தமிழ் மொழியை வளர்ப்போம் 21102023 (Post No.12,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,616

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் மொழியை வளர்ப்போம் 21102023

This is Part 2; First part was posted yesterday

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “கே ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

கே ++ – பைத்தியக்காரன்

கே ++ – கேனோபநிடதம், பைத்தியம்

கே ++ – வள்ளிக்கொடி

கே+ – பரிகாசம் விகடன், சூரியன், பறவை, கணவனுடன் மனைவி செய்யும் விளையாட்டு

கே +++++ – வசந்த மண்டபம்

கே +++++++ –  – மிளகு

கே+++ – அசோகமரம்

கே+++ – கிணறு

கே+++++ – – திரிகால ஞானம்

கே+++ – மீனவன், , வலையன்

கே++ – பன்றி

கே++ – கீழ்ப்படியாமை

கே+++++ – – பகையும் நட்பும் இல்லாத அயலார்

கே++++ –  – குரக்கன்

கே + –  அகழி, கிணறு, குளம், துறவு, தடாகம்

கே +++ – சிவன்

கே ++++– அயோக்கியன்

கே+++ – வெள்ளை காக்கணம்  கொடி

கே ++, ,  – தாழை

கே +++ – அபிநவ தண்டி என்ற பட்டம் பெற்ற ஆந்திர கவி

Xxxxxxx

விடைகள்

கேனன் – பைத்தியக்காரன்

கேனம் – கேனோபநிடதம், பைத்தியம்

கேவல் – வள்ளிக்கொடி

கேலி – பரிகாசம் விகடன், சூரியன், பறவை, கணவனுடன் மனைவி செய்யும் விளையாட்டு

கேலிகிருகம் – வசந்த மண்டபம்

கேவல திரவியம் – மிளகு

கேலிகம் – அசோகமரம்

கேவடம் – கிணறு

கேவல ஞானம் – திரிகால ஞானம்

கேவேடன் – மீனவன், , வலையன்

கேழல் – பன்றி

கேளாமை – கீழ்ப்படியாமை

கேளல் கேளிர் – பகையும் நட்பும் இல்லாத அயலார்

கேழ் வரகு – குரக்கன்

கேணி –  அகழி, கிணறு, குளம், துறவு, தடாகம்

கேதாரன் – சிவன்

கேப்புமாறி – அயோக்கியன்

கேமாச்சி- வெள்ளை காக்கணம்  கொடி

கேதகி, , கேதகை – தாழை

கேதனன் – அபிநவ தண்டி என்ற பட்டம் பெற்ற ஆந்திர கவி

 –subham—

Tags- தமிழ் மொழி,  வளர்ப்போம் 

காஷ்மீர் ஃபைல்ஸ்! (Post No.12,615)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,615

Date uploaded in London –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

காஷ்மீர் ஃபைல்ஸ்!

ச.நாகராஜன்

காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது.

கொடுங்கோலன் சிக்கந்தர் செய்த மஹா பாதகச் செயலைப் பார்ப்போம்.

ஆண்டு கி.பி. 1394.

சுல்தான் சிக்கந்தர் அரியணை ஏறினான்.

இந்து மதம் என்றாலே அவனுக்கு வெறுப்பு; உடல் எல்லாம் எரியும்.

எல்லா இந்துக்களையும் ஒழிக்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.

சனாதன ஒழிப்பு – திராவிட மாடல் போல!

ஹிந்துக் கோவில்களை அழித்தொழிக்க தனி ஒரு பிரிவையே அவன் ஏற்படுத்தினான். ஒரு ஆண்டு முழுவதும் அது தீவிரமாகச் செயல்பட்டது.

பிரம்மாண்டமான ‘மார்த்தாண்ட’ கோவில்களை அழிக்க அவன் திட்டமிட்டான்.

ஆனால் அந்த அற்புதமான வலிமையான கோவில்களோ அவனை எள்ளி நகையாடியது தனது திறத்தால்.

சில கோவில்களில் கல்வெட்டாக ஒரு செய்தி பொறிக்கப்பட்டிருந்தது.

அதில் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிக்க முயல்வான் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அவனுக்கு மட்டும் இந்தக் கல்வெட்டுச் செய்தி தெரிந்திருந்தால் இந்தக் கோவிலை அவன் அழிக்காமல் விட்டிருப்பான். ஹிந்துக்கள் பொய் சொல்பவர்கள் என்று நிரூபிக்க எதையும் செய்யத் தயங்காதவன் அவன். ஆனால் கோவிலை அழித்தான். ஹிந்துக்களின் அறிவார்ந்த முன்னோரின் கணிப்பை நிஜமாக்கினான்.

கோவிலில் அவன் பெயர்த்தெடுத்த வலிமையான பெரிய பாறைகள் ஜும்மா மஜ்ஜித் கட்ட உதவின. பல கற்களை ஆங்காங்கே வைத்து நகரை அழகு படுத்தினான்.

கோவிலை இப்படி சிதிலப்படுத்திய அவன் ஹிந்துக்களின் மீது பார்வையைச் செலுத்தினான்.

அனைத்து ஹிந்துக்களுக்கும் அவன் மூன்றே மூன்று வழிகளைச் சொன்னான்.

1) உடனடியாக இஸ்லாமுக்கு மாறுவது

2) இல்லையேல் காஷ்மீரை விட்டு ஓடிப்போவது

3) அவன் கைகளால் கொல்லப்பட்டு சாவது

ஏராளமானோர் இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் கயவன் வாழும் ஊரில் இருப்பதே பாவம் என்று குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.

வேறு வழியே இல்லாதவர்கள் மதம் மாறினர்.

அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்களோ காஷ்மீரை விட்டுப் போகமாட்டோம்; வழிபாடுகளையும் நிறுத்த மாட்டோம் என்று உறுதியாக நின்றனர். அவர்கள் கொல்லப்பட்டனர்.

ஏழு மணங்கு பூணூல் குவியலை குவியலாகச் செய்து அவன் எரித்தானாம்.

அவ்வளவு பிராமணர்களை அவன் கொலை செய்திருக்கிறான்.

ஹிந்து சாஸ்திரங்களையும் அறநெறி கூறும் புத்தகங்களையும் திரட்டி டால் ஏரியில் அவன் எறிந்தான்.

இந்து மதத்தை ஒழித்து விட்டேன் என்று அகம்பாவத்துடன் அவன் சிரித்தான்.

ஆனால் அந்தப் பாவியால் சனாதனத்தை ஒழிக்க முடிந்ததா?

வரலாறு உண்மையைச் சொல்கிறது. அவன் தான் ஒழிந்து போனான்.

ஆனால் என்றுமுள்ள ஹிந்துமதம் – சனாதனம் – இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவி வருகிறது.

காஷ்மீர் ஃபைல்ஸின் ஒரு துளி இது!

ஃபைல்ஸின் பல பக்கங்களைப் புரட்டினால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் அறியலாம்!

***

New Tamil Lesson 5- இரண்டாம் வேற்றுமை/ Accusative Case (Post No.12,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,614

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us look at Second case today (him, her, them)

ஐ = ai Second Case suffix

You add second case suffix AI with the subject.

Xxx

கூப்பிடு= Verb= Call, Invite

Avanaik kooppitu = call him (Avan/he+ ai= Avanai) அவனைக் கூப்பிடு

Avalaik kooppitu= call her = அவளைக் கூப்பிடு (She/her Call)

Avarkalaik kooppitu= call them அவர்களைக் கூப்பிடு

Look at the order Verb comes at the end as usual

xxxx

Another rule is Doubling ; if it is a short sound word En, Kan, Un then the letter N is doubled

என் + ன் + ஐ = என்னை = me

உன் + ன் + ஐ = உ ன்னை = you

கண் +ண் + ஐ – கண்ணை = eye+ai

அவன் + ஐ = அவனை him

அவள் + ஐ = அவளை her

Xxxx

Another Rule is for some words or names you insert Y sound or V sound. Look at the examples given below:

ராமனை = Raaman+ai = raamanai (No change; raamaN+ai= raamanai

ஜூலியை = ஜூலி +ய் +ஐ = July+y+ai = jooliyai (Y sound is inserted)

பகவத் கீதையை =+ய் +ஐ = கீதையை = Geethaiyai

If you Tamilize Bhagavad Gita as Geethai, then Y is inserted.

xxxxx

The rule is  with I ending  or E ending, you insert Y Y

ரஞ்சனியை = ரஞ்சனி +ய் +ஐ

இ+ ஐ = யை

xxxx

AA  ending words you insert V V

லதாவைக்  கேள்

ஆ+ஐ = ஆ வை

லதாவை = லதா +வ் +ஐ

பகவத் கீதாவை = கீதா +வ் = கீதாவை = Geethaavai

If you use Sanskrit pronunciation, then V is inserted to make accusative

U ending words also சோமு +வ் +ஐ = சோமுவை = Somuvai

உ+ஐ = வை

RANJANI, SOMU are personal names.

Xxx

பகவத் கீதையை (ய்) தினமும் படியுங்கள் (Bhagavad Geethai Daily Read)

பகவத் கீதாவை (வ் )  தினமும் படியுங்கள் (Bhagavad Geethaa Daily Read)

தினமும்= dinamum= Everyday, Daily

xxxxx

Picture Line- ARASANUM SANYAASIYUM; King and Ascetic (Sanyaasi= Monk, Ascetic)

அது+ஐ = அத் +ஐ= அதை (That)

அதைச் சாப்பிடாதே = Athai saappitaathe =That don’t eat

அவனைக் கேட்காதே = Avanaik Ketkaathe=  Him Don’t ask

இதைச் சாப்பிடு == Ithaich Sappidu= This Eat

xxxx

உன்னைக் கூப்பிட்டார்களா ? Unnaik Kooppittarkalaa ? You did they call?

DID THEY CALL YOU?

என்னை அழைக்கவில்லை Ennai Azaikkavillai = Me they did not invite

THEY DID NOT INVITE ME

XXXX

அவனை  நம்பலாம் = Avanai Nambalaam= Him You may trust= You may trust hiM

ஜேம்ஸை நம்பாதே= Jamesai Nambaathe =  James  don’t trust

XXXX

கண்களை (த்) தொடாதே = கண்கள் +ஐ = Kangalaith thodaathe = Eyes don’t touch

கண்ணை (த்)  தொடாதே = கண் +ண் +ஐ = Kannaith thodaathe = Eye don’t touch

கண் = EYE; கண்கள்= EYES

தொடு = THODU = touch

தொடாதே = THODAATHE = Dont touch

XXXX

யாரைப் பார்க்க வந்தீர்கள் ? = Yaaraip paarkka vantheerkal? Whom to see did you come?

WHO DID YOU WANT/ COME TO SEE?

இதை எங்கே வாங்கினாய்? = Ithai enge Vaanginaay? This where you bought?

Where did you buy this?

XXXXX

ராமனையும் கிருஷ்ணனையும் , லதாவையும், சீதையையும் கல் யாணத்துக்கு அழைப்பேன்= Raamanaiyum, Kirushnananiyum, Lathaavaiyum, seethaiyaiyum Kalyaanaththukku Azaippem

Rama and Krishna and Latha and Seethai to the wedding I will invite

In Tamil we add and= Um with  every name in the sentence unlike English

TAMIL LESSON FROM LONDON-1

Tamil and Vedas

https://tamilandvedas.com › tamil-le…

22 Dec 2021 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TAMIL LESSON FROM LONDON-1.

To be continued………………………..

Tags- Accusative, Ai

QUIZ நவராத்திரி பத்து QUIZ (Post No.12,613)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,613

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial Number 78

1.நவராத்திரி முடிந்தவுடன் வரும் விஜய தசமி யை ஏன் கொண்டாடுகிறோம் விஜய தசமி அன்று இந்தியாவில் துவக்கப்பட்ட அமைப்பு எது?

Xxxx

2.எத்தனை வகை நவராத்திரிகளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்அவை யாவை ?

xxxx

3.இந்துக்கள் கல்வியைத் துவங்கும் நாள் எது?

xxxx

4. சீமா லங்கனம் என்றால் என்ன?

xxxx

5. தசரா என்றால் என்னஅது எங்கு நடைபெறுகிறது?

xxx

6.நவராத்திரியை மூன்று பகுதிகளாகப் பிரிப்பார்கள் ஏன்?

xxxx

7.பெரிய நவராத்திரி என்று துவங்கும் ?

xxxx

8.இதை குஜராத்திகள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

picture- Durga ib Holland Leiden Museum

9.வங்காளத்தில் மாநில அளவில் கொண்டாடப்படும் பண்டிகை எது?

xxxx

10.நவராத்திரியில் ஒன்பது தேவிகள் ஒவ்வொரு நாளிலும் வழிபடப்படுகிறார்கள். அவர்கள் யார் ?

Answers :

1.விஜயதசமியன்று மகிஷாசுரனை தேவி வதம் செய்தாள் . அன்றுதான் ராவணனை ராமபிரான் வதம் செய்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் சொல்லுவார்கள் ;ராம்லீலா கொண்டாடப்படுகிறது. அன்று டில்லி போன்ற நகரங்களில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளை எரிப்பார்கள்.

ஆர் எஸ் எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று துவங்கப்பட்டது

xxxx

2.சைத்ர  நவராத்திரி, ஆஷாட  நவராத்திரி, சாரதா  நவராத்திரி,

மாக  நவராத்திரி

xxxx

3.பாரம்பர்யத்தைப் பின்பற்றும் இந்துக்கள் விஜய தசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இந்துக்களுக்கு 40 வகை சடங்குகள் உண்டு. அதில் வித்தியாரம்ப மும்  ஒன்று. குழந்தைகளை நெல் முதலிய தானியங்கள் உள்ள தட்டில் ஹரி அல்லது சிவன் பெயரை கை விரல்களால் எழுத வைப்பார்கள் .

xxxx

4. ஸம்ஸ்க்ருதச் சொல் சீமா என்றால் தமிழில் எல்லை என்று பொருள். முன் காலத்தில் விஜய தசமியன்று மன்னர்கள் எல்லை தாண்டி படை எடுப்பார்கள் . இப்படி எல்லை தாண்டும் சடங்கினை இப்போதும் ராஜா வம்சத்தினர் அடையாள பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் லங்கனம் என்றால் தாண்டுதல்.

xxxx

5. நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர். தசரா விழா மைசூர் அரண்மனையில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அப்போது யானைகள் ஊர்வலமாக வரும். அதில் பெரிய யானையில் சாமுண்டீச்வரி தேவி உருவத்தை ஏற்றி வருவார்கள்

xxxxx

6.நவ ராத்ரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு ஒன்பது இரவுகள் என்று பொருள். மும்மூர்த்திகளின் மனை வியரான துர்கா, லெட்சுமி, சரஸ்வதியை வழிபடும் வகையில் மூன்று தேவியருக்கும் 3 நாட்கள் வீதம் ஒதுக்கப்படுகிறது. கோவில்களிலும்,வீடுகளிலும் இவ்வாறு தேவியை வழிபடுகிறார்கள்.

xxxx

7. தீபாவளிக்கு முன்னர் வரும்  நவராத்திரி சாரதா  நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் நவராத்திரி  துவங்கும் .

xxxx

8.குஜராத்தியர் ஒன்பது நாள் இரவிலும் ஒரு பொது இடத்திலோ கோவிலிலோ சக்தி தேவியின் உருவம் அல்லது ஒரு விளக்கினைச் சுற்றி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவார்கள் எல்லாம் இறைவனின் பாடல்களாக இருக்கும். இதை கர்பா என்பார்கள். ஆண்கள் ஆடும் ஆட்டம் டாண்டியா எனப்படும். கோலாட்டமும், கும்மியும்  ஆடல்களில் இருக்கும் ; எல்லோரும் இதற்காக பாரம்பர்ய உடைகளை அணிந்து கொண்டு செல்லுவார்கள் .

xxxx

9.நவராத்திரி மற்றும் விஜயதசமி ஆகிய 10 நாள் உற்சவமாக மேற்கு வங்காளத்திலும் அருகாமை  மாநிலங்களிலும் வீதி தோறும் கொண்டாடப்படும் பண்டிகை இது. துர்க்கை வழிபாட்டோடு புத்தாடை அணிதல், பரிசுகளை பரிமாறிக்கொள்ளல் ஆகியவையும் விழாக்காலத்தில் நடைபெறும். மஹிஷாசுரனை , துர்கா தேவி வதம் செய்ததை , அதாவது தீமையை ஒழித்ததை மக்கள் கொண்டாடுவதே இந்தப் பண்டிகையின் கருத்து துர்கா பூஜா உலகம் முழுதும் வங்காளிளால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Xxxx

10. ·  முதல் நாள்- சைல புத்ரி, இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி, 3 ஆம் நாள் சந்திரகாந்தா , 4ம் நாள் -கூஷ்மாண்ட , 5ம் நாள்- ஸ்கந்த மாதா, 6ம் நாள் – காத்யாயனி, 7ம் நாள் –  காள ராத்திரி, 8ம் நாள் மஹா கெளரி, 9. சித்திதாத்ரி (பத்தாம் நாள் மஹிஷாசுரமர்தனி

— subham—

tags- நவராத்திரி, Quiz, கர்பா, டாண்டியா, தசரா , ராம் லீலா, துர்கா பூஜா,

தமிழ் மொழியை வளர்ப்போம் 20102023 (Post No.12,612)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,612

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “வை எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள்

வை+ + = விடியல், வைகுமிடம், தங்குகுதல்,  நாள், கழிதல்

வை+ +  = விடியற்காலம்

வை + + = தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,

வை+ + + + = திருமால் இருப்பிடம்

வை + = மதுரையில் ஓடும் நதி

வை + + + = மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு

வை + + + = வணிகம் செய்யும் ஜாதி

வை + + + +  = நவ மணிகளில் ஒன்று

வை + + + = விஷ்ணுவை வணங்கும் பிரிவு

வை+ + + = புராண நதி

வை + + + + = தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்

வை + + = சீதை , விதேக  நாட்டுப் பெண்

வை + + + + = கள்ளக்காதலி

வை+ + + + = கருடன்

வை + + + + + +  = சிவபிரானின் டாக்டர் கோலம்

வை + + + + -=குதிரை

வை + + + = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது

வை + + + = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்

xxxxx

விடைகள்

வைகல்= விடியல், வைகுமிடம், தங்குகுதல்,  நாள், கழிதல்

வைகறை – விடியற்காலம்

வைகாசி – தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,

வைகுண்டம் – திருமால் இருப்பிடம்

வைகை – மதுரையில் ஓடும் நதி

வைக்கோல் – மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு

வைசியர் – வணிகம் செய்யும் ஜாதி

வைடூரியம் – நவ மணிகளில் ஒன்று

வைணவம் – விஷ்ணுவை வணங்கும் பிரிவு

வைதரணி – புராண நதி

வைதர்ப்பி – தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்

வைதேகி = சீதை , விதேக  நாட்டுப் பெண்

வைப்பாட்டி = கள்ளக்காதலி

வைநதேயன் = கருடன்

வைத்தியநாதன் = சிவபிரானின் டாக்டர் கோலம்

வைந்தவம் -=குதிரை

வையகம் = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது

வைபவம் = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்

—subham—

Tags- தமிழ் மொழி,  வளர்ப்போம் , வை, சொற்கள்

சித்திர வேலாயுத சுவாமி கோவில்: இலங்கைத் தீவின் 108 …..Part 33 (Post.12,611)

Picture of Kumarapuram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,611

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 33

66.சித்திர வேலாயுத சுவாமி கோவில். குமாரபுரம், முல்லைத் தீவு

முல்லைத்த தீவில் குமாரபுரம் என்ற கிராமத்தில் .சித்திர வேலாயுத சுவாமி கோவில் இருக்கிறது . வெட்டா பழங்குடி மக்கள் பகுதியில் இந்தக் கோவில் துவங்கியது; பழங்குடி மக்களும் வேல் மற்றும் வேலவனை வணங்கி வருகின்றனர் . அவர்கள் கம்புகளையும் இலை தழைகளையும் கொண்டு சிறு குடில்களில் இறைவனை வணங்குவர். காலப்போக்கில் அது பெரிய கோவில் ஆகிவிடும். வன்னி ஆட்சிக்காலத்தில் இருந்த மன்னர்கள், இத்தகைய இடங்களில் கோவில் கட்டினார்கள்.

இக்கோவில் கதிர்காமம் போன்ற பெருமையுடையதென தட்சிண கயிலாய மான்மியம் கூறுகின்றது. அந்நிய மதத்தினர் இந்துக்கோவில்களைத்  தகர்த்து வந்த காலத்தில் இங்குள்ள விக்கிரகமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது . அப்போது குமாரபுரம் ஜன நடமாட்டமின்றி காடாக மாறியது . பின்னர் 1915ல் வழக்கறிஞர் துரையப்பா , பரமசாமிக் குருக்கள் என்பவரிடம்  கோவிலை  ஒப்படைத்து திறம்பட கோவிலை நடத்திவைத்தார். 1955   ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு நடைபெறும் கந்தர் சஷ்டி விழாவைக் காண்பதற்கு  பெருந்திரளான பக்தர்கள் வருகின்றனர் .

Xxxx

67.வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்

மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது.  திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத  யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.

1889 ஆம் ஆண்டில் அகிலேச பிள்ளை எழுதி வெளியிட்ட கோணேச வைபவம் நூலில் இக்கோவில் பற்றி எழுதியுள்ளார். கும்பாபிஷேக மலரில் அருள் சுரக்கும் வெருகலம்பதி  என்ற கட்டுரையில் எஸ் . கணபதி பிள்ளையும் நிறைய தகவல் தந்துள்ளார்.

முருகப்பெருமான் சூரபத்மனுடன் நடத்திய போரில் முருகனின் அம்பு ஒன்று இந்த ஊரில் விழவே , அதை வெட்டர்கள் எடுத்து வணங்கி வந்தனர். குளக்கோடன் மன்னர் ஆட்சிக் காலத்தில் அது கோவிலாக உருப்பெற்றது.

இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.

  . அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும்  கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..

கண்டி மன்னன்   கோவிலுக்காக நிறைய தானம் செய்தான். செட்டியாரும் கோவிலைக் கட்டினார். சீரும் சிறப்புடனும் வழிபாடு நடந்த காலத்தில் போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர். பின்னர், பக்தர்கள் சேர்ந்து கோவிலை எழுப்பினர். ஆண்டு தோறும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வருடாந்திர விழா 18 நாட்களுக்கு நடைபெறும். கதிர்காம பாத  யாத்திரை செல்லுவோர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல இந்த விழாவையும் தரிசித்து விட்டுச் செல்லுவார்கள் .

இந்தக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டு பற்றி ஹுயூஜ்  நெவில் Hugh Neville , Taprobane, 1887 எழுதியுள்ளார் . சுப்பிரமணியனுக்கு நமஸ்காரம் சொல்லிக் கல்வெட்டு துவங்குகிறது கோவிலின் தெற்குச் சுவரை கயிலாய வன்னியரும் மேற்குச் சுவரை சிம்மாபிள்ளையும் வடக்குச் சுவரை மட்டக்களப்புஊர், நீர்க்கொழும்பு  கரையாரும் , கிழக்குச் சுவரை செட்டியார்களும் கட்டியதாக தெரிவிக்கிறது.

கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இங்கு மகா மண்டபத்தில் மகாவல்லி, கஜவல்லி சமேதராக ஆறுமுகப் பெருமான், உமையம்மை சமேத சந்திரசேகரர் சிலைகள் தெற்கு வாசல் நோக்கி உள்ளன. வசந்த மண்டபம் வேறாக உள்ளது.

பரிவார மூர்த்திகளான விநாயகருக்கும், பைரவருக்கும் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தென்புறத்தில் கதிர்காம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறையான மூலஸ்தானத்தில் முருகன் திருவுருவமோ, வேலோ பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அட்சர மந்திரம் எழுதி வைக்கப்பட்ட பேழையே கருவறையில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

இங்கு கதிர்காமத்தில் பூஜை நிகழ்வது போல் திரைமறைவிலேயே பூசை நடைபெறுகிறது. வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு சற்றுத் தூரத்தில் காவடிப் பிள்ளையார் கோயில் உள்ளது. சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு கிழக்கு திசையில் வீரபத்திரர் கோயில், தாமரைக்குளம், சூரன் கோட்டை என்பன அமைந்துள்ளன.

—subham—

TAGS–சித்திர வேலாயுத சுவாமி,  கோவில், வெருகல், குமாரபுரம்  ஆலயம்

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் (Post No.12,610)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,610

Date uploaded in London –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் தேவி!

ச.நாகராஜன்

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தான்!

ச்ருதம் த்ருஷ்டம் ஸ்ப்ருஷ்டம் ஸ்மிருதமபி ந்ருணான் ஹ்ராதஜனனம்,

ந ரத்னம் ஸ்த்ரீப்யோன்யத க்வசிதபி க்ருதம் லோகபதிநா |

ததர்தம் தர்மார்தௌ விபவவரசௌக்யானி ச ததோ,

க்ருஹே லக்ஷ்ம்யோ மான்யா: சததமபலா மானவிபவை: ||

அந்த அழகியைக் கேட்டாலும், பார்த்தாலும், தொட்டாலும், நினைவுபடுத்திக் கொண்டாலும் இன்பம் தருவதால் அது போன்ற ஒரு ரத்தினம் வேறெங்குமில்லை.

இல்லங்களில் செல்வம் தரும் லக்ஷ்மிக்கு ஒரு கௌரவமான இடம் உண்டு.

இப்படித்தான் அவன் உலகத்திற்கே தலைவனான இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள்.

அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி அடைய செல்வமும் புண்யமும் அடைய அவள் உதவுகிறாள்.

ஆக இப்படி ஒரு தேவியைப் போல அண்டத்தில் வேறொரு தெய்வம் உண்டா என்ன?

கடன் வாங்கியும் நெய் சாப்பிடு!

யாவத்ஜீவேத் சுகம் ஜீவேத்ருணம் க்ருத்வா த்ருதம் பிபேத் |

பஸ்மீபூதஸ்ய தேஹஸ்ய புனராகமனம் க்ருத: ||

எவ்வளவு நாள் வாழ்கிறோமோ அவ்வளவு நாள் சுகமாக வாழ வேண்டும். கடன் வாங்கியும் கூட நெய் சாப்பிட வேண்டும். உடல் சாம்பலாக ஆகி விட்டால் அது எப்படி தனது முந்தைய நிலைக்கு வர முடியும்?

அனுபவி ராஜா அனுபவி! இருக்கும் வரை வாழ்ந்து விடு, இரண்டினில் ஒன்று பார்த்து விடு! – இது வாழும் வகைக்கான ஒரு உபதேசம்!

பரோபகாரி உலகில் அரிதாகவே காணப்படுவர்!

பரோபகாரைகதிய: ஸ்வசுகாய கதஸ்ப்ருஹா: |

ஜகத்ஹிதாய ஜாயந்தே விரலா: சாதவோ புவி ||

மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட நல்லவர்கள், தங்களது மகிழ்ச்சி பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகவே உலகில் காணப்படுவர்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகலே அறிவு!

பஞ்சபி: சஹ கந்தவ்யம் ஸ்தாதவ்யம் பஞ்சபி: சஹ |

பஞ்சபி: சஹ வக்தவ்யம் ந துக்கம் பஞ்சபி: சஹ ||

ஐந்து பேரோடு சேர்ந்து ஒருவன் செல்ல வேண்டும். அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். அவர்களுடன் கூடவே பேச வேண்டும். ஆகவே அவன் துன்பப்பட மாட்டான்.

திருவள்ளுவர் கூற்றை இங்கு ஒப்பு நோக்கலாம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140

நான்கு உபாயங்கள்!

சாம தான பேத தண்டமே எதிரியை வெற்றி கொள்வதற்கான நான்கு உபாயங்கள்!

யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை ஆகிய இந்த நான்கு பிரிவுகளே படையின் அங்கங்கள்!

இதைத் தெரிவிக்கும் சுபாஷிதம் இது:

சாமதானே தண்டபேதாவித்யுபாயசதுஷ்டயம் |

ஹஸ்த்யஸ்வரதபாதாதம் சேனாங்கம் ஸ்யாச்சதுஷ்டயம் ||

பசுவைப் பின்பற்றும் கன்று போல கர்மா தொடரும்!

பசு மந்தையில் தன் தாயைக் கண்டு தொடரும் கன்று போல நல்ல கர்மங்களோ அல்லது திய கர்மங்களோ,  செய்த ஒருவனை (தவறாது) பின் தொடரும்.

கர்மா தியரி என்பதை உலகமெங்கும் உள்ள மக்கள் இப்போது அங்கீகரிக்கத் தொடங்கி விட்டனர்.

அதை விளக்கும் ஸ்லோகம் இது:

யதா தேனு சஹஸ்ரேஷு வத்ஸோ விந்ததி  மாதரம் |

ததா சுபாசுபம் கர்ம கர்த்தாரமனுகச்சதி ||

***

Find out Ten Navaratri Devis (Goddesses)—Post No.12,609

Picture- Garba Dance
WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,609

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Hindu festival Navaratri is very popular among women. In South India women arrange a Doll Show called Golu and do Prasad/ spicy food everyday with pulses. They exchange gifts by mutual visits to different houses. Temples arrange big decorations and Sabhas arrange big musical concerts. In Gujarat and places where Gujaratis live Garba is organised. Wherever Bengalis live they celebrate the Durga Puja on a grand scale. In Mysore Dasarah attracts several thousand people. In North India Ram Lila is celebrated. Effigies of demons are burnt in bonfire. In short, it is celebrated all over India. No Sakti temple miss it. Tenth day is called Vijaya Dasami (Victorious Tenth Day) and one day before that Sarasvati Puja/ Ayudha Puja is celebrated

Here is a puzzle square with Goddess’ 9+1 forms. Find out their names in the puzzle. All names are bent, but not split except Siddhidhatri. Each name begins in the numbered square.

Picture of Goddess Sarasvati

M10AHISHASUR
S 1B2RAHMACHA
HK6ATYAYAAM
AC 3HANDRYRA
IK7ALARAAIR
LS9IDDAGNND
AHIIRTAIIH
PDHAATN AI
UK4USHMANDN
TRIM8AHA  I
GOWRITRI A
S5KANDAMATH

Answer

Devis Form during Ten Days:

·  Day 1 – Shailaputri

·  Day 2 – Brahamacharini

·  Day 3 – Chandragathan

·  Day 4 – Kushmanda

·  Day 5 – Skandamata

·  Day 6 – Katyanani

·  Day 7 – Kaalaratri

·  Day 8 – Mahagowri 

·  Day 9 – Siddhidatri

On the tenth day, she assumed the form of 10.Mahishasuramardhini and emerged victorious, making the defeat of evil.

Picture: Ten forms of Goddesses during Navaratri Festival.

–subham—

Tags –Navaratri Puzzle

New Tamil Lessons-4 (Seventh Case) Locative (Post.12,608)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,608

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 ஏழாம் வேற்றுமை உருபு is called Locative in English. It is about Location; in, at, on the person

xxxxx

Case Suffixes

இல் =il

இடத்தில்= idaththil , இடம் = idam

xxxx

ராமனிடம் – raamanidam (with Rama or on Rama)

ராமனிடத்தில் – Raamanidaththil (On Rama)

xxxx

மேரியிடம் ஆங்கில புஸ்தகம் இருக்கிறது

Maryidam AAngila Pusthakam Irukkrathu= Mary has English book ; English book is with Mary

((Pusthakam is a Sanskrt word; Tamilized from is Puththakam; pure Tamil word is Nool))

Xxxxx

லதாவிதம் சம்ஸ்க்ருத புஸ்தகம் கிடைக்கும் = Lathaavidam Samskrutha Pusthakam Kidaikkum.

Sanskrit book is available with Lathaa.

(Note the word order; SOV= Subject Object Verb)

Xxxx

When it comes to places, we use ‘il’. Not ‘Idam’

திருநெல்வேலியில் பெட்டி வெல்லம் கிடைக்கும் = Thirunelveliyil Petti Vellam Kidaikkum

At Thirunelveli Boxed Jaggery available= You can get Boxed Jaggery (pieces) in Thirunelveli.

Xxxx

டில்லியில் பூசணிக்காய் அல்வா / Petha halwa पेठे का हलवा ஹல்வா கிடைக்கும் = Dilliyil Puusanikkay Alvaa/Halwaa Kidaikkum= In Delhi

Petha Halwa/Poosanikkaay Alwaa, Available (you can get)

KIDAIKKUM is an Impersonal verb . You can use it with all Subjects. No problem with PGN (person, gender, number)

xxxx

திருப்பதியில் எனக்கு 4 / நான்கு லட்டு வாங்குங்கள் – Thiruppathiyil Enakku Naangu Laddu Vaangungal = At thiruupathi (Balaji Temple) .To me. Four Laddu. Buy

Buy= வாங்கு

Buy = வாங்குங்கள் (Plural or Singular respectful) = Please buy me four Laddus at Tirupati

வாங்குங்”கள்” gives the sense of PLEASE as well.

Laddu – Indian Sweet

xxxx

அவனிடம் சாக்லேட் பெட்டியைக் கொடுக்காதே = Avanidam Chocolate  Pettiyai Kodukkaathe= To him or At him Chocolate Box Don’t give= Don’t give him the Chocolate box

அவனிடம்= Avanidam = Avan/he+idam

Don’t Give = Negative Imperative

xxxx

என்னிடம் கொடு .= Ennidam Kodu= Give me

I already told all case suffixes go with oblique form of I, You என் , உன்

xxxx

யாரிடத்தில் 100 ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது ?= Yaaridaththil Nooru/100 Rupaaykku Sillarai irukkirath? = on whose person , for 100 Rupees, Change, is? = Who has got change for hundred Rupees?

To be continued……………………

Tags- New Lessons 4, Locative case, Tamil,

துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் ? (Post No.12,607)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,607

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் ஆண்டுதோறும் 4 நவராத்திரிகளைக் கொண்டாடுகிறார்கள் .

அவை

Chaitra Navaratri, சைத்ர  நவராத்திரி

Aashaadha Navaratri, ஆஷாட  நவராத்திரி

Sharadha Navaratri; சாரதா  நவராத்திரி

Magha Navaratri. மாக  நவராத்திரி

இந்த நாலில்,  வசந்த காலத்தில் வரும்  நவராத்திரியும் மழைக்காலத்தில் வரும் சாரதா  நவராத்திரியும் பிரபலமானவை.. தீபாவளிக்கு முன்னர் வரும்  நவராத்திரி சாரதா  நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் துவங்கும் . நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர்.

இந்தப்  பெரிய  நவராத்திரி, வங்காள தேசத்தில் தேசீய விழாவாகத் தெருவுக்குத் தெரு கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் பெரிய மண்டபம் அல்லது ஹால் அல்லது தற்காலிக கொட்டகைகளில்  துர்கா தேவியை படமாகவோ, மண்ணினால் செய்த பொம்மையாகவோ வைத்து வழிபடுவர். துர்கா தேவிக்கு அல்லது 10 கரங்கள் இருக்கும்.

இவ்வாறு 10 கரங்கள் இருக்கும் உருவங்களில் பத்து கைகளிலும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஆயுதம் இருக்கும் அதன்பயனை அறிந்தால் துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் என்பது விளங்கும்..

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பத்து கரங்களில் அவள் வைத்துள்ள பொருட்கள் , பக்தர்களளுக்குப் பாதுகாப்பு வழங்கும்.

இதோ பத்து கரம்/ கைகள் உள்ள துர்கையைத் தரிசிப்போம்

1.ஒரு கையில் திரி சூலம் இருக்கும் சிவ பெருமானே  இதை துர்க்கைக்கு அளித்தார்.. மூன்று முனைகள் உள்ள இந்த ஆயுதம் சத்வ, ராஜச, தாமச குணங்களைக் குறிக்கும் .

2.வாள் – இந்த வாளை துர்க்கைக்கு  கணபதி அளித்தார்.. இது ஞானத்தைக் குறிக்கும் ; வாளின் கூர்மை போல புத்தி கூர்மை இருக்கும்.. மின்னும் அந்தவாள் ஞானப் பிரகாசத்தைக் குறிக்கிறது. பாரதியார் போனற கவிஞர்கள் ஞான வாள் பற்றிப் பாடி இருப்பதை அறிவோம்

பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)

ஞான வாளைத்  திருமூலரும் திருமந்திரத்தில் பாடுகிறார்:

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)

எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை..

3.ஈட்டி – அக்கினி தேவன் கொடுத்த இந்த ஆயுதம் துர்க்கையின் இன்னும் ஒரு கையில் இருக்கிறது இது தீவிர சக்தியை, மஹா சக்தியைக் காட்டும் ஆயுதம். அதுமட்டுமல்ல; எது நல்லது, எது கெட்டது என்பதைப் பிரித்துப்பார்க்கும் விவேகத்தைக் குறிக்கும் .

4.இந்திரன்  கொடுத்த வஜ்ராயுதம் துர்கா தேவியின் இன்னும் ஒரு கரத்தை அலங்கரிக்கிறது பலத்தின் , மன உறுதியின் அடையாளம் இது. அன்னையை வணங்குவோருக்கு மனோதிடத்தை, மன உறுதியை, எதையும் தாங்கும் இதயத்தை அன்னை அருளுவாள் என்பது இதன் தாத்பர்யம்.

5.வாயுதேவனும், சூரிய தேவனும் அருளிய வில்லும் அம்பும் ஒரு கரத்தில் இருப்பதைக் காணலாம். தீமையை வீழ்த்தும் சக்தியை இது அளிக்கிறது

6. துர்கா தேவியின் திருக்கரத்தில் இருக்கும் கோடாரி , விஸ்வகர்மாவால் கொடுக்கப்பட்டது புதிய விஷயங்களை, புதுமைகளைப் படைக்கும் ஆற்றலை துர்கா தேவி அளிப்பாள் என்பதை இது காட்டுகிறது .விஸ்வ கர்மாவின் வேலையே அதுதான்

7.சுதர்ஸன சக்கரம் – கிருஷ்ணன் கொடுத்த சுதர்ஸன சக்கரத்தின் சக்தி மஹத்தானது ; தீயோரை வீழ்த்திவிட்டு பூமராங் போலத் திரும்பி வந்து விடும். தென்னகத்தில் சக்கரத்தாழ்வார் என்னும் சுதர்ஸன சக்கரம் இல்லாத பெருமாள் கோவில் கிடையாது

8.கதாயுதம் – பீமன் கையில் கதாயுதம்  இருக்கிறது. கிருஷ்ணன் கையில் கதாயுதம் உண்டு. அதனால் அவர்கள் வீழ்த்திய தீயோரின் எண்ணிக்கையை பாகவதம் , மஹா பாரதத்தில் படிக்கிறோம்.சத்தியத்தை நிலைநாட்டும் சக்தி அது

9.கத்தி அல்லது குத்து வாள் ஒரு கையில் ஏந்தியிருப்பாள் துர்காதேவி. இதுவும் தீயோரை அழிக்கும்.

10.சங்கு : துர்க்கையின் கையில் இருக்கும் சங்கு சுபச் செய்திகள் வருவதையும், தீமைகள் விலகுவதையும் நமக்கு நினைவுபடுத்தும். நம்பிக்கையை வளர்க்கும்; சங்கின் பயன் பற்றிப் பட்டினத்தாரும் பாடுகிறார்

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை

நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்

ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்.– பட்டினத்தார் பாடல்

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள்.

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்; இன்றும் வங்காளிகள் கல்யாணத்தில் இதைக் காணலாம் . ஆண்டாளும் கூட திருமணக் காட்சியை மத்தளம் கொட்டவரி சங்கம் நின்று ஊத,– என்று  நாச்சியார் திருமொழியில் பாடுவதைப் படிக்கிறோம்.மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆக சங்கு என்பது நமக்கு நல்ல, தீய விஷயங்களைச் சொல்லும்.

பத்துக் கரங்களை உடைய துர்கா தேவி நமக்கு பத்து விதங்களில் அருள் புரிவாளாகுக.

–subham–

Tags- துர்கா, பத்து கரங்கள், 4 நவராத்திரி, பத்து ஆயுதங்கள்