11 7 2023 தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,259)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,259

Date uploaded in London – –  11 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 10  சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1. வேதாளம் கதையுடன் தொடர்புடைய மன்னன்

3.பாண்டவர்களில் ஒருவன்; கீரிக்கும் அதே சொல்

4. ⇠நீரில் வளரும் மலர் ;ஆனால் தாமரை அல்ல; மணமுள்ள பூ.

5. ⇠ .இந்த உலோகத்தை செம்பு என்றும் அழைப்பர்

8. ⇠ ஏழைகளுக்கு உதவிய திருடன் கதை ; 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

XXXXXXX

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1. ஆந்திரத்தில் இதே பெயரில் ஊர் உண்டு.. இந்த பெயரில் தோன்றிய சாம்ராஜ்யம் தென்னாட்டில் துலுக்கர் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது.

2.கிருமால்; திருப்பதி மலைக்கும் இந்தப் பெயர்தான்

6. ⇡ நாடு என்பதன் ஸம்ஸ்க்ருதம்

7.மலையை குடையாகப் பிடித்த இறைவன்

8.  ⇡  மெளரிய வம்சத்திலும் குப்தர் வம்சத்திலும் இதே பெயரில் மன்னர்கள் ஆண்டார்கள்

XXXXXXXXX

12
     
     
3.  4
     
 5 
    
678

விடைகள்

1விக்ரமாதித்தன், 3.நகுலன்,4. குவளை , 5. ⇠ 6.தாமிரம்

8.  சங்கிலித்தேவன் ,

XXXX

1.விஜயநகரம்,2.மாலவன் 6. ⇡ தேசம், 7.கிரிதாரி, 8.  சந்திரகுப்தன்,

1.விக்2மாதித்ன்
     
     ப்
ந 3.குன் ளைகு 4
    ரி 
 ம்மிதா5 தி
ம்   ரி ந்
ன்6தேத்லிகி7ங்8⇡

—-subham—-

Tags- 11 7 2023 ,தமிழ் ,குறுக்கெழுத்துப் போட்டி,

QUIZ மணிமேகலை பத்து QUIZ  (Post No.12,258)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,258

Date uploaded in London – –  11 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.மணிமேகலையை எழுதியவர் யார் ? இந்த நூல் எந்த மதத்தைப் போற்றும் காவியம் ?

xxxx

2.ஆபுத்திரன் யார்?

xxxxx

3.காவிரி நதி எப்படி உண்டானதாக இந்த நூல் செப்புகிறது ?

xxxxx

4.பேரின்பம் எது என்று இந்த நூல் காட்டுகிறது ?

Xxxxxx

5.இந்த நூலின்படி காவிரிப் பூம்பட்டினத்தின் மற்றோரு பெயர் என்ன ?

xxxxx

6.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை வான் வழியே எங்கு கொண்டு சென்றது ?

XXXXXX

7.மணிமேகலையை திருமணம் செய்துகொள்ளத் துடித்தவன் யார் ?

xxxxx

8.மணிமேகலைக்கு வற்றாத உணவுத்தரும் அமுத சுரபியை யார் கொடுத்தது ?

xxxxx

9.மணிமேகலை, வஞ்சி மாநகருக்குப் போனது ஏன் ?

Xxxx

10.இரட்டைக் காப்பியங்கள் எவை ?

xxxxxxxx

விடைகள்

1.சீழ்த்தலைச் சாத்தனார் ; பவுத்த மதம்

XXXXXX

2.வாரணாசியில் வாழ்ந்த அந்தணர் அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி,  குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் விட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்கு தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கொடுத்தது. பின்னர் இது மணிமேகலையை அடைந்தது.

xxxxx

3.அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை

அதாவது சோழ மன்னன்   காந்தமன் வேண்டிக்கொண்டபோது , அகத்திய முனிவன் தனது கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரி நதியை உண்டாக்கினார்.

XXX

4.பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிற வார் உறுவது பெரும்பெரின்பம்

பிறவி எடுத்தால் துன்பம் பெருகும்

ஆசையை ஒழித்து பிறவாத நிலை அடைவதே பேரின்பம்

XXXXXX

5.சம்பாபதி

XXXXX

6.மணிபல்லவம் தீவுக்கு கொண்டுசென்றது .

xxxxx

7.இளவரசன் உதய குமரன் ; அவனைக் காஞ்சாசனன் என்பவன் வெட்டிக்கொன்றான்

XXXXX

8.தீவதிலகை என்னும் தெய்வம்

XXXXXX

9.புகார் நகரத்தைக் கடல் கொண்டதால் அவளை வஞ்சி நகருக்குச் செல்லும்படி தீவதிலகை பணித்தது..

XXXXXX

10.சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.. சிலப்பதிகாரம் இல்லறத்தின் சிறப்பை விளக்கும். மணிமேகலை துறவறத்தின்  சிறப்பை விளக்கும். இவை இரண்டும் ஐம்பெரும் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலம்பில் வரும் முக்கிய கதா பாத்திரமமான  மாதவியின் மகளே மணி மேகலை.. ஓன்றின் கதை மற்றொன்றில் தொடர்கிறது . மாதவியும் மணிமேகலையும் இறுதியில் பெளத்த துறவிகள் ஆகின்றனர் . சிலம்பை எழுதிய இளங்கோவும், மணிமேகலையை எழுதிய சீத்தலைச் சாத்தனாரும் சம காலத்திய புலவர்கள். ஒருவர் இயற்றிய நூலை மற் றொருவர் கேட்டனர்

—–subham—-

Tags–Tags–இரட்டைக் காப்பியங்கள்.. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், அமுத சுரபி

800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்!—1 (Post 12,257)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,257

Date uploaded in London –  11 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஜூலை 11 – உலக மக்கள் தொகை நாள் – சிறப்புக் கட்டுரை மாலைமலர் 9-7-23 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்!

(முதல் பகுதி)

ச. நாகராஜன்

உலக மக்கள் தொகை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தினால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் முக்கியத்துவம் பெற்றதாக ஆகி விடுகிறது.

மனித வரலாற்றில் மனித குலம் முதல் நூறு கோடி என்ற மக்கள் தொகையை 1803ஆம் ஆண்டில் தான் எட்டியது. அடுத்த நூறு கோடி 124 ஆண்டுகளுக்குப் பின்னர் 1927இலும் அடுத்த நூறு கோடி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் 1960இலும் எட்டியது. பின்னர் ஒவ்வொரு 12 ஆண்டுகளிலும் நூறு கோடி அதிகரித்து வருகிறது.

இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற அளவைத் தொட்டு விட்டது.

பிரம்மாண்டமான புவியில் இத்தனை பேர் தான் வாழ வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா?

யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பூமியில் உள்ள ஆதார வளங்கள் புவியில் வாழ்கின்ற மக்களால் சுரண்டப்பட்டாலோ அல்லது காற்று, நிலம், நீர் அசுத்தப்படுத்தப்பட்டு வாழ முடியாத நிலை ஏற்பட்டாலோ அதிக மக்கள் தொகை ஒரு அபாயம் என்ற கருத்து வலுப்படுகிறது.

இன்றைய நிலையில் பூமியில் இருக்கும் ஆதார வளங்களை ஒவ்வொரு நாளும் பூமியில் இருக்கின்ற வளத்தை 1.6 மடங்கு என்ற அளவில் அதிகமாகத் துய்த்து வருகிறோம்.

அதிக மக்கள் தொகை என்ற கருத்து எப்போது யாரால் உருவானது?

.

தாமஸ் மால்தஸ் என்ற பொருளாதார நிபுணர் 19ஆம் நூற்றாண்டில் தனது மக்கள் தொகை கோட்பாட்டை உலகின் முன் வைத்தார்.  மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் வளங்கள் தாக்குப் பிடிக்காது என்பதே அவரது கோட்பாடு. ஆகவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அவர் வலியுறுத்தினார்.

உலக மக்கள் தொகை தினம் முதன் முதலாக 1990இல் கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் தொகை 530 கோடி தான்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 கோடி பேர் பிறக்கின்றனர். 5.70 கோடி பேர் இறக்கின்றனர்.

ஆனால் இப்போது கருத்தரிக்கும் விகிதம் சற்றுக் குறைவாக இருப்பதால் மக்கள் தொகைப் பெருக்கமும் குறைவாக உள்ளது.

1992ஆம் ஆண்டு உலகில் உள்ள 20000 விஞ்ஞானிகள் உலக மக்களுக்கு உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

அடுத்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னும் இரு நூறு கோடிப் பேர் கூடிய நிலையில் இன்னொரு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். “இப்படிப்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம் மனித குலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும். சுற்றுப்புறச் சூழல் பெரிதும் கெடும். நாம் நமது இனப்பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்”  என்று அவர்கள் இந்த இரண்டாவது அறிவிப்பில் சுட்டிக் காட்டினர்.

இதனால் மனித குலம் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களும் பாதிக்கப்படும் என்றனர் அவர்கள்.

விஞ்ஞானிகள் ஒன்பது புவி சார்ந்த எல்லைகளைக் குறிப்பிட்டு இவற்றை சரியாகப் பாதுகாக்காமல் எல்லை  மீறினோம் என்றால் மனித குலம் அபாயத்தில் முடியும் என்று கூறுகின்றனர்.

மிக அதிக மக்கள் தொகை இந்த ஒன்பது எல்லைகளையும் மீற வைத்து உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதே இதன் சாரம்!

ஒன்பது எல்லைகளைப் பற்றிய சுருக்கமான விவரம் இதோ:

1) பருவநிலை மாறுதல் : புவி வெப்பம் கூடிக் கொண்டே போவதால் வெப்ப அலையினால் நோய்கள் பரவும். கிருமிகளை வெப்பம் வேகமாகப் பரவச் செய்யும் போது ஜிகா, டெங்கு, மலேரியா, நிபா போன்ற கொடிய வியாதிகள் வெகு விரைவில் பரவும். மனித குலத்திற்குப் பேரிழப்பு ஏற்படும். வெள்ள அபாயம், அசுத்த நீர் கேடு உள்ளிட்டவை ஏற்படும்

2) பல்லுயிர் இணக்கத்தின் இழப்பு : இயற்கை அன்னை அளித்துள்ள தாவரங்களைக் காக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு. நாம் வாழும் பூமியில் பயோமாஸ் எனப்படும் உயிரினத் தொகுதியில் 82.4 விழுக்காடு தாவரங்களே. 12.8 விழுக்காடு பாக்டீரியா. 0.4 விழுக்காடு மிருகங்கள். 0.01 விழுக்காடு மட்டுமே தான் மனிதன் இனம். 82 விழுக்காடு உள்ள தாவரங்கள். அனைத்து உயிரினங்களையும் காக்கிறது. பாடும் பறவைகளில் மட்டும் 360 வகை இனம் உள்ளது. இமயமலை பிராந்தியத்தை ஆராய்ந்த வல்லுநர்கள் 10000 விதமான பறவைகளின் அற்புத ஒலிகளைப் பதிவு செய்துள்ளனர். காடுகளையும் தாவரங்களையும் அழிப்பதால் இவையெல்லாம் அழிந்து கொண்டே வருகின்றன.. இப்படி பல்லுயிர் இணக்கத்தின் இழப்பானது மனித குலமே அழிய வழி வகுக்கும்.

3. கடல் நீர் அமிலமயமாதல் : பூமியின் தட்ப வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உதவுவது கடல் தான். அது ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. வளி மண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றுகிறது. ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆதாரமாக இலங்குகிறது. கடல் நீரில் அமிலங்கள் கலப்பதால் மீன்கள், சிப்பிகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து படுகின்றன. பல நாடுகளின் பொருளாதார வளமே இதனால் சிதைகிறது.

                                – நாளை தொடரும்

—–subham——–

Hinduism Crossword 10 7 2023 (Post No.12,256)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,256

Date uploaded in London – –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 14 words with the help of colour coding and clues.

1  2   3
     45 
        
6 ⇣⇢     7   
   8 9  
        
10    11   12

Across

1.Mango Tree in Sanskrit

3.He is the son of Raghu in Kalidasa’s famous Raghuvamsa

6. Great Dancer form of Shiva

8.Vehicle; all Hindu Gods have this

10.Horse in the famous Yajna performed by Kings

XXXXX

Down

2.Sea, ocean in Sanskrit

4.English word Common is derived from it; “universal,” “general,” “inclusive,” “whole” and “entire  in Sanskrit

5. Mentioned as a medical author in Brahmavaivartapurāṇa; Teacher name in Mahabharata.

6.Snake deity; English word Snake is derived from it (go up)

6.Man in Sanskrit (go down)

7.Tune in Indian music

9.Satavahana king and author of Gatha Sapta Sati (go up)

11.Fragrant wood; used in incense sticks (go up)

12. ⇡Movement of Sun, Movement, Shelter (go up)

Xxxx

Answers

A1MRA2 N S23
G MR A4J 5A
AA N LAM
N6ATAR7AJA
AA V8AH9AN
R VAG LY
A10SVAA 11 IA 12

Answers

1.AMRA; 2.ARNAVA 3.SAMANYA; 3.AJA;5.JAJALI 6. NATARAJAN, 6.NAGA (go up)

6.NARA (go down), 7.RAGA. 8.VAHAN, 9.HALAN; 10.ASVA 11.AGAR (go up)

12.AYANAM (go up)

—subham—-Tags- CW, 1072023, Hinduism

அதிகம் அடிபட்டவர் சிவபெருமான் ! (Post No.12,255)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,255

Date uploaded in London – –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக் கடவுளரில் அதிகம் அடி வாங்கியவர் சிவன்தான் என்று  மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் இன்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டார் துர்க்கை அம்மன் குறித்து உரை நிகழ்த்திகையில் இதையும் குறிப்பிட்டார். எளிதில் வசப்படும் சிவன், , கருணை காரணமாக எல்லோருக்கும் உடனே வரம் தருகிறார்.

பாசுபதம் பெறச் சென்றபோது அர்ஜுனன் வில்லால் அடித்தான். கண்ணப்பன் செருப்போடு அவர் மீது காலை வைத்தான். மாணிக்கவாசகர் முதுகில் பாண்டியன் அடித்த போது அந்த  அடியையும் வாங்கினார் என்றார்

(இத்தோடு சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததையும், .தருமி பொற்கிழி வழக்கில் சிவனை நக்கீரர் சொல்லால் அடித்ததையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம் )

சொ சொ மீ சுந்தரம் , 51 ஆண்டுகளுக்கு சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசித்தவர் .மூன்று முறை கயிலை சென்று தரிசனம் செய்தவர்..

போகாத கோவில் இல்லை; பேசாத நாள் இல்லை ..

பட்டி மன்றம் புகழ், மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் லண்டனுக்கு வருகை புரிந்துள்ளார் .

இன்று 10-7-2023 அன்று லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில், லண் டன் கனக துர்க்கை அம்மன் கோவில் வரலாறுகளை அழகுபடச்  சொன்னார்

(மதுரை தினமணி அலுவலத்தில் எனது தந்தை ஆண்டுதோறும் நடத்தீய பட்டி மன்றங்களில்  சுமார் 40 , 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொ சொ மீ சுந்தரம் பேசியது  இன்றும் நினைவில் நிற்கிறது )

தான் ஆஸ்திரேலியா சென்றாலும் அங்கும் யாழ்ப்பாணத் தமிழர் கோவில்களையே கண்டதாகவும் அவர்களுடைய இந்து மத சேவையை வணங்குவதாகவும் சொ சொ மீ சுந்தரம் குறிப்பிட்டார்.

லண்டன் கனக துர்க்கை வழிபாடு 1991ல் துவங்கி, முதல் கும்பாபிஷேகம் 1999லும் , இரண்டாவது கும்பாபிஷேகம் 2011 ஆம் ஆண்டிலும், இப்போது மூன்றாவது கும்பாபிஷேகம் சென்ற ஜூன் மாதத்திலும் நடந்ததை எடுத்துரைத்ததார் .

முன்னதாக பட்டர் பேசுகையில் இன்று ஆலயத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை என்பதை அறிவித்தார் . அதைக் குறிப்பிட்டும் பேசிய சொ சொ மீ சுந்தரம் , இத்தகைய குருபூஜைகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அரிதாகிவிட்டது என்றார்.. சுந்தரர்– ஏயர்கோன் கலிக்காம நாயனார் மோதல் பற்றியும் பின்னர் சிவ பெருமானின் கருணைக்கு அவர் ஆளானதையும் சுவைபட விளக்கினார்

18-7-2023 வரை காலை 11 மணிக்கும்மாலை 7 மணிக்கும் 60 நிமிட சொற்பொழிவுகளை சொ சொ மீ சுந்தரம் வழங்குகிறார்.

அனைவரும் வருக.

—subham—-

Tags–  அடி வாங்கியவர்,  சிவன்,சொ சொ மீ சுந்தரம்

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 4 (Post No.12,254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,254

Date uploaded in London – –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 4

23.விதுர அரச மரம் ( விதுரஸ்வத்த வ்ருக்ஷ )

பெங்களூரு நகரிலிருந்து 50 மைல் தொலைவில் விதுரர் அஸ்வத்த / அரச மரம் இருக்கிறது. மஹாபாரத புகழ் விதுரர் , யுத்தத்துக்குப் பின்னர் தென்னாட்டுக்கு வந்த பொழுது நட்ட அரச மரம் என்று கருதப்படுகிறது. இதனால் இது வழிபாட்டுக்குரிய இடமாககே கருதப்படுகிறது. இதே போல புத்தரின் போதி /அரச மரம் இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம். பழைய மரம் பட்டுப்போவதற்குள் புதிய மரம் முளைப்பதால் தொடர்ச்சி காணப்படுகிறது. மஹாபாரத யுத்தம் கலியுகம் துவங்கும் முன் நடந்ததால் விதுர அஸ்வத்த மரம் குறைந்தது 5000 ஆண்டு பழமை உடைத்து. .கெளரிபி டானூர் அருகில் இது இருக்கிறது. இங்கும் குழந்தை பிறக்காதோர், நாக தோஷம் விலகுவதற்காக வைத்த எண்ணற்ற நாகர் சிலைகளைக் காணலாம்.

அரச மரத்தில் பிரம்மா , விஷ்ணு, சிவன் மூவரும் உறைவதாக இந்துக்கள் கருதுவதால் இந்துக்கள் அதைச் சுற்றி வலம் வந்து வணங்குவார்கள் . அதன் கீழ் பிள்ளையார் அல்லது நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்

24.பாண்டவர் கோவில்- பீமலிங்கேஸ்வரர் Bheemalingeswara Temple

சிக்கபலபூர் வட்டாரத்தில் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் நிறுவிய பீமலிங்கேஸ்வர் சிவன் கோவில் இருக்கிறது ; இதிஹாஸக் கதையாலும், கலை அம்சத்தாலும் இந்தக் கோவில் சிறப்பு பெறுகிறது.

மஹாபாரத காலத்தில் இதற்கு ஏக சக்ர புரம்  Ekachakrapuram என்று பெயர் இருந்ததாம். அங்கு மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பகாசுரன் Bakasura என்பவனை பீமன் கொன்ற பின்னர், சிவனை நோக்கி தவம் புரிந்ததாகவும், சிவன் அவர் முன் தோன்றியதாகவும் ஸ்தல புராணம் சொல்லும்.சிவனுக்கு பீமன் ஒரு கோவிலைக் கட்டினார்.

கைவர நாராயண தட்டய்யா Saint Narayanappa (1730-1840 ADನಾರಾಯಣ ತಾತ)

தெலுங்கு, கன்னட மொழிகளில் விஷ்ணுவின்  புகழ் பாடிய புலவர் கைவர நாராயண தட்டய்யா , அருகிலுள்ள குகையில் சிறுத்தை, புலி சூழ தவம் செய்தாராம். ஜீவ சமாதி சடங்கின்படி அவர் உயிருடன் புதைக்கப்பட்டார். அவருடைய யோகி நாராயண ஆஸ்ரமம் இந்த ஊரில் இருப்பது கூடுதல் சிறப்பும் ஆகும்.

Amara Narayana Temple அமர நாராயணா கோவில்

இங்கு அமர நாராயணர் கோவில் , கன்யகா பரமேச்வரி Kanyakaparameshwari Temple கோவில்களும் இருக்கின்றன. குன்றில் பீமன்- பகாசுரன் சண்டையைக் காட்டும் காலடிச் சுவடுகளும் காணப்படுகின்றன.

xxxxx

25.விஸ்வ சாந்தி ஆச்ரமம் BHAGAVAD GITA MANDIR

பெங்களூர் நகரிலிருந்து 25  கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில்  உள்ள விஸ்வ சாந்தி ஆச்ர மம் 1982ல் கேசவ்தாஸ் சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. தற்காலக் கோவில் என்றாலும் இங்கே குறிப்பிட்டத்தக்க பல கடவுள் சிலைகள் உள்ளன.விஷ்ணுவின் அவதாரமான விட்டல் சிலை 36 அடி உயரத்துக்கு கம்பீரமாகக் காட்சி தருகிறது .சந்தோஷி மாதா சந்நிதி, காயத்ரி, துளசி மாடம் ,, விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், 7 புனித நதிகளைக் குறிப்பிடும் 7 நதி தேவதைகள், அஷ்ட லெட்சுமி, துர்கா சிலைகளும் இருக்கின்றன

எல்லாவற்றுக்கும் மேலாக 700 பகவத் கீதை ஸ்லோகங்களை பல மொழிகளில் பொறித்து வைத்துள்ள பகவத் கீதை மந்திரும் இருக்கிறது. கிருஷ்ண அர்ஜுன ரதம் பெரிய அளவில் முகப்பில் காட்சி தருகிறது.

XXXXX

. 26.நான்கு முக மலையில் 4 கடவுள்

பெங்களூர் நகரிலிருந்து 56  கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில்  4600 அடி உயரமுள்ள அதிசய மலை இருக்கிறது கிழக்கிலிருந்து பார்த்தால் நந்தியாகவும், மேற்கிகிலிருந்துபார்த்தால் கணபதியாகவும்,, தெற்கிலிருந்து கண்டால் லிங்கமாகவும், வடக்கிலிருந்து கண்டால் படம் விரித்தாடும் பாம்பாகவும் காட்சி தரும் . கர்நாடகம் முழுதும் பாம்பு/ /நாகர் வழிபாடு உண்டு. இந்த இடத்தின் பெயர் சிவகங்கே..

கங்காதரர் சிவன் கோவிலும் ஹொன்னாதேவி அம்மன் கோவிலும்  பாதாள கங்கை என்னும் இயற்கை நீரூற்றும் இருப்பதால் புனிதத்துவம் மிக்க இடமாகக் கருதப்படுகிறது.

XXXX

பெங்களூர் நகரிலிருந்து 70  கி.மீ தொலைவில் சித்த கங்கா க்ஷேத்ரம் இருக்கிறது . இது ஒரு குன்று. வீரசைவத் துறவி சித்தலிங்கேஸ்வரர் சமாதி அடைந்த இடம். ஒரு இயற்கை நீரூற்றும் உள்ளது .

Xxxxx

27.தேவராயண துர்கா Devarayana Durga

தேவராயண துர்கா ஒரு மலை. துர்க என்றால் கோட்டை. இந்தக் குன்றில் பல கோவில்கள் இருந்தாலும் யோக நரசிம்மர் போக நரசிம்மர் கோவில்கள் மிகவும் பிரசித்தமானவை . நிறைய பக்தர்களை ஈர்க்கும் கோவில். இந்த இடம் துமக்கூர் அருகில் இருக்கிறது. மலையில் உள்ள வற்றாத நாமதா சிலுமே என்ற இயற்கை ஊற்று பற்றி ஒரு கதையும் உண்டு. சீதாதேவிக்குப் பொட்டு வைக்க தண்ணீர் இல்லாததால் ராம பிரான் தனது அம்பால்  ஒரு ஊற்றை உண்டாக்கினார் என்பதும் அதுவே இன்றும் தண்ணீரை வழங்குகிறது என்பதும் நம்பிக்கை..

To be continued………………………………

Tags – கர்நாடக மாநிலம்,  108 , புகழ்பெற்ற,  கோவில்கள் – 4, அரச மரம், வழிபாடு, விதுரர், பீமன், ஊற்று , நான்கு முக மலை

QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,253

Date uploaded in London – –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?

xxxx

2.மாணிக்கவாசகர் காலத்தில் நடந்த நரி-பரி  திருவிளையாடலை யார் முதலில் குறிப்பிடுகிறார். அதிலிருந்தது நமக்குத் தெரிவது என்ன ?

xxxxx

3.மாணிக்கவாசகர் கால பாண்டிய மன்னர் யார்?

XXXXX

4.மாணிக்கவாசகர் பற்றி இன்றுவரை துலங்காத மர்மம் என்ன?

XXXXX

5.மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் தவிர அவர் வேறு என்ன நூல்

பாடினார்?

xxxxx

6.மாணிக்கவாசகர் பாடிய நூலில் அவரே குறிப்பிடும் மன்னர் பெயர் என்ன ?

xxxxx

7. திருவாசகத்தை முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? சைவத் திருமுறைகளில் அது எங்கே இடம்பெறுகிறது?

Xxxxxx

8.மாணிக்கவாசகரின் திருவாசக முதல் பாடலிலும் கடைசி பாடலும் உள்ள ஒற்றுமை என்ன?

xxxx

9.மாணிக்கவாசகரின் எந்தப் பாடலில் டார்வினின் பரிணாமக் கொள்கையும் (Theory of Evolution )இந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையும் (Reincarnation or Rebirth)   வருகிறது?

Xxxxx

10.மாணிக்கவாசகரின் எந்தப்பாடலில் BIG BANG THEORY பிக் பேங்  என்ற  வானியல் அண்ட வெடிப்புக் கொள்கை வருகிறது ?

Xxxxx

விடைகள்

1.மாணிக்கவாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது; அவர் பிறந்த திருவாதவூரின் பெயரால் வாதவூரார் என்றும் இறைவன் கொடுத்த பெயரால் மாணிக்க வாசகர் என்றும் அழைக்கப்படுகிறார்

(என் ஆராய்ச்சிக்கட்டுரையில் வாதவூர் இறைவன் பெயர்தான் அவர் அம்மா, அப்பா சூட்டிய பெயர் என்று காட்டியுள்ளேன்;அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்= பொய் அடிமைஇல்லாத புலவர்)

xxx

2.தருமி என்ற பிராமணப் புலவருக்கும் நக்கீரருக்கும் ஏற்பட்ட சண்டையைப் பாடிய அப்பர் பெருமானே தே வாரத்தில் நரி- பரி அதிசயம் பற்றியும் பாடுகிறார் (காண்க- மாணிக்கவாசகர் காலம் எது?) அதிலிருந்தது நமக்குத் தெரிவது மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.

மேற்கோள்கள்:-

1.தருமி பொற்கிழி கதை

நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்

– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்

விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்

முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த

அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

xxxxxx

3. அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!

Xxxxxx

4.பெரிய புராணமும் திருத்தொண்டத்தொகையும் குறிப்பிடும் நாயன்மார் பட்டியலில் இவர் பெயர் நேரடியாக இல்லை. அதே போல மாணிக்கவாசகர் பாடல்களிலும் தேவார மூவர் பெயர் நேரடியாக இல்லை.; இது ஏன் என்றே தெரியவில்லை.

xxxxxxx

5.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்றவுடன் அவர் திருக்கோவை பாடியதாக சொல்லுவார்கள்

xxxxxx

6.பெரிய வரகுணன் ; (இது இரண்டு பாண்டியர்களுக்கு இருந்த பெயர்.).

xxxxxxx

7.ரெவரெண்ட் ஜி .யூ .போப் G U Pope என்ற கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அது எட்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது .

xxxxx

8.ஓம்காரம்

திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்.

இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்

xxxxx

9.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

யாப்பிலக்கணம் காரணமாக, பரிணாம வளர்ச்சியின் வரிசை சிறிது மாறியிருப்பதைக் காணலாம். டார்வினின் பரிணாமக் கொள்கை

xxxxxxx

திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:

அண்டப்பகுதியின் (UNIVERSE IS EGG SHAPED) உண்டைப் பிறக்கம் (BIG BANG)

அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

ஒன்றனுக்கொன்று  (GRAVITY SUSTAINS IT )நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் (BILLION SUNS) மேற்பட விரிந்தன

—திருவாசகம்

பாரதியும் ,

நக்கபிரானருளால் இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அணடங்கள் வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம்

இக்கணக்கு எவர் அறிவார் – புவி

எத்தனை உளதென்பது யார் அறிவார்

என்று பாடி வியக்கிறார்.

—சுபம்—-

Tags- மாணிக்கவாசகர், நரி -பரி , அப்பர், திருவாசகம், திருக்கோவை, Quiz

நடந்தவை தான் நம்புங்கள் (Post No.12,252)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,252

Date uploaded in London –  10 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்பாகம் 2 –

அத்தியாயம் 5

.நாகராஜன்

பாராட்டுபாராட்டு!

பாராட்டுவது என்பது உலகில் பலருக்கும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தியாவிலோ ஒருவருக்குப் பாராட்டு கிடைத்தது என்றால் அது மிகப்பெரிய அபூர்வமான விஷயம் தான்!

பாரிஸில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு சமயம் ஒபேரா அரங்கம் ஒன்றில் ஒரு பிரபல பாடகர் வருவதாக இருந்தது. ஆகவே டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனையாகி அரங்கமே நிரம்பி வழிந்தது.

நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் தருணத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மைக்கைப் பிடித்தார். “அன்பார்ந்த ரசிகர்களே! நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பாடகருக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அவருக்குப் பதிலாக இன்னொருவர் வந்து உங்களை மகிழ்விப்பார்” என்றார் அவர்.

கூட்டத்தினருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. பலர் உறுமினர். பலர் கொதித்தனர்.

பதிலியாக வந்தவர் தனது திறமையைக் காட்டலானார். அற்புதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. ஆனால் அரங்கத்தில் ஒரே மௌனம் தான். யாரும் கைதட்டவில்லை.

திடீரென்று பால்கனியிலிருந்து ஒரு இளம் குரல் சத்தமாகக் கேட்டது. “அப்பா! ரொம்ப அருமை! அற்புதம்” என்றது அந்தக் குரல்.

ஒரு நிமிட தாமதத்திற்குப் பின்னர் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

நம் அனைவருக்குமே தேவையாக இருப்பது நமக்காக நம்மைப் பாராட்டிக் கைதட்ட முதலாவதாக ஒரு ஆள் வேண்டும் என்பது தான்!

*

திணிக்கப்படும் சந்தர்ப்பங்கள், திடீர் முடிவுகள்!

மீன் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ஒருவர் ஏரிக்குப் போன போதெல்லாம் அவரால் ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடிவதில்லை.

ஆனால் அவருக்குத் தெரிந்த ஒருவரோ எப்போதுமே மீன் நிரம்பிய கூடையுடன் தான் ஏரியிலிருந்து திரும்புவது வழக்கம்.

தனக்கு மட்டும் ஏன் மீன் கிடைப்பதில்லை, அவருக்கு மட்டும் எப்படி மீன்கள் இந்த அளவில் கிடைக்கிறது என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

ஒரு நாள் தன் நண்பரை அணுகிய அவர், “ராம்! உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீன்கள் கிடைக்கின்றன?” என்றார்.

அதற்கு ராம், “என்னுடன் படகில் ஏறுங்கள்” என்றார்.

நண்பரும் ராமின் படகில் ஏறினார். மிகப் பெரிய ஏரியின் நடுவில் படகு சென்றது. நின்றது.

ராம் தனது பையிலிருந்து ஒரு டைனமைட்டை எடுத்தார். பொருத்தினார். அதை ஆகாயத்தில் தூக்கி எறிந்தார். அவ்வளவு தான்! படார் என்ற சத்தத்துடன் அது வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த வெடிப்பினால் இறந்து போன மீன்கள் ஏராளமாக நீரில் மிதக்க ஆரம்பித்தன. ராம் தனது வலையை விரித்தார். மீன்கள் அனைத்தையும் அதில் பிடித்தார். பின்னர் அள்ளித் தன் கூடையில் போட்டார்.

“பார்த்தாயா! இது தான் என் வழி!“ என்றார் ராம் தனது நண்பரிடம்.

நண்பர் அரண்டு போனார்.

அடுத்த டைனமைட்டை ராம் எடுத்தவுடன் நண்பர் அலறினார்.

“ஓ! இது தப்பு, தப்பு! உன்னை ஜெயிலில் வைக்க நானே ஏற்பாடு செய்வேன்” என்றார் நண்பர்.

ராம் தான் எடுத்த டைனமைட்டைப் பொருத்தி நண்பரிடம் தூக்கிப் போட்டார்.

“இப்படி நாள் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கப் போகிறாயா? அல்லது மீன்களைப் பிடிக்கப் போகிறாயா?” என்றார்.

உடனடியாக முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார் நண்பர்.

டைனமிட்டைத் தூக்கி வானத்தில் எறிந்தார். புகார் செய்ய இருந்தவர் மீன் பிடிக்கும் பங்காளி ஆனார்.

வெடிப்பான முடிவுகள் சில சமயம்  வாழ்க்கையில் துடிப்பாக எடுக்கப்பட வேண்டியிருக்கிறது!

வாழ்க்கையே இப்படித் தான்!

எதிர்பாராத, நாம் விரும்பாத, நாம் வரவேற்காத, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் உடனடியாக முடிவை எடுக்கத் தூண்டுகின்றன.

நாம் கேட்காமலேயே இவை நம் மீது திணிக்கப்படுகின்றன.

சீக்கிரமாக, வேகமாக, உடனடியாக, திடீரென்று, சிந்திக்க, ஆலோசிக்க, அடுத்தவரிடம் யோசனை கேட்க முடியாதபடி உடனடியாக முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.

எடுக்கிறோம் ‘டமால்’ என்று!

**

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 972023 (Post No.12,251)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,251

Date uploaded in London – –  9 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 7  சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்

1.மீனாட்சி என்பதன் தமிழாக்கம்

2.உணவுச்சத்தை ரத்தம் இழுத்துக்கொள்வதை இப்படிச் சொல்லுவர்

5.சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம்; தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக  எடுத்த கோலமாகும் ⇠

XXXX

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1. சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள்  பாடியவர். பெயரில் 3 எண் இருக்கும் .

1.மணிமேகலை கையிலிருந்த  அட்சயபாத்திரம்

3. சிவப்பு வர்ண மண்

4. விரும்பிய வனைத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி;ஐம்பெருங் காப்பியப்  பெயர்களிலும் காணப்படும் சொல்.

1       
        
  2      
      3 
       4
     5  

விடைகள்

1.அங்கயற்கண்ணி , 2.தன்மயம், 5.பிட்சாடனர்

XXXX

1.அம்மூவனார், 1.அமுத சுரபி, 3.செம்மண்

4.சிந்தாமணி

அ1ங்ற்ண்ணி
ம்மு    
மூ த2ன் ம்தா
  சு  செ3ந்
னா     சி4
ர்சாட்பி5  

XXXXXXX  SUBHAM XXXXXXXXX tags- தமிழ் , குறுக்கெழுத்துப் போட்டி, 972023 

காசியின் 5 சிறப்புகள் ; திருமீயச்சூர் அதிசயங்கள் (Post No.12,250)

Professor So.So.Mee. Sundaram speaking in London Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,250

Date uploaded in London – –  9 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இன்று லண்டன் ஈலிங் பேட்டையில் இருக்கும் கனக துர்க்கை அம்மன் கோவிலில்( KANAGA THURKAI AMMAN TEMPLE, CHAPEL ROAD, EALING, LONDON ) மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ .சொ .மீ . சுந்தரம் அவர்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை பற்றி சொற்பொழிவாற்றுகையில் கேட்ட செய்தி:—

காசியின் 5 சிறப்புகள்

காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை..

அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார்  சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி

அனைவரும் வருக ; இறை அருள் பெறுக

   ALL ARE WELCOME; TAMIL TALK; DONT MISS IT ; UNTIL 18TH JULY 2023 AT EALING KANAGA DURGA TEMPLE IN LONDON. 11 AM AND 7 PM; TWICE A DAY FOR JUST ONE HOUR.

அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார்  சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி

அனைவரும் வருக ; இறை அருள் பெறுக

XXXXX

சொ .சொ .மீ . மேலும் கூறியதாவது

திருமீயச்சூர் அதிசயங்கள்

தாமரை இலையில் வைக்கப்பட்ட பிரண்டை  பிரசாதம் ; பிரண்டைஅல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis)  பல அபூர்வ மருத்துவ குணங்கள் உள்ள தாவரம்/ மூலிகை .

இங்குள்ள ஸ்படிக லிங்கத்தில் ஒரு கோடு/ ஸ்வர்ண ரேகை இருக்கிறது.

சம் பந்தரால் பாடல் பெற்ற தலம் ( ஆகையால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தியது

பெயர் காரணம்

சூரியனுடைய தேர் டிரைவர் DRIVER அருணனுக்கு கால் நொண்டி. அவனை சூரியன் கிண்டல் செய்யவே சூரியனுக்கு கருமை நிறம் ஏற்பட வேண்டும் என்று சிவன் சாபமிட்டார். பின்னர் அந்த சாபம் நிறைவேற இறைவனும் இறைவியும் உதவினர்கருப்புப் புள்ளிகளால் ஒளி இழந்த சூரியன் மீண்டும் ஒளிபெற்றதால் மீயச் சூர் ஆனது

வலது காலை மடித்து மேலே வைத்துக்கொண்டு இடது காலைத் தொங்கவிடும் அபய ஹஸ்த தேவியை வேறு எங்கும் காண முடியாது .

திருவாரூர் அல்லது கும்பகோணத்திலிருந்து செல்லலாம்.

இன்னும் ஒரு அதிசயம் சூரியன் ஒளி கிரணங்கள் ஆண்டுதோறும் சித்திரை மாத 21ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு சிவலிங்கம் மீது படுகிறது..

சூரியனுக்கு தனி சந்நிதி உள்ளது.

இறைவி பெயர்- லலிதாம்பிகை, மேகலாம்பிகை

சிவா பெயர் – மேகநாத சுவாமி, முயற்சிநாதர்

கோவில் இளங்கோயில், திருக்கோயில் என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. சுவாமி சந்நிதிக்கு வலது புறம் லலிதாம்பிகை சந்ந்நிதி இருக்கிறது

அபூர்வ சிற்பங்கள் நிறைந்த கோவில்  . லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய கோவில்

கொலுசு அதிசயம்

சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணின்  கனவில், அம்பிகை தோன்றி கொலுசு சார்த்தும் படி சொல்லவே அவரும் வெள்ளிக் கொலுசுடன் கோவிலுக்கு வந்தார்.ஆனால் அங்குள்ள பட்டரோ கொலுசை நுழைக்க அந்த விக்ரகத்தில் துவாரம்/ இடைவெளி இல்லையே என்று சொல்லி அனுப்பிவிட்டார். பின்னர் அடித்த மழை ஒன்றில் தொங்கும் காலிலே வெள்ளம் செல்ல, ஒரு இடைவெளி இருப்பது தெரிந்ததாம்.அடடா, இந்தக் காலில் கொலுசை நுழைத்து இருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, மடித்து வைக்கப்பட்ட காலை நோக்கியபோது அங்கும் கொலுசை போடுவதற்கு வசதியாக இடைவெளி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த அம்மையார் வந்து கொலுசுகளை லலிதாம்பிகைக்கு சாத்தினார். இப்பொழு கொலுசு சார்த்துவது ஒரு காணிக்கையாக அமைந்து எல்லோரும் சாத்துகின்றனர்

( இது பற்றி, நான் சென்று வந்த பின்னர் எழுதிய கட்டுரையில் முழு விவரம் கொடுத்துள்ளேன். அந்த விதிகளின் படியுள்ள கொலுசுகளை மட்டுமே கோவில் நிர்வாகம் ஏற்கும் ).

கொல்லூரிலும் சோட்டாணிக்கரையிலும் கோவில் ஏற்பட்ட வரலாறுகளையும், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர் வாழ்வில் ஏற்பட்ட அதிசயங்களையும் சொ .சொ .மீ . விரிவாக எடுத்துரைத்தார். 

—-TAGS—- 

TAGS- சொ .சொ .மீ . திருமீயச்சூர் அதிசயங்கள் , கொலுசு அதிசயம் , காசியின் 5 சிறப்புகள், சூரியன்