கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 11 (Post No.12,317)


Male Madheswara Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,317

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART ELEVEN

55..Male Mahadeshwara Betta (Kannada: ಮಲೆ ಮಹದೇಶ್ವರ (also ಮಾದೇಶ್ವರ)) (Tamil: மாதேசுவரன் மலை )

புலி மீது வந்த சித்தர் கோவில்

சுமார் 3200 அடி உயரம் உடைய மாதேஸ்வரன் மலைக்கு லட்சக்கணக்கான பகதர்கள் வருகின்றனர் மைசூரு நகரிலிருந்து 150 கி.மீ . தொலைவில் உள்ளது . மாதேஸ்வரர் என்ற சித்தர் 600 ஆண்டுகளுக்கு முன்னர்  சித்த மருத்துவத்தைப் பிரபலப்படுத்தினார் ; அவருக்கும் இங்குள்ள கோவிலுக்கும் தமிழ் நாடு உள்பட 3 மாநிலங்களில் பக்கதர்களும் சொத்துக்களும் இருக்கின்றன .மாதேஸ்வரன் , சிவபெருமானின் அவதாரம் என்று பக்தர்கள் கருதுகின்றனர் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் ஆக அவர் இன்னும் தவம் செய்வதாகவும் நம்புகின்றனர். அவர் புலியின் மீது சவாரி செய்து மக்கள் துயர் தீர்த்த அற்புதங்கள் பற்றி நிறைய சம்பவங்கள் உள்ளன. அடர்ந்த காடுகள் சுற்றிலும் உள்ளன. இயற்கை அன்பர்களும் , மலை  ஏறும் குழுக்களும் இங்கே படை எடுப்பது வாடிக்கை.

XXXX

கடவுளின் காலணிகள் உள்ள கோவில்

56.Biligiri Ranganath swamy Temple பிலி கிரி ரங்கநாத சுவாமி கோவில்

சுமார் 5000 அடி உயர குன்றின் மீது அமைந்த பாலாஜி கோவில் இது . சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சனேயர் சிலைகளும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. மிகப் பழைய சம்பக மரங்களும் இருக்கின்றன ரங்க நாதர் , ரங்க நாயகி மூர்த்திகள் வழிபடப்படுகின்றன. பெரிய காலணிகள்/ பாத குறடுகள் உள்ளன. அவைகளை அணிந்து ரங்க நாதர் காடுக ளில் உலா வருவார் என்பதால் அவற்றை புதிதாக செய்து தரும் சம்பிரதாயமும் இங்கே இருக்கிறது . இது ஒரு புதுமை ஆகும் ராம, லட்சுமணர் வழிபட்ட இடம் என்பது ஐதீகம்.

இங்கு கங்காதரேச்வரருக்கு தனி சந்நிதி இருக்கிறது

மைசூரிலிருந்து 100 கி.மீ தொலைவு

xxxxx

மைசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் கோமடகிரி இருக்கிறது ; குன்றின் மீது சமண மத பக்தர்கள் கோமடேஸ்வர சிலையை நிறுவி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மஸ்தகாபிஷேகம் நட த்துகின்றனர் . இது சிரவண பெலகோலா மாதிரியில் இருக்கும்.

xxxxxx

57.மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில், அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் Avani Ramalingeshwara temple

சிவபெருமானுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த தற்காலக் கோவில் மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில். குடகு பகுதியில் காவிரி நதியை ஒட்டி பல கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் மடிக்கரே யிலிருந்து 15 கி.மீ . தொலைவில் இருக்கும் அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் சிவன் கோவில் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து 32 கிமீ.

ராமர் வழிபட்ட இடம் என்பது நம்பிக்கை. இங்குள்ள கோவில்களில் ராம, லட்சுமண, பரத , சத்ருக்குனருக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . அத்தோடு சீதை, வாலி, சிவன் ஆகிய மூர்த்திகளும் உண்டு .

லட்சமண லிங்கேஸ்வரர் கோவிலில் பெரிய லிங்கம் உள்ளது

நுளம்ப , சோழ வம்ச மன்னர்களின் கைவண்ணத்தைக் காணலாம். நிறைய பார்க்கவேண்டிய சிற்பங்கள் இருக்கின்றன . அருகிலேயே லவ குச மலைகளும் இருக்கின்றன . சீதாதேவியைக் காண 600 படிகள் ஏறி குன்றின் உச்சிக்குப் போகவேண்டும் . ராமாயணமே இங்குதான் நடந்தது என்ற அளவுக்கு கதைகள் பின்னப்பட்டுள்ளன!!!

Xxxx

திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்

58.பாக மண்டலம் சிவன் கோவில் Bhagamandala, Coorg/Kodagu (Kudaku in Tamil)

திப்பு சுல்தான் எரித்து முஸ்லீம் பெயர் சூட்டிய இந்துக்களின் புனிதத்தலம்

திரிவேணி சங்கம் என்றால் மூன்று நதிகள் கலக்கும் புனித கூடல் ஆகும். உத்தர பிரதேசத்தில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம்  உலகப் பிரசித்தி பெற்ற இடம். கும்பமேளா என்னும் உலகின் மி கப்பெரிய ண்டிகையைப் பேசாத என்சைக்ளோபீடியா கிடையா து. அது போல கனிகா , ஸுஜோதி என்னும் இரண்டு நதிகளும் காவிரியில் வந்து சேரும் இடம் பாக மண்டலம். காவிரியின் தோற்றுவாய்க்கு அருகில் உள்ளது  , மைசூரு அல்லது மங்களூரிலிருந்து பல மணி நேரம் காரில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யவேண்டும்.. மடிக்கரே யிலிருந்து 33 கிமீ..

பிரயாகையில் எப்படி சரஸ்வதி நதியைக் காணமுடியதோ, அதேபோல இங்கும் மூன்றாவது நதியான சுஜோதியைக் கண்ணால் காண முடியாது; பூமிக்கு அடியில் ஓடிவந்து கலப்பதாக ஐதிகம்

சிவபெருமான், சுப்ரமண்யர், கணபதி மூர்த்திகள் உள்ள கோவில் இருக்கிறது. முக்கூடலில் குளித்து முன்னோர்களுக்கு கிரியைகள் செய்து அதற்கும் மேலேயுள்ள தலைக் காவிரிக்குச் செல்லுவது சம்பிரதாயம். .

துலா மாத ஸ்னானம் செய்வது மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது..

1785-1790 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தை திப்பு சுல்தான் ஆக்ரமித்தான். கோவிலை எரித்து அழித்தான் .

அப் ஸாலா பாத் Afzalabad என்று பெயரையும் மாற்றினான் . தொ ட்ட வீர ராஜேந்திர என்ற இந்து வீரன் இந்த இடத்தை மீட்டு பாக மண்டலம் ஆக்கினான் ; குடகு ராஜ்யத்துடன் இணைத்தான்.

பாடி , ஐயங்கேரி என்னும் அருகாமை இடங்களில் கிராம மக்கள் வழிபடும் தெய்வங்களும் இருக்கின்றன.

Xxxxx

To be continued…………………………………………………

Tags- புலி, சித்தர் , பாகமண்டலம், திப்புசுல்தான், ராமலிங்கேஸ்வரர் கோவில், காலணிகள்,

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!-2 (Post No.12,316)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,316

Date uploaded in London –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

சந்திர வளம்!

சந்திரனில் குடியிருப்பு அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பிரம்மாண்டமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

முதலில் விண்வெளியில் பறப்பதற்கே பெரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜீரோ கிராவிடி எனப்படும் எடையற்ற நிலையில் வாழ்வது என்பதே ஒரு அரிய காரியம். சாப்பிடுவது, உறங்குவது, ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தொடுவது என்பது கூட எளிதில் முடியாத காரியம். மனித குல சந்ததி பெருக்கத்தை எப்படிச் செய்ய முடியும்? விண்ணில் கர்ப்பமுற்று குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகள் காண முயன்று வருகின்றனர்.

சந்திரனின் மீது சீனா காட்டும் தீவிர அக்கறையைப் பற்றி ஆராயப் புகுந்த உலக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டு பிரமித்தனர்.

பூரண எரிபொருள் – பெர்ஃபெக்ட் ஃப்யூயல் – எனப்படும் ஹீலியம்- 3 சந்திரனில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் எந்த நாடுகளிடம் ஹீலியம் – 3 இருக்கிறதோ அவையே வல்லரசு நாடுகள். ஆகவே தான் சீனா சந்திரனைக் ‘கைப்பற்ற’ தீவிரம் காட்டுகிறது.

இந்த ஹீலியத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜெரால்ட் குல்கின்ஸ்கி. இவரை அமெரிக்கா அழைத்தது. நாஸா தனது ஆலோசனைக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டது.

ஹீலியம் – 3 சந்திரனில் ஒரு  மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறது என்பதைச் சொன்னவர் குல்கின்ஸ்கி தான்.

பூமியில் கிடைக்காத இந்த அரிய எரிபொருளை யார் முதலில் சந்திரனிலிருந்து கொண்டு வருகிறார்களோ அவர்களே உலகை ஆளப்போகும் மன்னர்கள்!

ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு சொல்லலாம். வெறும் நாற்பதே நாற்பது மெட்ரிக் டன் ஹீலியம் – 3இன் ஆற்றல் மூலமாக அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சக்தியைப் பெறலாம்!

சந்திரப்பரப்பை 700 டிகிரி சென்டிகிரேட் அளவு உஷ்ணப்படுத்தினால் போதும், ஹீலியம் வாயு தானாகப் பிரியும். அதைப் பிடித்துக் குளிர வைக்க வேண்டியது தான்.

இது மட்டுமல்ல. மலைக்க வைக்கும் இதர தாது வளங்களில் முக்கியமான பிளாட்டினமும் சந்திரனில் அபரிமிதமாக உள்ளது.  லட்சக்கணக்கான விண்கற்கள் சந்திரனின் மீது வெகு காலம் மோதியதால் ஏற்பட்ட பிளாட்டின பரப்பு, சந்திரனை தங்க முலாம் பூசிய சந்திரப் பரப்பு என்று கவிஞர்கள் சொல்லி வரும்  வர்ணனையை மாற்றி, பிளாட்டின முலாம் பூசப்பட்ட சந்திரன் என்று சொல்லுமளவு மாற்றி இருக்கிறது.

இந்த பிளாட்டினத்தைச் சந்திரனிலிருந்து கொண்டு வந்தால் ‘ரேர் எர்த் மார்க்கெட்’ எனப்படும்  அரியவகைச் சந்தைப் பொருள்களில் ஒன்றாக இது இருக்கும்.

குறைந்தபட்ச மதிப்பீடாக ஆண்டிற்கு சுமார் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினத்தை உலகில் விற்க முடியும். உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

சந்திரன் உலகினர் அனைவருக்கும் பொது!

இப்படி அரிய வளத்தைக் கொண்டிருக்கும் சந்திரன் அனைவருக்கும் பொது  என்ற கருத்தைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டன!

ஆனால் விசித்திரத்தில் விசித்திரம் என்னவெனில் இப்போதே ல்யூனார் எம்பஸி என்ற நிறுவனம் சந்திரனில் பிளாட் போட்டு பூமியில் விற்கிறது. இந்த ரியல் எஸ்டேட் விற்பனையை ‘அன் – ரியல் எஸ்டேட்’ (Unreal Estate) என்று பலரும் கிண்டல் செய்தாலும் வாங்குபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் – தங்கள் சந்ததியினருக்காக!

இந்த நிறுவனத்துடன் சண்டை போட்டு ஒரு விவசாயி, சந்திரன் தன்னுடையதே என்று போட்டிக்கு வந்தார்.

அவர் கூறிய காரணம் அனைவரையும் அசத்தி விட்டது.

250 ஆண்டுகளுக்கு முன்னர் பிரஷியா நாட்டை பிரடெரிக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மற்றவரின் நோய்களைத் தீர்க்க வல்ல அபூர்வ ஆற்றல் இருந்தது.  அவர் தனது அபூர்வ ஆற்றலால் மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிரடெரிக் மன்னர் அந்த விவசாயிக்கு சந்திரனையே தானம் செய்து சாசனம் ஒன்றையும் வழங்கினார்.

அந்த விவசாயின் பரம்பரையில் தான் வந்ததால் தனக்கே சந்திரன் சொந்தம் என்று சந்திர சாஸனத்தைக் காட்டினார் அந்த விவசாயி.

பெண்மணிகள் விரும்பும் சந்திரன்!

வீராங்கனை கல்பனா சாவ்லாவை அறியாதவர் இருக்க முடியாது. அடுத்து இந்திய வமிசாவளியினரான சுனிதா வில்லியம்ஸும் விண்வெளி வீராங்கனை தான். இன்னும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உண்டு.

நமது பெண்மணிகளுக்குச் சந்திரன் என்றால் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. நிலவில் தேன் நிலவு கொண்டாட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

முதன் முதலில் விண்வெளியில் சுற்றுலா சென்ற முதல் பெண்மணியாகத் திகழ்கிறார் அனூஷே அன்சாரி. இவரே இப்படிப் பயணம் மேற்கொண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி ஆவார். முதலாவது ஈரானியப் பெண்மணியும் இவரே.

விண்வெளி சென்ற வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் கலத்தை விட்டு வெளியே வந்து நடந்தும் காட்டி விட்டனர்.

நவகிரகங்களில் சந்திரன்

இந்திய நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை நவ கிரகங்களும் 27 நட்சத்திரங்களுமே.

சந்திரன் மனதிற்கு அதிபதி என்று கூறுகின்றன நமது அறநூல்கள்.

இந்த மனதிற்கு அதிபதியை இந்தியா வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நாம் பெருமை கொள்வது தவறா, என்ன!

***

Tamil Chettiars in Burma (Post No.12,315)

Children of Chettair families, born and brought up abroad, who visited Cholapuram near Sivagangai to learn the history, culture and heritage of their community at Nagarathar Training Programme orgainsed by Dubai-based Nagarathar Business Initiative Group (NBIG). Deccan Chronicle, Year 2016

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,315

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

“South Indian caste from Chettinad whose main occupation is commerce and moneylending. The Chettiyars migrated in large numbers to colonial Myanmar after 1880, playing a major role in transforming the peasant subsistence economy and connecting it with the export producing sector.  By providing mortgage loans to Myanmar peasants, at 12 p2cent a month interest, they came to possess, through foreclosures, about 25 percent of the agricultural land in 13 main  rice growing of southern Myanmar by 1936. The Chettiyar was seen by the Myanmar farmer as his main enemy. Indebtedness due to Chettiyar moneylenders was one of the causes of peasant unrest and of the Saya San Rebellion in 1930. The Chettiyars were also engaged in extending credits to traders and urban land owners. Shortly before the Japanese occupation of Myanmar (1942-1945), total Chettiyar investment in Myanmar was estimated as 56 million pounds sterling, the largest foreign investment in the country. From 1942 to 1945 most Chettiyar residents in Myanmar left for India. After the war they attempted aa comeback, but without much success”.

Xxxx

Indians in Burma

“The Indians along with the Chinese  are the largest non indigenous ethnic group in Myanmar, though now Chinese are probably more numerous than Indian residents whose numbers have been reduced to  some 100,000 in recent decades. The Indian population of Myanmar consists largely descendants of the migrants who came to  the country especially from southern India and Bengal. , during the British colonial era in the early 20th century. While not all  of the Indian immigrants chose to live in the country for good, by the 1930s about one million Indians resided in Myanmar, forming about half of the population of Yangon. Educated and rice Indians occupied the middle levels of business and administration with the Chettiyars playing a prominent role as money lenders and absentee land lords. Poor Indians came and worked as  seasonal agricultural workers and contract labourers. The Indian community was distinct from the Bamar majority and was not easily integrated into Myanmar society.  There was resentment against Chettiyars and also against the largely unrestricted influx of Indian labour, which combined with a different culture and religion, aroused feelings which were manifested I two anti Indian riots in 1930  and 1938. On the other hand Myanmar nationalists drew inspiration from the Indian National Congress.

In 1942, at the beginning of Japanese occupation, half of the Indian population left the country for India. And several hundred thousands died on the trek.

After 1945, many Indians came back to Myanmar, but since Myanmar’s independence in 1948, there have been rigid restrictions on the number permitted to enter Myanmar. The Indians were gradually excluded from public services, dispossessed of their lands and discriminated against in commerce and trade.

Indian interests were particularly affected by  the nationalization of Myanmar economy during the Burma Socialist programme Party era in the 1960s.

The present Indian community is made up of poorer classes who earn their living in menial jobs. A majority of the Indians born in Burma are Muslims and the minority are Hindus “.

(This matter is taken from Historical Dictionary of Myanmar by Jan Becka, 1995)

xxxx

1643 KM border

The India–Myanmar border is the international border between India and Myanmar (formerly Burma). The border is 1,643 kilometres (1,021 mi) in length and runs from the tripoint with China in the north to the tripoint with Bangladesh in the south. (from Wikipedia).

Picture Credit , Deccan Chronicle, Year 2016

Children of Chettair families, born and brought up abroad, who visited Cholapuram near Sivagangai to learn the history, culture and heritage of their community at Nagarathar Training Programme orgainsed by Dubai-based Nagarathar Business Initiative Group (NBIG).

–Subham —

tags- Tamils, Chettiyars, Burma, Myanmar, Anti Indian riots, High interest rates 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,314)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,314

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எங்கெங்கு நூல்களின் பெயர்களில் எண்கள் (40, 50, 400, 150, 70 என்று வருகின்றனவோ அங்கே எண்களைக் கொடுத்துள்ளேன். அவற்றை நூல்களின் பெயர்களோடு இணைத்து முழுப் பெயரையும் சொல்லுவது உங்கள் சாமர்த்தியம்/ திறமை.

நாடியார்மொழி400
ன்னிவைகோக்சா
ன்50காலாதிரி
ணிந்லைனார்காஞ்ருசிடு
க்திமா15040க்சிக்று
ணைதிமொழிதுமுகும்
டி5070404040ஞ்
கைந்நிலை ள்மூ

ANSWERS

1.         நாலடியார்      –சமண முனிவர்கள்

2.         நான்மணிக்கடிகை– விளம்பி நாகனார்

3.         இன்னா நாற்பது      -கபிலர்

4.         இனியவை நாற்பது–பூதஞ்சேந்தனார்

5.         திருக்குறள்     –திருவள்ளுவர்

6.         திரிகடுகம் –நல்லாதனார்

7.         ஏலாதி–கணிமேதாவியார்

8.         பழமொழி நானூறு–முன்றுரை அரையனார்

9.         ஆசாரக்கோவை      –பெருவாயின் முள்ளியார்

10.       சிறுபஞ்சமூலம் –காரியாசான்

11        முதுமொழிக்காஞ்சி–கூடலூர்க்கிழார்

12.       ஐந்திணை ஐம்பது   –பொறையனார்

13.       ஐந்திணை எழுபது–மூவாதியார்

14.       திணைமொழி ஐம்பது     —கண்ணன் சேந்தனார்

15.       திணைமாலை நூற்றைம்பது   –கணிமேதையார்

16.       கைந்நிலை– புல்லங்காடனார்

17.       கார்நாற்பது     –கண்ணங் கூத்தனார்

18.       களவழி நாற்பது     –பொய்கையார்

நா1டியார்ப 8மொழி400
ன்இ 3,4னிவைகோக்சாஆ9
ஐ12,13ன்50காஏ7லாதி 6,5ரி
ணிந்லைனார்கா17ஞ்ருசி10டு
க்திமா15040க்சிக்று
ணைதி14,15மொழிதுமு11கும்
டி5070404040ஞ்
கை16ந்நிலைக 18XXXXXள்மூ

——–SUBHAM—–

Tags- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், crossword

QUIZ உபநிஷத் பத்து QUIZ (Post No.12,313)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,313

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Number 49

1.மொத்தமுள்ள உபநிஷத்துக்கள் எத்தனை ?

xxxxxx

2.உபநிஷத் என்றால் என்ன?

xxxx

3.நசிகேதன் என்ற சின்னப்ப பையன் எமதருமனை சந்த்தித்து கேள்விகள் கேட்டான். இது எந்த உபநிஷத்தில் வருகிறது ?

4. உபநிஷத்துக்களில் மிகப் பழைய நூல் எது ?

XXX

5.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுவதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் அளித்த, மாதிரீம் பஜதா பாடலில் உள்ள த, த, த – கதை எந்த உபநிஷத்தில் வருகிறது?

Xxxx

6.பழைய பத்து உபநிஷத்துக்களுக்கு மட்டுமே ஆதிசங்கரர் பாஷ்யம் (உரை) செய்தார். அவையாவன ?

Xxxx

7. T.S.Eliot  டி.எஸ். எலியட் என்ற அமெரிக்க எழுத்தாளரைப் போல  அய்ரலாந்தில் ஒரு எழுத்தாளர், நமது உபநிஷத்தில் ஆர்வம் காட்டினார். யார் அவர்?

Xxxxx

8.சத்யமேவ ஜயதே / வாய்மையே வெல்லும் எந்த உபநிஷத்தில் வருகிறது ?

xxxx

9.மஹாத்மா காந்திக்குப் பிடித்த உபநிஷத் எது?

Xxxxx

10.உபநிஷத்துக்களை சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பாரசீக மொழிக்கு மாற்றிய முஸ்லீம் மன்னர் யார்?

–subham—

விடைகள்

1.பொதுவாக 108 உபநிஷத்துக்கள் என்று சொல்லுவார்கள் .( இதே பிளாக்கில் பட்டியல்  உள்ளது). சிலர் 120 என்று சொல்லி தற்கால விஷயங்களையும் சேர் ப்பார்கள்

XXXXXX

2.‘உப-நி-ஸத’ என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். ‘பிரம்மத்துக்குப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)

Xxxxxx

3.கடோபநிஷத்;இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது.

Xxxx

4.பிருஹத் ஆரண்யக உபநிஷத்

மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்..

xxxx

5.த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.தாம்யத! தத்த! தயத்வம்

(த…..த…..த….. உபநிஷத் கதை இதே பிளாக்கில் உள்ளது)

xxxxx

6.“தசோபநிஷத்” என்று பத்தைப் பொறுக்கி ஸ்ரீ சங்கரர் அத்வைத பரமாக பாஷ்யம் பண்ணினார். பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலியவற்றை சேர்ந்த பெரியவர்களும் இதே பத்துக்குத் தங்கள் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் செய்தார்கள். இந்த பத்தையும் சுலபமாக ஞாபகத்தில வைத்துக் கொள்வதற்காகப் பெயர்களை ஒரு ச்லோக ரூபத்தில் கோத்துச் செல்வதுண்டு.

ஈச-கேன-கட-ப்ரச்ன-முண்ட-மாண்டூக்ய-தித்திரி|

ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||

ச்லோகத்தில் சொல்லியிருக்கிற order (வரிசைக் கிரமப்) படித்தான் ஆசார்யர்கள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள். (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)

சம்ஸ்க்ருத சந்தி விதிகளின் படி அ + உ = ஓ

ஈச + உபநிஷத் = ஈச + உபநிஷத் – ஈசோபனிஷத் ; ஈசாவாஸ் யோபநிஷத்

கேன+ உபநிஷத் = கேனோபநிஷத்

கட+ உபநிஷத் =கடோபநிஷத்

ப்ரச்ன+ உபநிஷத் =ப்ரச்னோ பநிஷத்

முண்டக + உபநிஷத் =முண்டகோ பநிஷத்

மாண்டூக்ய+ உபநிஷத் =மாண்டூக்யோ பநிஷத்

தைத்திரி|ய + உபநிஷத்= தைத்திரீ யோ பநிஷத்

ஐதரேய+ உபநிஷத் = ஐதரேயோ நிஷத்

சாந்தோக்ய+ உபநிஷத் = சாந்தோக்யோ பநிஷத்

ப்ருஹதாரண்யக+ உபநிஷத் = ப்ருஹதாரண்யகோபநிஷத்

Xxxxxx

7.அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS  ஆவார்.

புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டார்.

xxxxxxxx

8.முண்டகோபநிஷத்தில் வருகிறது.

xxxxxx

9.ஈசோபநிஷத்  அல்லது ஈசாவாஸ் யோபநிஷத் ; இது பற்றி அவர் 2, 3 பிரசாங்கங்களில் நீண்ட உரையாற்றியுள்ளார்.

xxxxxx

10.தாரா ஷிகோஷ் ; அவர் ஷாஜஹானின் மூத்த மகன்; அவுரங்கசீப்பின் சகோதரன் ; அவரை அவங்க சீப் கொன்றுவிட்டான் Dara Shikoh, was the eldest son ஒப்பி fifth Mughal emperor Shah Jahan and the brother of Aurangzeb.

——— subhan———

Tags- உபநிஷத், கேள்வி பதில், என்றால் என்ன, பாரசீக மொழி பெயர்ப்பு , தச , 108, சங்கரர் பாஷ்யம்

QUIZ திருச்சிப் பத்து QUIZ (Post No.12,312)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,312

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.48

1.திருச்சியில் மிக உயரமான இடத்தில் இருக்கும் கடவுள் யார் ?

XXXXX

2.திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் பெருமாள்  கோபுர உயரம் என்ன?

XXXXX

3.பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருச்சியில் இருக்கிறது . அது எது?

XXXXX

4.திருச்சி வட்டாரத்தில் பழங்கால சோழர் தலை நகரம் இருக்கிறது. அதன் பெயர் என்ன?

XXXXX

5.மலை மீது ஏறி உச்சிபிள்ளையாரைக் காண்பதற்கு முன்னர் வேறு இரண்டு கோவில்கள் வழியாகச் செல்லவேண்டும். அவை யாவை ?

XXXXX

6. திருச்சியில் மூன்று பெரிய மத்திய அரசு ஆலைகள் உள்ளன. அவை யாவை ?

XXXX

7.திருச்சி என்ற பெயர் எப்படி என்று ஏற்பட்டது?

XXXXXX

8.திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன ?

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குகை யாருடையது ?

XXXXX

10.திருச்சி பகுதியில் காளியம்மன் பக்கதர்களுக்கு  இரண்டு முக்கியக்கோவில்கள் உள . அவை யாவை ?

XXXXXXX

விடைகள்

1.உச்சிப்  பிள்ளையார் கோவில்.

மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

மலையிலிருந்து காவிரி ஆற்றையும் கோவில்களையும் காணலாம்

XXXX

2.ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின்  ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது ; மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன .

XXXXX

3.திருவானைக்கா என்னும் ஜம்புகேஸ்வரம் திருக்கோவில். அங்கு சிவ பெருமான் அப்பு என்ற நீர் வடிவத்தில் இருக்கிறார் ; ஆப : என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் அப்பு.. அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி

XXXXX

4.கரிகால் சோழன் ஆண்ட உறையூர்

XXXXX

5.மாணிக்க விநாயகர் மலை அடிவாரத்தில் உள்ளார். அவரை தரிசித்து மேலே சென்றால் தாயுயுமானவர் சிவன் கோவில் இருக்கிறது. இரண்டு தரிசனத்துக்குப்  பின்னர் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

XXXXX

6.பாரத் கனரக மின்சாதன தொழிற்சாலை (BHEL- BHARAT HEAVY ELECTRICALS LIMITED)

துப்பாக்கித் தொழிற்சாலை (Ordnance Factory Tiruchirappalli (OFT)

பொன்மலையில் உள்ள ரயில்வண்டி பணிமனை The Golden Rock Railway Workshop,  Ponmalai,.)

XXXXX

7.திருச்சி என்ற பெயர் ஏற்பட மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

1.திரி சிரன் என்ற மூன்று தன்மையுள்ள அரக்கன் வழிபட்ட தலம்

2.சிரா என்ற சமண முனிவர் தவம் செய்த குகை உள்ள இடம்

3. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: “புனித-பாறை-ஊர்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

XXXXX

8.பாரதிதாசன் பல்கலைக்கழகம் Bharathidasan University

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு போகும் வழியில் இடது புறமாக குகை உள்ளது மலையை குடைந்து உண்டாக்கிய இந்த குகை கோயில்.

பல்லவர், பாண்டியர், சோழர் என முப்பெரும் அரச மரபுகளின் கல்வெட்டுக்களையும் குடைவரை அமைப்புக்கு உள்ளேயே பெற்றிருக்கும் ஒரே தமிழ்நாட்டுக்கு குடைவரை கோயில் இது. பல்லவர் கால கிரந்த எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன ; இது மகேந்திர பல்லவன் காலத்தில் குடையப்பட்டது

XXXXX

10.வெக்காளி அம்மன் கோவில் ,உறையூர் (5. கி.மீ  தொலைவு)

சமயபுரம் மாரி  அம்மன் கோவில் (15. கி.மீ  தொலைவு)

—SUBHAM—-

TAGS- திருச்சி, மலைக்கோட்டை, பிள்ளையார், தாயுமானவர், ஸ்ரீ ரங்கம் , திருவானைக்கா

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!-1(Post No.12,311)



 
WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,311

Date uploaded in London –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

உலக சந்திர தினம்!

உலகெங்கும் ஜூலை மாதம் இருபதாம் நாள் உலக சந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கியநாடுகளின் பொதுச்சபை இந்த நாளை உலக சந்திர தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானத்தை 2021இல் நிறைவேற்றியது.

சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதரே இல்லை. காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சந்திரனைச் சுட்டிக் காட்டி அம்புலிமாமா வா வா என்று அழைத்து வந்திருக்கிறோம். காதலன் காதலியைப் பார்த்து, ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று சந்திரன் போன்ற முகம் என்று வர்ணித்து மகிழ்கிறான்.

காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கவர்ச்சியினால் விண்வெளி யுகத்தில் மனிதன் சந்திரனில் காலடி பதிக்கத் திட்டமிட்டான்; வெற்றியும் பெற்றான். இனி மிகப் பெரும் வெற்றிகளையும் பெறப் போகிறான். ஆகவே தான் இந்தக் கொண்டாட்டம்.

சந்திர மனிதன்!

உலக சந்திர தினமாக ஜூலை 20 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது?

இந்த நாளில் தான் 1969ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனித குலத்தின் பிரதிநிதியாக முதன் முதலில் சந்திரனில் தன் காலடித் தடத்தைப் பதித்தார்.

அமெரிக்காவின் பெருமுயற்சியின் காரணமாக சந்திரனுக்கு விண்கலத்தில் பயணித்து அங்கு இறங்கி தன் காலடியைப் பதித்த அவர், “மனிதனுக்கு அது ஒரு சிறிய தடம். மனிதகுலத்திற்கு பிரம்மாண்டமான தாவல்” என்று குறிப்பிட்டார். மொத்த உலகமும் அவரது இந்தக் கூற்றை ஆமோதித்தது.

ஓஹையோவில் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் வானில் பறப்பதில் தீரா ஆசை கொண்டார். தன் வீட்டிலேயே ஒரு சிறிய விண்ட் டனலை அமைத்து விமானங்களில் சிறிய மாதிரிகளைச் செய்து பார்ப்பது அவரது பொழுது போக்கு. படிப்பை முடித்த பின்னர் விமான நிறுவனத்தில் சேர்ந்த அவர் இரண்டு லட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு அடி உயரம் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 1962இல் விண்வெளி வீரர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சந்திரனை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். உலக சாதனையை நிகழ்த்தினார்.

எதற்காக சந்திரனுக்குப் பயணம்?

எதற்காகப் பெரும் பொருட்செலவில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?

மனித குலம் நசித்து விடாமல் நீடித்து இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் தான்!

நாளுக்கு நாள் பெருகி வரும் ஜனத்தொகை, பூமியின் ஆதார வளங்களான நிலம், நீர், காற்று ஆகியவற்றை அசுத்தப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தல், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் ஏற்படும் போரினால் மனித குல நாசம் ஆகியவை போன்ற  காரணங்களினால் மனிதன் இன்னொரு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான முயற்சி தேவை என்று ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

பிரபல திரைக்கதை வசனகர்த்தாவான சார்லஸ் ப்ரோஸர், அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் மனித குலம் இருக்குமா என்று கவலைப்பட்டு ‘கையாசெலின் – சந்திரனுக்குச் சென்று குடியேறி பூமியைக் காப்போம்’ என்ற படத்தை எடுத்தார். உலகெங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் விண்வெளிக்குச் சென்று குடியேறினாலொழிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட மனித குலம் தாக்குப் பிடிக்காது என்றார். ஆனால் இதை மறுத்த சார்லஸ் ப்ரோஸர் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிக மிக அதிகப்படியான காலம். உடனடியாக நாம் விண்வெளியில் குடியேற வேண்டும்” என்றார்.

விண்வெளியிலும் சென்று ஆதிக்க மனப்பான்மையைக் கொள்ளக் கூடாது என்று விண்வெளி உடன்பாடு ஒன்று சர்வதேச அளவில் ஒப்பந்தமாகி உள்ளது. இதை ஏராளமான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதன் படி ஏராளமான பாதுகாப்பு விதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நான்கு நாடுகளில் ஒன்று இந்தியா!

சந்திரன் மீது கண்ணைப் பதித்து ஆக்கபூர்வமான வெற்றிகளைப் பெற்றுவரும் நாடுகள் நான்கு. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவையே அந்த நாடுகள்.

முதலில் விண்வெளிப் பயணம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ரஷியா. அதைத் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் விண்வெளி ஆய்வையும் பயணத்தையும் மேற்கொண்டு வெற்றி கண்டது அமெரிக்கா. சீனா தனது உள்ளார்ந்த ஆசையால் விண்கலங்களைத் தனியே அனுப்பி வெற்றிகளைப் பெற்றது.

இந்த விண்வெளிக் களத்தில் இறங்கிய இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய இரு கலங்களை சந்திரனை ஆராய அனுப்பியது.

2008 அக்டோபர் 22ஆம் தேதி செலுத்தப்பட்ட சந்திரயான் 1 மற்ற நாடுகள் கண்டுபிடிக்காத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தது. சந்திரனில் நீர் அணுத்துகள்கள் உள்ளன என்பதை முதன் முதலாக இந்திய விஞ்ஞானிகளே கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.

சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இப்போது 2023இல் சந்திரயான்- 3 ஜூலை 14ஆம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

40 நாட்கள் பயணப்பட்டு சந்திரனில் மெதுவாகத் தரை இறங்கும் சந்திரயான் -3 அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வெற்றியே பெறுவோம்.

*** தொடரும்

Shiva and Ganesh in Burma (Post No.12,310)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,310

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Picture Title

Shwesandaw Pagoda – Bagan ; Mahaganapati Temple= Maha pienne Temple

The corners of the pagoda’s five terraces once were adorned with statues of Ganesh, the Hindu God with the elephant head, since several Hindu deities were worshipped in Bagan before the arrival of Buddhism.

xxxx

In the past two weeks , I dealt with Sanskrit inscriptions in Burma and Brahma in Burma now called Myanmar. Though Hinduism entered the country about 1800 years ago, it went out of practise in course of time. Unlike Buddhism , Islam and Christianity, Hinduism is a non-preaching religion. They don’t preach and convert people of other religions, because they believe that other religions also lead to god . But the influence of Hinduism is seen in all walks of life in South Asian countries. Even astrologers are seen today on the road pavements giving predictions for the believers.

Xxxx

Ganesa = Maha pienne

Statues of Ganesh are found in colonies of businessmen who migrated from India.

The Rangoon Museum has two images of Ganesh. They have the usual elephant head, human body with a bulging belly.  He is represented as if dancing on his two slim legs. He has six hands holding , noose and Chakra  , trident, fruit etc.

Shwesandaw pagoda in Pagan also has got fragments of images of Ganesh; but a most interesting Ganesh was discovered in the ruins of a temple in Pagan . He is seated in Padmasana posture. Of the four hands, three are holding Sankha/conch, trisula/trident, aksha mala/rosary and the fourth hand is placed under the belly with a vilva or matulinga fruit. Merchants from India sailed and came to Burma and so aquatic animals are carved in the pedestal.

From Pagan we have two more Ganesh figures on votive tablets. Ganesa slowly carved out for himself a  place and still worshipped by Burmese community with a new name Maha pienne , probably the corrupted form of Maha Vinayak or Maha  Ganapati .

Xxxx

Lord Shiva

We see more South Indian influence in ancient Burma than North Indian. The script is similar to Pallava script of Kanchipuram. The Talaing kings are Telengana people. We already know that Tri Linga Kshetra became Telengana and they migrated to North India and called themselves Dhillons.; in Burma they called themselves Talaings (Telugu People).

Hindus migrated to Campa/ Vietnam first  and took their favourite god Shiva. We see lord Shiva in two group of temples in Myson and Ponagara. Shiva is mentioned in inscriptions as Mahesvara ,Mahadeva and many other names  . He was worshipped by the Khmers in Linga form as well .

Xxxx

In Burma

Temples dedicated to shiva existed in Thaton and Pagan. Now there are no ancient temples but images and coins with shiva are found. In Arakan area,  a  Saivite dynasty ruled for long. This is the border area between India and Myanmar; coins with the symbols of bull/nandi, trident/ trisula and shiva are found. The kings had surname Candra . those names are found in Nagari inscriptions at the Shittaung pagoda, Mrohaung . they belong to ninth or tenth century CE. Coins are dated between 4th and 10th century CE.

Coins with Saivite symbols have kings’ names such as Vamma candra, Priti candra, Vira candra. This is the proof for the Saivite rule from 4th century in Arkan area of Burma.

Burmese text Mahayaazavin mentioned that six gods helped Vishnu in founding the city Hmawza or old Prome . They are Parameswara, Candi/Durga, Gavampati, Indra, Naga and Garuda.

Xxx

Shiva Idols

Government Museum in Rangoon keeps some stone slabs brought from Shwezayan Pagoda of Thaton. Since they are out of place in the existing Pagoda, scholars believe that there existed a Hindu temple in Thaton. The figures on the slabs show Shiva, Parvati, Bull, Mahisasuramardhani , hanging snake etc. This looks similar to Shiva- Parvati image in Ellora caves in India.

Xxxxx

Ananda Museum at Pagan has another image of Shiva. It is about four feet high. It was removed from Nat hlaung Kyaung. From the same place another slab was taken to Germany and placed in Berlin Museum.

The statue stands on a lotus pedestal. The standing figure has four hands with trident, Vajra, sword and mace/gada. But sword and mace are rarely associated with Shiva. Jatamukuta points out to Shiva.

Recently discovered Saivite image is also housed in Ananda Museum at Pagan. It is a large piece of stone sculpture representing a god  seated in raja lila attitude on a double lotus pedestal. Badly corroded statue has four hands with Trisula etc. Under the foot a male figure is seen. It is considered as apasmara purusa  seen only in South Indian images.

To summarise the discoveries, no Linga is found in Burma, no Shiva temple is discovered, and no Shiva worship is practised in Myanmar.

( I have not included the temples erected by the labourers brought by the British a century or two ago. I am dealing only with ancient Burma. Above details are summarised from the book CULTURAL HERITAGE OF BURMA by Dr.Krishna Murari, year 1985)

—subham—

Tags- Shiva, Burma, Myanmar, Arkan, Shiva coins, Candra kings, Ganesh, Maha pienne, Shwesandaw Pagoda

Hinduism Crossword 22 7 2023 (Post no.12,309)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,309

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 17  words that occurs in Hindu scriptures or literature; colour coding will help you to some extent.

ACROSS

1. an emperor, universal monarch, sovereign of the world, a ruler whose dominions extend as far as the ocean in Sanskrit

6. a Sanskrit poetician contemporary of Daṇḍin. He is noted for writing a work called Kavyalankara .

7.vehicles of Gods like Garuda, Mayura, Rishabha;

8. refers to that particular sign of the zodiac which is cut by the eastern horizon at the time of one’s birth; also auspicious moment ;

9.at least seven kings of Kampuchea/ Cambodia had this name;

10.water Lilly in Sanskrit; also common feminine name ;

11.Hunter who killed Lord Krishna ;

12.New Year for Telugus, Kannadigas;

13.an appendix; addition; even Rig Veda has this ;

15.Biggest Buddhist stupa in Java, Indonesia;

16.Half Shiva, half Parvati form

xxxxxx

DOWN

2. “gesture of fearlessness” is a gesture of reassurance and safety shown with hand or palm, which dispels fear and accords divine protection and bliss in Hinduism, Buddhism and other Indian religions ;

3.Indian gooseberry tree; Malacca got this name from this tree;

4.a drama written by Harsha about Udayana and this princess ;

5. a 7th century Chinese Buddhist pilgrim who has left behind an account of his travels to India. ; he came after  fa-hien and hiuen-tsang, 

7. name for winged horse in the Vedas; not Asva;

14.Snake demon killed by Indra in the Vedas.

1 2  3  4 5
  6        
7          
     8     
9          
           
10      11   
  12        
      13   14
15          
  16        

ANSWERS 

ACROSS

1.Chakravarti; 6.Bhamaha; 7.Vahana; 8.Lagna ; 9.Jayavarman; 10.Kumuda ;11.Jara ;12.Ugadhi ;13.Khila ;15.Borobudhur; 16.Ardhanari

xxxxxx

DOWN

2.Abhayamudra ; 3.Amalaka; 4.Ratnavali ; 5.Itsing

7.Vaji; 14.Ahi

C1HA2KRA3VAR4TI 5
  B6HAMAHA T
V7AHANA UT S
A A  L8AGNAI
J9AYAVARMANN
I A  K  V G
K10UMUDA J11ARA
  U12GADHIL  
  D   K13HILA14
B15OROBUDHURH
  A16RDHANARI

—subham—

Tags- Hinduism , crossword, 2272023

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 10 (Post No.12,308)

Somanathapura Temple, Karnataka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,308

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

51.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில் Hedathale Lakshmikantha Swami temple

நஞ்சன்  கூடு  தாலுகாவில் உள்ள லெட்சுமிகாந்த கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன . இடது தலை என்பது ஊரின்  சரியான பெயர்.. இங்கு  லெட்சுமிகாந்த சுவாமி கோவில் உளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹொய்சாளர் கால கோவில். இது  த்ரிகூட கூட கோவில்; அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்;  அவைகளை இணைக்கும் பொது மண்டபமும் இருக்கும் . இந்தக் கோவிலில் லெட்சுமிகாந்த சுவாமிக்கு அருகில் லெட்சுமிநரசிம்ம  சுவாமி, வேணுகோபால சுவாமிகளும் இரண்டு கர்ப்பக் கிரகங்களில் இருக்கின்றனர்.

இங்குள்ள அதிசயம் என்னவென்றால் ஹதினாறு முக சாவடி ஆகும். ஹதினாறு என்றால் தமிழில் 16  என்று பொருள். இந்த மண்டபம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுளது . இரண்டாம் வீர வல்லாளன் 1187ல் கட்டிய கோவில். அவர் காலத்தில் பீம தண்ட நாயக ஒரு பாளையக்காரர் .

அவருக்கு  (பாளையக்காரருக்கு) 16 பெண்களாம்.. மாமியார்கள் , மாப்பிள்ளைகளை நேரடியாகப்  பார்க்கக்கூடாது என்பதால் 16 முக மண்டபத்தைக் கட்டினார் . 16 ஜோடிகள் அமரும்போது   பாளையக்காரரின் மனைவி– அதாவது மாமியார் , 16 பெண்-மாப்பிள்ளைகளைக் காண முடியாது. இதற்காக அற்புதமாக டிசைன் செய்யப்பட்டது இந்த ஹதினாரூ/ பதினாறு முக சாவடி/ மண்டபம் !!

இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயமும் உண்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கும் இங்கே கர்ப்பக்கிரகம் உள்ளது. அர்ச்சகர் தீவாராதனை காட்டும்போது ஆண்டாளின் கண்கள் பளபளக்கும் . அப் போது பக்தரை  ஆண்டாள் பார்ப்பது போலத்  தோன்றும் !

எடத்தலை , மைசூரு நகரிலிருந்து 40 கி.மீ .

XXXX

52. சோம்நாத்பூர் கோவில் Chennakeshava Temple, Somanathapura

மைசூரு நகரிலிருந்து 33 கி.மீ .தொலைவில் கட்டிடக் கலை சிறப்புமிக்க சோம்நாத்பூர் கோவில் அமைந்துள்ளது.

மூன்றாம் நரசிம்மனின் தண்ட நாயக்க சோமநாதனால் 1258 ஆம் ஆண்டு கட்டப்பட்டது  இக்கோவில் .

சுவர்கள் முழுக்க ராமாயண , மஹாபாரத , பாகவதக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன . கேசவர், ஜனார்த்தனர் , வேணு கோபாலர் சந்நிதிகள் சபா மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன ; நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது . கோவிலின் கூ ரைகளில் கூட பல வித மலர் வடிவங்களைக் காணலாம்

இங்கு சிவனும் இருப்பதால் சோமநாத என்ற பெயர் ஏற்பட்டது

ஹொய்சாளர்கள் கட்டிடக்கலை மன்னர்கள்; 1500 சமணர் கோவில் , இந்துக் கோவில்களைக் கட்டினார்கள் . அலாவுதீன் கில்ஜியின் படைத்ததலைவன் மாலிக்காபூர். தென் இந்தியா  முழுதுமுள்ள கோவில்களைத் தாக்கி தங்கத்தை டன் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றான் இந்தக் கோவிலையும் தாக்கிச்  சேதப்படுத்தினான். அவன் அசுரர்களின் மறு  அவதாரம். ;பின்னர் துலுக்க ஆட்சிக்கு சாவு மணி அடித்த விஜய நகரப் பேரரசர்கள் பல திருப்பணிகளைச் செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினர் .கோவிலில் உள்ள புராணக் காட்சிகளின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு காட்சியையும் வருணிக்க ஒரு புராணக் கதையைச் சொல்லவேண்டிவரும் .

XXXX

53.தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் Talakkad Temples

மைசூரு நகரிலிருந்து 28 மைல் தொலைவில் இருக்கும் தலக்காடில் முப்பது கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்கள் முக்கியமானவை; .ஸ்ரீ வைத்யனாதேஸ்வரர் , மருளேஸ்வர் பாதாளேஸ்வர் , அர்கேஸ்வர், மல்லிகார்ஜுன கோவில்கள்  ஆகியன இவற்றில் அடக்கம்

வைத்யநாதேஸ்வரர் கோவிலில் நிறைய சிற்பங்களை க் காணலாம்

தலக் காடு சாபங்கள்

ஸ்ரீங்கப்பட்டிணத்தில் இருந்த விஜயநகர பிரதிநிதியின் பெயர்  திருமலை ராஜா;   அவர் ஒரு நோய் காரணமாக இங்கே வைத்யநாதரை வழிபடவந்தபோது, இறுதிக்கா லத்தில் அவர் மனைவி அலமேலு அம்மாள் இங்கு வந்தார். . அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க மைசூரு மஹாராஜா அவரை விரட்டிச் சென்றதாகவும் ஆனால்  அந்தப்  பெண்மணி தனது நகைகளை காவிரி நதியில் வீசி எறிந்துவிட்டு எதிரில் இருந்த மாலங்கியில் விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது அப்போது அவர் 3 சாபங்களை இட்டார்.

தலக்காடு, பாலைவனம் ஆகட்டும் ;

மாலங்கி சுழல் நிறைந்ததாகட்டும் ;

மைசூரு மஹாராஜா வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும்.

Talkādu Maralaāgi,

Mālingi maduvaāgi,

Mysuru dhorege makkalagade hōgali!

(ತಲಕಾಡು ಮರಳಾಗಿ; ಮಾಲಿಂಗಿ ಮಡುವಾಗಿ, ಮೈಸೂರು ದೊರೆಗೆ ಮಕ್ಕಳಾಗದೆ ಹೋಗಲಿ

இது ஓரளவுக்கு உண்மையே; மணலில் புதைந்திருந்த இரண்டு கோவில்களை மணலை அகற்றி வெளியே எடுக்க வேண்டியதாயிற்று. இவை எல்லாம் 1650 ஆம் அண்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள்.

Xxxxx

54.நஞ்சுண்டேஸ்வரர் கோவில் Nanjundeshwara Temple (also called Srikanteshwara Temple)

Sri Nanjundeswarar Temple

காவிரியில் கலக்கும் கபில நதியின் கரையில் , நஞ்சன்கூடில் அமைந்த இக்கோவிலை தட்சிணப் பிரயாகை என்று அழைப்பர்

120 அடி உயரமுள்ள ஒன்பது நிலைக் கோபுரத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி தேவராஜ அம்மணி கட்டினார்.. பாற்கடலை கடை ந்தபோது  தோன்றிய விஷத்தை சிவன் அருந்தியதால் சிவனுக்கு நஞ்சுண்ட சுண்டன் , நீல கண்டன், ஸ்ரீகண்டன் என்ற பெயர்கள் உண்டு. அருகில் பரசுராமர் கோவிலும் இருக்கிறது ; பரசுராமர் இங்கு வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் .

திப்புசுல்தான் நன்கொடை

திப்பு சுல்தானின் யானை குருடனாவுடன் , அவனது அமைச்சர் பூர்ணய்யாவின் ஆலோசனைப்படி யானையை  நஞ்சன்கூடு  கோவிலுக்கு அனுப்பி 48 நாட்களுக்கு சில பூஜைகளைச் செய்தவுடன், யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது. இதற்கு நன்றி செலுத்தும் முகத்தான், கோவிலுக்கு திப்பு சுல்தான் மரகத லிங்கம் ஒன்றை காணிக்கையாக அளித்தான் . சிவ பெருமானை ஹகீம் (வைத்தியர் )நஞ்சுண்டன் என்று அழைத்தான்.

To be continued………………………………………….

tags  – ஆண்டாள் கண், நஞ்சுண்டேஸ்வரர் , நஞ்சன்கூடு  , திப்பு சுல்தான், தலகாடு சாபங்கள், சோமநாதபுரம் , 16 முக மண்டபம், ஹதினாறு