற்படும் காயங்களுக்கான
சிகிச்சை முறையாக ஆகி விடும் நிலையில், நீண்ட கால நோயால் அவஸ்தைப்படுவோருக்கு இது எப்படிப்
பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன.
ஆய்வுகளில் எலிகளின் தசைகளில் ஏற்படும் Muscular
dystrophy –மஸ்குலர் டிஸ்ட்ராபிக்கு இதை எப்படிப் பயன்படுத்துவது
என்பது குறித்த ஆராய்ச்சி இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது முன்னேற்றம்
அடைந்து விட்டால் இதே நிலையில் உள்ள மனிதர்களுக்கு இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துவதைப்
பற்றி ஆலோசிக்க முடியும்.
விஸ் நிறுவனத்தின் நிறுவன டைரக்டரான டாக்டர் டொனால்ட் இங்பெர், “நாங்கள் எப்போதுமே இன்னும் எப்படிச் சிறந்த முறையைக் கையாளலாம் என்பதையே எண்ணுகிறோம். இது போதும் என்ற நிலையை எப்போதுமே நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஐ எல் 4 மருந்தை வீக்கமடைந்த திசுக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்துவது மட்டுமல்ல, நீண்டகாலம் வீக்க வியாதியால் அவஸ்தைப்படுவோருக்கும் கூட இதைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்” என்கிறார்.
இந்தியாவில் கழுத்து வீங்கி வீக்கத்தால் அவஸ்தைப்படுவோருக்குத்
தங்க செயினைப் போட்டு விடுவது வழக்கம். கழுத்து வீக்கமடையும் வியாதிக்குத் தமிழகத்தில்
‘பொன்னுக்கு வீங்கி’ என்றே பெயர். தங்க சங்கிலியை மாட்டியவுடன் வீக்கம் குறைவதை அனுபவத்தால்
நம் மக்கள் அறிந்திருந்தனர்.
கழுத்தில் தங்க சங்கிலிகளைப் பெண்கள் தவறாமல் மாட்டி இருப்பதால்
அவர்களுக்குக் கழுத்து சம்பந்தமான வியாதிகள் எதுவும் தோன்றாது என்பதையும் நம் மக்கள்
அறிந்திருந்தனர் என்பது வியப்பை ஊட்டும் ஒரு செய்தி.
இந்தியப் பண்பாட்டில் எந்த ஒரு அம்சத்திலும் ஒரு அர்த்தம் இருக்கிறது
என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது, இல்லையா!
Date: 5 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 18-43 Post No. 6037 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 8 சொற்களைக் கண்டு பிடிக்கவும்.
விடையும் கீழே தரப்பட்டுள்ளது.
குறுக்கே
2. மருந்து
4. கெட்டவை என்பதன் எதிர்ப்பதம்
5.-துர்யோதணன் சகோதரர்களில் தீமைஅயி எதிர்த்த ஒரே ஆள்
Zinc, the metallic element, has two important roles in human bodies.
If you are low in zinc you develop high blood pressure If you are low in zinc, you’ll have low sperm count.
Recently The American Journal of Physiology-Renal Physiology, has published a research report which confirmed the link between high blood pressure and zinc. I give below some interesting information about zinc in bullet points:-
Ananda Prasad is a well- known name in the field of zinc
research. The importance of zinc for certain enzymes was recognised in the last
fifty years. Ananda Prasad who carried out zinc deficiency audits on animals,
later confronted with the same symptoms of stunted growth and retarded sexual development
in humans. Prasad became the leading world authority on human zinc deficiency,
finding many cases in Egypt where the soil is lacking in this nutrient. He showed
that supplementing the diet with zinc sulfate could effect a cure .
It is an essential element for humans and animals . Zinc
concentrations are greatest in eyes, prostate, liver and muscles. Surplus zinc
is stored in bones and spleen but it is not released from these to make up for
a dietary lack.
Plants rich in zinc are wheat, sweet corn, and lettuce.
Fruits have less zinc. Red meats provide zinc for non- vegetarians. Vegans can
have it from sun flower seeds and pumpkin seeds.
Chemical properties
Symbol – Zn
Atomic number 30
Boiling point 907 degree C
Melting point 420 degree C
Zinc is a bluish white metal. There are five zinc isotopes
Economic element
The main zinc mining areas are Canada , USA, Australia Russia
and Peru.
The dominant ore is zinc blende, also known as sphalerite.
More than 50%of zinc metal goes into galvanising steel which
is used for car bodies , fencing, motorway guarding rails, suspension bridges,
heat exchangers and roofing tracks. The metal is used in alloys and batteries.
The main zinc alloy is brass. Brass is used in different ways. Oxide of zinc is
used in rubber industry, pigments etc.
Medical use
Zinc sulfate is used as emetic.
Zinc chloride as anti- septic
Zinc oxide as an astringent
Zinc stearate as ointment
Calamine which is a mixture of zinc and iron oxides, as lotion
Zinc oxide is used as sun blocker to prevent skin cancer
Who discovered it?
German chemist Andreas Maggraff has been credited with the
discovery, actually he identified it as an element.
Strabo, Pliny the elder, Marco Polo and others have mentioned
the use of zinc compounds. That meansmen have been using it for over 200o years.
In Rajasthan in India, more than a million tonnes of zinc were produced between
12th and 16th centuries. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
Essential for human beings:-
There are more than 200 kinds of zinc containing enzymes and
transcription factors which help us to maintain good health. They regulate
growth, development, longevity and fertility.
The average man takes around 10 milligrams and woman 8
milligrams of zinc every day. Pregnant women lactate 850 cubic centimetres of
breast milk every day containing the 2 milligrams of zinc that her baby needs.
In countries where the soil has less zinc, supplements are
added in food In cereals and grains there is phytic acid which converts zinc
into zinc phytate and the body cannot use it . So, in countries like Mexico
Indonesia and Peru food items are fortified with zinc. In western countries
zinc supplements are available over the counter. But any medicine should be
taken only after consulting the medical personnel.
Mandatory in Paris
Rolled zinc sheets have been used in roofing. In Paris it was made
mandatory in 1860s when the city underwent a transformation, which resulted in
the attractive city roofscape that became famous and inspired many paintings.
Even in Roman Pompeii, destroyed when Mount Vesuvius erupted
in CE 79,a zinc capped fountain has been discovered, showing that zinc has been
a weather proof material of long standing.
American discovery
Fruits and nut bearing trees in the western states of America
were afflicted by disease in the 19th century. Curiously some trees responded
to the application of a copper solution while others did not. Later it was
discovered that the trees responded to the zinc and not copper. The zinc came
from the galvanised buckets in which the copper solution was prepared.
ஒரு விஷயத்தை நாம் சற்று யோசிக்க வேண்டும். எப்போதுமே
எதிரிகள் நம்மை மட்டம் தட்டி தமக்குச் சாதகமாகவே அனைத்தையும் அமைத்துக் கொள்வார்கள்.
அவர்களை இனம் காண்பதும் அவர்கள் நோக்கத்தை அறிவதும் மிகவும் எளிதானது. ஆனால் கூட இருந்தே
குழி பறிக்கும் ஐந்தாம் படை துரோகிகளை இனம் காண்பது எளிதல்ல; சிறிதளவாவது சேதம் ஏற்பட்ட
பின்னரே அவர்களை இனம் கண்டு திடுக்கிட முடிகிறது. நமது இந்தியப் பண்பாட்டுக்கு போதுமான
சேதம் ஏற்பட்டு விட்டது. ஹிந்து மதத்திலிருந்து கணிசமான ஹிந்துக்கள் பணம்,பதவி, பெண்,
மண், பயம் காட்டல்,உயிரை எடுப்போம் என அச்சுறுத்தல் என்பன போன்ற அனைத்து விதத்தாலும் ஆசை காட்டப்பட்டு
அல்லது பயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டு
விட்டனர். இது வரை நாம் இழந்த இழப்பு ஏராளம். ஆனால் கூட இருந்தே செகுலரிஸம் என்ற பெயரில்
ஹிந்து மதத்தை மட்டும் இழிவு படுத்தல், எதிர்த்தல், அழித்தல் ஹிந்துக்களை பிரித்தாளுதல்
என்பனவற்றைச் செய்யும் செகுலர் துரோகிகளை சரியாக இனம் காண வேண்டிய காலம் இதுவே. ஏனெனில்
இன்னும் இழப்பு ஏற்பட்டு ஒரேயடியாக நாம் அழிந்து படக் கூடாதல்லவா? ஜாக்கிரதையாக சிந்தித்துச்
செயல் பட, நமது கடந்த காலத்தின் உண்மையான சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு நமது அற்புதமான
பண்பாட்டைப் போற்றுவோம்; அந்த வரலாற்றில் தாழ்ந்த காலகட்டங்கள் ஏற்பட்டதற்கான காரணத்தையும்
நம்மில் பலர் மதம் மாற்றப்பட்டதற்கான காரணத்தையும் அறிந்து கொண்டு இனி அப்படிப்பட்ட
ஒரு நிலை ஏற்படாதவாறு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வோம்.பழைய பண்டைய புகழோங்கிய நிலையை
வெகு விரைவில் அடைவோம்!
துல்லியமான வரலாறானது
புகழோங்கிய காலத்தை மட்டும் பதிவு செய்யக்கூடாது; ஆயின் தாழ்ந்திருந்த, வாய்ப்புகள்
இழந்த காலத்தையும், அத்துடன் கூட கால வெள்ளத்தில் தேசீய ஒற்றுமையை மிக முக்கியமான தருணங்களில்
இணைக்கத் தவறிய தோல்வியையும் கூட பதிவு செய்ய
வேண்டும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட மிகவும் அதி முக்கியமான தவறுகளையும் அதிலிருந்து
பாடங்களையும் பெற்று எதிர்கால சந்ததியினருக்காக தர வேண்டும்.
மிகுந்த ஆய்வின் பெயரில் எழுதப்பட்டுள்ள
இந்த நூலின் ஆசிரியர்கள் நோயை மட்டும் சுட்டிக்காட்டாமல், ஆனால் அதற்கான
காரணங்களையும் தெரிவித்துள்ள,ஒரு பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளனர்.
யு.பி.ஏ.அரசின்
போது நேஷனல் கவுன்ஸில் ஆஃப் எஜுகேஷனல் ரிஸர்ச் அண்ட் ட்ரெயினிங் – என்.சீ.ஈ.ஆர்.டி
– செய்யத் செய்யத் தவறிய பணியை தற்போதைய இந்த நூலானது சரி செய்து விட்டது. இரண்டு முறை
பதவியிலிருந்து இறக்கப்பட்ட கூட்டணி காலத்தில், தேசத்தின் இனப்பண்பானது வேருடன் பிடுங்கப்படுவதற்காக,
ஹிந்து பிரித்தாளும் சக்திகளின் தேவைகளுக்கு ஏற்ப
வரலாறு முற்றிலுமாக முரணாகத் திருப்பி எழுதப்பட்டது. எந்த முன் பதிவும் இல்லாத இளம் மனங்களுடைய குழந்தைகள்
இந்திய சக்திகளை உடைக்கும் தன்மையை உடைய விவரணத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக தவறாக ஒரேயடியாகத்
தூக்கிச் செல்லப்பட்டு விட்டனர்.
நம்முடைய
தேசத்தின் விவரணத்தை நன்கு கௌரவத்துடன் சித்தரிக்கும்
விதமாக தெளிவான வழிகாட்டுதல்களைத் தந்து நமது வரலாற்றுப் பாட புத்தகங்கள் திருப்பி
உரிய முறையில் எழுதப்பட இதுவே சரியான தருணம். நமது தேசத்தின் கடந்த காலமானது பண்பாட்டு,
சமூக, பொருளாதார மற்றும் அறிவியல் சாதனைகளால்
நிரம்பியுள்ள ஒன்று. இப்போதைய வரலாற்றுப் பாட புத்தகங்கள் நமது சாதனைகளை குறைத்து மதிப்பிடுவதோடு
மட்டுமின்றி ஒவ்வொருவரையும் பகைக்கும் விதத்தில்
தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் சுமையை நமது குழந்தைகள் மீது சுமத்தும் விதத்தில்
இருக்கிறது. இந்தப் புத்தகங்கள் உருவாக்கும் சமூக இசைகேடானது சரி செய்யப்பட வேண்டும்.
இப்போதுள்ள
என் டி ஏ அரசானது வரலாற்றை எழுதும் பணியை புதிதாகப் பார்க்க கங்கணம் பூண்டுள்ளது. அப்படிப்பட்ட
முயற்சிக்கு இந்த நூலானது நிச்சயமாக மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது.
****
மேலே கண்ட தமிழாக்கத்தின் ஆங்கில
மூலம் கீழே தரப்படுகிறது :
An accurate history should not only record the periods of glory
but the moments of degeneration, of the missed opportunities, and of the
failure to forge national unity at crucial junctures in time. It should draw
lessons for the future generations from costly errors in the past.
The
authors of this book have done a commendable job in not only highlighting the
malady but also presenting the facts to do so, in this well researched book.
The present work brings to fore the impunity with which NCERT
(National Council of Educational Research and Training) was compromised during
UPA regime. During both the terms of the ousted alliance, history has been
totally rewritten to serve the purpose of divisive forces, which are trying to
uproot Hindu ethos of the country. Young and impressionable minds of the
children are being hijacked to be more prone to accept the narrative of
breaking India forces.
It is
high time the history text books are rewritten with clear directions to the
historians that the narrative of our country should be depicted with honesty.
Our nation’s past is full of cultural, social, economic and scientific
achievements. The current history text books not only undermine the
achievements but instead burden the country’s children with inferiority complex
and hatred for each other. The social dissonance that these books create should
be rectified.
The current NDA government is
committed to look afresh the issue of history writing. This book can be
certainly an important one for such an endeavour.
நன்றி:
ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்
Post No. 6033
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
Post No. 6032
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ACROSS
2. -Passionate
woman in Sanskrit; wife of Krishna
4. – name of
a Gandharva; ten thousand billion in Sanskrit; exclamation as well
5. – Main
principle of Indian Religions; if you do good you receive good; if you do bad you
receive bad even in your rebirth
6. – In
Tamil it may mean a harvest month or mother with long sound; in travel it may
mean a country with the old name Siam
7.- Mango in
Sanskrit; Sthala Vrksa of Ekampareswar Templein Kanchi
DOWN
1. =wheel;
most famous wheel Sudarsana has it as suffix
2. – name of
a country; ancient king; brother of Rama
3.
enchanting melodious tune in Indian music; meaning ‘attracting, bewildering,
perplexing.
ACROSS
2.BAMA-Pssionate
woman in Sanskrit; wife of Krishna
4.HAHA- name
of a Gandharva; ten thousand billion in Sanskrit;exclamation as well
5.KARMA-
Main principle of Indian Religions; if you do good you receive good; if you do
bad you receive bad even in your rebirth
6.THAI- In
Tamil it may mean a harvest month or mother with long sound; in travel it may
mean a country with the old name Siam
7AMRA- Mango
in Sanskrit; Sthala Vrksa of Ekampareswar Templein Kanchi
DOWN
1.CHAKRAM=wheel;
most famous wheel Sudarsana has it as suffix
2.BHARATA-
name of a country; ancient king; brother of Rama
3.MOHANAM-
enchanting melodious tune in Indian music; meaning ‘attracting,
bewildering,perplexing.
Post No. 6031
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Post No. 6030
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
FOLLOWING ARE THE MAPS OF TAMIL NADU DISTRICTS AS IN 1930S. I HAVE ALREADY POSTED THE RIVERS AND MOUNTAINS MAPS.