வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும்-Part 2 (Post.12,787)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,787

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவநந்தபுரத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மஹாத்மா காந்தி, வைக்கம் போராட்ட வீரர்கள் யார் யார் என்று பட்டியல் இடுகிறார்.:

13-1-1937

“உங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்று எனக்கு ஆசை; அருமையான இசை போலக் கேட்கும் உங்கள் (மலையாள) மொழியை இன்னும் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தமாக இருக்கிறது;   அதே நேரத்தில் தேசீய மொழியான ஹிந்துஸ்தானியை நீங்கள் அறியாததும் வருத்தம் அளிக்கிறது. ஆகையால் மொழிபெயர்ப்பினை நாட வேண்டி இருக்கிறது.

விழாக் கொண்டாட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்க என்னை அழைத்தமைக்கு நன்றி நீங்கள் கொடுத்த வரவேற்பு பத்திரத்துக்கு நன்றி. நீங்கள் உங்கள் மனமார்ந்த நன்றி.யை ஏற்கனவே திருவாங்கூர் மஹாராஜாவுக்கும் மஹாராணிக்கும் சசிவோத்தம ஸர் சி பி ராமசுவாமி அய்யருக்கும் தெரிவித்துவிட்டீர்கள் அதிலும் உங்கள் சந்தோஷத்திலும் பங்குகொள்ள எனக்கும் ஆசை. உங்கள் முகங்களில் அந்த சந்தோஷம் தெரிகிறது. ஏதோ ஒரு  காலத்தில் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை ( கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் செல்லும் உரிமை) இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. யார் எப்பொழுது இந்த உரிமையைப் பறித்தார்கள் என்று  நமக்குத் தெரியாது. ஆனால் வைக்கம் போராட்ட வரலாற்றினை நீங்கள் அழகாக பட்டியலிட்டுவிட்டீர்கள் .

காலஞ் சென்ற புனிதர் நாராயண குருவுக்கு நீங்கள் நன்றி சொன்னீர்கள்; துணிச்சல் மிக்க மாதவனுக்கு நன்றி சொன்னீர்கள் இந்த நேரத்தில் மேலும் இரண்டு பேரை நினைவு கூறுவோம்; .காலஞ் சென்ற கிருஷ்ண சுவாமி (அய்யர்) ,அவருக்கே உரித்தான பாணியில், கீத  கோவிந்தத்திலிருந்து பிராரத்தனை பாடுவார் (காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் ) . அவர் தீவிர பிராமணன்; சமயப்பற்றுமிக்கவர்; ஆயினும் எல்லா ஜாதி இந்துக்களும் கோவிலுக்குள் வரவேண்டும் என்று அவர் போராடினார் . இப்போது நம்மிடையே இருக்கும் கேளப்பன் நாயரையும் நான் மறக்கவில்லை. இன்று நாம் காணும் வைபவத்துக்கு இவர்கள்தான் வித்திட்டார்கள் .

நம்பூதிரி  பிராமணர்கள்

நமக்கு உதவிய பழைய சம்பிரதாயக்காரர்களையும் நாம் மறக்கக்கூடாது அவர்களை நம் பக்கம் இழுப்பதுதான் எனக்கு கஷ்டமாக இருந்தது.அவர்களும் மற்ற பழம் சம்பிரதாயக்காரர்களும்  காலத்தின் உண்மை நிலையை அறிந்திராவிடில் மகாராஜாவின் பணி நடந்திராது.

இந்த நேரத்தில் மூத்த மஹாராணியையும் நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரை பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அவரும் அவருடைய கணவரும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார் என்று நம்புகிறேன்.

Xxxx

எட்டமானூர் சொற்பொழிவு 19-1-1937

அழகான வாசகம் அடங்கிய  சம்ஸ்க்ருத மொழி வரவேற்பினையும் வற்கலை  உடையையும் அளித்தமைக்கு மிக்க நன்றி ; இந்த  மரவுரி(வற்கலை) ஆடையை நான் அணிவேன் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் இது மிகவும் மதிப்புடையது . ஆகையால் இதை மகன்வாடி கிராமத்தில் அமையும் கிராம கைவினைப் பொருட்கள் கண்காட்சியில்  வைக்கப்போகிறேன். அந்த மியூசியத்தை இது அலங்கரிக்கும்

(வற்கலை என்னும் மரவுரியை காட்டிற்குச் சென்ற ராம லட்சுமணர்கள் அணிந்தனர்; பரதனும் அதே உடையில் வந்ததை கம்பன் அழகாக பாடுகிறான்)

இங்குள்ள ஆலயத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்; என்னுடன் ஒரு புலைய ஜாதிப்பையனும் துணிச்க்கலாக கோவிலுக்கு வந்தான் . இப்படி ஒரு காட்சியை நான் காண்பேன் என்று சில மாதங்களுக்கு  முன்னர் நான் நினைத்தும் பார்த்திருக்கமுடியாது.

இதில் கடவுளின் கைவண்ணத்தை நான் காண்கிறேன் பல பொதுக்கூட்டங்களில் சொல்லி வருவதை இங்கும் சொல்கிறேன் ; கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் நுழைந்து கும்பிடலாம் என்ற மகாராஜாவின் பிரகடனத்துக்கு இறைவனே காரணம்! கடவுள் தான் மஹாராஜா கைகள் மூலம் பிரகடனத்தில் கை எழுத்திட்டுள்ளார்.

xxxxx

பந்தளத்தில் காந்திஜி சொற்பொழிவு 20-1-1937

கேரளத்தில் நான் ஒப்பற்ற ஒரு விஷயத்தைக் காண்கிறேன்  எங்கும் ஊசி விழுந்தாலும் கேட்கும் Pin Drop Silence  அளவுக்கு அமைதி காக்கிறார்கள் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்   என்னுடைய கேரள விஜயத்தை நான் மத சமபந்தமான யாத்திரையாகவே கருதுகிறேன் .

நேற்று இதே நேரத்தில் நான் கோட்டயத்தில் சொற்பொழிவாற்றினேன்; கடல் போலக் கூட்டம் ; நான் பயந்து கொண்டு நடுங்கிக்கொண்டே மேடை ஏறினேன்; ஏனெனில் மைக் Microphone  இல்லாத கூட்டம் அது. கூட்டத்தினை ஏற்பாடு செய்தோர் எவ்வளவோ முயன்றும் மைக் வரவில்லை. கூட்டத்தினர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அமைதி காத்தனர். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்தக்கூட்டங்கள் எல்லா வற்றிலும் மதம் சமபந்தப்பட்டிருக்கிறது எல்லோரும் கோவிலுக்குள் வரலாம் என்று மன்னர் வெளியிட்ட பிரகடனமே தெய்வீக செயல் என்றே கருதுகிறேன். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்ன நிகழுமோ ஏது நடக்குமோ என்று பயப்பட்டிருப்பார்கள். இங்குள்ள இளம் வயது மஹாராஜா துணிச்சலாக பிரகடனம் செய்தார்.

xxxx

வீரர்கள் பட்டியல்

காந்தி நிறுவனமான நவஜீவன் காரியாலயம் மூலம் மஹாதேவ் தேசாய், வெளியிட் ட   புஸ்தகத்தில் திராவிட கன்னட ராமசாமி நாயக்கர் பெயர் எங்குமே இல்லை; அனால் தமிழ்நாட்டில் , திராவிட பித்தலாட்டக்காரர்கள்  ஏதோதோ சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார்கள். கூட்டத்தை வேடிக்கைபார்க்கப்  போனவன் எல்லாரும் புரட்சி வீரர் என்று சொன்னால்,   உண்மையான புரட்சி வீரர்கள் உலகை விட்டே ஓடிப்போய் விடுவார்கள் . இந்தப் புஸ்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். முழுவதும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் ..

வீரர்கள் பட்டியல்

T K Madhavan டி .கே மாதவன்

T R Krishnaswami Iyer டி .ஆர் .கிருஷ்ணசுவாமி ஐயர்

Kelappan Nair கேளப்பன்  நாயர்

C K Parameswaram Pillai சி. கே. பரமேஸ்வரன் பிள்ளை

M Govindan எம் .கோவிந்தன்

Ramachandran  ராமசந்திரன்

Aiyyan Kali அய்யன் காளி

Raman Pillai ராமன் பிள்ளை

Padmanabha Pillai பத்மநாப பிள்ளை

Yogakshema Sabha of  Malayali  Brahmins – Nambudiris மலையாளி நம்பூதிரி பிராமணர்களின் யோக க்ஷேம சபை

Kshatriya Mahasabha க்ஷத்ரிய மகாசபை

Nair Service Society நாயர் சர்வீஸ் சொசைட்டி NSS

Kesava Menon  கேசவ மேனன்

C Rajagopalachari சி ராஜ கோபாலாச்சாரி  (ராஜாஜி)

C P Ramaswami aiyyar சி.பி ராமசுவாமி ஐயர்

S N D P Yogam with Shri Narayan Guru எஸ். என். டி .பி .யோகம், நாராயண குரு அமைப்பு

Dr M E Naidu , Nagerkoil டாக்டர் எம்.இ . நாயுடு , நாகர்கோவில்

இவர்களில் நம்பூதிரி பிராமணரின் Nambudiri Yogakshema Sabha யோக க்ஷேம சபை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது எல்லோருக்கும் வியப்பைத் தந்தது என்று மகாதேவ தேசாய் முன்னுரையில் குறிப்பிடுகிறார்

இவர்கள் எல்லோரும் கிளர்ச்சியைத் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, பாரதி இதே கருத்தைப் பாடி தூங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பிவிட்டதை இந்துக்கள் நன்றியுடன் நினைவு கூறவேண்டும் .

விடுதலை விடுதலை விடுதலை ! பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை.

—SUBHAM—

TAGS- வைக்கம் போராட்டம், திராவிட பித்தலாட்டம், வைக்கம் வீரர்கள், ஐயர் பங்கு

குமாரநல்லூர் பகவதி,  உதயணபுரம் முருகன் கோவில்கள்- 20 (Post.12,786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,786

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 20 

கோவில் எண்கள்- 17 & 18 தொடர்ச்சி

குமாரநல்லூர் பகவதி கோவில்,  உதயணபுரம் முருகன் கோவில்

இரண்டு கோவில்களின் சிறப்பு அம்சங்கள்

உதயண புரத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி, வைக்கத்திலுள்ள தந்தையை – மகாதேவனை– சந்திக்க ஆண்டு தோறும் வைக்கத்து அஷ்டமி உற்சவத்தின் போது வருகிறார் ; மதுரை சித்திரைத் திருவிழாவின் போது அருகிலுள்ள திருப்பரங்குன்ற முருகன், மதுரை பஸ் நிலையம் அருகிலுள்ள பெருமாள், அழகர் கோவிலில் உள்ள பெருமாள் எல்லோரும் வருவதைப் போல இது ஒரு பெரிய வைபவமாக நடக்கிறது. முருகன் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் நாடகம் போல காட்சிகளைக் காணலாம் .

வைக்கத்திலிருந்து 3 கிலோ மீட்டரில் இருப்பதால் இரண்டு தலங்களையும் சேர்த்து தரிசிப்பது ஒரு சம்பிரதாயம்.

வைக்கம் போலவே வட்ட வடிவ கருவறை; கனத்த மதில் சுவர்கள். பழனி சுப்பிரமணிய சுவாமி போலவே இவருக்கும் கேரள மக்கள் முக்கியம் தருகிறார்கள்; கார்த்திகை நாள், சஷ்டி திதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் உண்டு .

மகர மாத (ஜனவரி) தைப்பூச திருவிழாவில் ஏராளமான காவடிகள் அணிவகுத்து வரும்.; 7 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள், முதலில் வைக்கத்துக்கு சென்று சிவனை தரிசித்துவிட்டு இங்கு வந்து, காவடியில் கொண்டுவந்த அபிஷேகப் பொருட்களால் கார்த்திகேயனனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

உதயண புரத்தின் அழகான சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்தால் இதன் பழமை புரியும். மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் நிறைந்திருப்பதால் கலை ரசிகர்கள் அவைகளைக் காண வருகின்றனர்  இந்தக் கோவில் பகவதிக்காக அமைக்கப்பட்டு, பின்னர் மன்னரின் கனவால் குமார நல்லூருக்கு மாற்றப்பட்டதால் இன்றும் பகவதி சேவை இந்த முருகன் கோவிலில் நடக்கிறது.

xxxx

குமாரநல்லூர் பகவதி கோவில்

கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பகவதி கோவில் இருக்கிறது

சேரமான் பெருமாள் கனவில் கண்டபடி,  முந்திய திட்டத்தை மாற்றி , குமரநல்லூரில் பகவதியையும் உதயணபுரத்தில் சுப்பிரமணியனையும் பிரதிஷ்டை செய்தார். இதில் 1000 நாயர் குடும்பங்களையும் 28 நம்பூதிரி குடும்பங்களையும் ஈடுபடுத்தினார்.

இந்த ஊருக்கு மஞ்சூர் என்ற பெயரும் வந்தது; மஞ்சு என்றால் மேகம். சேரமன்னனின்  முதல் திட்டத்தை தேவி ஏற்காததால், அதைக் காண்பிக்க தேவியே மூடு பனியால் இந்த ஊரை மூடவே சேராமானும் தேவியின் மஹிமையை உணர்ந்தான்.

மதுரை மீனாட்சியுடன் (மூக்குத்தி கதை) தொடர்பு கொண்டதாலோ என்னவோ தெரியவில்லை, இந்தக் கோவில் தமிழ்நாட்டுக் கோவில்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது

பொதுவாக விக்கிரகங்களைச் செய்வதற்கு கிருஷ்ண சிலா என்னும் கருப்பு நிறக் கல்லை பயன்படுத்துவார்கள். இங்குள்ள சிலை அஞ்சனக் கல்லால் (ஆன்டிமணி சல்பேட்) ஆக்கப்பட்டுள்ளது . சங்கு சக்கரத்துடன் அழகே உருவெடுத்து வந்தாற்போல இறைவி காட்சி தருகிறாள்.

விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) கொண்டாடப்படும் த்ரி கார்த்திகா உற்சவம், இந்தக் கோவிலின் முக்கிய திருவிழா ஆகும். அந்த உற்சவத்தில் வடக்குநாதன் கோவில் மதில் சுவருக்கும் உதயண புரம் கோவில் மதில் சுவருக்கும் பூஜையும் நைவேத்தியமும் படைக்கப்படும் . இதற்கு ஒரு விநோதக்  காரணத்தையும்  சொல்கிறார்கள் .

கார்த்திகை  மாத குளியலை  முடித்துவிட்டு,  அம்மன் திரும்பி வருகையில் மிகவும் அழகாக காட்சி தருவாளாம் . இந்தக் காண்பதற் காக  கோவிலில் குடிகொண்டுள்ள கடவுளர், மதில் மேல் ஏறி காத்திருப்பார்களாம்.. சந்நிதிகளில் இறைவனைக் காணவில்லையே என்று தேடிய அர்ச்சகர்கள், அந்த தெய்வங்கள் மதில் சுவரில் நிற்பதைக் கண்டு  சுவர்களுக்கே வழிபாடு  செய்தனராம் .

இவ்வாறு இரண்டு கோவில்களையும் சுற்றி பல கதைகள்   இருப்பது, கோவிலை நினைவு வைத்துக்கொள்ள பேருதவி செய்கிறது. 

xxxx

கோவில் எண் 19 பெருவனம் இரட்டையப்பன் கோவில்

பூரம் ஆறாட்டுப்புழா ,108 இறைவன்கள் மகாநாடு

திருச்சூர் நகரிலிருந்து திருப்பிரையார் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாயம்குளங்கரா எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரட்டையப்பன் கோவிலை அடையலாம் . ஒரு காலத்தில் இங்கு நடந்த ஆறாட்டுப்புழா பூரம் விழாதான் எல்லா பூரம் விழாக்களுக்கும் தோற்றுவாயாக இருந்தது. 108 தேவ, தேவியர் யானை மீதேறி இங்கு பவனி வந்து ஆற்றின் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஒரு சமயம் மழை  வெள்ளம்  காரணமாக திருச்சூர் வடக்குநாதன் வர முடியாமல் பாதி வழியில் திரும்பிச் செல்ல நேரிட்டது பின்னர் திருச்சூரிலும் தனி பூரம் விழா துவங்கியது.

பெருவனம் கோவிலின் சிறப்பு அம்சங்கள்

இங்கு இரண்டு சிவன் சந்நிதிகள் இருப்பதால் இரட்டையப்பன் கோவில் என்று பெயர் ஏற்பட்டது .

ஏன் இரண்டு கருவறைகள்? என்ற கேள்வி எழும் .

பரசுராமர், கேரளத்தில் மக்கள் வாழாததைக் கண்டு பிடித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்க கடலுக்கும் இடைப்பட்ட பூமியில் மக்களைக் குடியே ற்ற  திருவுளம்  கொண்டு 64 கிராமங்களை அமைத்தார் ; இதில் பெருவனம் என்னும் இடமே தலைமைப் பதவி வகித்தது. தமிழ் நாட்டில் பிராமணர் ஊர்களை மங்கலம் என்ற பெயரால் அழைப்பர்; கேரளத்தில் கிராமம் என்று அழைப்பர்

பூரு முனிவர் என்பவர் அடர்ந்த காட்டுக்குள்  — அதாவது பெரிய வனத்துக்குள் – தவம் செய்தவுடன் சிவனும் பார்வத்தியும் தோன்றி அருள்  செய்தனர் இருவரையும் இறைவன் பாதி இறைவி பாதி என்னும் அர்த்தநாரி  கோலத்தில் தரிசிப்பதே தனக்கு பிடித்தது என்று சொல்லவே சிவனும் ஒரு லிங்கத்தைக் கொடுத்து அவ்வாறே காண்பாய் என்கிறார். பின்னர் அவர் லிங்கத்தை ஒரு ஆலமரத்துக்கு அடியில் பிரதிஷ்டை செய்தார். அபிஷேகம் செய்வதற்காக நிலத்தில்  மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை வெட்டினார். அதை தொடு குளம் என்பார்கள் அர்த்த நாரீ  சொரூபத்தையும் கோவிலில் நிறுவினார். இவ்வாறு லிங்கமும் அர்த்த நாரீ யும் இரண்டு சந்நிதிகளில் இருந்து அருள் பாலிப்பதால் இரட்டையப்பன் என்று அழைக்கப்பட்டனர்.

108 கோவில் யானைகள்  பவனி

மார்ச்- ஏப்ரலில் 28 நாள் உற்சவம் நடக்கும் ; உற்சவத்துக்கு 108 கோவில்களின் இறைவன்கள் 108 யானைகள் மீது  பவனி வந்த காலம் உண்டு . பின்னர் காட்டுக்குள்  வருவதை விட ஆங்காங்கு பூரம் ஆராட்டு விழாவினை நடத்த தொடங்கினர். பெருவனம் பெயர் மங்கி, திருச்சூர் பூரம் பெயர் பெற்றது இப்போது பெருவனம் ஆராட்டுக்கு 23 கோவில் தேவ தேவியர் மட்டுமே வருகின்றனர் சாஸ்தா கோவில் அருகில் இருக்கும் பரந்த வயல் வெளியில் இந்த கடவுளர் சந்திப்பு– மகாநாடு நடக்கும். திருப்பரையார் ராம பிரான் தலைமை வகிப்பார்.

பார்வதி தேவி, கணபதி,, தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும்  இருக்கின்றன. கோவிலின் சுற்றுப் பகுதியில் கோசாலை கிருஷ்ணன் சந்நிதி இருக்கிறது . நான்கு புறங்களில் நாங்கு சாஸ்தா கோவில்கள் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர் குதிரை மலை, அக மலை , எடத்துருத்தி , வழுத்துக் காவு என்பன நான்கு சாஸ்தா கோவில்கள் ஆகும் .

—–SUBHAM—

TAGS- கேரள மாநில கோவில்கள், PART 20, குமாரநல்லூர் பகவதி உதயணபுரம் முருகன், கோவில், பெரு வனம் , இரட்டையப்பன் , விழா,

கொங்குமண்டல சதகம் – பாடல்கள் 6 & 7 (Post No.12,785)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,785

Date uploaded in London –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் –  பாடல்கள் 6 & 7

ச.நாகராஜன்

கொங்கு மண்டல சதகத்தில் ஆறு மற்றும் ஏழாம் பாடல்களைப் பார்ப்போம்:

நதி 

திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி

தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்

குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி

வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.

–    பாடல் 6

  (க-ரை) திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு -
செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி -
பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.

குடிவளம்

நீடுந் தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்

சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்

கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து

மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.

                                         –    பாடல் 7

 (க-ரை) சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர்
மூவர்க்கு மகுடஞ் சூடும் பெருமையை அடைந்து, எல்லா உயிர்க்கும்
உழவுத்தொழிலாற் பல உணவுப்பொருள்களை யுண்டாக்கி ஊட்டி
வளர்க்கும், வேளாண்மைக்குடிச் சிறப்புற்றுப் பசு முதலியன நன்கு
வளர்ச்சியுறுவது கொங்குமண்டலம் என்பதாம்.

வேளான்மாக்கள் எந்தெந்த பெயர் கொண்டு விளங்கினர் என்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன:

புலிக்கொடி கயற்கொடி பொருவிற் கொடியுடை


வேந்தர் நாட்டுறை வேளாண் மாக்கள்


சோழிய ரென்றும் பாண்டிய ரென்றுங்


கொங்கரென் றும்பெயர் கொண்டன ரவருள்

முன்னமுரைத்த முத்தமிழ் வேந்தரும்


எங்கள்மூ வருக்கு மியன்முடி சூட்டுதற்


குங்களை யமைத்தன முயர்ந்து கொள்வீரெனக்


கொண்டு மகிழ்ந் தனையர் கோத்தன்மையரே

                                      (நீதிநூற் சிறப்புப்பாயிரம் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை)

இது வரை கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் அதில் கூறப்பட்டுள்ள சரிதங்களையும் விளக்கமாக இந்தத் தொடரில் பார்த்தோம்.

www.tamilandvedas.com -இல் கொங்குமண்டல சதகத்தில் உள்ள பாடல்களும் விளக்கங்களும் கட்டுரையாக வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவற்றை  www.pustaka.co.in நிறுவனம்

இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பாகம் விரைவில் வெளி வரும்.

அன்பர்கள் இந்த மூன்று பாகங்களையும் படித்தால் கொங்கு மண்டலப் பெருமை பற்றி நன்கு அறிந்தவர்களாவோம்.

இந்த நூலின் சிறப்பைப் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை.

வெறும் கட்டுக்கதையாகவோ, புனைந்து புகழ் ஏற்றியோ  கொங்குமண்டலத்தின் பெருமை இதில் நிறுவப்படவில்லை.

அனைத்து சரிதங்களும் ஆதாரபூர்வமானவை; அற்புதமானவை.

சரிதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பரையினர் இன்றும் அதே நல்ல குணங்களோடு கொங்குமண்டலத்தில் வாழ்ந்து வருவது கண்கூடு.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழைய காலத்துப் பழமொழி இன்றளவும் உயிர்த்துடிப்போடு இலங்கும் படி கொங்கு மண்டல மக்கள் வாழ்ந்து வருவது அற்புதமானது.

இந்த நூலை கொங்குமண்டலம் மட்டுமல்லாது தமிழ் தெரிந்த அனைவரும் படித்து மகிழலாம்.

 நூலுக்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

***

Mercury turned into Gold!  Delhi Temple Wonder! (Post No.12,784)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,784

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

For thousands of years there has been a craze about the transmutation of lead and iron into gold. Hindu saints and researchers sang about it. Even the famous western scientists believed in the transmutation of metals and were frantically trying to find the secret.

This branch of science or pseudo-science is called Alchemy.

xxxx

What does science say about alchemy or transmutation of base metals into gold?

Scientists believe it is not possible to change iron into gold. But the radio active elements such as Uranium and Plutonium

What does uranium finally become?

Uranium eventually decays to radium. Radium decays to release a radioactive gas called radon. Radon in underground uranium mines is a greater radiation hazard to miners than uranium.

Three stable lead nuclides are the end products of radioactive decay in the three natural decay series: uranium (decays to lead-206), thorium (decays to lead-208), and actinium (decays to lead-207)

xxxx

Wikipedia gives the list of Hindu alchemists:

Kanada, sage and philosopher (6th century BC)

Nagarjuna (born 931)- Buddhist philosopher

Yogi Vemana

Siddhar Tamil sage and philosophers

Nayanmars Tamil sage and philosophers

Alvars Tamil sage and philosophers

Vallalar, Tamil 18th Century sage and philosopher

Arunagirinathar Tamil 15th Century sage and philosopher

Agastiyar Tamil Sage

Korakkar Tamil Sage

Thirumoolar Tamil Sage

Bogar Tamil Sage

Kagapujandar Tamil Sage

Vaalmiki Tamil Sage

Pattinathar Tamil Sage

Kalangi Nathar Tamil Sage

Pathanjali Tamil Sage

Avvaiyar Tamil Sage

Naradhar

We also read about Tamil saints Sambandar and Sundarar getting gold mysteriously.

But one person turned mercury into gold in the famous Hindu Temple in Delhi in the recent times.

On one of the walls of the Birla temple in New Delhi is engraved an unusual inscription . Delhi Birla Mandir is Lakshmi Narayan Temple and it is called Birla Mandir due to the big donationsto the temple.

Here’s a translation of how the inscription, in Hindi, described the incident.

The matter was published in Times of India newspaper in 2008 and in the Encyclopaedia of Indian Sciences in 2007 (for more on the subject Bhagwan Dash article in the book).

Mercury converted to gold in 1942 in India- proof

Inscription on Birla Mandir-Delhi

On 27/5/1942 in Birla House in presence of Shri A B Thakkar (PM, All India Hindu Sevak Sangh), Sri Duttji, secretary-Birla Mills, Delhi, Sri Khemka-Chief Engineer Sri Wilson etc, Pandit Krishnalala Sharma converted one tola mercury into 1 tola gold. It was done in Birla house, New Delhi

One Tola is approximately 12 grams.

Reetha fruit is Sapindus trifoliatus Linn (Soapnut)

He put mercury inside a shell of reetha fruit (soapnut) with some white and yellow powder (Jadi-booti) and it was closed with clay and this was put in hollow of earthen lamp and burnt for 45 minutes. On cooling and opening it, Gold was found! Similar inscription on Birla mandir-Varanasi:

In 1943, pandit Krishnapal Rasavaidya did it in Rishikesh in presence of Mahatma Gandhi’s P.A. Mahadev Desai, G.K Birla and others.

Mercury provided by Desai was converted into 18 KG of Gold!. This was donated to a trust which fetched Rs 72000! This experiment was repeated in presence of Pratap Singh of BHU.

Was this an example of alchemy or cold fusion and if yes, our ancestors knew more science than all world put together!

BARC former associate Mahadeva Srinivasan believes in this possibility and stated there was good work done at BARC on this till 1994 and then senior scientists killed this research! Cold fusion research is not getting funds in India but China, Russia and Japan are doing it. This process can mean one can create electricity in their homes and clean fuel will be produced without hazardous wastes.

According to Modern Science Mercury is the closest metal of Gold . Mercury’s atomic number is 80 and Gold’s atomic number is 79 .if we can remove only one atom from Mercury , scientifically Mercury will turn into Gold. Though it is not that simple I still wonder how did Hindus find out mercury and gold are so close thousands of year before Mendeleev’s Periodic Table.

Pandit Krishnalala Sharma learnt it from a saint in Haridwar named Narayana swami.

Even Kautilya’s Arthasastra which is 2400 year old says about gold produced by transmutation.

My mother told me an incident where a lightning strike made the cow dung into gold.at that time I was laughing as a science student. But the latest science talks about metals are created by transmutation in extreme hot supernova in the universe. So my mother may be right in her belief!

Picture of Soapnut tree (Reetha)

This is what Wikipedia says,

Most stars carry out transmutation through fusion reactions involving hydrogen and helium, while much larger stars are also capable of fusing heavier elements up to iron late in their evolution.

Elements heavier than iron, such as gold or lead, are created through elemental transmutations that can naturally occur in supernovae. One goal of alchemy, the transmutation of base substances into gold, is now known to be impossible by chemical means but possible by physical means. As stars begin to fuse heavier elements, substantially less energy is released from each fusion reaction. This continues until it reaches iron which is produced by an endothermic reaction consuming energy. No heavier element can be produced in such conditions.

—subham—

Tags- Mercury, gold, alchemy, transmutation, Delhi Birla Mandir, Krishnalala Sarma.

வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும் (Post No.12,783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,783

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வைக்கம் என்ற ஊரின் பெயரைச் சொன்னவுடன் அங்கேயுள்ள மஹாதேவர் கோவில் எல்லோருக்கும் நினைவில் வந்து வைக்கதாப்பா காப்பாத்தப்பா என்பார்கள்; தேச பக்தர்களும் மலையாளிகளும் மஹாத்தமா  காந்தியையும் திருவாங்கூர் மஹாராஜாவையும் கேள ப்பனையும்மாதவன் பிள்ளையையும்  கிருஷ்ண சுவாமி ஐயரையும் வாழ்த்துவார்கள்; விஷயம் தெரியாத அரை வேக்காடுகள் நம்ம ஊரு நாயக்கர் போய் புரட்சி செய்துவிட்டார் என்று நினைப்பார்கள்; திராவிட பித்தலாட்டக்காரர் பிரசாரம் மூலம் நானும் நம்ம ஊரு  கன்னட தாய் மொழி ராமசாமி நாயக்கருக்கும் வைக்கத்துக்கும் சம்மபந்தம் உண்டுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். காந்திஜியின் சொற்பொழிவுகளைப்  படித்த பின்னர், அவ்ருடன் வந்த மஹாதேவ் தேசாய் 1937ல் எழுதிய அருமையான புஸ்தகத்தைப் பிடித்த பின்னர்,  அயோக்கியர்களின் மூகத்திரை கிழிந்தது  என்று சந்தோஷப்பட்டேன்

BOOK DETAILS

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

251 பக்கங்ககளை உடைய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தக த்தைப் படித்தபின்னர் நாயக்கர் பெயரை எங்குமே காணாதது கண்டு வியந்தேன். அந்தப் புத்தகத்தை மறு பதிப்பு செய்ய வேண்டும். புத்தகத்துக்குப் பெயர் வைத்தவர் புகழ் பெற்ற கவிஞர் சரோஜினி நாயுடு. எழுதியவரோ தேசம் முழுதும் அறிந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மஹாதேவ தேசாய்.

திராவிட விஷமிகளும் அவர்களோடு கூட்டுச் சேரும்போது மட்டும் கம்யூனிஸ்டுகளும் விஷம பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அங்கு நாயக்கருக்கு சிலை வைத்ததும் நம்ம ஊரு திராவிட விஷம்தான் ; ஆனால் மலையாளி களைக் கண்டு அந்தக் கோழைகளுக்கு பயம்; ஆகையால் கடவுள் காட்டுமிராண்டி அவனைக் கும்பிடறவன் அயோக்கியன் என்ற வாசகங்களை திராவிட வா(ந்)திகள் எழுத முடியவில்லை ;அப்படி எழுதினால்  மலையாளி இந்துக்கள் சிலையை நீடிக்க விடமாட்டார்கள் என்பது நம்ம திராவிட மோசடிகளுக்குத் தெரியும்

நம்ம கன்னட நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்ததால் போயிருப்பாரு; ஆனால் நூத்தோட ஒன்னு நூத்தி ஒன்னு கணக்குதான். . ராஜாஜி பெயர் கூட புஸ்தகத்தில் இருக்கு !

xxxxxx

வைக்கம் சத்தியாகிரகம் என்றால் என்ன?

வைக்கத்தில் புகழ்பெற்ற மஹாதேவர் கோவிலிச் சுற்றியுள்ள தெருக்களில் கீழ் ஜாதி மக்கள் நடமாடவோ கோவிலுக்குள் வரவோ திருவாங்கூர் மகாராஜா தடை வித்தித்திருந்தார்; தீண்டாமை நீடித்தால் கிறிஸ்தவ முதலைகள்  இந்துக்களை விழுங்கிவிடும் என்று அஞ்சிய காந்திஜியும் ஈழவா ஜாதி தலைவர் நாராயண குருவும் இந்து ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கோரி சத்தியாகிரகம் செய்தனர்; நாட்டின் வடபகுதியில் இதே ஹரிஜனங்களுக்கு உரிமை கோரிய காந்திஜி வந்தவுடன் மகாராஜா மனம் மாறியது .

இதற்கெல்லாம் மூல காரணம்  மஹாகவி பாரதியார் ; வைக்கம் கிராம போராட்டம் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பறையர் தீயர் (ஈழவா) புலையர் ஆகியோருக்கு விடுதலை ஈன்று பாடினார்  ( எனது தந்தைக்குப் பிடித்த பாட்டும் அதுதான் ; காமராஜுடன் சிறையில் இருந்த என் தந்தை, சென்னை மவுண்ட் ரோடில் விடுதலை, விடுதலை என்ற பாரதி பாட்டினைப்  பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்; இதை அவர் என்றும் சொன்னதில்லை; என் அம்மா, என் தந்தை கைதான விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லுவார் )

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே  — பாரதியார்

நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.

ஆங்கில நாளேடுகளில் வைக்கம்பற்றிய கட்டுரைகளைப் படித்தேன் ; விக்கிப்பீடியாவிலும் படித்தேன் எல்லாம் அரை வேக்காடுகள் எழுதிய அரைகுறைக் கட்டுரைகள் ; போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் இல்லாதபடி எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்களை எழுதியுள்ளனர். இதனால் மஹாதேவ தேசாய் எழுதிய புஸ்தகம் தமிழில் வந்தே ஆக வேண்டும்.

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று சில விஷமிகள் காத்திருந்தனர். காந்திஜிக்கு அவர்களின் விஷமம் புரிந்தது ; டேய் பசங்களா; இது இந்துக்களின் சொந்தப பிரச்சினை; நீங்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தேவை இல்லை என்று சொல்லி சீக்கியர்களையும்  கிறிஸ்தவர்களையும் விரட்டி விட்டார்; அமிர்தசரஸிலிருந்து இலவச உணவு கொடுக்க வந்த சீக்கியர்கள்  மூட்டி முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஓ ட்டம் பிடித்தனர் இது நான் சொல்லும் புஸ்தகத்திலும் உளது; விக்கிப்பீடியாவிலும்  உளது

The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia).

எல்லோரும் கோவிலுக்குள் சம உரிமையுடன் சென்று வழிபடலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகா ராஜா 1936ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டார்காந்திஜிக்கும் நாயர் சங்கத்துக்கும்நாராயண குரு  சங்கத்துக்கும் நம்பூதிரிகளின் யோகஷேம டிரஸ்டுக்கும் ஏக மகிழ்ச்சி

காந்திஜிக்கும் மஹாராஜாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. நாயர் சங்கத்தலைவர் மற்றும் கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் தங்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்க்கவே இல்லை ( எனது தந்தை வெ .சந்தானமும் தன்  பெயரின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்ததே இல்லை.)

XXXXX

வைக்கத்தில் காந்திஜி சொற்பொழிவு

இப்போது உண்மையான  வைக்கம் வீரர்கள் யார் என்பதை காந்திஜி வாய்மொழி மூலமாகவே கேட்போம்:-

வைக்கத்தில் சத்தியாகி கிரக மைதானத்தில் 18-1-1937ல் சொற்பொழிவு ஆற்றினார்; 25000 பேர் அவரது உரையை க்கேட்டனர்

” உங்கள் நடுவில் நான் இரண்டாவது முறையாக நிற்கிறேன் .என்னுடைய அளவற்ற மகிழ்ச்சியை நான் சொல்லுவதை வீட நீங்களே உணர  முடியும் என்ன அருமையான சுப வேளை !

சில ஆண்டுகளுக்கு முன்னர்கோவிலை நோக்கிச் செல்லும் சாலைகளை அவர்ண ஹிந்துக்களுக்கும் (ஜாதியில் தாழ்ந்த) திறந்துவிட வேண்டும் என்பதற்காக போராடுவதே கஷ்டமாக இருந்தது  நல்ல மனிதன் மாதவன் (பிள்ளை)கிருஷ்ணசாமி (அய்யர்) உதவியுடன் போராடினார்கள் கேளப்பன் (நாயர்) இந்தப் போராட்ட த்துக்கான வித்துக்களை ஊன்றினார் ;மிகவும் சோகமான விஷயம் மாதவனோ கிருஸ்ணசாமியோ இன்று நம்மிடையே இல்லை நம்முடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை.

பந்தளம்,எட்டுமானூர், முதலிய ஊர்களில் அவர் என்னே சொன்னார் என்பதையும் காண்போம் .

old spelling VAIKAM; new spelling VAIKOM (just above Kottayam)

தொடரும்………………………………………..

Tags- வைக்கம் சத்தியாக்கிரகம்ஈ வே ரா ராமசாமி நாயக்கர்திராவிடபித்தலாட்டம்வீரர்கள்

ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில் –மதுரை மீனாட்சி மூக்குத்தி கதை Part 19 (Post.12782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,782

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 19

கோவில் எண் 16 –  ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில்

கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் ஹரிபாடு இருக்கிறது. கொ ல்லத்திலிருந்து 54 கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணம் செய்தால் ஹரிபாட் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

கேரளத்திலுள்ள மிகப்பழமையான முருகன் கோவில்

சுமார் எட்டு அடி உயரமுள்ள நான்கு கைகளுள்ள சுப்பிரமணியசுவாமி சிலை.

மாநிலத்தின் மிகப்பழைய  முருகன் கோவில் ; பரசுராமர் வழிபட்டது

ஆண்டு முழுதும் நிறைய திருவிழாக்கள்;

பழனி போலவே காவடி ஆட்டம் உண்டு ;

விராலி மலை போல கோவிலில் மயில்களையும் காணலாம் ;

கோவிலின் தோற்றம்

பரசுராமர் இங்குள்ள முருகனை வழிபட்டார். பின்னர் சிலை மாயமாக மறைந்தது; பக்தர் ஒருவர் கனவில் சிலை இருக்கும் இடம் தெரியவே பக்தர்கள் பயிப்பாடு நதியில் தேடி சிலையைக் கொண்டு வந்தனர். அந்த நாளை ஆண்டுதோறும் வல்லம் களி  என்று கொண்டாடி வருகின்றனர்

1921ம் ஆண்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. கேரளத்தின் கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் தீ விபத்துகள் நேரிடுவது எளிதாகி விடுகிறது . தீ விபத்துக்குப் பின்னர் கோவில் விரிவாகக் கட்டப்பட்டது. இப்போது 4 கோபுரங்கள், பெரிய கூத்தம்பலம் , தங்கத் தகடு போர்த்திய கொடிமரம் ஆகியன உள்ளன

முருகனின் தோற்றம்

சுப்பிரமணிய சுவாமி நான்கு கைகளுடன் நிற்கிறார். ஒரு கையில் வேல்; இன்னும் ஒரு கையில் வஜ்ராயுதம் ; மீதி இரண்டு கைகளில் ஒன்று அபய முத்திரையுடனும் இன்னும் ஒன்று பாதத்தை நோக்கியும் இருக்கிறது

திருவிழாக்கள்

அதிகமான உற்சவங்களை  உடைய கோவில் இது.

ஆவணி உற்சவம் சிங்கம் மாதத்தில் (ஆகஸ்ட் -செப்டம்பர் ) நடக்கிறது ;மார்கழி உற்சவம் தனுர் மாதத்திலும் (டிசமபர்), சித்திரை உற்சவம் மேடம் /மேஷம்(ஏப்ரல்) மாதத்திலும், கார்த்திகை உற்சவம் நவம்பர் மாதத்திலும் தைப்பூசம்  ஜனவரி மாதத்திலும் நடக்கின்றன .காவடி ஆட்டம் இந்த உற்சவங்களின் சிறப்பு அம்சம் . சிலையை மீட்டதை நினைவு கூறும் வகையில்  பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்னும் மூன்றுநாள் திருவிழா திருவோணத்துக்குப் பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படுகிறது.

மகர மாத புஷ்ய நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அந்த நாளையும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்

சந்நிதிகள்

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ள கிருஷ்ணன், சாஸ்தா/ ஐயப்பன் , தட்சிணா மூர்த்தி விக்கிரகங்கள் இந்தக் கோவிலிலும் உள்ளன .

xxxxx

மதுரை மீனாட்சி மூக்குத்தியைக் காணோம் !

கோவில் எண்கள்- 17 & 18

குமாரநல்லூர் பகவதி கோவில்,  உதயணபுரம் கோவில்

முருகனும் பகவதியும் இடம் மாறிய கோவில்கள்

மூன்று கோவில்கள் தொடர்புடைய ஒரு சுவையான கதை !

குமார நல்லூர் , கோட்டயம் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ; குமரன் என்றால் முருகன். ஆனால் முருகன் அல்லாமல் பகவதியை பிரதிஷ்டை செய்த கோவில் இது. பின்னர் ஏன் குமரன் அல்லாத ஊர் என்று சொல்லி முருகனைக் கேலி செய்கிறார்கள் என்ற வினா எழும். அங்குதான் சுவையான கதை கிடைக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் மீனாட்சி அம்மனின் மூக்குத்தியைக் காணவில்லை.; பூமாலைகளைக் கழற்றும்போது அது எங்கோ தொலைந்துவிட்டது. மறுநாள் , இந்தச் செய்தி பாண்டிய மன்னனின் காதுகளை எட்டியது. இதுபோன்ற விஷயங்களில் முதல் பலி அர் ச்சகர்தான் . நாளை காலைக்குள், பட்டர் அம்மனின் மூக்குத்தியைக் கொண்டுவராவிடில் அவருக்கு சிரச்சேத தண்டனை (தலையைக் கொய்தல்) என்று பாண்டிய மன்னன் அறிவித்தான் .

ஒன்றும் அறியாத அப்பாவி பட்டர் தவியாய்த் தவித்தார் .

மறு நாள் காலையில்  மரண தண் டனை என்று கேட்டபின்னர் உறக்கமா வரும்? அன்னை மீனாட்சியை மனம் உருகப் பிரார்த்தித்தார் ; அவர் முன்னால் ஒரு ஒளி தோன்றியது ; அதைப் பின்பற்றிச் சென்றார்; அது அவரை கேரளம் வரை அழைத்து வந்து குமார நல்லூரில் விட்டது; அவர் உயிர்  பிழைத்தார்; இன்றும் மதுரை நம்பூதிரி வழிவந்தோர் அதே பெயரில் அழைக்கப்படுகின்றனர் .

இதே நேரத்தில் சேர மன்னன் குலசேகரப் பெருமாள் கனவில் ஒரு அதிர் ர்ச்சி தரும் செய்தி காதில் விழுந்தது. அவர் பகவதி சிலையை வைக்கம் என்னும் தலத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள உதயண புரத்தில் வைக்க திட்டமிட்டிருந்தார் ; அதே போல குமார நல்லூரில் சுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தார் கனவில் மன்னனுக்கு வந்த செய்தியோ குமாரநல்லூரில் முருகனை வைக்காதே என்று சொன்னது உடனே அதை உதயண புரத்துக்கு அனுப்பிவிட்டு அங்கு நிறுவ இருந்த பகவதியைக் குமார நல்லூருக்குக் கொண்டுவந்தார் ; அலகிலா விளையாட்டுடையான் அல்லவா அம்பலத்தில் ஆடுகிறான்! ஆண்டவனின் லீலா விபூதிகளுக்கு விளக்கமே கிடையாது

குமரன் பெயரில் இருந்த ஊர் – குமரன் அல்ல ஊர் என்று மாறியது. உத யநாயகிபு ரம் , உதயண பு ரம் என்று மாற்றப்பட்டது. ஆயினும் இரண்டு கோவில்களிலும் இதை நினைவு படுத்தும் வகையில், அங்கு இல்லாத சாமிகளுக்கு சில வழிபாடுகளும்  நடைபெறுவதால் இந்தக் கதைகள் உண் மையானவை தான் என்றும் புலனாகின்றது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், மலையாள தேசத்திலுள்ள முருகன் கோவில்களைப் பற்றி விலளக்கமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் மலையாளிகள் முருகனை பையன் என்றே அழைப்பர் என்கிறார். பையன்  பெயரில் பல ஊர்களும் உள்ளன. குமாரன் என்பதன் தமிழ் பொழிபெயர்ப்பு பையன். தமிழ் நாட்டிலோ விநாயகருக்கு பிள்ளை என்று பெயர் சூட்டியுள்ளோம் !! இருவரும் சிவனின் பிள்ளைகள்தானே !

To be continued……………………………..

–subham–

Tags- கேரள , புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 19,ஹரிபாட், சுப்ரமண்ய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் ,மூக்குத்தி

கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள் (Post No.12,781)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,781

Date uploaded in London –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள்

ச.நாகராஜன்

விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் நூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் உள்ள பாடல்களையும் அவை கூறும் அற்புதமான வரலாறுகளையும் இது வரை பார்த்து வந்தோம்.

ஆரம்பத்தில் உள்ள சில பாடல்கள் இது வரை தரப்படவில்லை.

அவற்றை இங்கு காணலாம்.

பாடல்

பாயிரம்

காப்பு

அறுசீரடியாசிரிய விருத்தம்

பூமலி செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி

நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்

கோமலி யுருவ மூன்று கூறிரு திணைபொ ருந்தித்

தேமலி மருப்பொன் றேந்து தேவனைப் பணிகு வேமால்

பாடலின் பொருள் : நல்ல மனமுடையவர் தொடங்கிய செயல்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்கியும், அச்சமான கொடிய உள்ளத்தினர் ஆசை கொள்ளும் தொழில்களுக்குத் தடையை உண்டாக்கியும், மேன்மையுள்ள (பூதக்கால் – தெய்வ உடல் – யானைத் தலை) மூவகை வடிவில் (அஃறிணை – உயிர்திணை) இரு திணை பொருந்தி ஒற்றைக் கொம்பராக விளங்கும் மூத்த பிள்ளையாரை வணங்குவாம்.

அவையடக்கம்

கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்

மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீரு மோராதேன்

திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம் மண்டலத்தின்

அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கி லறிஞ ரிகழாரே

பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த விரிந்த பூமியில் உள்ள, கண்டங்கள் மற்றும் தீவுகள் முதலிய பிரிவுகளை, நிற்கும் சுவரில் கோடிட்டு எழுதிக் களிக்கின்ற அறியாச் சிறுவர்களைப் போல, கொங்கு மண்டலத்தின் வளமும் சிறப்பும் அறியாதவனாகிய எளியேன் (அவற்றை) நன்றாகக் கேட்டுப் பார்த்துச் சொல்ல வல்லார் முன் அக்கொங்கு மண்டலத்தின் முறையான கதைகளடங்கிய சதகம் என்னும் பிரபந்தத்தை இயற்றுவேனேல் அதைத் தவறு என்று அறிஞர்கள் இகழ மாட்டார்கள்.

இதை கம்பரது கீழ்க்கண்ட பாடலுடன் ஒப்பு நோக்கலாம்:

“அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்

தறையிற் கீறிடிள் தச்சரும் காய்வரோ!”

ஆக்கியோன்

திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்

வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்

வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ் நின்ற

கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே

பாடலின் பொருள் : வரியை உடைய குயில்கள் கூவுகின்ற அசோக மரத்தினடியில் மூன்று குடைகள் நிழலைச் செய்ய வீற்றிருந்தருளும் அருகதேவனைச் சிந்தித்து இருக்கும் கார்மேகக் கவிஞன், கொங்கு மண்டலத்தின் சிறந்த சரிதங்களைத் தெரிந்து கொள்வாருக்கு வருத்தம் நேராதபடி எளிதாகக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலைச் சொன்னான்.

சிந்தாமணியில் வரும் கீழ்க்கண்ட பாடலை இங்கு ஒப்பு நோக்கலாம்:

முழாத்தி ரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்

வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்

குழாத்தொடு மிரைகொளக் குளிர்ந்து கூங்குயில்

விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே

பாயிரம் முற்றும்

நூல்

நாடு

கட்டளைக் கலித்துறை

பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்

நற்பய னுற்றுச் சுகித்திடுமென்ன நவிற்றுபழஞ்

சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு

வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே

–    பாடல் 1

பாடலின் பொருள் : பொலிவு மிகுந்த ‘கொங்கு நாடு செழித்தால் இந்த பூமியிலுள்ள எந்த நாடும் நல்ல பலனைப் பெற்றுச் சுகம் அடையும்’ என்று சொல்கின்ற பழமொழிக்கு இணங்க மாடு கன்றுகள் விருத்தி கொண்டது கொங்கு மண்டலம் ஆகும்.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது காலம் காலமாக வழங்கி வரும் ஒரு பழமொழி.

எல்லை

மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு

விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு. மண்டலமே

 – பாடல் 2          

பாடலின் பொருள் : கிழக்கில் மதிற் கோட்டைக் கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலம் ஆகும்.

இதை விளக்கும் வெண்பா ஒன்றும் உண்டு:

வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்

குடக்குப் பொறுப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்

களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்

குளிர்த்தண் டலையளவு கொங்கு

நாடு – இணைநாடு

நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம் பொருந்தத்

தோலா மொழிக டிகழ்நா வலரென்றுச் சுகம் பொருந்த

நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்

மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே

                                – பாடல் 3

பாடலின் பொருள் : பல கலைகளாகிய கடலை உண்டு சுவை உடையதாய் தோல்வி பெறாது பேசவல்ல நாவலர்கள் எந்த நாளும் இன்பம் நிறைந்து வாழும் இருபத்து நான்கு நாடுகளிலும், அவற்றைச் சூழ்ந்த இணைநாடுகளிலும் முருகவேள் கோயிலும், திருமால் கோயிலும், சிவாலயங்களும் நிறைந்துள்ளது கொங்கு மண்டலம்.

24 நாடுகள் பின்வருமாறு :

பூந்துறை நாடு             தலையனாடு         வாழவந்தி நாடு     

தென்கரை நாடு            தட்டயனாடு          அண்ட நாடு

காங்கேய நாடு            பூவாணிய நாடு      வெங்கால நாடு

பொன்கலூர் நாடு         அரையனாடு         காவடிகனாடு

ஆறை நாடு               ஒருவங்க நாடு      ஆனைமலை நாடு

வாரக்கனாடு               வடகரை நாடு       இராசிபுர நாடு

திருவாவினன்குடி நாடு    கிழங்கு நாடு        காஞ்சிக்கோயினாடு

மணனாடு                 நல்லுருக்கனாடு.     குறுப்பு நாடு

6 இணைநாடுகள் :

பருத்திப்பள்ளி நாடு        விமலை நாடு         சேல நாடு

ஏழூர் நாடு                தூசூர் நாடு.           இடைப்பிச்சனாடு

தலம்

செஞ்சொற் கரைசை திருவானி கூடல் திருமுருகர்

தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே

வெஞ்சனற் கூடல்செங் குன்றூ ரறப்பளி வெண்ணெய்மலை

மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே

                           – பாடல் 4

பாடலின் பொருள் : திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி, அவிநாசி, குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அறப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர் முதலிய திருப்பதிகள் சேர்வது கொங்கு மண்டலம்.

மலை

கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்

வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய்மலை

அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யாவகிரி

வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே

– பாடல் 5

பாடலின் பொருள் : கொல்லி மலை, வைகைப் பொன்மலை, அலைவாய் மலை, பழநி மலை, பொன்னூதி மலை, கொங்கணவர் மலை, சேர்வராயன் மலை, ஓதியூர் மலை, வராக மலை, தலை மலை, வெண்ணெய் மலை, சென்னி மலை, கஞ்ச மலை, வெள்ளி மலை, நாக கிரி, ஆனை மலை ஆகிய மலைகள் சூழ்வது கொங்கு மண்டலம். 

–     அடுத்த கட்டுரையுடன் இந்த நெடுந்தொடர் முடிகிறது

***

தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர் (Post No.12,780)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,780

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பண்டிகை நாட்கள் – பாரதியார் பிறந்த நாள் 11;  ;மார்கழி மாதம் துவக்கம்-17 ; வைகுண்ட ஏகாதசி -23; கிறிஸ்துமஸ்- 25;  ஆருத்ரா தரிசனம் -27

அமாவாசை -12; பெளர்ணமி- டிசம்பர் 26;  ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 8, 23; சுபமுகூர்த்த நாட்கள் – 1, 7, 14

XXXXX

தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர்

டிசம்பர் 1 வெள்ளிக் கிழமை

விடியல் இன்னும் இருட்டாக இருக்கும் போது, ஒளியை உணர்ந்து பாடும், பறவையின் உள்ளம் போன்றது. நம்பிக்கை.

xxxx

டிசம்பர் 2 சனிக் கிழமை

ஏற்கும்  திறனை  உண்டாக்கினால் அந்த அளவுக்கு  நமக்கு சொந்தமான எல்லாம் நம்மை வந்தடையும்;

XXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

நட்சத்திரங்கள் உங்களுக்குள்  மறைந்திருப்பதால், உயர, உயர  போங்கள், ஆழமாக கனவு காணுங்கள், ஏனென்றால், குறிக்கோள்களுக்கு முன்னதாக அதைப் பற்றிய  கனவு இருக்கவேண்டும்

XXXX

டிசம்பர் 4 திங்கட் கிழமை

அன்பு என்பது கொடுக்கப்படும் பரிசு அல்ல ; அதை ஏற்போர் எங்கே என்று அது தேடுகிறது.

xxxx

டிசம்பர் 5 செவ்வாய்க் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx 

டிசம்பர் 6 புதன் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx

டிசம்பர் 7 வியாழக் கிழமை

கொஞ்சம்  விவேகம் இருப்பது ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் இருப்பது போன்றது- தெளிவானது, தூய்மையானது, ஊடுருவிப்  பார்க்கமுடியும்; அதிக   விவேகம் இருப்பது கடல் போல கருமையானது; ஆழத்தை அறிய முடியாது ; மர்மமானது

XXXX

டிசம்பர் 8 வெள்ளிக் கிழமை

மலரின் இதழ்களை மட்டும் பறித்தால்  மலரின் முழு அழகினைப் பெற முடியாது.

XXXX

டிசம்பர் 9 சனிக் கிழமை

வாழ்க்கை என்பது ஆனந்தம் என்று கனவு வந்தது; விழித்தேன் பார்த்தேன்; சே வைதான்  வாழக்கை என்று கண்டேன் அப்படியே செய் தேன் ; உண்மைதான் சேவை செய்வதே ஆனந்தம்.

XXXXX

டிசம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

உண்மையான நட்பு, மின்விளக்கு போன்றது, எல்லாம் இருட்டாக இருக்கும்போது, அது நன்றாக பிரகாசிக்கிறது.

xxxx

டிசம்பர் 11 திங்கட் கிழமை

ஒரு குழந்தையை, உங்கள் சொந்தக் கற்றலுடன் மட்டுப் படுத்தாதீர்கள், ஏனென்றால் அவன் வேறொரு காலத்தில் பிறந்தவன்..

xxxx

டிசம்பர் 12 செவ்வாய்க் கிழமை

மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது. ஆனால் எளிமையாக இருப்பது, மிகவும் கடினம்.

xxxx

டிசம்பர் 13 புதன் கிழமை

நீரை நின்று, வெறித்துப் பார்ப்பதன் மூலம், நீங்கள் கடலைக் கடக்க முடியாது.

xxxx

டிசம்பர் 14 வியாழக் கிழமை

உங்கள் வாழ்க்கை விளிம்புகளில், லேசாக நடனமாடட்டும். ஒரு இலையின் நுனியில் பனி  போன்ற நேரம்.

xxxx

டிசம்பர் 15 வெள்ளிக் கிழமை

மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய, மிக முக்கியமான பாடம், இந்த உலகில் வலி இருக்கிறது என்பதல்ல, அதை அவர் மகிழ்ச்சியாக மாற்றுவது சாத்தியமாகும் என்பதை..

xxxx

டிசம்பர் 16 சனிக் கிழமை

உங்கள் வாழ்க்கையில் இருந்து, சூரியன் வெளியேறியதால், நீங்கள் அழுதால் , உங்கள் கண்ணீர் நட்சத்திரங்களை பார்ப்பதை தடுக்கும்..

Xxxxx

டிசம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

உலகை தவறாக படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று கூறுகிறோம்.

Xxxx

டிசம்பர் 18 திங்கட் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 19 செவ்வாய்க் கிழமை

என் வாழ்க்கையில் மேகங்கள் மிதந்து வருகின்றன;மழையைக்  கொட்டவோ, புயல் வீசவோ அல்ல;அஸ் தமன வானத்திற்கு அழகு சேர்ப்பதற்காக !

XXXX 

டிசம்பர் 20 புதன் கிழமை

என் கடவுளை நான் நேசிக்க முடிகிறது, ஏனென்றால், அவரை மறுக்க அவர் எனக்கு சுதந்திரம் தருகிறார்.

xxxx

டிசம்பர் 21 வியாழக் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 22 வெள்ளிக் கிழமை

பயத்தைக் கொடுக்காதே என்று அபயம் வேண்டமாட்டேன்;பயத்தை சந்திக்கும்போது எனக்கு பயமே இருக்கக்கூடாது என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 23 சனிக் கிழமை

வலியை நீக்கிவிடு என்று கெஞ்ச்ச மாட்டேன்; எதையும் தாங்கும் இதயத்ததைக்  கொடு ; வெற்றியைக் கொடு என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

பட்டுப்பூச்சி மாதக் கணக்கில் கணக்கு போடாது ; அந்த நொடியை மட்டுமே கருத்தில் கொண்டு, போதுமான நேரத்தை அனுபவிக்கிறது.

XXXX

டிசம்பர் 25 திங்கட் கிழமை 

இது காலைப்பொழுது என்று சொல்லிவிட்டு நேற்று  என்பது போலத் தள்ளிவிடாதீர்கள்; ஒவ்வொரு நாளையும் பெயர் வைக்க வேண்டிய புதிய குழந்தை போலக் காணுங்கள் .

XXXX

டிசம்பர் 26 செவ்வாய்க் கிழமை

வானம் கேட்பதற்கு  தயாராக இருக்கிறது . அதனுடன் பேசுவதற்கு பூமாதேவி மரங்களை உண்டாக்கி முடிவில்லாதா முயற்சியை செய்துகொண்டே இருக்கிறாள்

XXXX

டிசம்பர் 27 புதன் கிழமை

தகவல்கள் பல; ஆனால் உண்மை ஒன்றே

XXXXX

டிசம்பர் 28 வியாழக் கிழமை

தவறுகள் பற்றிய  எல்லாக் கதவுகளையும் அடைத்து விடாதீர்கள் ; அப்படிச் செய்தால் உண்மையின் கதவும் அடைபட்டுப் போகும்.

XXXX

டிசம்பர் 29 வெள்ளிக் கிழமை

அன்பு என்பது உணர்ச்சிக் கொந்தளிப்பு அல்ல அதுதான் இறுதி உண்மை. படைப்பின் இதய ஸ்தானத்தில் அது இருக்கிறது

XXXX

டிசம்பர் 30 சனிக் கிழமை

உண்மைக் கல்வி என்பது  தகவல்களை அள்ளித் தருவது அல்ல;.அத்தோடு படைப்பில் காணப்படும் எல்லாவற்றுடனும்  இணக்கமாக வாழக் கற்றுக் கொடுப்பதே உண்மைக் கல்வி .

XXXX

டிசம்பர் 31 ஞாயிற்றுக் கிழமை

ஒவ்வொரு குழந்தையும் என்ன செய்தி சொல்கிறது தெரியுமா? கடவுள் இன்னும் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதே செய்தி.

xxxxx

BONUS QUOTE

நட்பின் ஆழம், அறிமுகத்தின் நீளத்தைப் பொறுத்தது அல்ல.

xxxx

—SUBHAM— 

TAGS – தாகூர் பொன்மொழிகள் , டிசம்பர் 2023 காலண்டர்

Rabindranath Tagore Quotes- December 2023 Calendar (Post No.12,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,779

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Festival Days- Bharatiyar Birthday-11; Tamil month Markazi begins-17; Vaikunda Ekadasi-23; Christmas- 25; Arudra Darshan-27

New moon day/Amavasai-12;Full moon day- 26; Ekadasi Fasting Days- 8 & 23; Auspicious Days- 1,7,14

December 1 Friday

You cannot cross the sea merely by standing and staring at the water.

XXXX

December 2 Saturday

Everything comes to us that belongs to us if we create the capacity to receive it.

XXXX

December 3 Sunday

The small wisdom is like water in a glass: clear, transparent, pure. The great wisdom is like the water in the sea: dark, mysterious, impenetrable.

XXXX

December 4 Monday 

If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.

XXXX

December 5 Tuesday

It is very simple to be happy, but it is very difficult to be simple.

XXXX

December 6 Wednesday

Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream precedes the goal.

XXXX

December 7 Thursday

Death is not extinguishing the light; it is only putting out the lamp because the dawn has come.

XXXX

December 8 Friday

I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.

XXXX

December 9 Saturday

Faith is the bird that feels the light when the dawn is still dark.

XXXX

December 10 Sunday

We come nearest to the great when we are great in humility.

XXXX

December 11 Monday 

Let me not pray to be sheltered from dangers,

but to be fearless in facing them.

XXXX

December 12 Tuesday

Let me not beg for the stilling of my pain, but

for the heart to conquer it.

XXXX

December 13 Wednesday

“The small wisdom is like water in a glass:

clear, transparent, pure.

The great wisdom is like the water in the sea:

dark, mysterious, impenetrable.”

XXXX

December 14 Thursday

Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add colour to my sunset sky.

XXXX

December 15 Friday

“A mind all logic is like a knife all blade. It makes the hand bleed that uses it.”

XXXX

December 16 Saturday

“The butterfly counts not months but moments, and has time enough.”

XXXX

December 17 Sunday

“Don’t limit a child to your own learning, for she was born in another time.”

XXXX

December 18 Monday 

“By plucking her petals you do not gather the beauty of the flower.”

XXXX

December 19 Tuesday

“Let your life lightly dance on the edges of

Time like dew on the tip of a leaf.”

XXXX

December 20 Wednesday

“A dewdrop is a perfect integrity that has no filial memory of its parentage.”

XXXX

December 21 Thursday

“In our desire for eternal life we pray for an eternity of our habit and comfort, forgetting that immortality is in repeatedly transcending the definite forms of life in order to pursue the infinite truth of life.”

XXX

December 22 Friday

Emancipation from the bondage of the soil is no freedom for the tree.

XXXX .’

December 23 Saturday

The flower which is single need not envy the thorns that are numerous.

‘XXXX

December 24 Sunday

Life is given to us, we earn it by giving it.

XXX

 December 25 Monday 

We gain freedom when we have paid the full price.

XXXX

December 26 Tuesday

Age considers; youth ventures.

XXXXX

December 27 Wednesday

“Most people believe the mind to be a mirror, more or less accurately reflecting the world outside them, not realizing on the contrary that the mind is itself the principal element of creation.”

XXXX

December 28 Thursday

“Love is an endless mystery, because there is no reasonable cause that could explain it.”

XXXXX

December 29 Friday

“Patriotism cannot be our final spiritual shelter; my refuge is humanity. I will not buy glass for the price of diamonds, and I will never allow patriotism to triumph over humanity as long as I live. ”

XXXX

December 30 Saturday

“Those who are near me do not know that you are nearer to me than they are

Those who speak to me do not know that my heart is full with your unspoken words

Those who crowd in my path do not know that I am walking alone with you

Those who love me do not know that their love brings you to my heart”

XXXX

December 31 Sunday

“Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms toward perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action –

Into that heaven of freedom, my Father, let my country awake.”

BONUS QUOTES

“Music fills the infinite between two souls”

XXXX

“If I can’t make it through one door, I’ll go through another door- or i’ll make a door. Something terrific will come no matter how dark the present.”

XXXX

“The biggest changes in a women’s nature are brought by love; in man, by ambition”

XXXX

“I have spent many days stringing and unstringing my instrument

while the song I came to sing remains unsung.”

XXXX

“Let my thoughts come to you, when I am gone, like the afterglow of sunset at the margin of starry silence.

—SUBHAM—

Tags- Tagore Quotes, December 2023, Calendar

திருவண் வண்டூர் வைணவ கோவில் (Post No.12,778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,778

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 18

கோவில் எண் 15 –  திருவண் வண்டூர்  கோவில்

வைணவ ஆழ்வார்கள் பாடி, மங்களாசாசனம் செய்த 13 மலைநாட்டுத் திருப்பதிகள் கேரளத்தில் இருக்கின்றன. இவைகளில் சில இப்பொழுது கேரளத்தில் இல்லை; தமிழ் நாட்டு எல்லைக்குள் வந்துவிட்டன

கேரளத்தில் உள்ள மேலும் ஒரு வைணவ ஸ்தலத்தைத் தரிசிப்போம். இதன் பெயர் வண்டூர்.

நம்மாழ்வார் பாடியதால் குறைந்தது 1200 ஆண்டு பழமையானது

செங்கன்னூரைச் சுற்றியுள்ள 5 வைணவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்தான்

மூலவர் பெயர் — பாம்பணையப்பன் ; அருமையான தமிழ்ப் பெயர். இன்னும் ஒரு பெயர் – கமலநாதன் ; மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், பெருமாள் அருள் மழை பொழிகிறார் .

தாயார் பெயர் – கமலா வல்லி நாச்சியார்

தீர்த்தம்- பம்பா நதி, பாபநாச தீர்த்தம்

விமானம் – வேதாலய விமானம்

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயருக்கும் நாரத மகரிஷிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் உள்ள கோவில்கள்  பெரும்பாலும் பரசுராமர், தசரத புத்திரர்கள் நால்வர் அல்லது பஞ்ச பாண்டவர் ஐவருடன் தொடர்பு கொண்டிருக்கும். இந்த திருவண் வண்டூர் கோவில் விக்கிரகத்தை பாண்டவ சகோதரர் நகுலன் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் .

பெருமாளுக்கு நைவேத்தியம் – பால் பாயசம் (தமிழ் நாட்டில் பெரும்பாலும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் )

தசாவதாரக் காட்சிகளை கோவில் சித்திரங்களில் காணலாம்

காளிங்கன் என்னும் பாம்பின் தலையில் கண்ணன் ஆடுவதைப் பார்த்தவுடன் நம்மை அறியாமலே பாரதியாரின் ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பாடல்வரிகள் நினைவுக்கு வரும் :

.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும் 

பாதத்தினைப் புகழ்வோம்

மாம்பழ வாயினிலே -குழலிசை

வண்ணம் புகழ்ந்திடுவோம்(  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

ஸ்தல புராணம் சொல்லும் அதிசய விஷயம் : நாரதர் இங்கே நாரதீய புராணத்தை இயற்றினார். அதில் 25, 000 ஸ்லோகங்கள் இருக்கின்றன

கோவிலின் தோற்றம்

பாண்டவ சகோதரர்கள் ஐவரும் வனவாசம் செய்த 13 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்று திருத்தலங்களை தரிசித்தனர். அந்தக் காலங்களில் ஒவ்வொரு சகோதரரும் ஏதேனும் ஒரு கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்வது வழக்கம். இதனால் பாரத நாடு முழுவதும் அவர்க சம்பந்தப்பட்ட கோவில் இருக்கும். ராமர் இலங்கை வரை சென்ற பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய்  போல யாரும் நேஷனல் ஹைவே போடவில்லை; பாலங்களும் கிடையாது ; ராமர் போன்றோர் பெரும்பாலும் கடற்கையை ஒட்டி பயணம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு நகர் வரும்போதும் உள்நாட்டில் நுழைவார்கள்; பின்னர் 18 ஜாதி மக்களுடன் அகஸ்தியர் என்னும் சிவில் என்ஜினீயர் தென்னாட்டுக்கு வந்தார்; அவரை சிவ பெருமானே அனுப்பியதால் விந்திய மலையை கர்வ பங்கம் செய்து– அதாவது உயரத்தை மட்டம் தட்டி –ரோடு போட்டார்; இதனால் மகாபாரத கால பலராமனும்  தம்பி கிருஷ்ணுட்ன் சண்டை போட்டு விட்டு தென்னகம் வரை வந்தார் அதே பாதையில் பாண்டவர்களும் வந்தனர் . நகுலன் இந்த இடத்திலுள்ள கோவில் சேதம் அடைந்திருப்பதைப்  பார்த்து திருப்பணிகளை செய்தார் .

ஆனால் காலத்தின் கோலம், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் செய்த விக்கிரகங்கள் அங்கு இல்லை. பூமியைத் தோண்டுகையில் புதிய பெருமாள் விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். அவைகளைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர்.; பின்னர் புதிய மண் டபங்கள் கட்டப்பட்டன.

ஒரு முறை பிரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ; நாரதர் பிரம்மாவை சாபித்த்தார் ; இதனால் அவருக்கு படைப்புத் தொழில்  சிலபஸ் Syllabus மறந்து போனது. வண்டூருக்கு வந்து இறைவனை வேண்டவே மறந்து போன பாட திட்டம்/Syllabus நினைவுக்கு வரவே மீண்டும் தனது பணிகளை செவ்வனே செய்தார்.

வடக்கில் கங்கை நதி ஒடும் இடமெல்லாம் தலங்கள் இருப்பது போல கேரளத்தில் பம்பை நதி ஓடும் இடம் எல்லாம் தலங்கள் இருக்கும். இந்த ஊர்ப் பெருமாள் பம்பை நதியின் வட கரையில் இருக்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன், இங்குவந்த நம்மாழ்வார், பெருமாளைப் பார்த்து ஆனந்தித்து ,

தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் என்று துதித்தார்.

ஏனைய கோவில்களைப் போலவே இங்கும் கணபதி சாஸ்தா , தட்சிணாமூர்த்தி, நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் .

ஊர்ப்பெயர் விளக்கம்

திருவண் வண்டூர் பாசுரம் நாயகி- நாயகன் பாவத்தில் பாடிய பாசுரம். அதில் அன்னம், குயில் போன்ற பறவைகளைத் தூது விடுவதாக நாயகி பாடினாலும் வண்டு விடு தூதுதான் இந்த ஊரில் ஓடும் பம்பை நதி வருகிறது . ஆகையால் நம்மாழ்வார் காலத்திலேயே வண்டுகள் ரீங்காரம் மிக்க இடமாகத் திகழ்ந்தது போலும். இதோ நம்மாழ்வார் வரிகள் :–

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்*

தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்*

மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த*

ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே* 

திருவிழா

மாசி மாதம் பத்து நாட்களுக்கு விழா நடக்கும் .

குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்,  கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத் தொட்டில்கள் வாங்கி வைத்து  பிராத்தனை செய்கிறார்கள்.

–SUBHAM-

TAGS – பம்பா நதி, திருவண் வண்டூர், நம்மாழ்வார், நகுலன்