உத்தரகாண்ட் மாநிலம் இந்தியாவின் வடபகுதியில் இமயமலையில் அமைந்துள்ள மாநிலமாகும். எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், பரவசமூட்டும் பனிமலை, ஏராளமான புனிதத் தலங்கள் என அனைவரையும் வரவேற்கும் அற்புதங்களைக் கொண்டுள்ளது இந்த மாநிலம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம், தெற்கில் உத்தரபிரதேசம், மேற்கிலும் வடமேற்கிலும் புனிதமான இமயமலை என எல்லைகளைக் கொண்டுள்ள இதை தேவபூமி என்றே மக்கள் அழைக்கின்றனர். (இது 2007 முடிய உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டு வந்தது)
இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
டேராடூன் உயிரியல் பூங்கா
உத்தரகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூன். இங்கு நகர மையத்தில் உள்ள இந்த விலங்கியல் பூங்காவில் புலியில் ஆரம்பித்து மயில்கள் வரை அனைத்து விலங்கினம் மற்றும் பறவை வகைகளைக் காணலாம்.
காந்தா கர்
பழைய கால மணிக்கூண்டு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் மணியைப் பார்க்கும் வகையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னம் இது.
ஷிகர் நீர்வீழ்ச்சி.
டேராடூனின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மலையின் மீது அமைந்துள்ளது இது. மலை ஏறுவதில் விருப்பமுள்ளவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.
புலிகளை நெருக்கமாகப் பார்க்க உள்ள இடம் டைகர் வியூ ஜங்கிள் கேம்ப். காட்டில் சஃபாரி வசதியும் உண்டு.
கொள்ளையர் (ராபர்ஸ்) குகை
சிவபெருமானின் உறைவிடம் இதுவே. கொள்ளையர் பதுங்கி வாழ வசதியாக இது பயன்படுத்தப்பட்டதால் இது கொள்ளையரின் குகை என்று அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள அதிசயம் என்னவெனில் குகையின் நடுவிலிருந்து ஆறு பாய்கிறது.
சஜஸ்த்ர தாரா
இது ஒரு சிறிய நீர்வீழ்ச்சித் தொடர். கந்தகம் உள்ள நீர். சில சிகிச்சைக்கு உகந்த இடமாகும் இது. இங்கு ரோப் வே உண்டு. இந்த வான்வழிப் பாதை வழியே டூன் பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் இந்த வான்வழி சவாரி நீடிக்கும். அற்புதமான இயற்கைக் காட்சிகளை வானிலிருந்து பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!
மைண்ட் ரோலிங் மடாலயம் : பௌத்த மடாலயமான இது மிக்க பழமையானது. இங்குள்ள ஸ்தூபி மிக்க உயரமானது.
கேதார் கந்தா
இந்தச் சிகரம் டேராடூனிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மலையேறத் துடிப்பவர்களுக்கான இடம் இது. டன்ஸ் நதி பள்ளத்தாக்கில் உள்ள இந்த சிகரம் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
ஹரித்வார், ரிஷிகேஷ்
ரிஷிகேசம் டேராடூனிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. \. நவம்பர் முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.
இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்தத் தலத்தில் தான், ராமரும் லட்சுமணரும், ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.
அத்துடன் பரதரும், சத்ருக்னரும் கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.
ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம், 1986ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராமர் பாலத்தின் அருகில், உள்ளது. ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே கங்கையும் துணைக்கு வருவாள். சலசலத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.
அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள்.
இலேசாக அசைந்து ஆடும் இந்தப் பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும் கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர், படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம். இந்தப் பகுதியில் தான் லட்சுமணர் தவம் செய்தார்.
லட்சுமணருக்காகத் தனிக் கோவில் அமைந்துள்ள இடம் இது ஒன்று தான். லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன் அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி, மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர், விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.
இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ் மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.
சுற்றிலும் அழகிய சாந்தி தவழும் மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம் இதுவே!
ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம் என்று கொண்டாடப்படுகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 52
Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PART 52,
BHAI KANHIAJI, JANA NETA IRAWAT SIGH, EMPOWERED GIRL, ROSE, HERBS, PHARMACEUTICAL CONGRESS, SANT GADGE BABA
INS DELHI SHIP, DAVID SASSOON LIBRARY, CONNEMARA LIBRARY, CULCUTTA SANSKRIT COLLEGE, FOUR MUSICAL INSTRUMENTS, FOUR SEA SHELLS, WOMEN IN AVIATION, FLUTE, SAROD, MRIDAND, PAKAVAJYA, POSTAL SERVICES CENTRE, RAJPUT BATTALION, ACHARYA TULSIJI, INTERNATIONAL PHYSICS CONGRESS, EINSTEIN, BABA RAGHAVDAS, SOONERATIA ALBA PLANT, TIRUMALA GOLDEN TOWER, WATER FALLS, NETAJI, FOUR MADHUBANI MITHILA PAINTINGS, OLYMPICS, WEIGHT LIFTING, TENNIS, YEAR 2000 CHILDREN S DAY
BHAI KANHIAJI
—SUBHAM—
TAGS-Pictures of 2500 Indian Stamps, PART 52, BHAI KANHIAJI, JANA NETA IRAWAT SIGH, EMPOWERED GIRL, ROSE, HERBS, PHARMACEUTICAL CONGRESS, SANT GADGE BABA, INS DELHI SHIP, DAVID SASSOON LIBRARY, CONNEMARA LIBRARY, CULCUTTA SANSKRIT COLLEGE, FOUR MUSICAL INSTRUMENTS, FOUR SEA SHELLS, WOMEN IN AVIATION, FLUTE, SAROD, MRIDAND, PAKAVAJYA, POSTAL SERVICES CENTRE, RAJPUT BATTALION, ACHARYA TULSIJI, INTERNATIONAL PHYSICS CONGRESS, EINSTEIN, BABA RAGHAVDAS, SOONERATIA ALBA PLANT, TIRUMALA GOLDEN TOWER, WATER FALLS, NETAJI, FOUR MADHUBANI MITHILA PAINTINGS, OLYMPICS, WEIGHT LIFTING, TENNIS, YEAR 2000 CHILDREN S DAY, VEERA SIVAJI, PATEL, NATAJI, WRESTLING
Astronaut Group Captain Shubhanshu Shukla, who will pilot the Axiom-4 mission that has been rescheduled for June 10, said he would carry the hopes and dreams of 1.4 billion Indians into space.
Urging people to pray for the mission’s success, he said, “This mission is a milestone for India’s space programme and I request India to pray for its success. Even stars are attainable, Jai Hind! We will do amazing things for 14 days in orbit.”
Speaking during the crew’s media interaction from the quarantine centre in Florida, Shukla called the preparation for the human space programme a journey of growth and discovery. “I reflect on the path that has brought me here. From diverse systems to advanced platforms, this training has been intense but fruitful. Your (India) strength and support has been my anchor HE SAID.
Shukla is carrying along souvenirs crafted by the National Institute of Design. “From the orbit, I will be speaking live with students and members of India’s space industry. I hope to ignite curiosity in young minds,” he said.
Responding to a query whether he would speak to Prime Minister Narendra Modi from space the way Wing Commander Rakesh Sharma (retd) interacted with them PM Indira Gandhi, Shukla said there would be an interaction with VIPs. He, however, did not name any VIP.
Sharma flew to space in 1984 and Shukla said he was in constant touch with him. “Rakesh Sharma was like a mentor and has been a guide to me right from the selection process. He very well understands the challenges we face. I speak to him regularly. I am carrying something for him to space, which will be a surprise,” he said.
Shukla said observing the earth from a vantage point and floating in microgravity excited him.
The Indian astronaut will carry delicacies such as mango nectar, moong dal halwa and carrot halwa to space. “The food will be shared with colleagues. Going to space will be a mixed bag of emotions. I will miss my family and friends,” he said.
The crew will spend 14 days in orbit and carry a swan doll as a sign of zero gravity indicator. Zero-G indicators serve as a visual confirmation for astronauts and observers on earth that the spacecraft has reached space and is experiencing a state of weightlessness.
Swan holds religious significance for Indians. “Swan is believed to have the rare ability to separate milk from water, representing purity, wisdom and grace. Carrying this symbol reminds me of the delicate balance between knowledge and pressure, and it keeps me grounded in the values I hold dear. I feel inspired, fully prepared and confident as I embark on this journey,” Shukla said.
Peggy Whitson, a veteran NASA astronaut who is the commander of the space programme, said the mission would focus on science, technology and outreach activities. “These experiments will benefit people on earth. Our crew underwent rigorous training. We have trained for every scenario bonded as a team. We will be engaging with students around the world. Every mission is different and every crew make the difference. We want to see the impact of scientific experiments,” she said.
The mission crew also includes specialists Slawosz Uznanski-Wisniewski from Poland and Tibor Kapu from Hungary. The crew will lift off aboard Dragon on a SpaceX Falcon 9 rocket from Launch Complex 39A at NASA’s Kennedy Space Centre in Florida.
The launch was earlier scheduled for June 8. In a statement, NASA said, “This shift allows teams to account for predicted inclement weather during the SpaceX Falcon 9 rocket and Dragon spacecraft transport in addition to completing final processing of the spacecraft ahead of launch.
Research paper written by London Swaminathan Post No.1153; Dated 6th July 2014.
From the days of the Rig Veda and Chandogya Upanishad, swan is always associated with the bright sun and saints.
All the water birds close to swan are grouped under the Anatidae family. Hindu mythology understood the unity pervading the family. Their approach was very scientific when they dealt with swans, geese and ducks.
Hamsa Gayatri Om Hamsaaya Vidmahe Paramahamsaaya Dhimahi Tanno Hamsha Pracodayaat
“May we realise Hamsa that is our own Self as Swan. Let us meditate on that Paramahamsa, the Supreme Self. May Hamsa illumine us.”
This one of the several popular Gayatri mantras.
Great saints are called Parama hamsa. It means Supreme Swan. We have great saints like Ramakrishna Paramahamsa (1836-1856) and Paramahamsa Yogananda (1893-1952) within the last two hundred years. Sadasiva Brahmendra composed short and sweet kritis in Sanskrit and had the ‘mudra’/signature “paramahmasa” in all his compositions.
When it used in the context of great Yogis (ascetics) it does not mean the bird Swan (Hamsa in Sanskrit). It is the combination of two words Aham + Sa= Hamsa. I am He. It is the essence of Advaita philosophy. God and Man are one at the highest level. All the famous Upanishads have this philosophy: Aham Brahmasmi/ I am Brahman, Tat Tvam Asi/ You are That etc.
When saints who are well versed in the Yogic techniques breathe in and out it sounds ‘Ham…… Sa…… ‘Ham…… Sa….’ leading to Soham+ He is I.
Chandogya Upanishad (4-7) included an instruction (advice) from a swan. Dattatreya learnt something good from everything in nature including a bird. Hindus used everything in nature for the spiritual advancement of man.
Is it true that swans can separate milk from water and drink only milk? Another meaning at a different level:-
Hamsa is the vehicle of God Brahma and his consort Sarasvati. All are white in colour symbolising purity and knowledge. Hamsa is associated with Holy Ganges and holy lake Manasa Sarovar. It is one of the purest birds. Hamsa Gayatri confers the power of discretion on the person who recites it. Like that Hamsa separates the good things from the bad things, Water birds separate good water from the bad water. It has got a sieve like structure (lamellae) in its mouth which separates water from mud. Probably this is what lead to the belief that Swans can separate milk from water and drink only milk. In Sanskrit Ksheera means milk and pure water.
Hamsa in the Vedas
Hamsa in the RIg Veda (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;;AV 6-12-1 etc) and later literature denotes the bird gander. These birds are described as dark in colour on the back( RV 7-59-7), they fly in troops ((RV 3-8-9), swim in the water (RV 1-65-5), make loud noises (3-53-10), and are wakeful at night (AV 6-12-1) according to Vedic Index.
The Hamsa is credited with the power of separating Soma from water (as later milk from water) in the Yajur Veda (Kataka, Maitrayani, Vajasneyi Samhitas and Taitriya Brahmana). The soma plant when crushed exudes the juice with a hissing sound. This is compared to the hissing of a swan when disturbed on the water (RV 1-65-5)
The Asvins are invited to the soma sacrifice like a pair of swans hastening to the water (RV 5-78-1). It is also sacrificed in the Asvamedha Yajna along with two hundred other animals, birds, plants and other grains.
Sun and Paramahmsa The sun and the spiritually elevated man are compared with the wise swan in the Shivapurana (2-15-10). The Mute Swans are known to go about in pairs and they are greatly devoted to each other. Even Buddhacharita of Asvagosha mentioned this in the context of appealing to Gautam Siddhartha to come back to his wife. Ramayana described swan as god Varuna’s bird (7-18-28)
Nala Damayanti and Swan The golden coloured swan (whooper) caught by Nala was mentioned in the Mahabharata (3-54-19). The bird promised to plead Nala’s cause with Damayanti and was thereupon released. He flew with his party to her place and allowed himself to be caught by her and then performed his mission.
Hamsavatara One of the incarnations/Avatars of Lord Vishnu is Hamsavatar in the form of a swan. Apart from Dasavatar (ten incarnations) we have 11 more Avatars.
Kalidasa & Sangam Tamil Literature I have already written about the Bird Migration in Kalidasa and Sangam Literature. Kalidasa referred to the strange habit of swan ‘separating milk from water’ in Sakuntalam drama (Act 6-33). A Gatha Sapta Sati poet copied it. Naladiyar in Tamil also copied Kalidasa. Paranar, a Brahmin poet of Sangam period used lot of similes from Kalidasa along with his colleague Kabilar. Paranar in his poem– Natrinai 356 — sang about a swan flying to the golden peaked Himalayas after feeding itself with fishes in the Southern Seas. Pisiranthaiyar said the same thing in Purananuru verse 67. All these are just echo Kalidasa’s poems.
Kalidasa’s Raghuvamsa and Meghaduta have got too many references to water birds such as swan and cranes, geese and ducks.
Pillows were stuffed with the feathers of swan in ancient India.
A woman’s gait is compared to the gait of a swan in Tamil (Aka.279) and Sanskrit literature.
The swans are remarkable for their stately flight very high in the sky and they seem to approach the sun, says Mankudi Kizar of Madurai Kanchi (385-38).
Different types of swans such as Raja Hamsa, Kala Hamsa, Maththa Hamsa, Maha Hamsa, Kshuta Hamsa and Kadamba Hamsa are found in Sanskrit literature.
Ramayana and Mahabharata have interesting stories about swans. One of them is about the white colour of the swan (7-18-29/31). Varuna avoided Ravana by transforming himself to a swan and later gave a boon to the bird for his help and made him permanently white! Since Brahma has it as his Vahana the bird is also called Surapriya (Friend of the Devas). Swan is always associated with glory, purity, affection, love, majesty and divinity!!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!
ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம் வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார்
Why Indian astronaut Shubhanshu Shukla carrying swan doll to space?
Astronaut Group Captain Shubhanshu Shukla, who will pilot the Axiom-4 mission that has been rescheduled for June 10, said he would carry the hopes and dreams of 1.4 billion Indians into space.
தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்
நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்
இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:
“அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும், தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத்தயாராகி விட்டோம்” .
“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்” (விண்வெளியில் பூமியிலிருக்கும் ஈர்ப்புவிசை இல்லாததால் ராக்கெட்டுக்குள் எல்லோரும் மிதப்பார்கள்; அது ஒரு தனி அனுபவம். அப்படி பறப்பதற்கு நீண்ட கால பயிற்சி பெற வேண்டும் )
1984- ம் ஆண்டில் ரஷ்ய விண்கலத்தில் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியுடன் உரையாடினார் அதே போல பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும் திட்டம் உண்டா என்று வினவியபோது பல முக்கியப்புள்ளிக்களு டன் தொடர்புகொள்ளும் திட்டம் உண்டு என்றி மழுப்பாலாக விடை தந்தார். விண்வெளி ஆராய்சசியுடன் தொடர்புடைய மாணவர்கள் அறிஞர்களுடன் பேசப்போவதாக அவர் தெரிவித்தபோது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .
முதலில் விண்வெளியில் பயணம் செய்த ராகேஷ் சர்மாவுடன், தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்தான் எனக்கு முன் உதாரணமாக விளங்கும் மனிதர் என்றும் அவருக்காக விண்கலத்தில் நான் ஒன்றைக் கொண்டுபோகப் போகிறேன் சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! என்றார்.
மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்
இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்
நாசா NASA என்னும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் வீராங்கனை Peggy Whitson, பெக்கி விட்சன் இந்த பயணத்தின் கமாண்டர் ஆவார்
நாங்கள் நடத்தப்போகும் ஆராய்ச்சிகள் மனித குலத்துக்குப் பயனுள்ள ஆராய்ச்சிகள் ஆகும் என்கிறார் பெக்கி . இந்தக் குழுவில் போலந்து, ஹங்கேரி நாட்டவர்களும் இருக்கிறார்கள் . ப்ளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் தளத்திலிருந்து பால்கன் FALCON ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்வெளியில் மிதக்க விடப்படும் . The crew will lift off aboard Dragon on a SpaceX Falcon 9 rocket from Launch Complex 39A at NASA’s Kennedy Space Centre in Florida.
11 YEARS AGO I WROTE:
ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?
பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?
அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?
பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?
அதிசயச் செய்தி ஒன்று
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)
பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.
Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.
அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.
அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
அதிசயச் செய்தி இரண்டு
பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.
ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–
ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்
–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.
ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.
‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.
சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.
அதிசயச் செய்தி மூன்று
இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–
அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.
அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.
வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.
வேதத்தில் அன்னப் பறவைகள்
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–
ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.
இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).
சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!அதிசயச் செய்தி நான்கு
மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.
அன்னச் சேவல் அன்னச் சேவல்
……………………
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)
நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)
காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.
அதிசயச் செய்தி ஐந்து
ராமாயணத்தில் ஒரு கதை
ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?
ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–
இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.
ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!! Posted 7th July 2014 by Swaminathan
-சுபம்-
அன்னம், பால், தண்ணீர், உவமை, தமிழ் ,சம்ஸ்க்ருத நூல்கள், சுக்லா, விண்வெளிப் பயணம், அன்னம் பொம்மை, கேரட்டை ஹல்வா, காளிதாசன், சங்கப் புலவர்கள், ரிக் வேதம், ஐந்து அதிசயச் செய்திகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் இதழில் 14-4-25 அன்று வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
பசிபிக் முனையில் உள்ள க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறைத் தோட்டங்கள்!
(Great Barrier Reef – Coral Gardens at the edge of the Pacific)
ச. நாகராஜன்
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புதிய நாடுகள் காண பணிக்கப்பட்ட காப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook –1728-17779) தனது நாற்பதாம் வயதில் பசிபிக் தீவுகளை நோக்கிப் பயணமானார்.
தென் பசிபிக் கடலில் க்வீன்ஸ்லாந்து அருகே கடலுக்கு அடியில் உள்ள பெருந்தடுப்பு பவளத்திட்டிற்குள் (Great Barrier Reef) நேராக உள்ளே நுழைந்தார். அவரது 368 டன் எடை உடைய எண்டவர் (Endeavour) என்னும் கப்பல் 1770ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று கடலுக்கடியில் இருந்த ஒரு பெரும் பவள வளத்திற்குள் நுழைந்தது. அங்கு தான் கண்ட காட்சியைக் கண்டு அவர் அதிசயித்தார்.
அவரது கப்பல் ஒரு பவளத்தில் மோதி, சிக்க பயணம் தடைப்பட்டது. அவரது ஊழியர்கள் இரண்டு மாதம் கப்பலைப் பழுது பார்த்தனர். ஆனால் கப்பலைச் சீராக்க முடியவில்லை. ஒரு வழியாக மெதுவாகக் கப்பலை செலுத்திய குக் பவளப்பாறைகளுக்கு நடுவில் ஒரு இடுக்கைக் கண்டார். அதன் வழியே கப்பலைச் செலுத்தினார். அந்த இடைவெளிக்கு ப்ராவிடன்ஷியல் சானல் (Providential Channel) என்ற பெயரையும் கொடுத்தார்.
அவர் தனது டயரியில் இப்படி எழுதினார்: “ஆழம் காண முடியாத கடலின் அடியிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தப் பவளத் திட்டுகள், பிரம்மாண்டமாக எழுந்து வரும் அலைகளைத் திடீரென்று தடுக்கின்றன!.”
இந்த பெருந்தடுப்பு பவளத்திட்டு ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து 1250 மைல் நீளத்திற்கு நீண்டிருந்தது. நியூசவுத்வேல்ஸின் பரப்பளவான ஒரு லட்சம் சதுர மைல் பரப்பை இது கொண்டிருந்தது. இதிலிருந்த பவள வகைகள் விதம் விதமாக அழகாக இருந்தன. 350 வகையான பவளங்களை அவர் கண்டார். 90 சதவிகித பவளங்கள் நீருக்கடியிலேயே இருந்தன.
2900 தனித் திட்டுகளுடன் 900 தீவுகளை இந்தப் பரப்பளவு கொண்டிருந்தது.
இந்த இடத்தில் 1400 வகையான மீன் வகைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. ட்ரிக்கி ஸ்நாப்பர் என்ற ஒரு வகை மீன் மட்டும் 9 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
க்வீன்ஸ்லாந்தின் கடற்கரையிலிருந்து 44 மைலில் இருந்த ஹெரான் தீவு அற்புதமாக அமைந்திருந்தது. இங்கு ஆய்வு செய்ய ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.
இந்தப் பகுதியை விண்வெளியிலிருந்தும் காணமுடியும். சி என் என் தொலைக்காட்சி இதை உலகின் ஏழு அதிசய இயற்கை இடங்களில் ஒன்றாக அறிவித்தது. க்வீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் இதை மாநிலத்தில் அடையாளச் சின்னமாக அறிவித்தது.
ஆனால் அதிசயம் என்னவென்றால், வெளி உலகம் அறிவதற்கு முன்பேயே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இதை அறிந்திருந்ததோடு பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
இப்போது ஆயிரக்கணக்கில் பயணிகளை ஈர்க்கும் இடமாகத் திகழும் இது பல்லாயிரம் பில்லியன் டாலர்களை ஈட்டித் தரும் இடமாக மாறி விட்டது.
நீருக்கடியில் இயற்கையாக அமைந்திருக்கும் நீர்த் தோட்டங்கள் உலகின் மாபெரும் அதிசயம் தான்!
மரங்ககளில் உயர்ந்தது சந்தானம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் ஊதுபத்தி தன்னையே எரித்து தியாகம் செய்து நமக்கு மணம் தருவது போல, சந்தனமும் தன்னையே அரைத்து தியாகம் செய்து நமக்கு மணம் தருகிறது அதனால்தான் அதை பெரியோரின் குணத்துக்கு ஒப்பிட்டனர் .
அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23
சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26
கலக்கினும் தண் கடல் சேறாகாது.27
அடினும் பால் பெய்து, கைப்பு அறாது என்று வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்) கூறுகிறது .
கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின் மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே. இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்- கங்கை பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் .
மேலும் தினமும் பல்லாயிரம்பேர் புனித நீராடுவதாலும் கும்பமேளாவில் கோடிக் கணக்காணோர் நீராடுவதாலும் கங்கையே புனிதம் மிக்கது என்று தெரிகிறது•
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகழ்கிறார்
• நிலத்தில் காஷ்மீரம் !!!!
ஆனால் நிலத்தில் சிறந்தது காஷ்மீர் என்று குருபாத தாசர் சொல்வது புதுமையாக இருக்கிறது காஷ்மீரின் இயற்கை அழகு உலகப் பிரசித்தி பெற்றது தற் காலத்தில் அதை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் அழைக்கிறார்கள் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகர், அமர்நாத் குகைக்கோயில் , வைஷ்ணவிதேவி குகைக்கோயில் முதலிய பல புனித இடங்கள் அங்கே உள்ளன ஆனால் குருபாததாசர் நிலங்களில் சிறந்தது என்று சொல்வைத்து வேறு எங்குமில்லாத புதுமையோ புதுமை!
காஷ்மீர் என்றால் காஸ்யப ரிஷியால் உருவாக்கப்பட்ட ஏரி அல்லது கடல் எனப் பொருள்படும் இது முதலில் நீர்ப்பரப்பாக இருந்ததை நீல மத புராணமும் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணியும் பாடுகிறது நவீன புவியியல் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்கிறது; காஷ்மீர் பற்றி வேதத்தில் சொல்லாவிட்டாலும் விதஸ்தா நதியை ரிக் வேதம் குறிப்பிடுவதால் இது வேத கால வரலாறு உடையது பின்னர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அவருக்குப் பின்னால் வந்த பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர் மஹாபாரத, ராமாயணத்தில் காஷ்மீர் பிரதேசம் குறிப்பிடப்படுகிறது இதனால்தான் குருபாத தாசரும் குறிப்பிட்டார் போலும். இந்து மன்னர்கள் ஆண்ட இந்த பூமியை முஸ்லீம்கள் 1200 CE வாக்கில் கைப்பற்றினர், காஷ்மீரில் ஆதிசங்கரர் அம்பாளின் பெயரில் ஸ்ரீநகரை உண்டாக்கியதோடு காஷ்மீர் குங்குமப்பூவினையும் ஹர்ஷ மாமன்னனும் ரத்னாவளி நூலில் குறிப்பிடுகிறார் பின்னர் வராஹமிஹிரர் ப்ருஹத் ஸம்ஹிதாவில் போற்றுகிறார்.
காஷ்மீர் குங்குமப்பூ என்று சம்ஸ்க்ருத நூல்கள் பின்னவருமாறு வருணிக்கின்றன அதன் பெயரிலேயே காஷ்மீர் இருக்கிறது
Kaśmīraja (कश्मीरज).—m., n. saffron; कश्मीरजस्य कटुताऽपि नितान्तरम्या (kaśmīrajasya kaṭutā’pi nitāntaramyā) Bv.1.71. v. l.Derivable forms: kaśmīrajaḥ (कश्मीरजः), kaśmīrajam (कश्मीरजम्).
காஷ்மீரஜா is a Sanskrit compound consisting of the terms kaśmīra and ja (ज). See also (synonyms): காஷ்மீரஜன்மன்
.
• தலத்தில் சிதம்பரம்
சைவர்களுக்கு கோவிலென்றால் அது சிதம்பரமே!
பொன்னம்பலத்தில் நடராஜர் ஆடுவதாலும் மூவாயிரம் தீட்சிதர்கள் வாழ்வதாலும் சிதம்பரம் தனி மகிமை பெற்றது இதைப்பாடாத சைவ அடியார்கள் கிடையாது. நந்தனார், மாணிக்கவாசகர் அம்பலத்து ஜோதியில் கலந்த இடம்.
கோயில்புராணம் என்றாலே சிதம்பரம் பற்றியது என்று பொருள்
ஒவ்வொருநாளும் நந்தனார் ‘நாளைப் போவோம்’, ‘நாளைப் போவோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்க்கு
‘நாளைப்போவார்’ என்றொரு நாமம் உண்டாயிற்று. நந்தனார் பிறகு ஒருநாள் மனத்துணிவோடு தில்லை சென்றனர்.. அப்பொழுது
சிவபெருமான் கோவில் தீட்சதர்கள் கனவில் தோன்றி, ‘பறையர் குலத்துதித்த நமது பக்தன் நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து வருந்திக் கோபுர வாயிலருகே நிற்கின்றான். அவனை நீங்கள் தீயில் முழுகச் செய்து பிறப்பின் தூசைப் போக்கி, புனித
பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டருளினார். .நந்தனார் அதற்கு மிகவும் மனமகிழ்ச்சியோடு ஒப்பித் தீக்குழிவெட்டி அதிற்குளித்தார். அவர் அதினின்றும் எழுந்தபோது முப்புரிநூல் முதலிய பிராமணச் சின்னங்களோடு கூடிய வேதிய வடிவாயிருந்தனர். அதைக் கண்டாரனைவரும் அதிசயித்து
நிற்க, நந்தனார் நடராஜர் திருநடனச் சபையை நாடிச் சென்றார். மற்றோரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நந்தனார் அவர்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டார் என்பது பெரிய புராண செய்தி .
• ரிஷிகளில் வசிட்டர்
ரிஷிகளில் சிறந்தவர் வசிஷ்டர் என்பதால் அவர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற க்ஷ்த்திரிய மன்னனான விசுவாமித்திரன் காத்திருந்து பின்னர் வசிஷட்டர் சொன்னவுடன் பிரம்மா ரிஷி/ பிராமண ரிஷி பட்டம் பெற்றதை நாம் அறிவோம் இவர் இயற்றிய அல்லது பாடிய துதிகளும் ரிக்வேதத்தில் உள்ளன.
• பசுவில் காமதேனு
பசு மாடு புனிதமானது; அதிலும் காமதேனு என்பது விரும்பியது எல்லாவற்றையும் கொடுக்கும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.
• முனிவரில் நாரதர்
பக்திக்கு இலக்கணம் நாரதர்; அவர் எழுதிய நாரத பக்தி சூத்திரம் பக்தி பற்றி விளக்குகிறது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி•
மணிகளில் பதுமராகம்
நவரத்தினங்களில் ஒன்று
• மலர்களில் தாமரை
தமிழில் மலர் என்னால் தாமரை என்று பொருள். எல்லா இந்துப் பெண் தெய்வங்களுடனும் இணைந்த இந்த மலரை இந்தியா, தேசீய மலர் ஆக்கியது இன்று நாட்டினை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னம்!
• கற்பினில் அருந்ததி
“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?
ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?
“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.
வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.
பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–
கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது). பாணினியின் அஷ்டாத்யாயியும் இதே வரிசையில் ஏழு ரிஷிகளை கூறுகிறார்
அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி–
உலகின் முதல் சட்ட நிபுணன் மனு வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.
சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. .
சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில் உண்டு.
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).
2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.
எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8
****
ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்
ஓமென்றெழுத்தே உயிராச்சு
ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்
****
ஓம்கார ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது என்பதை திருமூலரும் திருமந்திரத்தில் பா டுகிறார்
ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628
• கடலில் பாற்கடல்
பாற்கடலைக் கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது; மைத்ததை உண்டதால்தான் தேவர்கள் சாகா வரம் பெற்றனர் இன்றும் எந்தப்பொருள் ருசியாக இருந்தாலும் அமிர்தம் போல இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்
எந்த ஒரு செயலிலும் நல்லதோடு கெட்டதும் வரும்; நாம் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இது புகட்டும் நீதி.
• மலைகளில் மேருமலை
மலைகளில் உயர்ந்தது மட்டுமல்ல மேரு அங்குதான் தேவி வசிக்கிறாள் பிராமர்களும் புரோகிதர்களும் பூஜைகளைத்துவங்கும் முன்னாள் சொல்லும் சங்கல்ப மந்திரத்தில் மேரு மலைக்கு எந்தப்பக்கம் இருந்து அதைச் செய்கிறோம் என்று இன்றும் சொல்கிர்சர்கள் கிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 51
Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PART 51,
ARUNA ASAF ALI, SAVITRIBAI PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS, BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP, MA SAHIB,
MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION,
–subham—
Tags- Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,
Pictures of 2500 Indian Stamps, PART 51, ARUNA ASAF ALI, SAVITRIBAI PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS, BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP, MA SAHIB,
MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION.
கர்நாடக மாநிலத்தில் மங்களூரைத் தலை நகராகக் கொண்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்களை ஆளுபா வம்சம் என்று அழைத்தனர் ; இதன் பொருள் விளங்கவில்லை என்றும் என்சைக்ளோபீடியாக்களில் எழுதியுள்ளனர்; எனது ஆராய்ச்சியில் இவர்கள் ஆலவாய் வம்சம் என்பது தெரியவந்தது ஏனெனில் இவர்கள் தங்களைப் பாண்டியர்கள் என்றும் சந்திர குல வேந்தர்கள் என்று அறிவித்ததோடு பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னத்துடன் தங்க காசுகளையும் வெளியிட்டுள்ளனர் ; இவர்களுடைய பெயர்களை திருவிளையாடல் புராணம் உண்மையே என்றும் நிரூபிக்கிறது!
ப என்ற எழுத்து வஎன்ற எழுத்தாக மாறும் என்பதை இன்றும் வங்காளி, அஸ்ஸாமிய மொழிகளில் காண்கிறோம்; இது சங்கத் தமிழ், சம்ஸ்க்ருதம், அவஸ்தன் மொழிகளிலும் காணப்படுகிறது ஆகவே ஆளுபா என்பதை ஆலவாய் என்றே படிக்க வேண்டும் என்பது எனது துணிபு.
URO BOROS = URAGAPURAM /MADURAI OF KALIDAS.
ஆலவாய் என்றால் பாம்பு என்று பொருள்; அதாவது ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் உடலை வளைத்து தனது வாலினை வாயால் கவ்விக் கொள்வதை ஆலவாய் என்பார்கள்; இது எகிப்திலும் கிரேக்கத்திலும் காணப்படுகிறது. புறநானூற்றின் இரண்டு பாடல்களை எழுதிய புலவர் பெயரும் ஆலவாயார்தான் . முழுப்பெயர் மதுரைப் பேராலவாயார்.
தி வி பு. ஆராய்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது ஆளுப்பா மன்னர் சரித்திரம் ஆகும்; ஏனெனில் இவர்கள் தீவிர சிவ பத்தர்கள், சக்தியையும் வழிபட்டவர்கள் இது நமக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற தெய்வங்களை நினைவுக்குக் கொண்டுவரும்
எல்லாவற்றுக்கும் மேலாக குலசேகரன் தனஞ்சயன் , வீர பாண்டியன் என்ற தி. வி பு பெயர்கள் அப்படியே ஆளுப்பா வம்சத்தில் இருக்கினறன.
குலசேகரன் பாண்டியன் மதுரையை நிறுவிய கதையுடன் தி வி பு. துவங்குகிறது அவன் மகன் மலைக் கொடியோன் , அதாவது மலையத்வஜன் ; அவன் மனைவி பொன்மாலை, அதாவது காஞ்சன மாலா . அவர்கள் மகன் உக்கிரகுமாரன், அதாவது முதலாவது கடுங்கோன். அவன் மனைவி காந்திமதி ; சூரிய குல இளவரசி அவர்கள் மகன் வீர பாண்டியன் ; அவனைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது உடனே அவன் மகன் அபிஷேக பாண்டியன் பட்டம் ஏற்றான். அவன் சிறு வயதில் மன்னன் ஆனான். ஒரு வேளை புறநானூறு கூறும் சிறுவயதில் பட்டம் ஏற்ற நெடுஞ்செழியனாக இருக்கலாம் . மதுரை சிவலிங்கத்தைக் கடம்ப வனத்தில் கண்டுபிடித்து குலசேகரனுக்கு அறிவித்த செட்டியாரின் பெயர் தனஞ்ஜெயன். அவரது சிலை பொற்றாமரைக் குள தூணில் உள்ளது. .இது தி வி பு செய்தி.
இந்தப் பெயர்களில் தனஞ்சயன் குணசேகரன், வீர பாண்டியன் ஆகிய அனைத்தும் ஆளுப்பா / ஆலவாய் சரித்திரத்தில் உள்ளது . அவர்களுடைய தேசத்தை ஆளுப்பா கேட்டா என்று எழுதினர்; இது ஆலவாய் க்ஷேத்திரம் என்பதன் மருவு; அதாவது பேச்சு வழக்கு ; வடக்கே இன்று வாழும் க்ஷத்ரியர் தம்மை கட்டி என்பார்கள் ; இது க்ஷத்ரிய என்பதன் பேச்சு வழக்கு; இவை அனைத்தும் ஆலவாய் க்ஷேத்திரம் என்பதை நிரூபிக்கின்றன.
ஆலவாய்ப் பாம்பின் அர்த்தம் அளவற்றது, முடிவற்றது தொடர்ச்சியானதுINFINITY, ENDLESS, CONTINUOUS என்பதாகும் ; இதே போல ஒரு சம்பவம் மதுரையில் நடந்ததால் மதுரைக்கும் ஆலவாய் என்ற காரணப் பெயர் ஏற்பட்டதை தி வி பு. கூறுகிறது. மேலும் பாண்டியர்கள் மதுரைக்கும் முன்னர் மணலூரிலிருந்து ஆட்சி செய்ததை புராணமும் ஒப்புக்கொள்கிறது.
பிளினிPLINY என்ற யாத்ரீகர் மதுரை தலைநகர் மாற்றம் பற்றி கிபி 75 CE–ல் எழுதியுள்ளார் அதே ஆள் இந்த ஆளுப்பா வம்சத்தயும் கொச்சை மொழியில் குறிப்பிட்டுள்ளார் ஆகவே இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உடையவர்கள் இவர்கள் ; ஆளுப்பா வம்சம் பற்றி ஆராய்ந்த அனைவரும் இவர்களை நாகர்கள், பாம்புடன் தொடர்புடையவர்கள் என்றே உறுதிப்படுத்தியுள்ளனர்
காளிதாசனும் பாண்டியர் தலைநகர் உரகபுரம் என்று சங்க காலத்துக்கு முன்னரே எழுதியுள்ளார். இதன் பொருள் பாம்பூர் அல்லது ஆலவாய் . அந்தப் பெயரை மதுரைப் பேராலவாயார் என்ற சங்கத் புலவரின் பெயரில் காண்கிறோம்..
சைவர்களாக வாழக்கையைத் துவங்கிய இவர்கள் பிற்காலத்தில் சமண மதத்தையும் தழுவினர். ஒருவேளை இவர்கள்தான் தமிழ் நாட்டினை சங்க காலத்துக்குப் பின்னர் பிடித்தார்களோ என்றும் ஆராய வேண்டும். கன்னடத்தில் மிகப்ப ய கல்வெட்டு இவர்களைக் குறிப்பிடுகிறது கி.பி 600 CE முதல் தொடர்ச்சியான வரலாறு கிடைக்கிறது; பெரும்பாலானவை கோவில் நிகழ்ச்சிகள் பற்றியவை.
இவர்களில் பூதல பாண்டியன் என்பவன் புதிய சொத்துரிமை முறைகளை அறிமுகப்படுத்தினான் பூதல பாண்டியன் என்பதைத் தமிழில் சொன்னால் நிலம் தரு திருவில் பாண்டியன் என்று வரும்; அல்லது பான்னாடு தந்த பாண்டியன் என்றும் சொல்லலாம். இந்தப் பெயர்கள் தொல்காப்பிய காலம் முதல் தமிழில் இருப்பதை நாம் அறிவோம்.
பாண்டியர் வம்சத்தில் தீர்க்கப்படாத புதிர்களுக்கு ,மர்மங்களுக்கு ஆளுப்பா வம்ச ஆராய்ச்சி உதவலாம் .
களப்பிரர் மர்மம்
மூர்த்தி நாயனார் மர்மம்
மாணிக்வாசகர் மர்மம்
தி.வி.பு வில் உள்ள ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் மர்மம்
அவை வரலாற்று தடயங்களில் இல்லாத மர்மம்
முதல் இரண்டு தமிழ்ச் சங்கம் இருந்த இடங்கள், மன்னர்களின் மர்மம்
வியட்நாமில் முதல் மன்னர் ஸ்ரீமாறன் என்று இருக்கும் மர்மம்
வரகுணன் என்ற பெயர் மர்மம் (அரிமர்த்தனன் என்றே தி வி பு கூறுகிறது
நின்ற சீர் நெடுமாறனின் மர்மம் (பெரியாழ்வார் நெடுமாறன் என்ற மன்னரை வாழ்த்துகிறார் )
தொல்காப்பியம் சொல்லும் நிலம் தரு திருவில் பாண்டியனுக்கு வரலாற்றுச் சான்றில்லாத மர்மம்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
****
பாண்டியர் பெயர்களில் ஜடிலன் வர்மன்
பாண்டியர்கள் மாறி ,மாறி சடையன், மாறன் என்ற பெயர்களை வைத்துக் கொண்டதை வரலாறு காட்டுகிறது . பாண்டியர்களை ஜடிலன் , வர்மன் என்று செப்பேடுகளின் ஸம்ஸ்க்ருதப் பகுதிகள் போற்றுகின்றன. இதனால் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததை ஆதிகாலம் முதல் அறிகிறோம்.
மேலும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த கல்வெட்டு பூரண வர்மன் என்று சொல்கிறது; பல்லவர்களும் இந்த வர்மன் பெயரை சொல்கின்றனர். இதனால் நெடுமாறன், வரகுணன் , நெடுஞ்செழியன் என்பதை ஒரே ஒருவர் என்று நம்பிவிடக்கூடாது
தி வி பு சொல்லும் அத்தனை மன்னர்களின் வரலாறும் உண்மையே அதை கால வரிசைப்படுத்த அறிஞர்கள் மகாநாட்டினை பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகளோ, ஆதீனங்களோ ஏற்பாடு செய்ய வேண்டும். பூர்ண வர்மன் காலம் நாலாவது நூற்றாண்டு. அபிஷேக பாண்டியனின் காலம் நாலாம் நூற்றாண்டு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. இத்தகைய செய்திகளைத் தொகுத்து தி வி பு வை ஆராய்வது நமது கடமை. (நேற்று எழுகிய ஆங்கில கட்டுரையில் ஆளுபா ஆராய்ச்சியாளர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளேன். ஆராய்ச்சி தொடரும் .
Following information from Wikipedia also confirms their connection with Tamil Aalwaay=Uro Boros= Uragapura of Kalidas.
According to B. A. Saletore, the name Alupa may be derived from its variant Aluka which is an epithet of the divine serpent Shesha of Hindu epics.[5] Fleet has suggested that the name Aluka may possibly denote the Nāgas, who in early times were included in Chalukya dominions.[5] Saletore further adds that the Naga origin of the Alupas is proved by two facts. The figure of a hooded serpent which is found in an effaced Alupa stone inscription in the Gollara Ganapati temple in Mangalore and their ultra Saivite tendencies.[5] Saletore dismisses the idea regarding the Dravidian origin of the name from the Tulu word Alunu meaning ‘to rule’ or ‘govern’.[5].
Their influence over coastal Karnataka lasted for about 1200 years.
MY OLD ARTICLE
காளிதாசன் போட்ட தமிழ்ப் புதிருக்கு கிரேக்க நாட்டில் விடை கிடைத்தது! (Post.10,825)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,825
Date uploaded in London – – 9 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சக்கரவர்த்தியான விக்ரமத்தித்தன் அரசவையில் கவிஞனாக இருந்தான். அவன் எழுதிய ஏழு நூல்களையும் படிக்காதவன் இந்தியனே இல்லை. அவன் பயன்படுத்திய 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தயுள்ளனர். தமிழ் மொழியைக் கிண்டல் அடித்த யாழ் பிரம்மதத்தனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் சம்ஸ்க்ருதம் மூலமாக தமிழ் சொல்லிக்கொடுத்து அவனுக்காக குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலை எழுதி கின்னஸ் சாதனை புரிந்தார். 99 மலர்ப் பெயர்களை ஒரே மூச்சில் அடுக்கிப் பாடினார். அதைப் படித்த ரெவரென்ட் ஜி .யு . போப் REV. G U POPE , இது காளிதாசன் நூலின் தாக்கத்தில் பிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.
காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ஒரு புதிர் போட்டார். எல்லா உரைகாரர்களும் அர்த்தம் புரியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். அதற்கு அதர்வண வேதம், எகிப்தின் 3400 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் விடை கிடைத்துள்ளது.
முதலில் புதிர் என்ன என்று பார்ப்போம். பாரதியார் பாட்டிலும், காஞ்சி புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் தமிழுக்கு அகத்தியர் செய்த சேவையும் சிவ பெருமான் அவரை தமிழ் இலக்கணம் எழுத இமயமலையில் இருந்து அனுப்பிய செய்தியையும் படிக்கிறோம். இது பல பாண்டியர் கால செப்பேடுகளிலும் உள்ள செய்தி. ஆனாலும் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக ரகு வம்ச காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில் காளிதாசன் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை முதல்தடவையாகப் பாடியுள்ளான் அது மட்டுமல்ல புறநானூற்று மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி செய்த அஸ்வமேத யாகம் பற்றியும் பாடியுள்ளான்; நமக்கு பெருவழுதியின் அஸ்வம்/ குதிரை பொறி த்த நாணயம் கிடைத்ததால் இது உறுதியாகிறது. அந்தப் பகுதியில் காளிதாசன் போட்ட புதிர் “உரகம் என்னும் பெயரைஉடைய நகரத்தை ஆளும் பாண்டியர்” என்று அறிமுகம் செய்வதாகும். அதாவது ஒவ்வொரு மன்னரையம் இந்துமதிக்கு அவளது தோழி சுநந்தை அறிமுகம் செய்யும் சுயம்வர காட்சி அது. உரக URAGA/ SNAKE என்றால் பாம்பு. உரகபுரம் என்று காளிதாசன் சொல்லும் நகரம் எது? அது எப்போது பாண்டியருக்கு தலைநகராக இருந்தது என்பதே புதிர்.
பிறகு வாயிற் காப்பாளரான ஸுனந்தை , தேவதைக்கு ஒப்பான வடிவு உடையவனும் பாம்பின் பெயரை தன் பெயராக உடைய பட்டணத்திற்கு அரசனுமான (பாண்டியனை) வனை அடைந்து, சகோர பக்ஷியின் கண்களைப்ப போன்ற கண்களை உடையவளே! இங்கு பார் ! என்று முதலில் சொல்லப்பட்ட இந்துமதியிடம் சொன்னாள் (போஜ்யாம் – இந்துமதி)
atha uraga Akhyasya purasya nAtha.m dauvArikI deva sa rUpam etya itaH cakora akShi vilokaya iti pUrva anushiShTA.m nijagAda bhojyAm
இதில் பாம்பின் பெயரில் உள்ள = உரக புரம் என்பது பற்றி மல்லி நாதர், அருணகிரிநாதர் முதலிய உரைகாரர்கள் நாகப்பட்டிணம் அல்லது கன்யாகுப்ஜ நதிக்கரையில் உள்ள நாகபுரம் என்றெல்லாம் எழுதினார்கள் ஆனால் மதுரை மாநகருக்கே ‘நாகபுரம்’ SNAKE CITY என்ற பெயர் இருப்பதை நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம் மூலமா அறிகிறோம். இதை லிப்கோ வெளியிட்ட ரகுவம்ச உரையில் வேங்கட ராகவாசாரியார் எழுதியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான பெயர் என்பது சங்க காலப் புலவர் மதுரைப் பேரால வாயார் என்ற பெயரிலிருந்து அறியலாம்.
ஆலவாய் என்றால் வட்டமான பாம்பு. ஒரு பாம்பு தன் உடலை வட்டமாக்கி வாலை தன் தலையால் கவ்வும் காட்சி. பாண்டிய மன்னன் ஒருவன் சிவபெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டுங்கள் என்று மன்றாடியபோது சிவ பெருமான் தன் கழுத்தில் இருந்த பாம்பை விட்டு எறிந்தார். அது வட்டவடிவமாக சுழன்று மதுரை எல்லையைக் காட்டியது என்பது திருவிளையாடற் புராணம், ஹாலாஸ்ய மஹாத்ம்யத்தில் உள்ள கதை. ஹாலாஸ்ய என்பது ஆலவாய் ஆகும். ஆலவாய் SNAKE HEAD EATING ITS OWN TAIL என்பது வட்டமான பாம்பு ஆகும் . உரக என்ற சொல் சிலப்பதிகாரம், மணி மேகலை காவியங்களில் இருக்கிறது ஆனந்த விகடன் அகராதியில் பாம்பைக் குறிக்கும் சொற்களில் வருகிறது.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த உரக கிரேக்க மொழிச் சித்திரத்திலும் உள்ளது. ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் தனது தலையால் தனது வாலையே விழுங்கும் காட்சிக்கு UROBOROS உரோ பரோ என்று பெயர். இதற்கு பல பொருள் கூறப் பட்டாலும் ‘உரக’ சப்தம் இருப்பதைக் காண முடிகிறது இது கிரேக்கத்திற்கும் முன்னால் எகிப்தில் கி.மு 1400 ல் சூரியக் கடவுளைச் சுற்றியும் காணப்படுகிறது . சீனாவில் கிமு. 1200 சித்திரத்திலும் இக்காட்சி உள்ளது.
இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் சொல் எகிப்துக்கும் முந்திய அதர்வண வேதத்திலும் உள்ளது
வியாச மகரிஷியின் காலம் கலியுகத்துக்கு 100 ஆண்டுகள் முந்தியது. சுமார் கிமு 3150. அதாவது 5200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார். அந்த நான்கு வேதங்களில் கடைசி வேதம் அதர்வண வேதம். அதில் ஐந்தாவது காண்டத்தில் ஒரு துதியில் பாம்புகளின் விநோதப் பெயர்கள் வருகின்றன. இவற்றை இனம் தெரியாத பாம்புகள் என்று வெள்ளைக்காரர்கள் உரை எழுதிவிட்டனர் . தற்கால ஆராய்சசி, இவை எல்லாம் சுமேரிய மொழியிலும் இருப்பதைக் காட்டின. தியமத = தைமாத என்ற பாம்பு சம்ஸ்க்ருதம், சுமேரிய, அக்கடியன் மொழிகளில் இருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
XXX
அதே மந்திரத்தில் வரும் மற்றொரு பாம்பு URUUGULAA உருகுலா.
அதர்வண வேதம் ஐந்தாம் காண்டம் எட்டாவது மந்திரம் ,
“உருகுலாவின் பெண், கரும் பாம்பினின்றுதோன்றும் தாஸிப் பாம்பு அசிகின்யா – இந்தப் பெண் பாம்புகளின் விஷமும் சக்தி இழக்கட்டும் “
இதில் உருகுலா என்பதை ‘உரகத்தின் பெண்’ என்று கொள்ளளாம் . மேலும் சுமேரியாவில் உரு குலா என்ற ஒரு இடம் உள்ளது. துருக்கியில் 1982ம் ஆண்டில் கடலுக்கு அடியில் பழங்கால கப்பல் கண் டுபிடிக்கப்பட்ட துறைமுகத்தின் பெயரும் உருபலன். இதில் எல்லாவற்றிலும் உரக / பாம்பு சப்தம் வருகிறது. இந்தியாவில் நாகாலாந்து, நாகபுரி, நாகர்கோவில் என்ற நூற்றுக் கணக்கான பாம்பு ஊர்கள் , இமயம் முதல் குமரி வரை இருக்கின்றன அந்தக் காலத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் பாம்பு ஊர்கள் இருந்திருக்கும்.
சுமேரிய உருகுலா என்ற ஊர்பெயருக்கு நேரடியாக பாம்பு தொடர்பு கா ட்டப் படாவிடிலும் இதை பாதாள உலக நகர் என்பர். அதற்கு AKKADIAAN அக்கடிய மொழியில் நெர்கள் NERGAL என்று பெயர். அதிலும் நாக அல்லது நரக சப்தம் வருகிறது ஆக உரிகல் , நெரி கல் ஆகியன பாதாள/ நாக லோக தொடர்பைக் காட்டுகின்றன. பாம்பின் வாய்க்குள் அதன் வால் இருக்கும் படம், சித்திரம் மதுரை ஆலவாய் முதல் எகிப்து வரை இருப்பதும், பாண்டியர் தலை நகரை காளிதாசன் உரகபுரம் / பாம்பூர் என்று சொல்லுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதில் ஐயமில்லை.