லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25
லெபாக்ஷி எங்கே இருக்கிறது?
லெபாக்ஷி என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கிறது கதிரியிலிருந்து 82 கி.மீ; பெங்களூரிலிருந்து 120 கிமீ. புட்டபர்த்தியிலிருந்து 64 கி.மீ ; பெனுகொண்டாவிலிருந்து 50 கிமீ.
என்ன சிறப்புகள்?
சிறிதும் பெரிதுமாக மொத்தம்110 கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை – சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனியான கோவில்கள் உள்ளன. விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன கூர்மசைலம் என்று அழைக்கப்படும் சிறிய குன்றுமீது [ஆமை மலை] பாபனதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர்,வீரபத்ரர் ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள வீரபத்ரர் ஆலயம்தான் கலைமுக்கியத்துவம் கொண்டது.மற்றவை சிறிய சன்னிதிகள்
என்ன அதிசயங்கள் ?
இங்குள்ள மாபெரும் நந்தி ஒரு பெரிய அதிசயம் கோவிலுக்கு வெளியே சாலையோரமாக நம்மை இது வரவேற்கிறது.
ஒற்றைக் கல் நந்தியின் உயரம் 20 அடி; நீளம் 30 அடிகள்!
ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்பதால் ராமாயணத் தொடர்புடையது; ஜடாயு சிலையும் ஒரு அதிசயப் படைப்பு.
சித்தன்னவாசல், அஜந்தா குகை ஓவியங்களைப் போல இங்குள்ள ஓவியங்களும் அற்புதப் படைப்புகள்.
கோவில்களும் ஓவியங்களும் சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உடையவைதான்.
இங்குள்ள தரையைத் தொடாத தொங்கும் தூண் பொறியியற் கலையின் அற்புதப் படைப்பு எனலாம் .கோவிலில் உள்ள 70 தூண்களில் ஒன்று தரையைத் தொடவில்லை; அதற்கு அடியில் துணி அல்லது காகிதத்தை விட்டு வெளியே இழுக்கலாம்.
வெளியே இயற்கையான பாறை ஒன்றை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் நாகர் சிலை சிவலிங்கத்துடன் காட்சி தருகிறது; லெபாக்ஷியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிலை இதுதான். அந்தப்பாறையின் பக்கவாட்டில் உள்ள பெரிய புடைப்புப் பிள்ளையார் சிலை மிகவும் அழகானது.
ஓவியங்கள் இயற்கை வண்ணக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன ; அவைகள் சிவன் , விஷ்ணு, பார்வதி தொடர்பான புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன
xxxx
அனுமனின்மிகப்பிரிய காலடி
அனுமனின் காலடி என்று பக்தர்கள் நம்பும் மிகப்பெரிய கால் சுவடு வீரபத்ர சுவாமி கோவில் வளாகத்துக்குள் இருக்கிறது சுமார் மூன்று அடிகள் நீளமுள்ள கால் தடம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். இதற்குக் காரணம் பாறையின் அடியிலுள்ள நீரூற்று ஆகும். இதுவும் நிறைய பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கின்றன.
கோவிலில் உள்ள வீரபத்ர சுவாமிக்கும், சிவலிங்கத்துக்கும் தினமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
xxxx
சுவையான கதை
இந்தக் கோவில்கள் பெனுகொண்டாவின் ஆளுநர்களாக் இருந்த வீரண்ணா விரூபண்ணா சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை ; விருபண்ணா இங்கே குகைக்குள் இருந்த வீரபத்ரர் சிலையைக் கண்டவுடன் அதை அங்கே பிரதிஷ்டைசெய்து பெரும் ஆலயம் கட்டினார் . நம்முடைய தமிழ்நாட்டின் மாணிக்க வாசகரைப் போல, ஆந்திர மாநிலத்தின் பத்ராசல ராமதாசரைப் போல இவரும் கோவிலைக் கட்டுவதற்கு அரசாங்க பணத்தைப் பயன்படுத்தினார் ; புகார்கள் பறந்தன விஜயநகர மன்னன் ஓடோடி வந்தான்; உண்மை என்று அறிந்தான்; உமக்கு நீரே தண்டனை கொடுத்துக் கொள்ளவும்; உ ம் கண்களை நீரே குத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான் விரூபண்ணாவும் அப்படியே செய்தார். லெபாக்ஷி என்ற பெயர் இதனால்தான் வந்ததாம் லோப + அக்ஷி என்றால் குருட்டு விழி என்று பொருள். லே +பட்சி என்றும் பொருள் சொல்லுவார்கள்; சீதையை இராவணன் கடத்தியதை ஜடாயு என்ற பறவை தடுத்தது; ராவணன் அதன் சிறகினை வெட்டினான் அது கீழே விழுந்தது; எழுந்திரு பறவையே என்று ராமன் சொன்னதால் லே +பக்ஷி (பறவை) என்ற பெயர் ஏற்பட்டது
கோவில் வேலை முழுமை அடையாமலேயே நின்றுவிட்டது.
இது நூற்றெட்டு சைவத் தலங்களுள் ஒன்று என்று ஸ்கந்த புராணத்தில் குறிப்பு இருக்கிறது . இதை அகத்தியர் நிறுவியதாக ஐதீகம் உள்ளது.
xxxx
வீரபத்ரசாமி கோவில்
வீரபத்ரசாமி கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. முக்த மண்டபம் அல்லது ரங்க மகால் ,பின்னர் அர்த்தமண்டபம். அதற்கு அப்பால் கருவறையும் அதன்முன் கல்யாணமண்டபமும். இருக்கின்றன கல்யாண மண்டபத்தில் சிற்பப் பணிமுடிவடையாத முப்பத்தெட்டு ஒற்றைக் கல்தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
இந்த தலத்தில்தான் சிவபார்வதி திருமணம் நிகழ்ந்தது என்பது ஸ்தலபுராணம். அதற்கேற்ப எங்கும் அழகு ததும்பி நிற்கும் தூண்கள். நாட்டிய மண்டபத்தில் இசைக்கலைஞர்களும் நடனமாதர்களும் பிரமித்து நிற்கின்றார்கள். கல்யாணமண்டபம் பணிமுடிவடையாத நிலையில் உள்ளது. தும்புரு- நாரத நடனம், அனந்த சயனம், தத்தாத்ரேயர் ,நான்முகன், ரம்பா போன்ற சிலைகள் மனதைக் கவர்கின்றன.
நாட்டிய மண்டபத்தையும் கல்யாண மண்டபத்தையும் பார்த்து முடிக்கவே முடியாது. மிக அற்புதமான சிலைகள் வரிசையாக இருக்கின்றன. குறிப்பாக ஒரே தூணில் உள்ள யட்சனும் புஷ்ப யட்சியும் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
நாட்டியமண்டபத்திலும் கல்யாணமண்டபத்திலும் மேலே கூரையில் உள்ள சுவரோவியங்களும் புகழ்பெற்றவை. மகாபாரத ராமாயண காட்சிகளுடன் வீரண்ணா, விரூபண்ணா ஆகியோர் தங்கள் பக்கவாட்டில் கட்டிமுடிக்கப்படாத ஒரு மண்டபம் சிற்பங்கள் மண்டிய தூண்களாக மட்டும் நின்று கொண்டிருக்கிறது. முகப்பில் அகத்தியர் முதலிய ரிஷிகளின் அற்புதமான சிலைகள் வரிசையாக நிற்கின்றன. உள்ளே, நின்ற திருக்கோலத்தில் விஷ்ணுவின் சிலை உள்ளது.
—Subham–
Tags- சிவன் கோவில், லெபாக்ஷி , ஓவியங்கள் , பெரிய நந்தி , ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25, வீரபத்ர சுவாமி, நாகத்தின் கீழ் சிவலிங்கம், தொங்கும் தூண், அனுமன் காலடி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்!
ச. நாகராஜன்
பதினைந்து வருட வாழ்வு!
மனிதராய்ப் பிறந்தோரின் சராசரி ஆயுள் எண்பது வருடங்கள் என்று இந்த அறிவியல் யுகம் நிர்னயித்து விட்டது. இதில் முதல் பத்து வருடங்கள் பால பருவத்திலும், கடைசி பத்து வருடங்கள் உடல் தளர்ந்த முதுமைப் பருவத்திலும் கழிந்து விட,, மீதி இருப்பது அறுபது வருடங்கள்.
இதில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி வேலை மற்றும் படிப்பிலும் போய் விட, மீதி இருப்பது இருபது வருடங்கள். இதில் உணவு உண்ணுதல், மற்றும் உணவு தயாரித்தல், பயணம், டிரைவிங் என்று ஒரு ஐந்து வருடங்கள் கழிந்தது போக மீதி இருப்பது பதினைந்து வருடங்கள் தாம்.
வாழ்வதற்காக உள்ள வருடங்கள் பதினைந்து வருடங்களே! இதில் ஆனந்தமாக வாழ்கிறோமா என்பது தான் கேள்வி.
மன்னர் ஷவன் ஷி கேட்கும் கேள்வி
க்விங் என்ற சீன வம்ச அரசரான ஷவன் ஷி சக்ரவர்த்தி (கி.பி. 1638- 1697) ஒரு பாடலை எழுதியுள்ளார்:-
“எதற்காக என்று தெரியாமல் பூமிக்கு மனிதர்கள் வருகிறார்கள்! எங்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் மனிதர்கள் பூமியை விட்டுப் போகிறார்கள்! இங்கு வருவதற்கு முன்னர் நான் யார்? இங்கிருந்து போன பின் நான் யார்?”
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாததால் சக்ரவர்த்தி ஷவன் ஷி அரசைத் துறந்து விட்டு சந்நியாசி ஆனார்.
உண்மை ஆனந்தத்தைத் தேடி ஆன்ம மார்க்கத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, உண்மையில் வாழ்கின்ற பதினைந்து வருடங்களில் ‘மனித ஆனந்தத்துடனாவது’ வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ வழிகள் உண்டா? உண்டு! அவற்றில் சில வழிகளைப் பார்க்கலாம்:
உள்ளங்கைகளைத் தேய்த்தல்
உடனடி ஆனந்தத்தை வரவழைக்கை ஒரு சுலபமான வழி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று ஏழு முறைகள் வேகமாகத் தேய்ப்பது தான்! வேகமாகத் தேய்த்து அதில் வரும் ஆனந்தம் உடலெங்கும் பரவுவதை உணரலாம். இப்படி ஏழு முறை தேய்ப்பதை ஏழு முறை செய்தால் உற்சாகமான ஆனந்தம் ஆரம்பமாகும். ‘டல்லாக’ உணரும் தருணங்களிலும் உள்ளங்கைகளைத் தேய்த்து ஆனந்தம் ஆரம்பமாக வைத்து நம் நேரத்தை மகிழ்ச்சி நேரமாக மாற்றிக் கொள்ளலாம்!
கிடைமட்ட எட்டு எண்ணை மனதில் இருத்தல்
அடுத்து எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் அடையாளமான கிடைமட்டமாக உள்ள எட்டு எண்ணை ((8 ஐ கிடைமட்டமாக்கினால் வருவது ∞ ) கண்களை மூடி மனதில் இருத்துங்கள். இதில் உள்ள இரண்டு பூஜ்யங்கள் இடது பக்க மூளையையும், வலது பக்க மூளையையும் இணைக்கும் பாலமாக அமையும். இரண்டு பூஜ்யங்களும் இணையும் இடமானது கார்பஸ் கலோஸம் என்ற மூளையின் பகுதியைக் குறிக்கும். அந்த இணையும் புள்ளியே ஆனந்த சக்தி ஆரம்பமாகும் இடம். அதையே ஆனந்தத்தின் ஊற்றாக எண்ணுங்கள். இந்த இரண்டு பூஜ்யங்களின் வழியே ஆனந்த சக்தியை ஓட்டமாக ஓட வைத்து அதை மனதில் அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் ஆனந்த சக்தியை ஓட்ட விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் ஓட விடுங்கள். அபரிமிதமான ஆனந்தப் புத்துணர்ச்சி உடலெங்கும் அலை பாயும்.
மினி மெடிடேஷன்
கண்களை மூடி ஒரு மினி மெடிடேஷன் செய்வது அடுத்த டெக்னிக்!
கண்களை மூடி முகத்தை நிமிர்த்தி வையுங்கள். கண்களைக் கீழே தாழ விடுங்கள். பத்து வினாடிகள் கழித்து கண்களை மேலே பார்க்கச் செய்யுங்கள். பத்து வினாடிகள் புருவ மத்தியைப் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி உணர்வை உணருங்கள். உடல் முழுவதும் மின்காந்த அலைகள் பாயும்.
தீப தியானம்
ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ள தீப தியான முறையும் சிறப்பான ஒன்று.
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதன் மூலம் உங்களிடமிருந்து ஆரம்பித்து உங்கள் உறவினர், நண்பர்கள், சமுதாய மக்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாகக் கண்களை மூடி மனதில் தியானிப்பது தீப தியான முறை. உங்களிடமிருந்து ஆரம்பமாகும் ஆனந்தம் வெள்ளமாகப் பெருகி உலகெங்கும் பரவும்.
ஆக இப்படி எளிய இனிய வழிகள் இருக்கும்போது ஆனந்தத்திற்கு ஏது குறை? குறை ஒன்றும் இல்லை சீர் கோவிந்தா!!
மஞ்சுளா ரமேஷ் ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, ஜூலை மாதம் வெளியான கட்டுரை
Sixty years ago, I used to attend Sunday Bhajans conducted by Swami Sivananda’s DLS (Divine Life Society) inside the world famous Madurai Meenakshi Temple in Madurai. We used to finish the Bhajan (group singing prayer) with
Sankaraya Sankaraya Sankaraya Mangalam
Sankari manoharaya saswataya Mangalam
(more lines are there)
Today I wanted to repeat it when I finish my Research Notes on VC .
580 slokas in VC (Viveka Chudamani) are a vast resource of Advaita (monism) Vedanta.
It has lot of repetitions which Sankara himself admits.
In Bhagawad Gita , Lord Krishna took the role of a FRIEND and in VC, Sankara took the role of a FATHER.
VC 575. I have today repeatedly revealed to thee, as to one’s own son, this excellent and profound secret, which is the inmost purport of all Vedanta, the crest of the Vedas – considering thee an aspirant after Liberation, purged of the taints of this Dark (Kali) Age, and of a mind free from desires.
xxx
We know that teachers and parents repeat messages so that the listener would never forget them.
Sankara took his Snake/Rope, Pot/sky similes till the end. They are his favourite imageries.
Snake- rope gave us the picture of Maayaa (illusion)
Pot broken- sky merged with sky- meant man’s soul merges with Brahman, the God.
Towards the end he repeated umpteen times his messages: ‘Ekam EvA dviteeyam’ (There is one without two (brahman)
and
‘Brahma satyam, jagat mithya’ “Brahman is the real reality, the world is deceptive”.
513. I am verily that Brahman, the One without a second, which is the support of all, which illumines all things, which has infinite forms, is omnipresent, devoid of multiplicity, eternal, pure, unmoved and absolute.
The reason I wrote this series is , I have made marginal remarks from Tamil poems and Sri Ramakrishna Stories when I first read it in 1994. Normally they are not available in many English commentaries by great scholars.
I missed some more similes, analogies, metaphors such as building castle in air, soldiers, mirage, shade, corpses, cockroach, eclipse, thief, sandal etc in the VC. Hope you read VC in full and enjoy them.
I made more comparisons with Tamil Veda Tirukkural and Bharati Poems which will suit Tamil audience. So I avoided them as well.
Somewhere I read that Sri Ramana Maharishi has chosen ten important slokas/ couplets from the VC. Those who want the gist may read it.
If one reads this or the simplified version –his Bhaja Govindam, that will provide immense knowledge of Vedanta (end of Veda; the conclusion of Vedas).
Please go to wisdomlib.com for anything in Sanskrit and go to Project Madurai websites for any poem in Tamil. They are free and No Cookies.
–subham—
Tags- VC 43, Sankaraya Mangalam, last part, Father, Sankara.
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30
உண்மை என்பதை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. ஏனெனில் குருகுலத்தில் ஐந்து வயதுப் பையன் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லித் தரும் முதல் வாக்கியம் சத்யம் வத, தர்மம் சர , ஸ்வாத்யாயான் மா ப்ரமதஹ என்பதாகும்.தைத்ரீய உபநிஷத்தில் உள்ள இந்த மந்திரத்தின் பொருள்:
‘सत्यं वद। உண்மையே பேசு;
घर्मं चर। தர்மத்தைக் கடைப்பிடி;
स्वाध्यायान् मा प्रमदः।’ ‘சோம்பேறித்தனத்துக்கு இடம் கொடுக்காதே
விருந்தோம்பல் (அதிதி தேவோ பவ ) என்பதை உலகில் எங்கும் சிறுவர்களுக்கு கற்பித்ததில்லை. திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களில் இதற்கென ஒரு அத்தியாயமே ஒதுக்கியது உபநிஷத் மந்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸத்ய / உண்மை என்ற சொல் குறைந்தது எட்டு நாமாக்களிலாவது வருகிறது.
SATHYAMEVA JAYATE- INDIAN EMBLEM
1.சத்யஹ – நாம எண் 106-
கடவுள் என்பவர் ஸத்யம் / உண்மை வடிவானவர்.
தைத்ரீய உபநிஷத் சொல்கிறது
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம .= இறைவனே உண்மையின் வடிவம்;அறிவின் வடிவம்; எல்லையற்ற பரம்பொருளின் வடிவம் ; பிரம்ம = கடவுள் – இறைவன்- ஆண்டவன்
மீண்டும் 2-6-1 மந்திரத்தில்
ஸச்ச த்யச்சா பவேத் = அருவமும் உருவமும் ஆனவர்;
ஐதரேய ஆரண்யகம் 2-1-56 சொல்வதாவது
ஸதிதி ப்ராணாஹா தீத்யன்னம் . யமித்யஸா வாதித்யஹ = ஸத் -பிராணன் /உயிர் , ; இதி -அன்னம் ; யம் – சூரியன் ஆகையால் ஆண்டவன் என்பவன் உயிர், உணவு, ஒளி ரூபத்தில் உள்ளான்
xxxx
2. சத்யஹ – நாம எண் 212-
உண்மையின் ஒட்டு மொத்த வடிவமாக உள்ளவர்.
தஸ்மை சத்யம் பரமம் வதந்தி — ஆகையால் சத்யமே உயர்ந்தது
அல்லது பிருஹதாரண்யக உபநிஷத் 2-3-6 சொல்கிறது:
ப்ராணா வை சத்யம் தே ஷாம் ஏஸ ஸத்யம் – பரமாத்மனே சத்யம்
(உண்மையை கடவுள் என்று சொல்லும் ஒரே மதம் இந்துமதம் . ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் என்ன நிகழும்? அரசியல்வாதிகளும், ஆளும் அரசாங்கமும் சொன்ன சொல்லக் காப்பாற்றாவிடில் என்ன நிகழும் ? சூரியனும் சந்திரனும் கிரகங்களும் அவைகள் ஏற்றுக்கொண்ட பாதைகளை பின்பற்றாவிடில் என்ன நிகழும்? என்று யோசித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.
பொய்க்காத ஞானம் முதலிய குணங்களும் வீரச் செயல்களும் உடையவர் தர்மங்கள் எனப்படும் தமது கல்யாண குணங்களும்பராக்கிரமம் எனப்படும் திவ்ய சேஷ்டிதங்களும் வீண் போகாமால் உலகத்தை உய்விக்கும்படி இருப்பவர் என்பது பட்ட பாஸ்கரர் உரை.
பட்ட பாஸ்கரர் சொல்கிறார்- ஸத்யத்தில் அவர் நிலை பெற்றிருக்கிறார் ; அவரிடத்தில் ஸத்யம் நிலை பெற்றிருக்கிறது.
xxx
ஸத்ய தர்ம பராயணஹ — நாம எண் –870-
ஸத்தியத்தையும் தர்மத்தையும் முக்கியமாக்க கொண்டவர்
xxxx
ஓம்
இந்தியாவில் உதித்த எல்லா மதங்களும் ஓம் என்னும் பிரணவத்தைப் போற்றித் துதிக்கின்றன. இதுவும் கர்மா, மறுபிறப்புக் கொள்கையும் இந்து, புத்த, சமண, சீக்கிய மதங்களுக்குப் பொதுவானவை.
தமிழில் திருவாசகம் முதல் பாடல் ஓம் என்னும் மந்திரத்தில் துவங்கி ஓம் என்னும் ஓரெழுத்தில் கடைசி பாடல் முடிகிறது .திரு மந்திரத்தில் 300 பாடல்களுக்கு மேல், ஓம் என்னும் ஏகாக்ஷரம் பற்றியவை.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச)
பிரணவ – நாம எண் 409-
ஓம் என்று ஒலிப்பவர் ; ஓம் என்ற மந்திரத்தால் வணங்கப்படுகிறவர்.
கருவினைச் சிதைத்த பாவமும் கூட ஒரு மாதத்துக்கு 16 பிராணாயாமம் செய்யும்போது ஓம் என்னும் பிரணவத்தை உச்சரிப்பதன் மூலம் அகலும் என்று மனு கூறுகிறார்.
सव्याहृतिप्रणवकाः प्राणायामास्तु षोडश ।
अपि भ्रूणहनं मासात् पुनन्त्यहरहः कृताः ॥ 11-२४८ ॥
savyāhṛtipraṇavakāḥ prāṇāyāmāstu ṣoḍaśa |
api bhrūṇahanaṃ māsāt punantyaharahaḥ kṛtāḥ ||Manu 11- 248 ||
Sixteen ‘Breath-Suppressions’ with the Vyāhṛtis and the Praṇava, performed daily, purify, in a month, even the ‘murderer of the embryo’ (Brāhmaṇa).—(248)
பிரணாம் (வணங்குதல்) செய்யும்போது வேதங்கள் ஓம் சொல்லுவதால் இதைப் பிரணவம் என்று அழைப்பதாக ஸநத்குமார சொல்கிறார்.
வேதங்கள் அவரை வணங் குவதால் பிரணவம் எனப்படுகிறது என்று சங்கரர் சொல்கிறார்.
—subham—
Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30, ஓம் பிரணவம், மனு
31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு உதவி
1963 மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கு வந்தார். டெல்லி. லூதியானா, கான்பூர், பூனே, இந்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கி தனது கோதுமை விளைச்சல் உத்தியை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். 1975 வரை இந்தியாவில் இருந்து இந்திய கோதுமை விளைச்சலில் வெற்றியைக் கண்டார் அவர்.
அவருக்கு இந்திய அரசு 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை அளித்துச் சிறப்பித்தது. அவருக்கு 2013-ல் டெல்லியில் ஐ.சி.ஏ.ஆர். கட்டிட வளாகத்தில் ஒரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
நோபல் பரிசு
1970-ல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வேயிலிருந்து அவர் நோபல் பரிசு பெற்ற செய்தியானது அவருக்கு மெக்ஸிகோவில் காலை நான்கு மணிக்கு அவரது மனைவியிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர்லாக்கோ அதற்கு முன்பேயே நாற்பது மைல் தள்ளி உள்ள டோலுகா பள்ளத்தாக்கு என்ற தனது சோதனை வயல்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மனைவி விரைந்து சென்று அவரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். போர்லாக் இதை நம்பவில்லை. அனைவருமாகச் சேர்ந்து ஒரு புரளியைக் கிளப்பி தன்னைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்றே நினைத்தார்.
டிசம்பர் 10-ஆம் தேதி பரிசைப் பெற்ற பின் தனது உரையில், “ பசியால் வாடும் உலகம் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் போது விவசாயமும் உணவு உற்பத்தியும் எவ்வளவு முக்கியமானது என்பதை அடையாளப்படுத்த ஒரு தனிமனிதனான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது” என்று எளிமையாகக் குறிப்பிட்டார்.
உலகின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அவர் போற்றிப் புகழப்பட்டார்.
எஸ்.ஏ.ஏ
சஸகாவா ஆப்ரிக்கா சங்கம் (எஸ்.ஏ.ஏ.) என்ற சங்கத்தை உருவாக்கி 1989 முதல் 2009 முடிய அதன் தலைவராக அவர் இருந்தார். 15 ஆப்பிரிக்க நாடுகளில் 80 லட்சம் விவசாயிகளுக்கு அவர் அமோக விளைச்சலுக்கான பல உத்திகளைக் கற்றுக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்தார். அதனால் விளைச்சல் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் ஆனது. அனைவரும் மகிழ்ந்தனர்.
குடும்பம்
கல்லூரியில் படிக்கும் போது டிங்கிடவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு காப்பி விற்கும் பெட்டிக் கடையில் மார்கரெட் ஜிப்ஸன் என்ற பெண்மணியைச் சந்தித்த போர்லாக் அவரை 1937-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள், ஐந்து பேரக் குழந்தைகள் ஆறு கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. 69 வருட மண வாழ்க்கை நீடித்த பின்னர் 2007-ல் மார்கரெட் தனது 95-ம் வயதில் தடுக்கி விழுந்ததால் மரணமடைந்தார்.
விருதுகள்
வாழ்நாள் முழுவதும் அவர் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை. 2004-ல் 18 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு 49 கௌரவ பட்டங்களை அளித்துக் கௌரவித்தன. அமெரிக்காவில் நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவரின் பதக்கப் பரிசு மற்றும் அமெரிக்க காங்கிரஸின் தங்கப் பதக்கம் ஆகிய மூன்றையும் இதுவரை பெற்றவர் ஐவர் மட்டுமே. அதில் போர்லாக்கும் ஒருவர்.
புத்தகம்
போர்லாக்கைப் பற்றி ஏராளமான புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நார்மன் போர்லாக் இருபத்திநான்கரை கோடி பேரைக் காப்பாற்றியதை விவரிக்கும் புத்தகமான “நார்மன் போர்லாக் – ஓவர் 245 மில்லியன் லைவ்ஸ் சேவ்ட்” என்ற புத்தகம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
மறைவு
இறுதி வரை உழைப்பை மேற்கொண்ட போர்லாக் பழுத்த 95-ம் வயதில் 2009, செப்டம்பர் 12-ம் நாளன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மரணமடைந்தார்.
அவரது கல்லறையில் பொருத்தமான ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது இப்படி:
“உலகிற்கு உணவளித்த மனிதர் இவர்.”
சமூக நீதியின் முக்கிய அம்சம்!
ஏராளமான அவரது பொன்மொழிகளில் முக்கியமான கூற்று இது தான்:
“சமூக நீதியின் முக்கியமான முதல் அம்சம் மனித குலம் முழுவதற்கும் போதுமான உணவை வழங்குவது தான்!”
அமெரிக்காவில் பிறந்தாலும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்ற குறளின் அடிப்படையில் (குறள் எண் 322) வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய போர்லாக்கை உலகம் மறக்க முடியுமா என்ன?
325. If the mind ever so slightly strays from the Ideal and becomes outgoing, then it goes down and down, just as a play-ball inadvertently dropped on the staircase bounds down from one step to another.
Notes:
[Ideal—Brahman. Cf. Mundaka II. ii. 3-4.
What a terrible and graphic warning to happy-go-lucky aspirants! ]
xxxx
Adi Sankara was down to earth in explaining the greatest Hindu philosophy Advaita (Monism). Man is God is the ultimate truth. But the strangest thing is that he used even ball game in his hymn.
Hindu literature is full of ball games. But it is not the foot- ball that was invented by the ancient South American civilizations. Tamil and Sanskrit poems described the flower balls that were used as Volley Balls.
There is a genre in Tamil called அம்மானை Ammaanai, where women sit or stand in circles and play ‘throw and catch’ ball game. Another version is, they sit one against another and throw the pebbles or flower balls or big and light seeds skyward like a juggler.
Depending upon the skill of the person, the number of balls or round objects are used.
2000 year old Sangam literature has several references to flower balls used in games. It was a woman’s game in ancient India
xxxx
Here is a story from my old article:
There is another mystery in Indian literature. But I don’t think anyone can do it today. This art has disappeared long ago. The Brhatkatha translated into Tamil as Perunkatai has an anecdote. A person tells the features of a beautiful woman from her finger prints. Finger prints are used now in forensic investigation. Ancient Indians used it to identify people, draw pictures etc. if it is revived the criminal investigation will be much more easier. Following anecdote is in Perunkatai, Tamil adaptation of Bruhat Katha:–
A beautiful lady by name Madana Manjika was playing ball game on the terrace of her highly raised building. The ball jumped out and fell on Naravanan who was riding an elephant at that time. Naravanan looked at the girl and the ball and fell in love with her. Madana also looked at Naravanan and fell in love with him. But she did not collect he ball. Naravanan called his friend Gomukhan and asked him to find the owner of the ball.
Gomukhan simply looked at the ball and found out her finger prints in the sandal paste on the ball. He started giving the description of every part of her body . Then told him it must be Madana manjika. It may sound like fiction today. But in those days there were people who could draw the picture of a person by simply looking at the hand or the finger prints.
Even the finger print technology used in the modern criminal investigation had its beginning in India.
xxxx
செப்பும் பந்தும் போல. Like a box and a bal- is a proverb in Tamil. Both are children’s toys.
In Sangam Tamil literature ball game was also called கழங்கு Kazangu. Following are few references to ball games in Sangam corpus:-
Perumpaanaatruppadai- line 335
Nattrinai – 47, 79,
Pathitruppaththu – 15-5
Paripaatal- 8-106/7
Akanaanuuru – 17, 49, 66
Puranaanuuru – 36
xxxx
From Tamil Dictionary
ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.
—SUBHAM—
TAGS- ball game, Sankara, Viveka Chudamani, Sangam Tamil poems, Brhad katha, Madana manjika story Research Article on VC-42
பன்றியாய் பிறப்பாயாகுக ; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45
மனு ஸ்ம்ருதியில் பாவம் செய்வோர் எந்தெந்த விலங்குகளாகப் பிறப்பார்கள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. மாணிக்கவாசகர் போன்றோர் பெயர் சொல்லாமல் விலங்கு, பறவை, புழுவாகப் பிறந்த ஒரு பட்டியலைத் தருகிறார்கள் . ஆனால் திரு மூலர் ஒரே ஒரு விலங்கினை மட்டும் மறுபிறப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார். அது இந்தியர்கள் வெறுக்கும் பன்றி!
இதோ அந்தப் பாடல்
கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்
தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்
பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு
ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!
Those who ask others to kill animals (for meat)
Those who force others to eat meat
Will be born as pigs and suffer in seven types of hell
This is the order by Lord Siva! True indeed!
xxxx
மாமிசம் தின்பவன் நரகத்துக்குப் போவான் என்பதை வள்ளுவரும் அடித்துக் கூறுகிறார்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.–255
If flesh you eat not, life’s abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.-255
xxxx
இதோ வள்ளுவர் கிண்டல் !
வள்ளுவர் புத்த மதத்தினரைக் கிண்டல் செய்கிறார் ; ஏனெனில் அவர் தீவிர ஹிந்து; பெளத்தர்கள் மற்றவர்கள் அடித்துக்கொன்று கொடுத்தால் சாப்பிடுவார்கள் ; இலங்கையில் புத்த குருமார்கள் இதற்காகவே சாலை ஓரங்களில் காத்து நிற்பார்களாம்; மஹா பாவிகள் !
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
‘We eat the slain,’ you say, by us no living creatures die;
Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?
நான் ஹாங்காங் சென்ற பொழுது பய பக்தியுடன் புத்தர் கோவிலுக்குப் போனால், எல்லோரும் பன்றிக்குட்டியைத் தோலுரித்து பாலிதீன் கவர்களில் போட்டுக்கொண்டு வந்து படையல் செய்ததைப் பார்த்து திகைத்து நின்றேன் ; புத்தர் மட்டும் உயிரோடு இருந்தால் 100 முறை தற்கொலை செய்துகொள்வார்.
xxxx
நூறு அஸ்வமேதம் செய்யும் பலன் , மாமிசம் தின்னாத புண்ணியவானுக்குக் கிடைக்கும் என்று மனுவும் (5-53) செப்புகிறார்
वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः । मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥
varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ | māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||
If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(53.)
xxxx
நோய் ஏன் வருகிறது? ஏனெனில் அவர்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றியைக் கொன்று தின்ற பாவத்தால் வருகிறது என்கிறார் தமிழ்வேதம் தந்த வள்ளுவன்
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்-330
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.–330
xxxxx
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.குறள் 329:
(மாமிசம் தயாரிப்பவன் கீழ் ஜாதி.)
Whose trade is ‘killing’, always vile they show,
To minds of them who what is vileness know.
xxxx
இதனால்தான் மாமிசம் சாப்பிடாத பிராமண ஜாதியை தமிழ், ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் புகழ்ந்து முன்னிலையில் வைக்கின்றன. இதனால் சத்துவ குணம் அதிகரிக்கும். ஆன்மீகப் பாதையில் எளிதில் முன்னேற வழி பிறக்கும். வள்ளலார் முதலிய பெரியோரும் இதை வலியுறுத்துவது இதனால்தான்.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும், நாஸ்தீகர்களும் திருக்குறளைப் பரப்பாமல் இருப்பதற்கும் இதுவே காரணம் அவர்களால் மாமிசம் சாப்பிடாமல் வாழ முடியாது ; சில இருதய நோயாளிகள் மட்டும் கூடிய மட்டிலும் மாமிசத்தைத் தவிர்க்கிறார்கள்.
மீனாட்சி கோவில் போன்ற இந்துக் கோவில்களில் மட்டுமே திருக்குறளைக் காணலாம். தமிழ் வேத மாகிய திருக்குறள் சொல்லும் மறுபிறப்புக் கொள்கையையும் இந்தியாவில் தோன்றிய ம்தங்கள் மட்டுமே ஏற்கும். மத்தியக் கிழக்கில் தோன்றிய மூன்று மதங்களும் ஏற்காது .
xxxx
பாம்பு, பல்லி, பன்றி, நாய், கழுதையாக யார் பிறப்பர் ?- மநு தரும் பட்டியல் (Post.7945)
மநு நீதி நூல் – பகுதி51
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7945
Date uploaded in London – 9 May 2020
Contact – swami_48@yahoo.com
மனு ஸ்ம்ருதி 12-ஆவது அத்தியாயம்
மனு ஸ்ம்ருதி 12-ஆவது அத்தியாயம் Manu Chapter 12
54. Those who committed mortal sins (mahapataka), having passed during large numbers of years through dreadful hells, obtain, after the expiration of (that term of punishment), the following births.
55. The slayer of a Brahmana enters the womb of a dog, a pig, an ass, a camel, a cow, a goat, a sheep, a deer, a bird, a Kandala, and a Pukkasa.
56. A Brahmana who drinks (the spirituous liquor called) Sura shall enter (the bodies) of small and large insects, of moths, of birds, feeding on ordure, and of destructive beasts.
57. A Brahmana who steals (the gold of a Brahmana shall pass) a thousand times (through the bodies) of spiders, snakes and lizards, of aquatic animals and of destructive Pisakas.
58. The violator of a Guru’s bed (enters) a hundred times (the forms) of grasses, shrubs, and creepers, likewise of carnivorous (animals) and of (beasts) with fangs and of those doing cruel deeds.
59. Men who delight in doing hurt (become) carnivorous (animals); those who eat forbidden food, worms; thieves, creatures consuming their own kind; those who have intercourse with women of the lowest castes, Pretas.
60. He who has associated with outcasts, he who has approached the wives of other men, and he who has stolen the property of a Brahmana become Brahmarakshasas.
61. A man who out of greed has stolen gems, pearls or coral, or any of the many other kinds of precious things, is born among the goldsmiths.
62. For stealing grain (a man) becomes a rat, for stealing yellow metal a Hamsa, for stealing water a Plava, for stealing honey a stinging insect, for stealing milk a crow, for stealing condiments a dog, for stealing clarified butter an ichneumon;
63. For stealing meat a vulture, for stealing fat a cormorant, for stealing oil a winged animal (of the kind called) Tailapaka, for stealing salt a cricket, for stealing sour milk a bird (of the kind called) Balaka.
64. For stealing silk a partridge, for stealing linen a frog, for stealing cotton-cloth a crane, for stealing a cow an iguana, for stealing molasses a flying-fox;
65. For stealing fine perfumes a musk-rat, for stealing vegetables consisting of leaves a peacock, for stealing cooked food of various kinds a porcupine, for stealing uncooked food a hedgehog.
66. For stealing fire he becomes a heron, for stealing household-utensils a mason-wasp, for stealing dyed clothes a francolin-partridge;
67. For stealing a deer or an elephant a wolf, for stealing a horse a tiger, for stealing fruit and roots a monkey, for stealing a woman a bear, for stealing water a black-white cuckoo, for stealing vehicles a camel, for stealing cattle a he-goat.
68. That man who has forcibly taken away any kind of property belonging to another, or who has eaten sacrificial food (of) which (no portion) had been offered, inevitably becomes an animal.
69. Women, also, who in like manner have committed a theft, shall incur guilt; they will become the females of those same creatures (which have been enumerated above).
–subham–
TAGS- பன்றி, திருமூலர் சாபம், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45, மறுபிறப்பு, புலால், மாமிசம், உண்ணுதல் நரகம் சிவன் ஆணை, மனு ஸ்ம்ருதி, 12-ஆவது அத்தியாயம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எங்களது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1998)
With Kamaraj and Bhaktavatsalam
With Sathya Sai Baba
With Rajaji
திரு வெ.சந்தானம் அவர்களின் லியோ டால்ஸ்டாய்எழுதிய ‘அன்னா கரீனா’ நாவல் மொழிபெயர்ப்பு
ச.நாகராஜன்
எமது தந்தையார் திரு வெ.சந்தானம் அவர்கள் நெடுங்காலம் தமிழ் பத்திரிகை உலகில் சேவை செய்தவர். ஆன்மீகம் வளர அவர் செய்த அளப்பரும் சேவையை தமிழ் உலகம் நன்கு அறியும்; குறிப்பாக தினமணி வாசகர்கள் நன்கு அறிவர்.
அவர் இலக்கிய உலகில் ஆற்றிய சேவையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. நூற்றுக் கணக்கான கட்டுரைகளும், கீர்த்தனைகளும் அவர் படைத்தார்.
முதலில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் அன்னா கரினினா நாவலை அவரே தமிழில் மொழி பெயர்த்தார்.
‘அன்னா கரீனா’ நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 1947-ம் வருடம் மார்ச் 22-ம் தேதி முதல் பதிப்பாக தமிழ்ச் சுடர் நிலையம் சார்பாக வெளியிடப்பட்டது.
அதற்கு தமிழ்ச் சுடர் நிலையம் உரிமையாளர் திரு அ.கி, கோபாலன் பதிப்புரை வழங்கினார்.
திரு ரா.ஶ்ரீ. தேசிகன் அவர்கள் அதற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கினார்.
முன்னுரையை எனது தந்தையார் அவர்கள் வழங்கினார்.
பதிப்புரையையும், முகவுரையையும் புத்தகத்தில் உள்ள படியே இங்கு வழங்குகிறோம்.
அவர் நினைவைப் போற்றுகிறோம்.
JAI HIND; VANDE MATARAM
—–subham—-
tags— லியோ டால்ஸ்டாய் , ‘அன்னா கரீனா’ , வெ.சந்தானம் மொழிபெயர்ப்பு ,