பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1 (Post No.13,864)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.864

Date uploaded in London – –8 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1

ச. நாகராஜன் 

பிரார்த்தனை மகிமை வாய்ந்தது என்று உலகில் உள்ள பெரியோர்கள் எல்லாம் கூறியதை நாம் நன்கு அறிவோம். அனைத்து மதங்களும் வற்புறுத்தும் ஒரு வாழ்வியல் முறை பிரார்த்தனை.

அறிவியல் உலகில் இதை வலியுறுத்திச் சொன்னவர் பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும், பிரபல உயிரியல்  நிபுணருமான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரல்!

பிரார்த்தனையின் மகிமை

வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும்

–    திருமங்கை ஆழ்வார்– நெடுமாலவன் எனத் தொடங்கும் பாடல்

அறியாமையிலிருந்து அறிவுக்கு இட்டுச் செல்க!

இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க!

இறப்பிலிருந்து சாகா அம்ருதத்தன்மைக்கு அழைத்துச் செல்க

–    உபநிடதம்

பிரார்த்தனையின் போது எதை வேண்டுகிறீர்களோ அதைப் பெறுவீர்கள்; வேண்டியது கிடைத்துவிட்டதாகவே நம்புங்கள். அதைப் பெறுவீர்கள்.

–    இயேசுபிரான்

சொர்க்கத்திற்கு திறவுகோல் பிரார்த்தனை. ஆண்டவனிடம் அவனுடைய அருளன்பைக் கேளுங்கள். அவனிடம் கேட்கப்படவேண்டுமென்று அவன் பிரியப்படுகிறான். கேட்டவை கிடைக்கும் வரை பொறுமையுடன் முயற்சித்தலே மேலான பிரார்த்தனை!

–    நபிகள் நாயகம்

இந்த உலகில் கற்பனைக் கனவுகளில் பெறுவதை விட அதிகமானவற்றை பிரார்த்தனை மூலம் பெறலாம்.

–    கவிஞர் டென்னிஸன்

பிறப்பும் இளமையும்

அலெக்ஸிஸ் காரெல் 1873-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி பிரான்ஸில் லியான் என்னும் நகரில் பிறந்தார். இறை வழிபாட்டில் ஈடுபட்ட குடும்பம் அவருடையது. அவர் லியான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேர்ந்து படிக்கலானார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் கொலை

1894-ம் ஆண்டு பிரான்ஸின் ஜனாதிபதியான ஃப்ராங்கோயில் கார்னாட் என்பவர் லியானில் ஒரு அரசியல் மேடையில் பேசும்போது கொல்லப்பட்டார். அவரை அடிவயிற்றில் கத்தியால் குத்தி விட்டான் ஒருவன். இரத்த வெள்ளம் பெருகி ஓட அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் முடியவில்லை. இரு நாட்கள் கழித்து அவர் ஆபரேஷன் டேபிளில் மரணமடைந்தார். ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டவர்களுள் ஒருவராக இருந்தார் மருத்துவ மாணவரான காரெல். இந்தச் சம்பவத்தால் திடுக்கிட்ட காரெல் இதற்கு ஒரு மருத்துவத் தீர்வைக் கண்டுபிடிக்க உறுதி பூண்டார். புரட்சிகரமான ஒரு அறுவைச் சிகிச்சை முறையை அவர் ஏற்படுத்தினார்.

காரெலின் தாயார் லேஸ் தொழிலில் பக்குவமானவர். சிறு சிறு ஊசிகளைக் கையாண்டு அருமையான பட்டு வேலைகளை அவர் செய்வார். காரெலும் இந்த உத்தியைத் தாயரிடமிருந்து கற்று அதில் நிபுணரானார்.

ஆக, இந்த உத்தியை அறுவை சிகிச்சையில் கையாளலாமே என்று அவர் நினைத்தார்; அதற்கென ஒரு உத்தியைக் கண்டு பிடித்தார். ரத்த நாளங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்த அவர் 1900-ம் ஆண்டிம் லியானில் உடல் கூறியல் பிரிவில் சேர்ந்து மிருகங்கள் மீதான சோதனைகளை மேற்கொண்டார். அங்கு தனது உத்தியைக் கையாண்டு ரத்த நாளங்களை ‘ரிப்பேர்’ செய்யும் முறையை உருவாக்கினார். ஒரு ஆய்வுப் பேப்பரையும் எழுதினார்.

இது மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1904-ம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலையில் சேர்ந்தார் அவர்.

டாக்டர் சார்லஸ் குத்ரி என்பவருடன் இணைந்து அவர் வேலை பார்த்தார். டாக்டர் சார்லஸ், காரெலின் திறமையைக் கண்டு வியந்தார். சிறுநீரகத்தைப் பதியம் செய்யும் உத்தி இதனாலேயே பின்னால் விளைந்தது. 1906-ல் காரல் நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் நிறுவனத்திற்கு மாறினார். அவரது பதியங்களும் அறுவை சிகிச்சை முறைகளும் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

1912-ல் அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லூர்துஸ் பயணம்

1902-ம் ஆண்டு அலெக்ஸிஸ் காரெலின் ஒரு நண்பர் அவரை லியானிலிருந்து லூர்தூஸுக்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருமாறு வேண்டுகோள் விடுத்தார். காரெல் ஒரு பகுத்தறிவுவாதி. லூர்துஸில் நடக்கும் அற்புதங்களை அவர் நம்பவில்லை. என்றாலும் கூட நண்பருக்காக ரயிலில் வர ஒப்புக் கொண்டார். மே மாதம் 28-ம் தேதி அன்று அவர் நோயாளிகளுடன் பயணப்பட்டார்.

ரயிலில் மேரி பெய்லி என்ற ஒரு பெண்மணி மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த காரெல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார். லூர்துஸிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள மருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துஸின் புனித தீர்த்தம் மூன்று முறை தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வயிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இன்னொரு முறை தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அவள் முற்றிலும் குணமாகி விட்டாள். தனது படுக்கையிலிருந்து எழுந்த அவள் மறுநாள் தனியாக ரயிலில் ஏறி லியான் திரும்பினாள்.

இதைப் பார்த்த காரெலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. 1937-ம் ஆண்டு அவளது 58-ம் வயதில் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் அவள் இருந்தாள்.

எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது.

இதற்குப் பின்னர் லூர்துஸிற்கு இன்னொரு முறை வந்த போது 18 மாத கண்பார்வையற்ற ஒரு குழந்தை கண்பார்வை பெற்ற சம்பவத்தையும் அவர் நேரில் கண்டார்.

 பெரும் ஆத்திகராக மாறிய அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இன்று வரை அது போற்றப்படுகிறது!

to be continued……………………….

American Election Cartoons 7112024



Following cartoons are from Deccan Chronicle newspaper featuring American Elections and Indian politicians.

–subham—

Tags – American Election Cartoons

London Swaminathan’s October 2024 Articles Index (Post No.13,863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,863

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Index No.143

Let us salute the Departed Souls on Mahalaya Amavasya Day (Post No.13,732) 1/10/2024

London Swaminathan’s 125th Book is for Sale! (Post No.13,733)1/10

London Swaminathan Article Index for September 2024 (Post No.13,773)1/10

London Events from my Mobile Phone -Swami Swaroopananda Talks (Post No.13,734)1/10

Sanskrit Tamil Proverbs around the World!-2 (Post No.13,37) 2/10

Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature (Post No.13,741)-3/10

Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature -2 (Post No.13,746) 4/10

More Proverbs; More Interesting Stories! Arjuna Story! (Post No,13,750)5/10

Shakespeare’s belief in Astrology -1 (Post No.13,753) 6/10

Shakespeare’s belief in Astrology 2 (7/10)

Chinese stories and Tamil Proverbs (Post No.13,760)8/10

Japanese Proverbs and Chinese Stories (Post No.13,764)9/10

More Stars in Shakespeare and Hindu Literature (Post.13,767)10/10

Tamil Assassinations and Proverbs (Post 13,775)13/10

Screeching Owls in Shakespeare, Tamil and Sanskrit Scriptures (Post No.13,779)14/10

Tamil and Pancha Tantra Proverbs around the World (Post No.13,782)15/10

Eclipse ,Ghosts and Omens from Shakespeare, Tamil and Sanskrit Books (Post.13,785)16/10

Except Manu, Whole World treated Women with Contempt! – Part 1 (Post No.13.789)

2 Except Manu, Whole World treated Women with Contempt! – Part 2 (Post No.13,792)18/10

London Swaminathan Article Index for September 2024 (Post No.13,773)12/10

Tamils attack Women from Sangam Age! Part 3 (Post.13,795)19/10

Sanskrit Poets and Tamil Poets attack Women 4 (last part) Post No.13,798)20/10

At the front door a tiger was checked, at the back door a wolf entered ! (Post No.13,812)24/10

Ghosts in Shakespeare‘s Plays (Post No.13,816)25/10

Gudimallam Siva Temple – Bundle of Contradictions and Web of Lies! (Post No.13,822)27/10

Raven Bird in Shakespeare and Hindu Scriptures- Inauspicious (Post No.13,805)22/10

Sugarcane — Learn Tirumanthiram through Pictures- 9 (Post No.13,770)11/10

‘To wait for another hare at the same stump’ story (Post No.13,801)21/10

Learn Tirumanthiram through Pictures- 10 (23/10)

Big Deepavali Event in London Year 2024-Part 1(28/10)

Rather be a broken Jewel than an intact Tile (Post No.13,830)29/10

Columbus TV Programme shocks the Jews! (Post No.13,834)30/10

London Diwali Event 2024 Pictures Part Three (Post No.13,833)30/10

Three Things drive a Man out of his House (Post No.13,837)31/10

****

Following are lifted Items from Newspapers

AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON 2/10

ANCIENT INDIA AND THE ROMAN EMPIRE       22/10

Cartoons for you from Deccan Chronicle 5102024

Cartoons up to 27 10 2024

DECCAN CHRONICLE CARTOONS 12102024

DIWALI  CARTOONS  31102024

TWENTY FIVE ANCIENT UNIVERSITIES OF INDIA 7/10

Goa Mystery-Body of St. Francis or a Buddhist monk?7/10

****

TAMIL ARTICLES – OCTOBER 2024

நலுங்குப் பாட்டு (Post No.13,730) 1/10

உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -1 (Post No.13,731) 1/10

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-9 (Post No.13,738) 2/10

முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்த இரண்டு அதிசய சம்பவங்கள் (Post.13,736) 2/10

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-10 (Post.13,740) 3/10

2. உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; பீமன் பற்றிய பழமொழி! (Post 13,742)3/10

ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் –மனு  (Post No.13,747)4/10

ஜோதிடம்:  தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-12 (Post No.13,749) 5/10

உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; அர்ஜுனன் கதை-3 (6/10)

கோழி அடிக்க குறுந்தடி வேண்டுமா?  உலகம் முழுவதும் தமிழ்ப் பழமொழிகள்- 4(Post.13,755) 7/10

ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13 (Post No.13,762) 9/10

மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்; ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-14 (Post.13,769) 11/10

தமிழ்ப் படுகொலைகளும் உலகப் பழமொழிகளும் (Post.13,776) 14/10

****

Temples

ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில்: ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற கோவில்கள் –36 (Post.13,744) 4/10

காக்கிநாடா கோவில்கள்- PART 37 (Post  No.13,759)8/10

38.நெல்லூர்: ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் (Post No.13,784) 16/10

39.அந்தர்வேதி, அரசவல்லி, முரமல்ல கோவில்கள்- 39 (Post.13,788)17/10

உண்டவல்லி குகைக் கோவில்கள்- 40 (Post.13,794)19/10

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819) 26/10

ஹேமாவதியில் 4 நுளம்ப வம்ச கோவில்கள் –Part 42 (Post No.13,836) 31/10

****

சகுனங்கள்: ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15 (Post13,776)13/10

ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்- 5 (Post.13,766) 10/10

கிரகணங்கள், சகுனங்கள் –ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில்- 16 (Post No.13,797)20/10

ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807) 23/10

அண்டங்காக்கை ஜோதிடம்-2 (Post No.13,811) 24 /10

அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810) 24/10

1.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818)27/10

2.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,821)27/10

3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)28/10

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? உலகெங்கிலும் தமிழ்ப் பழமொழிகள் (Post.13,787)17/10

சம்ஸ்க்ருதத்தில் மருத்துவப் பொன்மொழிகள், பழமொழிகள் (Post.13,800) 21/10

சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்! (Post No.13,804) 22/10

****

German Scholars

நள தமயந்தி, கீத கோவிந்தம் மொழிபெயர்த்த ஜெர்மன் கவிஞர் ரூக்கர்ட் (Post No.13,745) 4/10

சம்ஸ்க்ருத ராமாயணத்தை அகராதி துணையின்றி படித்த ஜெர்மானியர் (Post.13,756) 7/10

‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’ என்று சொன்ன ஜெர்மானியர்! ( Post .13,763)9/10

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன் (Post No.13,772) 12/10

ஜிப்ஸி மொழியை ஆராய்ந்த அகஸ்ட் பாட்(Post No.13,781) 15/10

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்! (Post No.13,815)25/10

உபநிஷத்துக்களை அச்சிட்ட எட்வர்ட் ரோயர் (Post No.13,803)22/10

ரிக்வேதத்தை ஆராய்ந்த பிரெடெரிக் ரோசன் (Post No.13,791) 18/10

வேதகாலத்தை வான சாஸ்திரம் மூலம் கண்டுபிடித்த ஹெர்மன் ஜாகோபி (Post.13,828) 29/10

****

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள் (Post No.13,814) 25/10

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள் (Post No.13,825) 28/10

கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல் — உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள் (Post.13,832) 30-10

—subham—

 tags- London Swaminathan’s, October 2024, Articles Index,  Index 143

Hinduism in Japan; Names of Hindu Deities (Post 13,862)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,862

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(I give below the important points, from the old paper cuttings I have collected)

Hindu Gods in Japan

Sea God- Varuna- Suiten

King of Gods- Indra- Taishakuten

God of Success- Ganesh- Shoten

God of Wealth- Kubera- Bishamon

Goddess of Learning- Sarswati-  Benten

Goddess of Fortune- Lakshmi- Kichijoten

Mahesh- Shiva- Daikoku

Divine architect- Visvakarman- Bishukatsuma

In the annals of Todaji Temple , it has been stated that the worship of Sarsvati and Lakshmi was first introduced in 722 CE and continued down the centuries.

Lakshmi in Japan

In Bessom Zakki (Desription of Gods) written in the 12th century, written in Siddham script,  a corrupt Sanskrit mantra reads as follows,

Sarasvatai svaha, namo Sarasvatyai mahadevyai svaha, namo bhagavata mahadevyai sarsvati sidhyatu mantrapadami svaha.

A description of Sarasvati occurs in the voluminous text Ashabasho by Shocho 1205-82 and the rituals connected with her worship have been recorded by Ryoson 1279 CE to 1349 CE in chapter CXLIX of his Byaku Hokku Sho (The White Jewel of Indian Tradition).

***

Buddhism in Japan : dates

Buddhism was officially introduced into Japan from Korea in 552 CE.

Buddhist scriptures were brought to the Japanese court by a representative of the Korean King Paikje.

Ancient Sanskrit manuscripts in old Brahmi script are preserved in Horyuji, the most ancient monastery in in Japan.

The patronage of Empress Suiko 592-628 CE to Buddhism , spread the study of Sanskrit Buddhist scriptures .

Dosho 700 CE went to China to study Buddhist scriptures.

Scriptures of Nagarjuna and Aryadeva were known to Japanese.

Panchatantra and Jataka fables were narrated with Japanese names. Classical literature of Japan shows both Hindu and Buddhist influence. First phase of Classical literature was 784 to 1100 CE and the last phase was 1241 to 1500 CE.

( the matter in Brahmi script must be researched)

— subham—

Tags – Hindu deities, Japanese names, Buddhism , Hinduism, in Japan

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும் (Post No.13,861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,861

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்

Use ghee after melting, and curds diluted

இரண்டு மருத்துவ, ஆரோக்கிய பழமொழிகளை ஆராய்வோம்.

மோர்  பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன் (கடைசியில் பழைய குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்)

சாப்பாட்டின் முடிவில் மோர் குடிக்க வேண்டும் ; தயிராகச் சாப்பிட்டால் ஜீரணம் ஆவது கடினம். அதை நீர்விட்டு மோர் ஆக்கி சாப்பிடுவது நலம்.

நெய்யை ஏன் உருக்க வேண்டும்? அப்போதுதான் நறுமணம் வெளிப்பட்டு; சாப்பாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் எதையும் சூடாகப் பரிமாறினால் கூடுதலாக சாப்பிடுவார்கள்; ஆறிப்போனால் அதற்கு மகிமை குறைவு. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று அலட்சியப்படுத்தும் பழமொழியே நமக்கு உருக்கிய, சூடான நெய்யின் பெருமையை உணர்த்தும்.

***

நெய்யில் கொழுப்புச் சத்து இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த கொழுப்புச் சத்து அதிகம் தீங்கிழைக்காத மானோசாச்சுரேட்டட் எண்ணெயும் ஒமேகா-3யும் நிறைந்த நல்ல சத்து ஆகும் 

மானோசாச்சுரேட்டட் எண்ணெய் என்பது தீமை செய்யாத கொழுப்புச் சத்து; ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதை நினைவிற்கொண்டு சாப்பிட வேண்டும்

மேலும் உருக்கிய நெய்யிலுள்ள ஒமேகா-3 என்பது உடலிலுள்ள முக்கிய உறுப்புகள் திறமையுடன் செயல்படத் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு நமது இருதயம் ஒரு லட்சம் முறை ரத்தத்ததை உடலுக்குள் பம்ப் செய்கிறது அதாவது பலூனில் தண்ணீர் நிரப்பி அதை அழுத்தினால் எப்படி தண்ணீர் வேகமாக வெளியே செல்லுமோ அது போல பீய்ச்சி அடிக்கிறது. மூளையோ மணிக்கு  260 மைல் வேகத்தில் செய்தியை அனுப்புகிறது. கண்களோ பத்து கோடி செல்களைக் கொண்டு ஒளியை ஊட்டி நமக்கு பார்வையை அளிக்கிறது இதற்கான ஒமேகா-3 வெளியிலிருந்தே கிடைக்கிறது ; அதாவது நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது

Omega-3 supports major organs in the body, helping them to function normally, such as the heart, brain and eyes. When these organs work optimally, the heart pumps over 100,000 times a day, the brain passes information around at over 260 mph and over 100 million cells in the eye work to convert light into signals which enable you to see. Omega-3 is ESSENTIAL because the body cannot produce it from scratch and can only get it through outside sources such as diet and supplements.

***

வயிற்றில் புண் அல்லது குடல் /இரைப்பை அழற்சி  நோய் உண்டானால் ஆயுர்வேத சிகிச்சைப்படி நெய்யினைத் தருகிறார்கள் அது ஜீரணத்துக்கான சுரப்பிகளை ஊக்குவித்து தேவையான என்சைம்களை சுரக்கவைக்கும்புண்களை ஆற்றும்

According to Ayurveda, when an individual is suffering from chronic ulcer or gastritis, ghee is used to promote healing within the intestinal tract. It lubricates the connective tissues and stimulates the digestive enzymes

***

நெய்யிலுள்ள மேலும்  ஒரு நல்ல பொருள்  ப்யூட்டிரிக் அமிலம் ஆகும். ஜீரண சக்தி இல்லாதவர்களுக்கு இந்த அமிலம் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது நெய்யில் இருப்பதால் ஜீரண சக்தி- செமிக்கும் சக்தி—அதிகரிக்கும்.

It is often observed that people suffering from digestive problems do not produce butyric acid. They also show low levels of fatty acid and other related oils. Since ghee is rich in butyric acid and other vitamins and oils, it proves to be an amazing product to heal the gut.

****

நெய்யில் பல வகைகள்  உண்டு  பசுக்கள் ஏ 1,  ஏ 2   என்ற இரண்டு வகை புரத்தச் சத்துக்களுடன் நமக்கு வெண்ணை, நெய்யினை அளிக்கின்றன.  சில உயர்ந்த ஜாதி பசுக்களின் நெய்யில் ஏ- 2 உள்ளது . புல்லை மட்டும் மேயும் பசுக்களின் நெய்யினை மட்டுமே உபயோகிக்க வேண்டும்  இது குடலுக்கும் வயிற்றுக்கும் வலிமை ஊட்டும்; மேலே குறிப்பிட்ட நல்ல சத்துக்கள் அனைத்தும் இந்த ஏ- 2 நெய்யில் இருக்கிறது

A1 ghee is derived from cows that produce both A1 and A2 protein. A2 ghee on the other hand is derived from cow breeds like Gir, Badri, and Sahiwal. While any ghee of high quality is beneficial for your gut health, it is advisable to select grass-fed A2 ghee. This particular product is power-packed with essential nutrients to improve your digestive well-being.

****

மோரின் மகிமை

1.லலித அந்தானி கீதானி ப்ரஸூத அந்தம் யெளவனம்

விசாகாந்தா மேக மாலா தக்ரந்தம் கலு போஜனம் 

பாடலின் முடிவு ராகத்தால் சிறக்கும்; பிள்ளை பெறுவதால் இளமை சிறக்கும்;

மேகங்கள் சூழ்வதால் வைகாசி மதம் சிறப்படையும் ;  விருந்தின் முடிவில் மோர் குடிப்பதால் சாப்பாடு சிறக்கும்.

****

ஒரு கவி மோரின் பெருமையைப்  புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .

2.அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா

பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்

பொருள்:-

மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது  அரிது.

தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது  அரிது.

தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது  அரிது.

இந்திரனுக்கு மோர் கிடைப்பது  அரிது.

உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.

****

3.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

****

அடுத்த பழமொழி

வறுத்த பருப்பை விடாதேசுட்ட எண்ணெயைத் தொடாதே

இதையும் விரிவாக ஆராய்வோம்.

TO BE CONTINUED……………………

—SUBHAM—

TAGS- மோர் நெய் ஒமேகா 3, கொழுப்புச் சத்து , தயிர் 

விஞ்ஞானமா, மெய்ஞானமா,எது சிறந்தது? (Post No.13,860)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.860

Date uploaded in London – –7 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

kalkionlie இதழில் 2024 செப்டம்பர் 29-ம் தேதி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

விஞ்ஞானமாமெய்ஞானமாஎது சிறந்தது?

ச. நாகராஜன் 

காலிங் பெல் அடித்தது. அதைக் கேட்ட வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்கிறார்.

வாசலில் விஞ்ஞானி தலைமையிலான ஒரு தகர்க்கும் படை வந்து நின்று கொண்டிருக்கிறது.

அயர்ந்து போன வீட்டுக்காரர், “என்ன விஷயம்?” என்று கேட்கிறார்.

படை: நாங்கள் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். ஏதோ தப்பாய் இருக்கிறது

.

வீட்டுக்காரர்: “இந்த வீட்டில் நான் பல வருடங்களாக வசித்து வருகிறேன். இது எனது சொந்த வீடு! இதில் எந்த விதத் தவறும் இல்லை. என்ன தப்பைக் கண்டீர்கள்?”

படை: எங்களுக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் வேலையை முடித்து விட்டால் என்ன என்று தெரிந்து விடும்.”

வீட்டுக்காரர்: வீட்டை இடித்த பிறகு ஒரு தவறும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டால் அதை மீண்டும் கட்டித் தருவீர்களா?”

படை: உண்மையாகச் சொல்லப் போனால் முடியாது. (ஒரு விஞ்ஞானி எப்போதுமே எளிமையாக, நேர்மையாகத் தான் பதில் சொல்வார்.) மீண்டும் எப்படிக் கட்டுவது என்பது எங்களுக்குத் தெரியாது.

வீட்டுக்காரர்: தப்பான ஒரு காரணத்திற்காக இப்படி இடித்து விட்டு, இடித்தது தப்பு என்று உணர்ந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?

படை: எங்களது கண்டுபிடிப்பு தற்காலிகமான ஒன்று தான். அது மாறக்கூடியது! என்றாலும் கூட எங்களது அருமையான இடித்தல் வழியைப் பாருங்கள். அனுபவியுங்கள். ஒவ்வொரு செங்கல்லாக இதை இடிப்பதைப் பாருங்கள். எங்களது இடித்தல் உத்தியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். முடிவில் அல்ல.”

இது தான் விஞ்ஞான ஆய்வுகளின் தன்மை. ஆய்வுகளில் அன்றன்று தோன்றிய அல்லது கிடைத்த முடிவுகளை அறிவித்து விட வேண்டியது.

500 பேரிடம் கேள்வி கேட்டு அதற்குக் கிடைத்த பதிலை வைத்து, “மனித குலம் முழுவதற்குமான உண்மைகளை” பெரிதாகத் தம்பட்டம் அடித்துச் சொல்லி விட வேண்டியது.

இன்னொரு ஆய்வில் 1000 பேரிடம் அதே கேள்வியைக் கேட்டு இதற்கு நேர் எதிர்மாறான முடிவு கிடைத்தால், அதை இன்னும் பெரிதாகத் தம்பட்டம் போட்டுப் பெருமையாகக் கூற வேண்டியது.

எத்தனை ஆய்வுகள்! எத்தனை முடிவுகள்! தலை கிறுகிறுக்கிறது!!

நியூட்டன் புவி ஈர்ப்பு விசை பற்றி, “ஆப்பிளிலிருந்து கிரகங்கள் நட்சத்திரங்கள் வரை அனைத்துப் பொருள்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது” என்று சொன்னார். ஆஹா! நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

ஆனால் புத கிரகம் பற்றிய விஷயத்தில் அவர் கூறியது தவறாக இருந்தது.

அதில் தவறைக் கண்ட ஐன்ஸ்டீன் தனது கொள்கையைச் சொன்ன போது, “ஆஹா! ஐன்ஸ்டீன் சரியாகச் சொல்லி விட்டார்” என்று புகழ்கிறார்கள். ஐன்ஸ்டீன் தத்துவத்தில் உள்ள தவறுகளைக் காண்பவர்கள் ப்ளாக் ஹோல் பற்றி ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள்.

இது தவிர, எந்த ஒரு நவீன கண்டுபிடிப்பிற்கும் அதன் விளைவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு போலீஸ் படை, அல்லது ஒரு தற்காப்புப் படை தேவையாக இருக்கிறது!

உதாரணங்கள்? ஏராளம்!

அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உலகமே நடுங்குகிறது. அடுத்தது விழுந்தால் என்ன செய்வது. கிறுக்கனான இன்னொரு ஹிட்லரோ அல்லது முஸோலினியோ அதைக் கையில் வைத்து எந்த நாட்டிலாவது போட்டால்…?

மொபைல் போன் வந்தாலும் வந்தது – சைபர் கிரைம் படைகள் ஆங்காங்கே முழு நேர வேலையில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

இண்டர்நெட் வந்தது – அது தீவிரவாதிகள் விரும்பி ஏற்கும் ரகசிய தகவல் பரிமாற்ற தளமாக உபயோகப்படுகிறது. இதைக் கண்காணிக்க இணையதள துப்பறியும் படை தயாராக இருக்கிறது!

மார்ஃபிங் வந்தது. குடும்பப் பெண்மணிகள் பயப்படுகிறார்கள். எங்கே தங்கள் தலையை நிர்வாண கவர்ச்சிப் பெண்ணின் உடம்பில் ஒட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவார்களோ என்று!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. வந்து விட்டது. 

ஆகப் பெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் சொன்னது போல மனித குல அழிவிற்கே வழி வகுக்கிறோமோ என்ற பயமும் வந்து விட்டது.

செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்கும் ரொபாட்டுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு தங்கள் எஜமானர்களான மனிதர்களை ‘ஒரு வழி செய்து விட்டு’ ரோபாட் ராஜ்யத்தை அமைத்து விட்டால்….

இப்படி ஒரு எழுத்தாளர்  அறிவியல் புனைகதை தானே எழுதி இருக்கிறார் என்று சமாதானப்படுத்த வேண்டாம்.

ஏனெனில் அப்படி ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்க்க மனிதர்கள் யாரும் இருக்கமாட்டோம்!

விஞ்ஞானத்தின் போக்கு இப்படி என்றால் மெய்ஞானத்தை எடுத்துக் கொள்வோம்.

அது கூறும் உண்மைகள் நித்தியமானவை, சத்தியமானவை. அவற்றை மேற்கொள்பவன் யாரையும் நிந்திக்கமாட்டான்; அழிக்க மாட்டான்.

மாறாக அன்பான உலகத்தை என்றும் இருக்கும் படி நிறுவி அன்பே தெய்வம் என்று தெய்வ மயமாக வழி கோலுவான். 

சரியாகத் தான் திருமூலர் சொன்னார்:

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது சொல்லுங்கள்!

***

World’s oldest writing system may have its origins in mysterious, undeciphered symbols

A carved cylinder seal (left), made in the ancient city of Uruk between 3500 and 3100 BC, is seen next to a sample of the motifs left behind by the seal when it’s rolled over clay.Sepia Times/Universal Images Group/Getty Images

Get inspired by a weekly roundup on living well, made simple. Sign up for CNN’s Life, But Better newsletter for information and tools designed to improve your well-being.

HISTORY FLASH; USE THIS TO DECIPHER HARAPPAN SCRIPT

POSTED BY London swaminathan on 6-11-2024 from CNNCNN — 

Researchers have uncovered links between the precursor to the world’s oldest writing system and the mysterious, intricate designs left behind by engraved cylindrical seals that were rolled across clay tablets about 6,000 years ago.

Scholars consider cuneiform the first writing system, and humans used its wedge-shaped characters to inscribe ancient languages such as Sumerian on clay tablets beginning around 3400 BC. The writing system is thought to have originated from Mesopotamia, the region where the world’s earliest known civilization developed that’s now modern-day Iraq.

Before cuneiform, however, there was an archaic script using abstract pictographic signs called proto-cuneiform. It first appeared around 3350 to 3000 BC in the city of Uruk, in modern southern Iraq.

But the origins of proto-cuneiform’s emergence have been murky, and many of its symbols remain undeciphered.

Researchers conducting a careful analysis of proto-cuneiform symbols were surprised to uncover similarities when they studied the engravings of cylinder seals invented in Uruk in 4400 BC and used to imprint motifs on soft clay. Not only do some of the symbols match exactly, but they also appear to convey the same meanings in relation to ancient transactions and trade.

Unknown.jpg

Related articleArchaeologists unearth tiny 3,500-year-old clay tablet following an earthquake

A study detailing the similarities was published Tuesday in the journal Antiquity.

“Our findings demonstrate that the designs engraved on cylinder seals are directly connected to the development of proto-cuneiform in southern Iraq,” said lead study author Silvia Ferrara, a professor in the department of classical philology and Italian studies at the University of Bologna. “They also show how the meaning originally associated with these designs was integrated into a writing system.”

The results of the analysis could change the way scholars understand how writing was invented, and what it suggests about the advancements of ancient civilizations that developed technologies such as accounting and writing thousands of years ago.

From accounting to writing

Uruk, now known as Warka, was one of the earliest cities to arise in Mesopotamia, and it served as a center of cultural influence that could be traced from what is now southwest Iran to southeast Turkey.

The ancient metropolis is where cylinder seals were invented and used for administrative purposes.

Seal-cutters engraved designs on the cylinders, which could then be rolled across wet clay to transfer the motifs. A preliterate society widely used the seals in an early accounting system that helped track the production, storage and movement of crops and textiles. The motifs on the seals acted as an early form of branding to identify commodities, according to the study authors.

In addition to the seals, the accounting systems, which developed during the fourth millennium BC, also physically documented the trade of goods using tags, numerical tablets, tokens and clay balls called bullae.

Researchers have long thought that proto-cuneiform developed from these early accounting methods, but there was no definitive link to show how the transition occurred. And unlike the cylinder seals, the hundreds of iconographic signs attributed to proto-cuneiform have only ever been found on tablets in southern Iraq.

“The close relationship between ancient sealing and the invention of writing in southwest Asia has long been (recognized), but the relationship between specific seal images and sign shapes has hardly been explored,” Ferrara said. “This was our starting question: Did seal imagery contribute significantly to the invention of signs in the first writing in the region?”

The team systematically compared motifs from the cylinder seals with proto-cuneiform pictographs to see whether any of them correlated in both shape and meaning. The researchers anticipated making marginal and indirect connections, but instead they identified seal images that appeared to directly transform into proto-cuneiform signs, suggesting that seals played a role in the developments that led to the birth of the first writing system, Ferrara said.

Motifs carved into cylindrical seals (left and center) were compared with abstract proto-cuneiform symbols.

Motifs carved into cylindrical seals (left and center) were compared with abstract proto-cuneiform symbols.Kathryn Kelley et al./University of Bologna

The images with the strongest connection related to the transport of jars and cloth, said study coauthor Kathryn Kelley, a research fellow in the department of classical philology and Italian studies at the University of Bologna. The symbols showed images of fringed textiles and vessels being carried in nets, many of which are moving toward building facades. The exchanges of these items occurred between or within different cities and likely involved various temples, so the seals and tablets helped document the transactions, according to the study authors.

“We focused on seal imagery that originated before the invention of writing, while continuing to develop into the proto-literate period,” said Kelley and study coauthor Mattia Cartolano, research fellow at the University of Bologna, in a joint statement. “This approach allowed us to identify a series of designs related to the transport of textiles and pottery, which later evolved into corresponding proto-cuneiform signs.”

Such similar depictions in seals and proto-cuneiform signs indicate a close relationship between the two, said Eckart Frahm, the John M. Musser Professor of Near Eastern Languages and Civilizations at Yale University. Frahm was not involved in the study.

“The article does this for the first time, establishing persuasively that a number of (proto-cuneiform) signs have iconographically close parallels in the image repertoire of the seals,” Frahm said. “Even more ambitiously, the authors seek to show, through a contextual analysis, that clusters of images on seals can be found in similar configurations on inscribed clay tablets.”

It’s apparent that ancient Mesopotamians used the seals alongside writing for thousands of years, so one form of documentation wasn’t just naturally replaced by the other.

The team is now eager to investigate what kinds of products were carried within the vessels in nets, and why the imagery endured over such a large geographic area for so many centuries — and why the exchanges were important enough to be documented on clay tablets.

These drawings reflect similar motifs related to fringed cloth found on tablets, seals and tokens.

These drawings reflect similar motifs related to fringed cloth found on tablets, seals and tokens.Kathryn Kelley et al./University of Bologna

Previously, researchers thought that plain tokens contributed to the system for numerals used in proto-cuneiform signs, while complex tokens bearing incisions and other markings were the basis for the nonnumerical signs, but that turned out not to be the case, said Dr. J. Cale Johnson, professor of the history of knowledge in the ancient world at Freie Universität Berlin. Johnson was not involved in the new study.

“This gap in the origin story — where do the nonnumerical proto-cuneiform signs come from — was left unresolved,” Johnson said. “Although people have often said that the images of the nonnumerical sign must be coming from seal (glyphs) or some other kind of representation, there has been very little work to concretely identify precursors. But this paper is an important step in identifying those concrete precursors.”

Deciphering unknown symbols

The more researchers uncover about ancient cities such as Uruk and the connections between the iconography ancient civilizations used, the more they may be able to decipher the hundreds of unknown proto-cuneiform pictographs, the study authors said.

“In view of the stylized and often abstract nature of many proto-cuneiform signs — a strong contrast with the much more picture-like Egyptian hieroglyphs — a full consensus on what these signs represent and where they originated will probably never be reached, but that does not mean one shouldn’t try to explore the issue,” Frahm said.

Correlating seal motifs (left) with proto-cuneiform pictographs could help researchers decipher hundreds of the symbols whose meaning is still unknown.

Correlating seal motifs (left) with proto-cuneiform pictographs could help researchers decipher hundreds of the symbols whose meaning is still unknown.Kathryn Kelley et al./University of Bologna

Writing seems like a necessary technology that would naturally develop over time, but it was only invented independently — without knowledge of the existence of writing — a few times in world history, Ferrara said.

“So, it has long been a question of interest what social and technological conditions encouraged the conceptual, cognitive leaps that resulted in written language,” Ferrara said. “While the jury is still out on how much language coding the earliest phase of cuneiform actually has, importantly, it led to ‘true’ writing within a few centuries, so the invention of proto-cuneiform is a watershed.”

Understanding that motifs from seals are directly related to the pictographs that would eventually lay the foundation for the first writing system shows how meaning was transferred from motifs to script, the study authors said.

“The conceptual leap from pre-writing symbolism to writing is a significant development in human cognitive technologies,” Ferrara said. “The invention of writing marks the transition between prehistory and history, and the findings of this study bridge this divide by illustrating how some late prehistoric images were incorporated into one of the earliest invented writingwriting systems.” systems.”

–subham—

To play the Lute before Buffalo: Chinese Story (Post No.13,859)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,859

Date uploaded in London – 6 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

To play a musical instrument before a buffalo and it is not listening to it  is a proverb found around the world.

From India to China, Japan and other Southeast Asian countries, the proverb is used. In Tamil we used to say blowing a conch in the ear of a deaf person. There is a Chinese story for this proverb.

The musician Gongming Yi was playing the lute, while a cow was nearby. He began to play an exquisite melody for the cow, but she took no notice of it. Then he played a melody imitating the buzzing of mosquitoes and the cry of a calf. The cow wagged its tail and pricked up its ears and began to listen attentively.

Teachers used these proverbs when the students were not listening to him, but listening to the teacher when he spoke about films.

In Thai language they say

Si so haikway fang.

In Bihari in India,

He plays the flute before the buffalo and it sits and ruminates.

“Bhensh ke aage bin bajana”

****

In Sindhi language it is,

Years have passed in playing music to the sheep without any profit to them.

هُو بهنس جي اڳيان بانسري وڄائي ٿو ۽ اُها ويهي رهي ٿي

hoo bahans je agiyan bansri wajai tho ein uha wehi rahi thi

****

In Japanese and Korean there is another equivalent proverb,

Uma no mimi ni nenbutsu (A Buddhist prayer to a horse)

In Korean

To read a Sutra into the ear of a cow.

The same idea is found in Persian,

To read the Sura of Koran into the ear of an ass.

****

In Tamil they say,

Like pouring rain on a buffalo (It is unconcerned; it wouldn’t even notice it.)

செவிடன் காதில்  சங்கு ஊதியது போல

Like blowing a conch in the ear of the deaf

எருமை மாட்டின்  மேல்   மழை  பெய்தது போல

As it rained on a buffalo

It is interesting to note that it is used throughout Asia.

–Subham—

Tags- To play the Lute before Buffalo,  Chinese Story, conch, deaf, blowing, Tamil, Japanese, Korean, Persian, proverbs

சீனக் கதை: செவிடன் காதில் சங்கு ஊதியது போல! (Post No.13,858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,858

Date uploaded in London – 6 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செவிடன் காதில்  சங்கு ஊதியது போல

Like blowing a conch in the ear of the deaf

எருமை மாட்டின்  மேல் மழை  பெய்தது போல

As it rained on a buffalo

இந்த இரண்டு பழமொழிகளின் மொத்தக்க கருத்து பயனற்ற செயல் ; எருமை மாடோ செவிடனோ செவி சாய்க்கமாட்டார்கள்.

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லுவதைக் கேட்காமல் கவனத்தை வேறு பக்கம் திருப் பிய     மாணவர்களைத் திட்டப்   பயன்படும் பழமொழிகள் இவை.

இதில் வியப்பு என்னவென்றால் ஆசியா முழுவதும் இந்தப் பழ மொழி உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் இல்லை.

சீனாவில் மாட்டுக்கு யாழ் வாசித்தது போல என்பார்கள்

இந்தியாவில் யாழ் மறைந்து வீணை வந்து விட்டது ஆனால் ஐரோப்பாவிலும் வேறு பல நாடுகளிலும் யாழ் போன்ற இசைக்கருவிகள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.

இந்தப் பழமொழி பற்றிய சீனக் கதை பின்வருமாறு :-

பெரிய இசை மேதையான காங்மிங் யீ,  யாழ் வாசிக்கும் போது ஒரு பசு மாடு பக்கத்தில் நின்றது;  உடனே பசு மாட்டுக்காக ஒரு விசேஷ ராகத்தை வாசித்தார் ; அது சங்கீதத்தை ரசிக்கவே இல்லை. பிறகு கொசுக்களின் ரீங்காரத்தையும் கன்றுகள் கொஞ்சும் அம்மா, அம்மா என்பதையும் வாசித்தார் ; இதைக் கேட்ட பசு வாலை ஆட்டியது: காதுகளை சொறிந்துகொண்டது .

யாருக்கு எது பிடிக்குமோ, எது புரியுமோ அதைத்தான் சொல்லவேண்டும் அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல பயனற்ற செயலாகவே இருக்கும்.

தாய் , கொரியன், சீன, ஜப்பானிய வியட்நாமிய. பாரசீக மொழிகளிலும் இந்தியாவில் பிஹாரி, சிந்தி மொழிகளிலும் இதற்கு இணையான பழமொழிகள் இருக்கின்றன.

பீஹார் மாநிலத்தில் அவன் எருமைக்கு வாசிக்கிறான்; அது பேசாமல் மேய்ந்து கொண்டு இருக்கிறது என்பார்கள்

சிந்தி மொழியில்

ஆட்டுக்கு பல ஆண்டுகளாக பாடினான்; ஒரு பயனும் இல்  என்பார்கள் .

குதிரை காதில் புத்த மத பிரார்த்தனை சொன்னது போல என்பார்கள் ஜப்பானியர்கள்.

கழுதை காதில் குரான் ஓதியது போல என்பது பாரசீக மொழியில் உள்ள பழமொழி; இப்பொழுது இரான் நாட்டில் பாராசீக மொழி வழங்குகிறது .

கொரியாவில் பசுவின் காதில் புத்தமத சூத்திரம் சொன்னது போல என்பார்கள்.

இப்படி உலகம் முழுதும் எருமை அல்லது பசு அல்லது குதிரை அல்லது கழுதையைப் பயன்படுத்துவதால் ஒரு பொதுக் கருத்தும் நிலவுகிறது; அதாவது சொன்னதைக் கேட்காதவன் அல்லது புரிந்து கொள்ளாதவன் விலங்குக்குச் சமம் !

–subham—

Tags- செவிடன் காதில், சீனக் கதை, எருமை,பசு, குதிரை, கழுதை,  பழமொழிகள், மாட்டுக்கு யாழ் வாசித்தது

பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்! (Post No.13,857)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.857

Date uploaded in London – –6 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்!

ச. நாகராஜன்

கல்கி ஆன்லைன் குழுமத்தில் கல்கி, மங்கையர் மலர்,தீபம், கோகுலம் ஆகிய நான்கு இதழிகள் பிரசுரிக்கப்படுகின்றன. 

இதில் கல்கி இதழில் 16, செப்டம்பர் 2024 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!

நாத்திகர் மைக்கேல் ஷெர்மர்:

உலகின் பிரபல நாத்திகர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பவர் மைக்கேல் ஷெர்மர் என்பவர். பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகுத்தறிவுப் பகுதியை 2001-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாதந்தோறும் இவர் எழுதி வந்தார். இவரது 214 கட்டுரைகள் பகுத்தறிவுவாதிகளிடையே பேசப்படும் கட்டுரைகளாக ஆயின. அறிவியல் ரீதியல்லாத எதையும் நம்பாதே என்பதே இவரது கோஷம்.

இவரது கழகத்தில் சுமார் 55,000 உறுப்பினர்கள் உண்டு.

ஆனால், இவரையே அயர வைத்து இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவர் வாழ்வில் நிகழ்ந்தது.

மிகவும் நாணயமானவர், நேர்மையானவர் என்பதால் இந்தச் சம்பவத்தை அவரே தனது பகுத்தறிவு பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் மிகவும் சுவையான ஒரு விஷயம்!

காதல் திருமணம்:

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபின் மீது காதல் கொண்டார் மைக்கேல் ஷெர்மர். அவரை மணமுடிக்கத் தீர்மானித்தார்.

2014-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியன்று அவரது திருமணம் நடந்தது.

ஜென்னிபருக்கு அவரது தாத்தா வால்டர் என்றால் உயிர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது பதினாறாம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பின் அவரது டிரான்ஸிஸ்டரை அவர் எடுத்துப் பாதுகாத்து வந்தார் ஜென்னிபர். 1978-ம் ஆண்டைச் சேர்ந்த அந்த பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் சிறிது காலம் கழித்து அது இயங்கவில்லை.

மைக்கேல் என்னன்னவோ செய்து பார்த்தார். பாட்டரியை மாற்றினார். இணைப்புகளைச் சரி பார்த்தார். அது பாடவில்லை.

இயங்காத டிரான்ஸிஸ்டர் ஒலித்த கீதம்:

கல்யாண நாளன்று தனது வீட்டிற்குத் திரும்பி வந்தவர் ஒரு பாடல் ஒலிப்பதைக் கேட்டு வியந்தார். அந்தப் பாடல் எங்கிருந்து ஒலிக்கிறது என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.

படுக்கை அறையில் டிராயர் ஒன்றில் இருந்த தாத்தாவின் பழைய டிரான்ஸிஸ்டரிலிருந்து தான் ஒரு காதல் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஜென்னிபரும் மைக்கேலும் அயர்ந்து போயினர். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

மண நாள் முழுதும் இசைப்பாடல்களை நன்கு ஒலித்த அந்த டிரான்ஸிஸ்டர் மறுநாளிலிருந்து பாடவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

ஷெர்மரின் ஒப்புதல்:

2014 செப்டம்பர் மாத ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் அவர் நடந்ததை எழுதினார்:

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும்! என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை!!”

ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை இவ்வாறு அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

இறந்தவர்களை ஆடியோ சாதனங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள தாமஸ் ஆல்வா எடிஸன் முயன்றது குறிப்பிடத் தகுந்தது.

“சாதாரண ஒரு நிகழ்ச்சி தான் என்றாலும் கூட உணர்வுபூர்வமாக இதை எடுத்துப் பார்க்கும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆகிறது. அறிவியல் பூர்வமாக திறந்த மனதுடன் பகுத்தறிவுடன் இதை ஆராயும் போது இந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் இருக்கும் போது நமது பார்வையின் கதவுகளை மூடி விடாமல் இருந்தால் அது மர்மமான அற்புதங்களை நமக்குத் திறந்து காட்டும்” என்கிறார் மைக்கேல் ஷெர்மர்.

விளக்க முடியாத அற்புதங்கள் என்றும் நிகழும்!

**