QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ (Post No.12,994)

Hawa Mahal,Jaipur 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,994

Date uploaded in London – –   8 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number 109

Amber Palace, Jaipur

1.ஜெய்ப்பூர் நகரம் எங்கே இருக்கிறது?அதன் சிறப்பு என்ன ?

xxxx

2.ஜெய்ப்பூரில் கோவில்கள் உள்ளனவா முக்கியக் கோவில்கள் எவை ?

xxxx

3.குரங்குக் கோவில் எங்கே இருக்கிறது?

xxxx

4.ஜெய்ப்பூர் அரண்மனைகளில் ஹவா மஹால் ஏன் மிகவும் பிரசித்தமாகியது?

xxxx

5.ஜல் மஹால் என்று அழகிக்கப்படும் நீர் அரண்மனையை யார் காட்டினார்?

xxxx

6.முதல் சுதந்திர போரில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் கோட்டை எது?

xxxx

7.ஜெய்ப்பூருக்கு அருகில் பவானி அம்மனின் பெயர்தாங்கிய கோட்டை எது ?

xxxx

8.நகரிலுள்ள முக்கிய மியூசியத்தில் பெயர் என்ன அங்கே என்ன என்ன பார்க்கலாம் ?

xxxx

9. சிட்டி பாலஸ் அரண்மனையை யார் கட்டினார் அங்கே இப்போது என்ன உள்ளது?

xxxx

10.ஐந்து நகரங்களில் ஜந்தர் மந்தர் Jantar Mantar என்ற பெயரில் ஜெய்ப்பூர் மன்னர் வானாராய்ச்சிக் கூட்டங்களைக் கட்டினார் ஜெய்ப்பூர் நிலையத்தின் சிறப்பு என்ன?

xxxx

Jaipur Bag

Jal Mahal, Water Palace

விடைகள்

1.இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகரம் ஜெய்ப்பூர்  இங்குள்ள கட்டிடத்தின் நிறம் இளம் சிவப்பு; ஆகையால் இதை பிங்க் சிட்டி Pink City என்று அழைக்கிறார்கள் . இங்குள்ள அரண்மனைகள் காரணமாக இது மிகவும் புகழ்பெற்றது . அத்தோடு இங்கு தயாரிக்கப்படும் துப்பட்டிகள், கம்பளங்கள், நெய்யப்படும் புடவைகள், செய்யப்படும் பளிங்குக்கல் பெட்டிகள் , நகைகள், வளையல்கள்  ஆகிய அனைத்தும் ஒப்பற்ற ராஜஸ்தான் பாணியில் கண்ணைக் கவரும் பொருட்களாக மிளிரும் . பல வண்ணங்கள் ஜொலிக்கும். டில்லியிலிருந்து 288 கிமீ தொலைவில் இருக்கிறது.பிர்லா மந்திர் முதலிய கோவில்கள் இருக்கின்றன. 

Xxxx

2.பத்து கி.மீ தொலைவில் ஆரவல்லி குன்றுகளின் பாறைகளிடையே அமைந்த கல்தாஜி கோவில் மிகவும் பிரசித்தமான வைஷ்ணவ கோவில் ஆகும். இது 500 ஆண்டு பழமையான ராமானந்த சம்ரதாயத்தினரின் புனிதத் தலம்  . பல மாநில பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ராமானந்த சம்பிரதாய மகான்களின் புனித குகைகள் உள்ளன. மேலும் ஏழு புனித ஊற்றுகளிலிருந்து வரும் நீர் கல்தா குண்டத்தில் சேருகின்றன. அங்கே குளிப்பது புனித நீராடல் ஆகும்.  மகர சங்கராந்தி / பண்டிகையின்போது பல்லாயிரக் கணக்கானோர் நீராட வருகின்றனர் . மலை மீதும் இயற்கை நீரூற்று உண்டு. அங்கிருந்துநகர் முழுதையும் காணலாம்; சூரியன் கோவிலும் இருக்கிறது .

xxxx

3.கல்தாஜி கோவில் வளாகத்தில் சீதாராம் கோவில் இருக்கிறது; இங்கு சுமார் 200  குரங்குகள் இருக்கின்றன. இதனால் இதை ஆங்கிலேயர்கள் குரங்குக் கோவில் என்று அழைத்தனர் .

xxxx

4.ஹவா என்றால் காற்று ; இதில்  சுமார் ஆயிரம் ஜன்னல்கள் இருப்பதால் இதை காற்று வீசும் அரண்மனை என்று அழைத்தனர். இதை 200  ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூர் மன்னர் சவாய பிரதாப் சிங் கட்டினார். இளம் சிவப்புக் கற்களினால் கட்டப்பட்ட இங்தக கட்டிடம் காலை சூரிய ஒளியில் பொன்போல தகதகக்கும் .  953 சிறிய ஜன்னல்களை ஜரோகாக்கள் என்று கூறுவர். ஐந்தடுக்குக் கட்டிடத்தின் மேல்புற ஜன்னல்களிலிருந்து ராணியும் அவருடைய தோழிகளும் நகரின் முக்கியவீதியைப் பார்க்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டது ராஜஸ்தானி/ மார்வாரி குடும்ப பெண்கள் வெளியே வரமாட்டார்கள் .

ஜெய்ப்பூர் நகரத்தை  திட்டமிட்டு  உருவாக்கிய லால் சந்த் உஸ்தா இந்த ஹவா மஹாலையும் திட்டமிட்டார்.

Xxxx

(5).  300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன்  சாகர் ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டது ஜல மஹால்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் ஜெயசிங் என்ற மன்னர் கட்டினார். மாழைக்காலத்தில் கட்டிடத்தின் ஐந்து அடுக்குகளில் 4 அடுக்குகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.

Xxxx

(6). 1857-ல்  பிரிட்டிஷாரை எதிர்த்து இந்தியப்படையினர் புரட்சி செய்தனர். இதை  சிப்பாய் கலகம் என்று வெள்ளைக்காரர்கள் மட்டம்தட்டி இகழ்ந்தபோதும் இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று வீர சாவர்க்கர் அழைத்தார். மராத்திய படைகளையும் ஆங்கிலப் படைகளையும் சமாளிப்பதற்காக ஜெய்ப்பூர் மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங், கிபி 1734ல் நாகர்கர் கோட்டையை  நிறுவினார். 1857 ல் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கின. இது நகருக்கு அருகில் இருக்கிறது.

xxxx

7.நகரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கோட்டை அம்பாளின் (பவானி அம்மன்) பெயரில் ஆம்பர் கோட்டை என்று அழைக்கப்படுகிறது ; இது ஆயிரமாண்டுகளுக்கும் மேலான பழமை உடையதால் யுனேஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் குலத்தினர் முதலில் அமைத்த சிறிய கட்டிடத்தை 1000  ஆண்டுகளுக்கு முன் ராஜ மான் சிங் அரண்மனையாகக் கட்டினார். பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.  அருகில் பெரிய ஏரி இருக்கிறது; ஆமேர்  என்னும் ஊரில் இருப்பதால்  ஆமேர்  கோட்டை என்றும் சொல்லுவார்கள் .

xxxx

8.ஜெய்ப்பூரில் பத்து மியூசியங்கள் இருக்கின்றன . அவைகளில் மிகவும் புகழ்வாய்ந்தது ஆல்பெர்ட் ஹால் மியூசியம். இது இரண்டு அடுக்குமாடி கட்டிடம் . ராஜஸ்தான் மாநில ம்யூசியமாக கருதப்படும் இங்கு ஓவியங்கள் கம்பளங்கள், நகைகள், தந்தத்தினாலான பொருட்கள், கற்சிலைகள், உலோக விக்கிரகங்கள், கிரிஸ்டல் என்னும் பலிங் கு கற்களிலான உருவங்கள் முதியவற்றைக் காணலாம்.இவை அனைத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. பல கைவினைப் பொருட்களையும் காணலாம்.

xxxx

 9.ஜெய்ப்பூர் சமஸ்தான தலைநகரை ஆம்பர் நகரிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றியவுடன் இரண்டாம் ஜெய் சிங் 1732- ல் இதை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினார் . அதுமுதல் மன்னர் குடும்ப வசிப்பிடமாகவும் நிர்வாக அலுவலமாகவும் திகழ்கிறது.

இளஞ்சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டது; அரண்மனை சுவர்களையும் , கூரைகளையும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகள்  அலங்கரிக்கின்றன.

ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தின் மேற்கு பகுதியில் அமைந்த சந்திர அரண்மனை ஏழு தளங்கள் கொண்டது. இவ்வரன்மனை அழகிய ஓவியங்கள், பல நிறக் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பூக்களால் ஆன சுவர்கள், தரைகளைக் கொண்டது..

சந்திர மகாலின் நான்காம் தளத்தை, சோபா நிவாஸ் என்பர். இது கண்ணாடி மாளிகை .ஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தை ஸ்ரீ  நிவாஸ் என்பர். ஏழாம் தளத்தை மணி மகுடக் கோயில் என்பர். அரண்மனைக்குள் கிருஷ்ண கோவில் இருக்கிறது ப்ரீத்தம் நிவாஸ் சதுக்கத்தில் இந்துக் கடவுளர்களைக் காணலாம்.

இங்கு ஒரு மியூசியமும் இருக்கிறது; அரச குடும்பத்தினர் 500 ஊழியர்கள், சேவகர்களுடன் வசிக்கின்றனர் . திவானி ஆம், திவானிகாஸ் என்று பல பகுதிகளைக் கொண்ட விஸ்தாரமான அரண்மனை இது.

Xxxx

10.இங்குள்ள சன் டயல்,Sun Dial,  கருவிதான் உலகிலேயே மிகப்பெரியது ; சூரியனின் நிலையையும் துல்லியமான நேரத்தையும் காட்டுவது சன் டயல் என்னும் சூரிய கடிகாரம் ஆகும்.

City Palace

–சுபம்–

Tags- சிட்டி பாலஸ், சன் டயல், கண்ணாடி மாளிகை, ஆல்பெர்ட் ஹால் மியூசியம், குரங்குக் கோவில், ஹவா மஹால், ஜெய்ப்பூர், அரண்மனை

செப்பு மொழி 500 + (Post No.12,993)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,993

Date uploaded in London – — 8 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 புத்தக அறிமுகம் 131 

செப்பு மொழி 500 +

ச.நாகராஜன்

 செப்புமொழி 500 + நூலில் உள்ள எனது என்னுரை இது: 

என்னுரை

 சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள்,

நடிக, நடிகையர் என பலரும் காலம் காலமாக முத்திரை

வாக்கியங்களைச் சொல்லி அனைவரது உள்ளங்களையும்

கொள்ளை கொள்கின்றனர்.

இவைகளில் பல பொன் மொழிகள்; சில FUN மொழிகள்!

சிந்தனைக்கு விருந்தாகவும் வழிகாட்டியாகவும் அமைபவை

பல; எனில் வேடிக்கையாகவும் நையாண்டி மொழிகளாகவும்

மிளிர்பவை பல.

காலம் காலமாக பல்வேறு நாடுகளிலும் பழமொழிகளும்

சுவையானவை; சிந்தனைக்கு விருந்தளிப்பவை.

அவ்வப்பொழுது இவற்றைப் பயன்படுத்தி அனைவரையும்

மகிழ்விக்கலாம். உத்வேகமூட்டும் மொழிகளால் வாழ்க்கைப்

பாதையை நல்ல விதமாகவும் வகுத்துக் கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது படித்து அவற்றைத்

தொகுத்துச் சேர்ப்பது எனது வழக்கமாக இருந்தது; ஆனால்

இப்போதோ இவை இணைய தளத்தில் ஏராளமாக

மிதக்கின்றன.

இவற்றில் 500 + மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கு

தொகுத்துத் தருகிறேன்.

ஆங்கிலத்தில் மூலம் உள்ளது; தமிழாக்கம் என்னுடையது.

இவை அனைத்து செப்பு மொழி பதினெட்டு, பத்தொன்பது,

இருபது என்று பற்பல கட்டுரைகளாக அவ்வப்பொழுது

http://www.tamilandvedas.com தளத்தில் வெளி வந்தன. இவற்றை

வெளியிட்ட லண்டன் திரு.ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த செப்பு மொழிகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி

ஊக்கமூட்டிய அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி

உரித்தாகுக.

இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka

Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்

அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

பங்களூர் ச.நாகராஜன்

14-12-2022

*

நூலில் உள்ள அத்தியாயங்கள்

என்னுரை

அத்தியாயங்கள்

1. செப்பு மொழி முதல் நூறு (1 முதல் 100 முடிய)

2. செப்பு மொழி 101 முதல் 200 முடிய

3. செப்பு மொழி 201 முதல் 300 முடிய

4. செப்பு மொழி 301 முதல் 400 முடிய

5. செப்பு மொழி 401 முதல் 500 + முடிய

6. வாழும் வழி :கட்டளை புதிது

 *

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் அறியலாம்.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

MY LATEST TAMIL BOOK ON PLANTS IN HINDUISM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   7 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

TITLE –   இந்து மத பண்டிகைகளில்

மரம் ,செடிகொடி வழிபாடு

பொருளடக்கம்

1.அத்தி மரத்தின் கதை: மரம், செடி, கொடிகளை வழிபடுவது பற்றி புதிய செய்திகள்!

2.புளியமரத்தின் கதை ; மரங்களைப் பற்றிய புதிய செய்திகள் 

3.இந்து மதத்தில் ஆலமர வழிபாடு

4.இந்து மதத்தில் காசித் தும்பை , நாயுருவிச் செடி வழிபாடு!

5.இந்து மதத்தில் தென்னை மரம்; தேங்காய் உடைப்பது ஏன் ?

6.இந்து மதத்தில் நெல்லிக்காய் மர வழிபாடு

7.மனசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி

8.இந்து மதத்தில் தாழம்பூ, வெட்டிவேர்

9.செங்கோல் விழாவும்,  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் — 1

10.செங்கோல் விழாவும்  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் – 2

11.நான் கண்ட பத்மநாபபுரம் அரண்மனை

12.யாழ் மூரி பதிகம் பாடி அசத்திய சம்பந்தர்

13. காசியின் 5 சிறப்புகள் ; திருமீயச்சூர் அதிசயங்கள்

14.மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு-1

15.மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு- Part 2

16.மீண்டும் வைத்தீஸ்வரன்கோயில் ! குல தெய்வ வழிபாடு ஏன்?

17.இந்துக்கள் கொண்டாடும் நான்கு நவராத்ரிகள்

18.எந்த அரிசி நல்ல அரிசி ?

19.’பாப் கார்ன்’ POPCORN உணவைக் கண்டுபிடித்தது தமிழனா? 

20.ராமனை பரதன் சந்தித்த அக்ஷய நவமி

21.அக்ஷய திருதியை – தங்கம் பொங்கும் பண்டிகை!

22.அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் -Part 1

23.அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் -Part 2

24.ப்ரொமீதியம் – அக்னீ பகவான் பெயர் கொண்ட மூலகம்

25.மனுவைக் கள்ளக்காப்பி அடித்த புத்தர்

26.சேலையூருக்கு செல்வோம் வாருங்கள்; ஒரே கல்லில் 20 மாம்பழம் அடிக்கலாம்!

27.சிறை சென்ற சாமியார் சுவாமி சாந்தானந்தா

28.சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள்

29.கிழமைகளுக்கு பெயர் சூட்டியது யார் ?

30.கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம்

31.ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் சாமியார் விமர்சனமும்!

32.பாரதி பாட்டில் சநாதனம் Sanatan! நாத்திகம் பேசுவோர் பேய்கள் Ghosts!

33.மாங்காடு காமாட்சியை தரிசித்தேன்

****************

TAGS- மரம் ,செடிகொடி வழிபாடு

வெட்டிவேர் VETTIVER ஏற்றுமதி; மருத்துவ குணங்கள் (Post No.12,992)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,992

Date uploaded in London – –   7 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இயற்கையில் ஒரு அதிசயம் வெட்டிவேர் ; இந்தியாவில் தோன்றி இப்பொழுது பல நாடுகளில் பயிரிடப்படும் இந்த தாவரத்தின் அதிசயம் என்னவென்றால் இறைவன் இதன் வேரில் நல்ல மணத்தை, நறுமணத்தை வைத்துள்ளான் . வாசனை வீசும் பூக்கள் பல்லாயிரம் உள; வாசனை தரும் இலைகள் பல உள;ஆனால் உலகம் முழுதும் அதிக விலை கொடுக்கத் தயாராகவுள்ள வேர் ஒன்றே ஒன்றுதான்; அதுதான் வெட்டிவேர் .

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இந்த தமிழ்ச் சொல் இன்று உலகெங்கிலும் அப்படியே உச்சரிப்பு, ஸ்பெல்லிங் Spelling மாறாமல் பயன்படுத்தப்பட்டுவருகிறது  என்பதாகும்

(கொஞ்சம் சுய சரிதை:- மதுரையில் வடக்குமாசி வீதியில் வசித்த காலத்தில்  வீட்டிலும் சரி, வெளியே வைக்கும் தண்ணீர் பந்தலிலும் சரி, குளிர்ந்த பானை நீரில் வெட்டிவேரை வாங்கிப் போடுவோம். நறுமணம் தரும் அந்த நீர் , உடலுக்கும் மனத்துக்கும் நலம் தந்தது ; சிலர் பந்தல் அமைத்து இலவசமாக நீர் மோரையும் வழங்குவர்; அருகிலுள்ள கருவேப்பிலைக்கார சந்தில் ஒண்டிப்பிலி நன்னாரி  சர்பத் Syrup  சிரப் செய்வோரிடம் ஒரு பாட்டில் நன்னாரி எசன்ஸ் வாங்கி எலுமிச்சம் சாறு பிழிந்து சர்பத்தும் குடிப்போம் ; இப்போது லண்டனில் ரோட்டைல் நடக்கும் போதோ  , ட்யூப் ரயிலில் பயணம் செய்யும்போதோ வெட்டிவேர் பெர்Fயூம், Perfume, சென்ட் வாசனை வருகையில் பழைய நினைவுகள் திரும்பி வருகிறது ).

விலை அதிகம் உள்ள வெட்டிவேர் எண்ணெய் இன்று நறுமணப்பூச்சில் அதிகம் பயன்படுகிறது; PERFUME பெர்Fயூம், சோப்பு, வாசனை வீசும் மெழுகுவர்த்தி என்று பல பயன்கள் இதற்கு உள்ளன.

தமிழ்நாட்டில் வெட்டிவேர் விசிறி, பாய் , ஜன்னலுக்கான தட்டிகள் ஆகியனவும் கிடைக்கின்றன.

மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தரும்.

நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும்  தரும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் ஆகியன நீங்கும்

மொத்தத்தில் இந்தியா போன்ற வெப்பநாடுக்ளில் சூட்டைத் தணிக்க இது பல வகைகளிலும் பயன்படுகிறது.

VETTIVER IN AROMATHERAPY

.அரோமா தெரபி (AROMATHERAPY0 எனப்படும் வாசனை  எண்ணெய் சிகிச்சையில் வெட்டிவேர் ஆயில் தரும் பலன்களை

இந்த எண்ணெயை முகர்ந்து பார்த்தால் மன உளைச்சல் Relieve Stress மன இறுக்கம் தீரும் .

மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும் aid concentration .

படுக்கை அறையில் வைத்திருந்தால் நல்ல தூக்கம் வரும் Promote Sleep Moisturizer

இது உள்ள க்ரீம் அல்லது மாயச்சரைசர் Moisturizer பயன்படுத்தினால் சருமம்/தோல்  ஆரோக்கியம் பெறும் Vetiver oil has skincare benefits.

XXXXX

விலை அதிகமாக காரணம் என்ன ?

ஒரு ஹெக்டேரில் வெட்டிவேர் பயிர் செய்தால் 3 அல்லது 4 டன் வேர் கிடைக்கும் . அதிலிருந்து 15  அல்லது 16  கிலோ ஆயில் / எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும்..

விலை என்ன ?

ஒரு லிட்டர் சுமார் £-600; அதாவது 60,000 ரூபாய் (600X100=60,000) முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை.

வெட்டிவேர் ஏற்றுமதி 2023  புள்ளிவிவரம்

வோல்சா சேகரித்த புள்ளிவிவரப்படி 545  நிறுவனங்கள் வெட்டிவேர் பொருட்களை/ எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. .அதை 1,487  நிறுவனங்கள் வாங்குகின்றன .

As per Volza’s Global Export data, Vetiver oil export shipments stood from World at 18.4K, exported by 545 World Exporters to 1,487 Buyers

அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் — இந்தியா 2,731 ஷிப்மென்ட்ஸ் கப்பல்களில் அனுப்புகிறது. இந்தோனேஷியா 

பிரான்ஸ் – 2,027 ; நெதர்லாந்து -1,584 shipments.

ஹைட்டி (Haiti) என்னும் நாடும் இதை அதிகம் பயிர் செய்து அனுப்புகிறது

அதிகமாக வாங்கும் நாடுகள் : நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஸ்பெயின் ,  சிங்கப்பூர் , மலேசியா, அமெரிக்கா.

நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஆகியன இதை வாங்கி பிறருக்கு ஏற்றுமதி செய்வதை மேற்படி புள்ளிவிவரம் காட்டுகிறது .

எல்லா நாடுகளின் விவரங்களும் Volza இணைய தளத்தில் உள்ளன ( Volza’s Global Export data).

XXXXX

WISOM LIBRARY GIVES FOLLOWING DETAILS

வெட்டிவேரின் தாவரவியல் பெயர் –1) Vettiver in India is the name of a plant defined with Plectranthus vettiveroides in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Coleus vettiveroides Jacob (among others).

2) Vettiver is also identified with Vetiveria zizanioides It has the synonym Anatherum muricatum (Retz.) P. Beauv. (etc.).

XXXX

Veṭṭivēr (வெட்டிவேர்) [veṭṭi-vēr] noun < வெட்டி⁴ [vetti⁴] +. [Telugu: vaṭṭivēru, M. veṭṭivēru.]

1. Cuscus-grass. See இலாமிச்சை. [ilamichai.] (பதார்த்தகுண சிந்தாமணி மேகலை [patharthaguna sindamani] 477.)

2. Black cuscus-grass. See குறுவேர்¹. [kuruver¹.] Local usage

இதன் சிறப்பு என்னவென்றால் இதை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். வெட்டிவேரொடு வேறு பல  நறு மணப் பொருட்களையும் கலந்து இருதரப்பினருக்கும் விற்கிறார்கள்

XXXX

வெட்டிவேர் பற்றிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள் கிடைக்குமிடம் :

Example references for further research on medicinal uses or toxicity (see latin names for full list):

· Bulletin de l’Institut Française d’Afrique Noire (1960)
· Flora of the Southeastern United States …
· Symbolae Antillarum (1903)
· Anales del Museo Nacional de Buenos Aires (1904)
· Journal of the Bombay Natural History Society (1941)
· Petite Flore de l’Ouest-Africain (1954)

If you are looking for specific details regarding Vettiver, for example chemical composition, pregnancy safety, extract dosage, health benefits, side effects, diet and recipes, have a look at these references.

XXXXX

ஆண்கள் பயன்படுத்தும் 12 வெட்டிவேர்  cologne, eau de toilette

Defy eau de toilette from (£33 for 30ml by Calvin Klein, available at Boots)

Amazingreen eau de parfum (from £59.50 for 50ml by Comme Des Garcons, available at Escentual)

Cèdre Vetiver eau de parfum (£32.80 for 30ml by Typology)

Light Blue Forever Pour Homme eau de parfum (from £46.75 for 50ml by Dolce & Gabbana at Look Fantastic)

Vetiver & Golden Vanilla cologne intense (from £86 for 50ml by Jo Malone London)

Vetiver Pamplemousse eau de parfum (from £15.89 for 40ml by Zara)

Vetiver Fatal cologne absolute (from £55 for 30ml by Atelier Cologne at John Lewis)

Grey Vetiver eau de toilette (from £57 for 50ml by Tom Ford, available at The Fragrance Shop)

Bel Ami eau de toilette (£98 for 100ml by Hermes, available at Selfridges)

Luna Rossa Ocean eau de toilette (from £54 for 50ml by Prada, available at Boots)

Vetiver eau de toilette (from £55 for 50ml by Guerlain)

Dark Spice & Vetiver eau de toilette (£12.50 for 100ml by M&S Fragrance Collection)

—subham—

Tags- வெட்டிவேர், Vetiveria zizanioide, வெட்டிவேர் ஏற்றுமதி

ஶ்ரீ ராமருக்கு வெற்றி! (Post No.12,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,991

Date uploaded in London – — 7 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

ச.நாகராஜன்

ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

சொந்த வீட்டை விட்டு வெளியிலே தங்க வைக்கப்பட்ட ராமர் கடைசியில் கடும் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பின்னர் அமர்க்களமாக சொந்த வீட்டில் அமர வைக்கப்பட்டு விட்டார்.

நீண்ட நெடிய போராட்டம்! 

ஏராளமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.

கொடுங்கோலன் பாபரால் (1483-1530) அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்ட பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகளாக அதை மீட்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஒவ்வொரு ஹிந்துவும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பாபர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நான்கு முயற்சிகள்

ஹுமாயூன் ஆண்ட காலத்தில்    பத்து முயற்சிகள்

அவுரங்கசீப் ஆண்ட காலத்தில் முப்பது முயற்சிகள்

ஷக்தர் அலி ஆண்ட காலத்தில் ஐந்து முயற்சிகள்

நசீர் – உத்- தின் ஹைதர் ஆண்ட காலத்தில் மூன்று முயற்சிகள்

பிரிட்டிஷார் காலத்தில் இரண்டு முயற்சிகள்

சுதந்திரம் கிடைத்தபின்னர் பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்த போது ஒரு முயற்சி

என்று இப்படி பல தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி.

மக்கள் கூட்டம் திரளாகத் திரண்டது. அப்போது முலாயம்சிங் யாதவின் அரசு. உத்தரபிரதேச போலீசார் அமைதியாகத் திரண்டிருந்த கூட்டத்தின் மீது கடுமையான அடக்கு முறையைக் கையாண்டது.

பாப்ரி மஸ்ஜித்தை இடித்து அயோத்தியில் ராமர் கோவில் மீண்டும் கட்ட வேண்டும் என்று கரசேவகர்கள் குழுமினர்.

ராம் (வயது 23) மற்றும் சரத் (வயது 20) ஆகிய இரு இளைஞர்களே முதன் முதலாக பாபர் மசூதியின் மீது காவிக் கொடியைப் பறக்க விட்டனர்.

நவம்பர் மூன்றாம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, “ராஜஸ்தானில் உள்ள ஶ்ரீகங்காநகரைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கர சேவக் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்தார்.” என்று கூறியது.

சாலையில் அவரது ரத்தத்தினால் ‘சீதாராம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

அவர் தனது பெயரைத் தான் எழுதினாரா அல்லது ஶ்ரீ ராமர் அவரை சீதாராம் என்று எழுத ஊக்குவித்தாரா என்பது இன்றும் விளங்காத ஒரு மர்மமாகவே இருக்கிறது!

அறிக்கை தெளிவாகச் சொல்லும் ஒரு விஷயம் அவர் குண்டடி பட்டுக் கீழே விழுந்த பின்னரும் கூட CRPF நபர்கள் அவரது மண்டையைக் குறி பார்த்து ஏழு முறை சுட்டனராம்.

அதிகாரபூர்வமான ஆவணத்தின் படி 16 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். உண்மையில் இன்னும் அதிகமான பேர்கள் கொல்லப்பட்டனர் என்பதே அனைவரது ஊகமாக இருக்கிறது.

அமைதியான போராட்டம் நடத்தியவர்களுக்கு இந்தக் கொடூர தண்டனை! தங்கள் மதக் கோட்பாட்டைப் பின்பற்றி பஜனை செய்தவர்களுக்கு இந்த அநியாய தண்டனை!! அடுக்குமா இது!!!

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, தங்கள் உயிர் தியாகத்தினால் இந்த பாரத தேசம் நெடுக ஒரு பெரும் எழுச்சி அலையைத் தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று!

25 மாதங்கள் ஓடின.

வந்தது 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி.

விஸ்வஹிந்து பரிஷத் அயோத்தியில் அமைதியான கர சேவை ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. வழிபாட்டிற்கென்று ஒரு இடம் திட்டமிடப்பட்டது.

நாடெங்கிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி நோக்கி வரலாயினர்.

அவர்களை ஒழுங்குபடுத்த ஏராளமான பாதுகாப்புகள் வேறு!

அன்று நடந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த மஹந்த் ப்ரஜ்மோஹந்தாஸ் எங்கும் ஒரே உற்சாகம், சந்தோஷம் தான் என்கிறார். கடவுளின் சக்தி என்றால் என்ன என்று தெரிந்தது என்று மேலும் அவர் கூறுகிறார்.

அனைவருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

கடைசியில் ஹனுமன்கார்கி அருகே உள்ள பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காலியான பஸ்ஸில் ஒரு கரசேவகர் ஏறினார். வெகு வேகமாக எல்லாத் தடைகளையும் மோதித் தகர்த்து பாப்ரி மஜ்ஜித்தை நோக்கி முன்னேறினார்.

எல்லா கரசேவர்கர்களுக்கு வழி கிடைத்தது. அனைவரும் முன்னேறினர்.

ஆறே ஆறு மணி நேரத்தில் சிதிலமடைந்திருந்த பாபர் மசூதிக் கட்டிடங்கள் மூன்றும் இடிக்கப்பட்டன.

இதில் ஒரு பெரிய ஜோக் என்னவென்றால் அரசியல் புத்திசாலிகள் அனைவரும் பாப்ரி மஜ்ஜித் இருந்த இடத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைப்பது தப்பு என்கின்றனர்.

இந்த அறிவு ஜீவிகள் அந்த இடத்தில் முதலில் இருந்தது ராமர் கோவில் என்பதை வசதியாக வேண்டுமென்றே மறக்கின்றனர்; மறைக்கின்றனர்.

உலகமே இதுவரை கண்டிராத “வரலாற்று ஆராய்ச்சியாளர்களான”

ஆர்.எஸ். சர்மா, விபன் சந்த்ரா. ரொமிளா தாபர், இர்ஃபான் ஹபீப்  ஆகியோர் பொங்கி எழுகின்றனர். வரலாற்றின் முதல் பாகத்தை மறந்தும் மறைத்தும் பேசும் இவர்கள் கரசேவகர்கள் இப்படிச் செய்யலாமா என்று பொங்கிக் கேட்கின்றனர்.

போலி செக்குலர்வாதம் பேசும் இவர்களை நாடே மன்னிக்கட்டும்; ஏனெனில் நமது பண்பு அது தான்!

ராமர் தனது இடத்திற்கு வந்து விட்டார்.

இதற்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டிய எல்.கே.அத்வானிஜிக்கு பாரத ரத்னா பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பான மாமனிதருக்கு உரித்தான சரியான விருது.

வாழ்க எல் கே அத்வானிஜி.

ஶ்ரீ ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம்!

***

Ayodhya Ram may beat Tirupati Balaji ! (Post No.12,990)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,990

Date uploaded in London – –   6 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Tirupati Balaji (Venkatachalpathy) temple, Sabarimalai Ayyappa Temple, Jammu Kashmir Vaishnava Devi temple and Thiruvananthapuram Anantha Padmanabha Swami temple are considered very rich temples in India. They have tons of gold jewellery with them.

A 108-foot-long incense stick, a 2,100-kg bell, a giant lamp weighing 1,100 kg, gold footwear, a 10-foot-high lock and key, and a clock that simultaneously denotes time in eight countries are among the special gifts sent for the Ram temple in Ayodhya. The temple is going to generate income up to Rs 25,000 Crores every year.

xxxx

Goldes Footear

64 years old Challa Srinivas Shastry from Hyderabad travelled to Ayodhya for RamMandir inauguration by walking 1,307 KMs to offer gold plated footwear to Lord Ram

His father was a karsevak and he is transversing the Ayodhya-Rameshwaram route since last year .

Largest Lock

Uttar Pradesh’s Etah district is known for its artisans who get orders from across the country and abroad for bells used in temples. There are nearly 300 factories in Etah’s Jalesar that make these bells.

One such order is the cause of excitement among Etah’s artisans – a 2,100 kg bell for the Ram Temple in Ayodhya. This bell is 6-feet tall and 5-feet wide.

Bell

Jalesar in UP’s Etah district is home to some of the largest bell manufacturing units in the world. Artisans here are now working on a bell weighing 2,100 kg for Ram Temple in Ayodhya.

xxxx

Morari Bapu

The donations received by the newly constructed Ram Mandir are amazing. Crores of rupees are donated by the well wishers in addition to gems and jewels. Morari Bapu leads with Rs 11.3 crore for Ram Temple construction. Spiritual guru Morari Bapu has made the largest donation for the construction of the Ayodhya Ram Temple which is also being funded by donations from his followers.

As per the details available on the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust website, Bapu contributed Rs 11.3 crore to help build the Ram Temple.  His supporters in the United States, Canada, and the United Kingdom also contributed individually, totalling Rs 8 crore.. A ceremonial donation of Rs. 2,11,11,111 (Rs 2 crore 11 lakh 11 thousand one hundred and eleven) was presented on behalf of BAPS Swaminarayan Sanstha by Sadguru Pujya Ishwarcharan Swami to Pujya Shri Govinddev Giriji of the Mandir and Gujarat Chief Minister Vijaybhai Rupani in 2021.

xxxx

11 crore rupees in 11 days

The temple was opened by Prime Minister Narendra Modi on 22nd January 2024.

It received  donations worth Rs 11 crore in 11 days; 25 lakh devotees pay visit after consecration.

 ₹3,500 so far!

According to the Economic Times, Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust which was formed by the center in February 2020 to handle the construction and maintenance of the Ram Mandir has received ₹3,500 crore in donations

Prakash Gupta, the office in-charge of the temple trust, reported that over the past 11 days, approximately Rs 8 crore were collected in cash donations, while the amount received through cheques and online transactions totalled around Rs 3.50 crore. The donation can be made online by visiting the official website at https://srjbtkshetra.org/ and clicking on ‘Donate’ under the ‘Donation’ tab and log in using the mobile number. After that, individuals can authenticate using the OTP received and choose a bank account (SBI, PNB, or BoB) for donation.

xxxx

Story behind the Lock

Forging the Ram Mandir’s Gatekeeper: From the heart of Aligarh, Uttar Pradesh, emerges a testament to devotion forged in steel and brass. Not your ordinary lock and key, this colossal creation weighs a staggering 400 kilograms, standing tall 10 feet like a sentinel, its width spanning 4.6 feet and its thickness a formidable 9.5 inches. This is no mere security measure; it’s a symbol of unwavering faith, destined to grace the doors of the Ram Mandir in Ayodhya.

An elderly couple, Satya Prakash Sharma and his wife Rukmini Sharma, made the 400-kg lock. A resident of Aligarh, Satya passed away recently. His wish was that the lock should be gifted to the Ram temple in Ayodhya.

Mahamandaleshwar Annapurna Bharti Puri, an Aligarh resident, made arrangements to bring the lock to Ayodhya. He also talked about how the lock would make Aligarh internationally famous for its lock industry.

xxxx

Sita Devi Gift

From Nepal, the land of Sita: More than 3,000 gifts, including silver shoes, ornaments, and clothes, have been sent from Janakpur, believed to be Sita’s birthplace. These offerings symbolise a warm embrace of the divine couple across borders. They also offered Shaligram rocks for the idols of Ram Mandir

A sparkling devotion from Gujarat: From the diamond city of India Surat, a well-renowned jeweller has crafted a necklace for the deity in the shape of the Ram Mandir. This masterpiece consists of 5,000 sparkling American diamonds and it is sculpted from two kilogrammes of silver. This necklace is a testament to the devotion and artistry that went into its creation.

Surat, Gujarat: A diamond merchant from Surat has made a necklace on the theme of the Ram temple using 5000 American diamonds and 2 kg silver. 40 artisans completed the design in 35 days.

xxxx

108-foot-long incense stick,

A shower of blessings: A 108-foot-long incense stick, prepared with fragrant ingredients has been gifted. The number 108 holds immense significance in Hinduism, representing completeness and auspiciousness. This fragrant offering promises to fill the temple with divine aroma.

Bell

A resounding ring of faith: A 2,100-kg bell, specially crafted, will soon resonate through the temple grounds. Its deep, soulful clang will serve as a call to prayer and a symbol of unwavering faith.

Clock

Timeless devotion: A unique clock, displaying time in eight countries simultaneously, has been gifted. This symbolises the universal appeal of Lord Ram and the unifying power of faith across cultures and continents.

Laddus

A Ton of Sweet Devotion from Hyderabad: Weighing in at a staggering 1,265 kg, a Hyderabadi chef’s love letter to Lord Ram takes the form of a monumental laddu, soon to grace the Ram temple.

Silk

A Dream Woven in Silk: From the heart of Tamil Nadu, woven with threads of faith and artistic mastery, comes a unique offering for the majestic Ram Temple in Ayodhya. Not just any fabric, this is a silk bed sheet, a symphony of colour and reverence, depicting the temple in all its ethereal splendour.

xxxxxxxxxxxxxx

Ram Mandir fillip to fetch revenues worth ₹25,000 crore to UP in FY25

Total expenditure by tourists (domestic + foreign) in UP may cross ₹4 lakh crore mark, says SBI Research

The Uttar Pradesh (UP) government is set to laugh all the way to the bank with the Ram Janmabhoomi Mandir boost to the state’s economy. The grand temple is expected to fetch additional revenue to the tune of ₹25,000 crore for the state, according to estimates from SBI Research.

“Given the completion of Ram Mandir in Ayodhya this year and a melange of initiatives taken by the UP government to promote tourism, we believe that the total expenditure by tourists (domestic + foreign) in UP may cross ₹4 lakh crore mark by end of this year helping the state government earn an additional tax revenue of ₹20,000-25,000 crore due to huge spurt in number of tourists during FY25,” said SBI Research in a report titled ‘Where Latin America meets Scandinavia: The Road to Salvation passes through Uttar Pradesh’.

Both the central and the state governments had been in the process of imparting a mega infrastructure facelift to the city ever since the Supreme Court pronounced a verdict in favour of Ram Janmabhoomi Mandir in Ayodhya in 2019. The entire process was expedited after the foundation stone laying for a Grand temple in 2020. Infrastructure construction major L&T built the temple at a cost of ₹1,800 crore, which was met largely through donations.

The city has already witnessed a new airport at an investment of ₹1,400 crore and a revamped railway station. Meanwhile, the central government has committed investment to the tune of ₹11,000 crore while the state government has announced to pump in another ₹30,500 crore by the end of this year. Ayodhya Master Plan 2031 envisages an additional ₹85,000 crore worth of investments in the city till 2031.

Ayodhya set to attract 5 cr tourists a year, says another report

xxxxxxxxxxxxxx

Full Temple by December 2024

The temple, which had its Pran Pratishtha (consecration) ceremony on January 22, 2024, is set to be fully completed by December 2024 .Although the temple has been opened to the public, a section of it remains unfinished.

The temple’s architecture is based on the traditional Nagara style, known for its towering spires or shikharas and intricate carvings. It spans an impressive area of 1.1 hectares (2.7 acres) with dimensions of 110 meters in length, 72 meters in width, and a maximum height of 49 meters. The complex will include 13 new temples dedicated to Lord Ram’s family and a separate one for Hanuman.

—Subham—

Ayodhya, Ram Mandir, Donations, Rs25000 crore to UP, Pouring Donations, Tirupati Balaji

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-5 (Post No.12,989)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,989

Date uploaded in London – –   6 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-5

Part 5

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

கட்டிகளுக்கு

41.ஆளிவிறையை அறைத்துகிளறி கட்டிகளுக்கு காட்டுவதும் உண்டு; கட்டிகள் பழுத்து உடையும் .

XXXX

சூட்டுக்கு

42 .ஆத்து முள்ளங்கியை  பில்லை பில்லையாக அறுத்து வஸ்திரகாயம் செய்து பின்னரே, மிளகு தூளில் தொட்டு சாப்பிட்டவும். இப்படி காலையில் சாப்பிட்டுவந்தா நீர் சுத்தியாகும். சூடு தணியும், சிறு பெயருடன் சமைத்து சாப்பிடுவதும் உண்டு .

XXXX

பொருமல் கழிச்சலுக்கு

43 . ஆமையோடு அதிவிடயம் ,அசமாதாக்கம், வட்டத்திருப்பி, பாவட்டை, மிளகு, சுக்கு சமமாக  சேர்த்து வெந்நீர் வீட்டாரைத்து முலைப்பாலில் கொடுக்க நிவர்த்தியாகும் .

XXXX

குழந்தைகள் வளர

44 . ஆமணக்கெண்ணெயுடன் பேயன் வாழைப்பழத்தைப் பில்லை பில்லையாக அறுத்து , ஊரப் போட்டு , கற்கண்டுப் பொடிசெய்து போட்டு தினந்தோறும் காலையில் இரண்டிரண்டு வாழைப்பழமும் கொஞ்சம்  எண்ணெயும் கொடுக்கவும்  . இப்படி வழக்கமாய்க் கொடுத்து வந்தால் சகல சூடும் தணிந்து குழந்தைகள் புஷ்டியாய் வளரும்.

XXXX

கட்டிகளுக்கு 

45 . ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கி கட்டிகளில் வைத்துக்கட்ட அவை பழுத்து உடையும்.

XXXX

மலச்சிக்கல் நீங்க

46 . ஆமணக்கின் முத்தை மேற்றோல் நீக்கி காரசாரம் வைத்து துகையல் செய்து களஞ்சிக்காயளவு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்; பேதியாகும்

XXXX

கண் ஒளிவுக்கு

47 . இருவாட்சி சமூலத்தைப் பசும்பால் விட்டரைத்து புன்னக்காயளவு எடுத்து அரிக்கால்படி பாலில் லந்து காலையில் உட்கொண்டு வந்தால் கண்களில் மங்கல் நீங்கி நல்ல ஒளி உண்டாகும். மூர்ச்சை ரோகம், சுவாச ரோகம் வரவாட்டாமல் பாதுகாக்கும். நேத்திர ரோகம் தொண்ணூற்றாறுக்கும் அனுபோகமான தைல முறையை பார்வதி பரணீயத்தில் சொல்லியிருக்கிறபடி அவரவர் செய்துகொள்ளவும் .

XXXX

நீர்க்கடுப்பு வெள்ளைக்கு

48 . இலவம் பிஞ்சியும் இலவம் கொழுந்தும் ஒருபிடியெடுத்துப் பால்விட்டரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிடவும். இப்படி மூன்று நாள் சாப்பிடவும்.  நீர்க்கடுப்பு வெள்ளை விழுதல் தீரும். மேகந்தீரும்; விந்து கெட்டிப்படும்.

XXXX

நமைச்சலுக்கு 

49 . இந்துப்பு ஒருபலம் எடுத்து பொடி செய்து ,கால்பலம் வசம்பு பொடி செய்து, இரண்டும் கலந்து வெண்ணெய் போட்டுக் குழைத்து காலையில் உடம்பில் முழுமையும் தேய்த்துப் பகலில் சீயக்காய்த் தேய்த்துக் குளிக்கவும் ; நமை, தடிப்பு, சொறி இவைகள் தீரும் .

XXXX

குழந்தைகளுக்கு மலஜலம் கட்டிவிட்டால்

50 . இலைக்கள்ளி வேர்ப்பட்டை ஒரு இடை , சுக்கு-மிளகு – உள்ளி வகைக்கு கால் இடை , இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு முலைப்பாலிலாவது வெந்நீரிலாவது ஒரு காசிடைக்  கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று வேளை கொடுத்து வந்தால் மலஜலம் உதயமாகும். பிள்ளைகள் வியாதிகள் சகலத்திற்கும் ஒரே மாத்திரை பார்வதி பரணீயத்தில் பார்த்து செய்து கொள்ளவும்  .

XXXX

பெண்கள் பெரும்பாட்டுக்கு

51 . இலவம் பிஞ்சும் கொழுந்தும்  சரியாய் சேர்த்துப் புளிப்புத்தயிர் விட்டு, ஒன்றிரண்டாயிடித்து ஒரு ராத்திரி வைத்திருந்து  காலையில் பிழிந்து அந்த ரசத்தை குடிக்கவும். இப்படி சில தினங்கள் குடித்து வர பெரும்பாடு ரோகம் தீரும் .

–சுபம்—

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்!- PART 5, 

மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி? (Post No.12,988)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,988

Date uploaded in London – — 6 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மப்புலோ ஏமுண்டிநா மனசுலோ ஏமுண்டி?

ச.நாகராஜன்

சும்மாவா சொன்னார் மகாகவி பாரதியார் –

“சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று?!

சுந்தரத் தெலுங்கினில் உள்ள ஆயிரக் கணக்கான பாடல்களை கேட்டால் மனம் சொக்கி விடும்.

1963இல் வெளியான லக்ஷாதிகாரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக என்.டி.ராமாராவும் கதாநாயகியாக கிருஷ்ண குமாரியும் நடித்தனர்.

அதில் வரும் ஒரு பாட்டு பிரபலமானது. அதை எழுதியவர் நாராயண ரெட்டி. இவர் புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களுக்காக இவர் எழுதிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன.

(பிறப்பு : 29-7-1931 மறைவு 12-6-2017)

1973இல் சாகித்ய அகாடமி விருது, 1988இல் விஸ்வாம்பரா என்ற படைப்பிற்காக ஞானபீட விருது, 1977இல் பத்ம ஶ்ரீ 1992இல்  பத்ம பூஷண் என ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

பாடல் இது தான்:

பல்லவி

Mabbulo emuṁdi…


nā manasulo emuṁdi..

nā manasulo emuṁdi?

Mabbulo kannīru..


nī manasulo panniru.. nī manasulo pannīru..


avunā..uhu..ū..ū…

.

சரணம் 1

Toḍalo emuṁdi.. nā māḍa lo emuṁdi? nā māḍalo emuṁdi?

Toḍalo malliyalu.. nī māḍalo teniyalu.. nī māḍalo teniyalu ..


uhu..ū..ū..ū..
ūhu..ū..ū..ū..

சரணம் 2

Senulo emuṁdi?.. nā menulo emuṁdi?.. nā menulo emuṁdi?


senulo baṁgāraṁ.. nī menulo siṁgāraṁ… nī menulo siṁgāraṁ

சரணம் 3

Eḍilo emuṁdi?.. nā pāḍalo emuṁdi?… nā pāḍalo emuṁdi?


eḍilo galagalalu.. nī pāḍalo sarigamalu… nī pāḍalo sarigamalu

Nenulo emuṁdī?.. nīvulo emuṁdi?… nīvulo emuṁdi?


nenulo nīvuṁdi… nīvulo nenuṁdi… nīvulo nenuṁdi

Nenulo nīvuṁdi nīvulo nenuṁdi


nīvulo nenuṁdi nenulo nīvuṁdi…
aha..ā..aha..ā..
aha..ā..aha..ā..

கதாநாயகி நாயகனை சீண்டும் அருமையான பாடல் இது.  அருமையான நடிப்பு அருமையான படப்பிடிப்பு.

மேகத்தில் என்ன? கண்ணீர்! என் மனதில் என்ன? பன்னீர்.

நாயகி கேட்கக் கேட்க நாயகன் பளீர் பளீரென்று பதில் அளிக்கிறான். சிங்காரம் சொட்டுகிறது.

கடைசியில் நேனுலோ ஏமுண்டி நீவுலோ ஏமுண்டி என்று கேட்க

நேனுலோ நீமுண்டி நீவுலோ நேமுண்டி என்று பாடல் முடிகிறது.

உன் மனதில் யார்? என் மனதில் யார்?

உன் மனதில் நான்; என் மனதில் நீ!

பாடலை இன்றும் கூட யூ டியூபில் கேட்டு மகிழலாம்;

படப்பிடிப்பின் போது இந்தப் பாடலின் ஒரு காட்சி கிண்டி எஞ்சினியரிங் காலேஜில்  நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டது. கதாநாயகி பத்மா (நடிகை கிருஷ்ணகுமாரி) நீச்சல் உடையில் தோன்றி நடிக்கும் காட்சி. ஆனால் அப்போதைய சென்ஸார் போர்ட் இந்தக் காட்சியை அனுமதிக்கவில்லை. ஆகவே கட் செய்யப்பட்டது.

வடபழனியில் அந்தக் கால சந்தமாமா கட்டிடம் கல்லூரிக்காக காட்டப்பட்டது. பாடலின் இறுதி வரிகளில் ராமாராவும் கிருஷ்ணகுமாரியும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் போகும் காட்சி இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு அலைவந்து அவர்களை இழுக்க கிருஷ்ணகுமாரி  அலையில் இழுக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுகியே விட்டார். ஆனால் என் டி ராமாராவ் அவர் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அவரை காப்பாற்றினார்.

இந்தப் படத்திற்கு முன்னால் 1960இல் வந்த பார்த்திபன் கனவு தமிழ்ப் படத்தில் ஒரு பாடல்: கண்ணாலே நான் கண்ட கணமே  என்று.

படத்தில் ஜெமினிகணேசன் மற்றும் வைஜயந்திமாலா நடித்திருந்தனர். கதையை எழுதியது கல்கி.  பாடலை எழுதியவர் மருதகாசி

பாடல்

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ
யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ

நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
நேராக நின்று யாரென்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே

என் இதயம் எல்லாம் உமக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டாண உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

இந்தப் பாடல் பெரிய ‘ஹிட்’ பாடல்!

பாடலின் இறுதியில் வரும்

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல

என்ற வரிகள் மப்புலோ ஏமுண்டி பாடலின் இறுதி அடிகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

*

நாயகி நாயகன் கேள்வி- பதில் பாடல்கள் பற்பல.

உதாரணத்திற்கு ஒன்று 1963இல் வெளியான இருவர் உள்ளம் படத்தில் வரும் நதி எங்கே போகிறது என்ற பாடல்.

நாயகி :நதி எங்கே போகிறது
நாயகன் :கடலைத் தேடி
நாயகி : நாளெங்கே போகிறது
நாயகன் : இரவைத் தேடி

நாயகி : நிலவெங்கே போகிறது
நாயகன் :மலரைத் தேடி
நாயகி :நினைவெங்கே போகிறது
நாயகன் :உறவைத் தேடி (2)

சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தில் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

பாடியவர்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா.

ரசிக்கும்படியான இப்படிப்பட்ட பாடல்கள் ஒரு காலத்தில் ஓஹோ என்று இசையுடன் விளையாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது!

காலத்தை வென்று நிலை நிற்கும் காதல் பாடல்கள் இவை!

***

London Swaminathan’s  Article Index for January 2024 (Post No.12,987)

London Swaminathan was invited to Diwali Dinner  by then Prime Minister David Cameron; PM; house at 10 Downing Street , London

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,987

Date uploaded in London – –   5 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

London Swaminathan introducing Film Director Amshankumar in London Meeting

Index No.134

My Visit to Rail Museum in Chennai- Part 2 (Post.12,875)1/1

Part 9 with Halabedu, Hampi, Sringeri; Rare Pictures from 1928 German book (Post No.12,874) 1/1

Part 10 with Thanjavur, Trichy, Srirangam, Chidambaram Kumbakonam; Rare Pictures from 1928 book (Post No.12,878) 2/1

Part 11 with Mahabalipuram, Kanchipuram and Ellora caves; Rare Pictures from 1928 book (Post No.12,881)3/1

Part 13 with Jain and Buddhist Sculptures in Abu, Sanchi ,Shatrunjay Temples; Rare Pictures from 1928 book (Post No.12,887) 5/1

London Swaminathan Article Index for December 2023 (Post No.12,888)5/1

Amazing Facts about Ayodhya Ram Temple (Post No.12,919)15/1

Amazing Facts about Shivalinga (Post No.12,924) 16/1

Amazing Facts about Krishna Janma Bhumi with 5500 Temples ! (Post No.12,927) 17/1

Amazing Facts about Haridwar (Post No.12,934)19/1

Amazing Facts about Ujjain (Post No.12,938)20/1

Amazing Facts about Hindu’s Holiest City – Varanasi (Post No.12,942) 21/1

Amazing Facts about Kanchipuram – Part 1 (Post No.12,945)22/1

Lord Ram Exposed Scoundrels and Prostitutes in India and Abroad! (Post No.12,948)23/1

Kanchi in Sangam Literature ; Amazing Facts about Kanchipuram – Part 2 (Post No.12,949)23/1

Jaina Kanchi; Amazing Facts about Kanchipuram – Part 3 (last part)- Post No.12,952 (24/1)

Amazing Facts about Dwaraka; Exodus & Tsunami(Post No.12,965) 28/1

February 2024 Calendar with Kabir Quotes (Post No.12,964) 28/1

Miracles and Mysteries of Puri Temple (Post No.12,958)26/1

GIFT ARTICLES (from News papers)

Malayali Ramaswami given Rig Veda by American Malayalis (24/1)

Swami Vivekananda and Gandhiji’s wife on Ramayana 24/1

TIPS FOR BETTER SLEEP POSTED IN MY BLOGS ON 30-1-2024

VISHNU AND HANUMAN INSIDE MOSQUE 27/1

எறும்பு சட்னி சாப்பிடுங்கள் (Pres Cutting)

12 நிமிடத்தில் அருமையான ராகத்தில் ராமாயணம்! 21/1YOU TUBE

xxxxxxxxxxxxxxxxxxx

With Mrs Visaka Hari and Sri Hariji

TAMIL ARTICLES

முதலையால் பிரசித்தமான காசர்கோடு கோவில் -45 (Post No.12,877) 2/1

மனோரஞ்சித மலர் எண்ணெய் ஏற்றுமதி (Post No.12,897) 8/1

மல்லிகைப் பூ ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ! (Post No.12,900) 9/1

நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-52  (Post No.12,899) 9/1

மலையாள பழனி கோவில்- 54 (Post No.12,905) 11/1

புதிய கூந்தல் வளர் தைலம்: பெண்களுக்கு நற்செய்தி! (Post No.12,907)11/1

மருக்கொழுந்து ஏற்றுமதி (Post No.12,910)12/1

மாணவர்கள் சாப்பிட வேண்டியது வல்லாரைக் கீரை! வல்லாரை ஏற்றுமதி தகவல்!! (Post.12,935) 19/1

மாயா இன மக்கள் வணங்கிய இலவம் பஞ்சு மரம் போடும் புதிர் ! (Post No.12,941) 21/1

ரோஜா மலரே ராஜகுமாரி; லண்டன் காதலி கையில் பெங்களூரு ரோஜா!- 1 (Post.12,903) 10/1

ரோஜா மலரே ராஜகுமாரி;  குல்கந்து, அத்தர் -Part 2 (Post No.12,906) 11/1

மூலிகைகளின் ராணி துளசி (Post No.12,928) 17/1

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 1 (Post No.12,955)

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்! – 2 (Post No.12,961) 27/1

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்! – 3 (Post No.12,968) 29/1

QUIZ  சிவலிங்கம் பத்து QUIZ (Post No.12,922) 16/1

QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ (Post No.12,918) 15/1

QUIZ மதுரா பத்து QUIZ (Post No.12,926) 17/1

QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ (Post No.12,930) 18/1

QUIZ ஹரித்வார் பத்து QUIZ  (Post No.12, 933)19/1

QUIZ உஜ்ஜைனி பத்து QUIZ (Post   No.12,937) 20/1

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940) 21/1

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2 (Post No.12,944)22/1

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 3 (Post No.12,947)23/1

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 4 (Post No.12,951) 24/1

QUIZ  புரி பத்து QUIZ (Post No.1,954)25/1

QUIZ துவாரகா பத்து QUIZ (Post No.12,957)26/1

QUIZ  யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து QUIZ (Post No.12,967) 29/1

QUIZ பத்ரிநாத் பத்து QUIZ(Post No.12,970) 30/1

சங்கத் தமிழ் ரகசியம் சொல்லும் வடகரா லோகாம்பிகை கோவில் -44 (Post No.12,873) 1/1

எர்ணாகுளம், ஆல்வாய் வட்டாரக் கோவில்கள் – 46 (Post No.12,880)3/1

ஆயிரம் திரி அதிசய விளக்கு! துறவூர் மஹாதேவர்,  நரசிம்ம மூர்த்தி கோவில்கள்-49 (Post.12,890) 6/1

ஆற்று மணலில் லிங்கம்: பழுர் சிவன் கோவில்-48 (Post No.12,886) 5/1

இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி (Post No.12,894) 7/1

அயோடின் கலந்த உப்பு அவசியமா ? (Post No.12,891) 6/1

அருணகிரிநாதர் /திருப்புகழ் பொன்மொழிகள்; பிப்ரவரி 2024 காலண்டர் (Post No.12,963) 28/1

கேரளத்தில் அதிசய சிவன், வெங்கடாசலபதி கோவில்கள்-47 (Post No.12,883) 4/1

கோவிலில் மூலிகைத் தைலம்; அலை மோதும் பக்தர் கூட்டம்-50 (Post.12,893) 7/1

ஆயிரம் திரி அதிசய விளக்கு! துறவூர் மஹாதேவர்,  நரசிம்ம மூர்த்தி கோவில்கள்-49 (Post.12,890) 6/1

அனுமன் சந்நிதியுடன் கவியூர் சிவன்  கோவில்-50 (Post No.12,896) 8/1

கேரளத்தில் ஒரு திருக்கடவூர் கோவில்-53 (Post No.12,902) 10/1

ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில்-55 (Post No.12,909) 12/1

சம்பங்கி மலரின் மருத்துவ பயன்கள் (Post No.12,913) 13/1

திருவல்லம் பரசுராமர், உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள்- 56 (Post No.12,912) 13/1

நயன்தாரா ஏற்றுமதியும் மருத்துவ உபயோகமும் (Post No.12,916) 14/1

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- Part 57 (Last Part) Post No.12,915 (14/1)

காந்திஜி தினமும் உபயோகித்த சர்ப்பகந்த மூலிகை!  (Post No.12,920) 15/1

ஏற்றுமதி தடை செய்யப்பட அரிய ஜடாமான்சி மூலிகை (Post No.12,923) 16/1

கரிசலாங்கண்ணி மூலிகை ஏற்றுமதி (Post No.12,931) 18/1

லண்டன்  அருகில் மூலிகை உலகம்; அறிவியல் அதிசயம்! (Post No.12,960) 27/1

நன்றாகத் தூங்குவதற்கு நல்ல அறிவுரை (Post No.12,971) 30/1

தூக்க மாத்திரை சாப்பிடலாமா?  உறக்கத்தைப் பாதிக்கும் 2 நோய்கள் (Post No.12,974) 31-1

Garlanding Sri Velukkudi Krishnan in London.

—SUBHAM—

London Swaminathan, January 2024, Article index, Kerala temples, மூலிகை ஏற்றுமதி

QUIZ சிம்லா பத்து QUIZ  (Post No.12,986)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,986

Date uploaded in London – –   5 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.108

xxxxx

1.சிம்லா (Shimla) நகர் எங்கே இருக்கிறது ?

xxxxx

2.சிம்லா நகரின் பெயர் எப்படி ஏற்பட்டது ?

xxxx

3.சிம்லா நகரின் ஜாகு ஹனுமார் கோவிலின் சிறப்புக்கு காரணம் என்ன ?

xxxx

4.யுனெஸ்கோ UNESCO கலாசார சின்னமாக அறிவித்த ரயில் பாதையின் சிறப்பு என்ன ?

xxxx

5.ஜாகு மந்திர் தவிர வேறு என்ன கோவில்கள் உள்ளன?

xxxx

6.மியூசியங்கள் எத்தனை உள்ளன ?

xxxx

7.சிம்லாவில் எத்தனை குன்றுகள் இருக்கின்றன என்ன வாங்கலாம் ?

xxxx

8.இயற்கை ரசிகர்களுக்கு என்ன இருக்கிறது ?

xxxx

9.துணிகர விளையாட்டுகளுக்கு வசதிகள் உண்டா  ?

xxxx

10.சிம்லாவில் ரிட்ஜ் Ridge  என்பது என்ன ?

xxxxx

விடைகள்

1.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலை நகர் சிம்லா. இது இமய மலை வாசஸ்தலம்;  இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய நகரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது. சண்டீகர் நகரிலிருந்து 120  கி.மீ  பஞ்சாபிலுள்ள சில நகர்களிலிருந்தும் வரலாம். KALKA கல்கா என்பது மிக அருகிலுள்ள புகழ்பெற்ற நகரம்.

xxxx

2.சியாமளா என்பது தேவியின் பெயர்களில் ஒன்று; அந்தக் கோவிலின் பெயர் மருவி சிம்லா என்று மாறிவிட்டது . ஷியாம்லாவின் இன்னும் ஒரு வடிவம் காளி. நகருக்குப் பெயர் வழங்கிய காளி பாரி கோவில் (Kali Bari is a temple dedicated to Goddess Kali’s fearless incarnation Shyamala ) இப்பொழுது வழிபாட்டில் உள்ளது .

Xxxx

3. சிம்லா நகரின் ஜாகு மந்திர் Jakhoo temple ஆலயம் 8000  அடி உயர ஜாகு குன்றில் இருக்கிறது . இதுதான் உயரமான சிகரம்  இங்கிருந்து பனி படர்ந்த மற்ற இமயமலைச் சிகரங்களைக் காணலாம். 8500  அடி உயரத்தில் 108  அடி உயர ஹனுமான் சிலையை நிறுவியுள்ளனர் ; கோவில் மிகவும் பழைய கோவில் ; உயரமான சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டது . அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு வருவதற்கு கம்பி ரயில் சேவையும் உண்டு .

Xxxx

4.கல்கா என்னும் இடத்திலிருந்து மலை மீதுள்ள சிம்லாவுக்குச் செல்ல குறுகிய ரயில் பாதையை பிரிட்டிஷார் அமைத்தனர் ; இதை விளையாட்டு ரயில் (டாய் ட்ரெய்ன்) Kalka – Shimla Toy Train என்று அழைப்பார்கள் . 96  கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. போகும் வழி முழுதும் இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் செல்லலாம்.

இந்த சின்ன ரயில் 102  சுரங்கப்பாதைகளைக் கடந்து செல்லும். மிகவும் நீளமான சுரங்கம் 3752  அடி நீளம் உடையது . போகும் வழியில் 200  க்கும்  அதிகமான பாலங்கள் உள்ளன . ரயில் பாதையின் அகலம் இரண்டரை அடிதான் . இதை நேரோ காஜ் Narrow Gauge என்பார்கள்

xxxxx

5.இன்னும் ஒரு புகழ்பெற்ற கோவில் தாரா தேவி கோவில் . மேலும் சங்கட மோசன கோவில், திங்கு மாதா கோவில் , கமலா தேவி கோவில் ஆகியனவும் இருக்கின்றன .

xxxx

6. ஸ்டேட் மியூசியத்தில் இந்த வட்டார ஓவியங்கள், நகைகள், துணிமணிகள் ஆகியவற்றைக் காணலாம். 1974m  ஆண்டில் அமைக்கப்பட்டது. ( A collection of paintings, jewellery, and textiles of the region can be found at the State Museum (built-in 1974)

.Johnnie’s Wax Museum ஜானிஸ் வேக்ஸ் மியூசியத்தில் இந்திய பிரமுகர்களின் மெழுகு பொம்மைகளைக் கண்டு ரசிக்கலாம். அவை மேடம் துஸாட்ஸ் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன .

அன்னடேல் ராணுவ மியூசியம் Annadale has the Army Heritage Museum which is a notable tourist destination on its own, and also a golf course and a helipad .

xxxxx

7.சிம்லாவில் ஏழு குன்றுகள் உள்ளன.

சிம்லா வட்டாரரக்க காடுகளில் மரங்கள் மிகுதி; இங்கு மரத்தினால் ஆன பொம்மைகள் , அலங்காரப் பெட்டிகள், கூடைகள், ஆகியவற்றை சுற்றுலாப்பயணிகள் வாங்கிச் செல்வர் . மேலும் உலோகத்தால் ஆன, செயற்கை மணிக்கால ஆன நினைவுச் சின்னங்கள் நகைகளும் நிறைய விலைபோகின்றன. சால்வைகள், கம்பளங்கள் ஆகியன இந்த வட்டாரத்துக்குரிய பாணியில் செய்யப்படுவதால் அவைகளும் கடைகளில்  அதிகமாக விற்கப்படுகின்றன .

xxxxx

CHADWICK FALLS

8.இங்கு தாவரவியல் பூங்கா, பறவைகள் பூங்கா ஆகியன உள்ளன அன்ன டேல் என்னும் பகுதியில் தேவதாரு , பைன் மரக்காடுகளைக் காணலாம் . குப்ரி Kufri  என்னும் இடமும் இயற்ககைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் இடம் ஆகும் ; இது ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதி! சாத்விக்  நீர்வீழ்ச்சி ,  இமயமலை தேசிய பூங்கா ஆகியன குறிப்பிட தக்க .

xxxxx

9.பனிச்சறுக்கு , மலைஏறுதல் , பனி க்கட்டி  விளையாட்டுகள் , ஐஸ் ஸ்கேட்டிங், குதிரை சவாரி , Ice Skating , மலை சைக்கிள் ரேஸ் Mountain Biking என்று எல்லா வகை சாகசச்  செயல்களையும்  செய்யலாம்;  ஆறு ஓடும் வேகத்தில் படகு சவாரி  River Water Rafting , பாரா கிளைடிங் Paragliding ஆகியன குறிப்பிட தக்கன.

xxxxx

10.ரிட்ஜ் Ridge என்பது நகரிலுள்ள விசாலமான இடம். இங்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய கோடை விழா நடக்கும் .

KALKA-SHIMLA TOY TRAIN 

—subham—-

Tags- சிம்லா, சியாமளா தேவி , கோவில், காளி, டாய் ட்ரெய்ன், Toy Train, Shimla , ஜாகு மந்திர் , அனுமன் சிலை , உயரமான