There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part seven, rare pictures of Temples of Karnataka and Gujarat are posted; Pictures of horoscope, Ganesh, Dhinoj,Delmal, Aivalli/ Aihole etc are shown
xxxx
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Elephanta Caves
Kheda in Gujarat
Hindu Horoscope
Konur, Gujarat
Huli,Karnataka
Panchalinga Temple, HOOLI
Dhinoj, Gujarat
Limboji Mta, Gujarat (Delmal)
—subham—
Part 7, 1928 German book, Aihole, Dhinoj, Konur, Delmal, Hooli, Karnataka
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 42
கோவில் எண்கள் –51. 52, 53, 54
51.புல்பள்ளி சீதா தேவி கோவில்
சுல்தான் பேட்டரியிலிருந்து 8 கி.மீ . தொலைவில் புல்பள்ளி இருக்கிறது. இங்குள்ள கோவிலில் ராமனின் புதல்வர்களான லவ, குசர்கள், மற்றும் சீதா தேவி ஆகியோர் தரிசனம் தருகின்றனர் .
கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அழகான ராமாயண ஓவியங்கள் உள்ளன
இந்த சீதா தேவி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் பழசி ராஜாவால் கட்டப்பட்டது.
மத வெறிபிடித்த மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் இந்த கோவிலை அழிக்கத் திட்டமிட்டார். ஆனால் தேவியின் அற்புத சக்தியால் நண்பகலில் இருள் மண்டியது. இதனால் துலுக்கப்படைகள் பின்வாங்கின.
சிறப்பு அம்சங்கள்
சீதா தேவி லவனையும் குசனையும் பெற்ற இடம் வட இந்தியாவில் உள்ளது. ஆயினும் இங்குள்ள மக்கள், அது இங்கு நடந்ததாக நம்புகின்றனர்
இந்த வட்டாரத்தில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் அதிகம்; ஆயினும் கோவில் வட்டாரத்தில் அவை இல்லை. சீதை இட்ட சாபத்தால் அவை வருவதில்லை என்றும் நம்புகின்றனர்.
வால்மீகம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் புற்று என்று பொருள்; புற்று சேரும் அளவுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து தவம் செய்ததால் வால்மீகிக்கு இப்பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் ஒரு புலவர் பெயர் வால்மீகி !
இந்த வட்டாரத்தை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தும் வண்ணம் புற்றுக்கள் நிறைந்துள்ளன.
ஜனவரி மாதத்தில் ஆண்டு உற்சவம் நடக்கும். இதற்கு திர உற்சவம் என்று பெயர். மூன்று வகையான தெய்யம் Theyyam நடனங்கள் அப்போது நடக்கும். வித விதமான முக வர்ணங்கள்; பலவகை வளையல்கள், வித்தியாசமான கிரீடங்கள் ஆகியவற்றைக் காண பெரிய பக்தர்கள் கூட்டம் கூடுகிறது
தெய்யம் நடனத்தில் ஆடுவோர், தெய்வங்களை தம் மீது ஏற்றி (ஆவாஹனம் செய்து) ரசிகர்களை ஆசீர்வதிப்பார்கள் .
பணியர் களி என்ற பழங்குடி மக்கள் நடனமும் அதற்கே உரித்தான இசையுடன் நடக்கிறது.
XXXXX
52.திருநெல்லி விஷ்ணு கோவில்
வடகேரளத்தில் வயநாடு பகுதியில் உள்ள முக்கிய மஹா விஷ்ணு கோவில் திருநெல்லி கோவில் ஆகும். மணத்தவாதியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது. இதை சஹ்யாமல (மேற்கு மலை) க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்
3000 ஆண்டுப் பழமை உடையது என்றும் காசி, கயா க்ஷேத்திரங்களுக்குச் சமமானது என்றும் பக்தர்கள் சொல்லுவர் ; இந்தக்கோவிலை வணங் கியோர் பட்டியல் நீண்ட பட்டியல் ! பிரம்மாவே ஸ்தாபித்த இந்தக்கோவிலுக்கு ராம லட்சுமண , சுக்ரீவ, சபதரிஷிகள் , கருடன் ஆகியோர் வந்தனர். கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையையும் இந்த இடத்துடன் தொடர்புபடுத்துவார்கள் .
ஒரு பர்லாங் தூரத்தில் பாபநாசினி ஓடை ஓடுகிறது; இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் அனைத்தும் ஓடிவிடும் தென்பகுதியில் உள்ள புனிதப் பாறையில் இறந்தோருக்கான சடங்குகள் நடக்கும். ஜமதக்கினிமுனிவர் வந்து சிறப்பித்த இடம் இது.
விஷு புண்ய நாளில் ஆண்டு உற்சவம் நடக்கிறது. ஒட்டந்துள்ளல் , கதகளி நடனங்கள் அப்போது நடக்கின்றன.
கார்கிடகம், துலாம்,கும்பம், மாதங்களில் அமாவாசை நாளில் நீத்தாருக்கு பலி கொடுக்க தாய் தந்தையரை இழந்தோர் வருவார்கள். அருகிலுள்ள த்ரிசேரி மஹாதேவன் கோவிலுக்கும் அவர்கள் செல்கின்றனர்.
இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் இயற்கை வனப்புமிக்கது.
கோவிலில் கண்கவரும் ஓவியங்களும் உள்ளன.
தெற்குப் பக்கமுள்ள பஞ்ச தீர்த்தக்குளம் ஒரு புனிதக் குளம். ஐந்து புனித ஆறுகளின் நீர் இக்குளத்தில் கலப்பதாக ஐதீகம். குளத்தின் நடுவே ஒரு மேடு உள்ளது. அதை அடைய ஒரு கல்பாலம் உள்ளது. இந்த மேட்டில் உள்ளது சரிவான கல்லை விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.
XXXX
53.சுல்தான் பேட்டரி மஹா கணபதி கோவில்
சுல்தான் பேட்டரி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை திப்பு சுல்தானும் வணங்கியதாகத் சொல்லுவார்கள்.
ஐனவரி -பிப்ரவரி மாதங்களில் எட்டு நாள் உற்சவம் நடக்கிறது. சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகியன நடக்கும். மூன்றாம், நாலாம் நாள் திருவிழா முக்கியமானது. அந்த நாட்களில் களம் எழுத்துப் பாட்டு செய்வார்கள்.பூமியில்/ களத்தில் இறைவனின் படத்தை எழுதுகையில்/ வரைகையில் பாட்டுப் பாடுவார்கள். விழாவின் கடைசி நாளன்று அலங்கார யானையின் மீது திடம்பு (இறைவனின் திரு உரு) ஏற்றப்பட்டு நகர் முழுதும் பவனி வரும். காலை முதல் மாலை வரை பவனி நடைபெறும் .
XXXX
54.சுல்தான்பேட்டரி மாரியம்மன் கோவில்
அம்மை போன்ற நோய்கள் அண்டாமல் பாதுகாக்க மாரியம்மாவை வணங் கும் வழக்கம் தென் இந்தியா முழுதும் உள்ளது. சுல்தானபேட்டரி மாரியம்மன் கோவிலில் பிப்ரவரி- மார்ச் மாதத்தில் 3 நாள் விழா நடக்கும். மூன்றாம் நாளன்று கழச்ச வரவு ஊர்வலம் நடக்கும். அதில் கும்பம் களி , கோல் களி , திர , காவடி முதலியன இடம்பெறுகின்றன. பறிச்சமூட்டுக்களி , பரத நாட்டியம், மோஹினியாட்டம் ஆகியவையும் உற்சவ காலத்தில் நடப்பது கோவிலின் சிறப்பு அம்சங்களாம் .
—-சுபம்—
TAGS– வயநாடு, கோவில்கள், சுல்தான் பேட்டரி, லவ குச, சீதாதேவி, கோவில்
சைவ சமயம் தழைத்தோங்க அவதரித்த நால்வரைப் பற்றிய விவரங்களை ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்.
அதை விளக்கும் பாடல்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
சமயக் குரவர் நால்வரின் வயது
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்கு
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் – இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி.
அப்பரின் வயது 81.
81 வருடங்கள் அவர் புவியில் வாழ்ந்து பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றிப் பாடினார்.
வாதவூரர் எனப் புகழ் பெற்ற மாணிக்கவாசகருக்கு வயது 32. அவர் திருவாசகத்தைப் பாடி அருளினார்.
சுந்தரருக்கு வயது வயது 18.
18 வயதுக்குள் அவர் ஆற்றிய தெய்வீக விளையாடல்கள் பல. அவர் தலம் தோறும் சென்று தேவாரப் பாடல்களைப் பாடி அருளினார்.
திருஞானசம்பருக்கு வயது 16.
16 வயதுக்குள் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள தேவாரப் பாடல்களை அவர் பாடி அருளினார். அவர் ஆற்றிய தெய்வீகத் திருவிளையாடல்கள் பல.
நால்வரின் நட்சத்திரம்
நால்வரின் நட்சத்திரம் குறித்த பாடல் இது.
பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்
நீடிய சித்திரை மாதச் சதயம் நிறைவன்றொண்டர்
ஆடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகந்
தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே.
சம்பந்தர் – வைகாசி மாதம் மூலம்
அப்பர் – சித்திரை மாதம் சதயம்
வன்றொண்டர் எனப்படும் சுந்தரர் – ஆடி மாதம் சுவாதி
திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் – ஆனி மாதம் மகம்
சேக்கிழார் – வைகாசி மாதம் பூசம்
நால்வரின் அவதாரச் சிறப்பு
நால்வரின் அவதாரச் சிறப்பு குறித்த பாடல் இது.
சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனு – முற்கோலி
வந்திலரே னீறெங்கே மாமறை நூல் தானெங்கே
எந்தைபிரா னைந்தெழுத் தெங்கே
அப்பரும் சம்பந்தரும் சுந்தரும் வாதவூர் மாணிக்கவாசகரும் தோன்றவில்லை எனில் திருநீறு இல்லை, மாமறை நூல் இல்லை, ஐந்தெழுத்தும் இல்லை அல்லவா?
திருஞானசம்பந்தர் – குலம் அந்தணர்; நாடு – சோழ நாடு; ஊர் – சீர்காழி; வழிபாடு – குரு
அருளிய பதிகங்கள் 385 பாடல்கள் 4169 முதல் மூன்று திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன
திருநாவுக்கரசர் (அப்பர்) – குலம் வேளாளர்; நாடு – நடு நாடு; ஊர் – திருவாமூர்; வழிபாடு – குரு
அருளிய பதிகங்கள் 312 பாடல்கள் 3066 நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன.
சுந்தரர் – குலம் ஆதிசைவர்; நாடு – நடு நாடு; ஊர் – திருநாவலூர்; வழிபாடு – குரு
அருளிய பதிகங்கள் நூறு. பாடல்கள் 1026. இவை ஏழாம் திருமுறையில் உள்ளன.
மாணிக்கவாசகர் – குலம் – அந்தணர் நாடு- பாண்டிய நாடு ஊர் – திருவாதவூர்
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. பாடல்கள் 658. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
திருக்கோவையாரில் 25 அதிகாரங்கள் உள்ளன. பாடல்கள் 400. இவை எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ளன.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்
பாடலின் பொருள் :
திருக்குறள், ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரம், முனிவர்கள் மொழி, திருக்கோவையார் மற்றும் திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வாசகமே. அதாவது உணர்த்துகின்ற மெய்ப்பொருள் ஒன்றேயாம்.
There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part six, rare pictures of Temples of Rajasthan are posted; Akali (Sikh)symbols, South Indian Temple Cars (Chariots), Temple models are also pictured.
xxxx
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Akali Turban and Chakra
Udaipur
Temple Chariots from Trichy and Mysuru
Amber in Rajasthan
Sun Temple at Modhera, Gujarat
Shiva templeShiva Temple Model
Marble Templecombe
Kota, Rajsthan
Ekalinga Temple, Udaipur, Rajsthan
—subham—
Part 6, 1928 German book, Udaipur, Kota, Rajasthan, Mount Abu, Amber
2.இந்திரனின் யானையின் பெயர் என்ன? அதன் நிறம் என்ன? அதற்கு எத்தனை தந்தங்கள்?
xxxx
3.மஹாபாரத யுத்தத்தின் போக்கை மாற்றிய யானை எது?
xxxx
4.கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் என்ன ? அதை ஏவியவன் யார்?
xxxx
5.பல சம்ஸ்க்ருத நூல்களின் கதாநாயகன் ஆன உதயண மன்னன் அடக்கிய யானையின் பெயர் என்ன? புத்தர் அடக்கிய யானையின் பெயர் என்ன?
xxxx
6.சந்திரலேகா என்ற யானையின் பெயர் எங்கே வருகிறது?
xxxx
7.எந்த யானைக்கு குருவாயூரில் சில உள்ளது ?ஏன்?
xxxx
8.யானைகளை மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்டு அவை இறப்பதை பார்த்து ரசித்த ஹுன மன்னன் யார் ?
xxxx
9.யானை மீது ஏறி கயிலை மலைக்குச் சென்றவர் யார்?
xxxx
10.ரிக்வேதத்தில் யானைக்கு என்ன பெயர் சொல்லப்பட்டுள்ளது?
xxxx
விடைகள்
1.முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்
xxxx
2.இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம்; அது வெள்ளை யானை; அதற்கு 4 கொம்புகள்.
xxxx
3.மஹாபாரத கால யானையின் பெயர் என்ன அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது. துரோணர் இறக்க நேரிட்டது ; ஏனெனில் அவருடைய மகன் பெயரும் அஸ்வத்தாமா
xxxx
4.குவலயாபீடம்.; அதை கம்சன் ஏவினான் ; கிருஷ்ணர் அதன் கொம்பை உடைத்து அதைக்கொன்றார் .
xxxx
5.உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி.
புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.
xxxx
6.சம்ஸ்க்ருத நாடகம் ஒன்றில் யானையின் பெயர் சந்திரலேகா.
xxxx
7.நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.
அதுதான் உயரமான, கம்பீரமான யானை; பல்லாண்டுகளுக்கு கிருஷ்ணன் விக்கிரகத்தைச் சுமக்கும் பாக்கியம் பெற்றது
xxxx
8.மிஹிரகுலன் (Huna King)
Xxxx
9.நால்வரில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை மீது அமர்ந்து கைலாயம் சென்றார் ; அவரைப் பார்த்த சேர மான் பெருமாள் நாயனார், குதிரை மீது அமர்ந்து அவருடன் கயிலை சென்றார்.
xxx
10.வேதத்தில் யானைக்கு இபம் என்று பெயர்; அதிலிருந்து ஆங்கிலச் சொல் எலிபண்ட் ELEPHANT வந்தது. அருணகிரிநாதர் கூட முருகனை இபமா முகன் தனக்கிளையோனே என்று திருப்புகழ் பாடுகிறார்.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 41
கோவில் எண்கள் –47,48,49, 50
47.பெருவனம் மஹாதேவன் கோவில்
த்ரிசூர் மாவட்டத்தில் பெருவனம் சிவன் கோவில் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது; ஒரு ஹெக்டேர் பரப்புக்கு வியாபித்த பெரிய கோவில் இது.
சதுர வடிவ கர்ப்பக்கிரகம் இதன் பழமைக்கு சான்று பகர்கிறது
மூன்று நிலைக்கோபுரம்; அறுகோண வடிவ கூரை.
கருவறையிலுமும் வெளிப்புறச் சுவர்களிலும் உள்ள சிற்பங்களைக் காண்பதற்காக கலை ரசிகர்கள் படை எடுக்கிறார்கள் .
வெளியே இருக்கும் நாலம்பலத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.விழாக்காலத்தில் கோவில் ஜெகஜ்ஜோதியாகத் திகழும்.
ஆண்டு விழாவின்போது ஆராட்டுப்புழா , சேர்ப்பு, ஊரகம் , சாத்தான்கூடம் கோவில்களிலிருந்து வரும் யானை ஊர்வலங்கள் இங்கே கூடும். பஞ்சாரி மேளம், பாண்டி மேளங்களைக் கொட்டி முழக்குவர் .
அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பைக் கண்டு களிக்க , பெரும் கூட்டம் கூடும்.
48.கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்
சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு கட்டிய இந்த மகேஸ்வரன் கோவில் கோவில், த்ரிசூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்கு நடக்கும் தைப்பூச மகோற்சவம் 7 நாட்களுக்கு நடக்கிறது.அப்போது மகேஸ்வரன் மகனான சுப்ரமண்ய சுவாமிக்கு நேர்த்திக் கடனாக காவடி ஆடுவோர் பெரும் திரளாக வருகிறார்கள். கடைசி நாள் விழாவில் காவடி ஆட்ட ஊர்வலம் நடக்கும். 10 குழுக்கள் காவடிகளைச் சுமந்து ஆடிக்கொண்டு செல்லுவார்கள்.ஒவ்வொரு குழுவிலும் 30 அம்பலக் காவடிகளும் 60 பூக் காவடிகளும் இருக்கும் .
அப்லக் காவடி என்பது கோவில் வடிவக் காவடி ; ஒவ்வொன்றும் 6 முதல் 10 அடி உயரம் வரை இருக்கும். காவடி ஆட்டம், மயிலாட்டம் முதலிய கிராமீய கூத்துக்கள் பகலிலும், பின்னர் இரவிலும் நடக்கின்றன யானை ஊர்வலம், வாண வேடிக்கைகள், கொட்டு மேளம் ஆகியவையும் இருக்கும். இந்த உத்சவம் தவிர, ஓணம் பண்டிகையின்போது ஓணக்களி கொண்டாடப்படும்.
49.ஆராட்டுப்புழா ஐயப்பன் கோவில்
த்ரிசூர் நகரிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் ஆராட்டுப்புழா ஐயப்பன்/ தர்ம சாஸ்தா கோவில் இருக்கிறது இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 7 நாட்களுக்கு பூரம் விழா நடைபெறும். அதில் ஐந்தாம் நாள் பரவெப்பு நடக்கும். உற்சவ மூர்த்தியான திடம்பு அலங்கரிக்கப்பட்ட யானையில் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து 8 யானைகள் வரும். யானைகளுக்கு பக்தர்கள் பழங்கள் , வெல்லம் முதலியன அளிப்பர் ; ஆறாவது நாள் விழா தரிசனத்துக்கு உரியது அதுதான் பூரம் விழா. 61 யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்ச வாத்யம், நாதஸ்வரம் முழங்கும் . மறுநாள் ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் .
திருப்ரையார் ராமர் கோவிலில் உள்ள பள்ளியோடம் என்னும் படகில் ராமபிரான் எழுந்தருளுவார் .
பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியோடத்தின் ஒரு புறம் வாலில் மணி தொங்க, மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி அமர்ந்த கோலத்தில் அனுமன் உருவம் இருக்கும் . இப்பள்ளியோடத்தில் மீன மாதம்(பங்குனி) இராமசந்திர மூர்த்தி தீவ்ரா நதியை கடந்து ஆராட்டுபுழா தர்மசாஸ்தா ஆலயத்திற்கு பூரம் உற்சவம் காண எழுந்தருள்கின்றார்.
Picture from natarajan blog; thanks. (see the picture in swamiindolog.blogspot.com)
பள்ளியோடம் என்பது கேரள மாநிலத்தில் இந்துக் கோவில்களில் பயன்படுத்தப்படும் பெரிய படகுகள். இப்படகுகளில் 100 முதல் 120 ஆட்கள் வரை செல்ல முடியும். இப்படகுகள் அஞ்சிலி மரம் என்னும் மரத்தினைக் கொண்டு செய்யப்படுகின்றன.
Paḷḷiyōṭam (பள்ளியோடம்) [paḷḷi-ōṭam] noun < பள்ளி [palli] +. A kind of boat; படகுவகை. [padaguvagai.] (சிலப்பதிகாரம் அரும்பதவுரை [silappathigaram arumbathavurai] 14, 74, உரை. [urai.])
50.திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்
த்ரிசூர் நகரின் முக்கியக்கோவிலான வடக்குநாதன் / சிவன் கோவிலிலி ருந்து ஒரு கி.மீ தொலைவில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. திருசூர் பூரம் விழாவில் திருவம்பாடி அணியும் பரமேக்காவு அணியும் போட்டா போட்டியில் இறங்கும். யானைகளின் எண்ணிக்கை, வாண வேடிக்கைகள், கொட்டு மேளம், ஏனைய கூத்து வகைகளில் போட்டி இருக்கும்
ஏப்ரல் மாதம் நடக்கும் பூரம் விழாவில் எட்டாம் நாள் விழாதான் முக்கியமானது ; வட்டாரக் கோவில்களிலிருந்து புறப்படும் ஊர்வலங்கள் வடக்கு நாத சிவனை தரிசனம் செய்த பின்னர் அருகிலுள்ள மைதானத்தில் எதிரும் புதிருமாக நிற்பார்கள்; அப்போது வண்ணக்குடைகளை மாற்றுதல், , குடமட்டம் நடக்கும். பல்வேறு தாளத்தில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேளங்களைக் கொட்டுவர். ஒவ்வொரு அணியும் அதிக பட்சம் 15 யானைகளைக் கொண்டுவரலாம்.. திருவம்பாடி கோவில் பஞ்ச வாத்யம் புகழ்பெற்றது. அதிகாலையில் துவங்கும் வாண வேடிக்கைகள் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் .
இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள் குழந்தை வடிவில் கிருட்டிணன், பத்திரகாளி தேவியுமாவர். இங்கு இருவருக்கும் சமமான வழிபாடு உண்டு .பிள்ளையார், சாஸ்தா, பிரம்மராட்சர்கள் ஆகியோருக்கு உப சந்நிதிகள் உள்ளன. பகவத் கீதை பாராயணம் கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். கோவில் நிர்வாகம் மக்களுக்கு தினமும் மதிய உணவை இலவசமாக வழங்குகிறது.
—SUBHAM—
TAGS- பள்ளியோடம், ஆராட்டுப்புழா, ஐயப்பன், கோவில் கூர்க்கான்சேரி மகேஸ்வரன், பெருவனம் மஹாதேவன் கோவில், திருவம்பாடி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்
There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part five, rare pictures of Temples of Amritsar, Gwalior, Varanasi are posted; Opium, Bang preparations are shown in drawings.
xxxx
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Golden Temple At Amritsar 100 years ago
Amritsar Temple Plan
Gwalior Temple
Benares
Opium Preparation
Bhang Smoking
Kasi Temple
Pictures of Sikh Gurus
Vishnu Temple in Kasi
—Subham—
Tags- Amritsar, Gwalior, Varanasi, Temples, Opium, Bhang preparation, Part 5, 1928 German book
QUIZ பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283) என்பது 16 ஜூலை 2023ல் வெளியானது ; பிள்ளையார் வினா-விடை (க்விஸ்) என்ற தொகுப்பு 2012 டிசம்பர் 31-ல் வெளியானது இதோ விநாயகர் பத்து (Total 40 questions on Lord Ganapati in Tamil):
QUIZ SERIAL NUMBER—90
1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள 6 அடி உயர பிள்ளையாருக்கு ஏன் முக்குறுணி விநாயகர் என்று பெயர் ?
XXXX
2. பொல்லாப் பிள்ளையார் எங்கே இருக்கிறார் ? ஏன் அப்படிப் பொல்லாதவர் ஆனார் ?
XXXXX
3. பாரதியாருக்குப்பிடித்த பிள்ளையார் எங்கே இருக்கிறார் ?
XXXXX
4.மாற்றுரைத்த பிள்ளையார் என்ன செய்தார்?
XXXXX
5.ஜப்பானியர்களும் இந்து தெய்வங்களை வணங்குகிறார்கள்; ஜப்பானில் கணபதிக்கு என்ன பெயர்?
XXXX
6.ஒரு காரியத்தைத் துவங்கும்போது அது நினைத்த வடிவில் இல்லாமல் உருமாறிப்போன்னால் சொல்லும் பழ மொழியைப் பூர்த்தி செய்யுங்கள் .
பிள்ளையார் பிடிக்க ————- ஆனது
(களி மண்ணில் பிள்ளையார் உருவத்தைச் சமைக்க எண்ணிய ஒருவரின் செயலை விளக்கும் பழ மொழி இது)
XXXX
.7.கரும்பாயிரம் பிள்ளையார் எந்த ஊரில் இருக்கிறார் ?
XXXX
8.படிக்காசு விநாயகர் எங்கே இருக்கிறார் ? ஏன் அந்தப் பெயரை மக்கள் சூட்டினார்கள்?
XXXX
9.அச்சது பொடிசெய்த அது தீரன்என்று கணபதியை அருணகிரிநாதர் புகழ்வது ஏன் ?
XXXX
10. பல வகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள் ; ஆயினும் புரோகிதர்கள் எல்லா சடங்குகளையும் விநாயகரின் 16 பெயர்களைச் சொல்லி பூஜைகளைத் துவங்குவார்கள் ; அவை யாவை?
XXXXX
விடைகள்
1.மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர்; 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக் கட்டையாகும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம்..
XXXX
2.நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர். இளம் வயதில் , தந்தைக்குப்பதிலாக ஒருநாள் நம்பியாண்டார் நம்பி, அந்தக் கோவிலுக்குப் பூஜை செய்யச் சென்றார் . அவர் கொண்டுசென்ற பிரசாதத்தை விநாயகர் சிலை சாப்பிடவில்லை. உடனே தான் ஏ தோ தவறு செய்துவிட்டதாக எண்ணி, தலையை கருங்கல்லி ல் மோதிக் கொள்ளச் செல்லுகையில் பிள்ளையாரே நேரில் தோன்றி பிரசாதம் முழுதையும் தின்று தீர்த்தார் ; பொல்லாதவர் என்ற பெயரும் பெற்றார் ..
XXXX
3.பாரதியார் பாடிய, வணங்கிய, விநாயகர் புதுச்சேரியில் இருக்கிறார்; அவருடைய பெயர் மணக்குள விநாயகர்.
XXXX
4.விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.
XXXX
5.ஜப்பானில் கணபதிக்கு கங்கிடன்KANGITEN என்று பெயர்; கணேசன் என்ற பெயர் இப்படித் திரிந்துவிட்டது.
XXXX
6.பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆனது – என்பது பழமொழி
XXXX
7.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையாருக்குக் கரும்பு ஆயிரம் பிள்ளையார் என்று பெயர்.
XXXX
8.பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்
“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார். இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-
XXXX
9.பிள்ளையாரை வணங்காமல் சென்றதால் சிவனுடைய ரதத்தின் அச்சு பொடிப் பொடியானதாம் . அதை அருணகிரி நாதர் , திருப்புகழில் அழகாகப்பாடுகிறார் :
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே.
XXXX
10. விநாயகர் பூஜையில் மஞ்சளில் பிள்ளையார் செய்து, அதன் மீது மஞ்சள் அரிசி அல்லது மலர்களால் பூஜிக்கப் வேண்டும் ; அதற்கான 16 நாமாக்கள்
மங்களம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்
கபில நிறம் வாய்ந்த கபிலன்
யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்
பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்
குள்ளத் தோற்றமுள்ள விகடர்
சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்
தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்
நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது
பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்
யானை முகத்தையுடைய கஜானனன்
வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்
முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்
தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்