ராமாயணத்தில் சாபங்கள் (30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது! (Post.13,354)


Picture of Ravana 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.354

Date uploaded in London – 19 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (30)

ராமாயணத்தில் சாபங்கள் (30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது!

ச.நாகராஜன்

இது வரை பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று காண்டங்களில் வால்மீகி முனிவர் விவரித்த 29 சாபங்களைப் பற்றிப் பார்த்தோம்.

அடுத்து கிஷ்கிந்தா காண்டத்தில் உள்ள நான்கு சாபங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சீதையைத் தேடி வந்த ராம லக்ஷ்மணரை ஹனுமான் பிராமண வேடம் தரித்து சந்திக்கிறார். சுக்ரீவனைப் பற்றிச் சொல்கிறார்.

ராமர் ஹனுமனின் சொல்லின் ஆற்றலைக் கண்டு வியக்கிறார்.

“மதுரை: வாக்யை: வாக்யஞம்” – இனிய சொல் கொண்டு பேசுவதில் சமர்த்தர் என்று ஹனுமனை ராமர் புகழ்கிறார்.

கம்பன் ‘சொல்லின் செல்வன்’ ஹனுமான் என்று புகழ்வதை இங்கு நினைவு கூரலாம்.

ஹனுமான் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று ராமரைக் கேட்க லக்ஷ்மணர் விடை அளிக்கிறார்.

“தசரத சக்ரவர்த்தியின் புதல்வரான ராமர் இவர். நான் இவரது தம்பி லக்ஷ்மணன். தனியாக இருந்த சமயத்தில் இவரது தர்ம பத்தினியை நினைத்த உருவம் எடுக்க வல்ல அரக்கன் ஒருவன் அபஹரித்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை” என்று கூறிய லக்ஷ்மணன் மேலும் இவ்வாறு கூறுகிறான்

தனுர்நாம திதே: புத்ர: சாபாத் ராக்ஷசதாம் கத: |

ஆக்யாத்ஜஸ்தேன சுக்ரீவ: சமர்தோ வானராதிப: ||

திதே: – திதியின்

புத்ர: – புத்திரனாகிய

தனு: – தனு (கபந்தன்)

நாம- என்ற பெயரைக் கொண்டவன்

சாபாத் – சாபத்தினால்

ராக்ஷசதாம் – குரூரத்தன்மையை

கத: – அடைந்திருந்தான்

தேன – அவனால்

வானராதிப: – வானரத்தலைவரான

சுக்ரீவ: – சுக்ரீவன்

சமர்த: – காரியசித்திக்கும் வேண்டிய குணங்கள் நிறைந்தவராய்

ஆக்யாத: – பின் வருமாறு தெரிவிக்கப்பட்டார்.

ச ஞாஸ்யதி மஹாவீர்யஸ்தவ பார்யாபஹாரிணம் |

ஏவமுக்த்வா தனு: ஸ்வர்க ப்ராஜமானோ கத: சுகம் ||

மஹாவீர்ய: – மகா வீர்யவானான

ச: – அவர்

தவ – உமது

பார்யாபஹாரிணம் – மனைவியைத் திருடியவனை

ஞாஸ்யதி – அறிவார்

தனு: – தனு (கபந்தன்)

ஏவம் – மேற்கண்டவாறு

உக்த்வா – சொல்லி விட்டு

ப்ராஜமான: – தேஜோமயனாய் விளங்கிக்கொண்டு

சுகம் – சுகமாய்

ஸ்வர்கம் – ஸ்வர்க்கத்தை

கத: – அடைந்தான்

-கிஷ்கிந்தா காண்டம் நான்காம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 15 & 16

இப்படிக் கூறிய லக்ஷ்மணன், “எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி சொல்லி விட்டேன். ஶ்ரீ ராமரும் நானும் சுக்ரீவரின் உதவி நாடி வந்துள்ளோம்” என்கிறான்.

கபந்தன் யாரிடம் சாபம் பெற்றான் ஏன் பெற்றான் என்பது இங்கு  கூறப்படவில்லை.

சாபம் பற்றிய விவரத்தை ஆரண்ய காண்டம் 71-ம் ஸர்க்கம் விவரிப்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

கிஷ்கிந்தா காண்டத்தில் சாபத்தைப் பற்றி வரும் முதல் விஷயம் இது.

**

Why do Tamil Poets praise Tirukkural a ‘Tamil Veda’?- Part 2 (Post No.13,353)

London Swaminathan at SOAS in 1993

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,353

Date uploaded in London – 18 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindu Gods sung by Valluvar

Tolkaappiyam, the oldest Tamil book, says Indra, Varuna, Vishnu and Durga are Tamils’ Gods. Tolkaaappiyam used Aram Porul Inbam (Dharma Artha Kama ) together in at least two places. Sangam literature also did this; Following them, Valluvar used it in his book.

Hindu Gods in Tirukkural:

Indra –Kural No.25

Brahma – Kural No.1062, 377

Yama – Kural No.269, 332, 765, 1083, 1085

Vishnu/Krishna/ Vamana/Trivikrama  – 1103, 610

Krishna -1258, 1228??

Lakshmi – 179, 519, 617, 920

Lakshmi’s eldest sister- 617, 936

Shiva – 580

Dharma Artha, Kama (kaama)- 501, 754, 760

Dhaanam, Tavam- 19, 295

Bhagavad Gita echo- 1, 620, 617, 509

Pancha Tantra Stories- 481, 500, 633, 495,

273, 274, 277

Karma and Rebirth- lot of Kurals

Brahmins- Lot of Kurals

Sanskrit words – over 600 Kurals including the Very First Kural and Very Last Kural

Non Killing/ Vegetarianism – 251 to 260; 321 to 330; total- 20 couplets

Violence – 550, 264, 1077, 1078, 1224

Valluvar was against Jainism and Buddhism- Valluvar praises Grihasthaashramam/Family life. He used Manu’s couplet and says Having a wife is better because he can help his family, Ascetics and Pitrs/departed souls; Buddhists and Jains don’t praise Grihasthaashramam.

Valluvar supports death sentence and violence against misers openly; Though we know through history books, both Jains and Buddhists involved in violence, their scriptures don’t support death sentence openly. Valluvar speaks about death sentence even in Love/Sex couplet.(I have been doing research in Tirukkural for over 50 years.)

I will briefly explain the couplets (Kurals) mentioned above, in the next article.

xxxx

Tiru Valluvar with sacred thread

Who said that Tirukkural is  ‘Tamil Veda’?-

Tiruvalluva Malai(maalai) is an appendix to Tirukkural (TK); there are 55 poems praising TK. Dravidians are scared to see these poems and so deleted from all latest TK books. The  reason is  that this section praises the Four Hindu Vedas ad compares TK  with them. It is considered later addition to TK; but yet the names of Sangam Age poets are there. Probably they are related to Sangam age poets. But we are more interested in   their sayings.

xxx

Goddess of Learning Saraswathi and Tamil poets

Ugra Peruvazuthi, Nakkirar, Mamulanaar (maamuulanaar), Kothamanar, Nallanthuvanaar, Thodiththalai Vizuththantinaar, Velliveethiyaar, Maangudi Maruthanaar, Kaarikkannanaar, Perunchiththiranaar, Nari Veruuvuth thalaiyaar,Kovur Kizaar,  Seyalur Kodunchengkannanaar, Vannakkan Saaththanaar, Kodinjaalan Maani puutanar etc praised TK as Veda in Tamil or  TK advocates Dharma Artha Kaama Moksha- four values of the Hindus.

Tamil poet Kavuniyanaar says,

The kural’s sweet to mouth and ear and the mind

‘T is balm for two fold deeds that birth rebind

‘T was sung by Valluvar the poet wise and true

That we might know the righteous path of old anew

Of these 55 Tamil poets

Kothamanaar (Gauthama) says something interesting

“Brahmins don’t WRITE Vedas thinking that it would lose its power because unfit people may read it. But Tirukkural in WRITING can be read by fit and unfit people and yet it wouldn’t lose its strength.”

(Gauthama is a Brahmin belonging to Gauthama Rishi Gotra/clan)

xxx

Another poet by name Vannakkan Chaaththanaar says

When one scrutinises Sanskrit and Tamil to find out which is better, one finds it difficult to conclude; Now we have Vedas in Sanskrit and Tiruvalluvan’s Kural in Tamil (so no more debate; both are great books)

Because of these comparisons and praise of Four Hindu -Values Dharma Artha Kama Moksha, Dravidians stopped publishing the appendix Tiru Valluva Malai. But all the 60 to 100 year old books have this section. But Dravidians could not do anything about the book’s real name DHARMA ARTHA KAMA (Muppaal in Tamil).

Popley in his translation continuously refer to Valluvars indebtedness to Manu Smriti and Artha Saastra.

To be continued…………………………….

Tags- Tirukkural, Hindu Gods, Violence, Avatars, Gita Echo, Pancha Tantra stories.

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 7 (Post.13,352)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,352

Date uploaded in London – 18 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART 7  TAMIL

விஷ்ணுஹு — நாம எண் 2

எங்கும் வியாபித்தவர்

அந்தர்பஹிஸ்ச  தத் ஸர்வம் வ்யாப்ய  நாராயண ஸ்திதம்-நாராயண சூக்தம்

விஷ்ணு புராணம் 3-1-4-5 செல்கிறது,

யஸ்மாத் விஷ்டமித்தம் ஸர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மனஹ

த ஸ்மாத் விஷ்ணுரிதி க்யாதோ விசேர் -தாதோ ப்ரவேஸனாத்

பொருள்

பரம்பொருளின் சக்தியானது பிரபஞ்சத்தில் புகுந்துவிட்டது  விஸ் என்ற வேர்ச்சொல்லுக்கு நுழை, புகு என்று  பொருள்.

பகவத் கீதையும் 13-13 ஸர்வதஹ பாணி பாதம் தத் என்று வருணிக்கிறது

ரிக் வேத மந்திரமும் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடுகிறது: துதி பாடுவோரே ! சாசுவதமான, சத்தியமான

பரம்பொருள் பற்றி அறிந்து மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு முடிவு கட்டுங்கள் ; விஷ்ணுவின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

XXXX

வைகுண்டஹ – நாம எண் 405-

சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்சபூதங்களை சிதறிப்போகாமல் ஓன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர்..

மஹாபாராத சாந்தி பர்வத்தில் 362-15 சொல்வதாவது,

மயா  ஸம் ஸ்லேஷி தா பூமி-ரத்பிர்  வ்யோம ச வாயுனா

வாய்ஸ் ச தேஜஸா சார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம. 

பொருள்

நான் பூமியை நீருடன் சேர்த்து வைத்தேன் ஆகாயத்தைக் காற்றுடனும் , காற்றைத் தீயுடனுன் சேர்த்துவைத்தேன். அதனால் வைகுண்ட அந்தஸ்து பெற்றேன்  .

எல்லையற்றவர் எதிர்ப்பற்றவர. என்ற பொருளுமுண்டு.

பக்தர்கள் தம்மை அடைவதற்கு இடையூறு களையெல்லாம் விலக்கி  அவர்களை எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுகிறவர்.

XXXX 

இஜ்யஹ — நாம எண் 446-

யாகங்களினால் ஆராதிக்கப்படுபவர்.

ஹரிவம்சம் 3-40-27 சொல்வதாவது –

ஆத்மான-மாத்மனா நித்யம் விஷ்ணுமேவ யஜந்தி தே  

பொருள்

தெய்வங்களையும் பித்ருக்களையும் யாக யக்ஞங்கள் மூலம் போற் றுவோர் விஷ்ணுவையே வழிபடுகின்றனர். அவனே ஆத்மாவில் உறைபவன்.

பகவத் கீதையிலும் 9-24 இது உள்ளது

xxxx

ஸுவ்ரதஹ நாம எண் –455

நாடியவர்களை ரக்ஷிக்கும் சிறந்த விரதமுடையவர்.

வால்மீகி ராமாயணத்தில் 6-18-33 வரும் ஸ்லோகம் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது-

ஸக்ருத் ஏவ ப்ரபன்னாய தவ அஸ்மி கே யாசதே

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம்  மம

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

பொருள்

எவன் ஒருவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று ஒரே ஒரு முறை சொல்லி சரண் அடைந்தாலும் அவனுக்கு நான் எந்த ஆபத்திலிருந்தும் அபயம் /பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய மாற்றமுடியாத உறுதி மொழி.

ராம பிரான் கூறும் இந்த உறுதி மொழி விபீஷண சரணாகதியின் முக்கிய பாடலாக விளங்குகிறது .

இன்னும் ஒரு விளக்கம்-

தனக்கு ஒரு கருமமும்  வேண்டமாயினும் தம்மைப்பார்த்து பிறர் தர்மத்தைக் கடைப்பிடித்து பலன் அடைவதற்காக தருமத்தை விடாமல் பின்பற்றுபவர் .

XXXX

த்ரிவிக்ரமஹ – நாம் எண் 530-

மூன்று அடிகளால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்..

வேதம் சொல்கிறது-

த்ரீணி பாதா விசக்ரமே – அவரது பாதங்களால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்…

(ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி – ஆண்டாள் திருப்பாவை )

ஹரிவம்சம் சொல்வதாவது-3-88-51

த்ரிரித்யேவத்ரயோ லோகாஹா கீர்த்திகா முனி சத்தமை ஹி

க்ரமதே தாம்ஸ்ரிதா ஸர்வாம்ஸ் த்ரிவிக்ரமோஸி ஜனார்தன

பொருள்

மூன்று என்ற சப்தத்தால் ரிஷிகள் மூன்று உலகங்களை குறிப்பிடுகின்றனர்.இறைவன் அவைகளை  மும்முறை க டந்தான் ; ஆகையால் அவனை த்ரி விக்ரம என்கிறார்கள்

XXXX

சக்ர- கதாதரஹ –நாம  எண் 546-

எவர் ஒருவர் கைகளில் சக்கரத்தையும், கதையையும் வைத்திருக்கிறாரோ அவர்.

மனஸ் தத்துவமாகிய சக்கரத்தையும்,புத்தி தத்துவமாகிய கதையையும் உலகங்களை ரக்ஷிப்பதற்காக தரித்துக் கொண்டிருப்பவர் என்று ஒரு ஸ்லோகம் சொல்கிறது-

மனஸ் தத்வாத்மகம் சக்ரம் புத்தி தத்வாத்மிகாம் கதாம்

தாரயன் லோக ரக்ஷார்த்த- முக்தஸ் சக்ர- கதாதரஹ

XXXX

நக்ஷத்ர நேமிஹி — நாம எண் 440-

நக்ஷத்ர  மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.

இதை விளக்கும் ஸ்லோகம் பின்வருமாறு-

நக்ஷத்ர தாரகைஹி சார்தாம் சந்த்ர சூர்யாதயோ க்ரஹாஹா

வாயுபாஸ- மயை ர் பந்தைர் நிபத்தா  த்ருவ சம்ஞிதே

பொருள் :

வானில் உலவும் சந்திரன், சூரியன் , விண்மீன்கள், ,கிரஹங்கள் முதலியன காற்று என்னும் பிணைப்புகளால் துருவத்துடன் / சிசுமார சக்ரத்துடன் கட் ப்பட்டுள்ளன. .அதை  இயக்குபவர் இறைவனே.

வேதங்களோ சிசுமார சக்ரத்தை விஷ்ணுவின் இருதயம் என்று துதி பாடுகிறது.

–SUBHAM—

 tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்- 

கடல் மலைகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்னரே அறிவித்தனர் இந்துக்கள்!-Part 2 (Post.13,351)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,351

Date uploaded in London – 18 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நேற்றையகட்டுரையில் உலகம் புகழும் பஞ்சாபிய பெண்மணி டாக்டர் ஜோதிகா விர்மானி கடலுக்கு அடியில் 4 புதிய மலைகலைக் கண்டுபிடித்ததையும் இந்துக்கள் இந்த மலைகள், கடல் தீ பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதையும் கண்டோம். இதோ மேலும் சில சான்றுகள்:

கடலுக்கு அடியில் மலைகள் இருப்பதை நேஷனல் ஜியாக்ரபிக் மாகசின் National Geographic Magazine போன்ற பத்திரிகைகள் கடந்த 50 ஆண்டுகாலமாகத் தான்  வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மத புராணங்கள் கடலடி மலைகள் பற்றிச்  சொல்லி வருகின்றன.

ராமாயணத்தில் இலங்கை நோக்கிச் சென்ற அனுமனை  மைனாக பர்வதம் தடுத்ததை நாம் அறிவோம். ஒரு காலத்தில் மலைகள் பறந்து கொண்டிருந்ததாகவும் அவைகளின் இறக்கைகளை இந்திரன் வெட்டியபோது பல மலைத்துண்டுகள் கடலில் விழுந்ததாகபும் அகில் ஒன்றுதான் மைநாக பர்வதம் என்றும் சொல்லுவார். அதாவது இது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த புவியியல் நிகழ்ச்சி (Geological Events)! .

பெரிய விண் கல் (Asteroid or Meteor) விழுந்து பூமியின் வெட்பதட்பத்தை மாற்றியதால் டைனோஸரஸ் என்ற ராட்சத மிருகங்கள் அழிந்ததை அறிவோம். அது போல விண் கற்கள் பறந்து வந்ததை இந்திரன் வெட்டியதாக பாமர மக்களுக்கு கதை சொல்ன்னார்கள் . கிரகணம் பற்றித் துல்லியமாக கணக்குப்போட்டு பஞ்சாங்கத்தில் எழுதினாலும் பாமர மக்களுக்கு கதை போல சொல்வதற்காக ராகு–கேது பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் கவ்வுவதே கிரகணம் என்று சொன்னது போல மலைகள் பறந்ததை இந்திரன் வெட்டியயதாகச் சொன்னார்கள்

அது மட்டுமல்ல பூமியைச் சுற்றி எல்லா இடங்களிலும் கடலில் மலை இருப்பதையும் சொல்லி அதற்குச் சக்கரவாளம் என்று பெயரும் சூட்டினர்.  வால்மீகி ராமாயணம் , புராணங்கள், தமிழில் பழமொழி நானூறு நூல்களில் கடலுக்கு அடியிலுள்ள மலைகள் பற்றிப் பாடியுள்ளனர்.

 கம்பனும் பாடியுள்ளளான் .

இந்துக்களின் மகத்தான புவியியல் அறிவுக்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகள் .

கம்பன் சொல்லும் உவமை:

தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து

ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்

நேமி மால் வரைநெருக்குகின்றதே

ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்

-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

  சீதையைத் தேடி வருகின்ற இராமலக்குவரை எதிர்த்து
ஒழிப்பதற்காக அரக்கர்களின் சேனை வந்துவிட்டதாக இராமலக்குவர்
கருதினர். எதிரியைத் தாம் சென்று அடையுமுன் அவனே தன்
படைகளை அனுப்பியிருப்பதாக நினைத்து வீரர் இருவரும்
மகிழ்ந்தனர்.

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-

கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்று நீராழி வரையகத் தீண்டிய

கற்றேயும்தேயாது சொல்

-பழமொழி

பொருள்:-  பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.

NEW CORAL SPECIES DISCOVERED

சக்ரவாள மலைத்தொடர் பற்றிய ஒரு குறிப்பு

சம்ஸ்க்ருதத்தில் சக்ரவாளம் வரும் இடங்களில் எல்லாம் பூமியைச் சுற்றியுள்ள மலைக்  தொடர் என்றும் ஒளியை பிரகாசமான பகுதி ,இருளான பகுதி என்று பிரிக்கும் மலை இது என்றும் சொல்லி நிறுத்தி விடுகின்றனர். நமக்குத் தெரிந்தவரை பூமியினை  வளைக்கும் மலை எதுவும் இல்லை.அக்கா னால் கடலுக்கு அடியில் மலைகளும், மேடுகளும் முகடுகளும்  ஒரு லட்சம் என்ற அளவில் இருக்கின்றன. கட லுக்கு அடியில்  சிறிது தூரம் சென்றால் இருள் சூழ்ந்து விடும். சூரிய ஒளி புகாது. மேலும் அங்கு உலகம் நெடுகிலும் கடலடி மலைகள்  உள்ளன. மேலும் இந்திரன் வெட்டிய பறக்கும் மலைகளுக்கு கடல் அடைக்கலம் கொடுத்தது என்ற புராணக் கதையுடன் இணைத்துப் பார்க்கையில் கடலடி மலைகளேச க்கரவாளம் என்பது எனது துணிபு.

xxxxx

My old Article

பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம் (Post No.10,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,547

Date uploaded in London – –    10 JANUARY   2022        

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 8

NEW FISH DISCOVERED

அதர்வண வேதம் (அ .வே.) சொல்லும் அற்புத அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து காண்போம் .

சென்ற கட்டுரையில் ‘முனிவர்களா விஞ்ஞானிகளா ?’ என்ற தலைப்பில் பூமியின் வேகம் பற்றி கண்டோம். இன்று பிரபஞ்சம் முழுதும் உள்ள தீ (fire) பற்றி முனிவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை ஆராய்வோம்.

பூமிக்கு நடுவில் சுமார் 4000 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

சுனாமி TSUNAMI என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்குகிறது. அதாவது கடல் நீரில் தீ மிதந்து வருகிறது.

ஹவாய் (SUBMARINE VOLCANOES IN HAWAI island) முதலிய இடங்களில் கடலுக்கு அடியில் எரிமலைகள் தீயைக் கக்கிய வண்ணம் உள்ளன.

கடலில் தோன்றும் வட முகாக்கினி (Horse shaped Vadamukhagni) , ஆந்திரப் புயலின்போது பிரம்மாண்டமான கடல் அலையில் தோன்றிய தீ (Fire  on top of Giant Waves in 1977 storm), மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சக்ரவாள மலைகள்  (submarine mountains around the world called Chakravala in Sanskrit) பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே கட்டுரைகளை எழுதியுள்ளேன். புராணம் சொல்லும் விஷயங்களை எப்படித் தமிழர்களும் பாடல்களில் யாத்தனர் என்பதையும் இயம்பினேன்.

தீ கக்கும் எரிமலையே இல்லாத இந்தியாவில் வாழ்ந்த அ .வே. புலவன் பாடிய 19, 20 (HYMN TO EARTH- BHUMI SUKTAM) மந்திரங்களை படியுங்கள்.

மந்திரம் 19 (AV Book 12; Bhumi Suktam; Hymn to Earth)

அக்னிர் பூம்யா மோஷதீஷ்வக்னிமாபோ பிப்ரத்யக்னி ரஸ்மஸு

அக்னிரந்த புருஷேஷு  கோ ஷ்வஸ்வே ஷ்வக்னயஹ —19

பொருள்

பூமிக்குள்தீ இருக்கிறது

தாவரங்களிலும் உளது ,

நீரும் அதை ஏந்திச் செல்கிறது;

கல்லில் தீ உளது .

மனிதர்களின் உடலின் உள்ளே அக்னி உண்டு.

மாடுகளில் தீ, குதிரைகளிலும் தீ இருக்கிறது – 19

XXXXXX

SUB MARINE MOUNTAINS- SURMOUNT

மந்திரம் 20

அக்னிர் திவ ஆ தபத்யக்னேர் தேவஸ் யோர்வ  அந்தரிக்ஷம்

அக்னிம் மதார்ஸ இந்ததே ஹவ்யவாஹம் தூதப்ரியம்  -20

பொருள்

அதே தீதான்  வானத்தில் எரிகிறது

இடைவெளியும் இந்த தெய்வீக அக்னியுடையதே .

மனிதர்கள் அவி கொடுப்பதற்காக தீ வளர்க்கிறார்கள்

உருகிய நெய் விரும்பும் அவி சுமக்கும் தூதன் அவன் (20)

—–subham—-

Tags–சக்கரவாளம் ,கடலுக்கு அடியில் மலைகள், புதிய கண்டுபிடிப்பு,  ஜோதிகா விர்மானி, அதர்வண வேதம்,SURMOUNT

ராமாயணத்தில் சாபங்கள் (29) கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது! (Post No.13,350)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.350

Date uploaded in London – 18 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (29) 

ராமாயணத்தில் சாபங்கள் (29) கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது! 

ச.நாகராஜன் 

கபந்தன் தன் வரலாற்றை விரிவாகக் கூறி தான் ஏன் சாபம் பெற்றேன் என்பதையும் கூறுகிறான்.

அவன் கூறுவது:

“நான் உக்கிரமான தவத்தினால் பிரம்மதேவரை மனம் குளிரச் செய்தேன். அவர் எனக்கு நீண்ட ஆயுளை அனுக்ரஹித்தார். அப்போது முதல் என மனதிற்குத் தோன்றியதைச் செய்ய ஆரம்பித்தேன். இந்திரன் என்னை என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தினால் அவனைப் போரில் எதிர்த்தேன்.  அவனால் விடப்பட்ட வஜ்ராயுதத்தால் என் தலை உடம்பினுள் புதைக்கப்பட்டது. இரு துடைகளும் அப்படியே புதைக்கப்பட்டன. எமலோகத்திற்கு என்னை அனுப்பாமல் “பிரம்மதேவரின் ஆக்ஞை உண்மையாகவே ஆகக் கடவது” என்று என்னிடம் இந்திரன் சொல்லி விட்டார்.

“இப்படியே இருந்தால் எனக்கு நீண்ட காலம் ஜீவிக்க ஆகாரம் எப்படிக் கிடைக்கும்” என்று கேட்டேன்.  அவர் எனக்கு எட்டு மைல் நீளமுள்ள இரு கைகளையும் கூரிய பற்களை உடைய வாயையும் எனது வயிற்றில் அமைத்தார்.

அன்றிலிருந்து வனத்தில் வாழும் சிங்கங்கள், யானைகள், புலிகளை இரு கரங்களால் இழுத்து புசித்து வருகிறேன்.

கபந்தன் தன் சாப விமோசனம் பற்றிக் கூறியது:

அனாஹார: கதம் சக்தோ பக்னசக்திஷிரோமுக: |

வஜ்ரேனாபிஹத: காலம் சுதீர்கமபி ஜீவிதும் ||

ஏவமுக்தஸ்து மே ஷகோ பாஹு யோஜனமாயதௌ |

ப்ராதாதாஸ்யம் ச மே க்ருக்ஷௌ தீக்ஷணதம்ப்ரமகல்பயத் ||

ஏவம் – பின் கண்டவாறு

வஜ்ரேண – வஜ்ராயுதத்தினால்’

அபிஹத: – அடியுண்டு

பக்னசக்திஷிரோமுக: – நொறுங்கிப் போன துடைகளையும் தலையையும் வாயையும் உடையவனாகி

அனாஹார: – ஆகாரம் சம்பாதிக்க முடியாதவனாய் நான்

சுதீர்க்க காலம் – நீண்ட காலம்

ஜீவிதும் – ஜீவித்திருக்க

கதம் சக்த: – எப்படித்தான் முடியும்

அபி உக்த: – என்று இந்திரனிடம் வினாவப்பட,

சக்ரு: – இந்திரன்

து மே – அதன் மேல் எனக்கு

யோஜனம் ஆயதழு – எட்டுமைல் நீளமுள்ள

பாஹு – இரு கைகளை

ப்ராதாத் – அனுக்ரஹித்து அருளினார்.

தீக்ஷணதம்ப்ரஷ்டம் – கூரிய பற்களை உடைய

பாஸ்யம் ச – வாயையும்

மே குக்ஷௌ – எனது வயிற்றில்

அகல்பயத் – அமைத்தார்

சோஹம் புஜாப்யாம் தீர்காப்யாம் சங்க்ருஷ்யாஸ்மிந்வனேசரான் |

சிம்ஹத்விபம்ருகவ்யாக்ரான் பக்ஷயாமி சமன்வத: |\

ச; அஹம் – அந்த நான்

அஸ்மின் – இந்த

வனேசரான் – வனத்தில் வாழும்

சிம்ஹத்விபம்ருகவ்யாக்ரான் – சிங்கங்களையும், யானைகளையும், மான்களையும், புலிகளையும்

தீர்கப்யாம் – நீண்ட

புஜாப்யாம் – இரு கரங்களாலும்

சமன்வத: – நான்குபக்கங்களிலிருந்தும்

சங்க்ருஷ்யாமி – புசித்து வருகிறேன்

ச து மாமப்ரவீதிந்த் ரௌ யதா ராம: லக்ஷ்மண: |

சேத்ஸ்யதே சமரே பாஹு ததா ஸ்வர்க கமிஷ்யஸி ||

ச: இந்த்ர: – அந்த இந்திரன்

மாம் – என்னைப் பார்த்து

து – அப்போது இப்படியும்

அப்ரவீத் – கூறினார்

ச லக்ஷ்மண: – லக்ஷ்மணருடன் கூட

ராம: – ராமர்

சமரே பாஹு – போரில்உனது இரு கைகளை

யதா – எப்போது

சேத்ஸ்யதே – அறுத்துத் தள்ளுகிறாரோ

ததா – அப்போது

ஸ்வர்கம் – ஸ்வர்க்கத்தை

கமிஷ்யஸி – நீ அடைவாய்

-ஆரண்ய காண்டம் 71-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 13 முதல் 16 முடிய

கபந்தன் தனது சாபத்தை இப்படியாக விரிவாகக் கூறி சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் ஏகுகிறான்.

இத்துடன் ஆரண்ய காண்டத்தில் உள்ள சாப விளக்கங்கள் முடிவடைகின்றன.

**

tags–ஆரண்ய காண்டம் , சாப விமோசனம்

Why do Tamil Poets praise Tirukkural a ‘Tamil Veda’?- Part 1 (Post No.13,349)

Hindu Saint Valluvar -Maathaanuhangi and his wife Vasuki

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,349

Date uploaded in London – 17 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Valluvar in Mauritius Island

Tirukkural written by Tiruvalluvar is called Tamil Veda i.e. Veda in Tamil by famous Tamil poets. It has 1330 couplets dealing with Virtue, Wealth and Love (Dharmaarthakaama in Sanskrit)  in three sections.it was dated around fifth century CE on linguistic basis. He has used Sanskrit words in at least 50 percent of the book. Not only over 600 Kurals have Sanskrit words but also all the 133 chapters have the Sanskrit word Adikaaram.

After Dravidians came to power in 1967, holy ash i.e. Vibhuti on his forehead was wiped out and his sacred thread on the shoulder was  covered with a towel by the Anti Hindu Dravidians. It is purely a Hindu book according to lot of scholars including Dr S M Diaz, former I G of Police. His two-volume English translation is one of the best books on Tirukkural.

The oft repeated cliché is that “it is not a religious book”  is wrong. One would laugh heartily if they read the whole book. No one except a vegetarian Hindu can call it a holy book. It advocates non killing and it praises God with form.

You can never see a Vegetarian Muslim; it is like buying a Hot Ice cream. There may be one person in ten million like Abdul Kalam, former President of India. He was a vegetarian cum Yogi born in a Muslim family. Majority of the Christians are also Non-Vegetarians.

Some half baked, so called scholars, put a Buddhist or Jainist seal on him. Again one would laugh at those people because Tiru Valluvar advocates violence against evil doers. Not only that he laughs at the Buddhists who eat non vegetarian dishes when the animals are killed by others. It is a known fact that even Buddhist monks in Sri Lanka eat non vegetarian food when the animal was killed by someone else. In Hong Kong and other places, piglets were offered in Buddhist temples. We know that all Hindus are not vegetarians, but they agree in principle that vegetarianism leads one closer to God.

God with Feet

The very first chapter gives Dravidians a severe blow because it praises God. And that GOD has holy feet in SEVEN out of TEN couplets. One couplet described Dharma Chakra God and Buddhists claimed it is Buddha. But Parimel Azakar, the greatest commentator rejected it.

So Tirukkural is only for Hindus who follow vegetarianism. The Third division of Tirukkural on Sex and Love may be acceptable for all religions. Even there Valluvar talks about Death Sentence, so Buddhists and Jains may reject it.

One lakh words in Sangam Tamil literature never mentioned the name of Buddha or Mahavira. But it is true that those religions existed in Tamil Nadu at that time. Valluvar mentioned EIGHT HINDU GODS and Brahmins, Yagas (Havan) , Dharma Artha Kama Moksha- the four Hindu values with positive connotations. He has one special section for Asceticism; if one calls it is not a religious book you can have a good laugh with that joker.

Many of his couplets are echoes of Hindu scriptures. It is not my comment. It is the conclusion of Reverend G U Pope, Dr SM Diaz, I G of Police, V N Ramachandran, Popley, Lazarus and Dr R Nagaswamy, one of the greatest Historians and Archaeologists to name a few. Instead of saying that Valluvar copied them we can say that he reemphasized what Hindus from Kanya kumari to Kashmir believed.

The very fact that he sings about Dharma Artha Kama in many couplets and the very fact that he named his book Dharma/Aram, Artha/Porul and Kama shows that he is a Hindutva person. He never named his book Tirukkural but he named Muppaal- Three Divisions- Dharma Artha Kama (three values in Hindu scriptures).

He used the Sanskrit cliché Dhaanam and Tavam together like Bhagavad Gita at least in two Couplets.

Valluvar image from 1931 Popley’s Book

Last but not the least in Tiruvalluva Malai, appendix to Tirukkural majority of the 55 Tamil poets mentioned Veda (Marai in Tamil)  and three Hindu values and called it Tamil Veda. Tiruvalluvar’s name is Mathaanubangi according to one Tamil poet.

In the next section I will show how many Hindu Gods are mentioned, how many Vishnu Avatars are mentioned and how many ancient Tamil poets mentioned Vedas and Dharma Artha Kama with regard to this book.

(The author has written a Tamil book “From Valmiki to Valluvar” and he is one of the key persons in installing Valluvar Statue at the SOAS, University of London; he is the author of 120 Tamil and English books)

To be continued…………………….

 Tags- Tamil Veda, Tirukkural, Dharma Artha Kama,  Hindu book, Vegetarianism, Tiruvalluva Malai, Valluvar

கடல் மலைகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்னரே அறிவித்தனர் இந்துக்கள்!-Part 1 (Post.13,348)

Dr Jyotika Virmani

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,348

Date uploaded in London – 17 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Wedding day, from the left: Yogesh, Bhim, Jyotika, Benjamin and Shashank Virmani. Jotika Married Benjamin Alpi.

கடலுக்கு அடியில் மலைகள் உள்ளன, கடலில் நெருப்பு உள்ளது என்று அதர்வண வேதம் முதல் பல முனிவர்களும் புலவர்களும்  பாடியது உண்மையே என்று மேலும் மேலும் நிரூபணம் ஆகி வருகிறது உலகம் முழுதும், கடல் அடியில் மலைகள் உள்ளன ;அதன் பெயர் சக்கரவாளம் என்று முனிவர்களும் புலவர்களும்  பாடினர் . கடலுக்கு அடியில் நெருப்பு உள்ளது; அதன் பெயர் வடமுகாக்கினி அல்லது படவாக்கினி (குதிரைமுகத் தீ)  என்றும் அவர்கள் செப்பினார்கள். இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் இயம்பியது எப்படி என்று எண்ணி வியக்கத் தோன்றுகிறது !

பஞ்சாபிய பெண்மணி டாக்டர் ஜோதிகா விர்மானி  தான்  கண்டுபிடித்த புதிய கடலடி மலைகள் பற்றிய புதிய செய்திகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாத நியூ சைன்டிஸ்ட்(DR JYOTIKA VIRMANI IN NEW SCIENTIST  MAGAZINE ) இதழில் வெளியிட்டிருக்கிறார். அவர் தென் அமெரிக்க கண்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் 4 புதிய கடலடி மலைகளைக் (Sub Marine Mountains)  கண்டுபிடித்து இருக்கிறார் .

ஜோதிகா JYOTIKA மான்செஸ்டர் (இங்கிலாந்து) நகரில் குடியேறிய பீம் விர்மானி- யோகேஷ் விர்மானி தம்பதிகளுக்குப் பிறந்து, லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று, அமெரிக்காவில் கடலியல் ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிவருகிறார்.

Four new underwater mountains have been discovered in the high seas off the west coast of South and Central America. “The tallest is over one-and-a-half miles in height, and we didn’t really know it was there,” says Jyotika Virmani at the Schmidt Ocean Institute in California.8 Feb 2024

Data suggests there are between 45,000 and 100,000 underwater mountains still to be found because most of the seafloor that lies beneath the open ocean remains unmapped. “The fact that we don’t have maps of our seafloor is crazy,”

இதில் மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால் இவைகள் உலகம் முழுதும் கடலுக்கு அடியில் உள்ளன; இதை சக்கரவாளம் — அதாவது உலகம் முழுதும் வட்ட வடிவில் இருக்கும் மலை —- என்று இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்க்ருதத்தில் பாடிவிட்டனர். இப்போது ஒரு லட்சம் மலைகள் கடலுக்கு அடியில் இருப்பதாக என்சைக்ளோபீடியாக்கள் பகர்கின்றன. மேலும் அவை எரிமலைக் குழம்புக்களால்  உண்டானவை என்றும் கூறுகின்றன ; இதையும் அதர்வண வேதம் சொல்லிவிட்டது . இன்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவிலும் ஐரோப்பாவில் ஐஸ்லாந்து  நாட்டிலும் கடலடி எரிமலைகளைக் காணலாம். அவை எப்போதும் தீயைக் கக்கிக் கொண்டு இருக்கின்றன.

இதைப் படிக்கப் படிக்க மனிதர்களுக்கு கடல் பற்றி  ஒன்றுமே தெரியாது என்றே சொல்லத்  தோன்றும். ஏனெனில் ஒரு லட்சம் மலைகளில் ஒரு சதவிகிதத்தையே ஆராய்ந்துள்ளனர்!

கடலுக்கு அடியிலுள்ள சில மலைகள் இமயமலையை விட உயர்ந்தவை 30,000 அடிகளுக்கு மேல் உயரமுள்ள மலையும் கடலுக்கு அடியில் இருக்கிறது. அதாவது எவரெஸ்ட் சிகரத்தை தோற்கடித்துவிடும்.

கடலடி மலைகளை பல வகைகளாக பிரிக்கின்றனர். சில ஆயிரம் மலைகள் பெரிய தீவு போல சம நிலப்பரப்பைக் கொண்டவை (seamounts) . அதாவது அவை கடலுக்கு மேலே எழும்பினால் மனிதர்கள் வீடுகட்டி, ரோடு  போட்டு சுகமாக வாழலாம்

There are more than 14,500 seamounts. In addition to seamounts, there are more than 80,000 small knolls, ridges and hills less than 1,000 m in height in the world’s oceans. Most seamounts are volcanic in origin, and thus tend to be found on oceanic crust near mid-ocean ridges, mantle plumes, and island arcs.

மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் 200 வகை புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர் ; இவைகளில் மீன்கள், கடல் நண்டுகள் மட்டுமின்றி பவளங்களும் அடங்கும். பவளம் என்னும் பூச்சிகள் கடல் மட்டத்துக்கு அருகில் சூரிய ஒளி ஊடுருவும் அளவுக்கே வளரும் என்று இதுவரை சொல்லி வந்தனர். ஆனால் அதிசயம் என்னவென்றால் 600 மீட்டருக்கு அடியிலும் பவளப் பாறைகள் இருப்பதை  கண்டுபிடித்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் சிலி என்னும் நாடு இருக்கிறது; அந்த நாட்டு கடலியல் விஞ்ஞானிகள் பல புதிய செய்திகளை வெளியிட்டுள்ளனர் .

அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் புதிய மீன், நண்டு வகைகளை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர் .

பூமியின் 70 சதவிகிதக் கடலின் அடிப்பகுதியில்  இதுவரை ஒரு சதவிகிதம் மட்டுமே ஆராய்ந்துள்ளனர் புதிய கடலடி கப்பல்கள் கண்டுபிடிப்பதால் இது சாத்தியமாகும். கடலுக்கு அடியில் செல்லச் செல்ல அதிக அழுத்தம் உண்டாவதால் ஏழு மைல் ஆழம் வரை சென்று ஆராய்வது மிகவும் கடினம். பல விஷயங்களை தொலைவிலிருந்து இயக்கும் கருவிகள் Remote Sensing ) அல்லது ரோபாட்  எனப்படும் இயந்திர மனிதர்களை வைத்தே அறியலாம்.!

VALPARAISO, Chile – An international group of scientists, led by Dr. Javier Sellanes of the Universidad Católica del Norte, may have discovered more than 100 new species living on seamounts off the coast of Chile. The recent Schmidt Ocean Institute expedition resulted in identifying deep-sea corals, glass sponges, sea urchins,  amphipods, squat lobsters, and other species likely new to science .

The team explored seamounts along the Nazca and Salas y Gómez Ridge, both inside and outside Chile’s jurisdiction, to collect data that could support the designation of an international high-seas marine protected area. The Salas y Gómez Ridge is a 2,900-kilometer-long underwater mountain chain comprising more than 200 seamounts that stretch from offshore Chile to Rapa Nui, also known as Easter Island.

During the expedition, scientists used an underwater robot, capable of descending to depths of 4,500 meters, to collect data from ten seamounts that will be used to advance Chile’s marine protection efforts.

“Full species identification can take many years, and Dr. Sellanas and his team have an incredible number of samples from this amazingly beautiful and little-known biodiversity hotspot,” said Schmidt Ocean Institute Executive Director Dr. Jyotika Virmani. “

Schmidt Ocean Institute is a partner with the Nippon Foundation – Nekton Ocean Census Program, which has set a target of finding 100,000 new marine species in the next ten years

கடலுக்கு அடியில் மலைகள் இருப்பதை இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவார்கள்.

மைநாக பர்வதம் கடலுக்குள் சென்ற கதை, கம்ப ராமாயணம் சுந்தர கண்டத்தில் அனுமன் கடல் தாவு படலத்தில் வருகிறது .

அனுமனைத் தடுத்த மைநாக பர்வதம் தனது கதையைச் சொல்கிறது:

4901.  ‘வேற்றுப் புலத்தோன் அலன், ஐய!

    விலங்கல் எல்லாம்

மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம்

    மாண ஓச்ச,

வீற்றுப்பட நூறிய வேலையின்,

    வேலை உய்த்துக்

காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன்,

    அன்பு காந்த. ‘—கம்ப ராமாயணம்

     என்னைப் பகைவன்என்று கடியற்க; இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்த காலத்து உன் தந்தையால் கடலுக்கு அடியில் பாதுகாக்கப் பெற்றவன் என்று  மைந்நாகமலை கூறியது.

— to be continued

Tags–சக்கரவாளம் ,கடலுக்கு அடியில் மலைகள், புதிய கண்டுபிடிப்பு,  ஜோதிகா விர்மானி

திருப்பாவை ராகங்கள் (Post No.13,347)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,347

Date uploaded in London – 17 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆண்டாள் பாடிய 30 திருப்பாவைப்  பாடல்களுக்கும்  இசை மேதை அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் உரிய ராகங்களைப் போட்டார். அதை எம் எல் வசந்த குமாரி  தனது இனிய குரலில் பாடவே திருப்பாவையானது  தமிழ் நாட்டின் கோவில்களிலும் பட்டி தொட்டிகளிலும் முழங்கத் துவங்கியது , அந்த ராகங்களில் பாடல்களைக் கேட்கும்போது நாம் ஆண்டாளின் அருகில் நிற்பது போலவே தோன்றும். இதோ பாடல்களும் ராகங்களும்:

பாடல் 1) மார்கழித் திங்கள் ராகம்: நாட்டை

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்! ராகம்: கௌள

பாடல் 3) ஓங்கி உலகளந்த ராகம்: ஆரபி

பாடல் 4) ஆழி மழைக்கண்ணா! ராகம்: வராளி

பாடல் 5) மாயனை மன்னு ராகம்: ஸ்ரீராகம்

பாடல் 6) புள்ளும் சிலம்பின ராகம்: சங்கராபரணம்
பாடல் 7) கீசுகீசு என்றெங்கும் ராகம்: பைரவி

பாடல் 8) கீழ்வானம் வெள்ளென்று ராகம்: தன்யாஸி

பாடல் 9) தூமணி மாடத்து ராகம்: ஹமீர்கல்யாணி

பாடல் 10) நோற்றுச் சுவர்க்கம் ராகம்: தோடி

பாடல் 11) கற்றுக் கறவை ராகம்: ஹுஸேனி

பாடல் 12) கனைத்திளங் கற்றெருமை ராகம்: கேதார கௌள

பாடல் 13) புள்ளின்வாய் ராகம்: அடாணா

பாடல் 14) உங்கள் புழக்கடை ராகம்: ஆனந்த பைரவி

பாடல் 15) எல்லே இளங்கிளியே! ராகம்: பேகடா

பாடல் 16) நாயகனாய் நின்ற ராகம்: மோஹனம்

பாடல் 17) அம்பரமே தண்ணீரே ராகம்: கல்யாணி

பாடல் 18) உந்து மதகளிற்றன் ராகம்: ஸாவேரி

பாடல் 19)  குத்து விளக்கெரிய ராகம்: ஸஹானா

பாடல் 20) முப்பத்து மூவர் ராகம்: செஞ்சுருட்டி

பாடல் 21) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி ராகம்: நாதநாமக்ரியா

பாடல் 22) அங்கண்மா ஞாலத்தரசர் ராகம்: யமுனா கல்யாணி

பாடல் 23) மாரி மலைமுழஞ்சில் ராகம்: பிலஹரி

பாடல் 24) அன்று இவ்வுலகம் ராகம்: சிந்துபைரவி

பாடல் 25) ஒருத்தி மகனாய் பிறந்து ராகம்: பெஹாக்

பாடல் 26) மாலே மணிவண்ணா ராகம்: குந்தல வராளி

பாடல் 27) கூடாரை வெல்லும் ராகம்: பூர்விகல்யாணி

பாடல் 28) கறவைகள் பின்சென்று ராகம்: காம்போதி

பாடல் 29) சிற்றஞ்சிறுகாலே ராகம்: மத்யமாவதி

பாடல் 30) வங்கக்கடல் கடைந்த ராகம்: சுருட்டி

Thanks to Tamil Brahmins website.

—-subham—

Tags- அரியக்குடி, எம்.எல்.வி. ஆண்டாள், திருப்பாவை ராகம்

ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்! (Post.13,346)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.346

Date uploaded in London – 17 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (28) 

ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்! 

ச.நாகராஜன்

சீதையைத் தேடிச் சென்ற ராமரும் லக்ஷ்மணரும் தண்டகாரண்யத்தைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்று க்ரௌஞ்சாரண்யம் என்ற இடத்தை அடைந்தனர்.

அப்போது  அங்கு ஒரு குகையில் அயோமுகி என்ற கொடிய தோற்றமுடைய ஒரு அரக்கியைக் கண்டனர். அவள் லக்ஷ்மணரைக் கட்டி அணைக்க, கோபம் கொண்ட லக்ஷ்மணர் அவளது மார்பகங்கள், காது மூக்கு இவற்றை வெட்டுகிறார். அவள் வந்த வழியே அலறியவாறு ஓடி விட்டாள்.

பின்னர் அவர்கள் மிகப் பெரிய உடலைக் கொண்டவனும், அகன்ற மார்பை உடையவனுமான ஒரு அரக்கனைக் கண்டனர். அவனுக்குத் தலையும் கழுத்தும் இல்லை. அவன் வயிற்றில் வாய் இருந்தது. மார்பில் அமைக்கப்பட்ட நெற்றியிலிருந்து ஒரு கண்ணால் ராம லக்ஷ்மணரைப் பார்த்த அவன், அவர்களின் வழியை மறைத்துக் கொண்டு நின்றான்.

கபந்தன் என்ற அந்த அரக்கன் ராம லக்ஷ்மணர் இருவரையும் கட்டிப் பிடித்து உங்களை விழுங்குவேன் என்றான்.. ராமர் அவனது வலது கரத்தை வெட்ட லக்ஷ்மணர் அவனது இடது கையை அறுத்துத் தள்ளுகிறார். அவன் ஓவென்று அலறி பூமியில் விழுந்தான். அவன் நீங்கள் யார்? என்று வினவ லக்ஷ்மணர் இவரே ஶ்ரீ ராமர் என்றும் தான் அவரது தம்பி லக்ஷ்மணர் என்றும் கூறுகிறார்.

நீ யார் என்று கபந்தனை லக்ஷ்மணர் கேட்க அவன் தனது பழைய உருவம் வரப்போகிறது என்பதை அறிந்து மிகுந்த சந்தோஷத்துடன் தனது சாபம் பற்றிய வரலாறைக் கூறுகிறான்.

“பூர்வ காலத்தில் சந்திரனுக்கு ஒப்பான ரூபத்துடன் நான் இருந்தேன். ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு காட்டில் வசித்த முனிவர்களைப் பாதித்து வந்தேன். அப்போது ஸ்தூலசிரஸ் என்ற முனிவர் என்னால் அவமானப்படுத்தப்பட்டார். கோபம் கொண்ட அவர் எனக்கு சாபத்தை இட்டார்.”

கபந்தன் கூறுவது இது:

தேனாஹமுக்த: ப்ரேக்ஷ்யைவம் கோரஷாபாபிதாயினா |

ஏததேவ ந்ருஷம்சம் தே ரூபமஸ்து விகர்ஹிதம் ||

ஏவம் – மேற்கண்டதை (கபந்தனால் அவமானப்படுத்தப்பட்டதை)

ப்ரேக்ஷ்ய – அவர் சிந்தையில் கொண்டு

கோர ஷாபாபிதாயினா – கொடிய சாபத்தை இடும் வகையில்

தேன – அவரால் (ஸ்தூலசிரஸ் முனிவரால்_

அஹம் – நான்

உக்த: – பின்வருமாறு சபிக்கப்பட்டேன்

தே – “உனக்கு

ஏதத் – இந்த

விகர்ஹிதம் – எல்லோராலும் வெறுக்கப்பட்ட

ந்ருஷம்சம் – கோரமான

ரூபம் ஏவ – உருவமே

அஸ்து – சாஸ்வதமாக் இருக்கக் கடவது

ஸ மயா யாசித: க்ருத்தச்சாபஸ்யாந்தோ பவேதிதி |
அபிசாபக்ருதஸ்யேதி தேனேதம் பாஷிதம் வச: ||

அபிசாபக்ருதஸ்ய – அபசாரத்தால் விளைந்த

ஷாபஸ்ய – சாபத்திற்கு

அந்த: – விமோசனம்

பவேத் – ஏற்பட வேண்டும்

இதி – என்று

மயா – என்னால்

க்ருத்த: – சினம் கொண்டிருந்த

ஸ: அவர்

யாசித: – யாசிக்கப்பட்டார்.

இதி – இக்காரணத்தால்

தேன – அவரால்

இதம் – பின்வரும்

வச: – மொழியானது

பாஷிதம் – சொல்லப்பட்டது

யதா சித்வா புஜௌ ராமஸ்த்வாம் தஹேத்விஜனே வனே |

சதா த்வம் ப்ராப்ஸ்ய ஸே ரூபம் ஸ்வமேவ விபுலம் சுபம் ||

ராம: – ஶ்ரீ ராமர்

புஜை – இரு கரங்களை

சித்வா – துண்டாக்கி

த்வாம் – உன்னை

விஜனே – நிர்ஜனமான

வனே – காட்டில்

யதா – எப்போது

தஹேத் – தகனம் செய்கிறாரோ

ததா – அப்போது

த்வம் ஏவ – நீயும்

விபுலம் – அசிந்த்யமானதும்

சுபம் – அழகானதுமான

ஸ்வே ரூபம் – உனது பிறவி ரூபத்தை\

ப்ராப்ஸ்யஸே – அடைவாய்

ஆரண்ய காண்டம், ஸர்க்கம் 71, ஸ்லோகங்கள் 4, 5 & 6)

இவ்வாறு கூறுகிறான் கபந்தன். தொடர்ந்து தான் யார் என்பதை அவன் விளக்குகிறான்.

“தனு என்னும் தானவனது அழகுடன் கூடிய புதல்வனான என்னை இந்த ரூபத்தை அடையுமாறு இந்திரன் சாபம் கொடுத்தான்.”

இந்திரன் சாபம் கொடுத்த வரலாறை அடுத்துப் பார்ப்போம்.

**

உலகம் உருண்டை : திருமூலர்,  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 23 (Post 13,345)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,345

Date uploaded in London – 16 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகம் உருண்டை என்ற கருத்து அதர்வண வேதம் முதல் எல்லா தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும்  பூமியை வருணிக்கும் இடத்தில் காணப்படுகிறது . பூமியைச் சொல்லும்போது கட,,,,,,யோ நிலத்தையோ வட்டம் என்று வருணிப்பதைக் காணலாம். இதை வேத கால மனிதர்களே சொன்னதுதான் அதிசயம். புவியியல் பாடத்துக்கே நாங்கள் படிக்கும் காலத்தில் பூகோளப் பாடம் தான்  .கோளம் என்றால் என்ன என்று விளக்கத் தேவை இல்லை .

சிறுவயதில் பூமி உருண்டை வடிவம் என்பதை எப்படி அறிவாய்? என்ற மூன்று மார்க் கேள்விக்கு நாங்கள் எழுதும் பதில்- கடலில் நின்று பார்த்தால் கப்பலின் அடிப்பாகமும் நடுப்பாகுதியும் கொஞ்சசம் கொஞ்சசமாமாக மறையும். பின்னர் தான் கொடி மரம் மறையும்; இத்திலி ருந்து பூமி வட் டமானது  என்பதை அறியலாம்.

கிரகண காலத்தை கணக்கிடுவோருக்கும் பூமி உருண்டை வடிவமானது என்று தெரியும்  ; அண்டம்  என்றால் முட்டை, பிரபஞ்சம் என்று இரு பொருள்  இப்போதெல்லாம் விண்வெளியிலிருந்து பார்த்ததால், பெரிய நீல நிறக் கோலிக் குண்டு தான் என்று இப்போது பார்க்க முடிகிறது

இதோ திருவாசகப் பாடல்:–

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்                               

 அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி                               

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்                                    

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன                                  

இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்     

–திரு அண்டப் பகுதி, திருவாசகம்

இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.

திருமூலர் இயற்றிய திருமந்திரப்  பாடல்கள்

உலகம் உருண்டை –

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு

வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை

கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.

(ப. இ.) எண்புலமாகிய எட்டுத் திசைகளிலும் ஆருயிர்கட்கு இன்பம் எய்துதற்பொருட்டு வழங்குவது காற்றெனப்படும். உலகை வட்டமாக ஆடைபோல் சூழ்ந்திருக்கும் கடல் ஈண்டு வட்டத்திரை எனப்பட்டது.. மாநிலம் – பெரிய நிலம். ஆகாயம் – விசும்பு. எனவே, காற்று, நீர், தீ, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதக் கூட்டரவால் ஆயது உயிர் நிலை. இதனைக் காயப்பை என்ப. இவ்வுடல்களைப் படைத்து அருளால் கட்டிப் பிணைப்பவன் சிவபெருமான்.

இருவினையொப்பு உற்ற காலத்து அப் பெரும் கட்டினை அவிழ்த்தருள்பவனும் அவனே. அவன் அருள் வடிவாம் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் என்க.

441 : Life and Death are Acts of God

He is the Wind that Blows in Directions Eight

He is the wavy ocean that girdles the earth,

He is fire, earth and sky;

Know this:

He is the One that binds and unbinds

The body that holds life precious.

(அ. சி.) வட்டத்திரை – கடல்.

xxxx

இந்தப் பாடல் சிறிய வேறுபாடுகளுடன் இரண்டு இடங்ககளில் வருகிறது

522. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்

பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்

மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2

2068 Speak Truth

He who this sea-girt world created

He knows all;

Men falsehoods many utter,

Let them the Truth speak;

He will make Celestials revere them

–He, that is of the lustrous dark throat.

Or

The Truth of Lord’s Blue-Throat
Ye men!,
Who in this sea-girt globe live
In falsehood and flattery!
Why His throat gleams dark,
He knows who made it so;
When you realize the truth
He will make,
Celestial beings bow to you.

xxxxxx

பூமியில் பெரும்பகுதி கடல் என்பதும் இந்துக்களுக்குத் தெரியும் ; இப்போது புவியியல் புஸ்தககங்களில்  70 சதவிகிதம் கடல் 30 சதவிகித நிலப்பரப்பில்தான்  200க்கும் மேலானநாடுகளள்  இருக்கின்றன என்று படிக்கிறோம். தமிழர்களும் சம்ஸ்க்ருத அறிஞர்களும் எப்போதும் பூமியை ஆழி சூழ் உலகு, சமுத்திர வசனே  தேவி समुद्रवसने देवि पर्वतस्तनमण्डले ।

विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्वमे ॥

Samudra-Vasane Devi Parvata-Stana-Mannddale |

Vissnnu-Patni Namas-Tubhyam Paada-Sparsham Kssamasva-Me ||

Meaning:

1: (Oh Mother Earth) O Devi, You Who have the Ocean as Your Garments, and Mountains as Your Bosom,

2: O Consort of Lord Vishnu, Salutations to You; Please Forgive my Touch of the Feet (on Earth, which is Your Holy Body).

என்றுதான் பாடுவார்கள். திருமூலரும் இந்த இரண்டு உண்மைகளை பாடல்கள் மூலம் விளம்புகிறார்.

சமுத்திர வசனே தேவி! கடல் ஆடையை உடுத்திய பூமித் தாயே! பர்வதங்களே உன் மார்பகங்கள் . விஷ்ணுவின் துணைவியே! உன் புனித உடல் மீது (நிலம்/ தரை) கால்களை வைத்து எழுந்திருக்கிறேன். மன்னிக்கவும்; உடனக்குநமஸ்காரம் என்று சொல்லித்தான் இந்துக்கள் படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள் . இன்றும் பல லட்சம் ஆர் எஸ் எஸ் காரர்கள் இதைச் சொல்லித்தான் காலையில் பூமியில் காலை வைக்கிறார்கள்

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’ என்றாள் 

— இது கைகேயி , ராமபிரானிடம் சொன்னது; கம்பராமாயணப் பாடல்

ஆழி சூழ் உலகம் எல்லாம்== கடல் சூழ்ந்த இந்த நிலப்பரப்பை

ஆகையால் பூமி வட்ட வடிவம், கடல்தான் பெரும் பகுதி  என்பன எல்லாம் இந்துக்குழந்தைகள் இளம் வயதிலேயே கற்ற்றுக்கொண்டு விடுகின்றன

—subham—

Tags- திருமூலர்,  திருமந்திரம்  , பூமி வட்டம், கோளம் , கடல் ஆடை , உருண்டை , பெரும்பாகம் , சமுத்திரம்