முதலையால் பிரசித்தமான காசர்கோடு கோவில் -45 (Post No.12,877)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,877

Date uploaded in London – –   2 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 45

கோவில் எண்கள் –63,64,65, 66

63.அனந்த பத்மநாப சுவாமி கோவில் முதலை

காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியில் – அனந்தபுரத்தில்  அனந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது.

அங்குள்ள குளத்தில் பபியா என்ற பெயருள்ள முதலை 75 ஆண்டுகளாக சைவ முதலையாக வசித்து இறந்தவுடன் உலகம் முழுதும் அந்தச் செய்தி பரவியது. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் மாமிச உணவையே உண்ணும். அந்த முதலையோ கோவிலில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தது. அதே குளத்தில் சரியாக ஓராண்டுக்குப் பின்னர் நவம்பர் 2023-ல் மேலும் ஒரு முதலை தோன்றியவுடன் மேலும் அதிசயச் செய்திகள் பரவின. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் வசிக்காத வட்டாரம் அது

கோவிலில் சயன கோலத்தில் பாம்பு மீது விஷ்ணு அறிதுயில் செய்வதைக் காணலாம் .

ஆண்டுதோறும் மார்ச்மாதம் தெப்பத்  திருவிழா நடக்கும் ; இரவில் கர்நாடக யக்ஷகானம் நடைபெறும் .

கர்நாடக எல்லையில் உள்ள மாவட்டம்  . காசர்கோடு

64.பார்த்தசாரதி-கிருஷ்ண தேவ கோவில்

கும்பலா நகரிலிருந்து 5 கி.மீ .தொலைவில் பார்த்தசாரதி கோவில் இருக்கிறது அர்ஜுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணனை பார்த்த சாரதி= டிரைவர் கிருஷ்ணா என்கிறோம்.

இங்கு பிப்ரவரி மாததத்தில் 7 நாள் விழா நடக்கும். அப்போது கர்நாடக யக்ஷகான கலைஞர்கள் புராண இதிஹாஸக் காட்சிகளை நாட்டிய நாடகமாகக் காட்டுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதப்பிறப்பில்  நடக்கும் விழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் ; இரவு முழுதும் யக்ஷகானத்தைக் கண்டு களிப்பார்கள் .

65.மதூர் விநாயகர் கோவில் Madhur Sree Madanantheshwara-Siddhivinayaka Temple i

காசர்கோடு நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மதுவாகினி நதிக்கரையில் சிவன் கோவில் இருக்கிறது. கோவில் சிவனுக்குகானதாக இருந்தாலும் அங்குள்ள விநாயகர் மூலமே கோவில் பிரபலம் ஆகியுள்ளது

சிவ பெருமானின் பெயர் மதானந்தேஸ்வரர். அதாவது மதமாச்ச்ர்யங்களை வென்ற இறைவன்.

சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கருவறைக்கு தெற்கே அமைந்துள்ள சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதம் உடையவர் ; நினைத்த வரங்களை அருளுவதால் அப்பாவை வீட பிள்ளைக்கு—பிள்ளையாருக்கு,  பெருமை

குன்றுகளும் நெல் வயல்களும் தோப்பு துறவுகளும் நிறைந்த வட்டாரத்தில் கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது கூரையை செப்புத தகடுகளால் வேய்ந்துள்ளனர்.

கேரள- கர்நாடக கட்டிடக்கலை  பின்னிப் பிணைந்த அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கண்கவரும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கேரள கோவிலுக்குப் புறம்பான சடங்குகளையே கோவிலில் பின்பற்றுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் 5 நாள்  விழா நடக்கும் . நாலாம் நாள் விழாவில் இறைவன் உருவம் கொண்ட திடம்பு ஒன்றரை மைல் தொலைவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் . பல்ல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் அருகாமை மாநிலமான கர்நாடக யக்ஷகான இசைக்கலைஞர்கள் நாட்டிய நாடகங்களை நடித்துக் காட்டுவார்கள்.

66.காஞ்சங்காடு கோவில்கள், ஆஸ்ரமம் ANANDASHRAMAM, KANHANGAD

ஆனந்தாசிரமம், என்னும் புகழ்பெற்ற ஆஸ்ரமம் 1931ம் ஆண்டில் சுவாமி பாப்பா ராமதாஸால் துவக்கப்பட்டது. காஞ்சங்காடு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பில் அமைந்துள்ளது. அவருடன் கிருஷ்ணாபாய் என்ற அன்னையும் இருந்து அருளுரை ஆற்றி வந்தனர் .காஞ்ஞங்காடு அல்லது காஞ்சங்காடு என்று அழைக்கப்படும் ஊர் கேரள- கர்நாடக எல்லையில் இருக்கிறது .

ஆசிரமத்தின் துவக்க விழாவின் போது, சுவாமி ராம்தாஸ் ஆசிரமத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்: “ஆசிரமத்தின் இலட்சியமானது உலகளாவிய அன்பும் சேவையுமே ஆகும். இது உலகின் அனைத்து உயிர்களிலும் தெய்வீகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது . இங்கே ஆண், பெண், குழந்தை என அனைவரும் எந்த சமயத்தை சாதியையும் சேர்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கபடுவர். பரஸ்பரம் அன்பு, சேவை உணர்வு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயலும் இடமாக இருக்கும், இதன் மூலம் இதன் எல்லைக்குள் உணரப்படுவது வெளி உலகில் மனித வாழ்க்கைக்கு சரியான ஒரு நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் (this para is from Wikipedia).

மடியன் கோவிலகம்

நகரில் மடியன் கோவிலகம் இருக்கிறது .அங்கு க்ஷேத்ர பாலகனும் காளராத்ரி அம்மா என்னும் பத்ரகாளியும் உறைகின்றனர்; பாட்டுற்சவம் என்ற 9 நாள் ஆண்டு உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் . கோவிலில் மதியத்தில் பிராமணரும் மற்ற நேரங்களில் பிராமணர் அல்லாதோரும் பூஜிக்கும் வினோத வழக்கம்  இங்கு பின்பற்றப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய கோவில் இது.

மண்டியோட்டு தேவாலயம்

ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள  மண்டியோட்டு தேவாலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடக்கின்றன. 4 நாள் விழாவில் 7 வகை தெய்யம் நடனங்களில் 7 தெய்வங்களைக் காட்டி ஆடுவது இந்தக் கோவிலில் சிறப்பு .

9 நாள் நடக்கும் விழாவில் பூரக்களி நடனம் நடக்கும். ஜனவரி, மார்ச் மாதங்களில் இவை நடக்கின்றன.

காசர்கோடு நகரில் இருக்கும் மல்லிகார்ஜுன சிவன் கோவிலும்காஞ்சன் காட்டு அணியல் தெரு பகவதி கோவிலும் இந்த வட்டாரத்திலுள்ள மேலும் இரண்டு முக்கியக் கோவில்கள்.

–SUBHAM—

Tags- அனந்த பத்மநாப சுவாமி கோவில், முதலை ,பார்த்தசாரதி, கிருஷ்ண தேவ கோவில் , மதூர் விநாயகர் கோவில் ,காஞ்சங்காடு, ஆஸ்ரமம், காசர்கோடு

லங்கணம் பரமௌஷதம்! (Post No.12,876)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,876

Date uploaded in London –  –  –   2  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லங்கணம் பரமௌஷதம்!

ச. நாகராஜன்

லக்ஷ்மிவந்தோ ந ஜானந்தி ப்ராயேண பரவேதனாம் |

தனவந்தர்கள் மற்றவர்கள் படும் வேதனையைப் பொதுவாக புரிந்து கொள்வதில்லை.

லக்ஷ்யதே ந கதி: சம்யக் தனஸ்ய ச தனஸ்ய ச |

செல்வத்தின் போக்கையும் மேகத்தின் போக்கையும் ஒருவரால் பார்க்க முடிவதில்லை.

லங்கணம் பரமௌஷதம் |

உபவாசம் சிறந்த மருந்து.

லோபஸ்சேதகுணேன கிம் |

பேராசையை விட மோசமான கெட்டகுணம் வேறில்லை.

லொபாவிஷ்டோ நரோ ஹந்தி ஸ்வாமினம் வா சஹோதரம் |

பேராசையின் தூண்டுதலினால் ஒருவன் தனது எஜமானனையும் தனது சகோதரனையும் கூடக் கொல்வான்.

வசனே கா தரித்ரதா |

வார்த்தைகளில் எதற்கு தரித்திரம்?

வனே புஷ்பபலாகீர்ணே புரிஷமிவ ஷூக்ர: |

மலர்களும் பழங்களும் நிறைந்துள்ள வனத்தில் பன்றியானது மலத்தையே தேடுகிறது.

வரம் வேஷ்யா பத்னீ ந புனரவிநீதா குலவது: |

அடாவடியான மனைவியை விட ஒரு வேசியே சிறந்தவள்.

வர்த்தமானேன காலேன வர்த்தயந்தி விசக்ஷணா: |

புத்திசாலிகள் காலத்தையொட்டி தற்காலத்தில் இருப்பவர்களுடனேயே செல்கின்றனர்.

வித்யா ரூபம் குரூபாணாம் |

அழகற்ற குரூபிகளுக்கு கல்வியே சிறந்த கவர்ச்சி.

வித்வான்குலீனோ ந கரோதி கர்வம் |

வித்தையில் சிறந்த வித்வான்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.

விநாசகாலே விபரீதபுத்தி: |

அழியப்போகும் காலத்தில் விபரீத புத்தி தோன்றும்.

விநாஷ்ரயா ந ஷோபந்தே பண்டிதா வனிதா லதா: |

தக்க ஆதரவின்றி பண்டிதர்களும், பெண்களும், கொடிகளும் சோபிப்பதில்லை.

விரக்தஸ்ய த்ருணம் ஜகத் |
விரக்தி அடைந்தவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.

விஸ்வாஸ்ய வஞ்சயந்தே தூர்தரஸ்சத்வாபிரீஸ்வரா: |

எஜமானனின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் ரௌடிகள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கிறார்கள்.

வீரபோக்யா வசுந்தரா |

இந்த உலகம் வீரர்களாலேயே அனுபவிக்கப்படுகிறது.

வ்ருத்திம் சோபத்ரவாம் த்யஜேத் |

தொந்தரவு தரும் தொழிலை ஒருவன் விலக்க வேண்டும்.

வ்யவஹாரேண மித்ராணி ஜாயந்தே ரிபவஸ்ததா |

ஒருவரது நடத்தையினாலேயே நண்பர்களும் எதிரிகளும் உருவாக்கப்படுகிறார்கள்.

வ்யாபாரே வஸதே லக்ஷ்மி: |

வியாபாரத்தின் விளைவே செல்வம்.

சரணமுபேதோ ந ஹாதவ்ய: |

சரணமடைந்தவர்களை நிராகரிக்கக் கூடாது.

சரீரமாத்ரம் கலு தர்மசாதனம் |

உடலே நல்ல தர்மம் செய்வதற்கான முதல் தேவையாகும்.

சீலம் பூஷயதே குலம் |

நல்லொழுக்கம் குலத்தை அலங்கரிக்கிறது.

சுக: ஸ்லோகான் வக்தும் பரவதி ந காக: க்வசிதபி |

கிளியானது ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்; ஆனால் காகமோ அதை ஒருபோதும் செய்ய முடியாது.

சுபஸ்ய சீக்ரமசுபஸ்ய காலஹரணம் |

சுபகாரியங்களை உடனே செய்ய வேண்டும். அசுபமானவற்றைக் காலம் தாழ்த்தவேண்டும்.

ஸ்ரேயசி கேன த்ருப்யதே |

ஏற்கனவே அடைந்த புகழில் யார் தான் திருப்தி அடைகிறார்கள்!

***

My Visit to Rail Museum in Chennai- Part 2 (Post.12,875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,875

Date uploaded in London – –   1  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

For details, please go to Part-1 posted here yesterday.

Pamban Bridge

Nehru,Indira Gandhi, Lal Bhagadur Sastri

–subham—

Tags, Ral Museum, Part 2, Chennai

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,875

Date uploaded in London – –   1  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

For details, please go to Part-1 posted here yesterday.

Part 9 with Halabedu, Hampi, Sringeri; Rare Pictures from 1928 German book (Post No.12,874)

Rama in Kerala

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,874

Date uploaded in London – –   1  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 9 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

 In part eight, rare pictures of Sringeri Shankaracharyas, Stone Chariot at Hampi, Drawings of Hindu Gods, and Madurai Nayak paintings are posted.

xxxx

Picture: Indra on Airavata

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Sringeri Shankaracharyas 100 years ago.

Sandstone idol from Prayag

MaduraiStone elephant

Madurai Temple Paintings from Nayak Period

Hampi Stone Ratha

Halabedu Sculptures

Hanuman in Bronze

—subham—

 Tags- Rare Pictures, German bok 1928, Sringeri Acharyas, Halabedu, Hampi, Madurai, Nayak Paintings

சங்கத் தமிழ் ரகசியம் சொல்லும் வடகரா லோகாம்பிகை கோவில் -44 (Post No.12,873)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,873

Date uploaded in London – –   1  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 44

கோவில் எண்கள் –59, 60, 61, 62

59. லோகாம்பிகை கோவில்

கேரள மாநில கோழிக்கோடு வட்டாரக் கோவில்களில் மிகவும் முக்கியமானது லோக மகாதேவி கோவில் . இந்தக் கோவில் பல வகைகளிலும் உன்னதமானது .

சங்க இலக்கிய புலவர்களில்  ஒருவர் பெயர் சங்க வருணர் நாகரியர். அவர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்பதை அவர் பெயரே காட்டும். அந்த நாகரியர் வம்சத்தினர் கட்டிய கோவில் இது .அந்தப் புலவர் புறநானூற்றின் 360ஆவது பாடலை யாத்தார்; அது தத்துவப் பாடல்; உலக நிலையாமையை, தந்து மாறன் என்பவனுக்கு எடுத்துச் சொல்லி,  அறம் செய்க என்று வலியுறுத்தும் பாடல் .

இதை மெய்ப்பிக்கும் மற்றோர்  சான்று  தெய்வத்தின் பெயர் லோக மஹா தேவி; தமிழின் புகழை தென் கிழக்கு ஆசியா முழுதும் பரப்பிய ராஜ ராஜனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களில் பட்டத்து அரசியின் பெயர் லோக மகா தேவி ; அது வடகரா கோவில் தெய்வத்தின் பெயர்; அவளுக்கு மற்றும் ஒரு பெயர் தந்தி சக்தி விடங்கி; உலகம் புகழும் தமிழ் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய யாவரும் கேளிர் நூலில் சோழர் புகழ் உள்ளது

மூன்றாவது சான்று புறநானூற்றுப் புலவர் கருவூர் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் பெயரில் உள்ளது அவர் 291ஆவது பாடலை இயற்றியவர். வடகரா கோவிலிலும் பூதத் தேவர் சந்நிதி இருக்கிறது; சேர நாட்டின் புகழ் பாடும் சிலப்பதிகார காவியத்தில் சதுக்க பூதம் பற்றிய சுவையான கதைகள் நிறைய  உள்ளன. கருவூர் என்பது சேர நாட்டின் தலைநகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆக தமிழ் இலக்கியத்துக்கு உரை எழுதியது போல வடகரா  கோவில் தெய்வங்களின் பெயர்கள் உள்ளன.

கோவில் எங்கே இருக்கிறது?

வடகரா கோவில் இருக்கும் இடம் லோகனார் காவு ; இது வடகராவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா என்னும் சிற்றூ ரில் அமைந்துள்ளது.

கோழிக்கோட்டிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் வடகரை அமைந்துள்ளது. , கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ.

சுவையான கதைகள்

மூகாம்பிகை கோவில் வரலாற்றை அறிந்தோருக்கு ஒரு உண்மை விளங்கும் தேவி சொல்கிறாள்; நான் பின்னாலேயே வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது ; அதாவது நம்பிக்கை இழக்கும்போது சந்தேகம் வரும்; அப்படி வந்தால் இறைவன் கண்ணுக்குத்  தெரிய மாட்டான் . இதே கதைதான் துர்கா என்றும் பகவதி என்றும் பத்ரகாளி என்றும் (எல்லாமே பார்வதியின் பெயர்) வணங்கப்படும் லோகாம்பிகை அம்மன் கதையும் .

வடக்கிலிருந்து வந்த நாகரியர் மக்களின் குல தெய்வம் அவள் ; நான் பின்னால் வருவேன் திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறாள் லோகாம்பிகை

போகும் வழியில் கிராம மக்கள் யார் அந்தப் பெண்? என்று வினவவே ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். தேவி லோகாம்பிகை மறைந்து விடுகிறாள் பின்னர் அந்த இனத் தலைவன் ஒரு அம்பு விட்டு அது விழும் இடத்தில் தேவிக்கு கோவிலை எழுப்பினான்.

சம்ஸ்க்ருத மொழியில் லோகாம்பிகை, ஜகதாம்பிகை , உலகமகா நாயகி என்பன ஒரே பொருளடைத்து .

அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள .

கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் இருக்கிறது

விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். பங்குனி என்னும் மீனம் மாதத்தில் எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது.

மேலும் ஒரு சிறப்பு களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு

சேர நாட்டுக்கே உரித்தான தற்காப்புக் கலையை களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு என்று சொல்லுவார்கள் மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் மட்டும் இக்கலை உள்ளது இந்தக் கலையைப் பயிலுவோர்  அரங்கேற்றம் செய்ய வரும் கோவில் லோகனார் காவு ஆகும். தேவியின் அருள் பெற்றால்தான் வெற்றி கிட்டும் என்பது வீரர்களின் நம்பிக்கை.

வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர்.

XXXX

60. தச்சோளி ஒதேனன் மணிக்கோத் கோவில்

வடகராவிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு மனிதனுக்கு , வீரனுக்கு அமைக்கப்பட்ட கோவில் இது.

களரிபயட்டுக் கலையில் மிகப்பெரும் வீரனாக விளங்கியவன்

தச்சோளி ஒதேனன்/ ஒதனன்; பல மோதல்களில் வெற்றி வாகை சூடியவன் . பல நூற்றாண்டுகளாக கிராம மக்கள் அவன் புகழை நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடி வருகின்றனர் ; அவைகளை வடக்கன் பாட்டுக்கள் என்று சொல்லுவர் . பாடல் பாடுவதோடு நிறுத்தாமல் அவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் அவனுடைய முழு உருவச் சிலையையும் வைத்துள்ளனர் .

ஆண்டுதோறும் இரண்டு நாள் விழா நடக்கும். முதல் நாளில் தீர என்னும் நடனம் நடக்கும் ; லோகநார்காவு கோவிலில்தான் ஒதனன் வழிபட்டதால் அங்கிருந்து ஒரு விளக்கு கொண்டுவரப்படும். நூற்றுக் கணக்கான களரி பயற்று வீரர்கள், கத்தி கேடயங்களுடன் வீரர் உடையில் அணிவகுத்து வருவார்கள்.

இரண்டாம் நாள் விழாவில் ஒதனன் பயன்படுத்திய வாள் , ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டுவரப்படும். பின்னர் திரயாட்டம் நடக்கும். அதில் பல்வேரு வீரர்களும் சாகசச் செயல்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இரவில் தச்சோளி களி நடைபெறும்.

பகவதி கோவில் மூலமாகவும். களரிப் பயட்டு மூலமாகவும் தென் இந்தியா முழுதும் லோகார்க்காவு புகழ் பரப்பி வருகிறது .

61.கோழிக்கோடு தளி சிவன் கோவில்

கோழிக்கோட்டில் நகரின் நடுவேயுள்ள தளி சிவன் கோவில் பழமையும் , புனிதமும் உள்ள கோவில்; அதை  சுவாமி திருமுலபாத் கட்டினார் . சுமார் 700 ஆண்டு வரலாறு நமக்கு கிடைக்கிறது .ரேவதி பட்டதானம் என்னும் சம்ஸ்க்ருத சொற்பொழிவு நடக்கும் இடம். ஏப்ரல் மாதத்தில் எட்டு நாள் விழா நடக்கும் .எல்லா நாட்களிலும் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் .

62.கணபதி  கோவில்கள்

வடகராவில் தெரு கணபதி கோவிலும், கோழிக்கோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில்  திருவாங்கூர் கணபதி கோவிலும் இருக்கின்றன .விழாவில் தெய்யம் நடனம் நடக்கிறது.  சிவராத்திரி உற்சவம் பெரிய அளவில் நடக்கிறது.

63.திருவாங்கூர் நரசிம்ம, பார்த்தசாரதி கோவில்

இந்த நரசிம்ம மூர்த்தியின் கோவிலின்  ரதோத்ஸவம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 7 நாள் உற்சவம் நடக்கிறது. . நாலாவது நாள் நடக்கும் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வருகிறார்கள் பார்த்தசாரதியும், நரசிம்ம மூர்த்தியும் தேரில் இடம்பெறுவார்கள்.

—subham—

Tags- தமிழ் ரகசியம், லோகார்க்காவு, லோகாம்பிகை, தளி , சிவன் கோவில், நாகரியர், களரிப்பயிற்று ,களரிப்பயட்டு, Kalaripayattu, Martial art

தந்த்ர சாஸ்திரங்கள் (Post No.12,872)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,872

Date uploaded in London –  –  –   1  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தந்த்ர சாஸ்திரங்கள்

ச.நாகராஜன்

ஹிந்து மதத்தின் தலையாய சாஸ்திர பிரிவுகளில் மிக முக்கியமானது தந்த்ர சாஸ்திரம்.

இதைக் கற்பது மிகவும் கடினம். இதன்படி பிரயோகங்களைச் செய்வது அதை விடக் கடினம்.

இந்த சாஸ்திரங்கள் மிகவும் நுட்பமானவை என்பதால் இது குரு வழியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது.

இது சம்பந்தமான நூல்கள் நிறைய உண்டு. ஆனால் அவை காலப்போக்கில் அச்சுக்கு வராமல் ஓலைச் சுவடிகளாகவே இருக்கின்றன.

சில நூல்கள் அச்சுப் பதிப்பாகக் கிடைக்கின்றன.

தந்த்ர சாஸ்திரம் ஒரு பிரத்யக்ஷமான விஞ்ஞானம்.

செய்து பார்த்து அதன் பலனைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த சாஸ்திரங்களின் தொகுப்பாக அபிதானங்களும் – அதாவது அகராதிகளும் உண்டு.

இந்த அபிதானங்கள் அல்லது கோசங்கள் ஒலியின் மகிமையை உணர்த்துபவை. சப்தத்தையும் அர்த்தத்தையும் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பவை.

ஒரு குறிப்பிட்ட தேவதையைக் குறித்துச் செய்யப்படும் உபாசனையானது சித்தி பெற வேண்டுமெனில் குருவின் அருளுடன் இதைப் பற்றிய அனைத்தும் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் அகார உகார மகாரம் அடங்கியது ஓம்.

அது போலவே க்ரீம் என்பது காளியின் மந்திரம். இந்த க்ரீம் என்பது க, ர, இ ஆகிய ஒலிகளால் அமைகின்ற ஒன்று.

ஆகமசாஸ்திரங்களில் இந்த மந்திரம் சொல்லப்படும் போது அங்கு இந்த எளிய சேர்க்கை சொல்லப்படுவதில்லை.

இந்த அர்த்தம் அறியப்படவில்லையெனில் ஏகாக்ஷர பீஜமான இது முழுதுமாக அறியப்படமாட்டாது.

அகராதிகள் அக்ஷரங்களின் முழு விவரணத்தையும் தரும்.

ஒரே ஒரு அக்ஷரத்திற்கு நுட்பமான பல அர்த்தங்கள் உண்டு.

‘இ’ என்ற அக்ஷரத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகள், ரதி, கோவிந்தன், வாமாக்ஷி, கமலா, மாயா, லக்ஷ்மி சாந்தி, வைஷ்ணவி ஆகிய அர்த்தங்கள் உண்டு.

தந்த்ராபிதானத்தில் உள்ள சில நூல்களை இங்கு மாதிரிக்காகப் பார்க்கலாம்:

1) மந்த்ராபிதானம் : இதில் அகாரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு அக்ஷரத்திற்குமான விளக்கம் தரப்படுகிறது.

2) ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் :  இதில் ஓம் என்ற அக்ஷரத்திற்கும் 35 அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. அகாரத்திற்கு 42, ஆகாரத்திற்கு 36, இகாரத்திற்கு 29, ஈகாரத்திற்கு 38 அர்த்தங்கள் என இப்படி நுட்பமான விளக்கங்களை இந்த நூலில் காணலாம்.

3) ஏகாக்ஷரகோசம் : இதில் 38 ஸ்லோகங்களில் அக்ஷரங்களுக்கான விளக்கம் காணப்படுகிறது.

4) பீஜநிகண்டு : இதில் சிவபிரான் கூறுகின்ற அக்ஷர மஹிமையைக் காணலாம்.

5) மாத்ருகாநிகண்டு : மந்திரங்களில் வரும் அக்ஷர ஒலிகளுக்கான அர்த்தங்கள் வரிசையாக இதில் தரப்பட்டுள்ளது.

6) ப்ரகாராந்தர மாத்ருகாநிகண்டு ; இந்தா நூலில் ஓம் என்பது துருவன், தாரா, மூலஜோதி, சிவன், அவ்யயன், வேதாத்யா, தாரகா, அவ்யக்தா, சகாதி, பிரணவம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பதில் ஆரம்பித்து விரிவாக அக்ஷர மஹிமைகளை விவரிக்கிறது.

7. ப்ரகாராந்தர வர்ணநிகண்டு : இதில் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் உள்ள அர்த்தங்கள் தரப்படுகின்றன.

8. வரதாதந்த்ரத்தில் உள்ள மந்த்ரார்த்தாபிதானம் : இந்த நூலில் சிவன் பார்வதிக்கு கூறும் அக்ஷர மஹிமைகள் தரப்படுகிறது.

9. முத்ராநிகண்டு :  இதில் அபூர்வமான முத்திரைகளைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் காணலாம். மிக நுட்பமான ரகசிய செய்திகளைத் தரும் அற்புதமான நூல் இது.

இந்த நூல்களை திரு ராம் குமார் ராய் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இரண்டாம் பதிப்பு பிரசுரமான ஆண்டு- 1984.

இது வாரணாசி Prachya Prakashan ஆல் Indological Reference Seires No 2ஆக வெளியிடப்பட்டுள்ளது.

கால வெள்ளத்தில் இவை மறைந்து போகாமல் காக்கும் பணியை மேற்கொண்ட திரு ராம் குமார் ராய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தந்திர சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

**

Part 8 with Madurai Meenakshi Temple; Rare Pictures from 1928 German book (Post No.12871)


Maduriai Meenakshi Crown made up of pearls

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,871

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

This is part 8 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part eight, rare pictures of Madurai Sri Meeakshi Sundareswarar  (Shiva Temple) are posted; Pictures of her jewels, temple towers and near by temples are given below.

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Madurai Temple Door

Golden Lotus Tank in Madurai Temple

Srivilliputtur Temple

Rameswaram, Engineering Marvel, Longest corridor

—subham—

Tags- Madurai Temple, Rare pictures, longest corridor, Rameswaram ,temple, Srivilliputtur Andal,

My Visit to Rail Museum in Perambur, Chennai- Part 1 (Post No.12,870)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,870

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PICTURE OF PROF. S SURYANARAYANAN

PITCURE OF LONDON SWAMIATHAN

I went to Chennai Rail Museum with my brother Prof. Suryanarayanan on 20th December 2023. It has got four galleries with lot of train models and pictures. Fans of Railway clubs and those who with train spotting hobby will enjoy more. Outside the museum all old type train engines are kept. Though children would like to see trains, they wouldn’t understand the significance of black smoke emitting Steam Rail Engines.

When we saw those old model engines it kindled our nostalgic memories.  About 60 years ago we, brothers, used to travel from Madurai to Madras (now called Chennai) and our aunty in Madras used to tease us saying “what is this ? Why are you wearing black shirt?”

The reason is whatever colour shirt you wear , that will be deposited with black particles that came from the coal fired steam engine. All our brothers studied in Setupati High School, Madurai which was behind the Goods Shed of Madurai Railway station.

Sitting at the playground during afternoon lunch time and play time we used to enjoy inhaling the smoke from the coal fire. Anyone would like the smell.

Apart from this we used to watch the burning fire and the driver and fireman throwing big lumps of coal into the inferno and the steam coming out of umpteen holes in the engine, emitting big noise.

Only my eldest son had the fortune of at least seeing the coal fire and thick black smoke. Now and then I used to take him to the Railway station to show the engine and praise the genius of George Stevenson.

Those are the golden /olden days. When we read that Madurai- Madras will have Diesel powered engines we got exited; then came the electric trains which generated more excitement because of its speed. But I would like to go back to the olden days with al least one or two coal fired smoky engines.

It is like reading Ponniyin Selvan novel by Kalki and all of us wish to travel back in time to the golden days of Great Choza emperors.

In London, they run the old coal fired steam engine once a year with £25 ticket for a short distance. Whenever I looked at the website, it said the tickets were sold out.

Indian Railway should have at least one line with such old model trains in every area. It will generate very good income from train fans.

Here in London, we have separate clubs for Train spotters, Railway Stamp collectors and Train travellers.

Though I have used Euro Rail and trains in Italy, nothing will match the good old steam engines. The big noise and the whistle are still ringing in my ears.

xxxx

Coming back to Chennai Rail Museum, we have al types of carriages, engines, the mechanical parts and a lot of pictures of personalities like Jawaharlal Nehru to Queen Elizabeth. She visited the Perambur Coach factory during her trip to Chennai.

Another interesting feature of the museum is the display of lot of drawings and paintings with train as the theme.

Indian Picasos have done lot of modern, mechanical sculptures. Some of them are beautiful, but lot of others need explanation or description to appreciate them. Just like Picaso’s paintings!

With a very small entrance fee, it is worth visiting. A toy train is also run for the benefit of children.

When you visit Chennai next time, don’t miss it.

Since I took over fifty pictures I post them in two parts.

TO BE CONTINUED………………………………….

PITCURE OF LONDON SWAMIATHAN

–subham—

Tags- Rail Museum, Chennai, My visit, Steam engine, coal fired,

கோட்டக்கல் தன்வந்திரி,   மஞ்சேரி  சிவன் கோவில்கள்- 43 (Post.12,869)

Thriprangodu Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,869

Date uploaded in London – –   31 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 43

கோவில் எண்கள் –55. 56, 57, 58

மலப்புரம் வட்டாரத்திலுள்ள காடம்புழா பகவதி, திருநாவாய் விஷ்ணு கோவில்களை முந்தைய பகுதிகளில் கண்டோம். மலப்புரம் வட்டாரத்தில்தான் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை உள்ளது .

55. கோட்டக்கல் விச்வாம்பர / தன்வந்திரி  கோவில்

அருகிலுள்ள ரயில் நிலையம்- திரூர் : Tirur,சுமார் 16 கிமீ;

கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ;

 கண்ணூரிலிருந்து 140 கி.மீ.

கோட்டக்கல் என்ற ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் உலகப்  புகழ்பெற்ற ஆர்ய வைத்ய சாலாதான் நினைவுக்கு வரும். தற்பொழுது அவர்கள் உலகம் முழுதும் கிளைகளைத் திறந்துவிட்டனர்; நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் வந்து சிகிச்சை  பெற்ற சிற்ப்புடைத்து.

1920ம் ஆண்டு பி.எஸ். வாரியரால் துவக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருத்துவ சாலை ஆயுர்வேதம் கைகண்ட மருந்து என்பதை உலகிற்குக் காட்டிவருகிறது. அவர்களுடைய சிகிச்சை  முறையும், உடலில் தடவும் தைலங்களும்  தனித்துவம் பெற்றவை.

ஆயுவேதத்தின் , உலக மருத்துவத்தின் தந்தை தன்வந்திரிஅவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ; கைகளில் நோய் தீர்க்கும் அமிர்த கலசத்துடன் தோன்றியவர் . கோட்டக்கல்லில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் விஸ்வாம்பர கோவில் அமைந்துள்ளது; இங்கு விஷ்ணுவை தன்வந்திரி ரூபத்தில் வழிபடுகின்றனர்.

விக்கிரகம் சலவைக் கற்களால் ஆனது. ஆண்டு உற்சவம் ஏப்ரல் மாதத்தில்  7 நாட்களுக்கு நடைபெறும்.

சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகிய நாட்டிய நாடகங்களையும் பஞ்சவாத்ய முழக்கத்தையும் உற்சவ காலத்தில் கண்டு களிக்கலாம்.இரவு முழுதும் கதகளி நடனம் நடக்கும்.பிரபல சங்கீத வித்துவான்களின் கச்சே ரிகளும் ரசிகர்களையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கும்.

ஆர்ய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ். வாரியார் 1932ம் ஆண்டில் கோவிலை எழுப்பினார். ஓராண்டுக் காலத்துக்கு தானே பூஜை செய்த, ஆக்ரா சலவைகல்லினால் ஆன, தன்வந்திரியை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகள் உண்டு

நான்கு கைகள் கொண்ட தன்வந்திரி சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக்கிறார்.

ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் கோவிலுக்குள் வரலாம்..

Contact details of Kottakkal Arya Vaidya Sala

Arya Vaidya Sala,

Kottakkal (P.O.),

Malappuram,

Kerala – 676 503.

Ph.: +91 483 2742216, 2808000

Xxxxx

56.பொன்னானி பகவதி கோவில்

ஸ்ரீ மூக்குத்தல பகவதி கோவிலை ஆதி சங்கரரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் (நம்பிக்கை வரலாறு).

முக்தி தல பகவதி என்பது சரியான பெயர்; இங்கு வனதுர்க்கை, பகவதியாக வழிபடப்படுகிறாள் . பொன்னணி- த்ரிசூர் பாதையில் சங்கரகுளம் என்னும் இடத்தில் கோவில் இருக்கிறது

சிறப்பு அம்சம்

நாராயணீயம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூலை இயற்றிய நாராயண பட்டத்ரிபாடு , இங்கு தியானம் செய்து முக்தி அடைந்தார். இதனால் முக்தி ஸ்தலம் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது..

நவராத்திரி பண்டிகையின்போது  9 நாட்களும் கோவில் விழாக்கோலம் பூணும்; நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் .

xxxx

57.த்ரிபரங்கோடு சிவன் கோவில் Sree Triprangode Shiva Kshetram

இந்தக்  கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது. திரூர் நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவு.

சிவராத்திரி பண்டிகைக் காலத்தில் 2 நாள் உற்சவம் நடக்கும். இரண்டு நாட்களும் யானைகள் பவனி உண்டு.

உத்தண்ட சாஸ்திரி எழுதிய குயில் வீடு தூது/ கோகில சந்தேச என்னும் சம்ஸ்க்ருத நூலில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது; பத்தாம் நூற்றாண்டில்  ஆட்சிபுரிந்த ரவிவர்மாவின் கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.

14ஆம் நூற்றாண்டில் திருநாவாய் யுத்தம் நடந்தபொழுது ஜாமோரின்/ இந்து மன்னர்கள் படைகள் இங்கே தங்கின .

ஆறு ஏக்கர் பரப்பில் அமைந்த பழமையான கோவிலில் பெரிய ஆலமரம், இலஞ்சி மரம், வில்வ மரங்களும் உள்ளன. 16 வயதில் எமனிடமிருந்து காப்பாற்றப்பட்ட மார்க்கண்டேய புராணத்துடன் கோவில் தொடர்புபடுத்தப்படுகிறது  5 குளங்கள், 3  ஸ்ரீ கோவில்கள் (கருவறைகள்) இருப்பது கூடுதல் சிறப்புகள் ஆகும்

கஜ ப்ருஷ்ட (யானையின் பின்பகுதி) வடிவில் முக்கிய சந்நிதி சிவன்-பார்வதியுடன் உள்ளது .

கோவில் வளாகத்தில் விஷ்ணு, ஐயப்பன் , நாகர், கிருஷ்ணர், பிரம்மராக்ஷஸ் , பத்ரகாளி, வேட்டக்கொரு மகன் சந்நிதிகளும் இருக்கின்றன .

xxxxx

58.கலிக்காவு பகவதி கோவில், மேலகம் 117 நாள் விழா

மஞ்சேரி மேலகம் பகுதியில் ஸ்ரீ கலிக்காவு பகவதி கோவில் இருக்கிறது.

கேரள கோவில் வரலாற்றில் மிக நீண்ட நாட்களுக்கு விழா நடக்கும் சிறப்புடைத்து.

117 நாட்களுக்கு களமெழுத்து விழா நடக்கும். அதாவது பெரிய உருவத்தை பாட்டுப் பாடிக்கொண்டே வரைவார்கள் . தாளப் பொலி விழாவுடன் நிறைவுபெறும். மறு நாளைக்கே அடுத்த 117 நாள் விழா துவங்கிவிடும்; அதாவது வருடம் முழுதும் இடைவிடாத விழா.

இதை வேறு எங்கும் காண முடியாது; மேலும் சித்திரம் தீட்டும் கலையயும் நாட்டுப்புறப் பாடல் கலையையும் ஆண்டு முழுதும் போற்றிப் பாதுகாக்கிறது !

–subham–

Tags- களமெழுத்து விழா, 117 நாள் விழா, த்ரிபரங்கோடு , சிவன் கோவில், கோட்டக்கல் , விச்வாம்பர ,  தன்வந்திரி  கோவில், ஆர்ய வைத்ய சாலை,

Kottakkal Arya Vaidyasala,

அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்! (Post No.12,868)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,868

Date uploaded in London –  –  31  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்!

ச.நாகராஜன்

உலகில் வாழ்வாங்கு வாழ ஹிந்து மதத்தில் உள்ள சாஸ்திரங்கள் பல.

இவற்றைக் கற்றுத் தேர்வது ஒரு ஜன்மத்தில் இயலாத காரியம்.

ஆகவே தான் இதில் சித்தி பெற்ற மஹாபுருஷர்களை அணுகி ஆசி பெற்று அவற்றைக் கற்கிறோம்.

மந்திர சாஸ்திரம், யந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என  அபூர்வமான சாஸ்திரங்கள் பல உண்டு.

அனந்தஸ்ச சாஸ்திரம் பஹு வேதிதவ்யம்

அல்பஸ்ச காலோ, பஹுவஸ்ச விக்ன:

யத் சாரபூதம் தத் தத் உபாசிதவ்யம்

ஹம்ஸோ யதா க்ஷேத்ரம் இவ அமுமா மிஸ்ரம்

என்ற ஸ்லோகம் ஒரு அபூர்வமான விஷயத்தைக் கூறுகிறது.

(Ananthacha Sastram bhahu vedithavyam
Alpascha kalo bhahavascha vignah
Yat sarabhutam tad upasitavyam
Hamso yada kheseram iva amuma misram)

உலகில் ஏராளமான சாஸ்திரங்கள் கற்பதற்கு உள்ளன.அவற்றைக் கற்பதற்கான நமது காலமோ மிகவும் குறைவு. அதில் வரும் இடைஞ்சல்களும் ஏராளம். ஆகவே நாம் சாஸ்திரங்களின் சாரத்தைக் கற்க வேண்டும். காலம் மிக மிகக் குறைவாக இருப்பதால் ஹம்ஸப் பறவையானது எப்படி பாலுடன் கலந்த நீரில் பாலை மட்டும் பிரித்தெடுக்கிறதோ அது போல சாரத்தை எடுக்க வேண்டும்.

குருவின் அருள் முக்கியம். சிரத்தை முக்கியம். மன ஈடுபாடு முக்கியம். உச்சரிப்பு முக்கியம். நமக்குரிய நேரத்தை இதில் ஒதுக்குவது முக்கியம்.

ராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அருமையான விளக்கத்தைத் தருகிறது.

ஆம், கும்பகர்ணன் தான் அவன்!

நித்யத்வத்தை வேண்டி சிவனை நோக்கி அவன் தவம் இயற்றத் தொடங்கினான். அவன் வரம் வேண்டும் போது நித்ரைத்வத்தைக் கேட்டான். சிவனும் அருளினார் அப்படியே.

என்றும் வாழும் வரம் (நித்யத்வம்) கேட்க நினைத்த அவன் என்றும் தூங்கும் வரத்தை (நித்ரைத்வம்) கேட்டான்.

யஜுர் வேதத்தில் உள்ள ஒரு சரித்திரம் இது.

ஒரு சமயம் தேவேந்திரனை வெல்லக் கருதி விருத்ராஸுரன் என்ற அசுரன் தவம் செய்தான். இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

அவன் இந்திரசத்ருர்வர்தஸ்ச என்று கேட்பதற்குப் பதிலாக ஸ்வரபேதத்தால் இந்திரனால் கொல்லப்படும் வரத்தைப் பெற்றான்.

இந்திரனால் வதம் செய்யப்பட்டான்.

ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு. ஒரு பலன் உண்டு.

நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரம் இதன் அடிப்படையில் உருவான ஒன்றே தான்.

ஸித்த சாபரதந்திரம் என்ற நூல் ஒவ்வொரு எழுத்திற்குமான தேவதை, பலன் ஆகியவற்றை விளக்குகிறது.

சேஷ ஸம்மிதா என்ற நூல் எழுத்துக்கள் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது.

பாத்ம ஸம்மிதா என்ற நூலிலும் அற்புதமான விளக்கங்களைக் காணலாம்.

உதாரணத்திற்காக ஒரு எழுத்து பற்றிய விளக்கத்தை இங்கு பார்க்கலாம்:

அ : அ என்ற அகார தேவிக்கு உள்ள வர்ணம் சிவப்பு. சிவந்த வர்ணத்துடன் வெள்ளாட்டின் முகமும் வெண்மை வஸ்திரமும் தரித்து  ஹம்ஸ வாகனமேறி வலது கையில் வில், இடது கையில் பாணம், அபயம், பாணம் ஆகியவற்றோடு விளங்குகிறாள். இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்டு.

இந்த அக்ஷரத்திற்கு விஷ்ணு மூர்த்தி. தாமரை தாது.

இதைப் பற்றி சேஷ ஸம்மிதா கூறுவது:

பத்மகிஞ்ஜல்கம் நிறம். பீதாம்பரதாரீ. எல்லா ஆபரணங்களுடன் கதா, பங்கஜம், (கதை உள்ளிட்டவை) சங்கம் கத்தி என நான்கு கரங்களில் ஆயுதங்கள் உள்ளன.

பலன்: இந்த அக்ஷரம் ஆதியானது என்பதால் எல்லா வித விக்னங்களும் நீங்கி சக்தியை விருத்தி செய்ய வைக்கும்.

மந்திரங்களில் உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் ஆராய்ந்தால் நாம் வியப்படைவோம்.

அதில் நியூமராலஜி உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் காண்போம்.

***