तस्यासन्नेऽश्ववधो भयमपि च पुरोधसः प्रोक्तम् ॥ ८६.३८॥
गोहरणशस्त्रघातावुदक्परे सार्थघातधननाशौ ।
आसन्ने च श्वभयं व्रात्यद्विजदासगणिकानाम् ॥ ८६.३९॥
Rain and Crowing
16. If, in the rainy season, the crow be seen to caw from milk trees, from the Arjuna tree, the Vañjula tree, the banks of rivers, sand banks, there will be rain; and in other seasons, if the crow be seen to bathe in dust or in water, the sky will be overcast with clouds.
17. If two crows be seen to cry fearfully from a tree, there will be fear of great danger and if they be seen to cry turning to water or the clouds, there will be rain.
18-19. If the crow (vāyasa) be seen to move its wing fearfully and strike with its feet the branches of trees, there will be fear of injury from destructive fires; if it be seen to throw into the house a red substance, a burnt substance or straw or a piece of wood, there will also be fear of injury from fire. If the crow be seen to cry from the house turning to the east, south, west, or north, the master of the house will respectively suffer from kings, robbers, quarrels and loss of cows, if such quarter be a dīpta one.
You will meet a King or Govt. Officer
20. If the crow be seen to cry turning to the east when such quarter is benefic, there will be meeting with an officer of the king, or a friend and there will also be a gain of gold, Śālya rice and cooked rice prepared in sugar.
21. If the crow be seen to cry turning to the south-east when such quarter is benefic, there will be a meeting with a person living by fire and the gain of a woman and of precious metals; if it be seen to cry turning to the benefic south, there will be a gain of black gram, horse-gram and excellent meals and a meeting with singers.
22. If the crow be seen to cry turning to the (benefic) southwest, there will be meeting with a messenger and the gain of articles of luxury, curdled milk, oil, flesh and good meals and if it be seen to cry turning to the (benefic) west, there will be the gain of flesh, liquor, grain and the gems of the sea.
23. If the crow be seen to cry turning to the (benefic) northwest, there will be the gain of weapons, of lotus, twining creepers, fruits and meals; and if it be seen to cry turning to the (benefic) north, there will be the gain of food, horse and clothes.
24. If the crow be seen to cry turning to the (benefic) northeast. there will be the gain of ghee and of oxen. The same remarks apply to the crow found seated in the several parts of a person’s house.
If it comes near you Good Luck
25. If the crow be seen to pass close to the ears of a person at the commencement of a journey, there will be good luck and the gain of a desired object; and if the crow be seen to come flying and cawing towards the traveller he will return from his journey.
26. If the crow be first seen to cry on the left side and then on the right side of a traveller, he will be robbed of his money and if the reverse be the case, there will be the gain of money.
27. If the crow be seen to cry and follow the traveller on the left side, there will be gain of wealth; in the case of the people of eastern countries, the crow must follow the traveller on the right side instead of on the left.
28. If the crow be seen to fly crying towards the traveller on the left side, there will be obstacles in the way; but if the person be not a traveller, he will meet with good luck.
29. If the crow be seen to cry first on the right side and then on the left, there will be the gain of a desired-object; if it be seen to cry turning to the traveller or fly before him, there will be immediate gain of wealth.
30. If the crow be seen to cry turning to the traveller and fly away behind him on the right side, the person will soon get wounded, also if the crow be seen to stand on one leg and cry turning to the Moon, the person will get wounded.
31. If the crow be seen to stand on one leg turning to the Sun and scratch its wings with its beak, the chief person will suffer at the hands of his enemies.
32. If the crow be seen to cry in a field full of crops, there will be the gain of a field with crops in it; but if such crow be malefic in character, the traveller will meet with grief before crossing the boundary.
More Wealth if it cries from Fruit Trees
33. If the crow be seen to cry in trees in which there are fruits and flowers and which are covered with glossy and tender leaves and are fragrant, milky, juicy, without wounds, erect and beautiful, there will be the gain of wealth.
34. If the crow be seen to cry in places covered with ripe crops and full of grass, in houses, temples, palaces of kings, the mansions of the rich, green spots, granaries and places where there are benefic objects, there will be the gain of wealth.
35. If the crow be seen to cry seated in the tail of a cow or a snake-hole, there will be the sight of a serpent; if it be seen to cry from the back of a buffalo, there will be fever that very day; and if from a bush, there will be an imperfect gain of an object of desire.
36. If the crow be seen to cry from a heap of rubbish or from a bone on the left side, the person will meet with obstacles in his attempt to gain an object; and if it be seen to cry from an elevated space, a burnt place, or a place struck by lightning, there will be slaughter.
Success if the Crow cries from Thorny Trees
37. If the crow be seen to cry from a good spot with thorny trees in it, there will be success of an undertaking, but quarrels at the same time; if it be seen to cry from a thorny tree, there will be quarrels and if from a place overgrown with creepers, there will be imprisonment.
38. If the crow be seen to cry from a tree whose end has been cut off, there will be suffering from sword cut; if from a dried tree, there will be quarrel; if from a dung hill either before or behind, there will be the gain of wealth.
39. If the crow be seen to cry from the body or the limbs of a dead person, there will be deaths; and if it be seen to cry breaking a bone with its beak, there will be a fracture of bones.
சங்க இலக்கியத்துக்கும் காளிதாசனுக்கும் உள்ள ஒற்றுமைகள்
1.சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு
2.முலையில் சந்தன ஓவியம் எழுதல்
3.மன்னர்கள் மார்பில் சந்தனம்
4.மலய மலையில் சந்தனம்
5.சந்தன மரத்தை உவமையாகப் பயன்படுத்தல்
6.சந்தன மரம் உயர்ந்த குணத்திற்கு எடுத்துக் காட்டு; அரைக்கினும் தன மணம் குன்றாது
7.செஞ் சந்தனம்
8.சந்தன மரத்தில் கொடிகள்
XXXX
முலையில் ஓவியம்
காளிதாசனில் ஆண்கள் சந்தனம் இட்டுக்கொள்வதையும் பெண்களின் முலைகள் மீது ஆண்கள் சந்தனம் பூசி ஓவியம் வரைவதையும் காண்கிறோம். இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த வழக்கம் பற்றி , தமிழ் சம்ஸ்க்ருத நூல்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது
முலைகளில் தொய்யில் / படம் எழுதுவது தொய்யில் எழுதல் அல்லது வரைதல் எனப்படும். ஆண்கள் மார்பில், சந்தனத்தை வெறுமனே பூசிக்கொள்ளுவர் . கலித்தொகை நூலில் இது பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. இதோ சில இடங்கள் :
தொய்யில், பெயர்ச்சொல். மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு; மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் .Figures drawn upon the breast of women with sandal solution.
மலய மலை தர்துர மலை என்ற இரண்டு மலைகளும் அவைகளிலுள்ள சந்தன மரங்களால் சந்தனம் தீட்டிய முலைகள் போல இருக்கின்றன ரகு அவைகளை அனுபவித்தான் .தடுக்க முடியாத வீரச் செயல்களை உடைய அவன் சஹ்யாத்ரி என்னும் மேற்குத்தொடர்ச்சி மலையை வென்றவன்; அதன் சிகரத்தை அவன் மட்டம் தட்டியது அதன் மேலாடையை அகற்றியது போல இருத்தது ; அந்த மேலாடைதான் அலைவீசும் கடல் !
ரகு தென்னாட்டையும் வெற்றி கொண்டான் என்பதை மலைகளையும் கடலையும் பயன்படுத்தி வருணிக்கிறான் காளிதாசன் ; அவனுடைய பூகோள அறிவு அஸ்ஸாம் முதல் ஈரான் வரை இருப்பதை ரகுவம்சத்தில் காணலாம் . மேற்குப்பகுதியை வருணிக்கையில் சந்தன மரங்களை மறக்கவில்லை. தமிழில் 10 அல்லது 15 பாடல்களில் காணப்படும் முலையில் தொய்யில் எழுதல் காளிதாசன் பாடல்களினுள் இருப்பதை இங்கே காணலாம் 4-51/ 52
XXXX
முலையில் சந்தனம்
அகநானூறு–389
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், 5
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
மனைவயின் இருப்பவர் மன்னே துனைதந்து, 10
………………………………………..
தோழி, இதனைக் கேள். உனக்குத் தெரியாது போலும். அதனால்தான் அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்குமாறு வற்புறுத்துகிறாய்.
நெளி நெளியான என் கூந்தலுக்குச் சந்தனப் புகை ஊட்டி அவர் கோதிவிட்டார். மலரும் பூக்களைச் சூட்டிவிட்டார். இனிய மணம் கமழும்படி என் நெற்றியில் திலகம் வைத்தார். பல்வேறு மலர்களை அல்லி மலருடன் கிள்ளிக் கொண்டுவந்து என் முலைமேல் அப்பிவிட்டார். என் தோளில் தொய்யில் எழுதினார். கால் பரட்டில் செம்பஞ்சுக் குழம்பு படிந்திருக்குமாறு ஊட்டிவிட்டார். இப்படியெல்லாம் என்னை ஒப்பனை செய்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.
அத்துடன் உன்னையும் பாராட்டினார்.
பல்வகைப் பூக்கள் பரப்பிய மெத்தையில் பகல் காலத்தில் கூட என்னோடு இருந்தார்.
இப்படி இருந்தவர்தான் இப்போது என்னை விட்டுவிட்டு விரைந்து சென்றுவிட்டார்.அகநானூறு 389
xxxx
நற்றிணை Natrinai 225
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் செருக்குற்று போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக ஏந்திய (மேலே வளைந்த) நிலையில் காணப்படுவது போலவும்,
தன் கூரிய முனையுடன் காணப்படும் வாழைப்பூ மொட்டு போலவும்,
மென்மை இயல்புடைய மகளிரின் ஓதிக் கொண்டை போலவும்,
தோன்றும் முலை, திருந்திய அணிகலனும், எழுதிய தொய்யிலும் கொண்ட முலை ,
உடையவர் யாரேனும் நாடனை தன் பருவரல் திணவு தீரும்படி முயங்கும்படி கேட்டுகொண்டவர் உண்டோ,
இந்தக் குறுமகள் பருத்த தோள் கொண்டவள் வண்டல் மண்ணில் பாவை செய்து கோரைப் புல்லில் கிடத்தி விளையாடுகிறாள் இவள் முலையில் தொய்யில் எழுதி அழகுபடுத்தியுள்ளனர் இது ஆண்களைக் கவர்கிறது இவளைக் கவர்ச்சி உள்ளவளாக மாற்றிய குற்றத்தை அரசவையில் முறையிட்டால் இந்த ஊர் நிலைமை என்ன ஆகும்
பணைத் தோட் குறுமகள் பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே!– குறுந்தொகை 276
கோழிக் கொற்றன் பாடல்
***********
चन्दनेनाङ्गरागन् च मृगनाभिसुगन्धिना। समापय्य ततश्चक्रुः पत्रन् विन्यस्तरोचनम्॥ १७-२४
chandanenA~NgarAgan cha mR^iganAbhisugandhinA | samApayya tatashchakruH patran vinyastarochanam|| 17-24
கஸ்தூரி கலந்த சந்தனத்தை அவன் உடலில் பூசினர் பின்னர் கோரோசனம் கொண்டு மஞ்சள் வர்ணத்தில் இலை போன்ற கோடுகளால் உடலை அலங்கரித்தனர் ; பட்டாபிஷேக காலத்தில் பெண்களைப்போல ஆண்கள் உடலிலும் தொய்யில் எழுதப்பட்டது போலும் !
வெற்றிலைக்கொடிகள் தழுவிய பாக்கு மரங்களுடையனவும் ஏலக்கொடிகள் அணைக்கும் சந்தன மரங்களுடையனவும் தமால இலைகளை உடைய விரிப்புகளுடையனவும் ஆன இயற்கை அழகுமிக்க மலய மலை ப் பிரதேசத்தில் எப்போதும் ஆனந்தத்துடன் இருப்பாய்.[6-64]
காளிதாசன் தென்னாட்டிற்கு நேரில் வராவிடில் இவ்வளவு துல்லியமாக வருணிக்க முடியாது.
காளிதாசன் லவங்கக் கொடி படர்ந்த சந்தன மரம் பற்றிப் பாடுகிறான். மிளகுக்கு கொடி படர்ந்த சந்தன மரம் – அகம் 2
கொழுத்த இலையை உடைய வாழைமரப் பெருங்குலையில் நன்றாக முதிர்ந்த வாழைப்பழம் தானே உதிரும்.
தெவிட்டி உண்ணமுடியாமல் போன பலாச்சுளையும் கிடக்கும்.
இரண்டும் பாறையில் இருக்கும் ஆழமான சுனைநீரில் ஊறும். ‘தேறல்’ என்னும் கள்ளாக விளையும். அங்கு மேயும் கடுவன் என்னும் ஆண்குரங்கு அறியாமல் அதனை உண்ணும். மயக்கம் ஏறும். மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தள்ளாடும். இது எண்ணிக்கூடப் பார்க்காத நிலையில் அதற்குக் கிடைத்த குறியா இன்பம். இத்தகைய இன்பத்தைப் பிற விலங்கினங்களும் பெறும் நாட்டை உடையவன் தலைவன்.
குறியா இன்பத்தை விலங்கினங்களும் பெறும் நாட்டை உடைய தலைவன் குறித்த இன்பத்தை (நாடிவரும் இன்பத்தை)ப் பெறுவது கடினமா? இல்லையே.
[1]
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது 5
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
***************
காளிதாசனுடைய தாவரவியல் அறிவை சாகுந்தல நாடக த்தின் ஏழாவது அங்கத்தில் காணலாம்.
சகுந்தலாவின் வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி, மன்னன் துஷ்யந்தன் அரண்மனைக்கு வழியனுப்பும் காட்சி அது. சகுந்தலை தன தோழிகளையும் கூட அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறாள் . அதற்கு பதில் அலைக்கும் கண்வ மகரிஷி உன்னைப்போல அவர்களையும் ஒரு ஆடவனுக்கு ஒரு நாள் மனம் புரிவிக்க வேண்டும்; ஆகையால் கெளதமி உன்னுடன் வருவாள் என்கிறார் . அப்போது சகுந்தலை சொல்லும் பதில்
தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு
காட்டிலுள்ள என்னுடைய தந்தையின் மடியிருந்து என்னை இப்படி அரண்மனைக்கு அனுப்புவது மலய மலையில் வளரும் சந்தன மரத்தை வேருடன் பிடுங்கி வேற்றிடத்தில் நடுவயது போல உள்ளதே ! அந்நிய மண்ணில் நான் எப்படி வாழ முடியும் ? ( அழுதுகொண்டே)
இந்த வாசகம் அந்நிய மண்ணில் என்பது , சந்தன மரமும் மலய மலையைத்தவிர வேறு எங்கும் வளராது என்ற தாவரவியல் அறிவைக் காட்டுகிறது . ஒரு விமானி பயிற்சி பெறுகையில் அவன் முதல்தடவை விமானத்தை இறக்குகையில் பூமியே அவன் மீது மொத வருவதுபோலத் தோன்றும். இந்தக் காட்சியையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசன் வர்ணிப்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். அவன் சகல கலா வல்ல வன் என்பதறகு வேறு சான்றே தேவை இல்லை
பிறை வடிவிலுள்ள அம்பினால் இந்திர வில்லின் நாணை ரகு மன்னன் அறுத்தான்; தேவ லோக சந்தனம் பூசப்பட்ட இந்திரன் கையில் இருந்த வில் , அறுபட்டபோது பாற் கடலை அமிர் தத்துக்காக கடைந்தபோது எழுப்பிய ஓசையை உண்டாக்கியது —ரகு வம்சம் 3-59
செஞ்சந்தனம்
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.( குறுந்தொகை – பாடல் 321
Red Sandal wood paste and tigers roaming forest route are mentioned. Kalidasa also mentions RED sandalwood.
****
புறநானூறு 380
தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
. . . . . . . ங்கடல் தானை
இன்னிசையை விறல்வென்றித்
தென்னவர் வயமறவன் 5
மிசைப்பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய
தேறுபெ. . . . . . . . த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் சாத்தன் நல்லிசை
. . . சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல் போயின்று பூத்தஎன் கடும்பே
உரை: தென் கடலிலிருந்து எடுத்த முத்துக்களாலான மாலையைச் சூடிய, வடமலையிலிலிருந்து பெற்ற சந்தனத்தைப் பூசிய ……. கடல் போன்ற படையும்……………………………………
இங்கு வட மலை என்பதை தமிழ் நாட்டிற்கு வடக்கேயுள்ள என்றும் கொள்ளலாம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் வளரும் செஞ் சந்தன வகையாகவும் இருக்கலாம் (Red Sandalwood– Pterocarpus santalinus commonly known as Red Sandalwood, is a native and endemic to India and can only be found in the southern parts of the Eastern Ghats.)
****
அகநானூறு 340
. வடநாட்டு மக்கள் கொண்டுவந்து தந்த சந்தனக் கல்லில், குடநாட்டில் விளைந்த சந்தனக் கட்டையைத் தேய்த்துச் சந்தனம் பூசிவிடுவோம்.
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
…………………………………………………………………
வடவர் தந்த வான் கேழ் வட்டம் Line 16
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், Line 20
………………………………………………………………………..
எங்களிடம் மீனை விற்றுக் கொண்டுவந்த நெல் இருக்கிறது. தயிர் இருக்கிறது. தயிர்ச் சோறு உண்ணத் தருவோம். வடநாட்டு மக்கள் கொண்டுவந்து தந்த சந்தனக் கல்லில், குடநாட்டில் விளைந்த சந்தனக் கட்டையைத் தேய்த்துச் சந்தனம் பூசிவிடுவோம்.
Here the stone for grinding from north and the sandalwood from the western hills (ccorg= Kudagu of Karnataka) are mentioned.
xxxx
REFERENCES
Kurunthokai 321- anonymous குறுந்தொகை – பாடல் 321
Purananuru 380- by Karuvur kathappillai புறநானூறு 380
Akananuru – 340 by Nakkirar and many more அகநானூறு 340
In Kalidasa we find more references than Tamil works
1. In the case of the people inhabiting the eastern countries, the crow (vāyasa) on the right side indicates good luck; but the crow of the crane kind indicates prosperity when on the left side. In other countries, the case is otherwise. The limits of provinces shall be learnt from a general knowledge of the country.
[Note—Countries to the south and east of the river Sarasvatī are eastern countries.]
2. If the crow (vāyasa) be seen to build its nest in a dead tree in the month of Vaiśākha, there will be plenty and prosperity in the country; but if it be seen to build its nest in a dry thorny tree, there will be famine and fear in the land.
Crow Nest and Weather
3. If the crow be seen to build its nest in an eastern branch of the tree in the Śarat season, there will be rain at the beginning of the season; if it be seen to do so in a western branch in the rainy season, there will be much rain; if in a northern or southern branch, there will be moderate rain in the middle two months of the two seasons; and if it be seen to build its nest on the top of a tree, there will be abundant rain.
4. If the crow be seen to build its nest in a south-eastern branch, there will be rain here and there; if in a south-western branch, the yellow and green leaves will grow and if in a northwestern or north-eastern branch, there will be prosperity.
[Note—The commentator adds that if the crow be seen to build its nest in a north-western branch, there will be an increase of rats.]
5. If the crow (vāyasa) be seen to build its nest in reeds, dūrvā grass, shrubs, creepers, crops, temples, palaces of kings, houses or in low ground, the country will suffer from thieves, drought and disease and will meet with ruin.
Crow Eggs and Government Change
6. If the crow be seen to lay two, three or four eggs, there will be prosperity; if five eggs, a foreign prince will begin to reign; if it be seen to lay six eggs or only one egg or no eggs at all, there will be no prosperity.
7. If the young ones be of the colour of the fragrant substance known as Cauraka, there will be fear from thieves; if of different colours there will be death; if white, there will be fear of injury from fire and if of defective limbs, there will be famine.
8. If a swarm of crows be found to enter a village and cry for no apparent cause, the people will suffer from hunger and if they be seen to fly round and round, there will be suffering from anger; if they be seen in swarms, there will be quarrels.
9. Crows, that are seen to harass men with their beaks, wings and legs, will increase a person’s enemies; if the crow be seen to fly at night, the people will meet with ruin.
10. If the crow (vāyasa) be seen to fly round and round from left to right, there will be fear of troubles from one’s own kinsmen; if it be seen to fly round turning from left to right, there will be fear of troubles from strangers; if it be seen to turn round in haste and fear, there will be a whirlwind.
Crow and Travel
11. If the crow be seen with its head raised and flapping its wings, a person will meet with danger in his travels; if it be seen to steal away grain, there will be suffering from hunger; and if the feathers of the crow be seen in an army, there will be fight and theft.
12. If the crow be seen to throw ashes, bones, hairs or feathers, the husband will meet with troubles in his bed and if it be seen to carry gems, flowers and the like, there will be the birth of sons and daughters.
13. If the crow be seen with its mouth filled with sand, grain, wet-earth, flowers and the like, there will be gain of wealth; and if it be seen to drag away vessels from places frequented by men of various classes, there will be fears of various kinds.
Crow Droppings on You
14. If the crow be seen to strike with its legs vehicles, weapons, shoes, umbrellas, shadows of men or the men themselves, there will be death; if it be seen to go round a person or to throw flowers on him as if by way of worship, the person will be respected and if it be seen to pass excrement on a person, there will be gain of food.
15. A person will gain that object which is brought to him by the crow and he will lose that which is carried away by the crow. If such object be of yellow colour, there will be gain or loss of gold; if it be an article made of cotton, there will be gain or loss of cloth; and if of white colour, there will be gain or loss of silver.
சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன ?
காளிதாசன் உலக மஹா கவிஞன் ; ஏழே நூல்கள் மூலம் புகழ்க் கொடி நாட்டியவன் ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விக்ரமாதித்யன் சபையை அலங்கரித்தவன். அவன் புகழுக்கு முக்கியக் காரணம் அவனுடைய 1500 உவமைகளாகும் ; அத்தனையும் பொருத்தமானவை மட்டுமல்ல; புராண இதிஹாச உவமைகள் முதல் இயற்கையில் காணும் அதிசயக் காட்சிகள் வரை அவன் பயன்படுத்தியுள்ளான். ( இது பற்றி இதே பிளாக்கில் நிறைய கட்டுரைகள் உள்ளன.)
2500 சங்கப்பாடல்களை இயற்றிய 450 புலவர்களில் ஒரு சிலரே சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு பற்றி பாடியுள்ளனர் ஆனால் ஏழே நூல்களை சம்ஸ்க்ருத மொழியில் நமக்கு விட்டுச் சென்ற உலகம் புகழும் காளிதாசனோ நிறைய இடங்களில் அதை உவமையாக பயன்படுத்தியுள்ளான். அவைகளை நேரில் கண்டுதான் அவன் பாடியிருக்கிறான் என்பதை மேலும் பல சந்தன மர உவமைகள் மூலம் அறிய முடிகிறது.
சுமார் 12 உவமைகளில் பாம்பு வசிக்கும் சந்தன மரங்கள், செஞ்சந்தனம், முலைகளில் சந்தனம் பூசுதல், சந்தன மரம் வேறு இடஙகளில் வளராது, மலய மலையில் மட்டுமே வளரும், பெரியோர்கள் இறந்தால் சந்தனக் கட்டைகளை அடுக்கி சிதைத் தீயில் எரித்தல் என்றெல்லாம் அவன் பாடியதைப் பார்க்கையில் அவனுக்கு தாவரவியல், பூகோள/ புவியியல் எல்லாம் தெரிந்ததையும் அறிகிறோம்.
முதலில் சங்கப் புலவர்கள் பாடியதைக் காண்போம்
இது கபிலரின் அருமையான உவமை ; நற்றிணையில் முதல் பாடலாக உள்ளது ; நற்றிணை நானூறு என்பது எட்டுத் தொகை நூல்களில் ஒன்று . சங்க இலக்கிய புலவர்களில் அதிகப் பாடல்களை யாத்த புலனழுக்கற்ற அந்தணன் அவன் . இதோ பாடல் :-
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!— (நற்றிணை 1;
எழுதியவர்: கபிலர்.)
பொருள்:- என் காதலர் சொன்ன சொல் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றும் என் தோள்களைப் பிரியாதவர்;குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி, உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் (தேனீக்கள்) சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்;
xxxx
பாம்பு பற்றி,
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே-
(-நற்றிணை 261; சேந்தன் பூதனார் பாடல்)
பொருள்:-
வானம் மின்னுகிறது. இருள் மண்டிக் கிடக்கிறது. வானில் இடி முழங்குகிறது. காய்ந்து கிடந்த காட்டை மறைத்துக்கொண்டு மேகங்கள் உயர்ந்த மலைக் குன்றுகளைத் தழுவிக்கொண்டு மழையாகப் பொழிகின்றது. நள்ளிரவு வேளை இது. பெருஞ்சினம் கொண்ட மலைப்பாம்பு மரத்தைப் பற்றிக்கொண்டு, யானையை இரையாக்கிக்கொள்ள வளைத்து இறுக்கும் வழி அது.எருவைப் பூவோடு சந்தனமும் மணக்கும் சிறிய மலைவழி அது.
xxxx
இத்துடன் சில காளிதாசன் பாடல்களை ஒப்பிட்டுக் காண்போம் :
சந்தன மரங்களில் பாம்புகள் சுற்றியதால் உண்டான தடங்களில், கால் சங்கிலிகளை அறுக்கும் தன்மை கொண்ட யானைகள் கட்டப்பட்டுள்ளன யானைகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறும் நழுவவில்லை. ரகுவம்சம் 4-48
கொடிய விஷமுள்ள பாம்பு தன் மேல் ஏறுவதை சந்தன மரம் பொறுத்துக் கொள்ளுவது போல ராவணனுடைய அடாத செயல்களை நானும் பொறுத்தேன்; இதற்குக் காரணம் அவனுக்குப் பிரம்மதேவன் கொடுத்த வரமே 10-42 ரகுவம்சம்.
******
पित्र्यमंशमुपवीतलक्षणम्
मातृकम् च धनुरूर्जितम् दधत्।
यः ससोम इव घर्मदीधितिः
सद्विजिह्व इव चन्दनद्रुमः॥ 11-64
பரசுராமர் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர் ; தந்தை ஜமதக்கினி ஒரு பிராமண ரிஷி; தாயார் ரேணுகா , ஒரு அரசனின் மகள் ; அதாவது க்ஷத்ரியப் பெண் ; ஆகவே பரசுராமரிடம் பிராமண குணமான சாந்தியும் க்ஷத்ரிய குணமான வீரமும் காணப்பட்டன. இது உஷ்ணமான கிரணங்களுடைய சூரியனும், குளிர்ச்சியான கிரணங்களுடைய சந்திரனும் சேர்ந்து இருப்பது போல இருந்தது. குளிர்ச்சி தரும் சந்தன மரத்தில் விஷப் பாம்பு இருந்தது போல் காணப்பட்டது.
xxxx
சாகுந்தலம் என்ற நாடகத்தை முதலில் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்ததால் காளிதாசன் புகழ் பரவியது . அதிலும் பாம்பு- சந்தன மரம் உவமை வருகிறது :
உயிரினங்கள் இடத்தில் நல்ல மனிதன் பின்பற்றும் குணங்களை நீ மீறுவது ஏன் ? நல்ல சந்தன மணம் கமழும் மரங்கள் இருக்கும் காடுகளில் ஒரு குட்டிக் கரும் பாம்பு இருப்பதால் காட்டின் பெயரே கெடுவது போல அல்லவா இது இருக்கிறது — சாகுந்தலம் 7-18
to be continued…………………………………………..
TAGS– சந்தன மரப் பாம்பு , சங்கப் புலவர், காளிதாசன், சாகுந்தலம், ரகுவம்சம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வியாதிகள் தீர்த்து, குடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ
சக்தி பீடம்!
பாரதமெங்கும் உள்ள சக்தி பீடங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு சக்தி பீடம் விந்த்யாசலம் ஆகும். இங்கு தூய கங்கா நதி பாய்கிறது. ஶ்ரீ சக்ரம் அமைந்துள்ள கோவிலும் இங்கே உள்ளது.
அமைந்துள்ள இடம்
உத்தர பிரதேசத்தில் அலகாபாத்திற்கும் முகல்சராய்க்கும் இடையே கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம் விந்த்யாசலம். இதிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள நகரம் மிர்ஜாபூர். மிர்ஜாபூரில் ரயில் நிலையத்தில் இறங்கி விந்த்யாசலம் செல்ல வேண்டும்.
வாரணாசியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் பிரயாகையிலிருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் இது அமைந்துள்ளது.
வருடம் முழுவதும் யாத்ரீகர்கள் வரும் தலம் என்பதால் பஸ் வசதி எப்போதும் உண்டு. ஹோட்டல்களும், தங்க இடமும் உள்ளது.
. புராண வரலாறு
ஶ்ரீமத் பாகவதத்தில் பத்தாம் ஸ்கந்தத்தில் கூறப்படும் வரலாற்றில்,
ப்ரம்மா, ஸ்வயம்பாவமனுவையும் சதரூபரையும் தன் மனதால் உற்பவிக்கிறார் என்றும் திருமணத்திற்குப் பிறகு ஸ்வயம்பாவமனு தேவியின் விக்ரஹத்தைத் தன் கையால் உருவாக்கி தீவிர தவத்தை நூறு ஆண்டுகள் செய்ததாகவும் இதனால் மனம் மகிழ்ந்த தேவி நல்ல அந்தஸ்து, குடும்ப விருத்தி, உயர்ந்த நிலை ஆகியவற்றை அவருக்கு அருளியதாகவும் வருகிறது.
இதன் பின்னர் தேவி விந்த்யாசல மலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆகவே படைப்பின் ஆரம்பகாலம் தொட்டு உள்ள தலம் இது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு புராண வரலாற்றின் படி தேவியானவள் மஹிஷாசுரனை வதம் செய்த பிறகு இங்கு குடி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மஹாபாரதத்தில் தர்மர், “அன்னையே! நீ எப்போதும் விந்த்யாசல மலையில் இருக்கிறாய்!” என்று கூறி வணங்குகிறார்.
லலிதா சஹஸ்ர நாமம்
லலிதா சஹஸ்ர நாமத்தில் 336 நாமமாக வருவது விந்த்யாசல நிவாஸினீ என்னும் நாமம்.
விந்த்யாசலத்தில் இருக்கும் அம்பாளுடைய ரூபத்திற்கு விந்த்யாதி வாஸினீ என்று பெயர் என்பதாக பத்ம புராணத்தில் அம்பாளுடைய முக்கிய க்ஷேத்திரங்களைச் சொல்லுகையில் சொல்லப்படுகிறது.
‘த்ரிகூடே ச த தாஸீதா விந்த்யே விந்த்யாவாஸினீ’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்தாற்போல தேவி மாஹாத்மியத்தில் அம்பாள் விந்த்யாசலத்தில் தான் இருப்பதாகவும் அந்த ரூபத்தில் அசுரர்களை சம்ஹாரம் செய்யப் போவதாகவும் சொன்னதாக சொல்லப்படுகிறது.
“வைவஸ்வதேந்தரே ப்ராப்தே அஷ்டாவிசதிமே யகே |
சும்போ நிசும்பச்சிவான்யௌ உத்பத்ஸ்யேதே மஹாஸுரௌ ||
நந்தகோபக்ருஹே ஜாதா யசோதா கர்பஸ்ம்பவா |
ததஸ்தௌ நாசயிஷ்யாமி விந்த்யாசல நிவாஸினீ ||”
இதே போல பாஞ்சராத்ர லக்ஷ்மீ தந்த்ரத்திலும் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது:
“வைவஸ்வதேந்தரே தௌ ச புன: சும்பநிசும்பகௌ |
உத்பத்ஸ்யேதே வரான் மத்தௌ தேவோபத்ரவகாரிணௌ ||
நந்தகோபகுலே ஜாதா யசோதா கர்பஸம்பவா |
தாவஹம் நாசயிஷ்யாமி நந்தாக்யா விந்த்யவாஸினீ ||
ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அதே நாளில் யசோதையின் கர்பத்தில் தேவி அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. கம்ஸன் கல்லால் அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற போது அது அவன் கைப்பிடியிலிருந்து தப்பித்து தேவியின் உருவமாக மாறியது.
விந்த்யாசலவாஸினீ ஆலயம்
இப்பகுதியில் பல ஆலயங்கள் உள்ளன.
1. மா விந்த்யாசலவாஸினி கோவில் : துர்க்கையம்மன் எழுந்தருளி இருக்கும் கோவில் இது.
2. காளி கோ கோவில் : குகை கோவிலாக அமைந்துள்ள இந்தக் கோவிலில் காளி எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.
3. அஷ்டாபுஜி தேவி ஆலயம் : மஹா சரஸ்வதி எழுந்தருளியுள்ள ஆலயம் இது. குன்றில் அமைந்துள்ள ஆலயமான இது விந்த்யாசலவாஸினி கோவிலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அஷ்டாபுஜி தேவி ஆலயம் அருகே 30”x30”x4” என்ற அளவில் கூர்ம ப்ரிஷ்ட ஶ்ரீ சக்ரம் 30”x30”x8” என்ற அளவுள்ள சிவலிங்க பீடத்தின் அடியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஶ்ரீசக்ரம் கல்லிலே செதுக்கப்பட்டிருக்கிறது.
த்ரிகோண பரிக்ரமா
இங்கு முக்கியமான யாத்திரை த்ரிகோண பரிக்ரமா எனப்படும் யாத்திரையாகும்.
முக்கோண வடிவில் அமைந்துள்ள கோவில்களுக்குச் செல்லும் யாத்திரை விந்த்யாவாஸினீ ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. தெற்கே மஹாகாளி ஆலயம் (காளி கோ கோவில்) , மேற்கே மஹாசரஸ்வதி ஆலயம் (அஷ்டாபுஜி தேவி ஆலயம்) சென்று தரிசிப்பதுடன் யாத்திரை முடிகிறது.
உற்சவ காலங்கள்
நவராத்திரி உற்சவ காலத்தில் நகரம் முழுவதும் தீபாலங்காரத்தால் ஜொலிக்கும். ஏப்ரல்(சைத்ர மாதம்), அக்டோபர் (அஸ்வினி மாதம்) மாதங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தேவியானவள், கோவில் உச்சியில் இருக்கும் கொடியில் இருப்பதாக ஐதீகம். தங்கத்தால் அமைந்துள்ள இந்தக் கொடி சூரிய சந்திர கொடி என்று அழைக்கப்படுகிறது. இந்த அடையாளம் விந்த்யாவாஸினீ கொடியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்
நோய் தீர்க்கும் தீர்த்தம்
இங்குள்ள கங்கை நதியின் தூய நீர் மிகுந்த சக்தி வாய்ந்தது; புனிதமானது.
பண்டித ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் மத்திய கல்வி மந்திரியாகப் பொறுப்பு வகித்த அப்துல் கலாம் ஆஜாத் சிலகாலம் இங்குள்ள சுற்றுலா பங்களாவில் தங்கி கெருவா குண்டம் மற்றும் காளிகோ ஆகிய இடங்களிலிருந்து தீர்த்தத்தை அருந்தி வந்தாராம். காலையிலும் மாலையிலும் இந்தப் பகுதியில் நடைப்பயிற்சியையும் அவர் மேற்கொண்டாராம். வியாதியால் பீடிக்கப்பட்டோரை வியாதியிலிருந்து மீட்கும் சக்தி இந்த தீர்த்தத்திற்கும் இங்குள்ள பிரதேசத்திற்கும் உண்டு என்பது அனைவருடைய நம்பிக்கையும் ஆகும்.
வியாதி தீர, குடும்பம் செழிக்க, உயர்ந்த அந்தஸ்தைப் பெற என அனைத்தும் அருளும் தேவியாக விந்த்யாசலவாஸிணீ இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஏராளம்.
Sandal Wood in Hinduism -Part 3 ; Murthy Nayanar story (Post No.13,098)
Let me continue with Kalidas where he used sandalwood similes.
Kalidasa’s knowledge about sandalwood tree is amazing. He knew where it was grown and where it could not survive. His quotations in Raghuvamsam showed that he actually saw them in Karnataka forests (please read first two parts). Here in the world-famous drama Sakuntalam he shows that his knowledge in botany.
Act 4, Sakuntalam
Kanva
My darling ! they also have to be given in marriage; it would not be proper for them (friends of Sakuntala) to with you. Gautami will accompany you.
Sakuntala
(clasping her father in her arms) rent from my dear father’s lap like a sapling of the sandalwood tree uprooted from the side of the Malaya mountain, how can I ever survive in an alien soil? (weeps bitterly)
Kalidasa’s geographical knowledge about Malaya, Darduma mountains and his botanical knowledge about sandalwood are very evident in his works. He knew why sandalwood trees are not seen in other parts of India except Malaya mountain.
xxxx
Why do you flout that rule of gentleness
Toward all living things,
Like the young of a black serpent that spoils
For other creatures, the pleasant sanctuary
That is the fragrant sandalwood tree? (Act VII, 18) Sakuntalam
Once he sported on the grounds of Malaya mountain, the breeze from the South, like an adulator removed the fatigue of his beloved, the breeze which had shaken the sandal trees and which wafted the filaments of Lavanga flowers (was cool and fragrant)
Among the ancient poets, Kalidasa was the poet who used highest number of Sandalwood references than any other poet in the Indian literature.
xxxx
Beautiful simile from a Sangam poem
Narrinai is one of the eight anthologies in Sangam Tamil corpus. The very first poem in the collection of 400 poems in the book has a beautiful simile about a honeycomb on top of a sandal wood tree. We could imagine how fragrant the honey would be!
Kabilar , the brahmin with spotless character, who composed highest number of poems in Sangam Age, says,
My lover is a man of words; always sweet; he never goes away from my shoulders (doesn’t seek another woman); his passion/love for me is as sweet as the honey found in the honeycomb that is hanging on top of the sandalwood tree; that honey is gathered by the bees from the lotus flowers.
.நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!– நற்றிணை 1;
எழுதியவர்: கபிலர்.
Another translation :
The acquaintance with noble men of high qualities is as sweet as the honey gathered by the bees from the lotus flowers and stored in the honeycomb on the lofty branch of the sandalwood tree in high mountain.
xxxx
From 1000 year old Rajatarangini of Kalhana
Where in the shrine the residence of Shiva at Nandikhetra are to be seen, to this day, the drops of the votive sandal emollient offered by the celestials.
Rajatarangini 1-36
xxxx
Story of Murthy Nayanar and Sandalwood Paste
The Pandya country has long enjoyed worldwide fame. In that land is the fair and ancient city of Madurai, the home of academies where poets read their works and where the branches of Tamil culture flourished in the schools. In that fair city there dwelt an ancient and respected family of merchant class. As a result of austerities which they performed, there was born to them a son who severed all other attachments and with uncompromising zeal devoted himself solely to the feet of the Lord Siva and his name was Murti. It was his regular practice to provide sandal paste to adorn the lord Siva of Aalavaay/Madurai.
In those days, the king of the Vatukata Karunatars (Karnataka) annexed Pandya country with its capital Madurai. The new king took no pains to foster the prosperity of Tamil land. Instead, he forsook the religion of Siva and turned to the base religion of the Jains. In concert with the wicked Jains, he even decided to heap indignities upon Murti . In spite of the persistent attacks, Murti continued his service as before. Then the king cut off his supply of sandalwood for making paste. Murti went everywhere in search of suitable sandalwood. But when the sun went down Murti returned empty handed and despondent, and made his way to the temple of Siva.
“Today I can no longer grind sandal paste for the body of Siva and thought , but my hand will not cease from grinding”. With that thought, he placed his elbow on the grinding stone , and ground away until the skin and the bow and sinew all was reduced to pulp. From his mangled arm the blood poured out and mingled with the marrow from the bone. The Lord himself could not bear the sight and that night a gracious voice rang out.
“Sir! do not let your love drive you to such lengths. You are to take over the land now ruled by the man who has caused you so much pain”.
When Murti heard it, he refrained from further acts of self- harm. To bear out the truth of that saying the life of the war like king of Vatukata Karunatars came to its end that very night.
Upon the death of this villainous king, his wife and family were plunged into grief and totally distraught. That morning the ministers gathered , and when they performed the funeral rites, turned their thoughts to the question of a successor. For that king had no male progeny.
The ministers decided that they would blindfold the king’s elephant and let it go. Then whomsoever the elephant took hold of with its trunks, the man would be crowned as king.
With a gold plate on its forehead and the blindfold over its eyes, the royal elephant went off cheerfully and roamed through the streets of Madurai city. It went to the temple and bowed down before Murti . then it picked him up and seated him on its neck. The whole city burst into joy. Ministers helped him to get down from the elephant. When he was about to be crowned by the priests, he put one condition to accept the offer. If you give up Jainism and return to Saivism , I will become king. They readily agreed to his condition and crowned him the king of Pandya country.
Murti Nayanar is one of the 63 Saivite saints and his story is in Sekkizar’s Periya Puranam in Tamil. His statue is in all the big and famous Siva temples of Tamil Nadu.
xxxx
Sandal paste is part and parcel of Tamil culture. In Kerala, a part of Tamil Nadu 2000 years ago, all Hindus wear sandal every day after bath. In Tamil Nadu, all orthodox Hindus have a prayer room in their houses and in that prayer room there would be a grinding stone and a small sandal wood to make paste.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 2
ச.நாகராஜன்
பிர்லாவின் வணிக சாம்ராஜ்யம்
சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என ஒவ்வொன்றாக அவர் தொழில் சாம்ராஜ்யம் விரிவை அடைந்தது.
1925இல் பல தொழிலதிபர்களை இணைத்து இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸை அமைத்தார்.
சிமெண்ட், அலுமினியம், கெமிக்கல்கள், ரேயான், இரும்பு பைப்கள், டெலிகாம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொன்றாக ஆரம்பித்தார்.
1940களில் அவர் கவனம் கார் தயாரிப்பில் திரும்பியது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கார்களை உற்பத்தி செய்ய ஆர்மபித்தார்.
ஹிந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார். பிர்லா குழுமத்தில் மூன்று லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர் என்றும் 2,50000 பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறதென்றும் அவர் பெருமையுடன் கூறினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்த பின்னர் அவருக்கு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே யுனைடெட் கமர்ஷியல் வங்கியை 1942ல் அவர் ஆரம்பித்தார். (பின்னால் இது யூகோ வங்கி என்று ஆனது)
கல்வித் துறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர் பிலானியில் பிர்லா எஞ்ஜினியரிங் காலேஜ் என்று பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். இன்று பிட்ஸ் பிலானி (Birla Institute of Technology and Science)s என்று அனைவராலும் வியந்து அழைக்கப்படும் பெரிய கல்வி நிறுவனத்தை அவர் வளர்த்ததோடு, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பலவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்ந்தார்.
பிர்லா நாட்டிற்காகச் செய்த சேவையை கௌரவிக்க 1957இல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தபால்தலையும் வெளியிடப்பட்டது.
குடும்பமும் வணிகமும்
துர்கா தேவி என்ற முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகனும் இரண்டாம் மனைவி மஹாதேவி மூலம் இரு மகன்களும் அவருக்கு உண்டு. மஹாதேவி மறைந்தவுடன் தனது மகன்களை கூட்டுக் குடும்பத்தின் பரிபாலிப்பில் அவர் விட்டார். தனது மகன்களை தனது சமூகத்தில் உள்ள இதர நல்ல வணிகர்களிடம் அனுப்பி வணிக முறைகளைக் கற்றுக் கொள்ளச் சொன்னார்.
அவர் வணிகத்தை நடத்திய விதமே தனி.’ நான் ஒரு பிஸினஸ்மேன் இல்லை’ என்று அவர் ஒரு முறை கூறிய போது அனைவரும் வியந்தனர்.
‘ஆம், எனது வணிகம், தொழில்கள் தானியங்கி பைலட்டாக செயல்படும், முக்கியமான பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் தான் என்னை அழைப்பார்கள்’ என்றார் அவர். அப்படி ஒரு நிர்வாகத் திறமை அவருக்கு இருந்தது.
பம்பாய் அலுவலகத்தில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலுமுள்ள அவரது நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட விவரங்கள் காலையில் அவருக்கு வந்து குவியும். அதில் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி, க்ராஸ் X குறி போடப்பட்டு உரியவர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும். தனது மேலாளர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கறாராகவே இருந்தார்.
காந்திஜி நினைவு இல்லம்
புது டில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சலவைக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோவில்களை பிர்லா குடும்பத்தினர் கட்டியுள்ளனர்.
காந்திஜி தங்கி இருந்த பிர்லா மாளிகையை அரசு தன் கைவசத்தில் 1971ஆம் ஆண்டு எடுத்தது, அதை பொதுமக்களின் பார்வைக்காக காந்திஜியின் நினைவு இல்லமாகத் திறந்து வைத்தது.
மறைவு
இந்தியாவின் பொருளாதாரத்தையும் கல்வித் துறையையும் தொழில் துறையையும் பெரிதும் மேம்படுத்திய ஜி.டி.பிர்லா 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் நாள் தனது 89ம் வயதில் மறைந்தார்.
சம்பாதித்ததை சந்தோஷமாக அறவழியில் நன்கொடையாக அளி என்பது அவர் காட்டிய வழி!
உலகில் உள்ள எல்லா பொக்கிஷமும் மதிப்பே இல்லாதவையாகி விடும், அவற்றை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனில்! (All the treasure in the world is worthless, unless you have someone to share it with.) என்பது அவரது பொன்மொழி!
ஆகவே கோடி கோடியாக அவர் நன்கொடையை தகுதி உள்ளோருக்குத் தந்து வந்தார். அவரது வழி வந்த அவரது குடும்பத்தினர் தவறாது அவர் வழியை இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆதித்ய பிர்லா குழுமம் கடந்த ஆண்டுகளில் 50 கோடி, 276 கோடி, 400 கோடி என்று அளித்து வரும் நன்கொடை விவரங்களை அவ்வப்பொழுது செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.
அனைவருடனும் ஒத்து வாழ் என்பதே அவர் அனைவருக்கும் கூறிய அன்புரை.
‘அழகிய ரோஜா மலரும் வலியைத் தரும் முள்ளும் இணைந்து ஒன்றோடொன்று ஒத்துழைத்து இருப்பதைப் பார்த்தால் நம்மால் அப்படி இருக்க முடியாதா என்ன?’ என்றார் அவர். (Rose- beauty, pricks- painful both cooperate with each other then why can’t we? )
இந்தியாவை சுதந்திரத்துடன் பொருளாதாரத்தில் வலிமை உள்ள நாடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவரது தாரக மந்திரம் : அனைவருக்கும் உதவுங்கள் என்பதே!