ஐயரைத் திட்டினால் ஆயுள் குறையும்:  அம்பலவாணர் எச்சரிக்கை (Post. 11, 698)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,698

Date uploaded in London – –  22 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எதை எதை காசு கொடுக்காமல் பெறக்கூடாது  என்றும் எதை எந்த ஜாதியினர் கொடுத்தாலும் வாங்கலாம் என்றும் முதல் பாடலில் சொல்கிறார் அம்பலவாணர். பிரமணர்களைத் திட்டினால் ஆயுள் குறையும் என்றும் எச்சரிக்கிறார்.

அடுத்த பாடலில் தத்துவங்கள் என்ன என்று எண்ணிக் காட்டுகிறார்.

மின்னுவதெல்லாம் பொன் அல்ல;

வெளுத்தது எல்லாம் பால் அல்ல ;

பூணுல் அணிந்தவர் எல்லாம் ஐயர் அல்ல;

உயர்ந்தோர் HIGHER ஹையர் = ஐயர் ;

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,

திமிர்ந்த ஞானச் செருக்குடையோர் ; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோர் பிராமணாள்; வறுமையில் வாடினாலும், என் ஜாதியை கீழ் ஜாதி பட்டியலில் சேருங்கள் என்று கேட்காதவர், கெஞ்சாதவர்  உண்மையிலேயே HIGHER ஹையர் தானே?

ஆகவே, அம்பலவாணர் சொல்லும், ஒழுக்கம் உடைய  அந்தணருக்கு ஆதரவு தாருங்கள்.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு  என்ற என்னுடைய பழைய கட்டுரை இதோ::–

பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.: 

இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே! 

பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே. ;

இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!! 

விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ

அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5 

பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும்   அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே. 

பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச

நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6 

பொருள்

அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே..

xxx

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!

அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர்.; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.

 ‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது. .

நவ நந்தர்களை வேருடன் அறுத்து, அலெக்ஸ்சாண்டரும் கண்டு அஞ்சிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சாணக்கியன் இதற்கு உதாரணம்..

xxxxx

இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்::-

சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;

அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;

உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு

–திரிகடுகம், நல்லாதனார்

உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.. 

பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்::-

“அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்”-

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

88. பல்துறை,  அறப்பளீசுர சதகம்

தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்

     தங்களுக் கவைத ழுவுறா!

  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்

     தயவிலோர் ஆயுள் பெருகார்!

மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்

     வீடுநற் செந்நெல் இவைகள்

  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்

     விலைகொடுத் தேகொள் ளுவார்!

தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்

     தீண்டரிய நீசர் எனினும்

  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்

     சீலமுடை யோர்என் பரால்!

ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) ஆன் கொடி உயர்த்த உமை நேசனே – ஏற்றுக்கொடியை

உயர்த்திய உமையன்பனே!, ஈசனே – செல்வத்தை யளிப்பவனே!, அண்ணலே

– பெரியோனே!, அருமை ……. தேவனே!, தாம்புரி தவத்தையும்

கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா – தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் புகழ்ந்து கூறிக்கொள்வோருக்கு அவை கிடையாமற் போய்விடும், சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய்

தயவு இலோர் ஆயுள் பெருகார் – சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கமிலோர்க்கு ஆயுள் குறையும், மேம்படு நறுங்கலவை மாலை தயிர் பால்,

புலால் வீடு நல் செந்நெல் இவைகள் – உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம்,மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை,வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்தபேர் விலை கொடுத்தேகொள்ளுவார் – மற்றொருவர் கொடுத்தாலும் மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள், தேன் கனி கிழங்கு

விறகு இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற

அளிப்பரேல் – தேனையுங் கனியையுங் கிழங்கையும் விறகையும்

இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத்தகாத

இழிந்தோரானாலும் சிறப்புறக் கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக்கொள்வர் – ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.

     (வி-ரை.) ஆல் : அசை. ஈசன் – செல்வமுடையோன்.

Xxxxxxxxxxxxxxxxxxxx

        89. முப்பொருள் (தத்துவத் திரயம்), அறப்பளீசுர சதகம்

பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்

     பொருந்துமிந் திரிய மைந்தும்,

  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்

     புகலரிய கரணம் நான்கும்,

ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;

     உயர்கால நியதி கலையோ

  டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்

     றுரைசெய்யும் ஓரே ழுமே

தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்

     திகழ்சுத்த வித்தை ஈசன்,

  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே

     சிவதத்வம் என்ற றைகுவார்;

ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) ஆதிவடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்

அண்ணலே – முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் சனகர்

முதலானோர்க்கு அருள்புரிந்த பெரியோனே!, அருமை……தேவனே!,

பூதம் ஓர் ஐந்து – ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் –

(அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம்

ஐந்தும் – ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம்

ஐந்தும் – உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி

ஆம் புகல் அரிய கரணம் நான்கும் – மனம் முதலிய சொல்லற்கரிய

கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர்

சொல்வர் – இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்,

உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன்

மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம்

என்றிடுவர் – உயர்வாகிய காலம்நியதி, கலைகளோடு கூறப்படும்

ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர், இவை அலால்

– இவையல்லாமல், திகழ்சுத்த வித்தைஈசன், சீர்கொள் சாதாக்கியம்,

சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் – விளங்கும்

சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய)

ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.

     (வி-ரை.) பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். புலன்

ஐந்து : சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். ஞான இந்திரியம் ஐந்து :

மெய், வாய், கண், மூக்கு, செவி. கன்ம இந்திரியம் ஐந்து : வாக்கு, பாதம்,

பாணி, பாயுரு, உபத்தம். கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

வடம் – ஆலமரம். சனகாதியர் – சனகர், சனந்தகர், சனத்குமாரர், சஹ்யஜாதர். ஞான இந்திரியம் : அறிவுப்பொறி. கன்மஇந்திரியம்: தொழிற்பொறி ஆன்மதத்துவம் உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு

தத்துவங்கள் சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள்,

ஆக முப்பத்தாறு. (24+7+5= 36)

To be continued……………………………………..

TAGS– பிராமணர், திட்டாதே, அம்பலவாணர் , ஆயுள், ஐயர் , பழகினும் பார்ப்பானை, 36 தத்துவங்கள்

பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? (Post.11,697)

MRS.AHALYAA  GAUTAMA AND  ESCAPING INDRA; GAUTAMA RISHI CURSING HIM.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,697

Date uploaded in London –  22 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமாஅஹல்யை! – என்னம்மாஇப்படிச் செய்யலாமா? 

ச.நாகராஜன் 

புராண இதிஹாஸங்களின் மீது மிக்க மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு பெரிய சந்தேகங்கள் உண்டு.

அதைப் போற்றாதவர்களுக்கோ கேட்கவே வேண்டாம், அவர்களுக்குச் சந்தேகமே கிடையாது, இவையெல்லாம் அபத்தக் களஞ்சியம் என்று பரப்புவர். அதாவது திராவிட மாடல்!

சரி, முதலில் முக்கியமான சில சந்தேகங்களை மட்டும் வரிசைப் படுத்துவோம்.

பின்னர் பதிலைப் பார்க்க முயற்சி செய்வோம்.

இதோ கேள்விகள் :

1) த்ரிசிரஸ் என்னும் பிராமண உத்தமரை இந்திரன் கொல்லலாமா?

2) பாண்டவர் ஐவர், ஒருத்தியை – திரௌபதியை  மணக்கலாமா?

3) காமவேகத்தால் அஹல்யையை இந்திரன் கெடுக்கலாமா?

4) மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?

5) பரசுராமர் சொந்தத் தாயை கொல்லலாமா?

6) சந்திரன் குரு பத்னியை சேர்த்துக் கொள்ளலாமா?

7) பகவான் கிருஷ்ணர் கோபிகளை ரமிக்கலாமா?

இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான ஒருவன் அப்படிச் செய்தால் என்ன தப்பு?

விளக்கம் தேவை.

இதிஹாஸ, புராணங்களைப் போற்றுவோருக்கு எழும் நியாயமான சந்தேகங்களை அவர்கள் கேட்கின்ற போது அவர்களைத் திட்டி, அவமானப்படுத்தி அப்புறப்படுத்தி விடக் கூடாது.

தக்க விளக்கங்களை அளிக்க வேண்டும்.

முதலில் இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான நான் இது போலச் செய்தால் அதில் என்ன தப்பு என்ற கேள்வியைக் கவனிப்போம்.

இதே சந்தேகம் எழுந்தபோது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள சந்தேகம் கொண்டவர்கள்,  போதாயன மஹரிஷியை அணுகினர்.

அவர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறினார்.

“தேவர்களைப் போல நடக்க முயலாதே;

அவர்கள் சொல்லியதைப் போல நட”

“தேவர்களால் எது அனுஷ்டிக்கப்பட்டதோ,  முனிவர்களால் யாது அனுஷ்டிக்கப்பட்டதோ அது மனிதர்களால் கடைப்பிடிக்கக் கூடியதல்ல. அவர்கள் சொல்லியதை அனுஷ்டிக்க வேண்டும்.

ஏன் நாம் அப்படிச் செய்யக் கூடாது?

இதற்கு மனு காரணத்தை (ஹேது) கூறி விட்டார்:

“முன்னோர்களாகிய அந்த மஹான்களின் சரீரங்களும் இந்திரியங்களும் தேஜோ மயங்கள். ஆகையால் தாமரை இலையானது ஜலத்தினால் பற்றாமல் இருப்பது போல, அவர்கள் தோஷத்தினால் பற்றப்படுகின்றவர்கள் அல்ல”

நம் போன்றவர்களின் அறிவுக்கு எட்டாத யோகப் பெருமை பெற்றவர்கள் அவர்கள். அவர்களது வடிவம், உருவம், அமைப்பு, குணாதிசயங்கள் மனித விதிகளுக்கு உட்பட்டதல்ல.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு சரிதத்தையும் எடுத்து உன்னிப்பாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நமக்குக் கிடைக்கும் உண்மைகள் நம்மை வியப்படையவே செய்யும்.

பரசுராமர் தந்து தந்தையின் சொற்படி கேட்டார்; சித்தி பெற்றார்.

யாக்ஞவல்க்யர் ஆதித்தனை நோக்கித் தவம் செய்தார், சுக்ல யஜூர் வேத உபதேசத்தைப் பெற்றார்.

இந்திரன் மூன்று லோகங்களும் க்ஷேமம் அடையவேண்டியதன் பொருட்டு அதன் நிமித்தமாகவே பிரம்மஹத்தி தோஷத்தைத் தானே அங்கீகரித்துக் கொண்டான்.

உண்மையில் பார்த்தால், ஆதிசேஷ பகவானாகிய இறைவன் தேவர்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகவே அவர்களின் காரியத்தை முன்னிட்டே சுக்ல யோனி சம்பந்தமாக உள்ள யோனியை அடைந்து பலபத்ரராகப் பிறந்தான்.

பாண்டவர் ஐவரும் தனது தாயின் வசனம் சத்தியமாக ஆதல் வேண்டும் என்பதன் பொருட்டாகவே ஆச்சரியமான பல நிபந்தனைகளோடு திரௌபதியுடன் இல்லறம் நடத்தினர்.

சந்திரன் தனது தவத்தால் மஹேஸ்வரனுடைய பரம கருணைக்கு ஆளானதோடு மிகுந்த மேன்மையை அடைந்தான்.

பிரும்ம தேவன் சத் புத்திரன் ஜனிப்பதால் ஏற்படும் அபாரமாகிய சித்தியை விளக்கிக் காட்டினான்.

இவை எல்லாம் சாஸ்திரத்திற்கு விரோதமான செய்கைகள் அல்ல. புனிதமான செயல்களே. .

AHALYAA SAAPA VIMOCHANAM 

இப்படி தைத்திரீய உபநிஷத் தீபிகையில் விளக்கத்தைக் காணலாம்.

சாஸ்திரங்களையும் வேத, இதிஹாஸ புராணங்களையும் நன்கு கற்றறிந்த சங்கரானந்த சரஸ்வதி போன்ற மஹான்களால் எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகளைப் படித்தால் நமக்குப் பல உண்மைகள் புரியும்; சந்தேகங்கள் விலகும்.

 இனி இது பற்றி விளக்கமாக இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போமே

***

லண்டன் சுவாமிநாதனின் புதிய புஸ்தகங்கள்(Post No.11,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,696

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!! (Book Title)

 பொருளடக்கம்

1.கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

2.கண்டவர் விண்டிலர்:இரண்டு பையன்கள் கதை!

3.சமாதி என்றால் என்னசிவனிடம் பார்வதி கேட்ட கேள்வி!

4.பழமொழியில் இந்துமதம்

5.யார் பெரியவர்கடவுளாபக்தனா?

6.பஜ கோவிந்தம் தோன்றிய கதை

7.நூறு சட்ட புஸ்தகங்கள்! ஸ்ம்ருதிகள்

8.ஞயம்பட உரைவெட்டெனப் பேசேல்பழிப்பன பகரேல்

9.விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள்

10.சுவஸ்திகா இல்லாத இடம் எது?

11.ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை!

12.தமிழ் இந்து இளங்கோ!

13.பரிபாடல்சிலம்பில் ரிக்வேத வரிகள் !

14.தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தர குரு!!

15.நிறைகுடம் தழும்பாதுகுறைகூடம் கூத்தாடும்

17.இதுவும் ஒரு வகை செவ்வாய் தோஷமோ !

18.தமிழ்நாட்டைப் பற்றி 100 அதிசயச் செய்திகள்

19.பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம்!

20.நிஷ்கா தங்கக் காசுகள் முதல் அலெக்சாண்டர் நாணயம் வரை

21.ஒரு குட்டிக் கதை –கள்ள நாணயம்கள்ள மனம்

22.துரியோதனன் மனைவி — கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்

23.எந்த நூல்என்ன காலம் அறிஞர்கள் கருத்து

24.யுதிஷ்டிரன்-மரம்அர்ஜுனன்- பெரிய கிளை,  கிருஷ்ணன்- வேர்

25.சீதை வணங்கும் 11 பெண்கள் !

26.ராமாயணத்தில் ஜனநாயகம்சரணாகதி தத்துவம்! 

27.கம்பன் தரும் புது சரணாகதி பட்டியல்: வால்மீகியில் இல்லை

28.பாரதியார் கண்ட  அழகான காடு 

29.அழகியிடம் பாரதியார் கேட்ட 7 கேள்விகள்

30.சீனாஜப்பான்தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை!

31.தமிழர் தெய்வம் மணிமேகலையும் மணிபத்ராவும்

32.பாண்டிய ராணி வந்தாள்…………கூடவே…….

33.வினோபாஜிக்குப் பிடித்த பாரதி பாடல்கள்

34.வேத கால முனிவர்களின் ஆயுள்!

35.சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள்

36.கல்யாணம் கட்டாதேமுனிவர்கள் அறிவுரைவள்ளுவர் எதிர்ப்புரை

37.சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூதுமதியம் மாதுஇரவில் களவு!

38.வித்தும் இடல் வேண்டும் கொல்லோ!- வள்ளுவன்மனு ‘மூட நம்பிக்கை’

39.பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன்சேக்கிழார்

40.‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ –‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’

——xxxxxxxxxxx—–

ஆயிரம் இந்துமதப்  பொன்மொழிகள்

பொருளடக்கம்

1.சத்சங்கம்-நல்லோர் சேர்க்கை- பற்றிய 31 பொன்மொழிகள்

2.லக்ஷ்மீ – செல்வம் – பற்றி 31 பொன்மொழிகள்

3.ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

4.நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள்

(5). 31 திருக்குறளில் இந்துமதம்:

6.உலக அறிவு பற்றிய 31 பொன்மொழிகள்

7.உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே

(8).30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள்

9.எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள்

(10). 31 சம்ஸ்கிருத பொன் மொழிகள்!

11.ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்!

12.பாரதியார் பொன் மொழிகள் 31

13.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

14.ஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன்!

15.அதிர்ஷ்டம் பற்றிய 31 பொன்மொழிகள்

16.அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்

17.அவ்வையாரின் ஆத்திச்சூடி பொன்மொழிகள்

18.ஓம் பற்றிய 43 அற்புதப்  பொன்மொழிகள்

19.மேலும் 40 பாரதி பொன்மொழிகள்

20.கடல் பற்றிய 31 பொன்மொழிகள்

21.கம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)

22.கல்வி பற்றிய 30 தமிழ் பாடல் மேற்கோள்கள்

23.கவிஞர் ,புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்

24.வள்ளலார் பொன்மொழிகள் 31

25.மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள்

26.காலம் என்னும் அற்புதம் பற்றி 30 பொன் மொழிகள்

27.காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள்

28.கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்

29.சதபதப் பிராமணப் பொன்மொழிகள்

30.சத்தியம் பற்றிய 28 தமிழ் மேற்கோள்கள்

31.சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்

32.சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்

33. தண்டலையார் சதகம்- 31 பழமொழிகள்

34.தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள்

35. திருவாசகப் பொன்மொழிகள் 42

36.தொல்காப்பியப் பொன்மொழிகள் 31

37.நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும்

38. முப்பது அபூர்வ தமிழ் பழமொழிகள்

39.பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1

40.பட்டினத்தார் பொன்மொழிகள்- Part 2

 41.பத்து கெட்ட குணங்கள் எவை?

42.பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை!

43.பெண்களை உயர்த்தும் 5 ‘ ப ’

44.பெரிய புராணப்  பொன்மொழிகள்

45. விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

46.பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள்

47.மணிமேகலை பொன்மொழிகள் 31

48. சமண சமய பொன்மொழிகள்

49.சாணக்கியரின் 31 பொன்மொழிகள்

50.பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்

**********************

லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா?  (book title)

பொருளடக்கம்

1.நான் கண்ட ஸ்பானிய அரண்மனை

2.போர்ச்சுகல்லில் யோகா பரவுகிறது!

3.ரொம்ப நாளாக எனக்கொரு (டான்யூப் நதி) ஆசை! 

4.வியன்னா விஜயம் வெற்றி

5.சங்கீதத்துக்கும், ஓவியத்துக்கும் பஞ்சமில்லாத வியன்னா நகரம்

6.வியன்னா நகர ஓவிய மியூசியங்கள்

7.கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா

8.உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு –

கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக்  குரங்கு

9.ஏதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும்

10.அதீனா சிலையும் மத வெறியர்கள் அதை அழித்த கதையும்

11.அதீனா தேவி தோன்றிய கதை

12.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள்!

13.DAVID IN FLORENCE இத்தாலியின் புகழ்பெற்ற டேவிட் சிலை

14.ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொரு நீதி?

 15.ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்

16.ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்!

17.ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி!

18.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

19.ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று

20.உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்!

21.பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!

22.HONG CONG சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை!

23.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை!

24.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 1

25.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 2

26.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 3

27.பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்

28.லண்டன் ‘பூங்கா’ பார்க்க வாறீங்களா?

29.பிரிட்டனில் பேய் வீடுகள் பட்டியல் வெளியீடு, லண்டன் பேய் தோல்வி

30.லண்டனில் ஆர்க்கிட் (Orchids) மலர்க் கண்காட்சி

31.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!

32.லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்!

33.புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON

******************** 

வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

பொருளடக்கம்

1.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 1

2.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 2

3.தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 3

4.மரண தண்டனை மன்னன் ஹமுராபி

5.மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்?

6.நான்தான்டா ஹமுராபி! நல்லமுத்து பேரன்!

7.கம்பனும் ஹமுராபியும்

8.பெண்கள் மீது ஹமுராபி பாய்ச்சல்

9. ‘இந்துக்களுக்கு கடல் ஒரு கால்வாய்- பூமி ஒரு முற்றம்’

10.நான்கு தசரதர், மூன்று கிருஷ்ணர், இரண்டு ராவணன்! வரலாற்றில் குழப்பம்!

11.நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்?

12. எழுபது போப்பாண்டவர் படுகொலை

13.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1

14.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 2

15.ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை!

16.பைபிள் தோன்றியது எப்போது?

17.பெண்கள் மனிதப் பிறவிகளா?  கிறிஸ்தவர் காரசார விவாதம்

18.தொன்னூறு லட்சம் பெண்கள் உயிருடன் எரிப்பு –

சேம்பர்ஸ் கலைக் களஞ்சியம் திடுக்கிடும் தகவல்

19.அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்?

லண்டன் பத்திரிக்கை கேள்வி

20.ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார்

21.கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை!

22.சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்?

23.சிந்து வெளி எழுத்தைப் படிக்க ‘காஸைட்ஸ்’ நாகரீகம் உதவலாம்

24.வரலாறு தெரிந்தவன் தமிழன் !

25.சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி!

26.கர்நாடக அதிசயங்கள் ; 35,000 சிற்பங்கள்!

27.உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்!

28.உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்:

மேலும் ஒரு கர்நாடக அதிசயம்!

29.பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க!

30.மாறன் சடையன், சடையன் மாறன் , மூன்றாம் சார்லஸ்

31.மோடி பற்றி பாரதியார் தீர்க்க தரிசனம்!

32.தமிழர் கண்டு பிடித்த அதிசய கணக்குப் பலகை!

33.சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும்!

34.தமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா?

35.தமிழர்களின் எண்பேராயம்

36.ரிக்வேதத்தில் நன்மாறன்?

37.வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்!

38.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1

39.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2

40.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 3

41.ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்!

42. அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

43. வரலாறு கூறும் அற்புத ரிக்வேதப் பாடல்!

44.கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் !

45.யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா?

*********************

How can you read or buy these books?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

Xxxx

List of  My 93 Books

இதுவரை நான் எழுதி வெளியிட்ட 93 நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

*******************

ENGLISH BOOKS

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries (book title)

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம்

(பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

3.சங்க இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

Xxxx

Visited Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece

 — subham— 

Tags- My, Tamil Books, London swaminathan

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -3 (Post No.11695 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,695

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 THIRD  PART

Knol kohl

Ghand gobi गांठ गोभी

Nool khol நூல்கோல்

Xxxx

Lady’s finger —Hibiscus esculantes

Bhindi, Okra भिण्डी

Vendaik kaay வெண்டைக்காய்

Xxx

 Lemon

Nimbuनींबू

Elumichcham pazam எலுமிச்சம் பழம்

Xxx

Lentil— see dhal பருப்பு

Xxx

Mace

Jaavitri जावित्री

Jaathi badri ஜாதி பத்ரி

Xxxx

 Maize

Makkaa – मक्का

Makkaa cholam மக்காச் சோளம்

Xxxx

 Black night shade. 

Makoi  मकोय

மணத்தக்காளி

Xxx

Mint leaves

Puthinaaपुदीना

pudeena புதினா

Xxx

Mushroom

Kukur  muththaa  कुकुरमुत्ता

fungus, mushroom, fungi

छत्रक

beehive, mushroom, summerhouse

गगन-धूलि

Kaalaan காளான்

 Xxx

Mustard Mustard

Saarcho सरसों  sarason

Kadugu கடுகு

Xxxx

 Nutmeg

Joyfal जायफल

Jaathik kaay ஜாதிக்காய்

 Xxx

onion, allium cepa, allium ceppa

Piyaaj प्याज

Vengaayam வெங்காயம்

xxxx

Orange, mandarin Orange

Naarangi, i नारंगियां

santhraa  संतरा

Aaranju ஆரஞ்சு नारंगी

Xxxx

 Papaya

Papeethaa पपीताकुल: Caricaceae

Pappaali பப்பாளி

Xxxx

Peas

Matar मटर

Pattaaani பட்டாணி

 Xxx

 Pineapple

Anaa naas  अनानास

Annasip pazamஅன்னாசிப்பழம்

Xxx

Plantain flower, stem

Kele kaa pool केले का फूल

Kele kaa thanaa

Vaazaip puu, vaazaith thandu

केले का तना

வாழைப்பூ , வாழைத்தண்டு

Xxx

Pomegranate

Anaar अनार

anaar

Maathulam pazam மாதுளம்பழம்

Xxx

Potato

Aaloo   आलू

Urulaik kizangu உருளைக்கிழங்கு

Xxx

Pumpkin

kaddu कद्दू

Parangik kaay பறங்கிக்காய்

Xxx

Radish

Mooli  मूली

moolee

Mullangi முள்ளங்கி

Xxxx

Ragi

Raagi

Kez varagu

Xxx

Raisin- see grapes

Kismis , sultaanaa

Xxx

Red gram- see Dhal

Xxx

Finger millet, Eleusine coracana

Raagi रागी

Kezvaragu or Kurakkan கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன்,

To be continued…………………………….

Tags- Spices, Food items, in Hindi, Tamil

 ‘தீராக் கோபம் போராய் முடியும்’: அம்பலவாணர் எச்சரிக்கை (Post No.11,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,694

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கோபத்தைப் பற்றி எச்சரிக்காத தமிழ், ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் எவரும் இல்லை. வியாசர் முதல் பாரதி வரை எச்சரித்துள்ளனர் ; கோபத்தை வென்றால் அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று புலவர்கள் கூறுகின்றனர்.

இந்த ‘பிளாக்’ blog கில் கோபம் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளதால் அவற்றின் லிங்க் links மற்றும் கீழே கொடுத்துள்ளேன். நான் முன்னரே எழுதியது போல நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம் ; இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். காம, க்ரோதம்/கோபம், லோபம்/பேராசை மூன்றும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் வாசல்.

பத்திரிக்கைகளில்  Crime News கிரைம் நியூஸ் படிப்பவர்கள், எல்லா குற்றவாளிகளையும் இந்த மூன்று வகையில் பிரித்து விடலாம். அதுவும் குடி போதை அல்லது கஞ்சா போதையில் இருந்தால் கோபம் அவர்களை சிறைக்கு இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். இதோ பழைய கோபக் கட்டுரைகள்


கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் …

https://tamilandvedas.com › ராத…

·

3 Dec 2021 — அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!( … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

சினம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

கோபம் வந்தால் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

9 Aug 2018 — கோபம் வந்தால் பத்து அடி பின்னே நட! திருக்குறள் கதை!! (Post No.5302) · Written by London swaminathan.

பாரதி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

·27 Dec 2021 — கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய …

4 வகை கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 4-…

8 Jul 2016 — DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). fight-scenes- …

XXXX

அறப்பளீசுர சதகம் 87. சீற்றத்தின் கொடுமை

கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!

     கோபமே குடிகெ டுக்கும்!

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!

     கோபமே துயர்கொ டுக்கும்!

கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!

     கோபமே உறவ றுக்கும்!

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!

     கோபமே கருணை போக்கும்!

கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்!

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்!

ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்

அண்ணலே – இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை

ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை…..தேவனே!, கோபமே

பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை – சினமே எல்லாப் பாவங்களுக்கும்

அன்னையும் அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும் – சினமே குடியைக் கெடுக்கும், கோபமே ஒன்றையும் கூடிவரவொட்டாது – சினமே எதனையும்அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் – சினமே துயரந்தரும்கோபமே  பொல்லாது – சினமே கெட்டது, கோபமே சீர்கேடு – சினமே புகழைக் கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும் – சினமே உறவைத் தவிர்க்கும், கோபமே பழி செயும் – சினமே பழியை யுண்டாக்கும்கோபமே பகையாளி,– சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும் – சினமே அருளைக் கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் – சினமே இழிவாகும், கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் – சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக்குழியில் தள்ளும் – சினமே காலன்முன் இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

     (வி-ரை.) ஆல் : அசை. ‘ஆறுவது சினம்‘ என்றார் ஒளவையார்.

தீராக் கோபம் போராய் முடியும்’ என்றார் நறுந்தொகையார்..

—subham—

Tags– ஆறுவது ,சினம்தீராக் ,கோபம்

நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்! (Post No.11,693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,693

Date uploaded in London –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!

ச.நாகராஜன் 

நான்கு வித புத்திகள்

புத்தி நான்கு வகைப்படும்.

1) ஆத்மபுத்தி-சுகா – ஒருவருடைய ஸ்வயமான புத்தி – சந்தோஷத்திற்கானது

2) குருபுத்தி விசேஷ – குருவின் புத்தி – விசேஷமானவற்றிற்காக.

3) பரபுத்தி விநாச – மற்றவர்களின் புத்தி – நாசத்திற்கானது

4) ஸ்தீரி புத்தி – ப்ரளயா – பெண்களின் புத்தி – சர்வ நாசத்திற்கானது.

ஆத்மபுத்தி: சுகாயைவகுருபுத்திர்விசேஷத: |

பரபுத்திர்விநாஷாய ஸ்தீரிபுத்தி: ப்ரளயாவஹா ||

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 155/94

நான்கு வித ப்ரமாணங்கள்

ப்ரமாணங்கள் – அதாவது ஏற்கக்கூடிய அறிவானது – நான்கு வகைப்படும்.

1) ஸ்மிருதி – வேதத்தின் மூலம் அடையப்படுவது

2) ப்ரத்யக்ஷம் – நேரடியாக அடைவது

3) இதிஹாஸம் – ராமாயண, மஹாபாரத இதிஹாஸத்தினால்

                 பெறப்படுவது

4) அனுமானம் – ஊகத்தினால் பெறப்படுவது

ஸ்மிருதி: ப்ரயத்க்ஷமைதிஹ்ரம் | அனுமானஸ்சதுஷ்டயம் ||

–    தைத்ரீய ஆரண்யகம் I.2.1

நான்கு வித போகங்கள்

போகங்கள் நான்கு வகைப்படும்.

1) ஸ்தூலம் – மொத்தமாக அடையும் சுகம்

2) ப்ரவிபக்த – தனித்து அடைவது

3) ஆனந்தம் – ஆனந்தம்

4) ஆனந்தாவபாஸ: – ஆனந்தத்தின் தோற்றம்

ஸ்தூலஸ்ச ப்ரவிபக்த: | ஆனந்தஸ்சானந்தாவபாஸ: |

சத்வாரோ போகா தேஹஷ: பவந்தி ||

–    தாஸபோதம் 17.9.3 

நான்கு வித பயங்கள்

பயங்கள் நான்கு வகைப்படும்.

1) ஜன்ம பயம் – பிறப்பினால் வருவது

2) ம்ருத்யு பயம் – இறப்பினால் வருவது

3) ஜரா பயம் – வயது முதிர்ந்தவுடன் மூப்பினால் வருவது

4) வியாதி பயம் – நோய்களினால் வருவது

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-பயம் நைவோபஜாயதே |

–    விஷ்ணு சஹஸ்ர நாமம் – பல ஸ்ருதி

நான்கு வித நண்பர்கள்

நண்பர்கள் நான்கு விதம்.

1) ஔரஸம் – ஒரே பெற்றோர்களிடம் பிறந்தவர்கள்

2) க்ருதசம்பந்தம் – திருமணத்தினால் வருவது

3) வம்ச சம்பந்தம் – வம்சத்தினால் வருவது

4) ரக்ஷக சம்பந்தம் – துயரப்படும் போது ரக்ஷிப்பவரால் வருவது

ஔரஸம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் |

ரக்ஷகம் வ்யஸனேப்யஸ்ச ஞேயம் சதுர்விதம் ||

–    காமந்தகீய நீதி ஸார: IV- 74

முக்தி பெற நான்கு வழிகள்

நான்கு வழிகளில்  முக்தியை அடையலாம்.

1) ப்ரஹ்ம ஞானம் – ப்ரஹ்மனை அறிவதன் மூலமாக முக்தி பெறலாம்.

2) கயா சிரார்த்தம் – கயாவில் சிரார்த்தம் செய்வதன் மூலமாக முக்தி

                    பெறலாம்.

3) கோக்ரஹ மரணம் – கோசாலையில் – பசு தொழுவத்தில் – மரணம்

                      அடைவதன் மூலம் முக்தி பெறலாம்.

4) குருக்ஷேத்ர நிவாஸம் – குருழக்ஷேத்ரத்தில் வசிப்பதன் மூலமாக

                           முக்தி பெறலாம்.

ப்ரஹ்மஞானம் கயாச்ரார்த்தம் கோக்ருஹே மரணம் ததா |

வாஸ: பும்ஸாம் குருக்ஷேத்ரே முக்திரேஷா சதுர்விதா ||

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள்

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள் உண்டு.

1) காமம் – காமம்

2) க்ரோதம் – கோபம்

3) லோபம் – பேராசை

4) தம்பம் – தற்பெருமை

இவையே நரகத்திற்குச் செல்லும் நான்கு வழிகள்.

காமோ லோபஸ்ததா க்ரோதோ தம்பஸ்சத்வார் இத்யமி | 

*** 

tags- நான்கு , புத்திகள், போகங்கள்

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -2 (Post No.11,692 )

suran- elephant yam–senaik kizangu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,692

Date uploaded in London – –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

second part

Cluster beans

ganvaar phalee गँवार फली

Koththavarai கொத்தவரைக் காய்

 Xxx 

Coconut

Naariyal नारियल

Thengaay தேங்காய்

Xxx

Colacasia

Arvi अरबी ,अरवी

Seppang kizangu சேப்பங் கிழங்கு

Xxx

Coriander leaves

Haraa dhaniyaa धनिए के पत्ते, धनिया पत्ती dhanie ke patte

Koththamalli கொத்தமல்லி

Xxxx

Corn flour

Makkaa kaa aattaa मक्के का आटा

Makkaa chola maavu மக்காச்சோள மாவு

Xxx

Cow gram

Lobiaa लोबिया

Kaaraamani காராமணி

Thattai payaru தட்டைப் பயறு

kheera

Xxxx

Cucumber

Kakri ककड़ी, खीरा

Vellari kkaay வெள்ளரிக்காய்

Xxx

Curry leaves

करी पत्ते, karee patte ,

Kari veppilai கருவேப்பிலை

Xxx

Curds

dahee दही Dahi

Thayir தயிர்

Xxx

Custard apple

Sharpaa शरीफा, सीताफल

shareepha சீத்தாப்பழம்

Seethaa pazam

Xxx

Dates

Kanjur खजूर। khajoor.

Pereecham pazam பேரீச்சம் பழம்

Xxxx

Dhal

Dhal दाल

Paruppu பருப்பு

मसूर की दाल, masoor kee daal

Pigeon peas तूर दाल , अरहर की दाल துவரம் பருப்பு தூர் தால்

xxxx

Drum sticks

Saijan ki palli ढोल का छड़ी/ dhol ka chhadee

Sajjan Ki Phalli / Saigan / Shinga / Segva / Sehijjan

ढोल का छड़ी, नगाड़े की डंडी, ढोल की छड़ी

Murungaik kaay முருங்கைக் காய்

 Xxxx

Elephant Yam

Suuran/ Jam gandh सूरन

Senaik kizangu சேனைக்கிழங்கு

Xxx

Fenu Greek

Methi मेंथी ,menthee

Venthayam வெந்தயம்

Xxx

Fennel

Badi somf सौंफ, saumph,

Perunj jeerakam பெருஞ்ஜீரகம்

Xxxx

FigsAnjur अंजीर, anjeer

Aththippazam அத்திப்பழம்

Xxxx

Garlic

Lahsan लहसुन lahasun

Poondu பூண்டு

Xxxx

Gingelly

Til तिल

El எள் 

Xxxx

Ginger

Adahrak, अदरक

Inji  இஞ்சி

Xxxx

Gogu

Gonguraa गोंगुरा

Pulicha keerai கோங்கூரா

Xxx

Gooseberry Phyllanthus emblica ,

Amla/ Aamalaka in Sanskrit आँवला in Hindi

Nellikkaay நெல்லிக் காய்

Xxx

Grapes

Drakshai, Kodimunthiri pazam திராட்சைப் பழம் / கொடிமுந்திரி

Angur अंगूर angoor

Xxx

Green gram-  phaseolus mungo

Moong dhal मूँग

Payaththam paruppu பாசிப்பயறு, பயத்தம் பருப்பு

Or paasip paruppu

Xxxx

 Green Banana

Kachaa/ Haraa kelaa कचा केला , कच्चे केले,

Vaazaik kaay

Xxxx

Ground nut

Moong bali मूंगफली

peanut, peanuts, groundnut, earthnut

Verkkdalai or Nilakkadalai நிலக்கடலை , வேர்க்கடலை

Xxxx

Guava fruit

Amrut अमरूद,amarood

Koyyap pazam, கொய்யாப்பழம்

Xxxx

Honey

Sahad, Madhu शहद, मधु

Then தேன்

Xxxx

Horse gram

Kuthlee, कुलथी की दाल

Kollu கொள்ளு

Xxxx

Jack fruit

Kadhal कटहल

jackfruit, jack-fruit, indian jack tree

पनस,indian jack tree, jackfruit

Palaap pazam பலாப்பழம் ,

Xxxxx

Jaggery

Gud गुड

Vellam வெல்லம்

Xxxx

 Jambu fruit Syzygium cumini

Jaamunजामुन 

Navaappazam, நவாப்பழம்

 Xxxx

Jowar

Jowaaar ज्वार

Solam சோளம்

Xxx 

To be continued…………………………….

tags- food items, in hindi, in tamil, second part

தமிழர்களின் சிறந்த நிர்வாகம்: அம்பலவாணர் தகவல் (Post.11,691)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,691

Date uploaded in London – –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 தமிழர்களின் தலை சிறந்த நிர்வாகத்தை விளக்கும் இரண்டு சொற்கள் எண்பேராயம்ஐம்பெருகுங் குழு ஆகும் . உலகம் முழுதும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுபவர் உட்துறை அமைச்சராகும் . பழங்காலத்தில் அவர் பெயர் அமைச்சர் அல்லது தலைமை அமைச்சர்.. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர் நிதி மந்திரி. அதற்கடுத்த நிலையில் உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர். அந்தக் காலத்தில் அவர் பெயர் படைத்தலைவர் அல்லது சேனாதிபதி. இவர்கள் அடங்கிய குழு எண்பேராயம் அல்லது ஐபெருங் குழு ஆகும்.

சிவாஜி அமைச்சரவையிலும் , கிருஷ்ண தேவராயர் அமைச்சரவையிலும் இவ்வாறு எட்டு பேர் கொண்ட அஷ்டப் பிரதான், அஷ்ட திக்கஜங்கள்  இருந்தனர் ; அவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விக்ரமாதித்யன் சபையில் நவரத்னங்கள்  ( 9 அறிஞர்கள்) இருந்தனர்.. மஹாபாரத, ராமாயண காலங்களில் அமைச்சர்கள் இருந்ததையும் அவர்கள் அறிவுரை வழங்கியதையும் இதிஹாச புராணங்கள் மூலம் அறிகிறோம்

xxxxxx

ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் எண்பேராயம் ஐம் பெருங்குழு

தமிழர்களின்  ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம் மணி மேகலை,  சொல்லும் எண்பேராயம்)

சிலப்பதிகாரம் 26-38

மணி மேகலை 1-17

1.கரணத்தியலாவர்- கணக்கர்

2.கருமக்காரர்- செயலர்

3.கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி

4.கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்

5.நகர மாந்தர் – முதியோர்

6.படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி

7.யானைவீரர் – யானைப்படையின் தலைவர்

8.இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்

Xxx

ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் ஐம்பெருங் குழு

சிலப்பதிகாரம்- 3-126

மணி மேகலை—1-172-684-895-527-148929-4330-190

ஐம்பெருங் குழு

1.மந்திரி/ அமைச்சன்

2.புரோகிதன்

3.தூதன்

4.ஒற்றன்/ சாரணர்

5.சேனாபதி/ படைத் தலைவர்

Xxxxx

இந்தப் பொறுப்பு வகிப்பவர்களின்  முக்கியப்பணிகளை அறப்பளீசுர சதகம் பாடிய அம்பல வாணர் சற்று விரிவாகவே பாடுகிறார்

85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் Defence Minister and Home Minister, Commander in Chief

தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,

     சாலமேல் வருக ருமமும்

  தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்

     தானாதி பதியா குவான்;

மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,

     வாழ்குடி படைத்தி றமையும்,

  மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்

     வளமான மதிமந் திரி;

துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,

     சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,

  தோலாத வெற்றியும் திடமான சித்தியுள

     சூரனே சேனா திபன்

அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே – தாயினும்

நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!, அனகனே –

தூயவனே!, தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு

கருமமும் தான் அறிந்து – தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும் நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி

உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் – சிறந்த அறிவும் சூழ்ச்சியும்

பொருந்தியவன் தானைத்தலைவன் எனப்படுவான், மன்னவர் மனத்தையும்,

கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும்

எல்லாம் – அரசர்களின் கருத்தையும்காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான

மதி மந்திரி – தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சனாவான்,

துன்னிய படைக்குணம் – செறிவான படைகளின் இயல்பும், கரி பரி

பரீட்சையே – யானை குதிரைகளின் தேர்ச்சியும்சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்

– சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் –

பின்வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும்,

உளசூரனே சேனாதிபன் – உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.

     (வி-ரை.) துன்னுதல் – நெருங்குதல். ஆகவே செறிவாயிற்று. சித்தி

– நினைத்தது முடித்தல். சூர் – அச்சம். சூரன் – அஞ்சத்தக்கவன் (வீரன்).

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

86. அரசவைக் கணக்கர் Finance Minister

வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்

     வரவிடுப் போன்ம னதையும்,

  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்

     வருகர தலாம லகமாய்

விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள

     விடஎழு தவாசிக் கவும்

  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்

     மேன்மைரா யசகா ரன்ஆம்;

கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்

     கடிதேற் றிடக்கு றைக்கக்

  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்

     காட்டுவோன் கருணீ கன்ஆம்;

அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருஆகி உருஆகி ஒளிஆகி வெளிஆகும் அண்ணலே –

அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள

பெரியோனே!, அருமை …. தேவனே!, வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு

பொருளினால் – வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக்

கொண்டு, வரவிடுப்போன் மனதையும் – ஓலையை விட்டவன் உள்ளத்தையும்,

மருவி வரு கருமமும் – அவன் விரும்பிய தொழிலையும்தேச காலத்தையும்

– இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய்விரைவாய் அறிந்து

உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர்

எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் – அரசருடைய

கருத்தில்உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே

பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் – தேர்ச்சி

பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க

எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில்

கடிது ஏற்றிடக் குறைக்க – ஒரு தொகை  மனத்தில் உணர்ந்து பன்னிரு

விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக

மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் – கடுகை

மலை போலவும் மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.

     (வி-ரை.) உத்தரம் – பின். எனவே ஓலையின் புறம். எழுத்தாளரும்

கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம்

– நெல்லி. கரதலாமலகம் என்பது வெளிப்படை என்பதை விளக்கும் உவமச்

சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல், என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.

SATAKAM VERSES ARE TAKEN FROM TAMIL VIRTUAL UNIVERSITY WEBSITE.

XXXX

MY OLD ARTICLE

தமிழர்களின் எண்பேராயம் (Post No.7046)

https://tamilandvedas.com › தமிழ…

2 Oct 2019 — மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், ,பல், மூக்கு, உதடு, அண்ணம். இதைக் கூறும் …

—-subham—-

Tags– அஷ்டப் பிரதான், அஷ்டதிக்கஜங்கள்,நவரத்னங்கள்,  எண்பேராயம், ஐம்பெருகுங் குழு, ஐம்பெருங் குழு ,சிலப்பதிகாரம், கணக்கர், எழுத்தர், அமைச்சர், தானாதிபதி.

வையாவிக்கோப் பெரும் பேகன்! (Post No.11,690)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,690

Date uploaded in London –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம்  பாடல் 44

வையாவிக்கோப் பெரும் பேகன்!

ச.நாகராஜன்

இன்று நாம் வழங்கி வரும் பழனித் திருத்தலத்தின் பெயர் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது.

அதை பேகன் என்னும் பெரும் வள்ளல் ஆண்டு வந்தான். இவன் வேளிர் தலைவரில் ஒருவனான ஆவியர் குடியில் பிறந்ததனால் வையாவிக்கோப் பெரும் பேகன் என அழைக்கப்பட்டான்,

கடைச் சங்க காலத்தில் இருந்த ஏழு வள்ளல்களில் இவனும் ஒருவன்.

‘ஒரு நாள் பேகன் மலை வழியே சென்று கொண்டிருந்தான்.  அங்கு ஒரு மயில் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

அது குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதாக நினைத்த பேகன் தன் மீது போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்து அந்த மயில் மீது போர்த்தி மகிழ்ந்தான்.

இந்தக் கொடை மடத்தைக் கண்ட புலவர்கள் அவனைப் போற்றினர்.

கண்ணகி என்ற கற்புடைய மங்கையோடு வாழ்ந்து வந்த போது ஒரு சமயம் பரத்தையர் வலையில் சிக்கி மயங்கி இருந்தான் அவன்.

இதனை அறிந்த கபிலரும் அரிசில் கிழாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, ‘நாங்கள் பரிசில் பெற உன்னைப் பாட வரவில்லை. மனதிலே துயர் கொண்டு தனித்து வாழ்கின்ற உனது மனைவியுடன் நீ கூடி வாழ வேண்டும்’  என்றே பாடினோம் என்றனர்.

இதைக் கேட்ட பேகன் மனம் திருந்தி தன் மனைவியோடு வாழத் தொடங்கினான்.

இந்தச் சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

இவன் வாழ்ந்து வந்த நாடு வையாபுரி நாடு என்ற பெயரையும் பெற்றது.

“உடா அ போரா ஆகுத லறிந்தும்

படா அ மஞ்ஞைக் கீந்த்த எங்கோ

கடா அ யானைக் கலிமான் பேகன்”  என பரணரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்

படா அ மீத்த கெடாஅ நல்லிசைக்

கடா அ யானைக் கலிமான் பேக!” என்று வன்பரணர் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்கன் னாடன் பேகன்” என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் – தொல்லை

இரவாம லீந்த இறைவர்போ னீயுங்

கரவாம லீகை கடன்”  என்று இப்படி ஐயனாரிதனார் கூறுவதைப் பார்க்கலாம்.

அருணகிரிநாதர் தனது திருப்புகழில்,

ஆதி யந்தவு லாவா சுபாடிய

   சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

      ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே”

என்று பாடுவதையும் நாம் காண்கிறோம்.

(பாடல் எண் 170 ‘நாத விந்து கலாதி நமோ நம’ என்று தொடங்கும் பாடல்)

 இப்படிப்பட்ட பழம் பெருமையைக் கொண்ட திருத்தலமான பழனிக்கு மிக அருகில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது.

(தென்காசி அருகேயும் ஆய்க்குடி என்ற பெயரில் பிரசித்தமான ஒரு ஊர் இருக்கிறது)

 இது பல ஊர்களைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு ஜமீனின் தலைநகரம்.

ஜமீந்தார் வேட ஜாதி, ஆய் எயினன் என பாணர் முதலியோர் அகநானூற்றில் கூறும் ஆய்க்கும், இந்த ஆய்க்குடிக்கும் அதை ஆள்வோருக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்குமோ என அறிஞர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

 இப்படிப்பட்ட வையாவிக்கோப் பெரும் பேகன் வாழும் மண்டலம் கொங்கு மண்டலமே தான் என கொங்குமண்டல சதகம் தனது 44ஆம் பாடலில் புகழ்ந்து கூறுகிறது.

 பாடல் இதோ:

 கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கமருள்

செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்

வையாவிக் கோப்பெரும் பேக னெனும்பெரு வள்ளறங்கு

வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே   

 இப்பாடலின் பொருள் :

 காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு ஆற்றாமல் நடுங்குகிறது என்று நினைத்து, தான் மேலே போர்த்திருந்த உயர்ந்த ஆடையை அதன் மேல் சார்த்திய, வையாவிக்கோப் பெரும் பேகன் வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஊரே தான் என்பதாம்.

 வாழ்க பேகன் புகழ்!

***

Tags- பேகன், கொங்குமண்டல சதகம்  , வையாவி

More English Books from London Swaminathan (Post No.11,689)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,689

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Please read the books and support the author.

1000 Hindu Quotations for Speakers and Students (book title)

Contents

1.Gandhiji on Hinduism

2. Beautiful Quotations of Sri Ramakrishna Paramahamsa

3.Beautiful Quotations from Philosopher Dr Radhakrishnan

4.Quotations on Religion and Philosophy from DR S Radhakrishnan’sBooks

5.What is Religion? What is Philosophy?  Dr S. Radhakrishnan explains

6.Is Hinduism a Museum of Beliefs, Medley of Rites, Name Without any Content?

7.Upanishad Quotes in Good Thoughts Calendar April 2014 

8.Forty Important Quotations from the Atharva Veda!

9.More Gems from the Atharva Veda

10.Good Thoughts on Character

11.Great Men Think Alike about Rebirth

12.Great Men Think Alike about Wealth

13.Hindu Quotations on Food

14.Hindu Thinker on Marxism, Jesus and Advaita

15.One Hundred Quotations on God!

16.God forgives sins, otherwise heaven would be empty!

17.One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 1

18.One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 2

19.Quotations from Rig Veda- Fourth Mandala

20.Quotations on Fame and Honour

21.More Quotations on Love

22.An Ounce of Mother is worth a Ton of Priest!

23.Quotes on Time

24.More Beautiful Quotations from Mahatma Gandhi

25.Beautiful Quotes on Omkara (Aum)

26.Good Quotations on Wife!

27.Beautiful Quotations from Kalhana’s Rajatarangini

28.Quotes on Pride and Self Respect

29.Quotes on Purity

30.Swami Chinmayananda Quotations

31.Golden Sayings from Kautilya’s Artha Shastra

32.More Quotations from Poet Kalhana

33.Quotations from Tirukkural of Tiruvalluvar

34.Fortune, Fate, Fear, Fatality- Valluvar and Kalhana Agree!

35. Quotations from Tamil Epic Silappadikaram

**************

Beautiful Hindu Women and

Wonderful Weddings (book title)

Contents

1.HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA

2.MARRIAGE CEREMONY MANTRA IN RIG VEDA

3.A Wife is a Gift from the Gods- Manu Smrti

4.A WIFE IS HALF THE MAN: STATUS OF WOMEN IN HINDUISM

5.RIG VEDIC WEDDING SCENE IN TURKEY

6.Three Beautiful Tamil Hindu Weddings

7.Kannaki and Andal Weddings

8.Kannaki praised Seven Tamil Women before Burning Madurai City

9.Beautiful Names of Ancient Kashmiri Women!

10.Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!

11.Five Day Hindu Marriage- Part 1

12.FIVE DAY HINDU MARRIAGE – PART 2

13.FIVE DAY HINDU WEDDING- Part 3

14.FIVE DAY HINDU MARRIAGE- PART 4

15.Most Intelligent Woman in the Ancient World

16.TWO TYPES OF VEDIC WOMEN

17.GREAT WOMAN SCHOLAR AVANTI SUNDARI

18.Eastern and Western View of Women

19.GREAT HINDU HEROINES PADMINI & RANI SAMYUKTA

20.LET US ENTER FIRE BEFORE MUSLIMS TOUCH US- HEROIC SPEECH BY RANI BHAI

21.CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!!

22.UGLY GIRL IS OK- CHANAKYA

23.WOMAN AND YOGI- CHANAKYA

24.Definition of a Woman by a Tamil Poet!

25.Gems of Women: Varahamihirar’s Definition

26.Stri Rajya- Kingdom of Women in India!

27.Wonderful Syllabus for Women!

28.Hindu Women’s Education 2700 Years Ago!

29.Fifty-one Interesting Hindu Couples;

Four Types of Women

30.Sita’s Famous Quotes: I would Follow Eleven Women

****************

Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!!! (book title)

Contents

1.Thirty four Names of Agni, Fire God!

2.Fire Simile: from Rig Veda to Ramayana!

3.Science behind Hindu God Brahma!

4.Twenty nine  Names of Brahma!

5.‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya

6.Seventeen Names of Kubera in Amarakosa

7.Lamps in Tamil and Sanskrit Literature

8.Confusion over Date of Buddha: Why did they ‘Kill him 20 times’?

9.Mirror Images in Hindu Literature

10.Hindu God with 1000 Heads

11.Hindus Worship Ten Directions!

12.Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda

13.Amazing Encyclopaedia Brhat Samhita!

14.Comets: Shakespeare also believed Hindu Views

15.Hindu Dhruva in Shakespeare!

16.Hindu Beliefs in Shakespeare: Moon, Eclipse, Ghosts

17.Story of Vedic Sunahsepha in Greece as Cynosure!

18.Thuban is Wrong, Dhruva is Right!

19.Nature’s Orchestra in the Forest: Sanskrit Tamil Poets’ Chorus

20.Tamils Knew River Ganga but not Sindhu!

21.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -1

22.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -2

23.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -3

24.Sea in Brahmin’s’ Daily Prayer!

25.Seventy Words for Water in Sanskrit!

26.Swami Vivekananda on Omkara!

27.Pilgrim’s Lodge – The Inns of Old Tamil Nadu

28.Tamil’s Cruel Cock Fight!

29.Story behind Kammavar Naicker Proverb!

30.Interesting Information about Indian Washerman (Dhoby)

31.No Toilet, No Electric Light 150 year ago! What did they do?

*********************

 Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—Tags- My english books, london swaminathan