If you google Do Animals Dream? you will come across some science reports from the past four years. What these people have now “discovered” is already in 2000 year old Sangam Tamil Literature!
Kalidasa , the greatest poet of India of India, who lived 2200 years ago have described the feelings of animals and plants in his dramas and Kavyas. His world-famous play Sakuntalam means ‘Bird Girl’. Shakespeare copied it to some extent and created Miranda , the island girl in The Tempest. (we get the word Sakuna for omens and auguries from that Sanskrit word.) But Kaliadasa sang about human dreams only.
Birds and animals do dream according to Sangam Tamil books. When the Brahmin Vishnu Sarma wrote Panchatantra fables, he really believed that animals do talk. That is why his fables spread far and wide.
Though I have noted down many dreams from ancient Sanskrit books, I have never come across animal dreams in Sanskrit; so, all the credits go to Tamils!
The oldest book in Tamil is Tolkappiam ; we see dreams of human beings in it
I give below the references for animal dreams from Sangam Tamil poems; they not only show they do dream but also tell us what they dream about!
கனவு நற்றிணை பாடல் 87; வௌவால் கனவு
Natrinai is one of the Sangam books with 400 verses. In the verse No.87 , we see a bat dreaming about the sour taste of gooseberries (amla in Sanskrit; nellikkay in Tamil)
The sharp teethed bat is dreaming while it was sleeping on the high branch of a mango tree standing inside a village. The poet says it is dreaming about the sour taste of the nelli fruits of the forests of the patron Alici.
****
யானையின் மதநீரை வண்டு/ தேனீ கனவு காண்டல்; அகநானூறு 132
In another anthology with 400 verses called Akananuru, in verse 132, the poet describes a beetle or bee dreaming about the rut of the elephants. Many poets including Kalidasa sing about the flow of rut in elephants and the bees swarming around it.
****
கடற்காக்கை இறால் மீனை கனவு காண்டல்; அகநானூறு 170
A sea gull is dreaming about prawns – is in Akananuru verse 170
****
கவரிமான் நிரந்தம் புல்லைப் பற்றி கனவு காணல் – பதிற்றுப் பத்து 11
And in Pathitruppaththu verse 11, we see the deer dreaming about a particular type of grass
In the later post Sangam books also, we come across animal dreams. In general, human dreams are more than animal dreams in Tamil literature.
We have at least 50 references to dreams in ancient Tamil literature; later we have innumerable dream references in Tamil epics, and devotional literature.
29 Dec 2011 — For instance, the Chandogya Upanishad (V 2-8-9) says seeing a woman in a dream means a previous sacrifice (fire ceremony) was successful. But it …
31 Jul 2015 — Eating crocodile flesh, good; it means acting as an official among his people. Submerging in the river, good; it means purification of all evils.
–subham–
Tags- Animal dreams, Sangam literature, Tamil discovery
ஜஸ்டஸ் குண்டர் கிராஸ்மானுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் பிறந்தன; அவர்களில் மூன்றாவது குழந்தை ஹெர்மன் கிராஸ்மான்.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தான் என்ற ஆன்றோர் வாக்கின்படி ஹெர்மன் கிராஸ்மானுக்கும் 11 குழந்தைகள்!
கிராஸ்மான் கிறிஸ்தவ குருமார்கள் குடும்பத்தில் ஸ்டெட்டின் என்ற ஊரில் பிறந்தார் ப்ராட்டஸ்டண்ட் மதப்பிரிவின் கொள்கைகளை பயின்றார்; ஆனால் கணிதத்தில்தான் அதிக ஈடுபாடு.; சாகும்வரை கணித ஆசிரியராகவே பணியாற்றினார்; சம்ஸ்க்ருதத்தில் ஆர்வம் பிறக்கவே கணித மூளையைக் கொண்டு ரிக்வேதத்தைக் கணக்கிட்டார். அதை எளிய ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். தனக்காக ஒரு ரிக்வேத அகராதியைத் தயாரித்து வைத்துக்கொண்டார்; அதைப்பார்த்த அறிஞர்கள் இதை வெளியிடுங்கள் என்று வேண்டவே அதையும் அச்சிட்டார்.
ஒரு கணித மேதை எப்படி ஒரு விஷயத்தை அணுகுவாரோ அப்படி முறையாக அணுகித் தயாரித்த அகராதி அது; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைப் பொழுதுபோக்குவதற்காகக் கற்றார். கடல் அலைகளின் ஏற்ற இறக்கம், கால்குலஸ் போன்ற அறிவியல், கணித விஷயங்களை புஸ்தகமாக எழுதி வெளியிட்டார். பின்னர்தான் சம்ஸ்க்ருத-கிரேக்க மொழிகளை ஒப்பிட்டு பழைய கொள்கைகளைத் தகர்த்தார் ; சம்ஸ்க்ருதம் பல மாறுதல்களை அடைந்த நிலையையே நாம் காண்கிறோம். இதை வைத்து இந்தோ- ஐரோப்பிய மொழி பற்றி முடிவு செய்யக்கூடாது என்பது கிராஸ்மானின் கொள்கை. ரிக்வேதத்தில் இடைச் செருகல்கள் என்று அவர் கருதிய விஷயங்களை பின்னுக்குத் தள்ளினார்.
மொழிகளின் மீது மட்டும் அவருடைய ஆர்வம் நிற்கவில்லை. பள்ளி மாணவர்களுக்காக தாவரங்களின் பெயர்கள் பற்றி புஸ்தகம் எழுதினார். நாட்டுப்புற பாடல்களையும் தொகுத்து வெளியிட்டார். பதினோரு பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருவதில் பெரும்பொழுதைச் செலவிட்டார்; இயற்பியல் பற்றியும் எழுதினார்.
இவருடைய நூல்கள் பற்றி பின்னர் ஸ்லகல் என்ற அறிஞர் எழுதினார். டியூபிங்கன் பல்கலைக் கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது .
இவருக்குப் புகழ் தேடித்தந்த கணித, மொழியியல் கண்டுபிடிப்புகள் :
Bivector
Color space
Grassmannian
Grassmann algebra
Grassmann number
Grassmann’s law
Grassmann’s laws
****
HERMANN GRASSMANN 1809-1877
ஹெர்மன் கிராஸ்மான்
பிறந்த தேதி – 15-4-1809
இறந்த தேதி – 26-9-1877
பிறந்த ஊர் – STETTIN ஸ்டெட்டின்
கல்வி கற்ற இடம் – BERLIN பெர்லின்
வேலைபார்த்த இடம் –பெர்லின் , ஸ்டெட்டின் கணித ஆசிரியர்
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
Grassmann, Hermann (1844). Die Lineale Ausdehnungslehre (in German). Leipzig: Otto Wigand.
Grassmann, Hermann (1994). A New Branch of Mathematics. Translated by Kannenberg, Lloyd C. Open Court. pp. 9–297. ISBN 9780812692761.
Grassmann, Hermann (1847). Geometrische Analyse (in German). Leipzig: Weidmannsche Buchhandlung.
Grassmann, Hermann (1861). Lehrbuch der Mathematik für höhere Lehranstalten. Vol. 1: Arithmetik. Berlin: Adolph Enslin.
1862. Die Ausdehnungslehre. Vollständig und in strenger Form begründet.. Berlin: Enslin.
English translation, 2000, by Lloyd Kannenberg, Extension Theory, American Mathematical Society ISBN 0-8126-9275-6, ISBN 0-8126-9276-4
1873. Wörterbuch zum Rig-Veda. Leipzig: Brockhaus.
1876–1877. Rig-Veda. Leipzig: Brockhaus. Translation in two vols., vol. 1 published 1876, vol. 2 published 1877.
1894–1911. Gesammelte mathematische und physikalische Werke, in 3 vols. Friedrich Engel ed. Leipzig: B.G. Teubner.[11] Reprinted 1972, New York: Johnson.
ஜெர்மனியில் அப்பொழுது குழப்பமான அரசியல் நிலவியது; ஆகையால் சகோதரருடன் சேர்ந்து ஜெர்மனி ஜக்கியமாக வேண்டும் என்று எழுதினார்கள்; இதனால் அரசியல் விரோதத்தைச் சம்பாதித்தார்கள்.
கணிதத் துறையில் இவர் பல புதிய விதிகளைக் கண்டுபிடித்தார்; ஆனால் அதை உலகம் உணர்ந்து பாராட்டவே சில காலம் ஆயிற்று ; மொழிகள் விஷயத்தில் இவர் கண்டுபிடித்த விதி உடனே அங்கீகாரம் பெற்று கிராஸ்மான் விதி GRASSMAAN LAW என்று பெயர் சூட்டப்பட்டது.
—SUBAHM—
TAGS- GRASSMAAN LAW, HERMANN GRASSMANN , ஹெர்மன் கிராஸ்மான் கணித ஆசிரியர் , ரிக்வேதம், மொழிபெயர்ப்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் அக்டோபர் 24 இதழ் கட்டுரை
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு! வரமா, சாபமா?
ச.நாகராஜன்
வந்து விட்டது மருத்துவ ஏஐ!
நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வரும் உலகில் இப்போது பரபரப்பை ஊட்டும் ஒரு புதிய நவீன தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ARTIFICIAL INTELLIGENCE ஆகும் இதை சுருக்கமாக AI என்கிறோம். இது மருத்துவ உலகிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதை HEALTHCARE AI என்கிறோம்.
ஹெல்த்கேர் ஏஐ என்றால் என்ன?
கணினியில் மனித அறிவுக்கு ஈடாக ஒரு விஷயத்தைப் பகுத்தாராய்ந்து ஏற்கனவே தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவைத் தந்து சிகிச்சையை மேற்கொள்ள உதவும் ஒரு கணினி இயந்திர உத்தியே ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனலாம்.
இது சாபமா, அல்லது வரமா?
வரம் தான்!
வரம் தான் என்பதைக் கீழே உள்ள ஆதாயங்களால் அறிகிறோம்,
அதிகமான தரவுகள் கிடைக்கப்பெறுவதால் சிகிச்சை முறைகள் எளிமைப்படுத்தப் படுகின்றன.
நல்ல சிகிச்சை முறை நோயாளிக்குக் கிடைக்கிறது.
மருத்துவ செலவு கணிசமாகக் குறைகிறது.
ரேடியாலஜிஸ்டுகளுக்கு சமமாக சிகிச்சை சம்பந்தமான ஸ்க்ரீன் அறிக்கைகள் தயாராகின்றன.
திரும்பவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது.
ஆரம்ப சிகிச்சையில் அதிக கவனம் உண்டாகிறது.
இறப்பு விகிதம் குறைகிறது.
நோயாளிக்குத் தகுந்தபடி சிகிச்சைத் திட்டம் அவரது இருப்பிடத்தையே சென்றடைகிறது. மருத்துவமனைச் செலவுகள் குறைகின்றன.
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகளை உலகம் வரவேற்கிறது.
வெள்ளம் பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமான காரியம் இல்லை. ட்ரோன்கள் போன்ற நவீன சாதனங்கள் கூட இடிபாடுகளில் சிக்கியோரை பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்! ஆகவே ஏஐ பயன்பாடு ஒரு வரம் தான்!
சாபமா?
இது ஒரு சாபமாக ஆகி விடுமோ என்று பயப்படுபவர்கள் கீழ்க்கண்ட அபாயங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தங்களது கட்டணத்தை வெகுவாக உயர்த்திவிடக் கூடும்.
ஏஐ மூலம் செயல்படும் உதவியாளர்கள் ஏஐ சாதனங்கள் தரும் தரவுகளை நம்பியே முற்றிலுமாகச் செயல்படுவர்.தரவுகள் சிறிது தப்பாக இருந்தாலும் நோயாளி அபாயத்தின் உச்சத்தை அடைவார்.
தனிப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிப்பது சிக்கலான ஒன்று. அந்த நோயாளி பற்றிய கடந்த கால, நிகழ்கால அறிவு முற்றிலும் இதற்கு அவசியம். அவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். இது ஏஐக்கு சாத்தியமானதா?
கண்ணுக்கு நேரே எதிரே இல்லாத ஒரு மருத்துவ அறிவுரையை மெஷின் தர, அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அன்றாட மேம்பாடுகள், மருத்துவ உத்திகள், மருந்துகள் இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களில் அன்றாடம் அப்-டேட் செய்யப்பட வேண்டும்.
பிரம்மாண்டமான ஜனத்தொகை, மிகப் பெரிய அளவிலான தரவுகள் ஆகியவற்றை அவ்வப்பொழுது பெறப்படுவதன் அடிப்படையில் உதவியாளர்களுக்குப் பயிற்சி அவசியம்.
சைபர் கிரைம் உலகம்
இப்போதைய உலகம் பற்றி நாம் நன்கு அறிவோம். சைபர் க்ரைம் என்று ஒரு தனிப்பிரிவே உண்டாகி விட்டது. மருத்துவ தரவுகளைத் திருடுவது, அதன் அடிப்படையில் தவறான தகவல்களைக் காண்பித்து பயமுறுத்திப் பணம் பறிப்பது, தரவுகள் தவறான குற்றம் புரிவோரின் கையில் சிக்கி நோயாளி ஆபத்திற்குள்ளாவது போன்ற இன்ன பிற அபாயங்களைத் தடுக்க வழி வகை இதுவரை இல்லை.
இனி ஏற்படுத்த வேண்டுமானால் அது மிகப் பெரிய காரியம்.
இதில் சைபர் க்ரைம் என்ற அம்சம் மிக முக்கியமானதாக ஆகிறது.
இப்போது ஒவ்வொரு நோயாளியும் அவ்வப்பொழுது பல்வேறு சோதனைகளை மேற்கொள்கிறார். டாக்டர்கள் அந்த சோதனைகளின் அடிப்படையில் அன்றாட மருத்துவ ப்ரிஸ்கிரிப்ஷனைத் தருகிறார். நோயாளியின் அனைத்து சோதனைகளையும் ஏஐ கையாள வேண்டும்.
கம்ப்யூட்டர் அட்டாக் எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு புரோகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன. பல மென்பொருள்கள் எனப்படும் சாஃப்ட்வேர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஏஐ இந்தத் தவறுகளை பதினைந்தே நிமிடங்களில் இனம் கண்டு மருத்துவர்களுக்கு உதவி புரிகின்றன என்றாலும் இதையும் தவறாகப் பயன்படுத்துவோரை யார் கண்காணிப்பது?
சமீபத்திய திரைப்படத்தில் கூட ஒரு காட்சி இடம் பெறுகிறது. டாக்டர் ஒருவர் தனது பயிற்சியில்லாத நர்ஸிடம் கூகிளைப் பார்த்துக் கொண்டே ஆபரேஷன் செய் என்று சொல்லி விட்டு தனது ‘ஃபேவரைட் கேமை’ விளையாடப் போய்விடுகிறார். நர்ஸ் முழிக்கிறார்.
டாக்டர்களே முக்கியம்!
ஆக ஏஐ வரமா, சாபமா என்பதை நிர்ணயிக்க நோயாளிகளிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
அதில் பங்கு கொண்ட அனைவரும் ஏஐ ஒரு வரம் தான் என்று உறுதிபடச் சொல்கின்றனர். கூடவே அவர்கள் சொல்வது எது எப்படியானாலும் டாக்டரின் முடிவே இறுதியானது. அவரையே நாங்கள் நம்புகிறோம் என்கின்றனர்.
கூகிளின் ஒரு ஆய்வுத் திட்டத்தில் ரொபாட் ஒன்று தன்னிச்சையாக முடிவை எடுத்ததைக் கண்ட ஆய்வாளர்கள் திடுக்கிட்டனர். கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையைத் தாண்டி ஒரு ரொபாட் தானாகவே ஒரு முடிவை எடுத்தால் என்ன ஆகும்? கூகில் இந்த ஆய்வுத் திட்டத்தை அத்தோடு முடித்துக் கொண்டு விட்டது. எல்லா ரொபாட்டுகளும் செயற்கை நுண்ணறிவு மூலம் மனித குலத்திற்கு போட்டியாகி எதிரிகளாகி விட்டால், மனித குலம் என்ன ஆவது?
பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், “ செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்து விடும்” என்று பயங்கர எச்சரிக்கையை விடுத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ உலகில் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமான ஒன்றாக ஆக்குவது டாக்டர்கள் கையிலும் நோயாளிகள் கையிலுமே தான் இருக்கிறது என்பதே உண்மை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Three authors’ book on Rayalaseema has shed more light on the architectural wonders in the region. I just give below the details in bullet points; those who like temples and the sculptures must buy this book,
Rayalaseema The Royal Realm
By Anna L.Dallapiccola, George Michell, Anila Verghese
Year 2014
The book in A4 size has beautiful pictures of sculptures of scores of temples and paintings from Lepakshi.
Three remarkable temples which are 500 years old are in the Rayalaseema area of Andhra Pradesh.
Two temples in Tadpatri
Somapalem Temple
What are the important Sculptures?
1.Chintala Venkataraman Temple, Tadpatri
Vishnu shrine has Ramayana and Bhagavata sculptures;
Gajendra Moksha,
Vamana Trivikrama ,
Ramayana scenes from Daratha’s Putra Kameshti Yaga to Rama Pattabishekam/Coronation.
Sita’s Fire Ordeal
150 Ramayana episodes in sculptures
Garuda shrine in stone chariot
Bhagavata purana scenes in 27 panels .
These include Krishna lifting Govardhana hill to protect THE cowherds;
Venugopala playing flute;
Krishna hiding the clothes of Gopi girls. This is in Sangam Tamil verse as well.
Krishna subduing the Kaliya serpent;
Krisna and Balarama in chariot
Krishna cutting off dhobi’s head when he refused to give him clothes
Krishna magically straightening the back of hunch back lady.
Krishna killing elephant Kuvalayapida
Krishna killing king Kamsa, and wrestlers Chanura, Mushtika
xxx
2.Bugga Ramalingeswara temple, Tadpatri
Garbhagrihas with ShibK lingam, Rama, Parvati
Sixteen pillar mandapa
Walls and pillars with sculptures, mostly animals and flowers
xxxx
Chennakesava temple at Somapalem
It is 50 kilometres from Kadiri
Dipastambha 18 metres high; it has a square base.
Musicians and Dancers are sculpted
Female stick dancers
Kama and Rati engaged in mock fight
Elephants, lions, Garuda
On the walls female figures with fly whisks
Male devotees with typical clothes with folds and conical caps. they join hands in namaste position.
Garuda shrine in stone chariot
Traces of faded paintings of Ramayana
12 column mandapa with ornate designs
The pillars have sculptures in every inch or cm
Swans, flowers etc
Also three dimensional figures of Venugopala, Bala Krishna , maidens holding lotus flowers.
மஹாத்மா காந்தி உணவு விஷயத்தில் பல வினோத, மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்தினார். தனக்கு இந்துமத நூல்கள் சொல்வது போல நீண்ட ஆண்டுகள் வாழ ஆசை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏகாதசி உண்ணாவிரதமும் அவ்வப்போது மெளன விரதமும் கடைப்பிடித்தார். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றபோதும் பிற்காலத்தில் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் அதற்கு ஏற்ப சில மாறுதல்களையும் செய்ததாக அறிவித்தார். பசும்பாலை விட்டு ஆட்டுப் பாலை அருந்தினார். நிறைய பழங்களையும் நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்தார் இது பற்றிய விளக்கங்களை YOUNG INDIA யங் இந்தியா பத்திரிகையில் அவ்வப்போது எழுதியும் வந்தார். சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கே காண்போம்.
ஜன்மாஷ்டமி போன்ற இந்துமத பண்டிகை நாட்களிலும் அவர் சாப்பிடாமல் உபவாசம் இருந்தார்; பொதுவாக அவர் ஒரு உண்ணாவிரதப் பிரியர். தனது வாழ்நாளில் சில அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி 18 முறைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரது நீண்ட விரதம் 21 நாட்கள் நீடித்தது; .இதன் மூலம் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு உடலினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் எண்ணினார்.
பசும் பால் பற்றி அவரது பொன்மொழி
குழந்தையாக இருக்கும்போது தாய்ப்பாலை அருந்திய, பின்னர் மனிதர்கள் பால் சாப்பிடத் தேவையே இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்
“It is my firm conviction that man need take no milk at all, beyond the mother’s milk that he takes as a baby.”
பால் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தபோது அதை நியாயப்படுத்தக்கூடிய செய்திகளையும் உதாரணமாகக் காட்டினார். பசு மாடுகளையும் எருமை மாடுகளையும், அவைகளை வளர்ப்பவர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற செய்திகள் அப்போது கல்கத்தாவிலிருந்து வந்தன
காந்திஜியுடன் ஹெர்மன் காலன்பாக் என்ற யூத மத கட்டிடக் கலைஞர் ஓருருவரும் தங்கி இருந்தார் தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வழக்கறிஞராகப் பணியாற்றியபோது அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் சொன்னார்: “நாம் எப்போதுபார்த்தாலும் பசும்பால் அவசியமில்லை என்று விவாதித்து வருகிறோம்; அதை விட்டுவிடலாமே” . உடனே காந்திஜி அதை ஏற்றார்
[Herman Kallenbach (March 1, 1871 – March 25, 1945) was a Lithuanian-born, Jewish South African architect whom Gandhiji met when he was working in South Africa and they became very close friends.]
அவர் நீண்ட காலம் பால் சாப்பிடாமல் இருந்தபோது உடல் மிகவும் பலவீனம் அடைந்தது. டாக்டர்கள் எச்சரித்த பின்னர் பசும் பாலுக்குப் பதிலாக ஆட்டின் பாலினை அருந்தி வந்தார்.
****
காந்திஜியின் உணவுக் கொள்கைகள் அவர் ஒரு யோகி போல வாழ ஆசைப்படத்தைக் காட்டுகின்றன; உணவினைக் குறைத்தால்தான் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதும் அவரது நம்பிக்கை.
யங் இந்தியா பத்திரிகையில் உணவு விஷயங்கள் பற்றி எழுதியபோது பித்துப்பிடித்த, விசித்திர எண்ணம் கொண்ட பைத்தியக்காரன் என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டார்
“I have been known as a crank, faddist, madman,” wrote Mahatma Gandhi in his weekly journal, Young India, in 1929.
மரக்கறி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்;
உப்பினைக் குறைக்க வேண்டும்;
சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட்டக்கூடாது ;
பசும் பால் மனிதர்களுக்குத் தேவை இல்லை.
****
மாமிசம் சாப்பிடாத ஒரு குஜராத்தி குடும்பத்தில் காந்திஜி பிறந்தார். ஆயினும் மாணவனாக இருந்த போது ரகசியமாக மாமிச உணவினை ருசித்தார்; வெள்ளைக்காரர்கள் மாமிசம் சாப்பிட்டதால்தான் இந்த நாட்டினை ஆள முடிந்தது என்று அவரது நண்பர்கள் கூறியதை நம்பிக்கொண்டு இதைச் செய்ததாக அவரே தனது சுய சரிதையில் சொல்லியுள்ளார். இங்கிலாந்துக்கு கல்வி கற்கச் சென்ற போது மதுவையும் மாமிசத்தையும் தொட மாட்டேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தார்.
****
காந்திஜிக்குத் தடை போட்ட குடும்பம் !
லண்டனில் அவர் வெஜிட்டேரியன் சொசைட்டியில் சேர்ந்தார் ; இதன் மூலம் அவருக்கு நிறைய ஆங்கில நண்பர்கள் கிடைத்தனர் . தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோதும் அவர் மாமிசத்தைத் தவிர்த்தார். இவருடன் நண்பனாக இருந்த ஒருவர் மாமிசத்தை வெறுத்தார்; அவரது வீட்டுக்கு காந்திஜி சென்றபோது நீ இனிமேல் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது; என் மகனை நீ கெடுத்துவிட்டாய்; உன்னால் என் மகன் மாமிசத்தைச் சாப்பிட மறுக்கிறான் என்று கண்டித்தனர்
காந்திஜி மாமிசத்தை வெறுத்ததற்கு இரண்டு காரணங்கள் :_
1.மிருகங்களின் மாமிசம் அந்த மிருக குணத்தையும் கொண்டு வரும்.
2.மிருகங்களை வதைப்பது பாவம்; அதாவது அஹிம்சைக் கொள்கை.
****
மனைவி விட்ட சவால்
காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் மனைவி கஸ்தூரி பாய் உடல் நலம் குன்றினார்; நீ உப்பினையும் பருப்பு , பயறு வகைகளையும் விட்டுவிட்டால் உன் நோய் நீங்கும் என்றார். உடனே மனைவி கஸ்தூரி பாய் , காந்திஜிக்குச் சவால் விட்டார்; ஊருக்குத்தான் உபதேசம்; உங்களால் இப்படி உப்பில்லாமல் பருப்பில்லாமல் இருக்க முடியுமா? என்று சவால் விட்டார் அப்போதே அவர் பருப்பு, பயறு வகைகளையும் துறக்க முடிவு செய்தார்.
கல்கத்தாவில் ஒரு வீட்டில் விருந்தாளியாகத் தங்கி இருந்தார்; அந்த வீட்டுப் பெண்கள் காந்திஜிக்காக பல பருப்பு வகைகளை வரவழைத்து இரவு முழுதும் அவற்றின் தோலியை உரித்து தயார் செய்தனர்; இந்தச் செய்தியும் காந்திஜியின் காதுகளை எட்டின. அதற்குப் பின்னர் கும்ப மேளாவுக்காக ஹரித்துவார் சென்ற பொழுது ஒரு பிரதிக்கினை செய்தார் இனிமேல் நான் ஒவ்வொரு நாளும் ஐந்து பண்டங்களை மட்டுமே சாப்பிடுவேன்; அதுவும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னரே சாப்பிடுவேன்.
வாழ்நாள் முழுதும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்
****
சமண மத செல்வாக்கு
காந்திஜிக்கு ராய்சந் என்ற சமண சமய நண்பர் ஒருவர் இருந்தார். பாலும் பிரம்மசர்யத்துக்கு எதிரி; ஏனெனில் அது பாலுணர்வினைத் தூண்டும் என்று சொல்லிவிட்டார். மேலும் சமணர்கள் சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் விழுந்துவிடக்கூடும் என்று சமணர்கள் கருதினர். இந்த இரண்டு விஷயங்களும் காந்திஜியின் மனதில் வேரூன்றின.
மேலும் மிருகத்திலிருந்து வரும் எந்தப்பொருளும் மிருக குணத்தைக் கொடுக்கும் என்றும் நம்பினார்
*****
மேலும் ஒரு புதிய சோதனை ; சமைக்காதே
உணவுப் பொருட்களை எதற்காக சமைக்க வேண்டும்? அப்படியே சமைக்காமல் சாப்பிடலாமே என்பதும் காந்திஜியின் கொள்கை. 1929 மே மாதம் இந்த சோதனையைத் துவங்கினார் பின்னர் யங் இந்தியா பத்திரிகையில் எழுதினார்; நான் பல ஆண்டுகளாக பழங்கள் பருப்பு வகைகளை சாப்பிட்டுவருகிறேன்; அவைகளை சமைக்கத் தேவையே இல்லை; பயறுவகைகளையும் இப்படிச் சமைக்காமல் சாப்பிடலாமே.; அவைகளை தண்ணீரில் ஊறவைத்தால் முளைவிட்டு மென்மையாகி விடும்.
(இப்போதும் லண்டனிலுள்ள குஜராத்தி கடைகளில் முளைவிட்ட பயறுவகைகளை உணவுப் பக்கத்தில் வைத்து விற்கிறார்கள்)
இதனால் பெண்களுக்கும் சமையல் அறைத் தொல்லைகள் இராதே என்றார்.
காந்திஜி தினமும் சாப்பிட்டது
முளைவிட்ட கோதுமை
தூளாக்கப்பட்ட வாதாம் பருப்பு
முழு வாதாம் பருப்பு
வெள்ளரிக்காய், சுரைக்காய்
கிஸ்மிஸ்
எலுமிச்சம் பழம்
தேன்
இவை அனைத்தையும் அவர் தினமும் பயன்படுத்தவில்லை; சிற்சில வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டார் .
ஆயினும் நான்கே மாதங்களில் அவர் வயிற்றுப்போக்கினால் உடல் வலு இழந்து எடை குறைந்தவுடன் இந்த சமைக்காத உணவு திட்டத்தினைக் கைவிட்டார் .
குழந்தைகளை மேலும் பெற்றுக்கொண்டால் அது பொது வாழ்வுப் பணிகளை , சேவைகளைப் பாதிக்கும் என்று சொல்லி பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க மனைவி அனுமதியுடன் முடிவு செய்தார்.
கடைசிவரை பழங்களும் பருப்பு வகைகளுமே பிரம்மசர்யத்துக்கு உகந்தவை என்று எழுதிவந்தார்
–subham—
Tags– மஹாத்மா காந்தி, உணவு, பிரம்மசர்யம், ஏகாதசி, உண்ணாவிரதம், சமண மத, செல்வாக்கு , பசும் பால், மது, மாமிசம், வேண்டாம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2 (Post.13,867)
ச. நாகராஜன்
பிரார்த்தனை பற்றிய காரெலின் கட்டுரை!
காரெலின் கட்டுரையின் முக்கியப் பகுதி இது தான்:-
“பிரார்த்தனை என்பது வெறும் வழிபாடு மட்டுமில்லை. மனிதனின் வழிபடும் சக்தியின் கண்ணுக்குத் தெரியாத வெளிப்பாடு அது. மனிதன் உருவாக்கக் கூடிய வலிமை வாய்ந்த சக்தி அது. மனித உடலில் உள்ள சுரப்பிகளைப் போலவே பிரார்த்தனையின் சக்தியும் சுலபமாக நிரூபிக்கக் கூடியது தான். அதனுடைய நல்விளைவுகளை உடலில் ஏற்படும் அதிகமான நிதானம் மற்றும் அதிக மேதைத்தனத்துடன் பிரகாசிக்கும் புத்தி, ஆன்மீக பலம், மனித உறவில் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுதல் இவற்றால் அளந்து விட முடியும்.
“நீங்கள் உண்மையான பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டு விட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தீர்க்கமாகவும் வெளிப்படையாகத் தெரியும் அளவிலும் மாறிவிடும். பிரார்த்தனை
நமது செயல்பாடுகளில் தனது அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறது. ஒளிமயமாகப் பிரகாசிக்கும் இவர்களின் முகத்திலும், உடலிலும் ஒரு சாந்தி தவழ்வதைப் பார்க்க முடியும்.
“புவிஈர்ப்பு விசை போல பிரார்த்தனையும் ஒரு வலிமை வாய்ந்த சக்தி. மருத்துவன் என்ற முறையில் மற்ற எல்லா வழிகளும் தோல்வியால் அடைபட்டு மூடிக்கிடக்கும் போது, உண்மையான பிரார்த்தனை
மூலம் தங்கள் நோய் நீங்கி நலம் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். ‘இயற்கையின் நியதிகள்’ என்று சொல்லப்படுபவற்றை உலகில் மீறக் கூடிய ஒரே சக்தி பிரார்த்தனை தான்! பிரார்த்தனை அதிசயிக்கத்தக்க முறையில் செயல்பட்டு நல்லவை நடக்கும்போது அவற்றை “அற்புதங்கள்” என்கிறோம். ஆனால் பிரார்த்தனை மூலம் தினசரி வாழ்விற்கு வற்றிடாத ஜீவசக்தி கிடைக்கிறது. இதை உணர்ந்த ஆண்களும், பெண்களும் நிலையான அமைதியான அற்புதத்தை ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள்.
“பிரார்த்தனையை எப்படி விளக்குவது? கடவுளை அடைய மனிதனின் முயற்சி அது. கண்ணுக்குப் புலனாகாத, அனைத்தையும் படைத்த, உயரிய அறிவு, உண்மை, அழகு வலிமையாய் இருப்பதோடு தந்தையாகவும், நம்மை மீட்பவராகவும் இருப்பவரை அடையும் முயற்சி அது. பிரார்த்தனையின் லட்சியம் அறிவுக்குப் புலப்படாமல் மறைந்தே இருக்கும். ஏனெனில் மொழியும், சிந்தனையும் கடவுளைப் பற்றி விவரிக்க முற்படும்போது தோல்வியை அடைகிறது.”
போர்வீரர்களுக்கு சிகிச்சை
1914ல் முதல் உலகப் போர் ஆரம்பிக்கவே பிரான்ஸில் காயம் பட்ட போர்வீரர்களுக்கான சிகிச்சையில் காரெலின் மருத்துவ உத்திகள் கை கொடுத்தன. போர் முடிந்தவுடன் அவர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.
ஒரு கோழியின் இதயத்தை விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கரைசல் ஒன்றில் அவர் வைத்திருக்க, அது முப்பது வருட காலம் துடித்து இயங்கிக் கொண்டிருந்தது!
1935-ம் ஆண்டு பிரபல விமான பைலட்டான சார்லஸ் லிண்ட்பெர்க் தனது உறவுப் பெண்மெணி இதய நோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டு வருந்தி காரெலைத் தொடர்பு கொண்டார். இதயத்தைத் துடிக்க வைக்க ஒரு பம்ப்- ஐ காரெல் உருவாக்கினார். இதன் மூலம் இதய நோய்க்கான சிகிச்சையில் ஒரு புது சிகிச்சை முறை உருவானது.
மேன் தி அன்க்னோன் (MAN THE UNKNOWN)
1935-ம் ஆண்டு காரெல் எழுதி வெளியிட்ட மேன் – தி அன்க்னோன் என்ற புத்தகம் உலகளாவிய விதத்தில் பிரபலமானது. மனித வாழ்க்கையில் மனித உடல் பற்றிய தனது எண்ணங்களை உடலியல், இயற்பியல் மற்றும் மருத்துவ இயல் ஆகியவற்றில் உள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இதில் அவர் விவரித்துள்ளார்.
தரமில்லாத மனிதர்கள் வாழும் உலகை விட தரமான மனிதர்கள் வாழும் புதிய இனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது எண்ணம், இந்த புதிய அறிவு சார்ந்த நல்லியல் மனிதர்கள் நிறைந்த ஒரு இயலுக்கு ‘யூஜெனிக்ஸ்’ என்று பெயர். ஆனால் இது கடுமையான விவாதத்திற்கு உட்பட்ட கொள்கையாக ஆனது
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரின் கனவும் கூட இதே போல, தன் வழியிலான ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது தான். சார்லஸ் லிண்ட்பெர்க் ஹிட்லர் உருவாக்கிய கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். அவரது நெருங்கிய நண்பராக இருந்த காரெலுக்கு நல்லியல் மனிதரை உருவாக்கும் கொள்கை பிடித்திருந்தது.
இரண்டாம் உலகப் போர் துவங்கவே 1939-ல் காரல் பிரான்ஸுக்குத் திரும்பினார்.
தன்னால் ஒரு நல்லியல் மனித உலகை உருவாக்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிய காரெல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர் மீது நாஜி ஆதரவாளர் என்ற குற்றம் சாட்டப்பட்டு வழக்கு போடப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரேயே இவர் மரணமடைந்தார்.
ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் காரெல் பெற்றார்.
மறைவு
காரெல் தனது 71-ம் வயதில் 1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதியன்று பாரிஸில் மரணமடைந்தார்.
காரெலின் பொன்மொழிகள்
காரெலின் பொன்மொழிகளில் சில:
உளமார்ந்த பிரார்த்தனையைச் செய்யும் வழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் உங்களது வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் பிரமாதமான மாறுதலைப் பெறும்.
பிராத்தனையே ஒருவர் உருவாக்கக் கூடிய அதிக சக்தி வாய்ந்த ஆற்றலாகும். அது நமது அன்றாட வாழ்வில் நீடித்து இருக்கும் ஒரு ஆற்றலைத் தருகிறது.
வாழ்க்கையை நல்லவிதமாக திறம்பட வாழ்வதற்கான வழி, ஒவ்வொரு நாள் காலையிலும் அன்று செய்ய வேண்டியவை பற்றிய திட்டத்தை தீட்டி நாளின் முடிவில் இரவில் என்ன விளைவுகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பது தான்.
உடல் ஆரோக்கியம் மேம்பட புதிய சிகிச்சை முறைகளைத் தந்ததோடு, உள்ளம் மேம்பட பிரார்த்தனையின் மகிமையையும் உலகிற்கு விளக்கிய அலெக்ஸிஸ் காரெல் ஒரு அற்புதமான மனிதர் என்பதில் ஐயமில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
An article by Saurabh Kwatra was published in the Times of India in 2001. I give below the dates in the article.
The present analysis is a modest attempt to use astronomy, astrology and the science of together in elevating the status of Ramayana from an epic to chronological reality.
(then the author explains the birth charts etc from the facts given by Valmiki)
The author arrived at the following dates for the important events in Ramayana:
Birthday of Rama- December , 7323 BCE Ram Navami day 9300 years ago)
Marriage with Sita- April 7, 7307 BCE
Rama’s Exile- November 29, 7306 BCE
Hanuman’s entry into Lanka- September 1, 7292 BCE
Hanuman’s meeting with Sita- September 2, 7292 BCE
Construction of the bridge /Setu- October 26-30, 7292 BCE
Beginning of great war- November 3, 7292 BCE
Kumbakarna’s death – November 7, 7292 BCE
Ravana was killed by Rama – November 15, 7292 BCE
Rama’s return to Ayodhya- December 6, 7292 BCE
(author explained astronomical positios of stars and planets to justify his conclusion)
****
Another article shows one has to dig at least 60 meters to get the archaeological evidence for Ramayana which is not possible in North India’s Gangetic plains.
Rig Veda 10,000 Years old (8000 BCE)
In the 1990s, Nevoli Cori in Turkey was excavated. They have found the sculpture of a bald man, that fits the description of a Vedic priest. It is dated 8000 BCE.
Linguistic studies conducted by R D Gray and Q D Atkinson of the University of Aucland, New Zealand say the oldest Indo European language , which is over 10,000 years old, bears close affinity to Rig Vedic Sanskrit.
These findings confirm the theory proposed by B G Siddharth, Director General of B M Birla Science Centre , that the Rig Vedic civilization could be dated as far back as 10,000 years.
(I am throwing away the paper cuttings which are 20 years old; the above matter is just the bullet points from those cuttings)
–subham—
Tags –Ramayana dates, birthday of Rama, wedding date of Sita
நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்– என்ற மருத்துவப் பழமொழியின் பொருளை முந்தைய கட்டுரையில் கண்டோம் இதோ அடுத்த பழமொழி – வறுத்த பருப்பை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே!
சுட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆயினும் நம்மவர்கள் அந்தக் காலத்தில் சுட்ட எண்ணெயைத் தொடாதே என்று சொன்னார்கள் ; காரணம் என்னவெனில் அதைப் பாதுகாத்து வைக்காமல் அதே சட்டியில் வைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்துகையில் அதில் அதிகம் அசுத்தங்கள் பூச்சி பொட்டுக்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தன.
தற்கால ஆராய்ச்சிகளும் பல நிபந்தனைகளுடன்தான் சுட்ட எண்ணெயைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. முதலில் அதில் என்ன பண்டத்தைப் பொறி த்தீர்கள், அதை இதற்கு முன் எத்தனை முறை பயன்படுத்தினீர்கள் என்பதைப் பொறுத்தே அதை நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியும்;. பலரும் அந்த எண்ணெயை ஆறவைத்து பாட்டிலில் விட்டு, குளிர்பதனப் பெட்டி என்னும் பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள் இப்படிச் செய்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.
மேலும் எந்தப் பண்டத்தை முதலில் பொறித்தீர்களாளோ அதே பண்டத்துக்கு மேலும் பயன்படுத்தலாம். அல்லது முந்திய பண்டத்தின் மணம் இதிலும் ஏறும். எடுத்துக்காட்டாக வெங்கா யத்தைப் பொறித்துவிட்டு அடுத்த படியாக நீங்கள் எந்தப் பண்டத்தைப் பொறித்தாலும் அதில் வெங்காய மணம் ஏறக்கூடும்.
குறிப்பாக விருந்தாளிகள் வருகையில் அல்லது இறைவனுக்குப் படைக்கையில் எல்லாவற்றுக்கும் புதிய எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று தாய்மார்களுக்குச் சொல்லாமலே விளங்கும்
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன என்பதையும் காண்போம்.
Repeatedly heated cooking oils (RCO) can generate varieties of compounds, including polycyclic aromatic hydrocarbons (PAH), some of which have been reported as carcinogenic. Taking into account exploratory study, the present review aims to provide the consumption of RCO and its fumes cause the high incidence of genotoxic, mutagenic, tumorigenic and various cancers.
மீண்டும் மீண்டும் அதாவது பலமுறை எண்ணெயைச் சுடவைக்கும்போது அதில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் காம்பவுண்ட்ஸ் என்னும் ரசாயனப் பொருட்கள் உண்டாகின்றன. அவை புற்றுநோயை உண்டாகும் ரசாயனப் பொருட்களில் ஒன்றாகும்
மேலும் நமது சகோதரிகள் சமையல் அறையில் அந்தப் புகையையும் சுவாசிக்கின்றனர். அதுவும் புற்றுநோய்க்கான காரணிகளாக அமைகிறது
நோயாளிகளையோ நோயற்றவர்களையோ இதற்காக நிறுத்தி ஆராய்ந்து இந்த முடிவினை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே டாக்டர்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்த தகவலின் அடிப்படியில் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் மருத்துவரிடம் சென்றால், குறிப்பாக மேலை நாடுகளில், அவர்கள் நமது வாழ்க்கை முறை, அன்றாட நடவடிக்கைகள் பற்றி பல கேள்விகளையும் கேட்பார்கள்; நமக்கு கோபமும் ஆத்திரமும் கூட் வரக்கூடும். இது என்னடா, நான் முதுகு வலி என்று போனால் அவர் சமையல் அறையில் நீங்கள் எத்தனை மணி நேரம் இருக்கிறீர்கள், வெப்பம் எப்படி, புகைபோக்கி உண்டா என்றெல்லாம் கேட்கிறார்களே என்று நமக்கு எண்ணத் தோன்றும் ஆயினும் நாம் சொல்லும் எல்லா பதில்களையும் அவர்கள் அப்படியே கம்பியூட்டரில் பதிவு செய்கிறார்கள். பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் புகை போக்கி என்று ஆய்வு பட்டனைத் தட்டினாலும் கம்ப்யுயூட்டர் அத்தனை புகைபோக்கி விஷயங்களையும் கொட்டிவிடும். அப்படி செய்யப்பட ஆராய்ச்சியில் சுட்ட எண்ணெய் பற்றி கிடைத்த முடிவுதான் மேற்சொன்ன புற்று நோய் விஷயம் .
****
( புற்று நோய் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கொத்தனாரைக் கூப்பிவிட்டு செங்கற்களைத் வைத்து கட்டிடம் கட்டச் சொன்னோம். அவர் சரியாக அளவு பாக்காலமல் செங்கற்களைத் தாறுமாறாக வைத்துக் கட்டினால் அடுத்த மழையில் கட்டிடமோ சுவரோ சரிந்துவிடும். இதே போல நமது உடலில் செல் என்னும் செங்கற்ககளை புதுப்பிக்கும் வேலை ஒவ்வொரு நிமிடமும் நடக்கிறது. அவை நம் உடல் உறுப்புளைக் கட்டி வருகிறது; யாரோ ஒன்றோ அல்லது ஏதோ ஒன்றோ தவறான தகவலைக் கொடுத்தவுடன் அந்த செல்கள் தாறு மாறாக வளரத் தொடங்குகின்றன. அதை நாம் கட்டி என்போம் அந்தக் (Tumour) கட்டிகள் மற்ற ரத்தக் குழாய்களையோ நரம்புகளையோ அழுத்தினால் பிரச்சினை பெரிதாகி மரணம் சம்பவிக்கிறது
ஏன் செல்கள் தவறான தகவலை அனுப்புகின்றன என்பதற்கு சில காரணங்கள் மட்டுமே இதுவரை தெரிய வந்துள்ளன. புகை பிடித்தல், தடை செய்யப்பட ஒருட்களை சாப்பிடுதல் அணுசக்தி கதிரியக்கத்தில் நிற்றல் முதலியன சில. அடுப்பறையில் புகையைச் சுவாசித்தல், கடுமையான வெப்பத்துக்கு அருகில் நிற்றல் முதலியவற்றையும் ஆராய்ந்ததில் மேற்கண்ட சுட்ட எண்ணெய் தகவல் கிடைத்தது. இது செல்களில் உள்ள க்ரோமோசோம்களைப் பாதிக்கிறது).
****
இப்பொழுது வறுத்த பருப்புக்கு வருவோம். நிலக்கடலை அல்லது கொண்டைக் கடலையை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உலகெங்கிலும் உளது. அத்தோடு மக்காச் சோள விதைகளையும் வறுத்து விற்கிறார்கள்.
வறுத்த பருப்பு உடலுக்கு நல்லது; அவைகளில் தேவையான உலோகச் சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் இருக்கின்றன. அவைகளைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து ஏறுவது இல்லை அல்லது குறைவு. இதை glycaemic index கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு ,பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு க்ளைசெமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை ஏறுதல் ) என்றெல்லாம் தற்காலத்தில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் .
Roasted chickpeas are also rich in essential vitamins and minerals, such as iron, magnesium, and folate, which support overall health. Additionally, they have a low glycaemic index, making them a good snack for maintaining stable blood sugar levels.
ஆயினும் முக்கியமான மெத்தியோனைன் என்ற அமினோ அமிலத்தை அது அழித்துவிடுகிறது( Heat treatment causes loss of methionine). வறுத்த பருப்பிலுள்ள புரதச் சத்து உடலில் எளிதில் சேரும்; ஆனால் கொதிக்க வைத்த பருப்பிலுள்ள புரத்தச் சத்து உடலில் மெதுவாகக் கலக்கிறது வறுத்தால் மணமும் சுவையும் கூடுகிறது அதை வறுக்க ஆலிவ் எண்ணெய் முதலியவற்றைப் பயன்படுத்தினால் அதன் நற்பயன்களும் சேரும்.
வறுத்த நிலக்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1.இருதயத்துக்கு வலுவூட்டும் கொழுப்புச் சத்து இருக்கிறது; கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
2.ரத்தக் குழாய்களின் பலவீனத்தைத் தடுக்கும் பொருளும் உள்ளது
3.ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் மக்னீசியமும் இருக்கிறது
4.புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் சரிவிகிதத்தில் உள்ளன
5.உடல் உற்பத்தி செய்யாத நல்ல அமினோ அமிலங்களை வறுத்த கடலை நமக்கு கொடுக்கிறது
6. உடல் தசைகள் வளர உதவுகின்றன. குறிப்பாக பசித்த நேரத்தில் முழு சாப்பாடு கிடைக்காதபோது இது பசியையும் தணித்து உடலுழைப்புக்குத் தேவையான சக்தியையும் தரும்.
கெடுதிகள் என்ன ?
மேலை நாட்டில் நிறைய பேருக்கு அலர்ஜி/ ஒவ்வாமை உண்டு.
ஆகையால் எல்லா பாக்கெட் மேலும் பொட்டலம் மேலும் அலர்ஜி எச்சரிக்கை இருக்கும். அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது
இந்தப் பருப்பை வறுக்கும் போது அதில் உப்பினைச் சேர்க்கிறார்கள் சுவை கூடினாலும் அதிலுள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்
கடைசியாக கெட்டுப்போன பூஞ்சைக்காளான் பிடித்த பருப்புகளைக் சாப்பிடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும்
****
மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தது நிலக்கடலை. லண்டனில் எல்லா குஜராத்தி கோவில்களிலும் பிரசாதத்தில் நிலக்கடலையும் சேர்க்கிறார்கள். கடலை மிட்டாய் பிடிக்காத தமிழர்கள் உண்டா ? கடலை மிட்டாய் வாழ்க. அளவோடு சாப்பிடுங்கள்.
****
ஆங்கிலக் குறிப்புகளை கீழே இணைத்துள்ளேன் ; தேவையானோர் அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்
Heat treatment causes loss of methionine
Roasted Peanut Benefit in Heart Health
Healthy Fats: Roasted peanuts contain monounsaturated and polyunsaturated fats, which are beneficial for heart health, helping to lower bad cholesterol levels and reduce the risk of heart disease.
Antioxidant Properties: They are also a good source of antioxidants, such as resveratrol, which can improve heart health by protecting against arterial damage.
Blood Pressure Regulation: Magnesium found in roasted peanuts contributes to blood pressure regulation, further supporting cardiovascular health.
Roasted Peanut Benefit in Blood Sugar Control
Low Glycemic Index: Roasted peanuts have a low glycemic index, meaning they do not cause large spikes in blood sugar levels, making them a safe snack for individuals managing diabetes.
Rich in Magnesium: Magnesium has been linked to a lower risk of type 2 diabetes through its role in glucose metabolism, and roasted peanuts are a good source of this essential mineral.
Protein and Fat Balance: The balance of protein and healthy fats in roasted peanuts helps in slow digestion and steady energy release, aiding in blood sugar control.
Roasted Peanut Benefit in Muscle Building
High-Quality Protein: Roasted peanuts are a great source of high-quality protein, essential for muscle growth and repair. This makes them an excellent snack for athletes or anyone looking to increase muscle mass.
Amino Acids: They provide essential amino acids that the body cannot produce on its own, which are crucial for muscle development and repair.
Energy for Workout: The healthy fats in roasted peanuts offer sustained energy, making them a beneficial pre-workout snack to fuel physical activities and muscle building.
Side-Effects of Eating Roasted Peanuts
While roasted peanuts offer numerous health benefits, there are potential side-effects worth noting:
Allergic Reactions: Peanuts are a common allergen, and consuming them can trigger severe allergic reactions in some individuals, including anaphylaxis.
High Calorie Count: Due to their high fat content, roasted peanuts are calorie-dense, which could contribute to weight gain if consumed in excessive amounts.
Increased Sodium Intake: Some roasted peanuts come with added salt, which can lead to increased sodium intake, potentially raising blood pressure.
Risk of Contaminants: Peanuts can be susceptible to aflatoxins, a type of mould that can be carcinogenic. Proper storage and choosing high-quality products can minimize this risk.
Eating roasted peanuts in moderation is key to avoiding these potential side effects, ensuring you can enjoy their benefits without adverse effects.