9. தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் எப்போது துவங்கப்பட்டது ?
XXXXX
10.இலக்கியத்தில் தஞ்சாவூர் பற்றிய முதல் குறிப்பு எங்கே கிடைக்கிறது?
XXXXXX
விடைகள்
1.தஞ்சாவூர் பெரிய கோவில் எனப்படும் பிரஹதீஸ்வரர் ஆலயமும்சரஸ்வதி மஹால் நூலகமும் நினைவுக்கு வரும்.
XXXXX
2.பெரிய நந்தியும் பெரியலிங்கமும் இரண்டு பெரிய சிலை அதிசயங்கள்:
லிங்கத்தின் அளவு –13 அடி உயரம்!
நந்தியின் அளவு — 12 அடி உயரம். எடை 12 டன்!
XXXXX
3..வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்! கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!
XXXXX
4.கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் ; அவனுக்கு ராஜ குருவாக விளங்கிய கருவூர் சித்தர் .
XXXXX
5. தஞ்சாவூரின் மராத்திய மன்னா் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). முன்னர் இருந்த புஸ்தகங்களை அவர் ஒன்று திரட்டி நூலகத்தை சிறப்பாக அமைத்தார் . இதன் முழுப்பெயர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம்.
இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.
XXXXXX
6.தஞ்சாவூரில் புகழ் பெற்ற கோவில்கள் பல உண்டு. அவைகளில்
சுவர்ண பங்காரு காமாட்சி அம்மன் கோவில் மிகவும் புகழபடைத்தது சம்ஸ்க்ருதத்தில் சுவர்ண என்றால் தங்கம். தெலுங்கில் பங்காரு. இந்த தங்க காமாட்சி முதலில் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தது. துலுக்கப்படைகளும் ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளும் இந்துக் கோவில்களை கொள்ளையடித்து வந்தனர் அப்போது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 – 1783) இந்த விக்ரகத்தை பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து நிறுவினார். விஜய நகர, நாயக்க, மராத்திய மன்னர்களுக்கு அருள்மழை பொழிந்தவள் இந்தக் காமாட்சிதான்
XXXXX
7.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இந்தக் காமாட்சி அம்மன் சந்நிதியில் அமர்ந்து பல கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். காமா ட்சியால் அவர் பிரபலமானது போல, அவர் மூலம் சுவர்ண / பங்காரு காமாட்சியும் பிரபலம் அடைந்தாள் என்று சொன்னால் மிகையாகாது .
XXXXX
8.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருக்கிறது பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் அது விரிவுபடுத்தப்பட்டது. . மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் இன்னும் உள்ளன.அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்.
XXXXX
இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ் மொழியும் பண்பாடும் கண்ட வளர்ச்சியை ஆராய்ந்து ஆவணப்படுத்தி வருகிறது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
+91 4362 226720
tamilunivc@gmail.com
XXXXX
1O.அப்பர் பாடிய தேவாரத்திலும் (600 CE ), பின்னர் பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களிலும் தஞ்சை பற்றிய குறிப்பு வருகிறது. ராஜ ராஜ சோழனால் உலகப் புகழ் பெற்றது .
XXXXX
—SUBHAM—–
TAGS- தஞ்சாவூர், பெரிய கோவில் , பிரஹதீஸ்வரர் ஆலயம் ,சரஸ்வதி மஹால் நூலகம் , சியாமா சாத்திரிகள், சுவர்ண பங்காரு, தஞ்சை , தமிழ் பல்கலைக் கழகம், Thanjavur Quiz
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7
ச.நாகராஜன்
இரண்டு நிமிட தாமதம்!
க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்டோனிஸ் மாவ்ரொபுலுஸ்
(Antonis Mavropulus of Greece) எதியோப்பியன் ஏர்லைன்ஸ் ET302 விமானத்தைப் பிடிக்க எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் அவசரம் அவசரமாக ஓடினார். அவர் இண்டர்நேஷனல் சாலிட் வேஸ்ட் அசோஸியேஷனின் (International Sold Waste Association) தலைவர். நைரோபியில் ஒரு முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இரண்டே இரண்டு நிமிடம் தாமதமாக அவர் விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட்டிருந்தது.
மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவருக்கு சற்று நேரம் கழித்து ஒரு பெரிய அற்புதமான பிரமிக்கும் வைக்கும் செய்தி கிடைத்தது.
அவர் ஏறிப் போக வேண்டியிருந்த விமானம் ET302 புறப்பட்ட ஆறு நிமிட நேரத்திலேயே கிழே விழுந்து நொறுங்கியிருந்தது.
இரண்டு நிமிட தாமதம் அவர் உயிரைக் காப்பாற்றி விட்டது.
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!
குடிதண்ணீர்க் குழாய்!
2019 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி. சிபிஆர் எஃப் (CPRF) ஜவான்கள் ஒரு ராணுவ வண்டியில் காஷீமிரில் அனந்தநாக் பிரிவில் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 30 ராணுவ வண்டிகள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டியிலும் 45 ஜவான்கள் இருந்தனர்.
மித்நாபூரைச் சேர்ந்த பப்லு தாஸ் தனது குழுவினருடன் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று வண்டியிலிருந்து அவர் கீழே குதித்தார் – சாலை ஓரம் இருந்த ஒரு குழாயிலிருந்து குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக.
அதே சமயம் ஜவான்களை ஏற்றி வந்து கொண்டிருந்த இன்னொரு வண்டி அவர் குழாய் இருந்த இடத்திற்கு வர, பப்லு அந்த வண்டிக்குள் ஏறிக் கொண்டார்.
திடீரென்று பப்லு முதலில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதில் பயணம் செய்து வந்த 45 ஜவான்களும் கொல்லப்பட்டனர்.
பப்லு அதிர்ஷ்டவசமாக குடிதண்ணீர்க் குழாயால் உயிர் பிழைத்தார்!
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!
நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –
In the previous three articles on Thailand, I pointed out the Hindu influence on Thai culture. Now I give some more information about the contact between India and Thailand
We know about the Thai Ramayana called Ramakien composed during 1781-1798.
Thai people were familiar with Hindu puranas too. The Siamese works called Naaraai – Sibpaan, deal with the ten incarnations of Vishnu.
A bronze statue of Ganesa is in the Bangkok Hindu temple. He is holding a manuscript in his hand which confirms Ganesa’s help to Veda Vyasa in writing Mahabharata.
Agastya cult is also very popular in Thailand. The legal system of Siam is based on the Manu smriti which is evident from a legal work Phra Dharmasastra.
The vocabulary of the Thai language contains a large number of pure Sanskrit words or derivatives from Sanskrit.
Vivaha , Velaa are some examples for pure Sanskrit words.
XXX
Following are some derivatives
Sanskrit – Thai
Grantha – khantha
Samgha – samkha
Candra – jhanthara
Sukhi bhavatu – sukhi hotu
Vihaara – vihana
Nagara – Nakhon
Vrsa – phruk phuk
Xxxx
Names of months like Hindu Malayalis
Like Kerala Malayali Hindus , Thai people also used zodiac signs to name the months
7 May 2018 — Thailand has got lot of Hindu sculptures from Ganesh to Kubera. Vedic gods Indra, Yama, Vishnu, Shiva and Brahma are also found in different …
Thailand and Laos have different stories associated with it. In Thailand there lived a wise man who can speak with birds. His name was Dharmabarn (Dharma …
4.Hand in Sanskrit; Greek word Chiro is derived from it
5.Liquid, Fluid, Running, Oozing
7. devotion with an aim to achieve one’s wishes.
8.Pandava’s eldest brother, but joined Kauravas because his mother abandoned him
9.Enemy in Sanskrit
10.Vedic Text, Trade, Market town in Sanskrit; corporation, guild
xxxxxxxx
Down
1Stick, Punishment, Punctuation mark eual to full stop in Devanagari
2. a symbol of absolute chastity; wife of sage Mudagalya
3. “the tract between the Himalaya and the Vindhya ranges, from the Eastern Sea (Bay of Bengal) to the Western Sea according to Manu Smriti. Meaning is where cultured people well versed in Vedas lived
28.கோரவனஹள்ளி மகாலெட்சுமி கோவில் GORAVANAHALLI MAHALAKSHMI TEMPLE
1900ம் ஆண்டில் எழுந்த புதிய கோவில் எனினும் மஹாலெட்சுமியை தரிசிக்க செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நல்ல கூட்டம் வருகிறது. 1900ம் ஆண்டில் அப்பையா என்பவர் கண்ட்டெடுத்த சிலை இது. அவர் வீட்டிலேயே வைத்து வழிபட்டார். 1925க்குப்பின்னர் வேறு ஒருவர் வந்து கோபுரத்துடன் பெரிய கோவிலை எழுப்பினார். இந்தக் கோவில் துமக்கூருக்கு அருகில் கோரவனஹள்ளி கிராமத்தில் இருக்கிறது.
XXXX
29.ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில் SRI REVANNA SIDDHESWARA TEMPLE
பெங்களூர் நகரிலிருந்து சுமார் 33 மைல் தொலைவில் ராம நகரம் அருகில் குன்றின் மீது அமைந்த சிவன் கோவில் இது.. SRS ஹில்ஸ் (SRS Hills) SRS Hills அல்லது SRS Betta பேட்டா என்னும் இடத்தில் 3 கோவில்கள் உள்ளன குன்றின் உயரம் 3066 அடி. குன்றின் உச்சியில் ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில்., குன்றின் நடுப்பகுதியில் பீமேஸ்வரி கோவில், அடிவாரத்தில் ரேணுகாம்பா கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்
ரேவண்ண சித்தர் என்பவர் புகழ்பெற்ற வீர சைவத் துறவி ஆவார் .
XXXXX
30. மாகதி ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில் , சோமேஸ்வரர் கோவில் Magadi Someshwara Temple , Magadi RanganathaSwamy Temple
மாகதி சோழர் காலம் முதல் புகழ்பெற்று விளங்குகிறது. பெங்களூரை நிறுவிய விஜய நகர சாம்ராஜ்ய சிற்றரசர் கெம்பகவுடா பிறந்த இடம் இது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுப்பிய சோமேஸ்வரர் சிவன் கோவிலும் திருமல ரெங்கநாத சுவாமி விஷ்ணு கோவிலும் இ ப்போது தொல்பொருட் துறை பராமரிப்பில் உள்ளன இரண்டிலும் தினசரி வழிபாடு உண்டு ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவிலில் திருப்பதி பாணியில் நின்ற திருக்கோலத்தில் வெங்கடாசலபதி காட்சி தருகிறார்.
சோமேஸ்வரர் கோவிலில் சிவன் உருவமும் , கலை வேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்களும், தூண்களும் இருக்கின்றன.
XXXXXX
31.மேக தாது சங்கமேஸ்வர கோவில் MEKA DATU (GOAT’S LEAP )
ஆடு தாண்டும் அளவே இடைவெளியுள்ள குன்று இருக்கும் மேகதாட்டு சர்ச்சைக்குரிய காவிரி அணை அமையும் இடம் ஆகும் . இங்கு காவிரியும் அர்காவதி நதியும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. பெங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ . தொலைவு
தத்தாத்ரேயரை வழிபடுவோர் இதை முக்கிய தலமாக கருதுவதால் தத்த பீடம் அண்மைக்காலத்தில் திருப்பணி செய்தது
XXXX
32.கோவில்கள் நிறைந்த மட்டூர்
பெங்களூரு நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மட்டூர் , வடைக்கும் கடவுளுக்கும் தேங்காய்க்கும் பிரபலமான ஊர். மாண்ட்யா அருகிலுள்ள இந்த ஊரிலிருந்து தினமும் 300 லாரிகளில் தேங்காய் செல்கிறது. இந்த ஊர் வடையும் ருசி மிக்கது .
சிம்சா நதிக்கரையில் அமைந்த ஊர்
மட்டூர் வட்டாரத்தில் சுமார் 20 கோவில்கள் இருந்தாலும் ஆயிரம் ஆண்டு பழமை உடைய (TEMPLE No.32) உக்ர நரசிம்ம சுவாமி கோவில், சமணர் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை. இந்த ஊரின் பெயர் நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்றும் மருதூர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. நான் மறைகளில் வல்ல வேத பண்டிதர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர்.. தென் இந்தியாவில் மங்கலம் என்று முடியும் ஊர்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் தானம் அளித்த ஊர்கள் ஆகும்.
உக்ர நரசிம்ம சுவாமி கோவில், ஹொய்சாளர் காலம் முதல் வணங்கப்படுகிறது. 7 அடி உரமுள்ள அழகான கருங்கல் நரசிம்மரை இங்கே தரிசிக்கலாம். நரசிம்ம மூர்த்தி எட்டு கைகள், மூன்று கைகளுடன் தோற்றம் அளிக்கிறார்
XXXX
(TEMPLE No.33) வரதராஜ (அல்லால நாதன் என்ற பெயரும் உண்டு) சுவாமி கோவில் அங்குள்ள 12 அடி உயரமுள்ள அல்லாலனாதனால் பிரபலமடைந்தது. அதிக வேலைப்பாடுமிக்க சிலை ;கன்னடத்தில் இதன் காரணமாக ஒரு பழ மொழியும் இருக்கிறது ‘Ella Devara Munde Nodu Allalanathana hinde nodu’ – ‘All other idols are to be seen from the front but Allalanatha is to be seen from the back’.
எல்லா தேவரே முந்தே நோடு அல்லால நாதன ஹிந்தே நோடு= எல்லா கடவுளரையும் முன் புறமாக தரிசிக்கலாம்; அல்லால நாதனையோ பின்பக்கமாக தரிசிக்கவேண்டும் . இது விஷ்ணுவர்தன மன்னர் கட்டிய கோவில் .
விஷ்ணு வர்தனர் , ஸ்ரீ ராமானுஜ பக்தர். அவருடைய தாயாருக்கு கண் பார்வை போனபோது, அவர் கனவில் காஞ்சீபுரம் சென்று வரதராஜரை தரிசிக்கும்படி ஸ்ரீ ராமானுஜர் சொன்னதாகவும் தாயாரின் முதிய வயது காரணமாக அவர் காஞ்சீபுரம் வரை செல்லமுடியாதென்பதால் விஷ்ணுர்த்தனர் காஞ்சீபுரம் சென்று சிற்பிகளை அழைத்து வந்து மூர்த்தியை உருவாக்கியதாகவும் தல புராணம் கூறும் . இங்கு தமிழ்க் கல்வெட்டுகள் உண்டு
XXXXX
மட்டூர் வட்டாரத்திலுள்ள கோவில்கள் ; அந்தந்த ஊரிலிருந்து எத்தனை கி.மீ. தூரம் என்பதும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
shatakoti sreerama mandira; and satyanarayana devaalaya.
Old SBM Road; Jyothi Nagar; Nelamangala; Karnataka 562123; I
மட்டூரிலிருந்து 3 கி.மீ .தூரத்திலுள்ள சிவபுரம், சுதந்திரப் போராட்டம் காரணமாக பிரபலம் அடைந்தது. பிரிட்டிஷாரின் தடை உத்தரவை மீறி 1938 ஏப்ரல் 12-ம் தேதி ஆயிரக்கணக்கான சுதந்திரத் தொண்டர்கள் கொடி ஏற்றிய ஊர் ; அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது .
XXXX
SRS HILLS
34. வைத்யானாதீஸ்வர சுவாமி கோவில் Vaidyanatheswara Temple
சிம்சா நதிக்கரையில் அமைந்த இந்தக் கோவில் சிவன் கோவில் ஆகும். கோவில் சிறியதுதான் . நவரங்க, சபா, முக்த மண்டபங்களைத் தாண்டி கர்ப்பக்கிரகத்தை அடைந்தால் ஏழுதலை பாம்பின் கீழ் அமர்ந்த சிவ லிங்கத்தை தரிசிக்கலாம்.Vaidyanatheshwara Temple,Vaidyanathapura,Mandya District,K arnataka,Pincode – 571 433.
ஹொய்சாள மன்னர் காலத்திலிருந்து பல வம்ச மன்னர்கள் வழிபட்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு உடையது. நவரங்க மண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
TO BE CONTINUED……TAGS – கர்நாடக மாநிலம் , 108 புகழ் பெற்ற, கோவில்கள், , பகுதி 5
1.கொல்கத்தா KOLKATA என்று இப்போது அழைக்கப்படும் கல்கத்தா எப்போது வரை இந்தியாவின் தலைநகராக இருந்தது?
XXXX
2.கொல்கத்தா ஆலமரம் புகழ் பெறக்காரணம் என்ன?
XXXXXX
3.கொல்கத்தா என்ற பெயர் எப்படி வந்தது?
Xxxxx
4.இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கே இருக்கிறது?
xxxxx
5.ஹூக்ளி நதிக்கரையின் மீதுள்ள ஹெளரா பாலம் Howrah Bridge ஏன் சிறப்பு வாய்ந்தது?
xxxx
6.கல்கத்தாவின் மற்றோர் சின்னமான Fort William வில்லியம் போர்ட் என்னும் கோட்டையின் முக்கியத்துவம் என்ன ?
Xxxxx
7.விக்டோரியா மெமோரியல் என்னும் கட்டிடம் ஏன் புகழ்பெற்றது?
Xxxx
8.கல்கதத்தாவில் பிர்லா பெயரைச் சொன்னால் இரண்டு கட்டிடங்கள் நினைவுக்கு வரும்.. அவை யாவை?
Xxxx
9.பேலூர் மடம் எங்கே இருக்கிறது?
xxxx
10.கல்கத்தாவுக்கு பெயர் தந்த காளி கோவில்கள் எவை ?
xxxxxx
KALI TEMPLE, KALI GHAT
VICTORIA MEMORIAL, KOLKATA
விடைகள்
1.மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகராக இப்போது இருக்கும் கொல்கத்தா, 1911 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது .
XXXX
2.இந்த ஊர் தாவரவியல் பூங்காவிலுள்ள ஆலமரம்தான் உலகிலேயே பெ ரிய ஆலமரம். . அதன் பரப்பளவு 4.67 ஏக்கர். குறைந்தது 250 ஆண்டு பழமையானது இந்த தாவரவியல் பூங்காவுக்கு ஜெகதீஷ் சந்திரபோஸ் என்னும் விஞ்ஞா னியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு புயல் வரும்போதும் பல விழுதுகளை இழந்தாலும் 3772 விழுதுகளை இப்போது காணலாம் .
XXXX
3.இங்குள்ள காளி கோவில் பிரசித்தமானது; காளி கட் அல்லது காளி க்ஷேத்ர என்பதை வெள்ளைக்காரர்கள் கல்கத்தா என்று உச்சரித்தனர்.
xxxxx
4.கொல்கத்தாவின் அலிப்பூர் பேட்டையில் உள்ள நேஷனல் லைப்ரரி — இந்திய தேசீய நூலகம்–தான்— National Library of India– இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம். இதில் 25 லட்சம் புஸ்தகங்களும் ஆவணங்களும் இருக்கின்றன.
Xxxxxxx
5.இது தொங்கும் பாலம் என்னும் வகையைச் balanced cantilever bridge சேர்ந்தது. கல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சின்னம் போல் திகழ்கிறது ; பாரிஸ் என்றால் ஐபல் டவர், லண்டன் என்றால் பிக் பென் கடிகாரம்; கல்கத்தா என்றால் ஹெளரா பாலம் .
xxxxx
6.பிரிட்டிஷாரின் 300 ஆண்டுக்கு கால ஆட்சிக்கு முதல் படியாக அமைந்தது போர் வில்லியம். 1696ல் அவங்க சீப் அனுமதியுடன் கட்டிய கட்டிடம் இப்போது இந்திய ராணுவத்தின் கிழக்கத்திய கமாண்டின் தலைமையகம் ஆகும்..
xxxxxx
7.மத்திய கல்கத்தாவிலுள்ள 64 ஏக்கர் பரப்பை வியாபிக்கும் விக்டோரியா மெமோரியல்தான், உலகிலேயே ஒரு ராஜா அல்லது ராணிக்குக் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடம் ஆகும். இது பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்போது பண்பாட்டுத் துறை அலுவலகம் இருக்கிறது.
xxxxx
8.பிர்லா பிளானட்டோரியம் என்னும் வான ஆராய்ச் சிக்கூடம் ; பிர்லா மந்திர் என்னும் கோவில்.
xxxxx
9.சுவாமி விவேகானந்தர் துவங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் , ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமையகம் பேலூர் மடம் ; ஹூக்ளி நதியின் மேற்குக்கரையில் ஹெளரா பேட்டையில் அமைந்த இந்த மடம் , உலகெங்கிலும் பரவிய கிளைகள் மூலம் சேவை செய்து வருகிறது .
Xxxx
10.ஸ்ரீ ராமகிருஷ்ணபரம ஹம்சர் வழிபட்ட, அர்ச்சகராக இருந்த, தட்சிணேஸ் வர் காளி கோவிலும் , ஆதி கங்கா என்று அழைக்கப்படும் காளி காட் துறையில் உள்ள காளி கோவிலும் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும் ஹூக்ளி நதி கங்கையின் உப நதி. அந்தக் காலத்தில் ஊட்டிய வழித்தடத்தில் அமைந்த காளி கேட் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
—Subham —-
Tags- கல்கத்தா, கொல்கத்தா, காளி , பெயர் , ஹூக்ளி , ஹெளரா , தேசீய நூலகம் , ஆலமரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜூலை 11 – உலக மக்கள் தொகை நாள் – சிறப்புக் கட்டுரை மாலைமலர் 9-7-23 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்!
(இரண்டாம் பகுதி)
ச. நாகராஜன்
4. ஓஜோனில் ஒஜோன் உறை என்பது வளி மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த உறை தான் அல்ட்ரா வயலட் கதிர்களிடமிருந்து மனிதர்களையும் தாவர இனங்களையும் காக்கிறது. நகரங்களிலிருந்து எழும் நச்சுப் புகைகள் இந்த ஒஜோன் உறை மீது பட்டுப் பட்டு அதில் இப்போது துளை விழ ஆரம்பித்து விட்டது. குளோரோப்ளோரா கார்பன் எனப்படும் நச்சு மாசுப் பொருள் ஓஜோன் உறையிலிருந்து பெருமளவு ஆக்ஸிஜனை எடுக்கிறது. இதன் விளைவாக கண் நோய்கள், தோல் வியாதிகள் பெருமளவு ஏற்படுகிறது.
5. வளி மண்டலத்தில் தூசிப்படலம் வளி மண்டலம் காற்று மாசினால் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டே வருவதால் காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண் அபாயகரமான அளவை எட்டி விட்டது. இந்த எண் 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்கப்படக் கூடிய சூழ்நிலை இருப்பதை உணர்த்தும். 201 முதல் 300 வரை இருந்தால் அது அபாயகரமான சூழ்நிலையைக் குறிக்கும். காற்றின் தரம் குறைவதற்கான முக்கியமான காரணங்கள் வாகனங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகையும் பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் துகள்மப் பொருள்களுமே தான். துகள்மப் பொருள்கள் குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது அவற்றை சுவாசிப்பவருக்கு ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன.
6. நீர் அசுத்தமாதல் : சீரைத் தேடின் நீரைத் தேடு என்றனர் நம் முன்னோர். இந்த நீர் வளம் அசுத்தமாக ஆகிக் கொண்டே போவதோடு குறைந்து கொண்டே போகிறது. சுத்த நீர் இன்மையால் குடிநீர்த் தட்டுப்பாடு உலகெங்கும் இப்போது ஏற்பட்டு வருகிறது.
ஆங்காங்கே தொழிற்சாலைகளின் கழிவு நீர்கள் அமிலத் தன்மையுடன் ஆறுகளிலும் குளங்களிலும் கடலிலும் கலக்கப்படுகிறது.. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு நீரின் தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
7. நைட்ரஜன், பாஸ்பரஸ் பயன்பாடு : நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும். கார்பன் டை ஆக்ஸைடை மட்டும் எடுத்துக் கொண்டால் 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த வாயு அதிகமாக வெளிப்பட்டு வளி மண்டலத்தில் சேர்ந்ததால் புவியின் வெப்பம் சுமார் 1.5 டிகிரி பாரன்ஹீட் கூடி இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறது விஞ்ஞான ஆய்வு. புவி வெப்பம் அதிகமானால் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழிந்துபடும். மழை பொழிவது குறையும். பஞ்சங்கள் உருவாகும். அபாயகரமான கெமிக்கல்களால் ஆரோக்கியக் கேடுகளும் உருவாகும்.
8. நிலப் பயன்பாடு மாறுதல் : நில வளங்களைச் சுரண்டுவது ஆங்காங்கே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வாதார இடமாக அமைவது காடுகளே. ஆக இப்படி நிலத்தைச் சுரண்டாமல், காடுகளை அழிக்காமல் வாழாவிடில் அது மனிதகுலம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு அபாயமாகும்.
9. புதுக் கண்டுபிடிப்புகள் தரும் இரசாயன அபாயங்கள் : நவீன ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கும் கெமிக்கல்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை. சமீபத்தில் சீனாவின் சோதனைச் சாலை உருவாக்கிய கோவிட் நோய் அனைவரும் அறிந்ததே. பிளாஸ்டிக் அபாயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகமே மைக்ரோ பிளாஸ்டிக் துகள் பற்றி அலறிக் கொண்டிருக்கிறது.
இந்த அனைத்து அபாய நிலைகளுக்கும் காரணமாக அமைவது எல்லை மீறிய மக்கள் தொகையும் அறிந்தும் அறியாமலும் அவர்கள் இயற்கை வளத்தைத் தவறாக நுகர முயற்சிப்பதுமே தான்!
இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் அளவான குடும்பமே வளமான வாழ்வைத் தரும் என்ற எண்ணம் உலகில் வாழும் ஒவ்வொருவரின் மனதிலும் வேரூன்ற வேண்டும். இதற்கு விழிப்புணர்ச்சி தேவை.
பெண்களின் கல்வி அறிவை நூறு சதவிகிதம் உறுதிப் படுத்தி முழுமையாக்க வேண்டும்.
இதற்கான விழிப்புணர்வு நாளே உலக மக்கள் தொகை நாள்!
நமது புராணங்களில் பூமா தேவி பூமியில் தீயவர் எண்ணிக்கை கூடுதலாக ஆகி விட்டதால் பாரம் தாங்க முடியவில்லை என்று சிவபிரானிடமும் விஷ்ணுவிடமும் முறையிடும் பல வரலாறுகள் உள்ளன. சகாதேவன் கண்ணனை நோக்கி, “ நீ, யாவரையும் நீறாக்கி பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா” என்று கூறுவதை நினைவு கூரலாம்.
நாம் பூமாதேவியின் பாரமாக இயற்கை வளம் சுரண்டும் தீயவராக இல்லாமல் உரிய எண்ணிக்கையில் நல்லவராக இருந்து அவளைப் போற்றி வணங்கும் உண்மையான செல்வங்களாக இருக்க இந்த மக்கள் தொகை நாளில் உறுதி ஏற்போமாக!
மதுரைத் தமிழ் அறிஞர் திரு சொ சொ மீ சுந்தரம், லண்டனில் உள்ள ஈ லிங் கனக துர்கை அம்மன் கோவிலில் தொடர் சொற் பொழிவு நடத்தி வருகிறார். காலை 11 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடத்திவரும் 60 நிமிட சொற் பொழிவு 18-7-2023 வரை தொடரும் . தினமும் ஏதேனும் சில புதிய செய்திகளை அறிந்து வருகிறேன். நேரில் வருவதற்கு இயலாதவர்களுக்கு இதோ புல்லட்in Bullet Points பாயிண்ட்ஸ் :–
இன்று 11-7-2023ல்- திருக்கடவூரின் மூன்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.
1. எமன் அடிபட்டு உயிழந்தது; மார்க்கண்டேயன் என்றும் 16 வயது ஆன கதை
2.குங்கிலியக் கலய நாயனார் அருள்பெற்றது
3.அபிராமி பட்டர் கதை
xxxx
நாலு ஊரில் நாலு பேருக்கு முதல் மரியாதை!
மதுரையில் யாருக்குத் தெரியுமா முதல் வழிபாடு?
அம்மா மீனாட்சிக்கு ;
சிதம்பரத்தில் யாருக்குத் தெரியுமா முதல் வழிபாடு?
அப்பாவுக்கு; அதாவது நட ராஜப் பெருமானுக்கு; சிவகாமிக்கு அப்புறம்தான் .
புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ் வரன் கோவிலில்?
குழந்தைக்கு; அதாவது ; முத்துக்குமார சாமி என்னும் முருகனுக்கு. அங்கு கார்த்திகை அபிஷேகத்தைக் காண வேண்டும்
அடியாருக்கு எங்கு தெரியுமா முதல் மரியாதை ?
ஆவுடையார் கோவிலில் ; அங்கே மாணிக்க வாசகருக்குத் தான் எல்லாம் ; அர்ச்சனை, அபிஷேகம், புறபாடு எல்லாம் அவருக்கே ; அங்கே லிங்கம் கிடையாது ; ஆவுடையார் மட்டும்தான் .
Xxxxx
எங்கே கூட்டம் சேரும்?
திரு பைஞீலியில் எமன் சந்நிதியில்தான் அதிக கூட்டம் : சிவன் சந்நிதியில் அல்ல
திருக்கடவூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம் திரு பைஞீலி.
குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது. எமனுக்கே அருள் கிடைத்ததால் நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு!
திருநள்ளாற்றில் சிவன் சந்நிதியில் கூட்டமே இல்லை . எல்லோரும் சனீஸ்வரன் (சனை சரன் ) சந்நிதியில் பெரும் கூட்டமாக நிற்கிறார்கள். அவனுடைய வாகனமான காக்கைக்கு கூட தங்க கவசம். தங்கக் காக்கை! ஏராளமான அர்ச்சகர்கள் அங்கே நிற்கிறார்கள்.
Xxxxx
குங்கிலிக் கலய நாயனார்
திருக்கடவூரில் தினமும் குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலிக் கலய நாயனார் என்று அழைத்தனர்.தன்னிடமும் இருந்த பொருளை எல்லாம் சிவபெருமானுக்கு குங்கிலிய புகை போடுவதிலேயே செலவழித்ததால் குடும்பம் பசி பட்டினியால் வாடியது ; அப்படியும் அவர் குங்கிலியம் ஏற்ற விரும்பியதால் மனைவி தன தாலியையும் கொடுத்துவிட்டார். அதை வாங்கிக் கொண்டு பசி, பட்டினி தீர ஏதேனும் வாங்குங்கள் என்று சொல்லி அனுப்பினாள் . வழியில் ஒரு நீண்ட வண்டி முழுதும் குங்கிலியம் ஏற்றிவந்த வியாபாரியிடம் தங்கத் தாலியைக் கொடுத்து, வண்டி நிறைய குங்கிலியம் வாங்கி , நேராகக் கோவிலுக்குச் சென்றார் . இறைவனுக்கு அதைத் தந்து வழக்கமான பணியைச் செய்தார் ; குடும்பத்தையே மறந்தார். அன்றிரவு அவரது மனைவி கனவில் தோன்றிய சிவ பெருமான் அவருக்கு வேண்டியதனைத்தையும் அருளினார் . வீடே அரண்மனையாக மாறியது . வீட்டிற்குத் திரும்பி வந்த நாயனாருக்கு வீடே அடையாளம் தெரியாத அளவுக்கு செல்வ வளம் நிரம்பியிருந்தது . சிவனே தன கனவில் காட்சி தந்த விஷயத்தை மனைவி விளக்கினார் . தனக்குக் கிடைக்காத காட்சி மனைவிக்கு கிடைத்தே என்று ஏங்கினார்
ஏன் மனைவிக்கு முதல் தரிசனம் கிடைத்தது?
ஒரு பெண் இழக்க முடியாத தாலியையே தந்ததால் அவருக்கு முதல் தரிசனம்!.
குங்கிலியப் புகை பரவும் தெற்குத் தெருவில் மரணமே ஏற்படுவதில்லை !
சாம்பிராணி ஏன் போடுகிறோம்?
சாம்பிராணி புகை கிருமி நாசினி. எல்லா நோய்க் கிருமிகளையும் கொன்று விடும்.
Xxxx
இன்னும் ஒரு கதை சொல்கிறேன் என்று தொடர்ந்தார் சொ சொ மீ சுந்தரம் .
அருகில் திருப்பனந்தாள் என்ற தலம் இருக்கிறது .
இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். . தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி தினமும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் கையில் நீர்க்குடத்துடன் சென்று மாலையை அணிவிக்க முயன்றபோது தாவணி நழுவவே தயங்கி நின்றாள் . , அவளுக்கு சிரமம் ஏற்படாமலிருக்க இறைவனே குனி ந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதை ய சோழமன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. குங்கிலியக்கலய நாயனார் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது
Xxxx
ஆண்குழந்தை பெறுவதற்கு வழி என்ன?
மூச்சை இழுத்து நிதானமாக 108 முறை ஓம் நமசிவாய சொன்னால் எந்த நோயும் வராது .
வலது புற நாசியில் மூச்சு ஓடுவது சூரிய கலை. இடது புற நாசியில் மூச்சு ஓடுவது சந்திர கலை; இரு புறமும் ஓடுவது சுழுமுனை .
வலது புற நாசித் துவாரம் வழியே மூசசு விடுவது நல்லது என்கிறார் வடலூர் வள்ளலார் .
கணவன் மனைவி சேருகையில் கணவன் வலது நாசியில் சுவாசிப்பானால் ஆண் குழந்தையும் இட து நாசியில் சுவாசிப்பானால் பெண் குழந்தையும், சுழுமுனையில் சுவாசம் சென்றால் அலியும் பிறக்கும் என்கிறார் திருமூலர் . கெட்ட வாயுவான அபானன் ஏற்பட்டால் கெட்ட குழந்தை பிறக்கும் என்கிறது திருமந்திரம்.
ஆகையால் இடது புறம் சாய்ந்து படுத்தால் வலது நாசியில் சுவாசம் ஓடும்.
Xxxxx
சிவன் செய்தது நியாயமா ? அநியாயமா ?
எமனுக்கு ஏன் காலன் என்று பெயர்? அவன் மிகவும் TIME / மணி பார்த்து எல்லாம் செய்வதால் அவனுக்கு காலன் என்று பெயர். அவன் late லேட் டாகவும் வரமாட்டான்; முன்னதாகவும் before time வர மாட்டான்; உரிய நேரத்தில் வந்து உயிரை எடுப்பான். மார்க்கண்டேயனுக்கு 16 வயதுதான் என்பது தீர்மானிக்கப்பட்ட து ; எமன் உரிய நேரத்தில் வந்து தன் கடமையைச் செய்தான் ; அப்படியிருக்கும்போது எமனை , சிவ பெருமான் இடது காலால் உதைத்து எமனை வதை செய்தது நியாயமா ?
அவன் ஒரு மிஸ்டேக்Mistake செய்தான். வீசிய பாசக் கயிற்றை சிவன் கழுத்திலும் போட்டுவிட்டான் . ஏனெனில் மார்க்கண்டேயன் தனது முடிவு நெருங்குவதை எண்ணி சிவலிங்கத்தை சிக்கெனப் பிடித்தான் ; ஆகையால் எமன் இருவர் கழுத்திலும் விழுமாறு பாசக் கயிற்றை வீசி அடிபட்டான் .
ஏன் இடது கால் ?
அதிலும் கூட சிவன் கருணை காட்டினார் . இடது புறம் அன்னை வசிக்கும் கால். அம்மாவின் அருள் அவனுக்குக் கிடைக்கவே அவன் மீண்டும் குழந்தையாக திருப் பைஞீலியில் பிறக்க முடிந்தது.
Xxxxx
பிறவா யாக்கைப் பெரியோன் !!
பணம் இல்லாவிடில் நாம் யாரிடம் பணம் கேட்போம் ?
பணம் படைத்தவர்களிடத்தில் கேட்போம் .. பிறவி வேண்டாம் என்றால் யாரிடம் கேட்கவேண்டும் ?
யாருக்குப் பிறப்பு இல்லையோ , அவனிடம் கேட்க வேண்டும். பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை ; ஆதி அந்தம் இல்லாதவன் யார் ?
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் சொல்கிறார் — பிறவா யாக்கைப் பெரியோன் சிவ பெருமான் என்று.
அவனைப் பிடிப்பதும் சிக்கெனப் பிடிக்க வேண்டும் என்பார் மாணிக்கவாசகர் .
(பால் நினைந்தூட்டும் …………… திருவாசகப் பாடல்)
காரைக்கால் அம்மையார் சொன்னார் – பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என்று .
Xxxx
எல்லோரும் பெரிய புராணம் படிக்க வேண்டும் ; 63 நாயனார் கதைகள் உள்ளன
அடியார்களைச் சோதிக்கவா ஒவ்வொரு நாயன்மாருக்கும் சிவன் இடையூறுகளைத் தந்தான் ?
சதுர கிரியிலும் சிவன் சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். காடுகளுக்கு இடையே உள்ள அந்த மலைக் கோவிலிலும் சிவன் சாய்ந்த நிலையில் இருக்கிறார். நான் திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களுக்கும் சிங்கப்பூரில் உரை சொல்லி சொற்பொழிவு ஆற்றினேன் . அதை அப்படியே சதுரகிரி கோவிலில் ஒலிபரப்பினார்கள். நான் சென்றபோது அங்கு திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பாடினேன் ; என் குரலைக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்தப் பேச்சாளரா என்று கேட்டுவிட்டு பட்டர், கோவிலைச் சுற்றிக் காட்டினார். நல்ல தரிசனம் ; அங்கே அமர்ந்து கொண்டிருந்தபோது ஒரு நாய் வந்து என் மடியில் படுத்துக்க கொண்டது ; ஒரு புறம் அச்சம் ; மறுபுறம் திகைப்பு . ஆடாமல் அசையாமல் இருந்தேன் . மாணிக்க வாசகர் , அவரது திருவாசகத்தில் 40 இடங்களுக்கு மேலாக தன்னை நாயேன் என்று சொல்லிப்பாடியது நினைவுக்கு வந்தது . நாய் போன பின்னர் பட்டர் சொன்னது வியப்பில் ஆழ்த்தியது. சதுரகிரி மலை சித்தர்கள் உலா வும் இடம் என்பது எல்லோருக்கும் தெரியும் . அங்கு நாய்கள் வடிவத்திலும் சித்தர்கள் இருப்பார்கள் என்று பட்டர் சொன்னார் !!
அடுத்த கதை அபிராமி கதை
அபிராமி என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள் .
ஸ்ரீ சக்ரம் உள்ள இடம் . மாலையில் அபிராமி கதையைத் தொடர்கிறேன் என்று சரியாக பகல் 12 மணிக்கு
சொ சொ மீ சுந்தரம் தனது உரையை நிறைவு செய்தார்.
—- subham ——-
Tags- சொ சொ மீ சுந்தரம், சதுர கிரி, அனுபவம், திருக்கடவூர் , குங்கிலியம், நாயனார்