Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 1 JANUARY 2019 GMT Time uploaded in London –7-20 AM Post No. 5867 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!
(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல்
துவங்கப்பட்டுள்ளது.
இதில்
அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு
பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில்
இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
இகார் டாம் என்ற
பெரிய கணித மேதையிடம் புரட்சிக்காரன் துப்பாக்கியுடன் வந்தான். நீ யார் என்றான். நான்
கணித புரபஸர் என்றார் அவர். உடனே ஒரு கணிதத்தைக் கொடுத்து அதற்கு தீர்வு காணச் சொன்னான்.
பிறகு என்ன நடந்தது?
வில்லியம் பக்லேண்ட்
என்ற விஞ்ஞானி எதைக் கண்டாலும் சாப்பிட்டு விடுவார். ஒரு நாள் பதினான்காம் லூயி மன்னரின்
பதப்படுத்தப்பட்ட இதயம் அவரிடம் காண்பிக்கப்பட்டது.
அவர் என்ன செய்தார்? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிலும் எதிர்பார்த்த விஞ்ஞானி!
வால்தெர் நெஸ்ட் என்ற விஞ்ஞானி வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிர்பார்த்தார்.
அவரது பசுமாட்டுத் தொழுவத்திற்கு ஒரு முறை சென்றார். அது வெப்பமாக இருந்தது. பின்னர்
என்ன நடந்தது?
இந்தக் காணொளி காட்சியில்
காணலாம்.
ஆம்பியருக்குத்
திடீரென ஒரு யோசனை உதித்தது. எதிரில் இருந்த வண்டியின் பின்புறத்தில் எழுத ஆரம்பித்தார்
– அதை ப்ளாக்போர்ட் போல நினைத்து. திடீரென்று ப்ளாக்போர்ட் நகர ஆரம்பித்தது. சுவையான
இந்த நிகழ்வை இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
கோடக் காமராவைக்
கண்டுபிடித்த ஈஸ்ட்மேன் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற போது ஒரு காட்டில் ஒரு காண்டாமிருகத்தைப்
படம் பிடிக்க ஆரம்பித்தார். அது அவரைத் துரத்தியது. பிறகு என்ன நடந்தது?
ரெஸொனென்ஸ் பற்றி நீல்ஸ் போர் நிகழ்த்திய ஒரு விஞ்ஞான விளையாட்டு!
பிரபல விஞ்ஞானி
நீல்ஸ் போர் ஒரு முறை நண்பர் காஸிமிர் என்பவருடன் ஒரு நீர்நிலையில் கட்டப்பட்ட பாலம்
அருகே சென்றார். சங்கிலியை ஆட்டினார். பின்னர் ரெஸொனென்ஸ் பற்றிச் சொன்னார். நண்பர்
அதைப் பிரமாதம் என்று சொல்ல நீல்ஸ் போரோ சிரித்தார். ஏன்?
பிரபல விஞ்ஞானி
ஐன்ஸ்டீன் தான் காப்பாற்றிய ஒரு போட்டோகிராபருக்கு முன் அமர்ந்து போட்டோவுக்கு போஸ்
கொடுத்தார். அப்போது அவரிடம் உலகில் மூளும் போர்களைப் பற்றிப் பேசினார். என்ன பேசினார்?
புற்று நோய் தீர்க்க முடியாத ஒரு வியாதி அல்ல; ஐயான் காலர் உதவி நிறுவனம் தொடங்கியது ஏன்?
டாக்டர் ஐயான் காலர் புற்று நோயால் பீடிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவர் பிழைப்பது அரிது என்றனர். அவர் என்ன செய்தார்? எப்படி உயிர் பிழைத்தார்?
இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
பழுக்கக்
காய்ச்சிய இரும்பும் அதீத குளிர் நிலையில் உள்ள உறை பனிக்கட்டியும்!
வேதியல்
விஞ்ஞானி லுட்விக் மாண்ட் சமையலறைக்குள் நுழைந்து ஐஸ் கட்டியை சமையல்காரியின் கழுத்தில்
வைத்தார். சமையல்காரி அலறினாள். ஏன்? இந்தக் காணொளிக்
காட்சியில் காணலாம்.
Rudrakshas
(Elaco Carpus seeds) are power beads. Wearing rudraksha controls heart beat and
ensures a positive effect on blood pressure, stress, anxiety, depression,
palpitations and lack of concentration. A research scholar D. Subhas Roy, a
professor of Banares, India, gives supporting scientific evidence for the good
effects of rudraksha on human body. The power of Rudraksha is explained in this
episode.
Time 2 Min 45 Sec
***
POWER OF RUDRAKSHA BEADS ( PART TWO )
ENG EPISODE 6
ENGLISH
The various types of rudraksha, different
classifications which bestow wealth, health and other worldly pleasures are
explained in this episode. Single face to ten faces : What are the benefits? This video gives you the answer.
Time
2 Min 24 Sec
***
அன்புடையீர்,
மேலே கண்டுள்ள காட்சிகளைக்
கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஒவ்வொரு எபிசோடிலும்
உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.
அறிவியல் துலக்கத் துடிக்கும்
வாழ்வியல் மர்மங்கள் பல.
கருவில் உயிர் எப்போது எப்படி
சேர்கிறது, கரு ஆணாவது எப்படி அல்லது பெண்ணாவது எப்படி, பிரக்ஞையும் மனமும் உயிரில்
எப்போது எப்படி சேர்கிறது, உயிர் உடலிலிருந்து எப்படி பிரிகிறது போன்றவை பற்றி அறிவியல்
விளக்கத் துடித்தாலும் போதுமான விவரங்கள் தான் இல்லை. ஆகவே ஏராளமான விஞ்ஞானிகள் பல
கோணங்களில் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இவற்றில் முக்கியமான ஆய்வான
மரணத்தின் பின் என்ன ஆகிறது என்பதைக் கடந்த பல வருடங்களாகவே பல பிரபல விஞ்ஞானிகள் ஆய்ந்து
வந்தனர். மரணம் அடைந்து அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிருடன் எழுவது ஒரு அதிசயம்.
ஆனால் இந்த அதிசயம் உலகெங்கும்
ஆங்காங்கே பல நாடுகளிலும் நடைபெற்று வரும் ஒன்று.
மர்மமான இந்த விஷயத்தைப் பற்றி
விஞ்ஞானிகள் ரேமாண்ட் மூடி, ரிங்,கிப்ஸ்,காலப்,ப்ரொக்டர்,லுந்தால், நொப்ளாச், சபாம்,
ஷ்னேபர், பனிட்ஸ்,க்ரேஸன்,அல்வாராடோ, ஜிங்க்ரோன், க்ரோஸோ, ஐயான் ஸ்டீவன்ஸன்
(Raymond Moody, Ring,Gibbs,Gallup,Proctor,
Lundahl,Knoblauch,Sabom,Schnaper,Panitz,Greyson,Grosso,Alvarado, Zingrone, Ian Stevenson) உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
முதலில் மரணத்திற்குப் பிறகு
இன்னொரு வாழ்க்கை உண்டா என்பதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி
அறிய பல்வேறு நாடுகளில் உள்ள ஏராளமானோரிடம் அறிவியல் கணிப்பு முறைப்படி ஆய்வு செய்த
போது நாடு பேதமின்றி 90 சதவிகித மக்கள் அப்படி ஒரு வாழ்க்கை உண்டு என்பதைப் பற்றிய
தங்களின் உறுதியான நம்பிக்கையைப் பதிவு செய்தனர்.
அடுத்து மரணம் அடைந்த பின் உயிருடன் மீண்டவருள் குழந்தைகள் முதல் வயதானவர்
வரை உலகெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பொதுவான அம்சங்கள் பல இருப்பதை ரேமாண்ட் மூடி
சுட்டிக் காட்டினார்.
அவையாவன:
1. அந்த அனுபவம் வார்த்தைகளால்
விளக்க முடியாத ஒன்று.
2. இறந்த பின்னர் அருகிலிருக்கும்
டாக்டர் அல்லது உறவினர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்வதை இறந்தவர் கேட்கிறார்.
3. ஒரு அமைதியும் மகிழ்ச்சியும்
உடனே கிடைக்கிறது.
4. சகிக்க முடியாத படி ஓசை கேட்கிறது.
டர் என்றோ மணி அடிப்பது போலவோ ஒரு ஓசை!
5. ஒரு இருண்ட குகையில் நுழைவது
போல இருக்கிறது.
6. மனமானது வெளியே சென்று உடலுக்கு
மேலே மிதந்தவாறே உடலைப் பார்க்கிறது.
7. இறந்தவரைப் பலரும் எதிர்கொண்டு
எப்படி ‘இந்த மாற்றத்தை எதிர்கொள்வது’ என்று சொல்கின்றனர், அல்லது உடனடியாக உடலுக்குத்
திரும்புமாறும் சொல்கின்றனர்.
8. உயிருள்ள ஒரு ஒளியை – பிரகாசத்தைப்
பார்க்கின்றனர்.
9. வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும்
ஒரு மதிப்பீடாக ஓடி வருகின்றன.
10. உயிர் வாழ்வது மற்றும் இறப்பது
ஆகிய இந்தப் பிரிவின் எல்லையாக ஒரு நீர்ப்பரப்பையோ,ஒரு பனிப்படலத்தையோ,ஒரு கதவையோ அல்லது
ஒரு வேலியையோ பார்க்கின்றனர்.
11. உடலுக்குத் திரும்பி வருவதை
உணர்கின்றனர்.
12. உடலுக்குத் திரும்பி வந்தவுடன்
அருகிலிருந்தவர்களிடம் தாங்கள் உயிர் பிழைத்தது பற்றிச் சொல்ல ஒரே தயக்கமாக இருக்கிறது.
13. இறந்த பின் மீண்டும் பிழைத்த
அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பாஸிடிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
14. இறப்பைப் பற்றிய பயமே போய், மரணம் பற்றி ஒரு புதிய அணுகு முறை உண்டாகிறது.
இந்த பதினான்கு அம்சங்களில்
உடலை விட்டு வெளியே சென்றவுடன் ஏற்படும் ஆனந்தமான ஒரு உணர்வை அனைவரும் சொல்கின்றனர்.
மேலிருந்து தன் உடலையும் சுற்றி இருப்போரையும் பார்ப்பதில் தெளிவான பார்வை உள்ளது,
வண்ணங்களும் தெரிகின்றன என்று மரணத்திலிருந்து மீண்டு வந்தவர்கள் கூறினர்.
விஞ்ஞானிகள் ஹோல்டனும் ஜோஸ்டனும்
(Holden and Joesten – 1990) ஒரு சிறிய சோதனையை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரி படுக்கையின் மேலே
ஆவிகள் மட்டுமே பார்க்கும்படியான அடையாளக் குறியீடுகளை தக்க இடத்தில் வைத்தனர். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் ஆறு மாதங்கள் மரணமடையவில்லை ஆனால் ரிங் மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் இது போன்றதொரு
சோதனையை (1993இல்) மேற்கொண்ட போது இரண்டு நோயாளிகள் மரணம் அடைந்தபின்னர் அதன் பிடியிலிருந்து
மீண்டு வந்தவர்கள் தாங்கள் மேலே மிதந்த போது ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள பொருள்களைப்
பார்த்ததாகச் சொன்னார்கள். படுக்கையில் இருந்து பார்க்க முடியாத பொருள்கள் அவை. இதனால்
உத்வேகம் பெற்ற விஞ்ஞானிகள் இதை இன்னும் நன்கு ஆராய வேண்டும் என்று சகாக்களை வேண்டிக்
கொண்டனர்.
விஞ்ஞானிகள் மோரிஸ் மற்றும் க்னாஃப் (Morris and Knafl)இது போலவே சோதனையைச் செய்தனர் (2003இல்).இறந்து மீண்ட ஒரு நோயாளி ஆஸ்பத்திரியின் மேல் புறத்தில் இருந்த காபினெட்டின் மேலே ஒரு பென்னி நாணயம் இருப்பதைப் பார்த்ததாகச் சொன்னார். அவசரம் அவசரமாக அந்த கேபினெட்டின் மேற்புறத்தை ஆராய்ந்த போது அங்கு ஒரு பென்னி நாணயம் இருப்பதைக் கண்டனர். யாராலும் எளிதில் பார்க்க முடியாத அந்தச் சின்ன நாணயத்தை இறந்து மீண்டவர் கண்டதாகச் சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து தொடர்வோம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
..
அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் மிக முக்கியமானவர்
டாக்டர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (Dr. Benjamin Franklin : பிறப்பு 17-1-1706 மறைவு
17-4-1790). இவர் ஒரு விஞ்ஞானி. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்.எழுத்தாளர்.
அச்சக நிபுணர். அரசியல் கொள்கை வகுப்பாளர். அரசியல்வாதி.ராஜ தந்திரி. போஸ்ட்மாஸ்டர்.நகைச்சுவையாளர்.
பொதுநலத்தில் ஊக்கமுடையவர்.
இத்துணை பெருமையும் படைத்த இவர் தான் அமெரிக்காவின்
முதல் பொது நூலகம் திறப்பதற்கும் காரணமானவர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு நகரான எக்ஸிடர் (Exeter) என்பதன்
பெயரை ஃப்ராங்க்ளினைக் கௌரவிக்கும் விதமாக ‘Franklin’ என மாற்ற அனைவரும் முடிவு செய்தனர்.
இந்த கௌரவத்திற்கு பதிலாக அவரிடம் ஊரார் அந்த ஊர்
சர்ச்சுக்கு ஒரு கண்டாமணியைத் தருமாறு கேட்டனர். ஆனால் ஃப்ராங்க்ளினோ ஒலிக்கு பதிலாக
அறிவை முன்னிலைப் படுத்த எண்ணினார். (Sense preferable to Sound). ஆகவே ஊர் மக்கள் படிப்பதற்காக 116 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.
புத்தகங்கள் வந்து சேர்ந்தவுடன்
ஒரு பெரிய விவாதம் தொடங்கியது. அந்தப் புத்தகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும்
என்ற விவாதம் தான் அது. ஊர் மக்கள் ஒரு கூட்டம் கூட்டினர். 1790, நவம்பர், 20ஆம் தேதிய
அந்தக் கூட்டத்தில் ஒருமித்த முடிவாக ஊரார் இலவசமாக அந்த நூல்களை அனைவருக்கும் படிக்கக்
கொடுக்க வேண்டும் என்று ஓட்டுப் போட்டனர். அது ஒரு பொது நூலகமாக ஆனது. இது தான் அமெரிக்காவின்
முதல் பொது நூலகம் பிறந்த கதை. 1904இல் நூலகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் உருவானது.
ஃப்ராங்க்ளின் அன்று கொடுத்த நூல்கள் அனைத்தும் இன்றும் கூட ஒரு அலமாரியில் அந்த நூலகத்தில்
வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 31 December 2018 GMT Time uploaded in London –7-24 am Post No. 5862
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அலெக்ஸிஸ் பிரொன் (Piron) என்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர். ஒரு சமயம் அவர் ஒரு போலி எழுத்தாளரிடம் மாட்டிக்கொண்டார். எதிர்பாராத நேரத்தில் அந்த ஆசாமி வந்து, ‘ஐயா பெரியவரே, என் கவிதைகளை நீங்கள் கேட்டு, கருத்து சொல்ல வேண்டும்’ என்றார்.
தயவு தாட்சிண்யம் காரணமாக பிரோனும் சரி என்று ஒப்புக்கொண்டார்.
ஆனால் கவிதை எழுதியதாகச் சொல்லிக்கொண்டு வந்த படைப்பாளி, பயங்கரக் ‘கள்ளக் காப்பி’ அடிப்பவர். பிரபல கவிஞர்களின் எழுத்துக்களை அப்படியே எடுத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஓரிரு சொற்களைச் சேர்த்து தான் எழுதியதாக பாவனை செய்தார்.
பிரோனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. போலிக் கவிஞர் கவிதை வாசிக்கும்போது, எங்கெங்கு எல்லாம் மற்றவர் படைப்புகளைத் திருடி இருந்தாரோ அந்த இடமெல்லாம் தன் தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு பவ்யமாக சலாம் போட்டார்.
போலிக் கவிஞர் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒரே வியப்பு. திடீரென்று கவிதைகள் வாசிப்பதை நிறுத்திவிட்டு.
‘அன்பரே! அவ்வப்பொழுது தொப்பியைக் கழற்றிவிட்டு தலை குனிந்து சலாம் போடுகிறீர்களே! இதன் தாத்பர்யம் என்னவோ?’
உடனே பிரோன் சொன்னார்:
‘ஓ! அதுவா? வேறு ஒன்றுமில்லை; நான் பழைய நண்பர்களைச் சந்திக்கும்போது போடும் சலாம் அது! பழக்க தோஷம்; அவ்வளவுதான்- என்றார்.
(காப்பி அடிக்கப்பட்ட பழைய கவிஞர்களின் வரிகள் வந்த போதெல்லாம் அவர் சலாம் போட்டது, போலிக் கவிஞருக்குப் புரிந்ததோ இல்லையோ!)
Xxx
பாழாய்ப் போன பார்ஸல் மீண்டும் வந்தது!
ஸ்கட்லாந்தைச்சேர்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) . அவர் நாவல் ஆசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:–
“வசந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பெரிய பார்ஸல் நியூயார்க்கிலிருந்து வந்தது. அவசரம் அவசரமாகப் பிரித்தேன். ஒரு பெண்மணி ஒரு பெரிய கதை எழுதி, அன்பான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.
‘அன்பரே! பெருந்தகையோனே!
என் கதைக்கு ஒரு அழகான முன்னுரை பின்னுரை எழுதுக.
எங்கெங்கெல்லாம் திருத்த வேண்டுமோ அங்கெங்கெல்லாம் ‘நகாசு’ வேலை செய்து திருத்துக. இதை வெளியிடவும் ஏற்பாடு செய்துவிடுங்கள்; காப்பி ரைட் கேட்டு பலரும் வாசலில் ‘க்யூ’வில் நிற்க வேண்டும்; அப்படி என் கதையை ஜொலிக்கச் செய்துவிடுங்கள்’.
இதைப் படித்துவிட்டு பார்சலின் அட்டையைப் பார்த்தேன். எனக்கு ஐந்து பவுன் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து நொந்து போனேன்.அந்தப் பெண்மணி சரியாக தபால் கட்டணம் செலுத்தவில்லை!
காலம் உருண்டோடியது; காலைத் தபால்களை ஆவலுடன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய பார்ஸல்! அவசரப்பட்டு பிரித்துவிட்டேன்! என் பாழாய்ப்போன ஞாபக மறதி! அதே பெண்மணியின் பார்ஸல்!! கத்தை கத்தையாக எழுத்துப் பிரதிகள். அத்துடன் பவ்யமான ஒரு கடிதம்
“மீண்டும் அதே கதையை அனுப்புவதற்கு மன்னிக்கவும்; போன தடவை பார்ஸல் அனுப்பிய பின்னர்தான் ஒரு செய்தி படித்தேன். கடலில் பெருங் காற்றாம்; ஒரே புயல் மழையாம். ஒருவேளை நான் அனுப்பிய பார்ஸல் உங்களிடம் வந்து சேரவில்லையோ என்று ஒரு ஸம்சயம்; அவ்வளவுதான்”.
ஸர் வால்டர் ஸ்காட் தலை மயிரைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான்; வெந்து,நொந்து, நைந்தே போனார்.
xxx
என் தரத்துக்கு ‘காப்பி’ அடிக்கவில்லையே!
சாமுவேல் கோல்ட்வின் (Samuel Goldwyn) என்பவர் போலந்து நாட்டில் பிறந்த அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்.
ஒரு பொய்யன், அவர் எழுதுவதாக,அவர் பெயரில் போலி விமர்சனங்களைப் பத்திரிக்கையில் எழுதி வந்தான். இது சாமுவேலுக்கும் தெரியும். ஒரு முறை அந்த ‘போலி சாமுவேல் கோல்ட்வின்’, உடல் நலம் குன்றி எழுதவில்லை. உடனே மற்றொரு பொய்யன் கோல்ட்வின் பெயரில் அந்த வாரப் பத்திரிக்கையில் எழுதி இருந்தான். அதைப் அடித்த உண்மைச் சாமுவேலுக்குக் கொஞ்சம் வருத்தம்.
“அடடா! முந்தைய போலி போல, இவருக்கு நன்றாக எழுதத் தெரியவில்லையே!”-
என்று அங்கலாய்த்தார்!
சுய விமர்சனத்திலும் ஒரு பெருந்தன்மை!
xxxx
பென் ஜான்ஸனா! பிச்சைக்காரனா?
பென் ஜான்ஸன்(Ben Johnson) என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர்.
அந்தக் காலத்தில் கிராவன் பிரபு (Lord Craven) என்பவர் , பென் ஜான்ஸனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். நண்பர்களிடம் பேசுகையில், ‘அட, எவ்வளவு சிறந்த எழுத்தாளர் அவரை என்றாவது ஒரு நாள் பார்க்க வேண்டும்’ என்று செப்பியிருந்தார்.
இது பென் ஜான்ஸனின் காதுகளையும் எட்டியது. உடனே ஒரு நாள், குசேலர் (சுதாமா) கிருஷ்ண பரமாத் வைப் பார்க்கப் போனது போல, கந்தலும் பிசுக்கும் உடைய ஆடைகளுடன் கிராவன் பிரபுவின் அரண்மனைக்குப் போனார்.
காவற்காரன் கேட்டான்:
யாரடா நீ?
‘நானா? பென் ஜான்ஸன் என் பெயர். ஐயாவைப் பார்க்க வந்தேன்’.
சீ’ போ! பிச்சைக்காரப் காரப்பயலே! ஐயாவைப் பார்க்க வந்தவனின் மூஞ்சியையும், மொகரையையும் பாரு’– என்று திட்டி விரட்டினான்.
பென் ஜான்ஸனும் விடவில்லை
டேய் போடா; நீதாண்டா பிச்சைக்காரன். நான் பென் ஜான்ஸண்டா; கொப்பன் மவனே! என்று பதிலுக்கு வசை பாடினார்.
ஏதோ அரண்மனை வாசலில்
‘’கச முசா’’ நடக்கிறது என்பதை அறிந்த கிராவன் பிரபு வாசலுக்கு வந்தார்.
‘ஐயா என்ன வாக்குவாதம்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
‘நானா? நான் பென் ஜான்ஸன்! ஐயாவைப் பார்க்க வந்தேன். அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்’.
அட! நீங்கள் பென் ஜான்ஸனா?
ஒரு வாத்து வந்தால் கூட ‘சூ’ என்று விரட்டப் பயப்படும் ஆள் போல அல்லாவா இருக்கிறீர்கள்! தி ஸைலண்ட் உமன் புஸ்தம் எழுதிய பென் ஜான்ஸனா? என்றார் கிராவன்.
பென் ஜான்ஸனா விடுவார்! படைப்பாளி ஆயிற்றே!
‘’சூ, சூ’’ என்று உரத்த குரலில் விரட்டிக் காட்டினார்.
கிராவன் பிரபுவுக்கு ஒரே குஷி! குசேலரை, கண்ணபிரான், அரண்மனைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தது போல ஸர்வ உபசாரங்களையும் செய்தார்.
tags–போலி எழுத்தாளர்கள், பிரோன்;சர் வால்டர் ஸ்காட், பென் ஜான்சன்
Compiled by London Swaminathan swami_48@yahoo.com Date: 31 December 2018 GMT Time uploaded in London –5-25 am Post No. 5861
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Lord Craven during the reign of King James I was anxious to meet Ben Johnson, the poet. When the later learned of it he proceeded to call on his lordship. He was in a very shabby condition and the porter insulted him and asked him to go about his business. The poet, enraged, returned the compliment s. Lord Craven, hearing the disturbance came out to inquire about it.
I understand your lordship wishes to see me, said the poet. You, friend! Exclaimed Lord Craven. Who are you?
“Ben Johnson “
No,no, you can’t be Ben Johnson who wrote “The Silent Woman “. ; you look as if you could not say Boo to a goose.
Boo, then! Cried Ben Johnson.
His lordship laughed and profusely apologised: you are Ben Johnson after all.
Xxxx
Sir Walter Scott told this story
“ One morning last spring, I opened a huge bunch of despatch…the contents proved to be a MS play by a young lady of New York who kindly requested me to read and correct it, equip it with prologue and epilogue, procure it for a favourable reception from the manager of Drury Lane and make Murray or Constable bleed handsome ly for the copyright ; and inspecting the cover I found that I had been charged five pounds odd for the postage . This was bad enough— but there was no help, so I groaned and submitted. A fortnight or so after, another packet , of not less formidable bulk arrived, and I was absent enough to break its seal too without examination.
Conceive my horror when out jumped the same identical tragedy of The Cherokee Lovers, with a second epistle from the authoress, stating that, as the winds had been boisterous, she feared the vessel entrusted with her former communication might have foundered, and therefore judged it prudent to forward a duplicate “.
Xxx
At an unguarded moment Piron was buttonholed by a poetaster who, standing his victim in a corner, announced that he was going to to read him the five entire acts of a tragedy he had just dashed off. After hearing the first scene, Piron perceived that the play was nothing but a potpourri of verses pillaged from other poets. So as he stood wearily listening he took off his hat and made a low bow to each quotation he recognised. The author at length lifted his eyes, observed Piron’s repeated salutation, and asked him why he bowed so often. Why, said Piron as he edged away, that is the way I am accustomed to recognise old friends when I find them “.
Xxxx
Albert Smith once wrote an article in “Black woods “ , signed AS. “Tut”, said Douglas Jerrold, on reading the initials, “what a pity Smith will tell only two thirds of the truth.
Xxxx
Self criticism is an admirable human trait. It is demonstrated in this story of Samuel Goldwyn. A ghost writer, who had been doing a series of articles purporting to be by Goldwyn, became sick and one of the pieces was done by a substitute ghost. Goldwyn, upon reading this article, expressed some dismay, saying,
“This is not up to my usual standard “.
Tags– authors anecdotes, Goldwyn, Sir Walter Scott, Piron, Ben Johnson
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 30 December 2018 GMT Time uploaded in London –18-37 Post No. 5859
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மநு நீதி நூல்- பகுதி 37
மனு தர்ம சாஸ்திரத்தின் ஏழாவது அத்தியாயத்தில் 99 ஸ்லோகங்களைக் கண்டோம். இன்று 160 வரை காண்போம். முதலில் இணைப்பைப் படிப்பதற்கு முன்னால் சுவையான விஷயங்களை புல்லட் பாய்ண்டு bullet points களில் தந்து விடுகிறேன்.
மநுவை உலக மஹா ஜீனியஸ் genius என்று புகழ்வதற்குக் காரணம் அவர் இங்கே கூறும் நிர்வாக அமைப்பு, உளவாளி விஷயம், தூதர் விஷயம், அரசனின் அன்றாட ஆலோசனை, வரிவிதிப்பு விஷயம் ஆகியன ஆகும்.
மநுவின் மஹா மேதவித் தனத்துக்கு சர்டிபிகேட் கொடுப்பவர் தமிழ் வேத மஹா முனிவர் திருவள்ளுவ நாயனார் ஆவார். மநு சொல்லும் எல்லா விஷயங்களையும் அவர் அரசியலில் சொல்லி விடுகிறார். சில மநு ஸ்லோகங்களை வள்ளுவர் அப்படியே தருகிறார்.இதை நானும் தனிக் கட்டுரைகளில் தந்துள்ளேன். அந்தக் காலத்தில் பேராசிரியர் V R . ராமச்சந்திர தீட்சிதர் முதல் தற்காலப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வரை அனைவரும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டனர்.
அழகான அட்வைஸ் Advice
ஸ்லோகம் 7-99 முதல் 7-102 வரை மன்னர்களுக்கு புத்திமதி சொல்கிறார். அந்த 4 புத்திமதிகளும் அரசியல், நிதித் துறையில் வெற்றி அடைய விரும்புவோருக்கும் பொருந்தும்.
ஸ்லோகம் 102, 105, 110 முதலியவற்றின் எதிரொலியைத் திருக்குறளிலும் காணலாம்.
ஆமையும் கொக்கும்
ஆமை போல அடக்கம்- இது பகவத் கீதை முதல் திருமூலர் வரை கையாளும் இந்து உவமை; கொக்கு போலக் காத்திரு என்பதும் பர்த்ருஹரி முதல் வள்ளுவன் வரை காணலாம்.இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் மநு ஐயாதான்.
மநுவைப் படிக்கும் ஆங்கிலேயர்கள், வெள்ளைத்தோல் அறிஞர்கள் , அனைவரும் ஒரு விஷயத்தை மனமுவந்து அளிகின்றனர். மநு சொல்லும் தெய்வங்களனைவரும் வேத காலக் கடவுளர்.ஆகையால் அவர் வேத காலத்தை ஒட்டியவர் என்று தெளிவு பெற்றனர்.அண்மைக்கால ஸரஸ்வதி நதி ஆய்வும் மநுவை கி.மு 2000 க்கு முன்னர் தள்ளிவிட்டதை முன்னரே பார்த்தோம்.ஆயினும் ‘சூத்ராள்’ பற்றிப் பல விஷயங்களை சுங்க வம்ஸ மன்னர்கள் சேர்த்துள்ளனர் அல்லது அவர்கள் பிராஹ்மண அரசர்களென்பதால் எவரோ துணிச்சலாகக் ‘கை வைத்திருக்கலாம்’. அவர் சொல்லும் ஒட்டு மொத்த விஷயங்களையும் பார்க்கையில் இவை பிற் சேர்க்கைஎன்பது வெள்ளிடைமலை என விளங்கும்.
அட்டை போல உறிஞ்சு, கன்று போல பால் குடி, தேனீ போல தேன் எடு (sloka 129)
இது அவர் வரிவிதிப்புக்குக் கொடுத்த அட்வைஸ். இதற்கு முன்னர் ஆமை, கொக்கு, ஓநாய்,சிங்கம் முதலிய உவமைகள் வருகின்றன.இந்த மூன்று பிராணிகள் பற்றி மநு சொன்னதை ஒன்பது உரைகாரர்களும் ‘சிக்’கெனப்பிடித்து அழகாக விளக்கினர்.
பணக்காரர்களாக இருந்தால் எங்கள் பிரிட்டனைப்போல 60% வரி; அட்டை போல உறிஞ்சு.இங்கு 60000 க்கு மேல் சம்பளம் இருந்தால் அட்டை (leech), இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிவிடுவர் (கடுமையான வரிவிதிப்பு).
என்னைப்போ ல ஏழைப் பங்காளர்-மிடில் கிளாஸ் middle class – என்றால் கன்று(calf) போல வரி விதிப்பு! பாதி உனக்கு, பாதி எனக்கு.
மிக ஏழை என்றால் தேனீ (bee) தேன் எடுப்பது போல வரிவிதிப்பு. அதாவது மலருக்கு ஒரு தீங்கும் இல்லை. மலருக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பலன் வேறு! அதுவும் மலருக்குத் தேவை இல்லாத தேன். இப்படி அற்புதமான வரி விதிப்பு முறையை மநு கூறுகிறான் ஸ்லோகம் 129
சங்க இலக்கியத்திலும் ஸம்ஸ்க்ருத இலக்கியம் நெடுகிலும், விளைச்சல்,உற்பத்திப் பொருட்களுக்கு ஆறில் ஒரு பங்கு வரி விதிப்பு பேசப்படுகிறது.இதற்கும் மூல புருஷன் ஐயா மநு தான்.
எங்கள் பிரிட்டனிலும் VAT 17.5 சதவிகிதம்தான்! ஆறிலொரு பங்குதான்! மநு சொன்னதை இன்றுவரை பிரிட்டன் பினபற்றுகிறது.
மநு சொன்ன விஷயங்களில் சூத்ராள் எதிர்ப்புப் பிற்சேர்க்கை ஸ்லோகங்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டால் அதிசய விஷயங்களைக் காணலாம். ஆனால் அப்படி எறிந்தால், பாவம் மார்கஸீயங்களும் திராவிடங்களும் பேசுவதற்கு எதுவுமின்றித் தவியாய்த் தவிப்பார்கள்!!
ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்!!
ஸ்லோகம் 7-135 முதல் வேத பண்டிதர்களுக்கு வரி போடாதே என்கிறார். வள்ளுவரும் பசுக்கள் பால் தராது, பிராஹ்மணர்கள் வேதத்தை மர்றந்து விடுவர்- அரசன் நேர்மையான ஆட்சி செய்யவிடில் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறான்.(காண்க ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் — குறள்
தஸ்யூ யார்?
ஸ்லோகம் 7-143ல் தஸ்யூ என்றால் திருடன் என்று சொல்கிறார். பத்தாவது அத்தியாயத்தில் மேலும் பிரஸ்தாபிக்கிறார். அதையும் பின்னர் காண்போம். உலகிலுள்ள எல்லா சமுதாயத்திலும் நல்லோரும் தீயோரும் உண்டு . நாடாள வந்த அயோக்கியர்களும், மதத்தைப் பரப்ப வந்த கிராதகர்களும் தஸ்யூ என்றால் திராவிடர்கள், பழங்குடி மக்கள் என்று பொய் மூட்டை கட்டி விட்டனர். தத்துப்பித்து திராவிடங்களுக்கும், மார்கஸீய விஷமங்களுக்கும் ‘கோதுமை அல்வா’ போட்டது போல ஆயிற்று. சாகுந்தலத்திலும் கூட தஸ்யூ என்றால் கொள்ளைக்காரன் என்று காளி தாஸன் விளம்புவான். நம் நாட்டைக் கொள்ளையிட்ட பிரிட்டானியர்கள் நம்மைப் பொறுத்த மட்டில் தஸ்யூக்கள்!
பெண்கள் ஜாக்கிரதை
மன்னர்கள் ரஹஸிய ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள், கிளிகள், மைனாக்கள் போன்றவை இருந்தால் ஆபத்து என்கிறான்– மநு ஸ்லோகம் 7-150
அண்மையில் பிரிட்டனில்கூட ஒரு கள்ளக் காதலி வருகையை மைனா சொல்லிக் கொடுத்து பத்திரிக்கைகளில் பெரிய செய்தி வெளியானது. பெண்கள் பற்றி மஹாபாரதம் முதல் கம்ப ராமாயணம் வரை இப்படி ஒரு ரஹஸியம் காக்க முடியாத செய்தி உளது
பெண்கள் வேலைசெய்வது பற்றியும் சொல்லுவதால், மநுவின் காலத்தில் பெண்கள் வேலை செய்தததும் தெரிகிறது –ஸ்லோகம் 125
சம்பள விகிதாசாரம் 126 முதல்
அம்சமான organization ஆர்கனைசேஷன்
மநு 7-110 முதல் 7-10 வரை நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை அழகாகச் செப்புகிறான்
ஸ்லோகம் 7-153 முதல் தூதர்கள்,உளவாளிகளமைப்பு பற்றிப் பேசுகிறான். ராமாயண, மஹாபரதத்தில் தூதர், உளவாளிகள் பற்றிப் படிக்கிறோம். உலகில் நாகரீக முதிர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே இது இருக்கும். எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களில் இப்படி விரிவானதொரு நீதி நூல் இல்லாமையால் நாம்தான் உலகிற்குக் கொடிகள், சின்னங்கள், தூதர் முறை, உளவாளி அமைப்பு என்பதை எல்லாம் கற்றுத தந்தோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி எனவிளங்கும்.
நான் மேலே பிரஸ்தாபித்த பெரும்பாலான விஷயங்கள் ஒன்பது உரைகாரர்களின் வியாக்யானங்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக காமாந்தகியின் நீதி சாரம் என்னும் நூல் எடுத்தாளப்படுகிறது.
மரண தண்டனை ஜிந்தாபாத்
வள்ளுவன் மரணதண்டனை ஆதரவாளன். கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல்– என்ற குறளில் கொலைகாரர்களை களை எடுப்பது போலப் பிடுங்கி எறி என்பான் வள்ளுவந்0– இது மநு ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பு
இதுவும் மநு சொன்னதே. மன்னர்கள் ,வன்செயலைப்– பலவந்தத்தைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்பான் மநு.
காண்க ஸ்லோகம் 99-160
பாபிலோனிய ஹம்முராபியின் 282 சட்ட விதிகளில் பக்கத்துக்குப் பக்கம் ‘கொல், கொல், கொல்’ என்று கொக்கரிக்கிறான்.ஆனால் மநுவில் அளவோடு தண்டனைகள் பேசப்படுகின்றன.
7-99. Let him strive to gain what he has not yet gained; what he has gained let him carefully preserve; let him augment what he preserves, and what he has augmented let him bestow on worthy men. 100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them. 101. What he has not yet gained, let him seek to gain by his army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by various modes of increasing it; and what he has augmented, let him liberally bestow on worthy men.
7-102. Let him be ever ready to strike, his prowess constantly displayed, and his secrets constantly concealed, and let him constantly explore the weaknesses of his foe.
swami_48@yahoo.com Date: 30 December 2018 GMT Time uploaded in London –15-41 Post No. 5858
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
1
2
3
4
5
6
7
8
9
FIND OUT AT LEAST 10 WORDS IN THE CROSS WORD. ALL THE WORDS ARE FROM HINDU SCRIPTURES
1. wife of Yajnavalkya, who was learnt philosophy from her husband
3. – birth name of Swami Vivekananda and prime Minister of India
6. – meaning gold coloured ; pre fix of many demons. In the Rig Veda even the golden egg has this word as prefix
9. = means health
DOWN
1. – A king born out of the body of his father; South Indian Chozas claim him as their forefather
2. second of the four yugas
4. Grandson of Chyavana Rishi. His beloved Pramdvara died just before the marriage. Then this man gave his half life to her and revived her and led a happy married life.
5. The god with whose praise the Rig Veda begins and ends
7. – English word yoke came from this word, meaning unite body and mind together
Answer
M1
A
I
T2
R
E
Y
I
A
R
N3
A
R4
E
N
D
R
A5
D
U
T
G
H6
I
R
A
N
Y7
A
N
A
U
Y
O
I
T
U
G
O8
9A
R
O
G
Y
A
M
ACROSS
1.MAITREYI-wife of Yajnavalkya, who was learnt philosophy from her husband
3.NARENDRA- birth name of Swami Vivekananda and prime Minister of India
6.HIRANYAN- meaning gold coloured ; pre fix of many demons. In the Rig Veda even the golden egg has this word as prefix
9.AROGYAM= means health
DOWN
1.MANDHATA- A king born out of the body of his father; South Indian Chozas claim him as their forefather
2.TRETA YUG(A)- second of the four yugas
4.RURU- Grandson of Chyavana Rishi. His beloved Pramdvara died just before the marriage. Then this man gave his half life to her and revived her and led a happy married life.
5.AGNI- The god with whose praise the Rig Veda begins and ends
7.YOGA- English word yoke came from this word, meaning unite body and mind together
8.0M- All the Veda mantras begin with this monosyllabic mantra